புதிய பதிவுகள்2

உணவு செய்முறையை ரசிப்போம் !

2 months 4 weeks ago
பத்து வகையான போலி ரெசிபி செய்வது எப்படி .... பருப்பு போலி (Chana Dal Poli / Puran Poli) தேவையான பொருட்கள்: பூரணத்திற்குப்: கடலை பருப்பு – 1 கப் வெல்லம் – 1 கப் ஏலக்காய் பொடி – ¼ மேசைக்கரண்டி மாவிற்குப்: மைதா – 1 கப் மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – 2 மேசைக்கரண்டி உப்பு – சிட்டிகை செய்முறை: 1. மாவுக்கான பொருட்கள் சேர்த்து மென்மையாக பிசைந்து ஓய விடவும். 2. கடலை பருப்பை வெந்து வெல்லத்துடன் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். 3. சிறிய உருண்டைகளாக உருட்டி, மாவால் மூடி, வட்டமாக தேய்க்கவும். 4. தாவாவில் நெய் விட்டு போலி சுடவும். --- 2. தேங்காய் போலி (Coconut Poli) தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் – 1 கப் வெல்லம் – ¾ கப் ஏலக்காய் – சிறிதளவு மைதா – 1 கப் மஞ்சள் தூள், உப்பு – சிறிதளவு நெய் – தேவையான அளவு செய்முறை: 1. வெல்லம் உருக்கி தேங்காயுடன் சேர்த்து பாகு தயாரிக்கவும். 2. மாவை பிசைந்து உருண்டை எடுத்து மேலே தேங்காய் பூரணம் வைத்து தேய்க்கவும். 3. நெய்யில் சுட்டு பரிமாறவும். --- 3. சக்கரை பொங்கல் போலி (Sweet Pongal Poli) செய்முறை: 1. வெல்லம், பாசிப்பருப்பு, அரிசி சேர்த்து சக்கரை பொங்கல் போல தயார் செய்யவும். 2. அதனை பூரணமாக வைத்து போலி போன்று பரிமாறலாம். --- 4. சக்கரை போலி (Sugar Poli) தேவையானவை: சர்க்கரை – 1 கப் மைதா – 1 கப் தேங்காய் (விருப்பம்) – ¼ கப் ஏலக்காய் – சிறிது செய்முறை: 1. சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் சேர்த்து பாகு தயாரிக்கவும். 2. பூரணமாக வைத்து மாவில் மூடி தேய்த்து சுடவும். --- 5. பால் போலி (Milk Poli) செய்முறை: 1. பால் கொதிக்க வைத்து சர்க்கரை, தேங்காய், சிறிது ரவை சேர்த்து கொழுக்கட்டு போலக் கெட்டியாக செய்யவும். 2. அதை பூரணமாக வைத்து போலி செய்யவும். --- 6. கொதுமை மாவு போலி (Wheat Flour Poli) மாற்றம்: மைதா பதிலாக கோதுமை மாவு பயன்படுத்தலாம். இதனால் fibre அதிகமாக இருக்கும், ஆரோக்கியமானது. --- 7. பீடருட் போலி (Beetroot Poli) செய்முறை: 1. பீட்ரூட்டை உரித்து அரைத்துப் பாகு தயாரிக்கவும். 2. அதனை பூரணமாக வைத்து போலி செய்யலாம். அழகான ரோஸ் கலர் கிடைக்கும். --- 8. சோயா போலி (Soy Poli) செய்முறை: 1. சோயா கிரான்யூல்ஸ் வேக வைத்து பிசைந்து வெல்லத்துடன் கிளறி பூரணமாக்கவும். 2. போலி வடிவத்தில் செய்து சுடவும். --- 9. முந்திரி போலி (Cashew Poli) செய்முறை: 1. முந்திரியை நன்கு அரைத்து, வெல்லத்துடன் சேர்த்து பாகு செய்து பூரணமாக்கவும். 2. போலி சுடவும் – இது ரொம்ப ரிச் ஸ்வீட் போலி ஆகும். --- 10. பாசிப்பருப்பு போலி (Moong Dal Poli) செய்முறை: 1. பாசிப்பருப்பை வேக வைத்து வெல்லத்துடன் சேர்த்து பூரணமாக்கவும். 2. சாதாரண போலி போலச் செய்யலாம். --- பொதுவான குறிப்புகள்: எல்லா போலிக்கும் மைதா அல்லது கோதுமை மாவை மென்மையாக பிசைந்து 30 நிமிடம் ஓய வைக்க வேண்டும். நெய் அல்லது நெய்+எண்ணெய் கலந்தது சுட வழிகிறது. சுடும்போது தீயை மிதமாக வைத்தால் மென்மையான போலி கிடைக்கும். திண்டுக்கல் சமையல்

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months 4 weeks ago
அதுவும் நாதக ரீம் தயக்கமேதுமில்லாமல் தங்கள் "கனவுத் தொழிற்சாலைகளில்" டிசைன் செய்து வெளியும் வீடியோக் குப்பைகளைக் கொட்டி விட்டுப் போகிறார்கள். இந்தியாவில் இருந்து வெளிவரும் TOI இல் வந்த கட்டுரையை, "உலகச் செய்திகளில் ட்ரென்ட் ஆகும் சீமான்" 😂 என்று தம்பிகள் வெளியிட ஒருவர் இங்கே இணைத்திருக்கிறார் பாருங்கள்! முகப்பில் ஒரு வெள்ளையினப் பெண் செய்தி வாசிப்பாளரின் படத்தைப் போட்டு விட்டு உள்ளே TOI இல் வந்த கட்டுரையை திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள். TOI உலக ஊடகம் என்று நம்பும் சீமான் தம்பிகள் இருக்கும் வரை சீமான் காட்டில் , (அத்தோடு பாங்க் அக்கவுன்டில்) மழை தான்😎!

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months 4 weeks ago
சாட்டோடு சாட்டாக செந்தமிழன் சீமான் அண்ணாவின் பிரசாரக் காணொளிகள் தங்குதடையின்றி இணைக்கப்படுகின்றன!

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months 4 weeks ago
வெக்கை கூடப்பாருங்கோ....கைகால் சும்மா இருக்காது...அதுசரி இப்ப 1 ..2 மாதம்...இரண்டுபேர்...ஊருக்கு போய் வந்ததவையே....அப்ப ஒரு செய்தியும் வரவில்லையே..🤣

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

2 months 4 weeks ago
விசாரித்தமைக்கு நன்றி! வெள்ளம் வரமுதலே இடர் வானிலை பற்றிய எச்சரிக்கைகள் தொலைபேசியில் சில தடவைகள் வந்ததால், எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒதுங்கிக் கொண்டோம், அதன் பிறகு தான் ஒரு சீசனில் பெய்ய வேண்டிய மழை இரு மணி நேரங்களில் கொட்டித் தள்ளியது. வீதிகள், கார் தரிப்பிடங்களில் வாகனங்கள் சில இடங்களில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் இல்லை. ரெஸ்லா போன்ற மின்சாரக் கார்கள் மட்டும் தான் தண்ணீர் மேவிச் சென்றாலும் ஓடக்கூடிய அளவுக்குத் தப்பியிருக்கின்றன. Exhaust pipe இல்லாதது தான் காரணம் என்கிறார்கள்.

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months 4 weeks ago
அய்யா என்னுடைய உறவு ஒன்று ..அனுபவித்தையே எழுதினேன்....புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை ..அவ்வளவுதான்.. எந்த இடத்தில் என்ன நடக்கும் என்பதையே இப்போதைய நிகழ்வுகள் ...சொல்கின்றன...எதற்கும் அவதானமாக இருப்பது...நல்லது

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months 4 weeks ago
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முக்கிய பதவிகள் பரமேஸ்வரன் கோவிலில் சென்று வழிபட்டு திருநீறு அணியக் கூடிய சைவர்களுக்குத் தான் கிடைக்கும். ஏனையோர் குதிரைக் கொம்பு போல அரிது! அதே டிசைனில் முஸ்லிம்களுக்கு என்று உருவான பல்கலை தான் தென்கிழக்குப் பல்கலை. இது இலங்கையில் சாதாரணமான போக்கு. ஆனால், நீங்கள் சொல்வது போல இஸ்லாமியப் பாணி கட்டுபாடுகள் கடுமையென்பது பொய்க்கதை. இலங்கையின் ஏனைய அரச பல்கலைகள் போலவே இங்கேயும் பள்ளிவாசலுக்கு மேலதிகமாக சைவக் கோவில், கிறிஸ்தவ ஆலயம், பௌத்த விகாரை என்பன இருக்கின்றன.

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

2 months 4 weeks ago
நம்ம ட்ரம்ருக்கு..கனடாவில் உள்ள சிவன்கோவிலுக்கு வந்து எள்ளெண்ணை எரிக்கச் சொல்லவும்... ஜஸ்டிசார் ..கவனமாய்ருப்பாரே...சுழியோடி...கப்பலே வைத்திருப்பார்...அவசரத்துக்கு தொடர்பு..கொள்ளவும்..ரசோ..நில்மினி..மற்றும் பெயர் மறந்த அமெரிக்கவாழ் உறவுகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months 4 weeks ago
மன்னிக்கவும் அல்வாயன். நான்தான் தவறான தகவலை வழங்கி விட்டேன். மேலே நீங்களும், நிழலியும் கூறியதே சரியான தகவல்.

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months 4 weeks ago
இது உண்மையா....நான் ஒலுவில் பகுதியில் அமைந்த பல்கலைக்கழம் என்று கருவிட்டேன் ...எதுக்கும் உங்கள் கருத்தையும் மீளாய்வு செய்க ...என் தவறெனில் சாரி... நன்றி நிழலி....இங்கு இசுலாமியக் கோட்பாடு கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதாக அறிந்தேன்.

பகிடிவதை உச்சம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதி

2 months 4 weeks ago
தமிழ் சிறி, மஹிந்தவின் ஊர் அம்பாந்தோட்டை. தென் கிழக்கு பல்கலைக்கழகம் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவிலில் அமைந்திருக்கு. இங்கு முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் என மூவினமும் கல்வி கற்கின்றனர். முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம்.

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months 4 weeks ago
பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் எந்த நாடு என்று தெரியவில்லை. ஆனால்... ஜேர்மனியில் இருந்து சென்ற மற்ற ஒருவர் சண்டித்தனம் செய்து இருக்கின்றார். இந்த விடுமுறைக்கு... இன்னும் நிறைய சம்பவம் நடக்கும் போலுள்ளது.

14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது

2 months 4 weeks ago
அங்க துட்டு கூடவோ? ஐயா புறம் ஜேர்மனி?கனடா? சுவிஸ்? வெளிநாடுகளில் இருந்து போகிறவர்கள் தங்கள் மிகவும் கூடிய சொந்தங்களிலேயே கையை காலைப் போடுகிறார்கள். வெளிநாட்டு சாமான்களைக் கொடுத்தே ஒரு கவற'சியை உண்டு பண்ணுகிறார்கள் போல தெரிகிறது. சுலபமாக தப்பாமல் கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

2 months 4 weeks ago
ஆமாம் வீட்டிலே தான். 22ம் திகதிவரை நிற்பேன். ஜஸ்ரினின் ஊரில் மிக மோசமான வெள்ளம். வாழ்க்கையில் போராட்டமா? போராட்டமே வாழ்க்கையா? இப்போ தான் ரெக்சாஸ் மாநிலத்தில் 120 பேர் இறந்து இன்னும் பலரைக் காணவில்லை.
Checked
Tue, 10/14/2025 - 18:16
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed