புதிய பதிவுகள்2

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

3 months 2 weeks ago
உக்ரேனுக்கு சாத்துப்படி டெய்லி தானே நடக்குது. 😎 ஆனால் ஒன்று மேற்குலகம் காசாவில் செய்யும் அழிவுகளை போல் ரஷ்யா உக்ரேனுக்கு செய்யவில்லை. செய்யவும் நினைக்கவில்லை.மக்களை எலும்பும் தோலுமாக அலைய விடவுமில்லை. ஒரே நேரத்தில் இரண்டு அழிவுப்போர்கள் நடக்கின்றன. அதில் எது மோசமானது எனவும் எது எதற்காக போராடுகின்றார்கள் எனவும் யார் பின்னணியில் இருக்கின்றார்கள் எனவும் கவனித்து பாருங்கள்.ஒன்று பலஸ்தீனம் மற்றது உக்ரேன். ஒரு உக்ரேனியனுக்கும் பட்டினி என்றால் என்னவென்றே தெரியாது. எல்லோரும் சொர்க்கக்தில் இருப்பது போல் இருக்கின்றார்கள்.இப்படியொரு காட்சியை உக்ரேன் யுத்தங்களில் கண்டிருக்கின்றீர்களா? 👇 ☹ படத்திற்கு நன்றி யுனிசெப்.

கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் நடித்த பிரமாண்ட காட்சிகளை நீக்கியது ஏன்? இயக்குநர் செல்வமணி பேட்டி

3 months 2 weeks ago
நான் விரும்பி பார்த்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய துணையாக இருந்தது. https://www.youtube.com/watch?v=VBx3YwJKuR0 https://youtu.be/VBx3YwJKuR0?si=WoXWUt8u0YPPi09o

வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?

3 months 2 weeks ago
உங்களுக்கு எங்கள் திறமையில் பொறாமை. வேலை செய்யாமலே சம்பளம் எடுக்க நினைப்பவர்கள் மத்தியில் குறைய நேரம் வேலை செய்து அதிக சம்பளம் எடுக்க நினைப்பவர்கள் பரவாயில்லை தானே. வாங்கக்கூடிய அளவுக்கு அதிகநேரம் வேலை வாங்கி கொடுக்கக்கூடிய அளவுக்கு மட்டமான அளவு சம்பளத்தை கொடுப்பதில்தான் பெரும்பாலான நிறுவனங்கள் நாட்டம் காட்டுகின்றன.

108 தம்பதியினருக்கு இலவச திருமணம்!

3 months 2 weeks ago
108 தம்பதியினருக்கு இலவச திருமணம்! adminAugust 25, 2025 யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்யத முடியாத நிலையில் உள்ள 108 தம்பதியினருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக சங்க தலைவர் இ ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட துரை தம்பதியினரின் , நிதியுதவியில் , 108 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது . தாலி , கூறை சேலை மற்றும் திருமணத்திற்கான இதர செலவுகளுக்கும் பணம் வழங்கப்பட்டு , 108 தம்பதிகளுக்கும் செல்வ சந்நிதி ஆலயத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி திருமணம் நடாத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த 108 தம்பதியினரையும் , யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாகவே தெரிவு செய்தோம். அன்றைய திருமண நிகழ்வில் கலந்து கொண்டு 108 தம்பதியினரையும் வாழ்த்தி , அன்று மதியம் ஆலயத்தில் நடைபெறவுள்ள மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார். https://globaltamilnews.net/2025/219610/

தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?

3 months 2 weeks ago
ஒன்று அரை வருடங்களுக்கு முன்பு தான் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழ்நாட்டு மக்களை இலகுவாக ஏமாற்றி தான் முதலமைச்சராக தான் வந்துவிடலாம் என்று ஆசைபடுகின்றாரே இந்த விஜய் இவர் தான் பேராசை கொண்ட சுயநலமானவர்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஏற்பாடு

3 months 2 weeks ago
காணமல் ஆக்கப்பட்டவர் சங்கத்தையே வடக்கு கிழக்காக பிரித்துவிட்டீர்கள் ... இனியார் உங்கல் கத்தலைக் கேட்ட்கப் போகின்றான்..

பிள்ளையானின் மற்றுமொரு சகா ஒருவர் மட்டக்களப்பில் கைது

3 months 2 weeks ago
பிள்ளையானை வைத்து அனுர அரசு 5 வருடத்தை கிழக்கில் ஓட்டிவிடும் ....முழுப் பிலாப்பழம் முழுங்கிய கிசிபுல்லா ...நசீர் ...இப்படி பல முதலைகள் இலகுவாக காலத்தை கடத்திவிடும்

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months 2 weeks ago
இந்த காய் நகர்த்தல் நாம் எதிர்பார்த்ததுதான் ....செம்மணியைவிட ..இது இனி பிரபலமாகும் ...

வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்!

3 months 2 weeks ago
நாட்டின் புராதன சைவ சமய சின்னங்களை பராமரிக்கவும் அதில் புனரமைப்பு கட்டுமானம் என்பவற்றை மேற்கொள்ளவும் உரிய முறையில் அரச மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதிகளை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் பணிகள் நடைபெற என் வாழ்த்துக்கள்.

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

3 months 2 weeks ago
எதற்கான நினைவுத்தூண் என்பது தெரியவில்லை யாழில் (ஏதேனும் துயிலுமில்லத்தில் இருந்த சின்னமோ என்பதும் ஐயமே)

யாழ் நூலக எரிப்பு முதல் பட்டலந்தை வதை முகாம் வரை - ரணில் விக்ரமசிங்க மீதான 3 முக்கிய குற்றச்சாட்டுகள்

3 months 2 weeks ago
பட மூலாதாரம், PMD SRI LANKA கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நல குறைவால் கொழும்பு தேசிய மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ரணில் விக்ரமசிங்கவின் கைதானது, இலங்கை அரசியல் பாரிய மாற்றங்களை கடந்த சில தினங்களில் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அரசியல் ரீதியில் பிரிந்திருந்த எதிர்கட்சிகள் தற்போது ஓரணியாக திரண்டுள்ளமை, இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக செயற்பட்ட அனைவரும் இன்று அவர்களுடன் இணைந்தவாறே ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும். இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் கைது உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. ரணிலின் கைது தொடர்பில் சர்வதேச கவனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் சர்வதேச நாடுகளின் முக்கியஸ்தர்கள் தமது கவலையை வெளியிட்டு வருகின்றனர். இதன்படி, கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க விரைவில் வீடு திரும்புவார் என மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமது நஷீத் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட தருணத்திலேயே மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி தனது எக்ஸ் வலைத்தளத்தில் இந்த தகவலை பதிவொன்றாக வெளியிட்டிருந்தார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை அரசியல் பழிவாங்கல் என இந்திய காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம், SHASHI THAROOR/X படக்குறிப்பு, சசி தரூர் உடன் ரணில் விக்ரமசிங்க தனது எக்ஸ் வலைத்தளத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். பொருத்தமற்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை தெரிவதாகவும் அவர் கூறுகின்றார். சுகயீனமுற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு மனிதாபிமான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டுக்காக பல பத்தாண்டுகளாக பணியாற்றிய ரணில் விக்ரமசிங்க மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இம்முறை இலங்கை விஜயத்தின் போது தான் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்திருந்ததையும் அவர் இந்த பதிவின் ஊடாக நினைவுப்படுத்தியிருந்தார். பட மூலாதாரம், ERIK SOLHEIM /X படக்குறிப்பு, எரிக் சொல்ஹெய்மின் எக்ஸ் பதிவு இதேவேளை, இலங்கையின் உள்நாட்டு போர் இடம்பெற்ற காலப் பகுதியில் இலங்கைக்கான நோர்வின் சமாதான தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம்மும் தனது எக்ஸ் தள பதிவில் கவலையை வெளியிட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலும், தெற்காசியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பல தலைவர்களுடன் இணைந்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு கோருவதாக அவர் கூறுகின்றார். தடுப்பு காவலில் இருக்கும் அவரின் உடல்நிலைமை தெடர்பில் அனைவரும் கவலையடைவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இலங்கை 2022ம் ஆண்டு பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வீழ்ச்சி கண்ட போது, அதனை மீட்டெடுக்க முன்னின்று செயற்பட்ட தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் கூறுகின்றார். ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என கூறிய அவர், இந்த குற்றச்சாட்டுக்கள் ஐரோப்பாவில் எந்த குற்றமாகவோ அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகவோ கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊழலை எதிர்த்து போராடும் முயற்சிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம், ஆனால் உண்மையான பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். ரணில் விக்ரமசிங்க மீது இலங்கையிலுள்ள குற்றச்சாட்டுகள் என்ன? முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பல பத்தாண்டுகளாகவே காணப்பட்டு வருகின்றன. ரணில் விக்ரமசிங்க, இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு நபராக கருதப்படுகின்றார். 1970ம் ஆண்டு காலப் பகுதியில் அரசியல் வாழ்க்கைக்குள் பிரவேசித்த இவர், ஐந்து தடவைகள் பிரதமராகவும் ஒரு தடவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் கடமையாற்றியுள்ளார். அது தவிர, பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், எதிர்கட்சி தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்த பெருமை ரணில் விக்ரமசிங்கவை சாரும். எனினும், 1970ம் ஆண்டு காலப் பகுதி முதல் இன்று வரை ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பட மூலாதாரம், PMD SRI LANKA யாழ் நூலகம் எரிப்பு தெற்காசியாவிலேயே மிக பெறுமதி வாய்ந்த பெரிய நூலகமாக கருதப்பட்ட யாழ்ப்பாணம் நூலகம் 1981ம் ஆண்டு தீ வைக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. இந்த நூலகத்தில் அந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் பெறுமதி வாய்ந்த 97000 புத்தகங்கள் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் நூலக எரிப்பானது, இலங்கையின் இனப் பிரச்னையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது. அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினரின் தலைமையில் தென் பகுதி மக்களை அழைத்து சென்று நூலகத்தை தீக்கிரையாக்கியமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், யாழ்ப்பாணம் நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்திற்கு ரணில் விக்ரமசிங்க மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாகவே மன்னிப்பு கோரியிருந்தார். ''எமது ஆட்சிக் காலத்தில் நூலகத்திற்கு தீ வைக்கப்பட்டது. அது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம். அது தொடர்பில் நான் மன்னிப்பு கோருகின்றேன்'. என 2016ம் ஆண்டு நாடாளுமன்ற அமர்வொன்றில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். பட்டலந்தை சித்திரவதை முகாம் பட மூலாதாரம், GOVERNMENT PRESS படக்குறிப்பு, ஆணைக்குழுவின் அறிக்கையின் முதல் பக்கம் இலங்கையில் 1987 முதல் 1989ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களை தடுத்து வைப்பதற்கான உருவாக்கப்பட்டதாக கூறப்படும் முகாமே இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் என சொல்லப்படுகின்றது. கம்பஹா மாவட்டத்தின் பியகம என்ற பகுதியில் இந்த சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. கிளர்ச்சியில் ஈடுபட்ட மற்றும் அதற்கு ஆதரவு வழங்கியோரை இந்த சித்திரவதை முகாமுக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதாகவும், சிலர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், சிலர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த பட்டலந்தை சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டதாக கூறப்படும் சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் இருந்தது. பட மூலாதாரம், BATALANDA COMMISSION REPORT படக்குறிப்பு, வீட்டுத் திட்ட வளாகத்தின் வரைபடம் அரச உரக் கூட்டுத்தாபனத்தின் வீட்டுத் திட்டத்திலேயே இந்த சித்திரவதை முகாம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அப்போதைய வீடமைப்புத்துறை அமைச்சராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்திருந்தார். இந்த பின்னணியில், இந்த சித்திரவதை முகாமிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் அறிக்கைகள் இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் கூட விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. பட மூலாதாரம், GOVERNMENT PRESS படக்குறிப்பு, ஆணைக்குழு உறுப்பினர்கள் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் இலங்கையின் 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் பதவியை வகித்து வந்திருந்தனர். இந்த காலப் பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக சிங்கப்பூர் பிரஜையான அர்ஜீன் மகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மத்திய வங்கி பிணைமுறி விநியோகத்தில் 11,450 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜீன் மகேந்திரன், தனது உறவினருக்கு மோசடியாக முறையில் இந்த பிணைமுறி விநியோகத்தை மேற்கொண்டதாக கூறப்பட்டது. அதையடுத்து, இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அர்ஜீன் மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளார். இந்த விவகாரத்திலும் ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை ரணில் விக்ரமசிங்க தொடர்ச்சியாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு - நாளை விசாரணை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க உடல்நிலை முடியாமை காரணமாக தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நாளைய தினம் (26) நடைபெறவுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அழைத்து வருவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கொழும்பு மருத்துவமனையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நிலை தொடர்பில் கவனம் செலுத்தி, விசேட மருத்துவர்களின் தீர்மானத்திற்கு அமையயே இறுதி முடிவு எடுக்கப்படும் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் டொக்டர் பிரதீப் விஜேசிங்க ஊடகங்களுக்கு இன்று தெரிவித்திருந்தார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பில் நாளைய தினம் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்த எதிர்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ''வைராக்கியம் மிக்க அரசியலுக்கு எதிராக குரல் எழுப்புவோம். 26ம் தேதி கொழும்பிற்கு வாருங்கள்'' என தெரிவிக்கும் வகையிலான சமூக வலைத்தள பதிவொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6261xep83yo

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months 2 weeks ago
குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு Published By: VISHNU 25 AUG, 2025 | 07:15 PM 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த அப்பாவி முஸ்லிம்கள் ஆயுத தாரிகளால் இடைமறிக்கப்பட்டு கடத்தப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து கொலை செய்­யப்­பட்டு புதைக்கப்பட்டது சம்பந்தமாக, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பாக AMM.ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் செய்­யப்­பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை, திங்கட்கிழமை (25) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள படி உரிய இடத்தில் புதைக்கப்பட்டுள்ள மனித எச்சங்களை தோண்டி எடுப்பதற்கான கட்டளையை நீதிவான் நீதிமன்ற நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலதிக நடவடிக்கைகளை களுவாஞ்சிக்குடி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். முறைப்பாட்டாளர் சார்பாக குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. பின்னர் சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியின் , கடற்கரை எல்லைப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தின் கௌரவ நீதவான் நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் சம்பவ இடத்தினை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தியதுடன் , பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தி இதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கட்டளை இட்டார். இவ் வழக்கு திங்கட்கிழமை (25) காலை 9.30 மணிக்கு மீள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223356
Checked
Mon, 12/15/2025 - 01:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed