3 months 2 weeks ago
சிறையில் இருக்கும் உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் ! குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்! சிறைகளுக்குள் கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்(5) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் அழைப்பு விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை, ஜனநாயக சோசலிச குடியரசு எனும் பெயரை தாங்கி நிற்கிறது. ஆனாலும் இந்த ஜனநாயக சோசலிசம் வெளிப்படுத்தும் விழுமியங்களுக்கு மாறாக ஒடுக்கும் அரசாகவே இவ்அரசு பரிணமித்துள்ளது. இந்த அரசினது இரும்புச் சிறைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளை உணர்வுபூர்வமாய் மனங்கொள்ள வேண்டியது தமிழ் மக்களாகிய நம் ஒவ்வொருவரதும் கடமையாகும். அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை நாம் மறந்து விடலாகாது. நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெவ்வேறு காலப்பகுதிகளில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான எமது உறவுகளை நினைவேந்துவதுடன், 30 ஆண்டுகள் கடந்தும் விடுதலை இன்றி இன்றுவரை சிறைக்கூடங்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் சுதந்திர விடியலுக்காக கரம் கோர்த்து குரலுயர்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். ‘ஜூலைக் கலவரத்தின் சிறைப்படுகொலை நாளான ஜூலை 25ம் திகதியை முன்னிறுத்தி, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான உணர்வுபூர்வமான போராட்டத்தை முனைப்புடன் முன்னெடுக்க குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு சகல தமிழ் சமூகங்களிடமும் அழைப்பு விடுக்கின்றது. எதிர்வருகின்ற, 24 மற்றும் 25ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா சுற்றயலில் இடம்பெறும் இந்த நினைவேந்தல் செயற்பாட்டில் சமூக உணர்வு கொண்ட அனைத்துத் தரப்பினரும் தவறாது பங்கேற்று, ” ஒன்றிணைந்து குரல்களை உயர்த்தி உறவுகளின் விடுதலைக்கு அணி திரண்டு வலுச் சேர்ப்போம் என தெரிவித்தார். https://athavannews.com/2025/1438158
3 months 2 weeks ago
ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! ரவிகரன் வலியுறுத்து! முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். குறித்த குளங்கள் இரண்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தநிலையில், தற்போது அப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவருகின்றனர் இந்நிலையில் குறித்த பகுதியை வனவளத்திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையிலேயே குறித்த குளங்களை விடுவிப்புச்செய்து மக்களின் விவசாய பயன்பாட்டிற்கு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இது தொடர்பில் கருத்து தெரிவித்த , கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளபோதும், இராணுவ முகாம் முற்றாக அங்கிருந்து அகற்றப்படவில்லை எனவும் இராணுவம் விடுக்கின்ற இந்தப்பகுதியை வனவளத் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுப் பகுதியாக எடுத்துக்கொண்டு பின்னர் அப்பகுதியிலிருந்து இராணுவ முகாம் முற்றாக அகற்றப்பட்ட பின்னர் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் ஊடாக குறித்த குளங்களுக்குரிய பகுதிகளை அளவீடுசெய்து எல்லைகளை வரையறுத்து வனவளத் திணைக்களத்திடமிருந்து குளங்களுக்குரிய பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார். இந்நிலையில் எவ்வாறாயினும் மக்கள் விவசாயத்திற்காக பயன்படுத்துகின்ற இக்குளங்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438189
3 months 2 weeks ago
செம்மணியில் இதுவரை 45 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு! செம்மணியில் நேற்றைய தினம் (05) மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் பத்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது மேலும் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 45 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் இதுவரையில் நேற்றைய தினம் 05 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 42 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை செய்மதி படங்களின் அடிப்படையில் மேலும் மனித புதைகுழி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரிதொரு இடத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வு அகழ்வு பணியில் மனித என்பு சிதிலங்கள் என சந்தேகிக்கப்படும் சில சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மண்டையோடு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1438205
3 months 2 weeks ago
வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்த நடவடிக்கை! வெளிநாட்டினர் செலுத்திய வரியை திருப்பிச் செலுத்துவதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கருமபீடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரின் தலைமையில் திறக்கப்பட்டது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் கைத்தொழில் அமைச்சு ஜனாதிபதியிடம் முன்வைத்த முன்மொழிவைத் தொடர்ந்து இத் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பொருட்களை கொள்வனவு செய்யும் போது செலுத்தும் பெறுமதி சேர் வரியை திரும்ப வழங்குவதே இதன் நோக்கமாகும். அதன்படி, 50,000 ரூபாவுக்கும் அதிகமான VAT வரியை செலுத்தி, 90 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், இந்த கரும பீடம் மூலம் செலுத்திய VAT வரியைப் பெற முடியும். சுற்றுலாப் பயணிகள் இலங்கைப் பொருட்களை வாங்குவதை ஊக்குவிப்பதற்காகவும், இலங்கையில் வரி அறவிடுவதை நெறிப்படுத்துவதற்காகவும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1438184
3 months 2 weeks ago
செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சியினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்! யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழர் மக்கள் இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நேற்று (5) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ந்து இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு முதல் இப்போது உள்ள ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு வரை எந்தவித கண்டன குரல் எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக இருந்து வருவதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து, இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் இந்திய அரசு வழக்கம் போல கள்ள மௌனம் காக்காமல் பன்னாட்டு விசாரணை நடத்த குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி, தமிழர் மக்கள் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1438186
3 months 2 weeks ago
கில் விளாசி தள்ளியுளார். இனியொரு பத்து ஆண்டுகளை தன்வசப்படுத்துவாரோ?
3 months 2 weeks ago
மன்னிக்கவும்! அவர்களுக்கு இப்போ இவற்றுக்கு நேரமில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். உட்கட்சிப்பூசல், குழி பறித்தல், உறுப்பினர்களை கட்சியிலிருந்து விரட்டியடித்தல் என்பவற்றில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
3 months 2 weeks ago
அதே! இனியாவது சொல்வதை செய்வார்களா? இந்தப்போக்கு நிலைத்தால்; எதிர்காலத்தில் இவர்களின் பொருட்களை வாங்குவோருமில்லை, இவர்கள் உற்பத்திசெய்யும் தேவையுமில்லை.
3 months 2 weeks ago
சிறியர் தனக்கு மட்டுமா கொண்டுவந்தவர்? பக்கத்துவீட்டுக்கார(ரி)ர், நண்பர்கள் இப்படி ஏகப்பட்ட கூட்டம் ஐயாவைசுற்றி போகப்போகிறாரென கேள்விப்பட்டதுமே. எத்தனைபேர் பட்டியல் கொடுத்திருப்பார்கள்? எத்தனைபேரை இரகசியமாக மனதுக்குள் நினைத்து வாங்கியிருப்பார். அவர் கொடுத்து வைத்தவர், வயிறு எரியுது எனக்கு.
3 months 2 weeks ago
இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்தின் காலத்திலேயே அடையாளம் காணப்பட்டு, வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு சாட்சிகளால், குற்றவாளிகளால் ஒப்புக்கொண்டு, அடையாளகாட்டி, அகழப்பட்டு,உறுதிப்படுத்தப்பட்டு பெயர் விவரங்கள் கொடுக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு மேலும் கிளறினால் தங்கள் கொலைகள் வெளியே வருமெனப்பயந்து அகழ்தல், பொறுப்புக்கூறல் கைவிடப்பட்டு இப்போ, மீண்டும் தொடர்கிறது. இவை யாவும் சம்பந்தப்பட்ட காலத்தில் தொடங்கி தொடர்கின்றன, மறுப்பதற்கோ மறைப்பதற்கோ இல்லை. அவைக்கு சாட்சியாக விசாரணைக்கோப்புகள் இன்னும் உள்ளன. ஆனால் அருண் என்பவரோ, அவரின் மனைவி என காண்பிக்கப்படுபவரோ கூறப்படும் காலத்தில், அங்கே பிரசன்னமாகி இருந்தது, இந்திய இலங்கை இராணுவமும் இவர் போன்ற ஒட்டு ஆயுதக்குழுக்களும். நாலாயிரம் பேர் என்கிறார், அவர்களின் பெயர் விபரங்கிகள் வெளிவரவில்லை, ஆதாரங்கள் இல்லை, சாட்சிகளில்லை, முறைபாடுகளில்லை, விசாரணையேதும் நடைபெறவில்லை, காணாமற் போனவர்களை தேடி எடுக்கப்படும் போராட்டங்களில் கூட இவர்கள் யாரும் பங்குபற்றியதாக தகவலேதுமில்லை. சம்பவம் நடந்ததாகஇவர்கள் கூறும் காலப்பகுதியில் புலிகள் அதிகாரத்திலில்லை, அவர்களே மறைந்து வாழ்ந்த, வேட்டைடையாடப்படும் காலத்தில் அவர்கள் பிரபல்யமான இடத்தில், பகிரங்கமாக அலுவலகம் நடத்தினார்கள் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? அந்தக்காலத்தில் யார் பிரசன்னமாகியிருந்தனர் என்று தெரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இவர்களின் வயதும் இருக்கவில்லை. யாரோ சொன்னார்கள் என்பது இவரது தர்க்கம். அந்த யாரோ என்பது யார்? அவர் ஏதும் ஒட்டுக்குழுவை சார்ந்து இந்தக்கொலைகளை நடத்தி தப்பிக்கும் நோக்கில் இவர்களை வழிநடாத்துகிறாரா? எந்த ஆதாரமுமில்லாமல் நடைமுறைகளுமில்லாமல் இப்போ திடுதிப்பென்று வந்து ஒரு குற்றச்சாட்டை வைப்பது அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒரு காரணமே. இவரை கஷ்ரப்பட்டு படிக்க வைத்த தந்தையாரை தலைகுனியச்செய்யும் செயல். காரணம் சொல்லும் பொய்யை கூட பொருந்தச்சொல்லவே தெரியவில்லை இவரால். தன்னை சமுதாயம் தள்ளி வைத்தது என்பது இவரது கற்பனை. இவரது வக்கிரப்பேச்சு, செயலே அதற்கான காரணம். சம்பாதிக்க அப்பப்போ ஏதோ ஒன்றை தானே தேடிக்கொண்டிருக்கிறார். வயிற்றுக்கு வேணுமே! பாவம் ஏதோ கற்பனையில் வாழ்ந்து ஏமாற்றம் தாங்காமல் இப்படி ஒரு சம்பவத்திற்கு காத்திருந்து,பின்னால் ஓடிச்சென்று பிழைப்பு நடத்துகிறார். அதை உணரும் தன்மை கூட இல்லாத ஜென்மம் இது!
3 months 2 weeks ago
கண்ணுரறு படுத்தக் கூடாது..லக்கேஜ் நிரம்பத் தான் கொண்டு வந்திருக்கிறீர்கள் சிறியண்ண..🤭
3 months 2 weeks ago
நீங்கள் சொல்லாமலே எனக்குத்தெரியும் சிறியர், நீங்கள் ஒரு வெள்ளைபேப்பர். கஸ்ரம்சிலை உங்களை சோதிக்க வேண்டிய தேவை வைக்க மாட்டீர்களென்பது. அதிருக்க; பக்கத்து வீட்டுக்காரிக்கு பிடித்தமானது எதையாவது வீடுக்குத்தெரியாமல் எடுத்து வரவில்லையே? அங்கு பிடிபடாமல் முக்கியமான சோதனைச்சாவடியில் சிக்கி முழிக்கப்போகிறீர்களோ என்கிற பயத்தால் கேட்டேன்! பயணக்களையில் மறந்து கோட்டை விட்டிட்டு மாட்டுப்படாதீர்கள். உங்கள்மேலுள்ள அக்கறையினால் சொல்கிறேன்.
3 months 2 weeks ago
அவர் பாடகி… நடிகை…. மருத்துவர்…., நக்கல் அடிக்கும் நாம்?🤣
3 months 2 weeks ago
நீங்களும் கஞ்சா கப்ஸா கதைகள் சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா?🤣. George Floyd கொலையில் எந்த அமெரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்?
3 months 2 weeks ago
பாடகியும் ஆன சர்மிளா! https://www.facebook.com/share/v/1BmLTVBYiY/?mibextid=wwXIfr
3 months 2 weeks ago
தலாய்லாமாவின் வாரிசு தமது அங்கீகாரத்துக்குள் வரவேண்டும் என சீனா கூறுகின்றது. சீனாவிற்கு வெளியில் உருவாகக்கூடிய வாரிசை தாம் அங்கீகரிக்கோம் என்கிறது சீனா. சீன இறையாண்மை, கலாச்சாரம், பண்பாடு இவற்றுடன் ஒத்திசையக்கூடிய தலாய்லாமாவை கொண்டுவருவார்களா என்பது சந்தேகம்.
3 months 2 weeks ago
உலக அளவில் ஊடகங்கள் டிரம்ப் ஐயாவினை அவமானப்படுத்தியதை நினைத்து பார்க்கின்றேன். கம்பி எண்ணப்போகின்றார். உள்ளே வைத்து போடப்போகின்றார்கள். மீள முடியாத சட்டப்பிடியில் அவரது சரிதம் முடிகின்றது என அவரவர் கற்பனை வளர்த்தார்கள். சிங்கம் சிலிர்த்து எழுந்தது. இப்போது உலகின் அதிகார பீடம் டிரம்ப் ஐயாவிடம். மாற்றம் ஒன்றே மாறாதது. 😁
3 months 2 weeks ago
இவை மனித எலும்புக்கூடுகள் என்பதை அடையாளம் கண்டுள்ளார்களா அல்லது இவை எவருடைய எலும்புக்கூடுகள் என அவற்றுக்குரிய தனிநபர்களை அடையாளம் கண்டுள்ளார்களா?
3 months 2 weeks ago
பட மூலாதாரம், BBC SINHALA கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 ஜூலை 2025, 10:55 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துப்பாத்தி பகுதிகளில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியில் சிறுவர்களின் எலும்புகள், பொம்மைகள், புத்தகப் பைகள் கிடைத்துள்ள நிலையில், இவை இறுதி யுத்தக் காலத்தில் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகளுடையதா என்ற சந்தேகத்தை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எழுப்பியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இலங்கையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 40 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 34 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சட்ட மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார். அத்துடன், மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாட்சிப் பொருட்கள் வழக்கு எண்களின் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அதேவேளை, குழந்தையொன்றின் மனித எலும்புக்கூடொன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள குழந்தைகளின் எலும்புக்கூடுகளை தோண்டி எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் சரணடைந்த 29 குழந்தைகள் கொல்லப்பட்டனரா? சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களின் எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக தோண்டி எடுக்கப்பட்டு வருகின்ற பின்னணியில், இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவிக்கின்றார். இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களின் பெயர் விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றை லீலாதேவி ஆனந்த நடராஜா தயாரித்துள்ளார். இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களில் பெரும்பாலானோர் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமலாக்கப்பட்ட சிறார்களுக்கு இன்று வரை என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா இந்த நிலையில், சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்படுவதுடன், அந்த இடத்திலிருந்து சிறுவர்கள் பயன்படுத்தும் புத்தகப் பை, பொம்மை, பாதணி, ஆடை என்ற வகையிலான சில சாட்சிப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வெளியிடுகின்றனர். அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை ராணுவம் முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழுந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,SRI LANKA ARMY படக்குறிப்பு, இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே எலும்புகளுக்கு இறுதிச் சடங்கா? டி.என்.ஏ பரிசோதனை செய்வது பற்றி கேள்வி எழுப்பிய போது, ''டி.என்.ஏ பரிசோதனை செய்து அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. தாய், தந்தையருடன் சரணடைந்த 29 குழந்தை பிள்ளைகள் எங்கேயோ ஒரு இடத்தில் உயிர் வாழ்ந்தால், அவர்களை இனங்காண்பதற்கு டி.என்.ஏ பரிசோதனை தேவை. இது எனது தனிப்பட்ட கருத்து. எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்து, நாங்கள் அவர்களுக்குரிய இறுதி சடங்குகளை செய்வதற்கான தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. அந்த எலும்புக்கூடாக்கியவர்கள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?. அதில் தான் எங்களுக்கு அக்கறை இருக்கின்றதே தவிர, டி.என்.ஏ பரிசோதனை செய்து அவர்களுக்கு கிரியைகள் செய்ய வேண்டிய தேவை இல்லை. இதை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் மீள் நிகழாமைக்கான ஒரேயொரு வழி. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும்.'' என லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார். டி.ஏன்.ஏ பரிசோதனையை செய்ய வேண்டாம் என தான் கூறவில்லை என தெரிவித்த அவர், நீதிக்கான பயணத்தில் எந்தவித வேக குறைப்பும் இடம்பெறக்கூடாது என்றார். சித்துபாத்தி புதைக்குழிக்கு கடும் பாதுகாப்பு இலங்கையில் சுமார் நான்கு தசாப்த காலப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகளை விடவும், சித்துபாத்தி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளுக்கு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேரடி பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட தரப்பினரை தவிர, ஏனையோருக்கு செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், ஏ-9 வீதியில் சித்துபாத்தி மனிதப் புதைக்குழிக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தவும் பொலிஸார் தடை விதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதேவேளை, இலங்கை மின்சார சபையின் உதவியுடன் மின்சார இணைப்பு எடுக்கப்பட்டு, இரவு வேளையிலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது. இந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் முழு நேரமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளும் மேற்பார்வை செய்து வருவதை காண முடிகின்றது. யாழ்ப்பாணத்தின் சர்ச்சைக்குரிய மனிதப் புதைக்குழியான செம்மணி மனிதப் புதைக்குழிக்கு அருகிலேயே இந்த சித்துபாத்தி மனிதப் புதைக்குழியும் கண்டுபிடிக்கப்பட்டு, அகழப்பட்டு வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்கள், ராணுவத்தினால் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக அப்போதைய ராணுவ வீரர் ஒருவரின் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த பகுதி தோண்டப்பட்டது. இந்த நிலையில், அங்கிருந்து பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கை ஒரு கட்டத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில், தற்போது செம்மணியை அண்மித்த சித்துபாத்தி இந்து மயானத்தில் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டு தோண்டப்பட்டு வருகின்றது. இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. செம்மணி பகுதியிலுள்ள பழைய மனிதப் புதைக்குழி மீண்டும் தோண்டப்படுமா என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜனிடம் பிபிசி தமிழ் வினவியது. அவ்வாறான எண்ணம் இதுவரை கிடையாது என அவர் பதிலளித்தார். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற சித்துபாத்தி அகழ்வு பணிகள் முடிவடைந்ததை அடுத்தே அது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். செம்மணி பழைய மனிதப் புதைக்குழியை மீண்டும் தோண்டுமாறு இதுவரை எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறினார். புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் இலங்கையில் தோண்டத்தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - என்ன நடக்கிறது? இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்? இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி சித்துபாத்தி பகுதியில் செய்மதி ஊடாக அடையாளம் காணப்பட்ட பகுதியொன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டப்பட்டு வருகின்றது. இந்த இடத்திலிருந்து ஆடையொன்றை ஒத்ததான துணியொன்றை அகழ்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். அத்துடன், அந்த இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு தற்போது தோண்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்த இடத்திலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த பகுதி தோண்டப்பட்டு வருகின்றது. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு எலும்புகளுக்கு இறுதிச் சடங்கா? டி.என்.ஏ பரிசோதனை செய்வது பற்றி கேள்வி எழுப்பிய போது, ''டி.என்.ஏ பரிசோதனை செய்து அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. தாய், தந்தையருடன் சரணடைந்த 29 குழந்தை பிள்ளைகள் எங்கேயோ ஒரு இடத்தில் உயிர் வாழ்ந்தால், அவர்களை இனங்காண்பதற்கு டி.என்.ஏ பரிசோதனை தேவை. இது எனது தனிப்பட்ட கருத்து. எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்து, நாங்கள் அவர்களுக்குரிய இறுதி சடங்குகளை செய்வதற்கான தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. அந்த எலும்புக்கூடாக்கியவர்கள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?. அதில் தான் எங்களுக்கு அக்கறை இருக்கின்றதே தவிர, டி.என்.ஏ பரிசோதனை செய்து அவர்களுக்கு கிரியைகள் செய்ய வேண்டிய தேவை இல்லை. இதை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் மீள் நிகழாமைக்கான ஒரேயொரு வழி. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும்.'' என லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார். டி.ஏன்.ஏ பரிசோதனையை செய்ய வேண்டாம் என தான் கூறவில்லை என தெரிவித்த அவர், நீதிக்கான பயணத்தில் எந்தவித வேக குறைப்பும் இடம்பெறக்கூடாது என்றார். சித்துபாத்தி புதைக்குழிக்கு கடும் பாதுகாப்பு இலங்கையில் சுமார் நான்கு தசாப்த காலப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகளை விடவும், சித்துபாத்தி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளுக்கு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேரடி பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட தரப்பினரை தவிர, ஏனையோருக்கு செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், ஏ-9 வீதியில் சித்துபாத்தி மனிதப் புதைக்குழிக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தவும் பொலிஸார் தடை விதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதேவேளை, இலங்கை மின்சார சபையின் உதவியுடன் மின்சார இணைப்பு எடுக்கப்பட்டு, இரவு வேளையிலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது. இந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் முழு நேரமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளும் மேற்பார்வை செய்து வருவதை காண முடிகின்றது. யாழ்ப்பாணத்தின் சர்ச்சைக்குரிய மனிதப் புதைக்குழியான செம்மணி மனிதப் புதைக்குழிக்கு அருகிலேயே இந்த சித்துபாத்தி மனிதப் புதைக்குழியும் கண்டுபிடிக்கப்பட்டு, அகழப்பட்டு வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்கள், ராணுவத்தினால் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக அப்போதைய ராணுவ வீரர் ஒருவரின் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த பகுதி தோண்டப்பட்டது. இந்த நிலையில், அங்கிருந்து பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கை ஒரு கட்டத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில், தற்போது செம்மணியை அண்மித்த சித்துபாத்தி இந்து மயானத்தில் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டு தோண்டப்பட்டு வருகின்றது. இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. செம்மணி பகுதியிலுள்ள பழைய மனிதப் புதைக்குழி மீண்டும் தோண்டப்படுமா என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜனிடம் பிபிசி தமிழ் வினவியது. அவ்வாறான எண்ணம் இதுவரை கிடையாது என அவர் பதிலளித்தார். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற சித்துபாத்தி அகழ்வு பணிகள் முடிவடைந்ததை அடுத்தே அது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். செம்மணி பழைய மனிதப் புதைக்குழியை மீண்டும் தோண்டுமாறு இதுவரை எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறினார். புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் இலங்கையில் தோண்டத்தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - என்ன நடக்கிறது? இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்? இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி சித்துபாத்தி பகுதியில் செய்மதி ஊடாக அடையாளம் காணப்பட்ட பகுதியொன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டப்பட்டு வருகின்றது. இந்த இடத்திலிருந்து ஆடையொன்றை ஒத்ததான துணியொன்றை அகழ்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். அத்துடன், அந்த இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு தற்போது தோண்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்த இடத்திலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த பகுதி தோண்டப்பட்டு வருகின்றது. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgl3ynwg1eo
3 months 2 weeks ago
செம்மணி மனித புதைகுழி : இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் : மற்றுமொரு புதிய குழியில் மண்டையோடு அடையாளம் 05 JUL, 2025 | 08:02 PM யாழ். செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் புதிதாக அகழப்படும் புதைகுழியிலும் மண்டையோ ஒன்று அவதானிக்கப்பட்டதுடன் இன்று 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பத்தாம் நாள் இன்று சனிக்கிழமை (5) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. இதுவரை மொத்தமாக 45 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 42 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இதேவேளை புதிதாக இன்றையதினம் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறன. செய்மதிப்படம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு அகழப்படும் சந்தேகத்துக்கிடமான புதிய பகுதியில் மண்டையோடு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/219259
Checked
Sat, 10/25/2025 - 04:35
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed