கவிதைப்-பூங்காடு

காதல் கிறுக்கன்

Wed, 16/11/2016 - 00:02

பார்வை புணர்ச்சியில்
பட்டாம்பூச்சியின் இறகசைப்பாகியது காதல்
கைகோர்க்கும் கனவினில்
கால் தேய நடந்தோம்
வள்ளுவக்குறளாய் ஈரடி பேசி
ஈராயிரம் நொடி கடந்தோம்
முதுமையின் அயணத்தில்
முழுதாய் பருகிட கனவின்
இறக்கைகளை இறக்கிவைத்தோம்
காலச்சுழற்சியில் நீ மனைவியாயும்
நான் கணவனாயும் வெவ்வேறாய்
பிரியாது தவிக்கிறது காதல்


 

Categories: merge-rss

ஏரியில் ஒருவன் !

Mon, 14/11/2016 - 12:09

 

உட்காரப்

புல்வெளி.

எதிரே

நீர்வெளி.

நீர்மேல் எண்ணெயாய்

சூரியன் .

பால் சொட்டுகளாய்

பறவைகள் .

முட்டாமல் மோதாமல்

இணக்கமாய் காற்று .

தூரத் தூர ரயிலோசைக்கும்

செவிக் கூசும் நிசப்தம் .

.......................................

..........................

எல்லாம் தவிர்த்து

கவனமாய் காத்திருக்கிறான்

கரையில் ஒருவன் .

தொண்டையை கிழித்து

கண்ணைத் துளைத்த

தூண்டில் முள்ளுடன்

துடிக்கும் ஒரு

மீனைக் காணும் ஆவலுடன் .

 

Categories: merge-rss

அன்பிற்கும் உண்டோ...

Fri, 11/11/2016 - 20:26

அன்பிற்கும் உண்டோ.....

பத்து வருடங்கள் முன்

அப்பொழுது என் மகளுக்கு வயது பதினைந்து

அழகான வா்ணக் காகிதத்தில்

அன்பான வாிகளிட்டு

அளித்தாள்  தந்தையா் தின வாழ்த்து

அத்தனையும் நனவாகி அதுவே

இறுதி என்று தொியாத இறுமாப்பில்

முத்தமொன்று கூட முழுதாய்க்

கொடுக்காமல் முறுவலித்தேன்

இப்பொழுதும் ஆண்டு தோறும்

வருகிறது தந்தையா் தினம்

எனக்காக மலா் வைத்து அஞ்சலிக்க

மகளும் வருகின்றாள்

காற்றில் முத்தமிட்டு கண்ணீருடன்

விடை பெறுகின்றாள்

எனக்காக என் அன்பிற்காக

ஏங்கும் மகளுக்காகவேனும்

நான் மறந்திருக்க வேணும்

புகையெனும் மாயப் பேயை

எண்ணுகின்றேன் ஆனாலும்

எடுத்தியம்ப முடியவில்லை

மனைவியின் வேண்டுகோளைப்

புறக்கணித்த என்னால் இன்று

மகளின் ஏக்கத்தை

மறுதலிக்க முடியவில்லை

காலம் கடந்த ஞானம்

ஆயினும் மகளே உன் அருகாமையை

இழந்து விட்ட சோகம்

உனக்கு மட்டுமல்ல எனக்கும்தான்

மகளே எனக்காக நீ எழுதித் தருவாயா

இன்னோா் தந்தையா்தின வாழ்த்து

உனக்காக நான் பாடுகின்றேன்

மனதோடு அன்புத் தாலாட்டு.

Categories: merge-rss

தாயிடம் தப்பி வந்த

Thu, 10/11/2016 - 06:48
                              

 


வாழைத்தோட்டத்திற்குள் 
வந்து முளைத்த...
காட்டுமரம் நான்..
எல்லா மரங்களும் 
எதாவது... 
ஒரு கனி கொடுக்க 
எதுக்கும் உதவாத...
முள்மரம் நான்...
தாயும் நல்லவள்... 
தகப்பனும் நல்லவன்... 
தறிகெட்டு போனதென்னவோ 
நான்...
படிப்பு வரவில்லை...
படித்தாலும் ஏறவில்லை...
இங்கிலீஷ் டீச்சரின்
இடுப்பை பார்க்க...
இரண்டு மைல் நடந்து
பள்ளிக்கு போவேன்...
பிஞ்சிலே பழுத்ததென்று...
பெற்றவரிடம் துப்பிப்போக ...
எல்லாம் தலையெழுத்தென்று 
எட்டி மிதிப்பான்...
பத்துவயதில் திருட்டு... 
பனிரெண்டில் பீடி... 
பதிமூன்றில் சாராயம்...
பதினாலில் பலான படம்... 
பதினைந்தில் ஒண்டிவீட்டுக்காரி ...
பதினெட்டில் அடிதடி...
இருபதுக்குள் எத்தனையோ...
பெண்களிடம் விளையாட்டு...
இரண்டு மூன்று முறை கருக்கலைப்பு... 
எட்டாவது பெயிலுக்கு...
ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும்...
மண்லாரி ஓட்டினால் லோடுக்கு... 
நூறு தருவார்கள்... 
வாங்கும் பணத்துக்கு...
குடியும் கூத்தியாரும் என...
எவன் சொல்லியும் திருந்தாமல்... 
எச்சிப்பிழைப்பு பிழைக்க ...
கைமீறிப்போனதென்று...
கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனர்..! 
வேசிக்கு காசுவேணும் ...
வருபவள் ஓசிதானே...
மூக்குமுட்ட தின்னவும்... 
முந்தானை விரிக்கவும்... 
மூன்று பவுனுடன் ...
விவரம் தெரியாத ஒருத்தி...
விளக்கேற்ற வீடுவந்தாள்...
வயிற்றில் பசித்தாலும்... 
வயிற்றுக்கு கீழ் பசித்தாலும்... 
வக்கனையாய் பறிமாறினாள்...
தின்னு கொழுத்தேனே தவிர...
மருந்துக்கும் திருந்தவில்லை...
மூன்று பவுன்போட...
முட்டாப்பயலா நான்...
இன்னும் ஐந்து வேண்டுமென்று ...
இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...
கறவைமாட்டை சந்தைக்கு அனுப்பி ...
கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான்... 
சொந்தம் விட்டுப்போகாமல்... 
மாமனாரான மாமன்...!
பார்த்து வாரமானதால்... 
பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,
தள்ளிப்போனதென்று தள்ளிவிட்டாள்...
சிறுக்கிமவ 
இருக்கும் சனி...
போதாதென்று 
இன்னொரு சனியா..? 
மசக்கை என்று சொல்லி...
மணிக்கொருமுறை வாந்தி.., 
வயிற்றை காரணம்காட்டி...
வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,
சாராயத்தின் வீரியத்தில்... 
சண்டையிட்டு வெளியே அனுப்ப.., 
தெருவில் பார்த்தவரெல்லாம் 
சாபம் விட்டு... 
போவார்கள்_கடைசி மூன்று மாதம்...
அப்பன்வீட்டுக்கு அவள் போக.., 
கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...
வாசனையாய் வந்துபோனாள்..,
தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...
தகவல் சொல்லியனுப்ப.., 
ரெண்டு நாள் கழித்து...
கடமைக்கு எட்டிப்பார்த்தேன்... 
கருகருவென 
என் நிறத்திலே... 
பொட்டபுள்ள..!
எவன் கேட்டான் இந்த மூதேவியை... 
கள்ளிப்பால் கொடுப்பாயோ ...
கழுத்தை திருப்புவாயோ... 
ஒத்தையாக வருவதானால் ...
ஒருவாரத்தில் வந்துவிடு 
என்றேன்...,
ஆறுமாதமாகியும் அவள்வரவில்லை...
அரசாங்க மானியம்
ஐயாயிரம்... 
கிடைக்குமென்று
கையெழுத்துக்காக...
பார்க்கப்போனேன் ...
கூலிவேலைக்கு போனவளை கூட்டிவரவேண்டி...
பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச்செல்ல...
ஆடி நின்ற ஊஞ்சலில்... 
அழுகுரல் கேட்டது..,
சகிக்க முடியாமல் 
எழுந்து ...
தூக்கினேன்_பெண்குழந்தை..!
அடையாளம் தெரியவில்லை ...
ஆனால் அதே கருப்பு...
கள்ளிப்பாலில் தப்பித்துவிட்டு...
கைகளில் சிக்கிக்கொண்டது.., 
வந்தகோபத்திற்கு...
வீசியெறியவே தோன்றியது... 
தூக்கிய நொடிமுதல்... 
சிரித்துக்கொண்டே இருந்தது,
என்னைப்போலவே...
கண்களில் மச்சம்,
என்னைப்போலவே
சப்பைமூக்கு,
என்னைப்போலவே
ஆணாக.., 
பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க ....
வேண்டியதில்லை...,
பல்லில்லா வாயில்... 
பெருவிரலை தின்கிறது,
கண்களை மட்டும்.., 
ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,
ஒரு கணம் விரல் எடுத்தால்... 
உதைத்துக்கொண்டு அழுகிறது, 
எட்டி விரல்பிடித்து...
தொண்டைவரை வைக்கிறது, 
தூரத்தில் வருவது கண்டு...
தூரமாய் வைத்துவிட்டேன்... 
கையெழுத்து வாங்கிக்கொண்டு... 
கடைசி பஸ்ஸுக்கு திரும்பிவிட்டேன், 
முன்சீட்டில் இருந்த குழந்தை...
மூக்கை எட்டிப்பிடிக்க 
நெருங்கியும்... 
விலகியும் நெடுநேரம்... 
விளையாடிக்கொண்டு இருந்தேன்! 
ஏனோ அன்றிரவு ...
தூக்கம் நெருங்கவில்லை,
கனவுகூட 
கருப்பாய் இருந்தது,
வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...
போட்ட கையெழுத்து பொருந்தவில்லை... 
என_இன்னொரு கையெழுத்துக்கு...
மீண்டும் சென்றேன், 
அதே கருப்பு, 
அதே சிரிப்பு, 
கண்ணில் மச்சம், 
சப்பை மூக்கு...
பல்லில்லா வாயில் 
பெருவிரல் தீனி...
ஒன்று மட்டும் புதிதாய் ...
எனக்கும் கூட 
சிரிக்க வருகிறது ...
கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...
எந்த குழந்தையும் இல்லை, 
வீடு நோக்கி நடந்தேன்,
பாதிவழியில் கறிவேப்பிலைகாரி...
கைப்பிடித்தாள் 
உதறிவிட்டு நடந்தேன்...
தூக்கம் இல்லை 
நெடுநேரம்... 
பெருவிரல் 
ஈரம் பட்டதால் ...
மென்மையாக இருந்தது ...
முகர்ந்து பார்த்தேன் ....
விடிந்தும் விடியாததுமாய்... 
காய்ச்சல் என்று சொல்லி...
ஊருக்கு வரச்சொன்னேன்,
பல்கூட விளக்காமல் ...
பஸ் ஸ்டேண்டுக்கு சென்றுவிட்டேன், 
பஸ் வந்ததும் லக்கேஜை காரணம் காட்டி...
குழந்தையை கொடு என்றேன்,
பல்லில்லா வாயில் பெருவிரல்! 
இந்தமுறை பெருவிரலை தாண்டி... 
ஈரம் எங்கோ சென்றுகொண்டு இருந்தது...
தினமும் என் மீது படுத்துக்கொண்டு...
பொக்கை வாயில் கடிப்பாள், 
அழுக்கிலிருந்து 
அவளை காப்பாற்ற...
நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,
பான்பராக் வாசனைக்கு...
மூக்கை சொரிவாள் விட்டுவிட்டேன் ...
சிகரெட் ஒரு முறை..,
சுட்டுவிட்டது விட்டுவிட்டேன்...
சாராய வாசனைக்கு...
வாந்தியெடுத்தாள் விட்டுவிட்டேன், 
ஒரு வயதானது உறவுகளெல்லாம்... 
கூடி நின்று 
அத்தை சொல்லு..,
மாமா சொல்லு 
பாட்டி சொல்லு ...
அம்மா சொல்லு என்று...
சொல்லிக்கொண்டு இருந்தார்கள்... 
எனக்கும் ஆசையாக இருந்தது,
அப்பா சொல்லு 
என்று சொல்ல, 
முடியவில்லை ஏதோ என்னை தடுத்தது,
ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...
அவள் சொன்ன முதல் வார்த்தையே... 
அப்பாதான்! 
அவளுக்காக எல்லாவற்றையும்... 
விட்ட நான் அப்பா என்ற 
அந்த வார்த்தைக்காக...
உயிரைகூட விடலாம் என்று தோன்றியது, 
அவள் வாயில் இருந்து வந்த.., 
அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன், 
இந்த சாக்கடையை...
அன்பாலேயே கழுவினாள்... 
அம்மா சொல்லி திருந்தவில்லை, 
அப்பா சொல்லி திருந்தவில்லை ,
ஆசான் சொல்லி திருந்தவில்லை ,
நண்பர்கள் சொல்லி திருந்தவில்லை ,
நாடு சொல்லியும் திருந்தவில்லை, 
முழுதாய் மூன்று வார்த்தை பேசவராத ...
இந்த முகத்தை பார்த்து திருந்திவிட்டேன்.. 
வளர்ந்தாள்..,
நானும் மனிதனாக வளர்ந்தேன்... 
படித்தாள், 
என்னையும் படிப்பித்தாள்... 
திருமணம் செய்துவைத்தேன் ,
இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள், 
இரண்டு குழந்தைகளுமே...
பெரியவர்களாய் வளர்ந்துவிட்டார்கள், 
நானும் கூட தாத்தாவாகிவிட்டேன் ,
என்னை மனிதனாக்க...
எனக்கே மகளாய் பிறந்த... 
அந்த தாய்க்காக காத்திருக்கிறது ...
‪இந்த_கடைசி_மூச்சு‬ 
ஊரே ஒன்று கூடி..,
உயிர் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
எனக்குத்தெரியாதா என்ன,
யாருடைய பார்வைக்கப்புறம்...
பறக்கும் இந்த உயிரென்று?
வானத்தை பார்த்து காத்திருக்கிறேன்...
......................வாசலில் ஏதோ சலசலப்பு, 
நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்.., 
என் பெருவிரலை யாரோ தொடுகிறார்கள் ,
அது அவள்தான், 
மெல்ல சாய்ந்து ...
என் முகத்தை பார்க்கிறாள் ...
என்னைப்போலவே...
கண்களில் மச்சம்,
சப்பைமூக்கு, 
கருப்பு நிறம், 
நரைத்த தலைமுடி
தளர்ந்த கண்கள்,
என் கைகளை முகத்தில் புதைத்துக்கொண்டு, 
அப்பா அப்பா என்று அழுகிறாள், 
அவள் எச்சில் 
என் பெருவிரலிட,
உடல் முழுவதும் ஈரம் பரவ...
ஒவ்வொரு புலனும் துடித்து...
‪அடங்குகிறது‬
.......................
தாயிடம் தப்பிவந்த
மண்ணும்... 
கல்லும் கூட 
மகளின் ..,
கைப்பட்டால் சிலையாகும்!

http://alagappanarumugam.blogspot.ca/2016/07/blog-post_10.html?expref=next-blog

Categories: merge-rss

முக நூல்பற்றிய கவிதைகள்

Sun, 06/11/2016 - 15:39

பாட நூலுக்காக செலவிட்ட...
நேரத்தைவிட உனக்காக...
முகநூலுக்காக செலவிட்ட ..
நேரம் அதிகம் -இப்போ .....
கிழிந்த ஆடையின் நூல் ....
விட்ட தவறை காட்டுகிறது ....!!!

@
முக நூல்பற்றிய கவிதைகள் 
கவிப்புயல் இனியவன் 
(மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக )

Categories: merge-rss

இனிக்கும் இன்பகாதல் கவிதை

Sat, 05/11/2016 - 06:43

இரவில் ,,,,,
நீ தரும் இன்பமும் .....
நினைவுகளும்....
நான் காணும் கனவும்....
என் ஏக்கமுமே......
பகலில்........
வரிகளாக வந்து.....
வார்த்தைகளாய் உருவாகி....
கவிதையாய் படைக்கிறேன்.....!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

Categories: merge-rss

அமைதித் தளபதி

Wed, 02/11/2016 - 17:51
அமைதித் தளபதி – தீபச்செல்வன்:-

non-peace

அமைதித் தளபதி

அதிகாலை இருண்டுபோகும்படி
வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில்
உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர்

தகர்க்கப்பட்ட வெண்சொற்கள்
தோரணங்களாய் தொங்கும் நகரில்
சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம்

முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில்
சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமான முடிவற்ற புன்னகையின் தீராத்  துகள்கள்

நேற்றும் நமது தலைநகரிற்கு வந்தவர்களுக்கு
கைலாகு கொடுத்து
விரிந்த மலர்கொத்துக்களைபோல்
புன்னகையை நீட்டியவனின் உதடுகளை
மூடிக் கிடந்தது ஈரமண்

முள்முருக்கில் அமர்ந்திருந்த
வெண்புறா எழுந்து பறந்தது
கொடும் சிங்கத்தின் முகத்துடன்
இறகுகள் முறிக்கப்பட்ட புலுனி வீழ்ந்தது
நாவல் மரத்திலிருந்து

அமைதித் தாகத்தின்
புன்னகையடர்ந்த அவன் முகத்தின்
ஒரு துளி மௌனத்தில்
தோற்கும் உம் அறம் பிழைத்த போர்.

http://globaltamilnews.net/archives/5600

Categories: merge-rss

ஒரு ஜீவாத்மாவின் கவிதை

Tue, 01/11/2016 - 14:11
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
-----------------
 
என்னை
அவர்கள் மதிக்கவில்லை......
என்று கோபப்படாமல்......
அவர்கள் மதிக்கும்படி........
நான் மாறவில்லை என்று ......
கவலைப்படு - காரணத்தை.....
தேடு மதிக்கப்படுவாய்.......!!!
 
 
பாராட்டும் போது......
துள்ளி குதிக்கும் மனம் .......
விமர்சிக்கும் போது.......
துவண்டு விழுகிறாய்.......
அப்போ உன் மனத்தை ......
கடிவாளம் போட்டு ....
வழிநடத்துகிறாய்..........
கடிவாளத்தை கழற்று ......
சவாரிசெய் நிச்சயம் விழுவாய்......
காயப்படுவாய்.......
ஆனால் வாழ்க்கையில் ......
வெற்றி பெறுவாய்,............!!!
 
 
கரையில் நின்று கடலை ......
பார்த்தால் தப்புக்கடலும்.....
சமுத்திரமாய் தெரியும்.......
ஆழ்கடலில் நின்று கரையை....
பார்ப்பவனுக்கு கடலும் கரையும்.....
ஒன்றுதான் .........
எல்லவறையும் சமனாக.......
நோக்குபவனே .......
சாதனையாளனாகிறான்.....!!!
 
 
&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன்
Categories: merge-rss

இனியதீபாவளி வாழ்த்து

Sat, 29/10/2016 - 06:28
தீப திரு நாளில் .....
தீய எண்ணங்கள் தீயாகட்டும்.....
தீய செயல்கள் தீயாகட்டும்.....
தீய குணங்கள் தீயாகட்டும்......!!!
 
தீயை போல் நிமிர்ந்து நிற்ப்போம்.......
தீயவற்றுக்கு தீயை மூட்டுவோம்......
தீண்டாமைக்கு தீயூட்டுவோம்......!!!
 
தீபாவளி அன்று......
தீனி இல்லாதோருக்கு .....
தீனி போடுவோம்....
தீபத்தை ஏற்றும்போது ....
ஒளிரட்டும் அகம்......
அகம் மட்டுமல்ல உள்ளகமும் ......
ஒளிரட்டும்.............!!!
 
&
இனிமையான.......
இன்பமான.......
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
இனியவன்
Categories: merge-rss

2.11.16  ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் எனது கவிதை

Fri, 28/10/2016 - 06:59

2.11.16  ஆனந்த விகடன் தீபாவளிச் சிறப்பிதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது கவிதையை  யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி!

 

நானிலம் போற்றும் நீதி

 

காடு இருந்த இடத்தில்

அமைந்திருக்கும் முல்லை நகரில்

கழனி இருந்த இடத்தில்

வீடுகட்டிக் கொண்டவர்கள்

கால்வாய் இருந்த இடத்தில்

சாலை அமைப்பதை எதிர்த்து

வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.

குளம் இருந்த இடத்தில்

அமைந்திருக்கும் உயர்மன்றத்தில்

நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது!

 

-சேயோன் யாழ்வேந்தன்

(ஆனந்த விகடன் 2.11.16)

 

(எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை.  யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்)

Categories: merge-rss

கனவு உப்பிய நெஞ்சறை – தீபச்செல்வன்

Wed, 26/10/2016 - 20:03
கனவு உப்பிய நெஞ்சறை – தீபச்செல்வன்
art10
 
 
ஒரு சோடி பட்டாம் பூச்சிகள்
திரும்பாத திசையிற்
சன்னம் தைத்துக்  கிடந்தது
கனவு உப்பிய நெஞ்சறை.
 
உயிருக்கு மதிப்பற்ற நகரில்
சக்கரங்களிலும் சப்பாத்துக்களின் கீழும்
நசிந்தொட்டிய வெற்றுடல்கள்.
 
அவர்கள் நினைத்திருக்கக்கூடும்
இத் தெருக்களுக்கு இரத்தம் புதிதல்ல
சுடுகலன்களை நீட்டுவதும் அதிசயமல்ல
கொல்வது இங்கு பிரச்சினையே இல்லை.
 
குருதியில் தோய்ந்த பின்னிரவில் பிசுபிசுத்தன
உருளும் பந்துகளும்
சில்லுடைந்த மோட்டார் வண்டிகளும்.
 
துவட்டி வளர்த்த பிள்ளையின் தலையை
சுவருடன் அடித்துப் பிளந்தவர்கள்
தாயிடம் உயிருக்கு ஈடுபேசினர்
ஒரு சவப்பெட்டியை தருவதாய்
 
கல்லிருக்கையில் விரிந்து பறக்கும்
அப்பியாசப் புத்தங்கள்போல்
படபடக்கும் இவ் நகரம்
துப்பாக்கிகளுக்கே  பரிசளிக்கப்பட்டது.
 
போர் சக்கரத்தில் தப்பிய பிள்ளையை
நசித்தது யானை
 
காலம்தோறும்
கழுத்துக்களை திருகும் சீருடைகளே வேறுவேறு
துப்பாக்கிகளும் சிந்தப்பட்ட குருதியும் ஒன்றுதான்.
 
 
ஓவியம் – வசந்தரூபன்

http://globaltamilnews.net/archives/4800

Categories: merge-rss

எழுதிட மறுக்குது மனக்கோல்

Tue, 25/10/2016 - 10:38

எழுதிட மறுக்குது மனக்கோல்

எழுதிட எடுத்தேன் எழுதுகோல்
இயங்கிட மறுத்தது மனக்கோல்
எழுதி எழுதி என்ன பயன்
எதற்கும் தீர்வு இல்லை எனின்

நாளும் நாளும் தொடருது அவலம்
தடுத்திட வழி காண எவருமில்லா துயரம்
போதும் போதும் பேசி ஏமாற்றும் நாடகம்
முடிந்தால் மக்களைக் காப்பாற்ற வழி வேண்டும்

அல்லல்பட்டு அல்லபட்டு அழிவதுதான்
தமிழர் தலைவிதியோ என்று
எண்ணிடும் போது இதயம் துடிக்கிறது
அதனால் எழுதிட மறுக்குது மனக்கோல்

வெற்று ஆரவாரங்களோ எல்லாம் என
வெதும்புகின்றது உள்ளம்
சொத்துக்கள் சேர்ப்பவரும் அரச
இருக்கைகள் காப்பவர்களும் தான் 
அதிகமாகிவிட்டனர் என்னும்போது
அழுவதா? கொதிப்பதா? என தெரியவில்லை.

மெல்ல அரங்கேறும் இனக்கொலைக்கு
உடந்தையாளர்கள்தான் கூடுமானவர்களோ?
உண்மை உணர்வுடன் நீதி கேட்டு போராட
பக்கபலமாக மக்களுக்கு யாருமில்லையோ?

மக்களின் துயரநிகழ்வுகளில் கலந்து கொண்டு
அங்கும் அரசியல்மேடை போட நினைப்பவர்கள்
நித்தம் துயரத்துள் தள்ளாடும் மக்கள் நிலையை 
எப்படி உணர்வார் உதவிட வருவார்?

சாவையே காசாக்க துணிந்திடும் எத்தர்கள்- மக்கள்
வலிகளையே படமாக்கி விற்றிட முனையும் கொள்ளையர்கள்
போலி வாக்குறுதிகளை அள்ளிக்கொட்டி அரசியல்
ஆதாயம் தேடும் கொடியவர்கள் நடுவே மக்கள் வாழ்வு.

நச்சுப்பாம்புகள் நடுவேயும் கொடிய விலங்குகள் மத்தியிலும்
அச்சமின்றி எவரும் வாழ்ந்துவிடலாம் -பதவி மோகம்
பணவெறி பிடித்தலையும் மனிதப்பண்பில்லாதோர் நடுவே
பயமின்றி நிம்மதியாக வாழ முடிந்திடுமா? நீதிதான் கிடைத்திடுமா?


மந்தாகினி

 

 

 

Categories: merge-rss

கவிப்புயலின் குடும்ப கவிதைகள்

Sat, 22/10/2016 - 07:14

பிஞ்சு விரலை பஞ்சு......
போல் நினைத்து மெல்ல .....
மெல்ல அமர்த்தி சுகம் .....
காணும் உயிரே .........!!!

மார்பிலே ......
போட்டுக் கொண்டே...
மனம் நிறைந்து மகிழ்ந்து 
மனத்தால் வளர்த்த உயிரே ....!!!

மளமளவென வளர்ந்தேன் ..
மணமுடித்து வைத்தாள்... 
நான் விரும்பிய உயிரை..!!

அன்னை அவள் கண் மூடியதால்...
அனாதையானேன் அன்பென்னும்
உறவிலிருந்து ...!!!

உள்ளத்தால்  சொல்லுகிறேன்...
தாயை நினைத்து கவிதை 
எழுதும் எந்த கவிஞனும் ......
கண்ணீரை சிந்தாமல் .......
எழுதவே முடியாது ........!!!

&
குடுப்ப கவிதைகள் 
அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன் 
 

Categories: merge-rss

என்னை உன்னுடனேயே வைத்திரு

Sat, 15/10/2016 - 02:39

என்னை எப்போதும் .....
உன்னுடனேயே  வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு - உன்னை விட .....
யாரும் துணையில்லை ......
எனக்கு - மற்றவர்களில் .....
நம்பிக்கையுமில்லை ............!!!

யான் பெற்ற அறிவு ......
யான் பெற்ற செல்வம் .....
யான் பெற்ற புகழ் .......
எல்லாம் உன்னிடமிருந்தே .......
கிடைத்தவை என்பதை .....
யான் நன்றாக புரிவேன் .......!!!

மாயையில் மயங்காமல் இருக்க .......
போதையில் பேதலிக்காமல் இருக்க .....
ஆணவத்தில் நடனமாடாமல் இருக்க ......
என்னை எப்போது உன்னோடு .......
வைத்திரு இறைவா ......
என்னை எப்போதும் .....
உன்னுடனேயே  வைத்திரு ......
உயிர் பிரியும் வேளைவரை .....
என்னை உன்னுடனேயே .....
வைத்திரு இறைவா ....................!!!

&
ஆன்மீக கவிதை 
கவிப்புயல் இனியவன் 

Categories: merge-rss

தோசை - கவிதை

Fri, 14/10/2016 - 18:19
தோசை - கவிதை

கவிதை: சௌவி, ஓவியம் ஸ்யாம்

 

p30a.jpg

அன்னபூர்ணாவில் மசால் தோசை
ஆரிய பவனில் வீட்டு தோசை
சரவண பவனில் ஆனியன் தோசை
வசந்த பவனில் பொடி தோசை
கௌரிகிருஷ்ணாவில் நெய் தோசை
அஞ்சப்பரில் சிக்கன் தோசை
ஹரி பவனில் காடை தோசை
ஆனந்த பவனில் பூண்டு தோசை
முருகன் இட்லிக் கடையில் காளான் தோசை
முனியாண்டி விலாஸில் முட்டை தோசை
ஆச்சி மெஸ்ஸில் பேப்பர் தோசை
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஸ்கை தோசை
தள்ளுவண்டிக் கடையில் தட்டு தோசை
இவை எதுவும்
சின்னப் பலகையின் மேலமர்ந்து
புகை சூழ விறகு தள்ளிவிட்டுக்கொண்டே
அப்பாவின் கிழிந்த வேட்டியின் சிறுதுண்டை
காய்ந்த மரக்குச்சியில் கட்டி
கண்ணாடி பாட்டிலுக்குள் கீழிருக்கும்
எண்ணெயைத் தொட்டுப் பூசி
ஓரங்கள் கருக நீ வார்த்துத் தந்த
தோசைபோல ருசியில்லை அம்மா.

http://www.vikatan.com/anandavikatan

Categories: merge-rss

சமூக சிந்தனை கவிதைகள்

Mon, 10/10/2016 - 16:38

நல்ல பழங்களை .....
தட்டில் அடுக்கி வைத்து .....
நலிந்த பழங்களை.......
கொடையாய் கொடுக்கும் .....
கலியுக தர்மவான்கள்.......!!!

பகட்டுக்கு பிறந்தநாள் .....
பலவிதமான அறுசுவை .....
உணவுகள் - நாலுபேர் .......
புகழாரம் .......
விடிந்த பின் பழைய சாதம் .....
ஏழைகளுக்கு அள்ளி....
கொடுக்கும் .......
கலியுக தர்மவான்கள்.......!!!

&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன் 
 

Categories: merge-rss

மலரும் மனங்கள் இடிக்கும் இனங்கள்

Tue, 04/10/2016 - 04:59
monky+dove.jpgஉங்களைச் சுற்றி 

மௌனம் மட்டுமே 
மலர்ந்து நிற்கிறது 
மனதுக்குத் தெரியாத 
மர்மங்களில் ..
 
எங்களைச் சுற்றி 
இனங்கள் மட்டுமே 
இடித்துக் கொண்டு நிற்கிறது..
மனதுக்குத் தெரிந்த 
மர்மங்களில் ...!
 
Categories: merge-rss