புதிய பதிவுகள்2

பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

2 months 2 weeks ago
பிரித்தானியாவில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! பிரித்தானியாவின் பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டின் குடியேற்றச் சட்டங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்தவகையில் தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை பெற தேவையான கால அவகாசம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளமை பிரிட்டனில் குடியுரிமை பெற முயற்சிப்பவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பிரித்தானியாவில் குடியேற ஆங்கில மொழித் தகமை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமான குறித்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக அமைதி விருத்திசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த மாற்றங்கள் குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டு குடிமக்களுக்கு சவாலாக மாறலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மிகவும் கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுவதாகவும்,மனித உரிமை பாதுகாப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இச் சட்டங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441497

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

2 months 2 weeks ago
வாகனங்களை வாங்கி பூசை செய்ய வருவோரை, பூசைக்கு முதல் விசாரணை செய்து பொலிஸாரின் சான்றிதழோடு வாருங்கள் என்று திருப்பி அனுப்பப்போகிறார் பூசாரி.

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

2 months 2 weeks ago
அய்யரையும் விசாரணைக்கு கூப்பிட்டு...ஒருநாள் ...உள்ளுக்கு போட்டால் சரி..

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

2 months 2 weeks ago
எனக்கொரு சந்தேகம். லலித், குகன் கொலைக்கு டக்கிலஸை பயன்படுத்தியிருக்கலாம் புலனாய்வுக்குழு. மாறி மாறி வந்த முன்னாள் அரசியல்வாதிகள் கொலை கொள்ளைகளை வளர்த்து இராணுவ போலீஸ் துறையை தமது பாதுகாப்பிற்க்கு அரணாக உருவாக்கியுள்ளனர்.இந்த துறைகளில் சுத்தமானவர்கள் என்று யாரும் இல்லை. அவர்கள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அதனாலேயே கோத்தாவும் நாட்டை விட்டு தப்பியோட வேண்டி வந்தது. அனுரா அரசியலில் வீரம் இருந்தாலும் இந்த நரிகளை சமாளிப்பதற்கு அனுபவம், செல்வாக்கு காணாது. உடனடியாக இவர்களில் கை வைக்க முடியாது. சாட்சிகள், தாங்கள் யார் அதிகாரத்தால் இப்படி நடந்து கொண்டோமென மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும், மக்களே இவர்களுக்கு நிரந்தர தீர்ப்பெழுத வேண்டும். இல்லையேல் இவர்களை ஐ .நா.வில் கையளிக்க வேண்டும். அதை அனுரா செய்ய மாட்டார். மக்கள் ஒரு நாள் செய்வார்கள். எங்கள் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இழந்து தனிமையிலும் வறுமையிலும் முதுமையிலும் வாடுவதுபோல் அதற்கு காரணமான இவர்களும் தவிக்க வேண்டும், தவிப்பார்கள் விதி வலிமையானது.

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

2 months 2 weeks ago
முன்னாள் முக்கிய அரசியல்வாதிகளை நெருங்க இவர்கள் பயப்படுகின்றார்கள் போலுள்ளது. பிள்ளையான், இனியபாரதி என்று… தமிழர்களை வைத்தே எத்தனை நாள் படம் காட்டிக் கொண்டு இருக்கப் போகின்றார்கள். செம்மணி விடயத்துடன்…. டக்ளசையும் விசாரனை வளைத்துக்குள் கொண்டு வரவேண்டும். ஆனால் அது நடக்குமா என்று தெரியவில்லை.

அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா?!

2 months 2 weeks ago
புலம் பெயர் தமிழர்கள் capital pooling செய்து இலங்கையில் ஒரு நிறுவனத்தை அமைப்பதன் மூலம் Real Estate Investment Trust என்ற வகையில் நல்ல வருமானம் தரும் இது போன்ற இடங்களில் முதலீடு செய்யலாம்.

மன்னாரில் வழக்கு விசாரணைக்கு சென்று திரும்பியவர் கத்தி முனையில் கடத்தல்; போதைப்பொருள் மாபியாக்கள் அட்டகாசம்

2 months 2 weeks ago
அவர்கள் தானே விநியோகிஸ்தர்கள். எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? அவர்களே குற்றவாளிகள், பதவி இழப்பு, வேலை நீக்கம் என்று செய்திகள் வருகின்றனவே. இதுவரை காலமும் இவர்களை கேள்வி கேட்காமல் ஊட்டி வளர்த்தது யார்?

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

2 months 2 weeks ago
ஒன்றொன்றாக வெளிவந்து நாடே அலறப்போகுது. நாமல் நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு ஒத்திகை பாத்துள்ளார். பெரும்பாலும் மாலை தீவுக்குத்தான் போக முடியும், இல்லையென்றால் பெரும் இரத்தக்களரி ஏற்பட்டு ஆட்சியை கைப்பற்ற முனைவார்கள். அனுரவுக்கு எச்சரிக்கையும் விட்டுள்ளார் நாமலும் அவரது கட்சியினரும். எல்லாமே கொலை கொள்ளைக்கூட்டம்! கொஞ்சமாவது மனச்சாட்சி, படிப்பறிவு, அநுபவம் வேண்டும் அரசியலுக்கும் பொறுப்புள்ள அமைச்சர்களுக்கும். வெறும் இனவாதத்தையே முதலாக கொண்டு கொலையில், அழிவில் ஆட்சி செய்ய முடியாது. மகாவம்சத்தில் தங்கள் பெயர் இடம்பெற வேண்டுமென்பதற்காக எத்தனை பித்தலாட்டங்கள். இப்போ அதே மஹாவம்சம் இவர்களை எப்படி சித்திரிக்கும்? நாட்டை கொள்ளையடித்து சீரழித்த கூட்டம்!

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

2 months 2 weeks ago
ஐயருக்கும் ஒரு பங்கு கொடுத்திருப்பார்கள். ம், நீங்கள் பள்ளிகூடத்தில் படிக்கிற காலத்தில இதுவே பெரிய விஷயம். இப்போ இருக்கிற தொழில் நுட்ப்ப வசதிகள் அப்போ இருந்திருந்தால்; எத்தனைபேர் மோட்டார் சைக்கிளென்ன? வீடு, நகை அதற்கு மேலேயும் வாங்கியிருப்பார்கள். உங்களுக்கு கொடுப்பினை இல்லை. இதுவும் ஒரு ஏமாற்றுத் தான்.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

2 months 2 weeks ago
எந்த உலகத்தில இருக்கிறியள், அவர்கள் புலிகளை நினைவு கூற முடியும் என்று எங்கேயுமே சொல்லவில்லை

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

2 months 2 weeks ago
ஓம், மிக முக்கியமானவர்கள் இந்த அரசியல்வாதிகள். அவர்களை பாதுகாப்பதும் அரசியல்வாதிகள் தான். முன்னாள் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோனை பாதுகாக்க…. மகிந்த, கோத்தா, ரணில்… என்று மூன்று ஜனாதிபதிகள் குத்தி முறிந்தார்கள். கடைசியில் அனுரா அரசில் கைது செய்யப் பட்ட போது… அவரின் வீட்டில் 385 உயர்தர மது பண போத்தல்கள் இருந்தனவாம். இவை எல்லாம் ஏதோ ஒரு குற்றச் செயலை மறைக்க கொடுக்கப் பட்ட லஞ்சமாக இருக்கவே சாத்தியம் உள்ளது. இதனை விட… கோடிக்கணக்கில் பணமும் புழங்கி இருக்கும்.

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!

2 months 2 weeks ago
பாராளுமன்றம் அரசியல்வாதிகளை தவற விட்டு விட்டீர்கள். மனித புதைகுழி, ஊழல், கொலை, கொள்ளை, கடனால் சூழ்ந்துள்ள நாடு. இது இன்னும் இவர்களுக்கு புரியவில்லை. பிணந்தின்னி பேய்கள் அரசாளும் நாடு!

இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி

2 months 2 weeks ago
புழுகு மோடி அந்த நாடுகளின் பட்டியலை வெளியிடலாமே? விடுதலைப்புலிகளிடம் வலிய வந்து வாங்கிக்கட்டியதையும் சொல்லலாம். இலங்கை ஜனாதிபதியும் உப்பிடித்தான் கதை விட்டவர் உண்மையை, அவர்கள் செய்த கொடூரத்தை மறைக்க. பரவாயில்லையே, இலங்கைக்கு ஒன்றும் சளைத்தது இல்லை இந்தியா. எத்தனை அப்பாவிகளின் வீடுகளோ? காரணமானவர்களை அழிக்க முடியாவிட்டாலும் வீடுகளை அழித்து விட்டீர்கள். இனி பயங்கரவாதிகள் வாழவே முடியாது. குடிமக்களையும் அவர்களின் இல்லங்களையும் குண்டுபோட்டு அழித்து விட்டு, புலிகளையும் அவர்களின் முகாம்களையும் அழித்துவிட்டோம் என்பார்கள், பின் இராணுவத்திற்கு ஆள், பணம் சேர்ப்பார்கள். அதெப்படி என்று யாரும் கேட்க்கவுமில்லை, இவர்கள் சொல்லவுமில்லை.

பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு

2 months 2 weeks ago
பன்னீர்செல்வம் நேற்று முதல்வர் ஸ்ராலினை போய் சந்தித்து இருக்கின்றார். தி. மு.க. வில் போய் சேரப்போகின்றார் போலுள்ளது.

தினசரி 7,000 அடி நடந்தால் புற்றுநோய், இதய நோய் அபாயம் குறையும் - புதிய ஆய்வில் தகவல்

2 months 2 weeks ago
எனக்கு தெரிந்தவரின் உறவினர் சீனியர் அவருக்கு டொக்டர் நன்றாக நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று ஆலோசனை கொடுத்திருக்கின்றார் இவருடைய வீட்டில் இருந்து இரண்டாவது பஸ் நிறுத்துமிடம் ஒன்று +அரை கிலோ மீட்டரில் உள்ளது ஒரு லேசான ஏற்றம். இவர் என்ன செய்வார் என்றால் அந்த பஸ் நிறுத்துமிடத்திற்கு பஸ்சில் செல்வார் அங்கே இருந்து இறக்கத்தை நோக்கி நடந்து வீடுவந்து சேர்வார்.

அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா?!

2 months 2 weeks ago
ஓம் தான் அறுகம்பே இலங்கையில் இருப்பதாக நினைத்தாராம் ஆனால் அது இஸ்ரேல்லின் Tel Aviv போல் தோன்றுகின்றதாம் இலங்கை காத்தான்குடியை பார்த்த போது இந்த பொய்யருக்கு எப்படியாம் தோன்றியது? அவுஸ்ரேலியாவில் புர்க்காக்களை தாடிகளை பார்க்கின்ற போது எப்படி தோன்றியதாம்?

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்! ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!

2 months 2 weeks ago
பொதுவாக மூளைக்கு என்ன நடக்கிறது என்பது (மற்ற உடல் பகுதியில் இருந்து) அறிவிக்கப்பட்ட பின்பே, மூளை எதை செய்ய வேண்டும் (குறிப்பிட்ட பகுதிக்கு) என்பதை அறிவுறுத்தும். உ.ம். ஆக இயங்கும் போது காலோ கையோ அடிபடப்போவது மூளைக்கு தெரியாது. அடிபட்ட உடன் மூளைக்கு செல்லும் சமிக்கியை, குறித்த அங்கத்தை அந்த இடத்தில் விலத்துமாறு அறிவிப்பது. இப்படியானதே நாம் துள்ளுவது, பின்னோக்கி அங்கத்தை அசைப்பது, இழுப்பது போன்றவை. இங்கே சொல்லப்பட்டு இருப்துக்கு ஒப்பானது மலம் வெளியேற்ற்ற வேண்டிய உணர்வு வருவது. அதை மூளை அதுவாக செய்வது இல்லை, குறிப்பிட்ட பகுதி (மலம் நிரம்பி விட்டது) அகன்று, இழுபட்டு உருவாகும் சமிக்ஞைகள் மூளைக்கு (ஏதோ (மலம்) நிரம்பி விட்டது) என்பதை அறிவுறுத்த, மூளை பின்பு குறிப்பிட்ட பகுதி தசைகளுக்கு (சுருங்க அல்லது இளக) அறிவிப்பது, அதாவது மலம் வெளியேற்ற வேண்டிய உணர்வு உருவாகுவது. ஆம் , பொதுவாக மூளை எத்தனிக்கும் பாதுகாக்க. ஆனால் வந்த வருத்தமோ, நோயோ ஏதோ, வெளி (மருத்துவ) உதவி இன்றி மூளை எதிர்ப்பதை, பாதுக்காக்க எத்தனிப்பதை மேவும் (பொதுவாக நடப்பது, உடனடியாக என்று இல்லை காலம் எடுத்து புற்றுநோயில் போல) என்றால் ஆக குறைந்தது உடம்பின் எதாவது ஒரு பகுதியை தற்கலிகமாகவேனும் பகுதியாக செயல் இழக்க வைக்கும், அத்துடன் உடம்பில் நோய் போன்றவற்றால் உருவாகும் ஒருபகுதி தாக்கம் மற்றவற்றையும் பாதிக்கும் ( இயந்திரங்கள் போல). இங்கே ஜஸ்டின் சொன்ன உதாரணம் போல ஆனால், மூளை எத்தனிப்பது, எதீர்ப்பது போதுமானது என்றோ , வந்த வருத்தமோ, நோயோ அதை மீறாது என்பது மூளைக்கே தெரியாது. எனவே மருத்துவத்தை இயலுமான அளவு விரைவாக நாட வேண்டும். சும்மா எழுதுவது, அரைகுறையாக விளங்கி.
Checked
Sat, 10/18/2025 - 12:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed