3 months 2 weeks ago
71 வயது டொமினிக்... பாவாடைக்குள் படம் பிடிக்கப் போய்,
அம்பிட்டதை நினைக்க சிரிப்பாக இருக்கு. 😂
"ஆனைக்கும் அடி சறுக்கும்." 🤣
3 months 2 weeks ago
வடகொரியாவில் இயற்கை அனர்த்தத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் 30 பேர் சுட்டுக்கொலை - ஜனாதிபதி கிம் வழங்கிய தண்டனை
04 SEP, 2024 | 04:33 PM
வடகொரியாவில் 4000க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதற்கு காரணமான மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை தடுக்க தவறிய 30 அதிகாரிகளை சுட்டுக்கொல்லுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உத்தரவிட்டுள்ளார் என நியுயோர்க் போஸ்ட்செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியாவில் கடந்த கோடைகாலத்தில் தீடிரென நிகழ்ந்த இயற்கை அனர்த்தம் காரணமாக 4000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
20 முதல் 30 பேருக்கு எதிராக ஊழல் மற்றும் வேலையில் அலட்சியம் குறித்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரியொருவர் அவர்களிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என அரசதொலைக்காட்சியான சோசன் தெரிவித்துள்ளது.
மழைவெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் 20 முதல் 30 ஊழியர்கள் ஒரே நேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
வடகொரிய ஜனாதிபதியே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.
எனினும் இந்த தகவலை சுயாதீன வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை.
கொல்லப்பட்ட அதிகாரிகள் யார் என்பது குறித்த விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை எனினும், வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து பதவி நீக்கப்பட்டவர்களில் முக்கிய அதிகாரிகள் சிலர் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த அதிகாரிகள் தங்கள் தலை எப்போது துண்டிக்கப்படும் என தெரியாத நிலையிலிருந்தனர் என முன்னாள் இராஜதந்திரியொருவர் தெரிவித்தள்ளார்.
மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த மாதம் பார்வையிட்ட வடகொரிய ஜனாதிபதி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளகட்டியெழுப்ப பல மாதங்களாகும் என தெரிவித்திருந்தார்.
https://www.virakesari.lk/article/192843
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றை தடுக்க முடியுமா?!
3 months 2 weeks ago
பட மூலாதாரம்,ANI
படக்குறிப்பு, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் அதிக் அகமதின் நெருங்கிய நண்பரின் வீட்டில் 'புல்டோசர் நடவடிக்கை' (கோப்பு படம்)
கட்டுரை தகவல்
எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
வீடு மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவைய், கே.வி.விஸ்வநாத் அடங்கிய அமர்வு கடுமையான கேள்விகளை எழுப்பியது. திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது மாநில அரசுகளின் புல்டோசர் நடவடிக்கை குறித்து அந்த அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்த வழக்கில் உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், “ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற அடிப்படையில் ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்?”என்று நீதிபதி பி.ஆர்.கவைய் கேள்வி எழுப்பினார்.
மேலும் “ஒருவர் குற்றவாளியாக இருந்தாலும், சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் அவரது வீட்டை இடிக்க முடியாது” என்றும் நீதிபதி கவைய் தெரிவித்தார்.
உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ’வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்பதற்காக எந்த கட்டடத்தையும் இடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார்.
“நீண்ட காலத்திற்கு முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும் மாநிலத்தில் புல்டோசர் நடவடிக்கை என்று கூறப்படும் செயலானது தொழில்முறை குற்றவாளிகள் மற்றும் மாஃபியாக்களுக்கு எதிரானது என்று உத்தரபிரதேச முதல்வர் அலுவலகத்தின் ட்வீட் கூறுகிறது. இந்த ட்வீட் 2022 ஜூன் மாதம் பதிவிடப்பட்டது.
உத்தரபிரதேசத்தின் 'புல்டோசர் நடவடிக்கை’
உத்தரபிரதேசத்தில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது கிரிமினல் வழக்குகளில் வீட்டு உரிமையாளர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவரும்போது அவர்களின் வீடுகள் மீது இதுபோன்ற புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஜாவேத் முகமது - 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் இஸ்லாமிய சமூகம் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஜாவேத் என்ற மனித உரிமை ஆர்வலர் கைது செய்யப்பட்டார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரு தொலைக்காட்சி சேனலில் நடந்த விவாதத்தில் முகமது நபி குறித்து ஆட்சேபத்திற்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக நூபுர் ஷர்மா மீது குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் (பிடிஏ) ஜாவேத் முகமதின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்தது. இந்த வீடு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்தது.
ஆனால், பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்தால் இடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஜாவேத் முகமது அல்ல அவரது மனைவி பர்வீன் ஃபாத்திமா என்றும், இந்த வீடு அவரது பெற்றோரின் திருமண பரிசாக அவருக்கு வழங்கப்பட்டது என்றும் ஜாவேத் முகமதின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் யோகி அரசின் இந்த நடவடிக்கை குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டனர்.
அதே நேரத்தில், 'குற்றவாளிகள்/மாஃபியாக்கள் மீது புல்டோசர் நடவடிக்கை தொடரும்' என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்திருந்தார்.
ஹாஜி ரஸா - உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் ஹாஜி ரஸாவின் நான்கு மாடி வணிக வளாகத்தின் மீது சில நாட்களுக்கு முன்பு புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மக்களவை தேர்தலின் போது பிரதமர் மோதிக்கு எதிராக ஹாஜி ரஸா ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதிக் அகமது- உத்தரபிரதேசத்தின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான அதிக் அகமதின் நெருங்கிய உறவினர்கள் பலரின் வீடுகள் 2023 ஆம் ஆண்டு மாரச் மாதம், புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. முன்னதாக பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று பிரயாக்ராஜில் உமேஷ் பால் படுகொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலையில் முக்கிய சாட்சியாக உமேஷ் பால் இருந்தார்.
உமேஷ் பால் கொலைக்குப் பிறகு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ’மாநிலத்தில் மாஃபியாவை வேரறுப்பேன்’ என்று கூறியிருந்தார்.
2004 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை செய்யப்பட்ட பின்னர் 2007 ஆம் ஆண்டு மாயாவதி மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அவரது அரசும் அதிக் அகமது மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது.
பட மூலாதாரம்,ANI
படக்குறிப்பு, உத்திரபிரதேசத்தில் சாங்லியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள்
விகாஸ் துபே- 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் விகாஸ் துபேயின் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டது. விகாஸ் துபே மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்வதற்காக கான்பூர் ஊரக மாவட்டத்தின் பிக்ரு கிராமத்திற்கு காவல் துறை சென்றது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 காவலர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து விகாஸ் துபே தலைமறைவானார். பின்னர் அவரது வீட்டின் ஒரு பகுதி புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.
"எனக்கு மற்ற மாநிலங்களைப் பற்றி தெரியாது. ஆனால் உத்திரபிரதேசத்தில் யோகியின் அரசு, மாஃபியாக்களின் பட்டியலை முதலில் தயாரித்தது. அவர்களின் வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு எதிராக ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றின் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது,” என்று உத்தரபிரதேசத்தின் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் பாண்டே கூறினார்.
"மாஃபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை அம்மாநில அரசு ஏற்கனவே செய்து விட்டது. எனவே புல்டோசர் நடவடிக்கைக்கும், ஒரு நபர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உ.பி அரசு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்,” என்றார் அவர்.
உத்திரபிரதேசத்தில் மட்டுமின்றி, சமீப ஆண்டுகளில் நாட்டின் பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல புல்டோசர் நடவடிக்கைகள் சர்ச்சையில் சிக்கியுள்ளன.
”2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் ஒரு ’தண்டனையாக’ புல்டோசர் மூலம் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன,” என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான 'அம்னஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. அவை - அசாம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி.
இந்த வழக்குகள் பலவற்றில் சட்ட ரீதியான நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
பட மூலாதாரம்,ANI
படக்குறிப்பு,ஜாவேத் அகமதின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது, அது அவரது மனைவி பெயரில் இருந்தது பின்னர் தெரியவந்தது.
மற்ற மாநிலங்களிலும் ‘புல்டோசர் நடவடிக்கை’
பின்னர் புல்டோசர் நடவடிக்கை மத்தியப் பிரதேசத்திலும் நடந்தது. அதன்பிறகு, அப்போதைய மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை சமூக வலைதளங்களில் சிலர் 'புல்டோசர் மாமா' என்று அழைக்கத் தொடங்கினர்.
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அப்போதைய முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பகிரங்கமாக, “கலெக்டர்கள், எஸ்பி, ஐஜி அனைவரும் கவனமாக கேளுங்கள்... இந்த புல்டோசர்கள் எப்போது பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் கேளுங்கள், சகோதரி மற்றும் மகளை தவறான கண்ணுடன் பார்க்கும் குண்டர்களை தாக்குவதற்கு இதை பயன்படுத்தவும்,” என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளஹான் ஆட்சியில் தொடங்கிய இந்த நடவடிக்கை அவருக்கு அடுத்தும் தொடர்ந்தது.
ஹாஜி ஷாஜாத் அலி- மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் கடந்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போலீஸாரிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க வந்த மக்கள் காவல் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஹாஜி ஷாஜாத் அலி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஹாஜி ஷாஜாத் வீட்டின் மீது புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி இம்ரான் பிரதாப்கரி சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினார்.
"இது நியாயமா? மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் நிர்வாகம் ஹாஜி ஷாஜாத்தின் வீட்டை இடித்தது மட்டுமின்றி, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் புல்டோசர்கள் அடித்து நொறுக்கின," என்று அவர் குறிப்பிட்டார்.
இதேபோல், மத்திய பிரதேசத்தின் ரீவாவில், 2022 ஆம் ஆண்டு டிசம்பரில், பங்கஜ் திரிபாதி என்ற நபரின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.
பங்கஜ் திரிபாதி ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதும் செய்யப்பட்டார்.
இது குறித்து அப்போதைய மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தனது ட்விட்டர் பதிவில், “மத்திய பிரதேச மண்ணில் பெண்களுக்கு எதிராக கொடுமை செய்பவர்கள் யாரும் தப்ப மாட்டார்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
பங்கஜ் திரிபாதியின் வீட்டு கட்டுமானத்தில் ஏதேனும் சட்ட விதிகள் மீறப்பட்டதா இல்லையா என்பது குறித்து இந்த ட்வீட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஜஹாங்கிர்புரி- தலைநகர் டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனுமன் ஜெயந்தியையொட்டி வன்முறை ஏற்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, வன்முறை நடந்த இடத்தில் புல்டோசர்களைக் கொண்டு டெல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. அடுத்த நாளே இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
பட மூலாதாரம்,ANI
படக்குறிப்பு,இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் சல்மான் குர்ஷித்
முழு குடும்பத்தையும் தண்டிப்பது எப்படி சரி?
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது என்றும் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் ஃபிரண்ட்லைன் என்ற ஆங்கில நாளிதழின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதுபோன்ற நடவடிக்கை பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்டால், அவரது முழு குடும்பமும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
இது போன்ற வழக்குகள் குறித்து கடந்த திங்கள்கிழமை கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், மகனின் தவறுக்காக தந்தையின் வீட்டை இடிப்பது சரியல்ல என்றும் கூறியுள்ளது.
"சமீப காலமாக புல்டோசர் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது உண்மைதான். முன்பு போலீஸ் ஜப்தி நடவடிக்கைகளை செய்து வந்தது,” என்று ராஜேஷ் பாண்டே குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/ckgw0z4pv4eo
3 months 2 weeks ago
கண்ணில் பட்ட மீம் ஒன்று..
3 months 2 weeks ago
சம்பள உயர்வு தொடர்பில் பொதுமக்களை ஏமாற்ற முயற்சி – பெப்ரல் சுட்டிக்காட்டு.
அரச ஊழியர்களிற்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பிற்கு முன்னதாக அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என பவ்ரல் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை எதிர்வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் குறித்து நான் முரண்படவில்லை,எனினும் இந்த மூன்று தீர்மானங்களும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் இவை பாரதூரமானவை என அவர் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களிற்கு முன்னரே அரசாங்கம் ஒருசதம் கூட சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் மூலம் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
உத்தேச சம்பள அதிகரிப்பை வழங்குவது என்றால் அரசாங்கத்திற்கு மாதமொன்றிற்கு 20 மில்லியன் தேவை என தெரிவித்துள்ள ரோகண ஹெட்டியாராச்சி இவ்வாறான அறிவிப்புகள் மூலம் அரசாங்கம் அரசாங்க ஊழியர்களை ஏமாற்ற முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.
https://athavannews.com/2024/1398214
3 months 2 weeks ago
கொல்கத்தாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்
கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்தில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷை (Sandeep Ghosh) சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்திருந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றி வரும் சஞ்சய் ராய் (Sanjay Roy) என்பவரை காவல்துறையினர் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்திருந்தனர்.
தொடர் விசாரணை
அத்தோடு, சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட போது மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் (Sandeep Ghosh) உட்பட ஏழு பேரிடமும் மற்றும் சஞ்சய் ராயிடமும் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொள்ள சிபிஐக்கு கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் எழுந்த பலதரப்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில் சந்தீப் கோஷிடம் 18 நாட்கள் தொடர் விசாரணை நடத்தப்பட்டதுடன் இரண்டு முறை உண்மை கண்டறியுடம் சோதணையும் நடத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தான் ஒரு நிரபராதி எனவும், தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும் அத்தோடு சிலரால் திட்டமிட்டு தான் குற்றவாளியாக சித்தரிக்கப்படுவதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இருப்பினும், அவருக்கு சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக DNA மற்றும் தடயவியல் அறிக்ககைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணை
இதனடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி குறித்த சம்பவத்துடன் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாக தெரியவராத நிலையில் தற்போது சந்தீப் கோஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரங்களில் சந்தீப் கோஷின் வீடுகள் உட்பட 16 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இரண்டு வார கால விசாரணைகளின் பின்பு நிதி முறைக்கேடு விவகாரத்திலும் மற்றும் அனுமதி இல்லாமல் இறந்த உடல்களை விற்பனை செய்தல் போன்ற குற்றசாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இதற்கு முன்னாள் சந்தீப் கோஷ் மருத்துவ சங்கத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://ibctamil.com/article/kolkata-doctor-case-1725388448#google_vignette
3 months 2 weeks ago
எனது குடும்ப நண்பரெருவர் சென்றகிழமை இலங்கை போயிருந்தார்.
விசா பிரச்சனை பற்றி கேட்டபோது ஒரு மைல் நீளத்துக்கு வரிசையில் நின்றதாகவும் நிறையநேரம் எடுத்ததாகவும் முழு கெட்ட வார்த்தையால் இலங்கை அரசை திட்டித் தீர்த்தார்.
3 months 2 weeks ago
கெஹெலியவின் மனு மீதான தீர்மானம் மீண்டும் ஒத்திவைப்பு
Published By: DIGITAL DESK 3 04 SEP, 2024 | 02:37 PM
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம் மற்றும் உத்தரவை மீண்டும் ஒத்தி வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
எவ்வாறாயினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குழாம், இந்த மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்குவதா இல்லையா என்பது தொடர்பான உரிய தீர்மானத்தை 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 03ஆம் திகதி வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/192831
3 months 2 weeks ago
மிருசுவிலில் 8 பேர் கொலை; சுனில் ரத்னாயக்கவின் பொதுமன்னிப்பு விவகாரம் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
யாழ். மிருசுவில் பகுதியில் 8 பேர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஜனவரி 15 ஆம் திகதி பரிசீலிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி அம்பிகா சற்குணநாதன் ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், சம்பந்தப்பட்ட மனுவில் எதிர்மனுதாரர்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
https://thinakkural.lk/article/308990
3 months 2 weeks ago
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில் அந்த நீதிமன்றில் உறுப்பினராக உள்ள மங்கோலியா(Mongolia) நாட்டிற்கு ரஷ்ய(russia) ஜனாதிபதி புடின்(Vladimir Putin) சென்றுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் (ukraine)இடையே போர் நீடித்து வருகிறது. இப்போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக நெதர்லாந்தில் (netherland)உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உக்ரைனில் இருந்து குழந்தைகளை கடத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
புடின் மீது கைது பிடியாணை
அந்த வழக்கில் புடின் மீது கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு புடின் பயணம் மேற்கொண்டால் அந்த நாடு புடினை கைது செய்யும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று மங்கோலியா சென்றுள்ளார். மங்கோலியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக உள்ள நிலையில் புடினின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை
மங்கோலியா சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடினை அந்நாட்டு ஜனாதிபதி உக்னங்இன் குர்ரில்சுக் நேரில் சென்று வரவேற்றார். அதன்பின்னர், இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
https://ibctamil.com/article/putin-will-be-arrested-international-sensation-1725397308#google_vignette
3 months 2 weeks ago
மூன்றாவது முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழன்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
இதுவரை பரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் , பரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில்,
மூன்றாவது முறையாகப் பராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்!
தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
https://athavannews.com/2024/1398204
3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 7 04 SEP, 2024 | 05:42 PM
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முடியாமல் நீண்ட வரிசையில் இருந்து வருகின்றனர். விசா விநியோகம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவை மீறி செயற்படுவதே இதற்கு காரணமாகும். அரசாங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பத்தரமுல்லையில் கடவுச்சீட்டுக்கு வரிசையில் மக்கள் இருக்கும் நிலையில் விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு முடியாமல் நீண்ட வரிசையில் இருந்து வருகின்றனர்.
எமது நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு இருந்து வரும் தடைகள் தொடர்பில் சுற்றுலா பயணிகள் தங்களின் முகப்புத்தகங்கள் ஊடாக தகவல் வெளியிட்டு வருகின்றனர். இது எமது நாட்டின் கெளரவத்துக்கு பாதிப்பாகும்.
விசா விநியோகத்தில் இடம்பெற்றுவரும் பாரிய மோசடி தொடர்பில் உயர் நீதிமன்றில் நாங்கள் தொடுத்த வழக்கு காரணமாக, நீதிமன்றம் இந்த நடவடிக்கைக்கு தடை உத்தரவொன்றை வழங்கி இருக்கிறது. என்றாலும் நீதிமன்ற உத்தரவையும் கண்டுகொள்ளாது இன்னும் அந்த முறைப்படியே விசா விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
அதேநேரம் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் செயற்படாமல் இருப்பதற்கான நியாயத்தை சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் விடயத்துக்கு பொறுப்பானவர்கள் தாங்கள் ஆரம்பித்த இந்த விடயத்தை எப்படியாவு தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்படுகின்றனர்.
நீதிமன்ற உத்தரவரை உதாசீனம் செய்து செயற்படுவதனாலே இந்த பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாகும். அதனால் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். எனவே விசா விநியாேகம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் செயற்பட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
https://www.virakesari.lk/article/192850
3 months 2 weeks ago
ஏட்டு ஏகாம்பரம் இருக்க பயமேன்!!
அந்தப் பொடியன் பாவம் என்ன பிடுங்குப்பாடோ! நாங்க அவங்க குடும்பத்தை வைச்சு......
3 months 2 weeks ago
முன்னாள் வைத்திய அட்சகர்
முகநூல் செயலிழந்திருந்தது
விடுதிக்கு முன்னால் அவரது கார்
இந்த மூன்றையும் வைத்து தலையங்கத்தில் வைத்தியரின் பெயரை சேர்த்துவிட்டேன். ஆனால் ஐ.பி.சி தமிழில் விபரமாகப் போட்டுள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்குள் நுழைந்த விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவை (M. Thambirasa) செப்டம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டதுடன் இருவருக்கு பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்பி தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதான மு.தம்பிராசாவை செப்டம்பர் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வைத்தியசாலை விடுதி
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் ராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரிவித்து காவல்துறையினருக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சாவகச்சேரி காவல்துறையினர் வைத்தியசாலை விடுதி அறைக்கு வெளியே வைத்தியரை அழைத்த போதும், வைத்தியர் வெளியே வராததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் விடுதி அறையை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
இந்தநிலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் அங்கு சென்ற காவல்துறையினருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
அடக்குமுறை
இதனையடுத்து சம்பவ இடத்தில் நின்ற மு.தம்பிராசாவையும் காணொளியை எடுக்க முயன்ற இருவரையும் என மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைக்கு பின்னர் மூவரையும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.
விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் ஏனைய இருவரையும் பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://ibctamil.com/article/ramanathan-archuna-fake-news-viral-accusation-1725412486
3 months 2 weeks ago
ரிஜீவன் கணேசமூர்த்திக்கு பாராட்டுக்கள்
3 months 2 weeks ago
ஏற்கனவே சட்டமாக உள்ளதை ஏன் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்று கேட்கிறார்.
தான் வந்தால் இப்போது உள்ளதை நடைமுறைப்படுத்துவேன்.அத்தோடு அதற்கு மேலாகவும் ஏதாவது செய்யலாமா என்று ஆராய்வேன் என்கிறார்.
வழமையில் தமிழர் பிரச்சனை என்று வரும்போது எதிர்ப்பவர்கள் கிழித்தெறிபவர்கள் பாதயாத்திரை போகிறவர்கள்
இந்தமுறை பொதுவேட்பாளரை இறக்கியபடியால் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள் என எண்ணுகிறேன்.
3 months 2 weeks ago
பீரிஸ் முதலாவது புள்ளடி இரண்டாவது புள்ளடி என்றது பிழை அதற்கு பதிலாக இலக்கம் 1. இலக்கம் 2. என்று வர வேண்டுமா ??
3 months 2 weeks ago
பலன்?
காலம் காலமாக வாக்கைப் போட்டு பேரினவாதிகளை தெரிவு செய்து கண்டது தான் என்ன?
3 months 2 weeks ago
இப்பிடியான மாடுகள் பன்மை தான்.
3 months 2 weeks ago
பேரப்பிள்ளைகளை. தான் இப்படி ஏமாற்றமடைவார்கள் அரசு ஊழியர்கள் வெகு விரைவில் அமெரிக்காவில் உழைப்பதற்கு சமமாக இலங்கையில் 2025 ஆண்டு கிடைக்கும் 😂🤣
Checked
Mon, 12/23/2024 - 04:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed