புதிய பதிவுகள்2

யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு

1 hour 30 minutes ago
மாவீரர் வாரம் வருகிறதாம் இந்தக்கதையை நம்பட்டாம். யார் திட்டமிட்டு செய்கிறார்களோ, அவர்கள் ஒரு கல்லில் பல மாங்காய்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்!

1 hour 31 minutes ago
இங்கிலாந்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் ஆண்ட்ரூவின் வெளியிடப்பட்ட மின்னஞ்சல்! இங்கிலாந்து மன்னரின் சகோதரர் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தி உயிரிழந்த வர்ஜீனியா கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஆண்ட்ரூ மீது “விசாரணை” நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்து வரும் நிலையில் இது குறித்த கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. குழந்தை பாலியல் குற்றவாளி நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீனை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர் “நேரில் சந்திப்பது நல்லது” என்று கூறி ஆண்ட்ரு அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த குற்றத்துடன் தொடர்புடைய குற்றவாளியான சிறையில் அடைக்கப்பட்ட எப்ஸ்டீன், கடந்த 2009 ஆண்டு ஜூலை விடுவிக்கப்பட்டார். அந்த மாத இறுதியில் இங்கிலாந்தின் அமெரிக்க வங்கியாளர் ஜெஸ் ஸ்டாலியைச் சந்திக்க வேண்டும் என்று பரிந்துரைத்து 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று அப்போதைய இளவரசருக்கு அவர் மின்னஞ்சல் அனுப்பினார். இதேவேளை, அந்த திகதியில் தான் இங்கிலாந்தை விட்டு வெளியேறுவதாகவும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நியூயார்க்கிற்கு “வர” முயற்சிப்பதாகவும் ஆண்ட்ரூ பதிலளித்திருந்தார். இதில் கோடைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவரை நேரில் சந்திப்பது நல்லது என்றும் அவர் ஆண்ட்ரு அந்த மின்னஞ்சலில் கூறியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அவர் குறித்த குற்றவாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தெரிவித்து அவரை மாளிகையை விட்டு வெளியேற்றியதுடன் அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் வர்ஜீனியா கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஆண்ட்ருவை சிறையில் அடைக்கவேண்டும் எனவும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர். https://athavannews.com/2025/1451719

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 90 மில்லியன் டொலர் கடனுதவி

3 hours 19 minutes ago
Published By: Vishnu 01 Nov, 2025 | 02:27 AM பின்தங்கிய சமூகங்களுக்கும் முக்கிய சமூக, பொருளாதார நிலையங்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 90 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நிதியமைச்சு கைச்சாத்திட்டுள்ளது. பின்தங்கிய பிரதேசங்களுக்கான சுமார் 500 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தி, காலநிலை சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கு ஏற்றவாறானதும் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு நேயமான வசதிகளை மேம்படுத்தல் என்பவற்றுக்கு இந்தக் கடன் நிதி பயன்படுத்தப்படும். அத்தோடு இந்நிதி தேசிய ரீதியில் சுமார் 21 கிலோமீற்றர் நெடுஞ்சாலைகளின் புனரமைப்பு மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுமார் 100 கிலோமீற்றர் வீதிகளின் பராமரிப்பு என்பவற்றுக்கும் உதவும் என நிதியமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மேற்படி கடன் உதவிக்கான ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் இலங்கை;கான அதன் பணிப்பாளர் டக்காஃபுமி கடானோவும் கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229201

ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? உணவாகச் சாப்பிடுவது நல்லதா?

3 hours 30 minutes ago
பட மூலாதாரம், Getty Images 31 அக்டோபர் 2025 பருவமழை மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கிவிட்டால் போதும், பல வீடுகளில் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துவிடும். அப்படி மழையின்போது வீட்டு உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் வரும் ஈசல்களைப் பிடித்து இறக்கைகளை பிய்த்துவிட்டு மூங்கில் கூடை ஒன்றில் சேகரிப்பதை ஊர்ப்புறங்களில் பார்த்திருப்போம். ஒரு கூடை நிறைய ஈசல் சேர்ந்த பிறகு அவற்றை வாணலியில் நன்கு வறுத்தெடுப்பார்கள். அப்போதே, ஈசல்களின் தலை தனியே உடல் தனியே பிரிந்துவிடும். பின்னர், தலை மற்றும் மீதமுள்ள இறக்கையை முறம் கொண்டு புடைத்து பிரித்துவிட்டு, வறுக்கப்பட்ட ஈசலை பொறியில் கலந்து சாப்பிடுவது, பொடியாக்கி உணவுடன் சேர்த்துக் கொள்வது எனப் பல வடிவங்களில் அது உணவாகிறது. ஆனால், இந்த ஈசல்கள் எப்போதும் மழை நேரத்தில் மட்டுமே வருவது ஏன்? அவற்றின் மொத்த ஆயுளே ஒருநாள்தான் என்பது உண்மையா? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா? அதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பூச்சியியல் ஆய்வாளர்களிடம் பேசினோம். பட மூலாதாரம், Getty Images ஈசல்கள் எங்கிருந்து வருகின்றன? ஈசல் என்பது ஒரு தனிப்பட்ட பூச்சியினம் கிடையாது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உண்மையில், இறக்கைகள் முளைத்த கரையான்களே ஈசல்கள். அவ்வளவு ஏன், கரையான்களின் அடுத்த சந்ததிகள் பிறப்பதற்கே ஈசல்கள்தான் அடிப்படைக் காரணமாகத் திகழ்கின்றன. கரையான்கள், எறும்புகளைப் போலவே ஒரு சமூகமாக வாழும் பண்புடையவை. ஒரு புற்றில் சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை என்ற எண்ணிக்கையில் கரையான்கள் வாழக்கூடும். தேனீக்கள், எறும்புகள் போன்ற கூட்டு சமுதாய வாழ்க்கை முறையைக் கொண்ட பிற பூச்சிகளைப் போலவே கரையான்களிலும் ஒரு புற்றில் ராணி, ராஜா, வேலைக்கார கரையான்கள், காவல்கார கரையான்கள் ஆகிய நான்கு பிரிவுகளாக அவை வாழ்கின்றன. அதில், அந்தப் புற்று உருப்பெறக் காரணமாக இருக்கும் ராணி கரையான் நிமிடத்திற்கு 25 முட்டைகள் முதல் நாளொன்றுக்குச் சில ஆயிரம் முட்டைகள் வரை இடுகின்றன. படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன் தேனீக்கள், எறும்புகள் போன்ற சமூக வாழ்வுமுறை கொண்ட பிற பூச்சிகளில் இல்லாத ஒரு தனித்துவம் கரையான்களுக்கு உள்ளது. "பொதுவாக, இனப்பெருக்க செயல்பாடுகள் முடிந்தவுடன் ஆண் எறும்பு அல்லது ஆண் தேனீ இறந்துவிடும். ஆனால், கரையான்களைப் பொறுத்தவரை ராணி, ராஜா இரண்டும் சேர்ந்துதான் ஒரு புற்றையே உருவாக்குகின்றன" என்றார், பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன். மேலும், "ராணி கரையானின் உடலில் விந்தணுவை சேகரித்து வைக்கும் தன்மை இல்லை என்பதால், ராஜா கரையான் அதனுடனே இருந்து பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும்" என்றும் விளக்கினார். அதுமட்டுமின்றி, ஒரு புற்றில் முதன்மையாக ராணி, ராஜா இருப்பதைப் போலவே, இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் சில ஆண் மற்றும் பெண் கரையான்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். "ஒருவேளை புற்றின் முக்கிய அங்கமாக இருக்கும் ராஜாவோ, ராணியோ இறந்துவிட்டால், அவர்களின் இடத்தை நிரப்பிக் கொள்வது இந்த இரண்டாம் நிலை ஆண், பெண் கரையான்களின் வேலையாக இருக்கும். அதன்மூலம், ஒரு புற்று பல்லாண்டுக் காலத்திற்குப் பற்பல சந்ததிகளைக் கொண்டு செழுமை பெற அவற்றின் சமூகக் கட்டமைப்பு உதவுகிறது." பல கரையான் புற்றுகள் நன்கு உயர்ந்து நிற்பதைப் பல இடத்தில் பார்த்திருப்போம். இனி அதைப் பார்க்கையில், அந்தப் புற்று அவ்வளவு அதிகமான சந்ததிகளைப் பார்த்துள்ளது எனப் புரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட சுவாரஸ்யமான கரையான் புற்று உருப்பெறுவதில் முக்கியப் பங்கு வகிப்பதே மழைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக வீடுகளை மொய்க்கும் ஈசல்கள்தான். பட மூலாதாரம், Getty Images ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? முனைவர் பிரியதர்ஷனின் கூற்றுப்படி, ஒரு புற்றில் அதன் தோற்றம் மற்றும் நீட்சிக்குக் காரணமாக இருக்கும் ராணி, ராஜா கரையான்கள் மட்டுமின்றி, மேலும் பல ஆண், பெண் கரையான்கள் இனப்பெருக்க திறனுடன் இருக்கும். அவை, "மழைக் காலத்தின்போது வெளியேறி வந்து உயரப் பறந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அப்படி இறக்கைகளுடன் புற்றுகளில் இருந்து வெளியேறி வரும் கரையான்களையே ஈசல்கள் என அழைக்கிறோம்," என்று விவரித்தார் அவர். இதுகுறித்து விரிவாகப் பேசிய பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா, "இனப்பெருக்கம் செய்து புதிய புற்றுகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஈசல்கள் தாங்கள் ஏற்கெனவே வாழ்ந்து வந்த புற்றுகளை விட்டு வெளியே வருகின்றன," என்றவர், அவை அதற்கு உகந்த காலமாக மழைக் காலத்தை தேர்வு செய்வது ஏன் என்பது குறித்தும் விளக்கினார். மழைக்காலம் மிகவும் ஈரப்பதம் நிறைந்திருக்கும். ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் கலவை அவற்றுக்கு உகந்த சூழ்நிலையை வழங்குவதாகக் கூறுகிறார் சஹானாஶ்ரீ. மழைக்காலம் ஈசல்களுக்கு மட்டுமின்றி பெரும்பாலான உயிரினங்களின் இனப்பெருக்க காலமாகவும் இருக்கிறது. மழையின்போது அதிகளவில் உணவு கிடைப்பதும் அதற்கான ஒரு காரணமாக இருக்கிறது. இவற்றோடு ஈசல்களைப் பொறுத்தவரை, "மழைக்குப் பிறகு நில அமைப்பு ஈரப்பதம் கொண்டு, மண் நிறைவுற்று இருக்கும். அதன் விளைவாக மண் மென்மையான தன்மையில் இருப்பதால், புதிதாக இணைந்த கரையான் ஜோடிகள் துளையிட்டுப் புதிய புற்றைக் கட்டுவது எளிதாகிறது," என்று விவரித்தார் சஹானாஸ்ரீ. அவரிடம் ஈசல்களின் ஆயுள் ஒருநாள்தான் என்று கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அது உண்மையில்லை" என்று தெரிவித்தார். "பொதுவாக பல ஆயிரம் ஜோடிகள் புற்றை விட்டு இனப்பெருக்கம் செய்யக் கிளம்பினாலும், இறப்பு விகிதம் அதிகம் என்பதால் அதில் குறைந்த அளவிலானவையே உயிர் பிழைத்து, புற்று அமைக்கின்றன. எனவே பல நூறு ஈசல்கள் விரைவில் மடிவதைப் பார்த்ததன் அடிப்படையில் இந்தக் கட்டுக்கதை உருவாகியிருக்கலாம்." படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா ஈசல்களை மக்கள் உணவாகச் சாப்பிடலாமா? புற்றை விட்டு வெளியே வரும் ஈசல்களின் இறப்பு விகிதம் அதிகளவில் இருப்பதற்கு, பறவைகள், வேட்டையாடிப் பூச்சிகள், தவளை போன்ற வேட்டையாடி உயிரினங்கள் பலவும் காரணமாக இருக்கின்றன. அதேவேளையில் அவற்றின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு மனிதர்களும் ஒரு காரணம் என்கிறார் பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன். இந்தியாவின் பல பகுதிகளில் ஈசல்களை உணவாகக் கொள்ளும் பழக்கம் பல்வேறு கலாசாரங்களில் இருப்பதாகக் கூறுகிறார் சஹானாஸ்ரீ. "மழை நேரத்தில் ஈசல்கள் அதிக எண்ணிக்கையில் வெளியே வரும்போது அவற்றை உணவுக்காக கிராமப்புறங்களில் மக்கள் சேகரிப்பார்கள். சில இடங்களில், அவற்றை உலர்த்தி, வறுத்து கொள்ளுப் பருப்பு போன்ற தானியங்களுடன் கலந்து பயன்படுத்துவது உண்டு." ஈசல்கள் ஒரு காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த, சுவைமிக்க உணவாகக் கருதப்பட்டது எனக் கூறும் சஹானா, "இது கிராமப்புற உணவு மரபுகளுக்கும் நிலையான புரத மூலங்களுக்கும் இடையிலுள்ள ஆழமான தொடர்பைப் பிரதிபலிப்பதாக" குறிப்பிட்டார். ஈசல்களை உணவாகச் சாப்பிடுவது நல்லதா, அவை உண்மையாகவே புரதம் நிறைந்த உணவுதானா என்று ஊட்டச்சத்து நிபுணர் பிரியங்காவிடம் கேட்டபோது, "அவற்றை உணவாக உட்கொள்ளும் பழக்கம் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் உள்ளது. கோழி, ஆடு, மாடு ஆகியவற்றைச் சாப்பிடுவது போலத்தான் இவையும். எனவே, ஈசல்களை சுகாதாரமான முறையில் உட்கொள்வதால் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. அதோடு அவை புரதம் மிக்க உணவு எனச் சொல்லப்பட்டாலும், அதுகுறித்த அறிவியல்பூர்வ ஆய்வுகள் இந்தியாவில் இன்னும் விரிவாகச் செய்யப்படவில்லை," என்று தெரிவித்தார். இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேகாலயா, அசாம் போன்ற மாநிலங்களில் இன்றளவும் ஈசல்களை உணவாகப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y938124ylo

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

3 hours 35 minutes ago
குறித்த ஒரு மதத்தின் பெயரால் நான் கூட அவரை ஒரு குழுமமாக பார்த்துள்ளேன், இது எமது பார்வை தவறு, ஒரு இரண்டு வார காலத்திற்கு முன்னர் எனது வங்கிக்கு சென்றிருந்தேன், வங்கியில் எனது கணக்கின் பெயர் மாற்றத்திற்காக. அங்கு புதிதாக ஒரு இளைஞ்சருக்கு அந்த செயற்பாட்டை கொடுத்திருந்தனர், அவருக்கு பயிற்சியாளர் என்பதால் சில கட்டுப்பாடுகள் காணப்பட்டதால் ஒரு தாடி வைத்த இந்திய தோற்றம் உள்ள 🤣 ஒருவரை அணுகினார், அவருக்கு அந்த நடைமுறை பற்றிய புரிதல் இல்லாமல்; வர்த்தக ஒருங்கிணைப்பு அமைப்பிடம் பேசினீர்களா என கேட்டார் (அந்த அமைப்பினால் ஏற்கனவே பெயர் மாற்றப்பட்டாயிற்று, ஆனால் வங்கிக்கணக்கில் மாற்றப்படவில்லை) அதனை கூறிய போது அது புரியாமல் அந்த இளைஞ்சரிடம் கூறினார் " இந்த மனிதர்களை நம்பாதே, பின்னர் நீதான் சிக்கலில் மாட்டிவிடுவாய் என்றார்", அவர் கூறியது என்னை பாதித்தது பின்னர் வேறு வங்கியில் கணக்கினை ஆரம்பித்துள்ளேன்.

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்

3 hours 47 minutes ago
அண்ணை, குடும்ப கட்டுப்பாடு திட்டமிட்டமுறையில் பகிரங்கமாக வெளியே தெரியாமல் நடைபெறுவதாக வாசித்த நினைவு உள்ளது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 hours 54 minutes ago
நன்றி! இது ஒரு பொழுதுபோக்கான விடயம் சீரியசாக பார்ப்பதற்கு எதுவும் இல்லை, அதே போல உங்கள் கருத்துக்களையும் தாராளமாக கூறுங்கள்.

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

4 hours 16 minutes ago
இதை நம்புகிறீர்களா கோஷான் அவர்களே? அடுத்த ஆண்டு இதோடு வேறொரு கதை சோடித்துக்கொண்டு வருவார்கள். ஏதோ தாம்தான் பாதிக்கப்பட்டவர்கள், தமிழர் எதிலும் பாதிக்கப்படவில்லை என்றொரு அனுதாபத்தை தேடுவதும், தமிழரை குற்றவாளிகளாக்குவதுமே அவர்களின் எண்ணம். அவர்களை அன்று வெளியேற்றாமல் விட்டிருந்தால்; கிழக்கை விட பலமடங்கு அழிவு வடக்கில் ஏற்பட்டு நிலைமை மோசமடைந்து இருக்கும். அவர்கள் எப்போதும் தம்மை பெரிது படுத்துவதற்கு, தமது குற்றங்களை மறைப்பதற்கு இப்படியான கூக்குரல்கள் உதவுமென எண்ணுகிறார்கள். சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழர் ஒதுக்கப்பட்டும், தாக்கப்பட்டும் ஒழிக்கப்பட்டும் வருகிறார்கள். ஆகவே தமிழரை தாக்குவதால் தம்மை யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற துணிவு அவர்களுக்கு.

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

4 hours 28 minutes ago
அவர்கள் அங்குமிங்கும் பார்வையாளராகவும் பங்குதாரராகவும் இருந்து தம்மை வளப்படுத்த நினைக்கிறார்கள். ஹிஸ்புல்லா அறிக்கையை, அண்மையில் ஹக்கீமின் கருத்தை பார்த்தால் புரியும். இந்துக்கோவிலை அழித்து மீன் சந்தை, தமிழர் நிலத்தில் தமது ஆதிக்கம், அதற்கு விசேட அதிகாரம். எங்கிருந்து கிடைத்தது, ஏன் கிடைத்தது? தமிழர் தாக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, போராடி தமது விடுதலையை தேடுகிறார்கள், இவர்கள் சும்மாவிருந்து சுகம் தேட நினைப்பது எந்த விதத்தில் நிஞாயம்? அவர்கள் அடித்துக்கொள்கிறார்கள், அணைக்கிறார்கள் இதில் நமக்கென்ன? கோத்தாவின் ஊர்காவற்படையில் இருந்து தமிழரை அழித்தது யார்? ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை நடத்தி கோத்தாவை அரியணை ஏற்றியது யார்? அவர்கள் நினைத்தது ஒன்று, நடந்தது வேறொன்று. முஸ்லிம்களுக்கும் சிங்கள அரசுக்குமிடையில் 98% உடன்பாடுள்ளது, முஸ்லிம்களுக்கும் தமிழ் பேரினவாதிகளுக்குமிடையில் 98% முரண்பாடுள்ளது என்கிறார் முபாரக் அப்துல் மஜித். முஸ்லீம் ஆண்கள் சிங்களப்பெண்களை மணந்து தங்களோடு இணைந்து வாழ்வதாக சிங்கள அரசியால்வாதியொருவர் கூறுகிறார், பிறகேன் அவர்களுக்கு ஒரு தனியலகு? அவர்கள் கிழக்கில் தங்கள் வியாபர தலங்களை, மத வழிபாட்டு தலங்களை சுதந்திரமாக அமைக்கிறார்கள், தமிழர் நிலங்களை பறிக்கிறார்கள், தமிழர் அப்படி செய்ய முடியுமா? அவர்களுக்கு என்ன பிரச்சனை? தமிழரை எதிர்த்து, அழித்து, தம் இருப்பை தக்க வைத்துக்கொள்கிறார்கள். தமிழர் பிரிந்து போனால், அடுத்த குறி தாம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் எங்களோடு சேர்ந்து வாழவும் மாட்டார்கள், பிரிந்து போகவும் விடமாட்டார்கள்.

வல்வெட்டித்துறை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள்.

4 hours 47 minutes ago
வல்வெட்டித்துறை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள். நேற்று முன்தினம் (2025.10.30) வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களான திசாநாயக்க, கிறிஷாந்த ,லக்மால்,தர்ஷன் ஆகியவர்களினால் நடாத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையினால் கொற்றாவத்தை பகுதியில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு நேற்றைய தினம் காலை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். கடந்த வியாழக்கிழமை (30) அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடுவது தொடர்பாக விஷேட செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் பாராட்டபட வேண்டியது. Vadali Media News & media website

யாழ் . மாநகர சபையின் சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது

5 hours 49 minutes ago
யாழ் மா நகரசபைக்குள் ஒரு கறுப்பாடு இல்லாமல் சபையின் பதிவேடுகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்க முடியாது. அது போக சிவஞானம் அவர்கள் உண்மையில் நடந்தது என்ன என்பதை விளக்கி இந்த விடயத்தில் தான் அறிந்தவற்றை தெட்ட தெளிவாக பொதுவெளியில் சொல்லவேண்டும். ஆதனத்தின் விலாசம், அந்த இடத்தில் இப்போது இருக்கும் வியாபார இஸ்தாபனத்தின் பெயர், கட்டிடத்தை கொள்வனவுசெய்த காலத்தில் நகரசபையில் யார் யார் பொறுப்பில் இருந்தார்கள் என்ற விபரம் துல்லியமாக குறிப்பிட வேண்டும். அதை விடுத்து கிழக்கு மேற்கு என்று குறிப்பிடுவது வேலைக்கு ஆகாது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

6 hours 36 minutes ago
இல்லவேயில்லை. ஒருவித அசௌகரியமும் இல்லை. எனது கருத்து, அவவை தனியொருவராக சுட்ட முடியாது என்பதே. அவர்கள் அணியாகவே அப்படித்தான் லிளையாடினார்கள். இந்தியா இவ்வாறு பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கவில்லையோ என்னமோ. இனிவரும் அவர்களின் பேட்டிகளைப் படித்தால்த்தான் புரியும். அவுஸ்ரேலியரின் அணுகுமுறை தெரியும்தானே. அவர்கள் சுதாகரிப்பதுக்குள்ளேயே இந்தியா நன்றாகக் காலூன்றி விட்டது. அந்த ஒரு பிடி குடுத்ததைத் தவிர, ஜெமைமாவும் உறுதியாகவே விளையாடினா. ஒரு கட்டத்தில் ஒன்று ஒன்றாக ஓடத்தொடங்கினா. பின்னர்தான் அவ சொன்னா. அந்த நேரத்தில் தனக்கு தடுமாற்றம் வந்தது என்றும் சுலோகங்கள் சொல்லத் தொடங்கியது என்றும். இப்போது யோசிச்சுப் பார்த்தால், அது ஒரு நல்ல அணுகுமுறை. கோலியின் அணுகுமுறை.

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

6 hours 47 minutes ago
இதுதான் அய்யா அவர்கள் குணம் ...எமது இனப்பிரச்சினை விசயத்திலும் இதைத்தான் செய்கின்றார்கள் ... தை விளங்கிக் கொண்டும் நாம் முட்டுக் கொடிக்கப் போனால் மூக்குடைவது நமது இனம்தான் ...நீதி என்றால் அவர்களுக்குவேப்பங்காய்....சுயநலம் என்பது இரத்தத்தில் ஊறிய்தொன்று....உதாரணம் அவையின் இடப்பெயர்வில் ஆண்டுகள் பல் முடிந்துவிட்டாலும் ...இப்பவும் பல புதுப்புது விடையங்களை கொண்டுவந்து ...எம்மை கீழ்நிலைக்கு கொண்ட்வருவதே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்....எம்மில் பிழையிருக்கலா ம்....அதனை நாம் இங்கு பதிவிடுவதால் ...அவர்களுக்கே நாம் தீனி போடுகிறோம்...என்னை பொறுத்தவரை யாழில் இப்படியான செய்திகளை இணைத்து ...அதிகப்படியான நன்மைகள்தான் அடைகின்றார்கள் என்பது என் கருத்து...

பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...

7 hours 1 minute ago
என்னைய்யா புதுசாய் கிடக்கிது. நாங்கள் படிக்கும் காலத்தில் இப்படி எல்லாம் இல்லையே. மிஞ்சி மிஞ்சி போனால் சாமி படம் பார்க்க திரை அரங்கிற்கு கூட்டி செல்வார்கள். அல்லது அருகில் உள்ள கோயில்கள் ஏதாவதற்கு விசேட நாட்களில் செல்வோம். சபரிமலை கீரிமலைக்கு பக்கத்திலா உள்ளது? கொஞ்சம் பெரிசாய்த்தான் செய்யிறாங்கள். எல்லாரையும் ஐயப்பன் தான் காப்பாற்ற வேண்டும்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

7 hours 1 minute ago
உங்களுக்கு போட்டி பற்றிய தெளிவு உள்ளது என தெரியும், அந்த போட்டியில் அவரது களத்தடுப்பு ஒரு தற்காப்பு களத்தடுப்பாக இருந்தது, பொதுவாக அப்படி களத்தடுப்பினை அவர் போடுவதில்லை, அதனை பார்த்த போது அவுஸ்ரேலிய அணிக்கு கூட நொக்கவுட் போட்டி அழுத்தத்தினை கொடுக்கிறது என புரிந்து கொள்ள முடிந்தது, போட்டியினை முழுமையாக பார்க்கவில்லை, நிங்கள் போட்டியினை முழுமையாக பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன் உங்கள் கருத்து சரியாக இருக்கும் என கருதுகிறேன். அத்துடன் இதனை ஒரு குறையாக கூறவில்லை போகிற போக்கில் கூறிய விடயம். நான் விளையாடின காலகட்டத்தில் இது போன்ற ஒரு நிகழ்வு களத்தடுப்பில் மிக சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது, அது எனது பார்வையினை பெரிதாக மாற்றியிருந்தது, இவ்வாறான ஆர்வங்கள் பற்றிய ஒரு கருத்தாடல்தான் எனது பதிவு, நான் எனது கருத்தினை நியாயப்படுத்துவதற்காக எழுதவில்லை, அனைத்து விடயங்களும் விமர்சனத்துக்குள்ளாக வேண்டும் , நிங்கள் கூறுவதும் தவறில்லை, அத்துடன் இது ஒரு விளையாட்டு திரி ஆனால் சில கருத்தாடல்கள் சிலநேரங்களில் தேவையில்லா அசெளகரியங்களை உருவாக்கிவிடும், அவ்வாறான ஒரு சூழ்நிலைக்குள் உங்களையும் கள உறவுகளையும் தள்ளிவிட்டுள்ளேன் என புரிகிறது.

அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்

7 hours 20 minutes ago
எனது வேலையில் ஒரு இந்திய இஸ்லாமியர் வேலை செய்கிறார், அவர் தொழுகைக்கு செல்லும் போது கழிப்பறைக்கு செல்வதாக சொல்லிவிட்டு செல்வார், அதனை உணர்ந்ததால் அவரிடம் எப்போதும் வேண்டுமானாலும் சென்றுவாருங்கள் என கூறியிருந்தேன். வேலையில் அனைவருக்கும் கடைசி ஓய்வு எடுக்க விருப்பம், அவருக்கும் அந்த விருப்பம் இருந்தது அதனால் எப்போதும் கடைசியாக போக விரும்புவார் பொதுவாக என்னுடனேயே வேலை செய்ய விரும்புவார், அதற்கு காரணம் பல நாள்களில் அவர் உபவாசம் இருப்பததால் பெரிதாக வேலை செய்யமாட்டார், அந்த வேலைகளையும் சேர்த்து நானே செய்வதுண்டு. இரண்டு வாரத்திற்கு முன்னர் முதலாவது ஓய்விற்கு சென்றுவிட்டேன், மறு நாள் கடைசி ஓய்விற்கு சென்றுவிட்டேன் (அணித்தலைவர் முடிவு) அதனால் அவர் என்னுடன் கதைக்கவில்லை. நான் அதனை திட்டமிட்டு செய்யவும் இல்லை ஆனால் அவருக்கு அது தெரிந்திருந்தும் எனது தவறாக எனக்கு சித்தரித்துக்காட்ட முயல்வதற்காக அவ்வாறு செய்தார் என கருதுகிறேன், இரண்டு மூன்று தடவை வேலை விடயமாக கதைத்த போது கூட பதில் கூறவில்லை, அதன் பின்னர் அவரை அப்படியே விட்டு விட்டேன் பின்னர் தானாக வந்து பேசுகிறார். அதனாலேயே அவ்வாறு பதிலளித்தேன்.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

7 hours 22 minutes ago
குற்றச்சாட்டு என்பதைவிட, புரிதல் இல்லாததுதான் அயர்ச்சி அளிக்கிறது. வேறொன்றும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, தேசிய அணியில் விளையாடும் ஒவ்வொருவரும் பெரு வீரர்களே. என்னை விட பல பல மடங்கு உயர்ந்தவர்கள். அந்த மரியாதை எப்போதும் உண்டு. அணித்தலைமை பற்றி நீங்கள் சொன்னது ஒரு நல்ல பார்வை. புரிகிறது.
Checked
Sat, 11/01/2025 - 08:28
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed