32 minutes 44 seconds ago
நோர்வேயும் ஒரு ஆணியும் புடுங்கவில்லை இந்த விசர் சுமத்திரனும் ஒன்றும் புடுங்கவில்லை இதை ஒரு செய்தியாய் போடுபவர்களை தான் குற்றம் சொல்லனும் .
35 minutes 51 seconds ago
தேர்தலில் தோல்வியுற்ற, “முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்”
“சுத்துமாத்து சுமந்திரனுக்கு”, நோர்வே தூதரகத்தில் என்ன வேலை. 😂
கடந்த 15 வருசமாய் புடுங்கின ஆணி காணாது என்று,
வெட்கம் இல்லாமல்… இப்பவும் புடுங்க நிற்கிறார். 🤣
39 minutes 53 seconds ago
எலான் முன்னர் அறிவித்தது போல் முதலில் கலிபோர்னியா நகரங்களான லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ இடையே மணிக்கு 700 மைல் வேகத்தில் செல்லும் ஹப்பர் லூப் திட்டத்தை நிறைவேற்ற எலானிடம் சொல்லுங்க அதன் பின் பார்க்கலாம் .
40 minutes 48 seconds ago
நல்ல பயங்கரவாதியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
🤣
1 hour 4 minutes ago
இங்கிலீசுவ தெரியாத அனுர சந்திக்கலாம்🤣🤣🤣
1 hour 13 minutes ago
சாணக்கியனும் சுமந்திரனும் நோர்வே தூதரை சந்திப்பதில் ஒரு லொஜிக் இருக்குது. அது சரிதான். அவர்கள் துரோகிகள். ஆனால் பார் சிறிதரன் தான் சிபாரிசு செத்த பார்களின் உரிமம் நிறுத்தப்பட்டாற் கூட நோர்வே தூதரை மட்டுமல்ல வேறு எந்த நாட்டுத் தூதுவரையும் சந்திக்கமாட்டார். அதன் காரணம் பார் சிறிதரனுக்கு இங்லிஷ் தெரியாதது என்பது அல்ல,😂 இறுதி யுத்தத்தில் நோர்வே உள்ளிட்ட சகல நாடுகளும் தமிழருக்கு துரோகமிழைத்துதான் காரணம். 👀
நீதி: (இங்லிஷ் உனக்கு) கிட்டாதாயின் வெட்டென மற.😂
1 hour 28 minutes ago
இங்கை காவோலையைக் காணவில்லையே🤣
1 hour 45 minutes ago
உங்கள் பெருந்தன்மைக்கும், மனதுக்கும் நன்றி ஐயா.
2 hours 4 minutes ago
சுமந்திரன், சாணக்கியனை... "பாட்டா பாத்ரூம்" செருப்பு போட வைத்து, பழி வாங்கிவிட்டார்.
கட்சியாலும், மக்களாலும் நிராகரிக்கப் பட்ட ஒருவரை... அருகில் வைத்திருப்பதால்,
ஓட்டகத்துக்கு இடம் கொடுத்த நிலை... சாணக்கியனுக்கு ஏற்படப் போகுது.
2 hours 12 minutes ago
பெப்ருவரி நடுபகுதியில்தான் சீனா போற பிளான் இருந்தது சனாதிபதிக்கு...இந்தியா போட்டுவந்த கையோடை ..சந்தித சீனக்குழு நல்ல வெருட்டு வெருட்டியிருக்கினம் போலை....அதுதான் அய்யா அடித்துப் பிடித்து ஓடுகிறார்..
2 hours 16 minutes ago
இதிலை பாருங்கோ...சாணக்கியன் காலில் பாட்டா செருப்பு...சுமந்து டிப் டொப் உடுப்பு...காலில் சப்பாத்து...என்னெண்டு சொன்னால் .. பழைய படத்திற்கு பிரதியீடு செய்யுறாரா சுமந்திரன்..
2 hours 24 minutes ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
2 hours 31 minutes ago
சிங்கன் ..ரிசாத்துக்கும்...அவைசார்ந்தோருக்கும்தான் அடிக்கிறார் போலகிடக்கு...
2 hours 35 minutes ago
சரி . ......சரி ....ஆகட்டும் பார்க்கலாம் . .....! 😁
2 hours 36 minutes ago
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னரான தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு விவகாரம்
நடராஜ ஜனகன்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் இந்திய விஜயம் வெற்றிகரமான முறையில் அமைந்திருக்கிறது. இந்தியா உடனான இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக உடன்பாடுகள் பலமான நிலைக்குச் சென்றிருக்கிறது. இவை தொடர்பாக முன்னை நாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டுமளவுக்கு விடயங்கள் மேல்நிலை பெற்று காணப்படுகிறது.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல் கீழ் சந்தை பொருளாதாரத்தை நோக்கிய நகர்வுகள் மூலதன வருகைக்காக மாற்றங்களுக்கு தயாராகும் நிலை என அனைத்து தளங்களிலும் நெகிழ்வுத் தன்மையுடன் பயணிக்க தேசிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது. இன்றைய உலகமயமாக்கல் போக்கு பல்தேசிய நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்பவற்றை தவிர்த்து தனித்த பயணத்தை தொடர முடியாது என்பது தேசிய மக்கள் சக்திக்கு தெளிவாகவே தெரிகின்றது. எனவே எதிரணி அரசியல் சக்திகளின் பொருளாதார கொள்கை ரீதியான முன்னெடுப்புகள் அனைத்தையும் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் பலத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தலைமையில் கீழ் தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் நிலை காணப்படுவதால் எதிரணியினருக்கு பொருளாதார கொள்கை ரீதியான போராட்ட செயற்பாடுகளுக்கு இடமில்லாமல் போயுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வரலாற்றைப் பார்க்கின்ற போது குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கொள்கை நிலைப்பாட்டை பார்க்கின்ற போது இந்திய விரோத நிலைப்பாடு மிகப் பிரதான பாத்திரத்தை வகித்து வந்திருக்கிறது. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜயவீரவின் ஐந்து பிரதான கொள்கை முன்னெடுப்பில் இந்திய விஸ்தரிப்பு என்ற விடயம் பிரதான ஒன்றாக அமைந்திருந்தது.
எனவே இன்றைய தேசிய மக்கள் சக்தியினர் இவை யாவற்றையும் புறந்தள்ளிவிட்டு இந்தியாவுடனான இணக்க நிலைக்கு தம்மை தயார்படுத்தி வருவது ஒரு ஆரோக்கிய நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதிய மாற்றம் அவர்களின் அங்கத்தவர்களின் மத்தியில் குழப்பங்களை உருவாக்கியிருக்கும் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து நிற்கும் முன்னிலை சோசலிச கட்சியினர் தொடர்ந்தும் இந்திய விரோத முன்னெடுப்புகளை காத்திரமாக முன் எடுத்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. மிகப் பலவீனமான நிலையில் இருக்கும் விமல் வீரவன்ச அணியினரும் இந்த இந்திய விரோத செயற்பாடுகளுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் இந்தியா தனது எதிர்பார்ப்பை அனுரகுமார திசாநாயக்காவுடனான சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தி இருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இம்முறை 13 வது அரசியலமைப்பு தொடர்பாக குறிப்பிட்டு இந்தியா கூறாமல் இருந்துள்ளது என்ற விமர்சனங்களும் மேல் வந்திருக்கிறது.
மேலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் மூன்று வருடம் கழிந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வை வழங்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.இது காலதாமதத்தை ஏற்படுத்தும் நிலையாகவே பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் மிகப் பிரதான பிரச்சினையாக தமிழ் தேசிய பிரச்சினை காணப்படுகிறது. கடந்த 76 ஆண்டு காலமாக நீடித்த நிலையில் இப்பிரச்சனை காணப்படுகிறது. இலங்கை பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்கு சென்றதும் குறிப்பாக போர் நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட கடன் பொருளாதார இழப்பு என அனைத்தும் இதைச் சுற்றியேகாணப்படுகிறது. எனவே இந்த பிரதான பிரச்சனை தொடர்ந்து பின் தள்ளும் நிலையே தொடர்கிறது. 1977ல் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது வட்டமேசை மாநாட்டின் மூலம் தமிழர் பிரச்னைக்கு தீர்வு வழங்கப்படும் என்ற உறுதி மொழியை பிரசாரத்தின் போது வழங்கியிருந்தார். இதன் காரணமாக தெற்கிலே தமிழர்கள் தமது வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சிக்கே வழங்கியிருந்தனர்.ஜே .ஆர். பதவிக்கு வந்து நான்கு வருடங்கள் கழிந்த நிலையில் ஒன்றுக்குமே பிரயோசனம் இல்லாத மாவட்ட சபைகளை தமிழ் மக்களுக்கு தீர்வாக முன்வைத்தார். இந்த குறை பிரசவத்தின் காரணமாகவே மிகப்பெரிய அனர்த்தங்கள் தமிழர் தேசத்தில் உருவாகும் நிலை தோற்றம் பெற்றது.
சமாதான தேவதையாக 1994 ல் 62.4 விகித வாக்குகளை பெற்று பதவிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க ஆறு வருடங்கள் கழிந்த நிலையிலேயே புதிய அரசியல் யாப்பின் ஊடாக தீர்வைக் கொண்டு வந்தார். ஆனால் அவரது முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. இது தொடர்பாக முக்கிய சந்திப்பு ஒன்றில் மங்கள சமரவீரா கருத்து கூறுகையில்; 1994ல் மக்கள் ஆதரவு பலமாக இருந்த காலப்பகுதியில் புதிய பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றி தீர்வு முயற்சிகளை மேற்கொண்டிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் என கூறியிருந்தார். எனவே தற்போது கூட இனவாதம், மதவாதம் என்பன மிகவும் பலவீனமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குறிப்பாக இந்த சக்திகளுக்கு தலைமை தாங்கி வந்த மகிந்த ராஜபக்ஷ அணி ஆடை களைந்த நிலையில் அம்மணமாக நிற்கும் இன்றைய சூழ்நிலையில் தீர்வு முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். தென்னிலங்கை மக்களும் இதற்கு ஆதரவாகவே உள்ளனர். ஏதோ காரணங்களுக்காக தேசிய மக்கள் சக்தி இதனை பின்தள்ளி வருவது கவலை தரும் நிலையாகும்.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமை தொடர்பான சர்ச்சை சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் தரப்பில் ஆறு பேர் இந்த சிக்கலுக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் இந்த சிக்கலுக்குள் சிக்கியிருக்கும் நிலை தோற்றம் பெற்றிருக்கிறது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தரப்பு 42 விகிதம் என்ற நிலையும் எதிரணிக்கு 58 விகிதம் என்ற நிலையும்
காணப்பட்டிருந்த நிலையில் எதிரணிகளின் பலவீன நிலை காரணமாக பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. எதிரணியின் பலவீன நிலை காரணமாக தொழிற்சங்க மட்டத்தில் சிவில் அமைப்புகள் மட்டத்தில் பெரிய அளவிலான பின்னடைவுகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இலங்கையில் ஆளும் தரப்பின் பலத்தை விட எதிரணியின் பலவினமே அரசாங்கத்துக்கு அதிக பலத்தை வழங்கி வருகிறது.
தமிழர் தேசத்தைப் பொறுத்தவரையில் தென்னிலங்கை எதிரணி தளத்தை விட தமிழர் தேசத்தின் அரசியல் அணிகளின் நிலை அதிக பலவீன நிலையில் காணப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் தமிழர் தேசம் ஐக்கியமான அணுகுமுறைக்குள் பயணிக்க வேண்டும் என்பது சூழ்நிலை நிர்ப்பந்தமாக காணப்படுகிறது. ஆனால் தமிழர் தேசிய அரசியல் இயக்கங்கள் அந்த நிலைக்கு இன்னும் வராத நிலையே காணப்படுகிறது . தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் ரெலோவுக்கும் இடையே ஒரு சந்திப்பு ஏற்பட்டிருந்தது.அந்த நிலைமைக்கு பின்னர் ஐக்கியமான செயற்பாட்டு மேல் வருகை கரைந்து போன நிலையே காணப்படுகிறது. வடபகுதியில் 27 ஆயிரம் மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒருவருக்கு தமது வாக்குகளை அள்ளி வழங்கியிருந்தனர். மேற்படி வேட்பாளர் சிக்கல்கள் மேல் சிக்கல்களை உருவாக்கியிருப்பதுடன் தற்போது நீதிமன்றம் வரை விடையங்கள் நகர்ந்து வருகின்றது.
புதிய சூழ்நிலைகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய பிரதான நகர்வுகள் தொடர்பில் தமிழர் தேசத்தின் அரசியல் இயக்கங்களுக்கிடையே ஒரு புரிதல் நிலைமை இன்று வரை தோற்றம் பெறாதிருப்பது கவலை தரும் நிலையாகும். இந்த நிலை மேலும் தொடர்ந்தால் வரவிருக்கும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தலில் கூட பெரும் பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.
https://thinakkural.lk/article/314015
2 hours 38 minutes ago
நல்ல விஷயம் . ........! 👍
2 hours 38 minutes ago
இந்தியாவுக்கான இலங்கை இராஜதந்திரி மீள அழைப்பு
22 Dec, 2024 | 12:16 PM
(லியோ நிரோஷ தர்ஷன்)
இராஜதந்திர பணிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தாணிகர் ஷேனுகா செனவிரத்ன கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டு டிசெம்பர் மாத்திலிருந்து டெல்லியில் இராஜதந்திர பணிகளை பொறுப்பெடுத்திருந்த ஷேனுகா செனவிரத்ன அழைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உயர்ஸ்தானிகர் ஒருவர் கூடிய விரைவில் டெல்லிக்கு அனுப்பப்படவுள்ளதாகவும், அவர் யார் என்பது குறித்து அரசாங்கம் அறிவிக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
உலக நாடுகளில் பணிப்புரிகின்ற இலங்கை இராஜதந்திர மையங்களை முழு அளவில் மறுசீரமைப்புக்கு உட்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள இராஜதந்திர உயர் பதவிகளுக்கு கடந்த ஆட்சி காலங்களில் வழங்கப்பட்ட அரசியல் மற்றும் உறவு ரீதியான நியமனங்களை இரத்து செய்வதற்குமான அறிவிப்புகளை அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இதன் பிரகாரம் சுமார் 16 இராஜதந்திரிகளை உடனடியாக நாட்டுக்கு மீள வரவழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.
அதற்கமைய அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கொன்சியூலர் ஜெனரல் கலாநிதி லலித் சந்திரதாச, சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கொன்சியூலர் ஜெனரல் அனுர பெர்னாண்டோ, இந்தியாவின் சென்னையில் உள்ள பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரன், சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள கொன்சியூலர் ஜெனரல் எஸ்.எம்.ஏ.எஃப். மௌலானா ஆகியோர் இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்திலுள்ள நிஷான் மாணிக் முத்துகிருஷ்ணா, அங்குள்ள மூன்றாவது செயலாளர், தாரக திசாநாயக்க, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாவது செயலாளர் சஞ்சய் புஞ்சிநிலமே, ரோம் தூதரகத்திலுள்ள மெல்கி சந்திமா பெரேரா ஆகியோருக்கும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கான்பரா உயர்ஸ்தானிகராலயத்திலுள்ள தினுகா கார்மெலின் பெர்னாண்டோ, பாரிஸ் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் சஹஸ்ர பண்டார, மாஸ்கோ தூதரகத்திலுள்ள பந்துல டி சொய்சா, டில்லி உயர் ஸ்தானிகராலயத்திலுள்ள அன்வர் முகமது ஹம்தானி, பெய்ரூட்டிலுள்ள மூன்றாவது செயலாளர் பிரியங்கிகா திஸாநாயக்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அங்காராவில் இரண்டாவது செயலாளர் யாஸ்மின் ஹில்மி முகமது, நெதர்லாந்தில் உள்ள ஹேக் தூதரக ஆலோசகர் அஷ்வினி ஹபாங்கம, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமிலுள்ள ஜனக ரணதுங்க உள்ளிட்ட அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் இராஜதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மேலும் பல நபர்களை மீள அழைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/201850
2 hours 38 minutes ago
சரி, கேட்டதை அப்பிடியே நெடுந்தீவுக்கும் சேர்த்துப் போடச்சொன்னாப் புண்ணியமாப்போகுமெல்லே...
2 hours 39 minutes ago
மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்துக்காக சிலர் அணுகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - அருண் ஹேமச்சந்திர
Published By: Digital Desk 2
22 Dec, 2024 | 03:16 PM
(துரைநாயகம் சஞ்சீவன்)
மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்துக்காக சிலர் அணுகி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் கேமச்சந்திர தெரிவித்தார்.
ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மிமனவுடன் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சட்ட விரோத குடிவரவாளர்களாக வருகை தந்துள்ள மியன்மார் - ரோஹிங்யா அகதிகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்து வருகிறோம். அந்த வகையில் அவர்களுக்கான உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட தேவைகளை செய்து வருகிறோம்.
குறித்த அகதிகள் கடந்த வெள்ளிக்கிழமை (20) திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டனர். உடனடியாக அங்கே நடமாடும் மருத்துவ முகாமினை மேற்கொண்டிருந்தோம்.
பின்னர் சட்டத்தின் முன் இவர்கள் நிறுத்தப்பட்டார்கள். சட்டத்தின் பிரகாரம், மாலுமிகள் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏனைய 103 பேரும் தற்போது ஜமாலியா பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை சுகாதார துறையினர், நிர்வாகத்துறையினர், பாதுகாப்புத் தரப்பினர், வெளிவிவகார அமைச்சு உட்பட பல துறை சார்ந்தவர்கள் ஒன்றாக இயங்கி வருகிறார்கள்.
ஆனால் சிலர் இந்த விடயத்தை தங்கள் சுய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
ஒரு பாரிய விடயத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இந்த வேளையிலே ஒருசில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும்.
நாட்டைப் பொறுத்தவரையிலும் திருகோணமலையை பொறுத்தவரையிலும் இது புதிய அனுபவம் இந்த விடயத்தை அணுகுவதற்கான ஒட்டுமொத்த அம்சங்களை இந்த அரசாங்கம் கொண்டிருக்கின்றது. அத்துடன் மிகவும் சிறப்பாக அனைத்து விதத்திலும் அணுகி வருகின்றது. ஆனாலும் தமது அரசியல் இலாபத்தினை கருத்தில் கொண்டு ஒரு சிலர் இதனை வைத்து அரசியல் பிழைப்பு வாதத்தை மேற்கொள்ள விரும்புவார்களாக இருந்தால் அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
அத்துடன் நீங்கள் ஏதாவது உதவிகள் செய்ய விரும்பினால் மாவட்ட செயலாளர் ஊடாகவோ அல்லது பிரதேச செயலாளர் ஊடாகவோ செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
https://www.virakesari.lk/article/201876
2 hours 39 minutes ago
அந்த வண்டி லண்டனுக்குத்தான் வருகுது சார் . ....... அங்கிருந்து உங்க வீட்டுக்கு வருவதற்கு பத்து மணித்தியாலம் வேணும் . ........ ஹா . .....ஹா . ...... விரும்பினால் கோஷான் சே யை சந்தித்து ஒரு கோப்பி குடித்துவிட்டுத் திரும்பிப் போகலாம் . ..........! 😂
Checked
Sun, 12/22/2024 - 12:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed