நலமோடு நாம் வாழ

மனதின் நலன், மனிதகுலத்தின் நம்பிக்கை! : இன்று உலக மனநல தினம்

2 months 1 week ago

10 Oct, 2025 | 11:29 AM

image

இன்று (ஒக்டோபர் 10) உலக மனநல தினம்! 

லக மனிதகுலத்தின் முன்னேற்றத்தில் உடல் நலனுக்கு இணையான முக்கியத்துவம் பெற்றது மன நலம் / உள நலம் (Mental Health). ஒரு சமூகத்தின் நிலையான வளர்ச்சியும் ஒற்றுமையும் பொருளாதார முன்னேற்றமும் கல்வித் தரமும் குடும்ப பிணைப்பும் – இவை அனைத்தும் மனநலத்துடன் ஆழமாக பிணைந்திருக்கின்றன. ஆனால், நீண்ட காலமாக உலக மக்கள் மனநல பிரச்சினைகளை புறக்கணித்து வந்தனர். இதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 10ஆம் திகதி “உலக மனநல தினம் (World Mental Health Day)” அனுஷ்டிக்கப்படுகிறது.

இது, World Federation for Mental Health (WFMH) என்ற அமைப்பினால் 1992ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. அதன் பின்பு, உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இதனை பரவலாக்கின. இன்று உலகெங்கும் 150க்கும் மேற்பட்ட நாடுகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மையங்கள், அரசு மற்றும் சமூக அமைப்புகள் இந்நாளை மனநல விழிப்புணர்வுக்கான தளமாகக் கொண்டாடுகின்றன.

மனநலத்தின் உளவியல் (Psychological Significance)

மனநலத்தை உளவியல் (Psychology) அடிப்படையில் புரிந்துகொள்வது அவசியம். மனநலம் என்பது வெறும் மனநோய் இல்லாமையை மட்டும் குறிக்கவில்லை. அது ஒருவரின் அமைதி, சிந்தனை தெளிவு, உணர்ச்சி கட்டுப்பாடு, சமூக உறவுகளை பராமரிக்கும் திறன், சவால்களை எதிர்கொள்ளும் வலிமை ஆகிய அனைத்தையும் உள்ளடக்குகிறது.

Sigmund Freud தனது உளவியல் கோட்பாட்டில், மனம் மூன்று அடுக்குகளால் ஆனது. Id, Ego, Superego. இவற்றின் சமநிலையே மனநலத்தை தீர்மானிக்கிறது.

Carl Rogers “Person-Centered Therapy” மூலம் மனிதர்களின் உள்ளார்ந்த திறன்களை வளர்க்கும் சூழல் மனநலத்தை உறுதி செய்கிறது என்றார்.

Aaron Beck உருவாக்கிய Cognitive Behavioral Therapy (CBT), மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை குறைக்கும் முக்கிய சிகிச்சை முறையாக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் உளவியல் துறையில் மனநலத்தின் முக்கியத்துவம் சிகிச்சை மட்டுமல்ல, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் அறிவியல் என்பதும் தெளிவாகிறது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) வழங்கிய தரவுகளின்படி, உலக மக்கள் தொகையில் சுமார் 1 பில்லியன் பேர் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மனச்சோர்வு (Depression) மற்றும் பதட்டக் கோளாறு (Anxiety Disorders) அதிகம் காணப்படுகிறது.

ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்கிறார் என்பதே WHOவின் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம்.

கொவிட்-19 பேரழிவுக்குப் பின், மனநல பிரச்சினைகள் 25% வரை அதிகரித்துள்ளன.

குறிப்பாக, இளம் வயதினரின் தற்கொலை விகிதம் உலகின் பல நாடுகளில் கவலைக்குரிய அளவில் உயர்ந்துள்ளது.

நமது நாட்டைப் பொருத்தமட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்கொலைகளில் 50% மன நோய்களால் ஏற்படுத்துவதாக தெரிய வருகிறது. உலகளாவிய ரீதியிலும் பெரும்பாலான இளைஞர்கள் மனச்சோர்வு எனப்படும் பாரியமான நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான பிரதான காரணங்களாக தொலைபேசி அடிமை மற்றும் இணைய அடிமைத்தனம், போதை அடிமை காணப்படுகின்றன.

இதனால், மனநல பிரச்சினைகள் ஒரு உலகளாவிய சவால் எனக் கருதப்படுகின்றன. அதே சமயம், மனநல சிகிச்சைக்கு செலவிடப்படும் நிதி உலகளவில் மருத்துவ செலவினங்களில் 2%க்கும் குறைவுதான். இது மிகப்பெரிய சமநிலையின்மையை காட்டுகிறது.

இலங்கையில் மனநலத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் கடந்த இருபது ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து வந்தாலும், இன்னும் பல சவால்கள் உள்ளன.

சமூகக் களங்கம் ஸ்ரிக்மா (Stigma): மனநோயாளிகளைக் குறைத்து மதிக்கும் பார்வை இன்னும் நீங்கவில்லை.

போர் மற்றும் இயற்கை பேரழிவுகள்: உள்நாட்டுப் போர், 2004 சுனாமி, கொவிட் தொற்று மற்றும் அண்மைக்கால பொருளாதார நெருக்கடி ஆகியவை பல ஆயிரக்கணக்கான மக்களின் மனநலத்தை பாதித்துள்ளன.

சிறுவர் மற்றும் இளைஞர்கள்: கல்விச் சுமை, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, சமூக அழுத்தங்கள், போதைப்பொருள் அடிமை காரணமாக இளைஞர்களிடையே மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்துள்ளன.

சுகாதார வசதிகள்: இலங்கையில் 10 இலட்ச மக்களுக்கு சுமார் 0.3 %மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். WHO பரிந்துரைத்த அளவுக்கு இது மிகக் குறைவு. ஆனால், நேர்மறை மாற்றங்களும் உள்ளன.

இலங்கையில் National Mental Health Policy (2005–2015, தொடர்ந்து 2016–2025) நடைமுறையில் உள்ளது.

பல்வேறு பல்கலைக்கழகங்கள் உளவியல் படிப்புகளை வழங்குகின்றன.

சமூக மட்டத்தில் NGOகளும் Red Cross போன்ற அமைப்புகளும் மனநல விழிப்புணர்வை வளர்த்துக்கொண்டிருக்கின்றன.

ஆய்வுகள் மற்றும் தரவுகள் (Research & Statistics)

மனநல பிரச்சினைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Lancet Psychiatry (2021) வெளியிட்ட ஆய்வின் படி, மனச்சோர்வு மற்றும் பதட்டம் உலகளவில் பெண்களிடம் ஆண்களை விட அதிகமாக உள்ளது.

Sri Lanka Journal of Psychiatry யில் வெளியான கட்டுரைகள், போருக்குப் பின் வடக்கிலும் கிழக்கிலும் PTSD (Post-Traumatic Stress Disorder) விகிதம் மிக உயர்ந்தது என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

University of Colombo மேற்கொண்ட ஆராய்ச்சியில், இலங்கை மாணவர்களில் 20% பேர் மனநல சவால்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது.

இந்த தரவுகள், மனநலம் என்பது தனிநபர் பிரச்சினை அல்ல; சமூக, பொருளாதார, கலாச்சார சவால் என்பதைக் காட்டுகின்றன.

 சமூக விளைவுகள் (Social Impact)

மனநல குறைபாடு ஏற்படுத்தும் சமூக விளைவுகள் மிகப் பரவலானவை:

1. குடும்ப உறவுகள் – மன அழுத்தம், வன்முறை, புரிதல் பற்றாக்குறை காரணமாக குடும்பங்கள் சிதறுகின்றன.

2. பொருளாதாரம் – உலகளவில் மனநல பிரச்சினைகளால் ஆண்டுதோறும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் உற்பத்தித் திறன் இழப்பாகும்.

3. சமூக வன்முறை – மன அழுத்தம் மற்றும் போதைப்பழக்கம் சமூக குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கின்றன.

4. இளைஞர் எதிர்காலம் – கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின்தங்குவதை மனநல குறைபாடுகள் அதிகரிக்கின்றன. 

படைப்பாற்றல் மற்றும் விழிப்புணர்வு (Creativity & Awareness)

மனநலத்தை மேம்படுத்துவதற்கான படைப்பாற்றல் முயற்சிகள் மிகவும் முக்கியம்.

கலை மற்றும் இசை சிகிச்சை (Art & Music Therapy) மன அழுத்தத்தை குறைத்து, உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவுகிறது.

சமூக நாடகங்கள்,வீதி நாடகங்கள், குறும்படங்கள், கவிதைகள் - பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாற்றல் முயற்சிகளாக் காணப்படுகின்றது. 

சமூக ஊடகங்கள் – இன்றைய தலைமுறைக்கு மனநல செய்திகள், சுய பராமரிப்பு குறிப்புகள், ஆன்லைன் ஆலோசனைகள் பரவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சேர்க்கை நம் முன்னோர்கள் கூட மனநலத்தை மேம்படுத்துவதில் பங்களிக்கின்றவையும் குறிப்பிடத்தக்கது. 

தீர்வுகள் மற்றும் முன்னேற்ற வழிகள்

மனநல பிரச்சினைகளை சமாளிக்க தனிநபர், குடும்பம், சமூகம், அரசு, உலகளாவிய நிலை என அனைத்திலும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை.

1. விழிப்புணர்வு – மனநோய்கள் குறித்து சமூகத்தில் உள்ள தவறான நம்பிக்கைகளை முறியடிக்க வேண்டும். இதற்கான உலர் கல்வி மற்றும் கழிவுபடுத்தல்கள் அவசியமாகின்றன. 

2. ஆலோசனை சேவைகள் – பள்ளிகள், கல்லூரிகள், வேலைத்தளங்களில் மனநல ஆலோசகர்கள் இருக்க வேண்டும். எங்க கருத்தரங்குகள் விழிப்புணர்வு செயற்பாடுகளை நடாத்தல் வேண்டும். 

3. சட்ட, கொள்கைகள் – மனநல பாதுகாப்பு சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

4. சமூக ஆதரவு – குடும்ப பாசம், நண்பர்களின் புரிதல், சமூகத்தின் ஒத்துழைப்பு – இவை மனநல சிகிச்சையை எளிதாக்கும்.

5. ஆராய்ச்சி – இலங்கையிலும் உலகளாவிய அளவிலும் மனநல ஆராய்ச்சிகளுக்கான நிதி மற்றும் கல்வி வளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

உலக மனநல தினம் என்பது ஒரு நாளைய விழிப்புணர்வு மட்டுமல்ல. அது, ஒவ்வொரு நாளும் நம்மை நாமே பராமரிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் ஒரு உலகளாவிய இயக்கம். மனநலத்தை புறக்கணிப்பது மனித முன்னேற்றத்தையே புறக்கணிப்பதாகும்.

“உடல் நலம் போல் மன நலமும் – வாழ்வின் அடிப்படை உரிமை” என்பதைக் கொண்டே நாம் சிந்திக்க வேண்டும்.

இலங்கை முதல் உலகம் வரை, ஒவ்வொரு சமுதாயமும் மனநலத்தை முன்னுரிமைப்படுத்தும் நாள் தூரத்தில் இல்லை. மனித குலம் மன அமைதியுடன் வாழும் உலகம் தான் உண்மையான முன்னேற்றத்தின் அடையாளம்.

- நடராசா கோபிராம்,  

உளவியல் சிறப்புக் கலை மாணவன் 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

https://www.virakesari.lk/article/227388

'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும்

2 months 1 week ago

நடிகர் அஜித்தை பாதித்துள்ள 'தூக்கமின்மை' பிரச்னை உங்களுக்கும் இருக்கிறதா? அறிகுறிகளும் தீர்வுகளும்

நடிகர் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங், தூக்கமின்மை, தூக்கமின்மை பிரச்னை

பட மூலாதாரம், X/Ajithkumar Racing

கட்டுரை தகவல்

  • மோகன்

  • பிபிசி தமிழ்

  • 8 அக்டோபர் 2025, 02:34 GMT

    புதுப்பிக்கப்பட்டது 8 அக்டோபர் 2025, 02:44 GMT

தூக்கம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தெரிவித்த கருத்து சமூக ஊடகங்களில் விவாதப்பொருளானது.

நடிகர் அஜித்குமார் தற்போது 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற பெயரில் கார் பந்தயப் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார்.

சமீபத்தில் இந்தியா டூடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தனக்கு தூக்கமின்மை பிரச்னை இருப்பதாகத் தெரிவித்தார்.

தன்னால் அதிகபட்சமாக 4 மணி நேரம் தான் தொடர்ந்து தூங்க முடிவதாக தெரிவித்த அஜித் குமார், "எனக்கு திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்ப்பதற்கு நேரம் இல்லை. நான் விமானத்தில் தான் உறங்குகிறேன். எனக்கு தூக்கம் சார்ந்த பிரச்னை இருக்கிறது. தூங்குவது எனக்கு கடினமாக உள்ளது." என்றும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

தூக்கம் வருவது எப்படி?

இதுகுறித்து ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநரான குழந்தைசாமி பேசுகையில் "இது இன்சோம்னியா (Insomnia) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதானது, இதனை சிகிச்சைகள் மூலம் சரி செய்துவிட முடியும். ஆனால் தூக்கமின்மை என்பது பெரும்பாலும் நமது செயல்களினால் உருவாவதே." என்றார்.

தூக்கப் பற்றாக்குறை அல்லது தூக்கமின்மை என்பது நீண்ட கால நோக்கில் ஆயுட்காலத்தை பாதிக்கும் என்கிறார் குழந்தைசாமி.

நம் உடல் சார்ந்த பல விஷயங்களை உயிரியல் கடிகாரம்தான் (circadian rhythm) தீர்மானிக்கிறது என்கிறார் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் புல்மனாலஜியின் இயக்குநரும் மூத்த நுரையீரல் நோய் மருத்துவருமான கௌசிக் முத்துராஜா.

இதுகுறித்து விவரித்த அவர், "நம் கண்கள் வழியாக ஒளி மூளைக்குச் செல்கிறது. வெளிச்சமாக இருந்தால் நமது மூளை இது விழித்திருக்க வேண்டிய நேரம் என உணர்ந்து கொள்ளும். அதேவேளையில் இருட்டாக இருந்தால் இது தூங்குவதற்கான நேரம் என உணர்ந்து கொண்டு மெலடோனின் என்கிற ஹார்மோனை சுரக்கச் செய்யும். இந்த ஹார்மோன் தான் தூக்கத்தை ஏற்படுத்துகிறது." என்றார்.

"59% இந்தியர்களுக்கு தூக்கமின்மை பிரச்னை"

நடிகர் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங், தூக்கமின்மை, தூக்கமின்மை பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 59% இந்தியர்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையற்ற தூக்கத்தை பெறுகின்றனர்.

2025-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 59% இந்தியர்களுக்கு 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தடையில்லாத, நல்ல தூக்கம் கிடைப்பதாகத் தெரியவந்துள்ளது. லோகல்சர்கிள்ஸ் என்கிற நிறுவனம் இந்தியா முழுவதும் 348 மாவட்டங்களில் சுமார் 43,000 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

தூக்கப் பற்றாக்குறையை போக்க பவர் நேப்பிங் (குறுகிய நேர தூக்கம்), வார இறுதி நாட்களில் காலை தாமதமாக எழுந்திருப்பது, அல்லது மதியம் தூங்குவது போன்றவற்றை பலரும் கையாள்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

குறைவான தூக்கத்தால் பாதிக்கப்பட்ட 38% இந்தியர்கள் விடுமுறை நாட்கள் அல்லது வார இறுதி நாட்களில் அதனை சரி செய்து கொள்ள முடிவதில்லை எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும். அதில் 6 மணி நேரமாவது இடையூறு இல்லாத தூக்கம் இருக்க வேண்டும். அது தான் ஆரோக்கியமானது. மனிதன் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிட வேண்டும். அது ஒரே நாளில் தான் இருக்க வேண்டும். தவணை முறையில் வார இறுதி நாட்கள் அல்லது விடுமுறை நாட்களில் கூடுதலாக தூங்குவது என்பது இதற்கு தீர்வாகாது." என்கிறார் குழந்தைசாமி.

தூக்கமின்மைக்கான அறிகுறிகள்

நடிகர் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங், தூக்கமின்மை, தூக்கமின்மை பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு வயது வந்த நபர் சராசரியாக 8 மணி நேரம் தூங்க வேண்டும்

அமெரிக்க அரசின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.ஹெச்) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவை இருந்தால் தூக்கப் பற்றாக்குறை என்று வகைப்படுத்துகிறது.

அவை

  • போதிய தூக்கம் கிடைக்காமல் இருப்பது

  • தவறான நேரத்தில் தூங்கச் செல்வது

  • நன்றாக தூங்காதிருப்பது அல்லது உடலுக்குத் தேவையான தூக்கத்தின் அனைத்து கட்டங்களையும் அடையாமல் இருப்பது

  • ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் தூக்கம் வருவது

  • போதிய நேரம் கிடைத்தாலும் ஆழ்ந்த தூக்கம் வராதிருப்பபது

தூக்கமின்மையின் பாதிப்பு குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்கள் இடையே வேறுபடுகிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள் கவனம் செலுத்துவதில் பிரச்னைகளை எதிர்கொள்வார்கள் என என்.ஐ.ஹெச். கூறுகிறது.

"தூக்கம் என்பது நான்கு கட்டங்களாக நடக்கும். தூக்கத்தின் இந்த ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து செல்ல முடியாமல் நீண்ட காலமாக இருப்பது இதய நோய், எடை அதிகரிப்பு, டைப்-2 நீரிழிவு போன்ற பாதிப்புகளுடன் தொடர்புடையது," என லோகல் சர்க்கிள்ஸ் ஆய்வு கூறுகிறது.

தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள்

என்.ஐ.ஹெச்-ன்படி தூக்கத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?

  • வயது

  • தூங்கும் முறை

  • வளர்சிதை மாற்றம்

  • இரவு உணவு எடுத்துக் கொள்ளும் நேரம்

  • படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக திரை(கணினி, செல்போன்) பயன்பாடு

  • மது அருந்துவது

தூக்கமின்மையுடன் தொடர்புடைய நோய்களையும் என்.ஐ.ஹெச் பட்டியலிட்டுள்ளது. அவை

  • இதய நோய்

  • சிறுநீரக நோய்

  • உயர் ரத்த அழுத்தம்

  • நீரிழிவு நோய்

  • பக்கவாதம்

  • உடல் பருமன்

  • மன அழுத்தம்

உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?

நடிகர் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங், தூக்கமின்மை, தூக்கமின்மை பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் கடந்த 2012-ஆம் ஆண்டு தூக்கம் சார்ந்த சிக்கல்களை வளர்ந்து வரும் பொது சுகாதார பிரச்னை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 50 வயதுக்கு அதிகமான 43,935 பேர் கலந்து கொண்டனர். அதில் 16.6% பேர் தீவிரமான இரவு நேர தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

அதில், பெண்கள் மற்றும் முதியவர்களிடையே தூக்கமின்மை பிரச்னை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வயது வந்தவர்கள் அதிக அளவில் தூக்கமின்மை பிரச்னைகளை எதிர்கொள்வதாக அந்த ஆய்வு கூறுகிறது.

உடல் செயல்பாடு குறைவது, மன அழுத்தம் மற்றும் கவலை உணர்வு வலுவாக இருப்பதும் தூக்கமின்மைக்கு காரணிகளாகக் கூறப்பட்டுள்ளது.

தூக்கமின்மை யாரை, எவ்வாறு பாதிக்கும்?

நடிகர் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங், தூக்கமின்மை, தூக்கமின்மை பிரச்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தூக்கமின்மையால் குழந்தைகளிடம் ஞாபக மறதி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படுகிறது.

பெரும்பாலும் ஓட்டுநர்கள் அல்லது பயணத்தில் இருப்பவர்களுக்குத் தான் இந்த பாதிப்பு அதிகம் என்று குறிப்பிடுகிறார் குழந்தைசாமி.

"தூக்கம் இல்லையென்றால் மூளை சிறிது நேரம் தானாக செயலிழந்துவிடும். அது சில வினாடிகள் தான் என்றாலும் அதன் விளைவு மோசமானதாக இருக்கும். இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கும் தூக்கமின்மை ஒரு முதன்மை காரணியாக உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

வெவ்வேறு வயதினரை தூக்கமின்மை எவ்வாறு பாதிக்கிறது என்பது மருத்துவர் கௌசிக் முத்துராஜா பட்டியலிடுகிறார்.

குழந்தைகளிடையே ஏற்படும் பாதிப்புகள்?

  • கற்றல் குறைபாடு

  • ஞாபக மறதி

  • கல்வியில் ஈடுபாடு குறைவது

  • நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது

  • வளர்ச்சி ஹார்மோன் பாதிப்பு

நடுத்தர வயதினரிடையே ஏற்படும் பாதிப்புகள்?

  • மன அழுத்தம்

  • மனச்சோர்வு

  • ரத்த அழுத்தம்

  • சிந்திக்கும் திறன் குறைவது

  • வாகனம் ஓட்டுவதை சிரமமாக்குவது

முதியவர்களிடையே ஏற்படும் பாதிப்புகள்?

  • ஞாபக மறதி அதிகரிக்கும்

  • இரவு நேர தடுமாற்றங்கள் ஏற்படும்

  • இதயம் மற்றும் நரம்பியல் நோய் தாக்கும் சாத்தியம் அதிகரிக்கும்

தூக்கமின்மை பிரச்னைகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

புகைப் பழக்கத்தை கைவிடுவது, மாலை 5 மணிக்கு மேல் தேநீர், காபி பருகுவதை தவிர்ப்பது மற்றும் தூங்குவதற்கு குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பாவது கணினி/செல்போன் திரைகளைப் பார்ப்பதை தவிர்ப்பது போன்ற பரிந்துரைகளை முன்வைக்கிறார் மருத்துவர் குழந்தைசாமி.

தூக்க ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான சில வழிகளை முன்வைக்கிறார் கௌசிக் முத்துராஜா.

  • தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, எழ வேண்டும், வார இறுதி நாட்களிலும் அதை கடைபிடிக்க வேண்டும்

  • தூக்கம் வந்தால் மட்டுமே படுக்கைக்குச் செல்ல வேண்டும்

  • தூங்க செல்லும் முன்பாக 10 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்

  • காலை, மதிய வேளைகளில் தூங்கக்கூடாது

  • 20 - 30 நிமிடங்கள் பவர் நாப் (குறுகிய நேர தூக்கம்) எடுக்கலாம்.

  • உடற்பயிற்சி தூக்கத்திற்கு உதவும். ஆனால் தூங்குவதற்கு 2, 3 மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி கூடாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2knejj9p18o

கண்ணாடி பார்க்கும் போதே கழுத்து மூலம் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்வது எப்படி?

2 months 2 weeks ago

கழுத்து காட்டும் ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தடிமனான கழுத்து உடல்நலப் பிரச்னைக்கான அறிகுறியாக இருக்கலாம்.

கட்டுரை தகவல்

  • சந்தன் குமார் ஜஜ்வாரே

  • பிபிசி செய்தியாளர்

  • 29 செப்டெம்பர் 2025, 04:10 GMT

மக்கள் பெரும்பாலும் உடல் பருமனை அதிக எடை அல்லது தொப்பை கொழுப்புடன் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். இதுபோன்ற உடல் பருமனால் பெரும்பாலானோர் பீதியடைந்து எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி உணர்த்தும் உடல் உறுப்புகளில் கழுத்தும் முக்கியமானதாகும். ஆனால் மக்கள் பொதுவாக இதில் கவனம் செலுத்துவதில்லை.

கழுத்துப் பகுதி முகத்திற்கு கீழ் இருப்பதாலும் எளிதில் பார்க்கக் கூடிய வகையில் இருப்பதாலும், கழுத்தில் கறை தென்பட்டாலோ, நிறம் மாறினாலோ பொரும்பாலானோர் அதை சரி செய்யவே முயற்சிக்கின்றனர்.

ஆனால் கழுத்துப்பகுதி வழக்கத்தை விட தடிமனாகவோ, ஒல்லியாகவோ இருந்தால் அது எதை உணர்த்துகிறது? இது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?

அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும் கூட..

கழுத்து காட்டும் ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்ரிக்க நாடுகளில், கழுத்தை மெல்லியதாக வைத்துக்கொள்ள வளையல்களை கழுத்தில் அணிந்துகொள்வார்கள்.

மெல்லிய கழுத்து என்பது எப்போதும் அழகுடன் தொடர்புடைய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதை மெருகேற்றிக் காண்பிக்க பலரும் ஆபரணங்களை அணிவதுண்டு.

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்களின் கழுத்தை அழகாக காண்பித்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

ஒரு சில ஆப்ரிக்க நாடுகளில், கழுத்தை மெல்லியதாக வைத்துக்கொள்ள வளையங்களை கழுத்தில் அணிந்துகொள்வார்கள். இதனால் கழுத்து மெல்லியதாகவும் நீளமாகவும் இருக்கும் என நம்புகின்றனர்.

கழுத்தை வசீகரமாக மாற்ற மக்கள் உடற்பயிற்சி மையங்களை நாடி பிரத்யேக உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.

உடற்பயிற்சி செய்வதால் உடல் மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் மாற்றம் இயல்பானதுதான். ஆனால் நம் உடலை விட கழுத்துப்பகுதி மெல்லியதாகவோ, தடிமனாகவோ இருந்தால், அது பல்வேறு நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

தடிமனான கழுத்து எதை உணர்த்துகிறது?

கழுத்து காட்டும் ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்களின் கழுத்துச் சுற்றளவு 33 முதல் 35 செ.மீ ஆக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்லியில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர் டாக்டர் சிவ் குமார் சரின் தனது 'On Your Body' என்ற புத்தகத்தில் இதுகுறித்து பேசியுள்ளார்.

"பொதுவாக பெண்களின் கழுத்துச் சுற்றளவு 33 முதல் 35 செ.மீ ஆகவும், ஆண்களுக்கு 37 முதல் 40 செ.மீ ஆகவும் இருக்க வேண்டும். இதைவிட கூடுதலாக இருந்தால் நோய் அறிகுறியாக இருக்கலாம்" என பிபிசியிடம் கூறினார்.

கழுத்தின் தடிமனை வைத்து நோய்களை கண்டறிவது தொடர்பாக நிறைய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரைப்பை குடலியல் இணை பேராசிரியர் டாக்டர் ஷாலிமர் இதுகுறித்து பேசுகையில், "கழுத்துப் பகுதியில் கொழுப்பு சற்று அதிகமாக இருந்தாலோ அல்லது கழுத்து குட்டையாக இருந்தாலோ பெரும்பாலும் கல்லீரலில் கொழுப்பு அல்லது உடல்பருமன் போன்ற பிரச்னைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். சில சமயங்களில் இவர்கள் அதிகமாக குறட்டை விடுவார்கள்" என்றார்.

ஒருவரின் கழுத்து வழக்கத்தை விட தடிமனாக இருந்தால் அது வளர்சிதை மாற்ற நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் மூத்த ஆலோசகராகரான டாக்டர் மோஹ்சிம் வாலி கூறுகையில், "தடிமனான கழுத்து இருக்கும் நபர்களுக்கு அதிக கொழுப்பு, கல்லீரல் கொழுப்பு, நீரிழிவு நோய், அதிக ரத்தக்கொதிப்பு இருக்கலாம். இதற்கு தனி பரிசோதனைகள் தேவை" என்கிறார்.

தடிமனான கழுத்து உடல் பருமனுக்கான அறிகுறியாகவும் இருக்கக்கூடும்.

கழுத்து காட்டும் ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தடிமனான கழுத்து உடல் பருமனுக்கான அறிகுறியாகவும் இருக்கக் கூடும்.

"ஒரு பெண்ணின் கருப்பை வாய் தடிமனாக இருந்தால், அது பாலிசிஸ்டிக் கருப்பை (polycystic ovary) நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். கருப்பையில் கட்டிகள் உண்டாகலாம். இது தீவிர பிரச்னைக்கு வழிவகுக்கும். சீரற்ற மாதவிடாய் மற்றும் கருவுறுதலில் பிரச்னை போன்றவையும் இதில் அடங்கும்" என மோஹ்சிம் வாலி கூறுகிறார்.

சில நோய்களால் கழுத்து தடிமனாக இருப்பவர்களுக்கு கழுத்தின் பின்புறம் கருப்பாக மாறலாம். இந்தக் கருமையான கழுத்து என்பது சருமப் பிரச்னையை தாண்டி வேறு ஏதேனும் மருத்துவ பிரச்னைக்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

புனேவில் உள்ள டி.ஒய். மருத்துவக் கல்லூரி பேராசிரியர் அமிதவ் பானர்ஜி இது குறித்து பேசுகையில், "ஒருவரின் கழுத்து வழக்கத்தை விட தடிமனாக இருந்தால், அவருக்கு உடல்நலப் பிரச்னை இருப்பதை குறிக்கும். குறிப்பாக அவர் உடல் பருமனை நோக்கிச் செல்கிறார் என அர்த்தம். உடல் பருமன் என்பது நிறைய நோய்களை உள்ளடக்கியுள்ளது." என்றார்.

"ஒரு பொதுவான கண்ணோட்டத்தில் இரண்டு பேரின் உடல் அமைப்பு ஒரே மாதிரியாகத் தெரிந்தால், அதாவது, எடை அடிப்படையில் இருவரும் ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும், அவர்களில் ஒருவரின் கழுத்து தடிமனாக இருந்தால், அவரது உடலில் அதிக கொழுப்பு உள்ளது என்றும், அவர் உடல் பருமனை நோக்கி நகர்கிறார் என்றும் அர்த்தம்." என்கிறார் அமிதவ் பானர்ஜி.

மெல்லிய கழுத்து உணர்த்துவது என்ன?

கழுத்து காட்டும் ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெல்லிய கழுத்து தைராய்டு தொடர்பான நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

மெல்லிய கழுத்து பொதுவாக அழகுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால் இது தைராய்டு தொடர்பான நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

மெல்லிய கழுத்து உடையவர்களுக்கு பெரும்பாலும் கூடுதல் முதுகெலும்புகள் இருக்கும்.

முதுகு தண்டுவடத்தில் பொதுவாக ஒருவருக்கு 7 முதுகெலும்புகள் இருக்கும். சிலருக்கு இது 8 ஆக இருக்கும்.

அதாவது ஒருவருக்கு கையில் 5 விரல்களுக்கு பதில் 6 விரல்கள் இருக்கிறதல்லவா. அதுபோலதான் இதுவும்.

முதுகு தண்டுவடத்திற்கு முதுகெலும்புதான் முக்கியமாக உள்ளது. முதுகு தண்டுவடம் மற்றும் நரம்புகளுக்கு இதுதான் பாதுகாப்பு அளிக்கிறது.

"மெல்லிய கழுத்து பொதுவாக எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாது. ஆனால் சில சூழல்களில் கூடுதலாக ஒரு முதுகெலும்பு தென்படும் போது (8 ஆக இருக்கும்போது) கைகளில் உணர்ச்சியற்ற தன்மை போன்ற பிரச்னைகள் இருக்கும்" என மருத்துவர் வாலி கூறுகிறார்.

கழுத்து காட்டும் ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரத்தசோகையால் கூட சிலரின் கழுத்து வழக்கத்தை விட மெல்லியதாக தென்படலாம்.

"சில சமயங்களில் ரத்த சோகையால் கூட (anemia) சிலரின் கழுத்து வழக்கத்தை விட மெல்லியதாக தென்படலாம். இவர்களுக்கு இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் அளிக்கப்படுகின்றன. சில சமயங்களில் ரத்தத்தை மாற்ற வேண்டிய தேவையும் (blood transfusion) ஏற்படுகிறது" என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் அடேரியா நிகர்சந்திரா.

சில சமயங்களில் இது மரபணு ரீதியாகவும் இருக்கலாம் என்றார் அவர். தந்தைக்கு நீளமான மற்றும் மெல்லிய கழுத்து இருந்தால், மகனுக்கும் அதேபோல இருக்கலாம்.

பெரும்பாலும் மெல்லிய கழுத்து உடையவர்களுக்கு பிரத்யேக பிசியோதெரபி சிகிச்சை வழங்க ஆலோசிக்கப்படுகிறது. அவர்கள் உடலில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவு மருந்துகள் மூலமாகவோ, மற்ற வழிகளிலோ சமன் செய்யப்படும். இதன்மூலம் அவர்களின் கழுத்து தசைகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வழக்கத்தை விட தனது கழுத்து தடிமனாக இருப்பதைப் போல ஒருவர் கருதினால் உடனடியாக அவர்கள் தங்களின் உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பொதுவாக குழந்தைப்பேறுக்குப் பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். அதனால் அவர்கள் தங்களின் உணவு முறையில் தனி கவனம் செலுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

உங்களின் உடல் அல்லது ஆரோக்கியம் ஆபத்தை நோக்கி செல்கிறதா என்பது தெரியவேண்டும் என்றால் எப்போதெல்லாம் கண்ணாடியில் முகம் பார்க்கிறீர்களோ, அப்போது உங்களின் கழுத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gw74wlew7o

'தோள் மூட்டு வலி – ஒரு கடுமையான சவால்' / 'Shoulder Joint Pain – A Serious Challenge'

2 months 2 weeks ago

'தோள் மூட்டு வலி – ஒரு கடுமையான சவால்'

மூட்டு வலிகளில் முக்கியமானது தோள் வலி. எந்த அடியும் படாமலேயே தோளில் வலி வருவது பலருக்கு புதிராகத் தோன்றும். பொதுவாக, இது 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகம் காணப்படுகிறது.

அறிகுறிகள்:

கையை உயர்த்தும் போது கடுமையான வலி

ஒரு பக்கமாகப் படுத்தால் வலி அதிகரிக்கும்

இரவில் கை முழுவதும் குடைச்சல் / எரிச்சல்

கையை அசைக்காமல் வைத்துவிட்டு மீண்டும் அசைத்தால் வலி

கையை முற்றிலும் கழற்றி விட வேண்டும் எனத் தோன்றும் அளவுக்கு தாங்க முடியாத வலி

காரணங்கள்:

தோள் மூட்டை இணைக்கும் தசைகள், முதுகு மற்றும் கழுத்திலிருந்து வந்து குகை போன்ற பகுதியில் இணைகின்றன. அங்கே இரத்த ஓட்டம் குறைந்தால் வலி ஏற்படும்.

அதிக உடல் உழைப்பு அல்லது அதிக எடை தூக்கும் பழக்கம் காரணமாக தசைகள் பிசைந்து வலிக்கலாம்.

விபத்து, விளையாட்டு காயம், அடிபடுதல் ஆகியவற்றால் மூட்டுச் சவ்வு கிழிந்து வலி ஏற்படும்.

தொற்று அல்லது அழற்சி ஏற்பட்டாலும் தோளில் வலி வரும்.

கணினி, தையல் போன்ற வேலைகளில் கழுத்து நீண்ட நேரம் ஒரே நிலையில் இருந்தாலும் தோள் வலி ஏற்படும்.

நீண்ட தூரம் வாகனம் ஓட்டுவதால் இணைப்பு தசைகள் பலவீனமடையலாம்.

மூட்டழற்சி நோய்கள், மூட்டு நழுவுதல், எலும்பு தேய்வு, Bursa எனும் குஷன் பாதிப்பு, தசைநாண்களில் கால்சியம் படிவு போன்றவை கூட காரணமாகும்.

பித்தப்பை பிரச்சினைகளால் வலது தோளில் வலி தோன்றலாம்.

கழுத்து எலும்பில் சிதைவு ஏற்பட்டால் நரம்புகள் அழுத்தப்பட்டு தோளில் வலி வரும்.

மாரடைப்பு வந்தால் 'இடது தோளில்' வலி தோன்றும்.

Rotator cuff தசைநாண்கள் பாதிக்கப்படுதல், நீரிழிவு கட்டுப்பாட்டின்மை ஆகிய காரணங்களால் Frozen Shoulder உருவாகி, தோளைச் சிறிதும் அசைக்க முடியாத நிலை வரும்.

என் அனுபவம்

துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறான ஒரு பிரச்சனையில் வலது தோளில் நானும் சிக்கியிருக்கிறேன். தற்போது மிகக் கடுமையான வலியால் தவிக்கிறேன். எனவே, இனிமேல் நான் ஏற்கனவே எழுதிய பதிவுகளைத் தவிர, புதிய பதிவுகளை எழுதுவதை மிகக் குறைக்கவோ, சில காலம் முற்றிலும் நிறுத்தவோ உள்ளேன். அடிப்படை தேவைக்கு அப்பாற்பட்டு, வலது கையால் வேகப்பந்து வீசுவது, பாரங்கள் தூக்குவது, அல்லது கையால் கூடுதல் வேலை செய்வதை தவிர்க்கிறேன். மருத்துவ சிகிச்சையை முறையாக மேற்கொண்டு, மருத்துவர் அறிவுரையின் படி என் வருங்கால நடவடிக்கைகளைத் தீர்மானிப்பேன்.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

'Shoulder Joint Pain – A Serious Challenge'

Among joint pains, shoulder pain is one of the most troubling. Often, pain appears without any direct injury or impact, which many find puzzling. It is especially common after the age of 40.

Symptoms:

Sharp pain when lifting the arm

Increased pain while lying on one side

Tingling or discomfort in the arm at night

Pain after keeping the arm still and then moving it again

Pain so severe that it feels like detaching the arm would bring relief

Causes:

Muscles connecting the shoulder joint extend from the neck and back into a socket. Reduced blood supply here leads to pain.

Overexertion or lifting heavy weights can strain the muscles.

Accidents, sports injuries, or falls may tear joint tissues.

Infections or inflammations in the joint.

Long hours in the same posture (computer work, tailoring) can cause shoulder pain.

Long-distance driving on rough roads can weaken supporting tendons.

Arthritis, joint dislocation, bone wear, bursitis (inflammation of the bursa), and calcium deposits in tendons may all cause pain.

Gallbladder problems can cause pain in the right shoulder.

Cervical spine issues can press nerves and cause pain in the shoulder.

Heart attacks often present with pain in the left shoulder.

Rotator cuff damage or uncontrolled diabetes can cause frozen shoulder, where movement becomes extremely painful and restricted.

My Experience

Unfortunately, I too am suffering severely from right shoulder pain. At present, the pain has become very difficult to manage. Therefore, apart from posts I have already written, I may reduce or even stop writing new posts for some time. I will also avoid activities like fast bowling, heavy lifting, or overuse of my right hand. I am undergoing proper medical treatment and will follow my doctor’s advice to decide on future contributions.

Thank you

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

துளி/DROP: 1860 ['தோள் மூட்டு வலி – ஒரு கடுமையான சவால்']

/ எனது அறிவார்ந்த தேடல்: 1278

https://www.facebook.com/groups/978753388866632/posts/31513216794993557/?

மனிதனுக்கு பய உணர்வையே அண்ட விடாத அரிதான நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா?

2 months 3 weeks ago

ஒரு மனிதனின் அகத்தை சித்தரிப்பது போன்ற ஒரு படம்

பட மூலாதாரம், Serenity Strull/ BBC

கட்டுரை தகவல்

  • ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி

  • 27 செப்டெம்பர் 2025, 04:07 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

பயம் என்பது உயிர் பிழைப்பதற்கான ஒரு பரிணாம வழியாகும். ஒரு சிலருக்கு ஒரு அரிய நோய் உள்ளது, அதனால் அவர்கள் எதற்கும் பயப்படுவதில்லை. பயம் இல்லாமல் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

விமானத்தில் இருந்து குதித்த பின்னர் எதையும் உணராமல் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். அட்ரினலின் உந்துதல் இல்லை, இதயத் துடிப்பு அதிகரிக்கவில்லை.

அட்ரீனல் சுரப்பிகள் அதிகப்படியான கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) ஐ உற்பத்தி செய்யும் ஒரு அரிய நோயான குஷிங்ஸ் நோய்க்குறி (Cushing's syndrome) காரணமாக ஏற்படும் பதற்றத்தைக் குறைக்க, தனது அட்ரீனல் சுரப்பிகளை அகற்றிக் கொண்ட பிரிட்டிஷ் நபரான ஜோர்டி செர்னிக்-இன் உண்மை நிலை இதுதான்.

அந்த சிகிச்சை, சற்று அதிகமாகவே பலனளித்தது. ஜோர்டிக்கு பதற்றம் குறைந்தது – ஆனால் ஏதோ சரியில்லை. 2012-ஆம் ஆண்டு டிஸ்னிலேண்டிற்குச் சென்றபோது, அவர் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரிக்குச் சென்றார், தனக்கு எந்தப் பயமும் இல்லை என்பதை உணர்ந்தார். அதைத் தொடர்ந்து அவர் ஒரு விமானத்திலிருந்து ஸ்கைடைவ் செய்தார், நியூகாஸ்டிலில் உள்ள டைன் பாலத்தில் இருந்து ஜிப்-வயர் சவாரி செய்தார், லண்டனில் உள்ள ஷார்ட் (Shard) கட்டிடத்தின் உச்சியில் இருந்து கயிற்றில் தொங்கி இறங்கினார் - இவையனைத்தையும் சிறிதளவு கூட இதயத் துடிப்பு கூடாமல் செய்தார்.

செர்னிக்-இன் அனுபவம் அரிதானது, ஆனால் தனித்துவமானது அல்ல. உர்பாக்-வைத்தே நோய் (Urbach-Wiethe disease - லிபாய்ட் புரதப் பற்றாக்குறை) எனப்படும் ஒரு மரபணு நிலை உள்ள எவருக்கும் இது பரிச்சயமாகத் தோன்றலாம். இது மிகவும் அரிய நோய்; இதுவரை சுமார் 400 பேர் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

எஸ்எம் என்று அறியப்பட்ட ஒரு பிரபலமான உர்பாக்-வைத்தே நோயாளி, 1980-களின் நடுப்பகுதியிலிருந்து அமெரிக்காவின் அயோவா பல்கலைக் கழகத்தில் அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். 2000-களின் முற்பகுதியில் ஜஸ்டின் ஃபைன்ஸ்டீன் என்ற முதுகலை மாணவர் அந்த ஆய்வுக் குழுவில் சேர்ந்த போது, எஸ்எம்-ஐ பயமுறுத்துவதற்கான வழிகளைத் தேடத் தொடங்கினார்.

"எங்களால் கண்டுபிடிக்க முடிந்த அனைத்து திகில் திரைப்படங்களையும் அவரிடம் காட்டினோம்," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார். இவர் இப்போது ஃப்ளோட் ரிசர்ச் கலெக்டிவ் நிறுவனத்தில் மருத்துவ நரம்பியல் உளவியலாளராக உள்ளார். இந்த நிறுவனம், வலி, மன அழுத்தம், பதற்றம் மற்றும் அது தொடர்பான நிலைமைகளுக்கான சிகிச்சையாக ஃப்ளோட்டேஷன்-குறைக்கப்பட்ட சுற்றுச்சூழல் தூண்டுதல் சிகிச்சையை (REST) ஊக்குவிக்கிறது.

விமானத்தில் ஒருவரின் கை முன்புற இருக்கையை இறுக்கமாக பற்றியிருக்கும் ஒரு புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உணரப்படும் வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு நமது எதிர்வினை, நம்முடைய தப்பிப்பிழைக்கும் உள்ளுணர்வின் ஒரு பகுதியாகும்.

ஆனாலும், 'பிளேயர் விட்ச் ப்ராஜெக்ட்', 'அரக்னோஃபோபியா', 'தி ஷைனிங்', அல்லது 'சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ்' போன்ற எந்தப் படமும் அவரிடம் பயத்தை உருவாக்கவில்லை. பேய் உலவுவதாக கூறப்படும் வேவர்லி ஹில்ஸ் சானடோரியத்தை சுற்றிப் பார்த்ததும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.

"நாங்கள் அவளைப் பாம்புகள் மற்றும் சிலந்திகள் போன்ற நிஜ வாழ்க்கை அச்சுறுத்தல்களுக்கு ஆட்படுத்தினோம். ஆனால் அவர் பயம் இல்லை என்பதை காட்டியது மட்டுமல்லாமல், அவற்றை அவர் நெருங்குவதைத் தவிர்க்க முடியவில்லை," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார். "அவர் அந்த உயிரினங்களைத் தொட்டுப் பழக வேண்டும் என்ற கிட்டத்தட்ட ஒரு அடக்க முடியாத ஆர்வத்தைக் கொண்டிருந்தார்."

உர்பாக்-வைத்தே நோய், குரோமோசோம் 1-இல் காணப்படும் இசிஎம்1 மரபணுவில் ஏற்படும் ஒற்றை பிறழ்வால் ஏற்படுகிறது. இசிஎம்1 என்பது புறச்செல் அணியைப் (extracellular matrix - ECM) பராமரிக்க மிகவும் அவசியமான பல புரதங்களில் ஒன்றாகும். புறச்செல் அணி என்பது செல்கள் மற்றும் திசுக்களை அவற்றின் இடத்தில் வைத்திருக்கும் ஒரு அமைப்பாகும். இந்த மரபணு சேதமடையும் போது, கால்சியம் மற்றும் கொலாஜன் உடலில் குவியத் தொடங்குகின்றன, இது செல் இறப்பை ஏற்படுத்துகிறது. இந்தச் செயல்பாட்டிற்கு குறிப்பாக எளிதில் பாதிக்கப்படும் ஒரு பகுதி, அமிக்டலா (Amygdala) ஆகும். இது மூளையின் பாதாம் வடிவப் பகுதியாகும், இது பயத்தை செயலாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக நீண்ட காலமாக நம்பப்படுகிறது.

எஸ்எம்-இன் விஷயத்தில், உர்பாக்-வைத்தே நோய் அவரது அமிக்டலாவை அழித்தபோது அவர் பயத்தை உணர்வது நின்று போனது.

"இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இது பயத்திற்கு மட்டுமே பொருந்துகிறது - மகிழ்ச்சி, கோபம் அல்லது சோகம் என மற்ற வகையான உணர்வுகளைச் வெளிப்படுத்தும் அவரது திறன் பெரும்பாலும் அப்படியே உள்ளது," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார்.

பயத்தின் வெவ்வேறு வகைகள்

இருப்பினும், நிலைமை இதைவிடச் சிக்கலானது. அமிக்டலா ஒரு குறிப்பிட்ட வகை பயத்தில் மற்ற வகைகளை விட அதிகப் பங்கு வகிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. எடுத்துக்காட்டாக, பய நிலையை எதிர்கொள்ள தயார்படுத்துவதற்கு (Fear conditioning) இது மிகவும் முக்கியமானது. எலிகளிடம் செய்யப்பட்ட சோதனைகள், சத்தம் கேட்டவுடன் மின்சார அதிர்ச்சியை அனுபவிக்கும் விலங்குகள், சத்தம் மட்டும் கேட்கும்போது "உறைந்து போகக் கற்றுக்கொள்கின்றன" என்பதைக் காட்டுகிறது.

ஆனால், அடுப்பிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட சூடான பாத்திரத்தைத் தொடக்கூடாது என்று எஸ்எம்-க்கு தெரிந்திருந்தாலும், அவர் பய நிலையை எதிர்கொள்ள தயாராக முடியவில்லை – அதாவது, வலி தொடர்புடைய தூண்டுதல்களை அவர் எதிர்கொள்ளும் போது, அவருக்கு இதயத் துடிப்பு அதிகரிப்பது அல்லது அட்ரினலின் பெருகுவது போன்ற அனுபவங்கள் ஏற்படுவதில்லை. எஸ்எம்-ஆல் மற்றவர்களின் பயந்த முகபாவனைகளை அடையாளம் காணவும் முடியவில்லை, இருப்பினும் அவரால் மகிழ்ச்சி மற்றும் சோகத்தின் வெளிப்பாடுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர் மிகவும் வெளிப்படையானவர் மற்றும் சமூகத்துடன் பழகக்கூடியவராக இருந்தாலும், அதே நேரத்தில் ஆபத்தான சூழ்நிலைகளை அடையாளம் கண்டு தவிர்ப்பதில் சிரமம் உள்ளது. இதன் விளைவாக, அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கத்தி மற்றும் துப்பாக்கி முனையில் மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளார்.

ஒரு சிறுவன் ஆட்டுக்குட்டியைப் பார்த்து அச்சப்படும் ஒரு புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாம் நெருங்கி அணுகப்படும்போது பெரும்பாலும் பதற்றத்தை உணர்கிறோம். ஆனால், சேதமடைந்த அமிக்டலா உடையவர்கள் இந்த உணர்வை அவ்வளவு தீவிரமாக உணருவதில்லை.

"அவர் தவிர்க்க வேண்டிய நபர்களை அணுக முனைகிறார், தனிநபர்களின் நம்பகத்தன்மையை உணர முடியாததால் அவர் பல சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளார்," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார்.

மற்றொரு ஆய்வில், எஸ்எம்-ஐ அணுகும்படி ஒரு அந்நியரை அணுகுமாறு ஆராய்ச்சியாளர்கள் கேட்டனர், அவருக்கு மிகவும் வசதியாக இருக்கும் தூரத்தை அவர் சுட்டிக் காட்டினார். அவர் தேர்ந்தெடுத்த தூரம் 0.34 மீ (1.1 அடி) ஆகும். இது மற்ற தன்னார்வலர்களின் விருப்பமான தூரத்தில் கிட்டத்தட்ட பாதியாகும். இது, தனது தனிப்பட்ட இடைவெளியில் மக்கள் இருப்பது அவருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

"அந்தச் சூழ்நிலையில், எஸ்எம் மற்றும் அமிக்டலா சேதம் அடைந்த மற்ற நபர்கள் ஒப்பீட்டளவில் அறிமுகமில்லாத சோதனையாளருடன் முகம் ஒட்டி நிற்பார்கள். இதை அமிக்டலா சேதமடையாத ஆரோக்கியமானவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்." என்று அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் அலெக்சாண்டர் ஷாக்மேன் கூறுகிறார்.

இந்தக் கண்டுபிடிப்பு, நாம் சமூகத்தில் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதை ஒழுங்கமைப்பதில் அமிக்டலா ஒரு பங்கு வகிக்கலாம் என்று அறிவுறுத்துகிறது.

இருப்பினும், அமிக்டலாவைச் சாராமல் சில வகையான பயங்கள் ஏற்படுகின்றன. ஒரு பரிசோதனையில், ஃபைன்ஸ்டீனும் அவரது சகாக்களும் எஸ்எம்-ஐ கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கச் சொன்னார்கள். இது சிலருக்குப் பயம் மற்றும் மூச்சுத்திணறல் உணர்வைத் தூண்டுகிறது. விஞ்ஞானிகள் அவர் பயப்பட மாட்டார் என்று எதிர்பார்த்தனர், ஆனால் ஆச்சரியப்படும் விதமாக அவர் பதற்றமடைந்தார். அமிக்டலா சேதமடைந்த மேலும் இரண்டு நோயாளிகளும் இந்தப் பரிசோதனையின் போது தீவிர பயத்தை அனுபவித்தனர்.

"எஸ்எம்-இன் விஷயத்தில், அது அவருக்கு ஒரு முழுமையான பீதியைத் (Panic Attack) தூண்டியது," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார். "அது அவர் தனது வாழ்க்கையிலும் உணர்ந்த மிகவும் தீவிரமான பயம்."

இந்தக் கண்டுபிடிப்பு, பயத்தில் அமிக்டலாவின் பங்கு பற்றிய உண்மை தேடலைத் தூண்டியது. அச்சுறுத்தல் வெளிப்புறமாக இருக்கிறதா அல்லது உள்முகமாக இருக்கிறதா என்பதைப் பொறுத்து மூளையில் உண்மையில் இரண்டு வெவ்வேறு பயப் பாதைகள் உள்ளன என்று தெரியவந்துள்ளது.

விமானத்திலிருந்து இருவர் குதிக்கும் ஒரு காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நோயாளி எஸ்எம் தனது நிலையால் ஸ்கைடைவிங்கில் விமானத்திலிருந்து குதித்தபோது எந்தப் பயத்தையும் உணரவில்லை.

வெளிப்புற அச்சுறுத்தல்களைப் பொறுத்தவரை அமிக்டலா ஒரு இசைக்குழு நடத்துநர் (orchestra conductor) போலச் செயல்பட்டு, மூளை மற்றும் உடலின் மற்ற பாகங்களை ஒரு எதிர்வினையாற்றும்படி வழிநடத்துகிறது.

முதலில் இது பார்வை, வாசனை, சுவை மற்றும் கேட்டல் ஆகியவற்றைச் செயலாக்கும் மூளைப் பகுதிகளிலிருந்து தகவலைப் பெறுகிறது. நெருங்கும் ஒரு திருடன், பாம்பு அல்லது கரடி போன்ற அச்சுறுத்தல்களைக் கண்டறிந்தால், அமிக்டலா ஹைபோதலாமஸ் (Hypothalamus) பகுதிக்குச் செய்திகளை அனுப்புகிறது. ஹைபோதலாமஸ் பின்னர் பிட்யூட்டரி சுரப்பியுடன் (Pituitary gland) தொடர்பு கொள்கிறது. இது அட்ரீனல் சுரப்பிகளை ரத்த ஓட்டத்தில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் வெளியிடச் செய்கிறது.

"இது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும், மற்றும் வழக்கமான பயத்திற்கான எதிர்வினைகளான போராடு-அல்லது-தப்பிச் செல் (fight-or-flight) போன்ற அறிகுறிகளும் தூண்டப்படும்," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார்.

அதே நேரம் ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பதைக் கண்டறிவது போன்ற உள் அச்சுறுத்தல்களைப் பொறுத்தவரை, மூளை விஷயங்களை வேறு வழியில் நிர்வகிக்கிறது. மூளையில் ஆக்ஸிஜன் சென்சார்கள் இல்லாததால், கார்பன் டை ஆக்சைடின் உயர்வை உடனடி மூச்சுத்திணறலுக்கான அறிகுறியாக உடல் புரிந்துகொள்கிறது.

சுவாசத்தைப் போன்ற தன்னிச்சையான உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் ஒரு பகுதியான மூளைத் தண்டு (Brainstem), கார்பன் டை ஆக்சைடின் உயர்வை உணர்ந்து பீதி உணர்வை ஏற்படுத்துகிறது என்று ஃபைன்ஸ்டீனின் ஆராய்ச்சி காட்டுகிறது. அமிக்டலா இந்த எதிர்வினைக்குத் தடையை ஏற்படுத்தி, பயத்தைத் தடுக்கிறது; அதனால்தான் எஸ்எம் போன்ற அமிக்டலா இல்லாத நோயாளிகள் மிகைப்படுத்தப்பட்ட எதிர்வினையை கொண்டுள்ளனர். (எனினும், அமிக்டலா ஏன் இப்படி நடந்துகொள்கிறது என்று விஞ்ஞானிகளுக்கு இன்னும் தெரியவில்லை.)

"இது ஒரு மிக முக்கியமான அறிவியல் முடிவு, ஏனெனில் இது, பயம், பதற்றம் மற்றும் பீதி ஆகியவற்றின் எல்லா வடிவங்களுக்கும் அமிக்டலா முக்கியமானது அல்ல என்பதை நமக்குக் கற்பிக்கிறது," என்று ஷாக்மேன் கூறுகிறார்.

"வழிப்பறித் திருடன், பாம்பு, சிலந்தி போன்ற வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு எதிர்வினையாற்றும் விதமாக பயத்தை ஒழுங்கமைப்பதில் இது மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது. ஆனால், இந்த உள்முகத் தூண்டுதலுக்குப் பதிலளிக்கும் விதமாக ஒரு மிகக் கடுமையான பீதி உணர்வைத் தூண்டுவதற்கு இது பொறுப்பாக இருப்பதாகத் தெரியவில்லை."

பரிணாம வளர்ச்சியில் பயத்தின் முக்கியத்துவம்

எஸ்எம்-மின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை. இருப்பினும், அமிக்டலாவைப் பாதித்து மற்ற பகுதிகளைத் தக்கவைத்துக்கொண்டது இவரின் அரிய நோயின் தனித்துவமான அம்சமாகும். எனினும், ஒரே மாதிரியான மூளைக் காயத்திற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் எதிர்வினையாற்றலாம். மூளை சேதம் எந்த வயதில் ஏற்படுகிறது என்பதும் ஒரு நபர் அதிலிருந்து எவ்வாறு குணமடைகிறார் என்பதில் பங்கு வகிக்கலாம்.

ஆனாலும், எஸ்எம்-இன் குறிப்பிடத்தக்க கதை, நாம் ஏன் பயத்தை முதலில் உருவாக்கிக் கொண்டோம் என்பதை (பரிணாம ரீதியாக) எடுத்துக்காட்டுகிறது. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீர்நில வாழ்வன மற்றும் மீன்கள் உட்பட அனைத்து முதுகெலும்பிகளுக்கும் அமிக்டலா உள்ளது. இது உயிர்வாழ்வதற்கு ஒரு பெரிய உதவியாக உள்ளது என்பது தெளிவாகிறது.

"நீங்கள் அமிக்டலாவைச் சேதப்படுத்தி, விலங்கை மீண்டும் வனப்பகுதிக்கு அனுப்பும்போது, அந்த விலங்கு பொதுவாக ஒரு சில மணிநேரங்கள் அல்லது நாட்களில் இறந்துவிடும்," என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார். "வெளி உலகைச் சமாளிப்பதற்கான இந்த முக்கியமான சுற்று இல்லாமல், இந்த விலங்குகள் தங்களைத் தாங்களே ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்க வைக்கின்றன."

ஆயினும், நோயாளி எஸ்எம், சில அபாயகரமான சூழ்நிலைகளில் இருந்த போதிலும், தனது அமிக்டலா இல்லாமல் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாழ முடிந்தது.

"அவரது விவகாரம் எழுப்பும் கேள்விகளில் ஒன்று என்னவென்றால், பயத்தின் இந்த அடிப்படை உணர்ச்சி நவீன வாழ்க்கையில் உண்மையில் அவசியமில்லை" என்று ஃபைன்ஸ்டீன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg6k636y27o

குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?

2 months 3 weeks ago

காலை அல்லது இரவு இரண்டில் எப்போது குளிப்பது உடல் நலனுக்கு சிறந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது

கட்டுரை தகவல்

  • ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி

  • 23 செப்டெம்பர் 2025, 05:01 GMT

    புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர்

சிலர் காலையில் குளிக்க விரும்புகிறார்கள், சிலர் மாலையில் அல்லது இரவில் குளிக்க விரும்புகிறார்கள். யார் சரியாக செய்கிறார்கள்?

இந்த உலகில், ஒரு சிறிய கேள்வி கூட பெரிய விவாதத்தை உருவாக்குகிறது, நீங்கள் காலையில் எழுந்தவுடன் குளிப்பவரா? அல்லது இரவில் படுக்க செல்வதற்கு முன் குளிப்பவரா? அல்லது தினமும் குளிக்காத 34% அமெரிக்கர்களில் ஒருவரா?

நீங்கள் எந்தப் பக்கம் இருந்தாலும், உங்கள் தேர்வு உங்கள் உடல்நலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.

காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும், முதலில் பலரும் செய்யும் வேலை குளிப்பது தான். காலை வேளையில் குளிப்பவர்கள், சூடான நீரில் சில நிமிடம் நிற்பதால் புத்துணர்ச்சி கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

மாறாக, இரவில் குளிப்பவர்கள், நாள் முழுவதும் சேர்ந்த தூசி, வியர்வை எல்லாவற்றையும் கழுவி விட்டு தூங்குவதால் சுத்தமாகவும், அமைதியாகவும் தூங்க முடியும் என்று நம்புகிறார்கள்.

அறிவியல் என்ன சொல்கிறது?

எது நமக்கு உண்மையில் அதிக நன்மை தருகிறது? என்பது குறித்துத் தெரிந்து கொள்வோம்.

குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது. நாள் முழுவதும் தூசி, மாசு, மகரந்தம் போன்றவை உடலில் தேங்குகின்றன. இரவில் குளிக்காமல் படுக்கச் சென்றால், இந்த அழுக்குகள் உங்கள் படுக்கை விரிப்பிலும் தலையணை உறையிலும் படிந்துவிடும்.

காலை அல்லது இரவு இரண்டில் எப்போது குளிப்பது உடல் நலனுக்கு சிறந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரவில் சூடான நீரில் குளித்த பிறகு உடல் வெப்பநிலை உயர்ந்து பின்னர் குறைவது சிலருக்கு எளிதாக தூங்க உதவும்

இது மட்டும் இல்லை.

நம் தோலில் ஏராளமான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. தோலின் ஒரு சதுர சென்டிமீட்டரை நெருக்கமாகப் பார்த்தால், அங்கே 10,000 முதல் ஒரு மில்லியன் வரை பாக்டீரியாக்கள் இருப்பதை காணலாம். அவை நம் வியர்வைச் சுரப்பிகளில் இருந்து வரும் எண்ணெயை உணவாக எடுத்துக்கொள்கின்றன.

வியர்வைக்கு தனிப்பட்ட மணம் இல்லையென்றாலும், பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் கந்தக சேர்மங்கள்தான் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

அதனால், படுக்கைக்கு முன் குளிப்பது தான் ஆரோக்கியமான தேர்வாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் போல, உண்மை கொஞ்சம் சிக்கலானது.

"இரவில் குளித்தால் நீங்கள் சுத்தமாக படுக்கைக்குச் செல்வீர்கள், ஆனால் இரவில் உங்களுக்கு வியர்க்காமல் இருக்காது" என்கிறார் லீசெஸ்டர் பல்கலைக்கழக நுண்ணுயிரியலாளர் பிரிம்ரோஸ் ஃப்ரீஸ்டோன்.

குளிர்காலத்தில் ஒரு நபர் படுக்கையில் கால் லிட்டர் அளவு வியர்வை வெளியிடுவார் மற்றும் 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தோல் செல்களை வெளியேற்றுவார். இது தூசிப் பூச்சிகளுக்கு (dust mites) ஒரு முழு விருந்து போன்றது என்கிறார் ஃப்ரீஸ்டோன்.

தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் படுக்கையில் வியர்வையால் ஒரு சிறிய சூழலை உருவாக்குவீர்கள். அதில் தோலில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை பெற்றுக்கொண்டு, சிறிது உடல் நாற்றத்தை (BO) உருவாக்கும். எனவே, இரவில் குளித்தாலும், காலையில் எழும்போது சற்று நாற்றம் இருக்கும்," என்கிறார்.

இரவில் குளிப்பதின் நன்மைகள் கிடைக்க, உங்கள் படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை ஆகியவற்றை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பாக்டீரியாக்கள் இவற்றில் வாரக்கணக்கில் உயிர் வாழக்கூடும். ஈரமான பகுதிகளில், குறிப்பாக தலையணைகளில், தூசிப் பூச்சிகளும் பூஞ்சைகளும் அதிகமாக சேரக்கூடும்.

முழுமையாகச் செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் இதை சமாளித்துவிடுவார்கள். ஆனால் கடுமையான ஆஸ்துமா கொண்டவர்களில் 76% பேருக்கு குறைந்தது ஒரு வகை பூஞ்சைக்கு ஒவ்வாமை இருக்கும். A. fumigatus என்ற பூஞ்சைக்கு உட்பட்டால், காசநோய் அல்லது புகைபிடிப்பால் பாதிக்கப்பட்ட நுரையீரல் நோயாளிகளுக்கு நுரையீரல் நோய் உருவாகும் அபாயம் உள்ளது.

காலை அல்லது இரவு இரண்டில் எப்போது குளிப்பது உடல் நலனுக்கு சிறந்தது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காலையில் குளிப்பது இரவில் சேகரிக்கப்படும் வியர்வை மற்றும் நுண்ணுயிரிகளை பெரும்பாலானவற்றை நீக்கும்

"மாலையில் குளிப்பதை விட, படுக்கை விரிப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வதே முக்கியம்," என்கிறார் பிரிட்டனின் ஹல் பல்கலைக் கழகத்தில் காயம் குணப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிரியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஹாலி வில்கின்சன்.

"ஏனென்றால், நீங்கள் குளித்து சுத்தமாக படுக்கைக்கு சென்றாலும், அந்த விரிப்புகளை ஒரு மாதம் துவைக்காமல் விட்டால், அதில் பாக்டீரியா, அழுக்கு, தூசிப் பூச்சிகள் எல்லாம் குவிந்து விடும்."

இது ஒரு சிக்கல், ஏனெனில் தூசிப் பூச்சி கழிவுகளுக்கு நீண்ட காலம் உட்பட்டால், ஒவ்வாமை ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும்.

நீங்கள் ஏற்கனவே மகரந்தம் போன்றவற்றுக்கு ஒவ்வாமை கொண்டவராக இருந்தால், படுக்கை விரிப்பை துவைக்காமல் இருப்பது உங்கள் அறிகுறிகளை இன்னும் மோசமாக்கும். அழுக்கான விரிப்புகளில் தொடர்ந்து படுத்தால், தோல் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆனால் இதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் இன்னும் தெளிவாக இல்லை.

தூக்கத்தின் நன்மைகள்

இரவு நேரத்தில் குளிப்பது தூக்கத்திற்கு உதவுகிறது என்று சிலர் வலியுறுத்துகிறார்கள், இதற்கு விஞ்ஞான ஆதாரங்களும் உள்ளன.

உதாரணமாக, 13 ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்த ஒரு மெட்டா-ஆய்வு, படுக்கைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு 10 நிமிடங்கள் சூடான நீரில் குளிப்பது, தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று கண்டறிந்தது.

இதற்கான காரணம், முதலில் உடல் வெப்பநிலையை உயர்த்தி பின்னர் அதை மீண்டும் குறைப்பது, நம் உடலுக்குத் "இப்போது தூக்கத்திற்கு தயாராகுங்கள்" என்ற சர்க்கேடியன் (உடலின் உயிரியல் கடிகாரம்) சிக்னல் அனுப்புகிறது என்பதாக இருக்கலாம்.

ஆனால் இதை முழுமையாக உறுதிப்படுத்த இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவை.

அப்படியென்றால், காலை குளிப்பது நல்லதா? மாலை குளிப்பது நல்லதா? எது சிறந்தது என்ற கேள்விக்கு விடை என்ன?

ஃப்ரீஸ்டோன், காலையில் குளிப்பதையே விரும்புகிறார். இரவில் படுக்கையில் இருந்த போது தேங்கிய வியர்வையும் நுண்ணுயிரிகளையும் துடைத்துவிட்டு, புத்துணர்ச்சியுடனும் சுத்தமாகவும் நாளைத் தொடங்க முடியும் என்பது தான் அதற்கான காரணம்.

ஆனால் உண்மையில், நீங்கள் காலையில் குளித்தாலும், மாலையில் குளித்தாலும், உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. இது முழுக்க முழுக்க, நீங்கள் பகலில் சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்புகிறீர்களா அல்லது இரவில் தூங்கச் செல்லும் முன் சுத்தமாக இருக்க விரும்புகிறீர்களா என்பதில்தான் இருக்கிறது.

"நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் குளிக்கிறீர்கள் என்றால், அதை எந்த நேரத்தில் செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல," என்கிறார் வில்கின்சன்.

உண்மையில், முக்கியப் பகுதிகளை தினமும் கழுவினால், வாரத்திற்கு இரண்டு முறை குளிப்பதே ஆரோக்கியத்துக்கும் சுகாதாரத்துக்கும் போதுமானது.

"நீங்கள் செய்யும் வேலையையும் பொறுத்தே இது இருக்கும். உதாரணமாக, நீங்கள் விவசாயி என்றால், நாள் முழுவதும் வேலை முடித்து வீடு திரும்பியபோது குளிக்க விரும்புவீர்கள். ஆனால், மொத்தமாகப் பார்த்தால், சுத்தமான படுக்கையை பராமரிப்பதுதான் மிக முக்கியமானது," என்கிறார் வில்கின்சன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c05918r470do

சர்க்கரையை 10 நாள் அறவே தவிர்த்தால் உடலில் என்ன மாற்றம் நிகழும்?

2 months 4 weeks ago

சர்க்கரை, உடல்நலம், ஆரோக்கியம், மனித உடல், உணவு

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 20 செப்டெம்பர் 2025, 01:53 GMT

இந்தியாவின் நகர்ப்புற குடும்பங்களில் 56% பேர் கேக், பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை மாதத்திற்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை உட்கொள்கிறார்கள், இதில் 18% பேர் தினமும் அவற்றை உட்கொள்கிறார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது.

இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ஆய்வில் பங்கேற்ற கணிசமானோர் (55%) இனிப்புகளைத் தவிர்க்க முடியாது என்றும் ஆனால் அதில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கவேண்டுமென விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

இப்போதெல்லாம், எந்த உணவுப் பொருளை எடுத்தாலும் அதில் எவ்வளவு சர்க்கரை அளவு உள்ளது என தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருக்கிறோம். 'அதிக சர்க்கரை' உடலுக்கு கேடு என்பதை பலரும் உணரத் தொடங்கியுள்ளனர்.

வெள்ளை சர்க்கரை சிறந்ததா அல்லது நாட்டுச் சர்க்கரை சிறந்ததா என்பதைக் கடந்து, அனைத்து வகையான சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களையும் குறிப்பிட்ட நாட்களுக்கு தவிர்ப்பதே சர்க்கரையை தவிர்க்கும் சவால் (Sugar cut challenge) ஆகும்.

'சர்க்கரையை 10 நாட்கள் தவிர்த்ததால் முகம் பொலிவு பெறுகிறது', 'எடை குறைந்துவிட்டது' என இணையத்தில் பலரும் இதுகுறித்து பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது.

இந்த 'சர்க்கரையை முழுமையாகத் தவிர்ப்பது' குறித்த 6 கேள்வி- பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

நாம் ஏன் சர்க்கரையை குறைக்க அல்லது தவிர்க்க வேண்டும்?

சர்க்கரை, உடல்நலம், ஆரோக்கியம், மனித உடல், உணவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சேர்க்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது தான் ஆபத்து என பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இந்தக் கேள்விக்கான விடையை தெரிந்துகொள்ளும் முன், இருவகையான சர்க்கரைகள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.

முதலில், சேர்க்கப்பட்ட சர்க்கரை (Added sugars) என்பது உணவுகள் அல்லது பானங்கள் தயாரிக்கப்படும் போது அல்லது பதப்படுத்தப்படும் போது சேர்க்கப்படும் எந்த வகையான சர்க்கரை அல்லது இனிப்பூட்டியையும் குறிக்கிறது.

வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, தேன், வெல்லம், கருப்பட்டி, அதன் மூலம் செய்யப்படும் பிஸ்கட், கேக், குளிர்பானங்கள் என அனைத்தும் இந்த வகையில் வரும். இதில் தேன் போன்றவை இயற்கையாக உருவானாலும் கூட, அவை சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் தான்.

இந்த சேர்க்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது தான் ஆபத்து என பல ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

மற்றொன்று, பால், பழங்கள் மற்றும் காய்கறிகளில் இயற்கையாகக் காணப்படும் சர்க்கரை. 'இவை உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சர்க்கரை, உடல்நலம், ஆரோக்கியம், மனித உடல், உணவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் 101 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2023ஆம் ஆண்டில், 'லான்செட்' வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, இந்தியாவில் 101 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிலும், கோவா (26.4%), புதுச்சேரி (26.3%) மற்றும் கேரளா (25.5%) ஆகிய மாநிலங்களில் நீரிழிவு நோய் அதிகமாக உள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

"நீரிழிவு நோய் மட்டுமல்ல, சேர்க்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது என்பது பல வழிகளில் மனித உடலுக்கு ஆபத்தானது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் சிந்தியா தினேஷ்.

டைப்-2 நீரிழிவு நோய் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன் (குறிப்பாக இடுப்பைச் சுற்றி), ஆல்கஹால் அல்லாத ஃபேட்டி லிவர் நோய், இதய நோய், பற் சொத்தை போன்ற பல விளைவுகள் இதனால் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

2. நம் உடலுக்கு உண்மையில் சர்க்கரை தேவையா?

"நம் உடலுக்கு குளுக்கோஸ் எனப்படும் ஒரு வகை சர்க்கரை நிச்சயம் தேவைப்படுகிறது. குளுக்கோஸ் என்பது மூளையின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமாகும். இது முழு உடலுக்கும் ஒரு முக்கிய ஆற்றல் மூலமாகும்" என அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் (National Institutes of Health) தெரிவிக்கிறது.

'ஆனால் உங்கள் உணவில் குளுக்கோஸை தனியாக சேர்க்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் உங்கள் உடல் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் போன்ற உணவு மூலக்கூறுகளை உடைப்பதன் மூலம் அதற்குத் தேவையான குளுக்கோஸை பெற்றுக் கொள்ளும்' என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.

3. பழங்களில் இருக்கும் சர்க்கரையையும் தவிர்க்க வேண்டுமா?

சர்க்கரை, உடல்நலம், ஆரோக்கியம், மனித உடல், உணவு

பட மூலாதாரம், Getty Images

"பழங்கள் மற்றும் காய்கறிகள், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற கார்போஹைட்ரேட்டுகள் உள்ள அனைத்து உணவுகளிலும் சர்க்கரை என்பது இயற்கையாகவே காணப்படுகிறது. இயற்கை சர்க்கரை உள்ள முழு உணவுகளை உட்கொள்வது ஆபத்தில்லை" என ஹார்வர்ட் மருத்துவப்பள்ளியின் கட்டுரை ஒன்று கூறுகிறது.

மேலும், "தாவர உணவுகளிலும் அதிக அளவு நார்ச்சத்து, அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. பால் உணவுகளில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளன."

"மனித உடல் இந்த உணவுகளை மெதுவாக ஜீரணிப்பதால், அவற்றில் உள்ள சர்க்கரை நமது செல்களுக்கு நிலையான ஆற்றலை வழங்குகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு, இதய நோய் மற்றும் சில நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது." என்றும் அந்தக் கட்டுரை கூறுகிறது.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடும்போது, இயற்கை சர்க்கரைகளுடன் சேர்த்து நிறைய ஊட்டச்சத்துகளையும் நார்ச்சத்தையும் பெறுகிறீர்கள்.

4. சர்க்கரையை தவிர்க்கத் தொடங்கிய முதல் சில நாட்களில் என்ன நடக்கும்?

சர்க்கரை, உடல்நலம், ஆரோக்கியம், மனித உடல், உணவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை தவிர்ப்பது என்பது பெரும்பாலானோருக்கு சிரமமான ஒன்றாக இருக்காது'

"சேர்க்கப்பட்ட சர்க்கரையைக் குறைப்பது பல வெளிப்படையான நன்மைகளை அளிக்கிறது. உதாரணத்திற்கு, பற்களின் ஆரோக்கியம் மேம்படுவது மற்றும் கலோரி நுகர்வு குறைவதால் உடல் எடை குறைவது போன்றவை. ஆனால் தொடக்கத்தில் சேர்க்கப்பட்ட சர்க்கரையை தவிர்க்கும்போது, சிலருக்கு தலைவலி, சோர்வு அல்லது மனநிலை மாற்றங்கள் போன்ற சில அறிகுறிகள் தென்படலாம்" என்று கூறுகிறார் மருத்துவர் சிந்தியா.

அதே சமயம், "அத்தகைய விளைவுகள் சிலருக்கு வர காரணம் அவர்கள் அதற்கு முன் அதிக சர்க்கரையை உணவில் சேர்த்திருப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு கப் காபியில் 4 முதல் 6 ஸ்பூன் வெள்ளைச் சர்க்கரையை சேர்ப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இத்தகைய சிக்கல்கள் ஏற்படலாம். மற்றபடி, சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை தவிர்ப்பது என்பது பெரும்பாலானோருக்கு சிரமமான ஒன்றாக இருக்காது" என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

5. உடலில் எவ்வளவு விரைவாக நன்மைகளை உணரலாம்?

சர்க்கரை, உடல்நலம், ஆரோக்கியம், மனித உடல், உணவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்ப்பதால், 5 முதல் 6 நாட்களில் நம் செரிமான அமைப்பின் ஆரோக்கியம் மேம்படும்'

அமெரிக்காவில் உடல் பருமன் கொண்ட குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் (2015), 10 நாட்களுக்கு சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் அறவே தவிர்ப்பது, உடல் எடையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட, கொழுப்பு மற்றும் ரத்த அழுத்த அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என கண்டறியப்பட்டது.

"சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்ப்பதால், 5 முதல் 6 நாட்களில் நம் செரிமான அமைப்பின் ஆரோக்கியம் மேம்படும். 7 முதல் 8 நாட்களில், மனநிலையில் நல்ல மாற்றங்கள் வரும். 9 முதல் 10 நாட்களில் சருமம் பொலிவடையத் தொடங்கும்." என்கிறார் மருத்துவர் சிந்தியா.

அதுவே நீரிழிவு நோயாளிகளுக்கு 3 முதல் 5 நாட்களிலேயே ரத்த சர்க்கரை அளவுகளில் நல்ல மாற்றங்கள் இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

"உடல் எடையில் மாற்றங்கள் தெரிய குறைந்தது ஒரு மாதமாவது சேர்க்கப்பட்ட சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். அதனுடன் சேர்த்து ஆரோக்கியமான உணவு முறையும் இருக்க வேண்டும். ஆனால், அதை உணவியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையுடன் பின்பற்றுவது சிறந்தது" என்று கூறுகிறார் சிந்தியா.

6. தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது?

சர்க்கரை, உடல்நலம், ஆரோக்கியம், மனித உடல், உணவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது.

"ஒரு நாளைக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகளில், இந்த சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் என்பதன் அளவு 10% மேல் இருக்கக்கூடாது. அதை இன்னும் 5% என குறைப்பது கூடுதல் நன்மைகளை அளிக்கும்" என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (National Health service) பின்வருமாறு பரிந்துரைக்கிறது,

  • பெரியவர்கள் ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது.

  • 7 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 24 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது.

  • 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 19 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது.

  • 2 முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு 14 கிராமுக்கு மேல் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை உட்கொள்ளக்கூடாது.

"ஆரோக்கியமான அளவு என்பது 25 கிராம் சேர்க்கப்பட்ட சர்க்கரை, அதாவது 6 ஸ்பூன் சர்க்கரை. இதுமட்டுமின்றி, சேர்க்கப்பட்ட சர்க்கரை கலந்த பிஸ்கட், கேக், குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்." என்கிறார் சிந்தியா தினேஷ்.

அதிலும், நீரிழிவு நோயாளிகள் சேர்க்கப்பட்ட சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்று கூறும் சிந்தியா, "ஆப்பிள், கொய்யாக்காய், பால், கேரட் போன்றவற்றை அவர்கள் குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்ளலாம், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்" என்கிறார்.

"சேர்க்கப்பட்ட சர்க்கரையைக் குறைப்பது அல்லது தவிர்ப்பதை 10 நாட்கள் அல்லது 30 நாட்கள் என ஒரு இணைய ட்ரெண்டிற்காக பின்பற்றாமல், அதை வாழ்க்கை முழுக்க பின்பற்றுவதே சிறந்த முறையாக இருக்கும்." என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cp8jzjm82k7o

ஆண்களை விட பெண்களை அதிகம் தாக்கும் சிறுநீர்ப் பாதை தொற்று - உடலுறவு மூலம் பரவுமா?

2 months 4 weeks ago

சிறுநீர் பாதை தொற்று

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • ரெபேக்கா தார்ன்

  • பிபிசி

  • 19 செப்டெம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது, ஆனால் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா? சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கிறதா?

இவை அனைத்தும் சிறுநீர் பாதை தொற்றின் (UTI) பொதுவான அறிகுறிகள். இந்தத் தொற்று ஏற்பட்டால், சிறுநீர் கழிப்பது மிகுந்த வேதனை அளிக்கலாம்.

உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் பாதிக்கலாம். ஆனாலும், பெண்களில் இது மிகவும் பொதுவானது.

உலகெங்கிலும் உள்ள பெண்களில் பாதிப் பேர், தங்கள் வாழ்க்கையில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

உலகளவில் பொதுவாக காணப்படும் தொற்றுகளில் ஒன்றான சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து, இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. ஏனெனில் ஆண்டிமைக்ரோபியல் மருந்துகளுக்கு கிருமிகளின் எதிர்ப்பு (antimicrobial resistance) அதிகரித்து வரும் இந்த காலத்தில், இந்த தொற்றுக்கு திறம்பட சிகிச்சை அளிக்க முடியுமா என்பது ஒரு முக்கியமான சந்தேகமாக உள்ளது.

அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளவும்,அதனைத் தடுக்கும் வழிகளை அறியவும், சில நிபுணர்களிடம் பிபிசி பேசியது.

சிறுநீர் பாதை   தொற்று

பட மூலாதாரம், Getty Images

சிறுநீர் பாதை தொற்று ஏற்பட என்ன காரணம்?

சிறுநீர் பாதை தொற்று என்பது சிறுநீர்க்குழாய் (நமது சிறுநீர் வெளியேறும் குழாய்), சிறுநீர்ப்பை, அல்லது சில கடுமையான சந்தர்ப்பங்களில் சிறுநீரகம் வரை ஏற்படும் தொற்று.

பெரும்பாலும், பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதை வழியாக சிறுநீர் பாதைக்குள் நுழைவதன் மூலம் இது உருவாகிறது.

அடிக்கடி இந்த பாக்டீரியாக்கள் குறிப்பாக E.coli பாக்டீரியா, மலக்குழாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து வருகிறது.

பெண்களின் சிறுநீர்க்குழாய்கள் ஆண்களை விட குறுகியது என்பதால், பாக்டீரியாக்கள் எளிதாகச் சென்று தொற்று ஏற்படுத்திவிடும்.

அதனால், அதிகமான பெண்களும், சிறுமிகளும் இந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

மாதவிடாய் நின்ற பிறகு பெண்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறையும். இந்த ஹார்மோன் பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியாவின் நல்ல சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

அதனால் ஈஸ்ட்ரோஜன் குறைந்தால், அந்த சமநிலை குலைந்து, தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

இந்தத் தொற்றுக்கான அறிகுறிகள் என்ன?

சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும், ஆனால் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) குறிப்பிடக்கூடிய மிகவும் பொதுவான அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

  • சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல்

  • திடீரென அல்லது வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை

  • மேகமூட்டம் போல் தோன்றும் சிறுநீர்

  • சிறுநீரில் ரத்தம் காணப்படுதல்

  • கீழ் வயிற்றில் வலி, அல்லது முதுகில் (விலா எலும்புகளுக்குக் கீழே) வலி

  • அதிக காய்ச்சல், அல்லது குளிர்ச்சி/வெப்பம், நடுக்கம் ஏற்படுதல்

  • சோர்வு அல்லது பலவீனம்

அதேபோல் எரிச்சலடைதல், குழப்பமாக காணப்படுதல் போன்று நடத்தையில் மாற்றங்கள் தென்படலாம்.

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல், மற்றும் வாந்தியெடுத்தல் ஆகிய அறிகுறிகளும் சிறுநீர் பாதை தொற்றை வெளிப்படுத்தலாம்.

சிறுநீர் பாதை தொற்று தானாகவே குணமாகி விடுமா?

சில சந்தர்ப்பங்களில், பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பையின் புறணியை (lining)  ஆக்கிரமித்து உடலின் சொந்த செல்களுக்குள் மறைத்துக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆண்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவது, சிறுநீர் பாதை தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதன்மை முறையாகும்

"சில பெண்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியே சிறுநீர் பாதை தொற்றை சரி செய்து விடும். ஆனால் சில பெண்களுக்கு கண்டிப்பாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தேவைப்படும்."என்கிறார் லண்டனில் உள்ள விட்டிங்டன் மருத்துவமனையின் சிறுநீரகவியல் ஆலோசகர் டாக்டர் ராஜ்விந்தர் காஸ்ரியா.

நாம் ஏன் இந்த இரண்டு நிலைகளில் ஒன்றை எதிர்கொள்கிறோம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஆண்டிமைக்ரோபியல் (antimicrobial) எனப்படும் கிருமி எதிர்ப்பு அதிகரித்து வரும் இந்நேரத்தில், இது ஆராய்ச்சியாளர்களிடையே மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.

சிறுநீர் பாதை தொற்று உலகளவில் ஆன்டிபயாட்டிக் அதிகம் வழங்கப்படும் நோய்களில் ஒன்றாகும். அதனால், ஆண்டிபயாட்டிக் தேவையில்லாத சிகிச்சையை கண்டுபிடிப்பது மருத்துவ துறையின் முக்கிய இலக்காக உள்ளது.

மருத்துவர் கேத்தரின் கீனன், தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மருந்து எதிர்ப்பு சிறுநீர் பாதை தொற்றுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

மருத்துவமனைக்கு வந்தவர்களில், சிறுநீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டவர்களில் சுமார் பாதி பேருக்கு பல மருந்துகளுக்கும் எதிர்ப்பு காட்டும் தொற்று இருந்தது.

மேலும், சமூக கட்டமைப்பாலும், கூச்ச சுபாவத்தாலும் பல பெண்கள் தங்கள் அறிகுறிகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை, அதேபோல் மருத்துவரிடம் அத்தியாவசிய சிகிச்சை பெறுவதையும் தவிர்த்துவிடுகிறார்கள்.

"அவர்கள் தங்களை மறைத்துக் கொள்வார்கள். ஏனெனில், தங்களது அறிகுறிகள் பாலியல் நோய்களுடன் (STDs) தொடர்புடையதாக இருக்கலாம் என்று எண்ணுவார்கள். சிலர், இது துணையிடமிருந்து வந்தது, அதனால் அவர் ஏமாற்றியிருக்கலாம் என்பதாகவும் நினைப்பார்கள்," என்கிறார் மருத்துவர் கீனன்.

"எனக்கு என் உடலில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை… நான் பாதிக்கப்பட்டு விட்டேன் போல," என்று பலர் சொல்வதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவர்கள் உண்மையில் அந்தக் களங்க உணர்வையும், விரக்தியையும் வெளிப்படுத்தினார்கள்"என்றும் அவர் கூறுகிறார்.

குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (Global Burden of Disease) ஆய்வின்படி, சிறுநீரக பாதை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 50% க்கும் மேற்பட்டோர் கவலை, மனசோர்வு போன்ற உளவியல் பிரச்னைகளை அனுபவிக்கிறார்கள்.

பாக்டீரியாக்கள், சிறுநீர்ப்பையின் சுவரில் தங்களை ஒட்டிக்கொண்டு, பயோஃபில்ம் எனப்படும் ஒரு பாதுகாப்பு அடுக்கின் கீழ் மறைந்து விடுகின்றன. இதனால், அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளையும் மற்றும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளையும் தவிர்க்க முடிகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுநீரகத் தொற்று பெண்களின் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும்

சிறுநீர் பாதை தொற்று தொற்றக்கூடியதா?

சிறுநீர் பாதை தொற்று ஒரு தொற்று நோயாக வகைப்படுத்தப்பட்டாலும், அவை மற்றவர்களுக்கு பரவக்கூடியவை அல்ல, மேலும் பாலியல் ரீதியாக பரவும் நோயும் அல்ல.

ஆனால், உடலுறவு கொள்ளும் போது மலக்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் சிறுநீர்க்குழாய்க்கு நகர்ந்து, சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

உடலுறவுக்குப் பிறகு, முடிந்தவரை விரைவில் சிறுநீர் கழிக்குமாறு பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது. அப்படி செய்யும்போது, சிறுநீர்க்குழாயில் புகுந்திருக்கக் கூடிய பாக்டீரியாக்கள் வெளியேறி விடும்.

மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுபவர்களுக்கு, உடலுறவுக்குப் பிறகு உடனடியாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

சிறுநீர் பாதை தொற்று எவ்வாறு கண்டறியப்படுகின்றது?

மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீரகத் தொற்றுகள் (Recurrent UTIs) மட்டுமல்ல, நாள்பட்ட சிறுநீரகத் தொற்றுகள் (Chronic UTIs) பற்றிய விழிப்புணர்வும் தற்போது அதிகரித்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு பகுப்பாய்வு செய்ய சிறுநீரின் மாதிரியை வழங்குமாறு மருத்துவர் உங்களிடம் கேட்கலாம்.

சிறுநீர் பாதை தொற்றை கண்டறிவதற்கான "நீண்ட காலமாக செய்யப்படும்" பரிசோதனை, மிட் ஸ்ட்ரீம் யூரின் கல்சர் டெஸ்ட் (mid-stream urine culture test) ஆகும்.

இதில், நோயாளியின் சிறுநீர் மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கே, கல்சர் பிளேட் (culture plate) மூலம் எந்த கிருமி வளருகிறது என்று பார்க்கிறார்கள்.

இந்த முடிவின் அடிப்படையில், மருத்துவர் எந்த ஆன்டிபயாட்டிக் மருந்து (தேவைப்பட்டால்) சிறந்தது என்பதைத் தீர்மானிக்க முடியும்.

சில நிபுணர்கள்,சிறுநீர் பாதை தொற்றுக்கான இந்த கல்சர் பிளேட் காலாவதியானது என்றும், நோயாளியின் அறிகுறிகளையும் மருத்துவ வரலாற்றையும் மருத்துவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

இந்த சிறுநீர் கல்சர் டெஸ்ட் 1950களில் விஞ்ஞானி எட்வர்ட் காஸ் உருவாக்கியது. அப்போது அவர், பைலோநெப்ரிடிஸ் (சிறுநீர் பாதை தொற்று) கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பான தரவின் அடிப்படையில் இதை வடிவமைத்தார்.

"நாம் அதே முறையைக் கொண்டு, கர்ப்பமாக இல்லாத பெண்கள், எல்லா வயதினருக்கும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், இளைஞர்கள், என அனைத்து வகையான மக்களுக்கும் பயன்படுத்துகிறோம்," என்கிறார் மருத்துவர் காஸ்ரியா.

நீங்களும் உங்களுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதாக சந்தேகித்தால், உடனடியாக மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை தொற்றை எவ்வாறு தடுப்பது?

பிரிட்டனில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸலன்ஸ் (NICE) பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீரகத் தொற்றுகளை தடுக்க, தினசரி குறைந்த அளவிலான ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுநீர் பாதை தொற்றை குணமாக்க க்ரான்பெரி சாறு உதவுமா இல்லையா என்பது குறித்து கலவையான கருத்துக்கள் உள்ளன

குறைந்தது ஒரு முறை சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்ட பெண்களில் 25% பேருக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, ஆறு மாதங்களில் இரண்டு முறை, அல்லது ஒரு வருடத்தில் மூன்று முறை ஏற்படலாம். பலருக்கு இதைவிட அதிகமாகக் கூட ஏற்படுகிறது.

க்ரான்பெரி சாறு ஆரோக்கியமான கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்க உதவும் என்பதற்கு சில சான்றுகள் இருந்தாலும், மற்ற சில ஆய்வுகள் இதில் எந்த நன்மையும் இல்லை என்று கூறுகின்றன.

சிறுநீர் பாதை தொற்றை தடுக்கும் வழிகள் : ( NHS பரிந்துரைகள்)

- கழிப்பறை பயன்படுத்திய பிறகு, பிறப்புறுப்பை முன்னிருந்து பின்னோக்கி துடைக்கவும்.

- பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருங்கள்

- நிறைய தண்ணீர் மற்றும் திரவங்கள் குடிக்கவும் இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கலாம்.

- உடலுறவுக்கு முன்னும் பின்னும் பிறப்புறுப்புப் பகுதியைச் சுற்றியுள்ள தோலை தண்ணீரில் கழுவவும்

- உடலுறவுக்குப் பிறகு கூடிய விரைவில் சிறுநீர் கழிக்கவும்

- நாப்கின்கள் அழுக்கடைந்தால் உடனே மாற்றவும்.

- பருத்தியிலான உள்ளாடைகளை அணியுங்கள்

பிரிட்டனில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸலன்ஸ் (NICE) பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்க, தினசரி குறைந்த அளவிலான ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.

நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று என்றால் என்ன?

மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகள் (Recurrent UTIs) மட்டுமல்ல, நாள்பட்ட சிறுநீரகத் தொற்றுகள் (Chronic UTIs) பற்றிய விழிப்புணர்வும் தற்போது அதிகரித்து வருகிறது.

இவை சில நேரங்களில் நீண்ட கால அல்லது உட்பொதிக்கப்பட்ட (Embedded) சிறுநீர் பாதை தொற்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த நிலைமையில், மக்கள் தினமும் சிறுநீரகத் தொற்றின் அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். எரிச்சல், வலி, சிறுநீர் கழிக்கும் சிரமம் போன்றவை தொடர்ந்து ஏற்படலாம்.

ஒருவருக்கு மீண்டும் மீண்டும் ஏற்படுகின்ற தொற்று அல்லது நாள்பட்ட சிறுநீர் பாதை தொற்று, ஏன்,எப்படி உருவாகிறது என்பதை மருத்துவர் காஸ்ரியாவும் மற்ற ஆராய்ச்சியாளர்களும் கண்டறிய ஆர்வமாக உள்ளனர்.

"சிறுநீர் பாதை தொற்று குறித்து போதிய ஆய்வுகள் இல்லாததால், பல தகவல்கள் இல்லையென நாங்கள் நினைக்கிறோம். குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் குறித்து போதுமான ஆராய்ச்சிகள் இல்லை " என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czdjv23l369o

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

2 months 4 weeks ago

கிராபியென் ப்ளாக்

10 Min Read

கல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும்.

Published:Today at 9 AMUpdated:Today at 9 AM

கல்லீரல்

கல்லீரல்

னித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் ஆற்றல்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

நகம், முடியைப்போலவே மீண்டும் வளரும் தன்மையும் இதற்கு இருக்கிறது. நூறு சதவிகிதம் பாதிக்கப்பட்டாலும்கூட மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் வேறொருவரின் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாகப் பெற்று, பொருத்தி மறுவாழ்வு பெற முடியும். இவ்வளவு சிறப்புகளை உடைய கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான சிகிச்சைகள் குறித்து விளக்குகிறார் கல்லீரல் சிகிச்சை மருத்துவர் விவேக்.

விலா எலும்பின் வலதுபுறத்தில் 1.2 முதல் 1.5 கிலோவரையிலான எடையுடன் கல்லீரல் அமைந்திருக்கும். இதில் 50 சதவிகித அளவுக்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள் வெளியே தெரியும். மஞ்சள்காமாலை, கால் வீக்கம், வயிற்று வீக்கம், ரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், 50 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். 50 சதவிகிதத்துக்கும் குறைவான பிரச்னைகள் இருந்தால், அவற்றைத் தானே சரிசெய்துகொள்ள கல்லீரல் போராடும்.

மதுப்பழக்கத்தால் கல்லீரல்நோய் ஏற்பட்டிருந்தால், அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டாலே கல்லீரல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

கல்லீரலின் வேலை என்ன?

டலில் 500 வகையான வேலைகளை இது செய்கிறது. செரிமானத்துக்கு உதவும் பித்தநீரும், ரத்தம் உறைவதற்கான ரசாயனமும் கல்லீரலிலிருந்துதான் சுரக்கின்றன. நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துகளைச் சேகரித்துவைக்கும் தன்மை கல்லீரலுக்கு உண்டு.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

சில நேரங்களில் உணவுகளைத் தவிர்க்கும்போதும் உண்ணாவிரதம், நோன்பு இருக்கும்போதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை, சேமித்துவைத்திருக்கும் சத்துகளிலிருந்து அளித்து ஈடுசெய்யும். இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்வதால் கல்லீரலை, `பெரிய தொழிற்சாலை’ என்றே குறிப்பிடலாம்.

கல்லீரலை பாதிக்கும் நோய்கள்

ம் நாட்டில் 100 சதவிகித கல்லீரல் நோயாளிகளில் 75 சதவிகிதம் பேருக்கு மது குடிப்பதால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. `ஹெபடைட்டிஸ்’ வைரஸ்களால்

(Hepatitis A,B,C,D,E) கல்லீரல் அழற்சிநோய்’ (Hepatitis), கல்லீரல் கொழுப்புநோய்’

(Fatty Liver Disease), கல்லீரல் புற்றுநோய் ஆகிய பாதிப்புகளும் ஏற்படுகின்றன. தாமிரத்தை வெளியேற்ற முடியாதநிலையான `வில்சன் நோய்’ (Wilson’s Disease), இரும்புச்சத்து அதிகமாகச் சேரும் ‘அயர்ன் மெட்டபாலிஸம்’ (Iron Metabolism) எனக் கல்லீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் இருக்கின்றன.

காசநோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். பாராசிட்டமால் மாத்திரைகளை அடிக்கடி உட்கொண்டாலும் கல்லீரல் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. சில வகை விஷங்களும் கல்லீரலைக் கடுமையாக பாதிக்கும்.

கல்லீரல் அழற்சி நோய்

பொதுவாக, ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்பு, `கல்லீரல் அழற்சி’ எனப்படுகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸில் ஏ, பி, சி, டி, ஈ என ஐந்து வகைகள் உள்ளன. இவற்றில் ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ்கள் பரவும் முறை, தடுப்பு முறை, சிகிச்சை முறைகள் ஒன்றாக இருக்கும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

அதேபோல ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பரவுவதிலிருந்து அனைத்தும் ஒன்றாக இருக்கும்.

ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ்

ந்த இரண்டு வைரஸ்களும் அசுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுவழியாகப் பரவக்கூடியவை. மஞ்சள்காமாலை, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவை உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஓரிரு வாரங்களில் குணமாகிவிடும். இந்த வைரஸ் தாக்குதலால் `கல்லீரல் செயலிழப்பு’ (Acute Liver Failure) அரிதாகவே ஏற்படும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

பாதிப்பைத் தடுக்க சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பாதிப்பைத் தடுக்க தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் ஈ-க்கு தடுப்பூசி கிடையாது.

ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ்

ஹெபடைட்டிஸ் பி, சி ஆகிய இரண்டும் மிகக்கொடிய வைரஸ்கள். உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் இவை ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும்.

சுகாதாரமற்ற ரத்தத்தை ஏற்றுவது, ஒரே ஊசியைப் பலருக்குப் போடுவது, ஒரே ஊசியைக்கொண்டு பலருக்குப் பச்சை குத்துவது, ஒருவர் பயன்படுத்திய டூத் பிரஷ், ஷேவிங் ரேஸர் போன்ற பொருள்களை மற்றவர் பயன்படுத்துவது, பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற காரணங்களால் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும்.

பாதிக்கப்பட்ட தாயிடமிருந்தும் குழந்தைக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த இரு வைரஸ்களும் ஒருமுறை உடலுக்குள் சென்றுவிட்டால் அவற்றை அகற்றவே முடியாது. கல்லீரலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரல் சுருக்கத்துக்கான (Cirrhosis) மூல காரணமாக ஹெபடைட்டிஸ் பி, சி போன்ற வைரஸ்கள் இருக்கின்றன.

இந்திய மக்கள்தொகையில் மூன்று சதவிகிதம் பேர் இந்த இருவகை வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை தாக்கினால் எந்தவித அறிகுறியும் தென்படாது. ரத்தப் பரிசோதனை மூலம்தான் கண்டறிய முடியும். இந்த இரு வைரஸ்களுமே கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புகளை மாத்திரை, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் சி பாதிப்பைத் தடுக்க, தடுப்பூசி கிடையாது.

கல்லீரல் சுருக்கம் (Cirrhosis)

ல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும்.

இந்த வீக்கம் அதிகரிக்கும்போது கல்லீரலிலிருக்கும் செல்கள் செயலிழந்துவிடும். அந்த இடத்தில் தழும்பு ஏற்பட்டு கல்லீரலை இழுக்க ஆரம்பிக்கும். இதனால் அது சுருங்கத் தொடங்கும். இதுதான் கல்லீரல் சுருக்கநோய். கல்லீரல் சுருக்கத்துக்கு முந்தையநிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த நிலையில் உடல் சோர்வு, பசியின்மை, மன அழுத்தம், வயிற்றுவலி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். `ஃபைப்ரோ ஸ்கேன்’ மூலம் பாதிப்பைக் கண்டறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சையின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்க முடியும். கல்லீரலில் சுருக்கம் தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

கல்லீரல் கொழுப்புநோய்

ல்லீரலின் உள்ளே கொழுப்பு அதிகமாகப் படிவதால் ஏற்படுவது கல்லீரல் கொழுப்புநோய். ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொள்வது, அதிக அளவு உணவு உட்கொள்வது, உடற்பயிற்சியில் ஈடுபடாதது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள்.

போதிய உடற்பயிற்சி இல்லாததால், சாப்பிடும் உணவு கொழுப்பாக மாறி கல்லீரலுக்குள் சேரும். கொழுப்பின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அதில் வீக்கம் ஏற்படும். இது `நாஷ்’ (Nonalcoholic Steatohepatitis - NASH) என்று அழைக்கப்படுகிறது.

ந்தியர்கள் பெரும்பாலும் அரிசி, மைதா, சர்க்கரை உள்ளிட்ட உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இந்த உணவுகளிலிருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறி கல்லீரலில் படியும். கல்லீரலைப் பரிசோதித்து, அதில் வீக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுவந்தால், கல்லீரலிலுள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும். அதனால் பாதிப்புகள் சரியாக வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் வீக்கத்துக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், கல்லீரல் சுருக்கம் ஏற்படும். அதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. சர்க்கரை நோயாளிகளுக்கு வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது என்பதால், இந்த நோயால் பாதிக்கப்பட்டால் அதன் தீவிரமும் அதிகமாக இருக்கும்.

கல்லீரல் புற்றுநோய்

ந்தியாவில் உயிரிழப்பை ஏற்படுத்தும்

15 நோய்களின் பட்டியலில் கல்லீரல் புற்றுநோய் 8-வது இடத்தில் இருக்கிறது. கல்லீரலில் ஏதாவது ஒரு மூலையில் புற்றுநோய் தோன்றும். இதைத் தொடக்கநிலையிலேயே கண்டறிவது மிகவும் கடினம். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10-ல் 9 பேர் நோய் முற்றியநிலையில்தான் மருத்துவரை அணுகுகிறார்கள். ஏற்கெனவே கல்லீரலில் பாதிப்பு இருப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிக்க 70 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

குறிப்பாக, கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டால் புற்றுநோய் ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், புகைப்பழக்கம் போன்றவற்றாலும் புற்றுநோய் ஏற்படும். கல்லீரல் சுருங்க ஆரம்பித்துவிட்டால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஸ்கேனும் செய்ய வேண்டியது அவசியம். அதனால் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற முடியும்.

வில்சன் நோய்

னிதனின் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துகளும் உலோகங்களும் மிகவும் அவசியம். ஆனால், இவை தேவையான அளவு மட்டுமே இருக்க வேண்டும். உலோகங்களின் அளவு அதிகரிக்கும்போதும் வெவ்வேறு பாதிப்புகள் உண்டாகும்.

உடலில் தாமிரம் (Copper) தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும் பாதிப்பே `வில்சன் நோய்.’ முதன்முதலில் இந்த பாதிப்பைக் கண்டறிந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சாமுவேல் அலெக்ஸாண்டர் கின்னியெர் வில்சன். அவரது பெயரிலேயே இந்த பாதிப்பும் அழைக்கப்படுகிறது.

நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மூலம் உடலுக்குத் தேவையான தாமிரம் கிடைத்துவிடும். அது ரத்தத்தில் கலந்து உடலின் அனைத்து உறுப்புகளையும் சென்றடையும். கல்லீரலில் உற்பத்தியாகும் `செருலோபிளாஸ்மின்’ (Ceruloplasmin) எனும் புரதம் உடலுக்குத் தேவையான தாமிரத்தை எடுத்துக்கொண்டு, மீதியைப் பித்தம் வழியாக வெளியேற்றிவிடும்.

இந்தப் புரதம் சரியான அளவு சுரக்காவிட்டால் கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலம் ஆகியவற்றில் தாமிரம் ஆங்காங்கே தங்கிவிடும். கல்லீரலில் தாமிரம் அதிகமாகச் சேரும்போது மஞ்சள்காமாலை, வாந்தி, அடிவயிற்றில் நீர்கோத்தல், கால்வலி, சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ல்லீரல் செயலிழப்பு 10, 15 வயதிலேயே ஏற்பட்டால் அதற்கு வில்சன் நோய்தான் மூல காரணமாக இருக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டு கல்லீரல் சுருக்கம் உருவாவதற்கு முன்னரே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், குறிப்பிட்ட சில மாத்திரைகளின் மூலம் சரிசெய்துவிடலாம்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

பிரச்னை தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மாற்றிப் பொருத்தப்படும் புதிய கல்லீரலில் `செருலோபிளாஸ்மின்’ சரியாகச் சுரந்து, தாமிரம் படிவது தடுத்து நிறுத்தப்படும்.

அயர்ன் மெட்டபாலிஸம்

சிலருக்குப் பிறக்கும்போதே மரபணு பிரச்னைகளால் இதயம், கணையம், கல்லீரல், மூட்டு உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து சேர ஆரம்பித்துவிடும். இதைத்தான் `அயர்ன் மெட்டபாலிஸம்’ என்கிறோம். அதனால் இதயம், கணையம், கல்லீரல் சார்ந்த பிரச்னைகள், சர்க்கரைநோய் ஆகியவை ஏற்படும். சருமம் கறுத்துப்போதல், கால் மற்றும் வயிற்று வீக்கம், மஞ்சள்காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்படும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

இவர்களுக்கு, கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இரும்புச்சத்து அதிகமாகச் சேர்வதைத் தடுக்க `டிஃபெராக்ஸமைன்’ (Deferoxamine) என்ற மருந்து பரிந்துரைக்கப்படும். இந்தப் பிரச்னையால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்போது குறிப்பிட்டகால இடைவெளிகளில் குறிப்பிட்ட அளவு ரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்.

கல்லீரல் மாற்று சிகிச்சை

எப்போது அவசியம்?

பிரச்னைக்கான அறிகுறிகள் வெளியே தெரிந்தாலே 50 சதவிகிதத்துக்கும் மேல் கல்லீரல் பாதிப்படைந்துவிட்டது என்று பொருள். இத்தனை சதவிகிதம் பாதிப்புக்குத்தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமெல்லாம் கிடையாது.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

ரத்த வாந்தி, வயிற்றில் நீர்க்கோத்தல், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் பிரச்னையால் சிறுநீரகம் பாதிப்படைவது (Hepatorenal Syndrome) மற்றும் நுரையீரல் பாதிப்பு (Pulmonary Syndrome) போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

`மெல்டு ஸ்கோர்’

ரு நோயாளியின் ரத்தப் பரிசோதனை அறிக்கையைக்கொண்டு கல்லீரல் பாதிப்புக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படும். அது `மெல்டு ஸ்கோர்’ (Meld Score - Model for End Stage Liver Disease) என்று அழைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் வரம்பு 6 - 40வரை இருக்கும். அதில் நோயாளியின் மதிப்பெண் 15-ஐத் தாண்டிவிட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும்.

உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான வெற்றி விகிதம் 90 சதவிகிதமாக இருக்கிறது.

மூளைச்சாவு அடைந்த நபரிடம் தானம் பெற்று அல்லது உயிருடன் இருப்பவர்களிடமிருந்து தானம் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

உயிருடன் இருப்பவர்கள் தானமளிக்க முன்வந்தால், அவர்களின் கல்லீரலின் செயல்பாடுகளைப் பரிசோதனை செய்து, ‘ஆரோக்கியமாக இருக்கிறது’ என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே கல்லீரலை தானம் பெற முடியும். தானம் அளிப்பவர்களிடமிருந்து 65 சதவிகிதம் கல்லீரல் பெறப்பட்டு, பிறருக்குப் பொருத்தப்படும். கல்லீரல் தானம் கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் மூன்று வாரங்களிலேயே கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடைந்துவிடும்.

மஞ்சள்காமாலை

ஞ்சள்காமாலை என்பது நோயல்ல. கல்லீரல் புற்றுநோய், பித்தப்பையில் கற்கள், பித்தக்குழாயில் புற்றுநோய், கணையத்தில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அறிகுறி. கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் அடைத்துக்கொள்வோருக்கும், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புக்குள்ளானோருக்கும், காசநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சிலருக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம்.

மதுப்பழக்கம் உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள், விஷம் உட்கொள்பவர்களுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படலாம். ரத்தப் பரிசோதனைகள் மூலம் மஞ்சள்காமாலை பாதிப்பு உறுதிசெய்யப்படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு!

த்த செல்கள் உடைவதால், பிறந்த குழந்தைகளுக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம். இந்தப் பிரச்னைக்கு போட்டோதெரபி’ (Phototherapy) எனப்படும் ஒளி சிகிச்சை அளிக்கப்படும். இந்தச் சிகிச்சையில் பாதிப்பு சரியாகவில்லையென்றால் பைலரி அட்ரீசியா’ (Biliary Atresia) என்ற பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். உடலில் கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேற ஒரு குழாய் உண்டு.

அதை, `பித்தக்குழாய்’ என்போம். அந்தக் குழாய் குடலில் சென்று இணையும். சில குழந்தைகளுக்கு கல்லீரலின் உள்ளே இருக்கும் பித்தக்குழாய் சரியாக வளர்ச்சியடைந்திருக்கும். ஆனால், வெளியே இருக்கும் பித்தக்குழாய் வளர்ச்சியடையாமல் காணப்படும். இதனால் கல்லீரலுக்குள்ளேயே பித்தம் தங்கிவிடும்.

ல்லீரலிலிருந்து குடலுக்குப் பித்தம் வெளியேற்றப்படாது என்பதால், குழந்தையின் மலம் வெளிறிய நிறத்தில் காணப்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், ‘ஹைடா ஸ்கேன்’ (HIDA Scan) செய்ய வேண்டும். இந்தப் பிரச்னைக்கு குழந்தை பிறந்து 100 நாள்களுக்குள் கல்லீரலுக்கு வெளியே இருக்கும் பித்தக்குழாயை குடலுடன் இணைக்கும் `கசாய்’ (KASAI) என்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்து 100 நாள்கள் தாண்டிவிட்டன அல்லது கசாய் சிகிச்சை பலனளிக்கவில்லையென்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு.

மதுப்பழக்கமும் கல்லீரலும்!

யல்பாகவே கல்லீரலுக்கு சகிப்புத் தன்மை உண்டு. அதனால் மது அருந்தும்போது அதை மருந்தாகக் கருத்தில்கொண்டு வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்திவிடும். அளவுக்கு மீறிக் குடிக்கும்போது கல்லீரலிலுள்ள செல்கள் அழிந்துபோகும். இதனால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு கல்லீரலில் வீக்கம் ஏற்படும். இந்த நிலையை `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ (Alcoholic Liver Disease) என்கிறோம். இந்தப் பிரச்னையை கவனிக்காமல்விட்டால் கல்லீரல் சுருக்கம் ஏற்படும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

கல்லீரல் கொழுப்புநோயைப்போலவே `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ பாதிப்பிலிருந்தும் முழுமையாக மீள்வதற்கு வாய்ப்பு உண்டு. கல்லீரலில் வீக்கம் இருப்பது தெரியவந்தால் குடிப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும். அப்போது அழிந்துபோன செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்கி கல்லீரல் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும். இந்த வாய்ப்பைக் கல்லீரலுக்கு வழங்க வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட பிறகு ஒரு துளிகூட மது அருந்தாமல் தவிர்த்தால், ஆரோக்கியமான கல்லீரலைத் திரும்பப் பெறலாம்.

சோஷியல் டிரிங்கிங்

மேற்கத்திய நாடுகளில் வார இறுதி நாள்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் (சோஷியல் டிரிங்கிங்) உண்டு. மேற்கத்திய கலாசாரம் இந்தியாவிலும் பரவி, அதேபோல மது அருந்தும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களைவிட இந்தியர்கள் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதால் இந்தியர்களிடையே கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் நகரத்திலுள்ள பெண்களையும் மதுப்பழக்கத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும்.

தவிர்க்க வேண்டியவை

கார்போஹைட்ரேட் நிறைந்த, மறுசுழற்சி செய்யப்பட்ட அரிசி, சர்க்கரை, மைதா போன்ற உணவு வகைகளைக் குறைக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த பூரி, வடை போன்ற பதார்த்தங்கள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

கல்லீரல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமாக எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. கல்லீரலில் பிரச்னை இருக்கும்போது வேறு பாதிப்புகளுக்கு மருந்து எடுக்க வேண்டியிருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே அவற்றைச் சாப்பிட வேண்டும்.

இரவில் தாமதமாகச் சாப்பிடுவது கல்லீரலை பாதிக்குமா?

கல்லீரல் கொழுப்புநோய் வருவதற்கான முக்கியக் காரணமே இரவில் தாமதமாகச் சாப்பிடுவதுதான். ‘காலையில் அரசனைப்போலவும், இரவில் பிச்சைக்காரனைப்போலவும் சாப்பிட வேண்டும்’ என்ற சொலவடையைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, இரவில் எளிதாகச் செரிமானமாகும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு வருமா?

கல்லீரல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மதுப்பழக்கம், அசைவ உணவுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். இத்தகையோர் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களாகவோ, உடற்பயிற்சி செய்யாதவர்களாகவோ இருந்தால் கொழுப்பு சேர்ந்து கல்லீரல் கொழுப்புநோய் ஏற்படலாம். ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவையே கல்லீரலைப் பாதுகாக்கும் வழிகள்.

கீழாநெல்லி வேர்

மஞ்சள்காமாலையை குணப்படுத்துமா?

`மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி வேர் மருந்து’ என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

ஆனாலும் கீழாநெல்லி வேர் என்பது ஆதரவு மருந்தாகத்தான் (Supportive Medicine) வழங்கப்படுகிறது என்பதால் அதைச் சாப்பிடலாம். ஆனால், கடைகளில் விற்கப்படும் கீழாநெல்லி மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. இத்தகைய மருந்துகளில் ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படுவதால், அவை கல்லீரலை பாதிக்கும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

கல்லீரலைப் பாதுகாக்கும் உணவுகள்!

புரொக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ்: இவற்றை குரூசிஃபெரஸ் காய்கறிகள்’ (Cruciferous Vegetables) என்று குறிப்பிடுவார்கள். இவற்றில் குளூக்கோசினோலேட்’ (Glucosinolate), சல்ஃபர் (Sulfur) போன்ற வேதிப்பொருள்கள் நிறைந்துள்ளன.

இவை கொழுப்பைக் குறைப்பதுடன், கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, நொதிகளை அதிகம் சுரக்கவைக்கும்.

முட்கள் நிறைந்த பேரிக்காய்: முட்கள் நிறைந்த பேரிக்காய் கல்லீரலை பலப்படுத்தி நோய்கள் வராமல் காக்கும். இதில் ‘பெக்டின்’ (Pectin) எனும் மாவுச்சத்து அதிகளவில் உள்ளது. தீங்கு விளைவிக்கும்

`எல்.டி.எல்’ (LDL Cholesterol) எனும் கெட்ட கொழுப்பையும், மது அருந்துவதால் கல்லீரலில் சேரும் நச்சுகளையும் வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாக்கும்.

அவகேடோ: அவகேடோவில் `குளூட்டதியோன்’

(Glutathione) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ளது. இது கல்லீரலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவும்.

திராட்சை: சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சைகள் கல்லீரலைப் பாதுகாக்கக்கூடியவை. இவற்றிலுள்ள `ரெஸ்வெரட்ரால்’ (Resveratrol) எனும் வேதிப்பொருள் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியைத் தடுக்கும். நிறைய விதைகளுள்ள திராட்சைகளைச் சாப்பிடுவது நல்லது.

நார்த்தம்பழம்: நார்த்தம்பழத்தில் `நாரின்ஜெனின்’

(Naringenin) எனும் வேதிப் பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது. கல்லீரலின் உள்ளே படியும் கொழுப்பைக் குறைக்கவும், கல்லீரலில் சுரக்கும் நொதிகளை அதிகரிக்கவும் இது உதவும்.

பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய்: கல்லீரலைப் பாதுகாப்பதில் பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய் மூன்றும் முக்கியமானவை. இவற்றில் ‘மோனோஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலம்

(Monounsaturated Fatty Acid) அதிகம் உள்ளதால் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இவற்றிலுள்ள வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும்.

பூண்டு: வெள்ளைப்பூண்டில் அலிசின்’ (Allicin) எனும் வேதிப் பொருள் உள்ளது. செலினியம்’ (Selenium) தாதுவும் அதிகம் நிறைந்துள்ளது. இவை இரண்டும் உடல் எடையைக் குறைக்கும். கல்லீரலில் சேரும் கொழுப்பை நீக்கி, நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும்.

மீன்: மீன்களில் `ஒமேகா 3 கொழுப்பு அமிலம்’ (Omega 3 Fatty Acid) அதிகம் உள்ளது. இது உடலில் எங்கே நச்சுப் பொருள்கள் இருந்தாலும், அவற்றை வெளியேற்ற உதவும். கல்லீரல் வீக்கம், அழற்சி போன்றவற்றைத் தடுக்கும். மீனை எண்ணெயில் பொரித்து உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு

காபி: காபியிலுள்ள கஃபைன்’ (Cafeine), பாராஸான்தைன்’

(Paraxanthine) எனப்படும் வேதிப்பொருளையும், காவியோல்’ (Kahweol), கேஃப்ஸ்டோல்’ (Cafestol) அமிலங்களையும் உற்பத்தி செய்கிறது. இவை மூன்றும் கல்லீரலைப் பாதுகாப்பதுடன், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகின்றன. இது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

‘ஹெபடைட்டிஸ் டி’ வைரஸ்!

ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹெபடைட்டிஸ் டி வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நீடித்த ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள ஐந்து சதவிகிதம் பேருக்கு, டி வைரஸ் பாதிப்பு ஏற்படும். இது மிகவும் அரிதான தொற்று வைரஸ். பிரசவத்தின்போது தாயிடமிருந்து குழந்தைக்கும், உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் பரவும்.

ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். பி மற்றும் டி வைரஸ் இணை, கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக்கொண்டால் டி வைரஸைத் தடுக்கலாம்.

- கிராபியென் ப்ளாக்உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.

Liver Protection: What to Eat & What to Avoid – A Simple Guide | கல்லீரல் காப்போம் : உண்ண வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை - எளிமையான கையேடு - Vikatan

ADHD: இது பெரிய பிரச்னையா? எப்படிக் கண்டறிவது? மருத்துவ உதவியில்லாமல் சமாளிக்க முடியுமா? | Explained

3 months ago

ஆலியா பட் , ஃபகத் ஃபாசில் மற்றும் பிக் பாஸ் பிரபலம் மாயா எனப் பலருக்கும் ADHD இருக்கிறது என்று செய்திகளில் பார்த்திருப்போம். இந்த ADHD பிரச்னை இருப்பதை எப்படிக் கண்டறிவது, இது யாருக்கெல்லாம் வரும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன சவால்களைச் சந்திக்கிறார்கள், இதைக் குணப்படுத்த முடியுமா என மனநல மருத்துவர் மற்றும் விளையாட்டு சிகிச்சை நிபுணர் (Play Therapy Specialist) மீனா நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

ADHD (Attention deficit/hyperactivity disorder) என்பது நியூரோ டெவெலப்மென்டைல் கண்டிஷன் (Neuro developmetal condition) ஆகும். அதாவது மூளையோடு தொடர்புடைய பிரச்னை!

ADHD வகைகள்

1. இன்அட்டென்டிவ் (inattentive) - இதில் கவனித்தல் பிரச்னைதான் முக்கிய காரணமாக இருக்கும்.

2. இம்பல்சிவ் ஹைப்பர் ஆக்டிவ் (impulsive hyperactive) - இதில் அதிகமான இயக்கம், படப்படப்பு மற்றும் அமைதியின்மை அதிகமாக இருக்கும். மேலும் இவர்கள் யோசிக்காமல் முடிவுகளை உடனுக்குடன் (இம்பல்சிவ் டெசிஷன்ஸ்) எடுப்பார்கள்.

3. இரண்டும் கலந்த வகை (combined) - இது கடுமையான பிரச்னை

எப்படிக் கண்டறிவது?

• கவனம் இல்லாமை

• நிலையில்லாத மனது

• அதிகப்படியான உடல் இயக்கம்

• உடல் சோர்வு மற்றும் படப்படப்பு

போன்ற அறிகுறிகளை வைத்து அறியலாம். இவர்கள் எப்போதுமே அசைவில் இருக்கவே விரும்புவார்கள். இவர்களின் மூளைக்கு அது அவசியமாகப்படும். சில நேரங்களில் உடல் அசைவுகள் இல்லாத போது 'ஃபிட்ஜெட் ஸ்பின்னர்' போன்ற பொம்மைகள் இவர்களுக்கு உதவும். அதைக் கையில் வைத்துச் சுற்றிக்கொண்டே இருக்கும்போது உடல் அசைவினில் இருப்பதாக எண்ணி மூளை அமைதியடையும்.

எந்த வயதில் இது வெளிப்படும்?

பொதுவாகக் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே இதன் அடையாளங்களைக் கண்டறிய முடியும். சிலருக்கு 'ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி' இல்லாமல் மற்ற அனைத்து அறிகுறிகளும் இருக்கும். இது ADD (Attention deficit disorder) ஆகும். இதை கண்டறிவது சிரமமே! ADHD-ஐ அதீத சுறுசுறுப்பு, படப்படப்பு போன்றவற்றை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ADD இருக்கும் குழந்தைகள் இயல்பாக இருப்பதுபோலத்தான் தெரிவார்கள். அவர்களுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்துவதில் பிரச்னை வரும். 5 முதல் 6 வருடங்களுக்குப் பிறகே இவர்களுக்கு பிரச்னை இருப்பதே தெரியவரும்.

ADD - ADHD

ADD - ADHD

ADHD மற்றும் ADD-ஆல் வரும் பாதிப்புகள்:

~ எந்த விஷயத்தையும் முறையாக நிர்வகிக்க முடியாது

~ மறதி

~ நேர மேலாண்மை இல்லாமை

~ இடத்தைக் குப்பையாக வைத்திருப்பது

~ பொருட்களை அடிக்கடி தொலைப்பது

சிறு வயதிலேயே இந்த ADHD வரும்போது குழந்தைகள் ஹைப்பராகச் செயல்படுவார்கள். குதிப்பது, ஓடுவது என ஓர் இடத்தில் உட்காரவே மாட்டார்கள். முக்கியமாக வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் கவனிக்கவே முடியாது. அருகில் அமர்ந்திருப்பவர்களைத் தொந்தரவு செய்வார்கள். இதெல்லாம் நாளுக்கு நாள் நடக்கக் கூடிய பாதிப்புகள்! இதைக் கண்டறியாமல் விட்டால் பெரியவர்கள் ஆனபிறகும் தொடரும்.

ADHD-ஐ சரி செய்ய முடியுமா?

இந்த ADHD-ஐ சரி செய்ய முடியாது. ஆனால், அதைச் சமாளித்து அதோடு ஒன்றிணைந்து வாழ முடியும். சீக்கிரமே கண்டறிந்தால் அதிகமாகாமல் தடுக்க முடியும். இதைப் பெரியவர்களாக இருக்கும்போது கண்டறியும் பட்சத்தில் அவர்களின் தன்னம்பிக்கை, வாழ்க்கைத் தரம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. மருத்துவரிடம் ஆலோசித்து, பிரச்னை எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதைச் சமாளிக்கும் வழிகளைக் கற்றுக்கொண்டால் நிம்மதி பிறக்கலாம். இவர்களை வழிநடத்த, தேவையானபோது நினைவூட்ட எனச் சில செயலிகளும் இப்போது உள்ளன. இதனால் அவர்களின் நிர்வகிப்பு திறன் மற்றும் நேர மேலாண்மை மேம்படும்.

ADHD இருப்பவர்கள் ஒரு மருத்துவரை அணுகுவது அவசியமா? சுயமாகவே சமாளிக்க முடியுமா?

முதலில் நமக்கு உண்மையாகவே ADHD இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டும். சில சமயங்களில் சிலர் உண்மையாகவே அதீத ஆற்றல் கொண்ட குழந்தையாகக் கூட இருக்கலாம். இதை மனநல மருத்துவர் அல்லது உளவியலாளர்களால் மட்டுமே கண்டறிய முடியும். இதைக் கண்டறிந்த பின்னரே பாதிப்பின் அளவும் நமக்குத் தெரிய வரும். ஏனென்றால், இந்த ADHD அனைவருக்கும் ஒரே அளவில் இருக்காது. குறைவான, நடுத்தரமான மற்றும் அதிகமான என மூன்று அளவுகளில் இது இருக்கும்.


அதிகமான அளவு இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக மருந்து மற்றும் மாத்திரைகளின் தேவை இருக்கும். இவர்களைப் பெற்றோர்களால் தனியாகச் சமாளிக்க முடியாது.

நடுத்தர அளவு பாதிப்புள்ளவர்கள் மருத்துவரை அணுகி, அதைச் சமாளிப்பதற்கான வழிகளைத் தெரிந்துகொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும்.

குறைவான அளவு பாதிப்புள்ளவர்கள் பெற்றோரின் உதவியோடு இதைச் சமாளிக்க முடியும். இதைப் பற்றி நிறையப் புத்தகங்களும் உள்ளன. அவற்றை வாசித்து பிரச்னை குறித்துத் தெரிந்துகொண்டால், இந்த குறைவான அளவு ADHD பாதிப்பை நீங்களே சமாளிக்கலாம். ஆனால் பாதிப்பு அளவைக் கண்டறிய மருத்துவரின் உதவி அவசியமானது.

இவர்களால் தினசரியாக ஒரு வழக்கத்தை (Routine) பின்பற்ற முடியுமா?

இவர்களுக்குச் சொந்தமாக ஒரு வழக்கத்தை உருவாக்கி அதைப் பின்பற்றுவது கடினமாகவே இருக்கும். வெளியிலிருந்து ஒரு நபர் உதவி, இவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டும். அதேபோல் அது கடினமான வழக்கமாக இல்லாமல் எளிமையாக, பின்பற்றக் கூடிய ஒன்றாக இருக்கவேண்டும்.

இவர்களுக்கு அதிகப்படியான திட்டமிடல் தேவைப்படும். எளிமையான வழக்கம், முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் ஒருவரின் உதவி என இந்த மூன்று விஷயங்களும் இருந்தால் இந்தப் பிரச்னையை சமாளிப்பது அவர்களுக்கு எளிதாகிவிடும்.

மனநல மருத்துவர் மற்றும் விளையாட்டு சிகிச்சை நிபுணர் மீனா

மனநல மருத்துவர் மற்றும் விளையாட்டு சிகிச்சை நிபுணர் மீனா

பாதிக்கப்பட்டவர்களுக்கு நண்பர்கள் எவ்வாறு உதவலாம்?

நண்பர்கள் முதலில் இவர்களுக்கு என்ன பிரச்னை உள்ளது, எதனால் வருகிறது, எப்படியெல்லாம் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து, புரிந்துகொண்டால் இவர்கள் கொஞ்சம் ஆதரவாகவும் ஆறுதலாகவும் உணருவார்கள். மேலும் இவர்கள் மறக்கும் விஷயத்தைக் கடுமையான முறையில் வெளிப்படுத்தாமல் மெதுவாக நினைவுபடுத்த வேண்டும். சின்னசின்ன விஷயங்களில் நண்பர்களும் சுற்றியிருக்கும் உறவினர்களும் ஆதரவாக இருக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக இவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்."

விரிவாக எடுத்துரைத்த மருத்துவர் மீனா, நம்முடன் அவருடைய தனிப்பட்ட கதையையும் பகிர்ந்துகொள்கிறார். "என்னுடைய மகனுக்கும் இந்த ADHD உள்ளது. அதனால்தான் நான் இந்த துறைக்கே வந்தேன். என் மகனுக்கு உட்கார்ந்து ஒரு பாடம் படிப்பது என்பதே கடினமாக இருந்தது. அதைப் புரிந்துகொண்டு, அவன் ஓடி ஆடி விளையாடும் போது அந்த பாடத்தை அவனுக்கு வாசித்துக் காட்டி அவனைப் படிக்க வைத்தேன். அப்படி படித்துத்தான் அவன் ஸ்கூல் டாப்பர ஆனான். அவனுக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் இருப்பது தெரிந்து அதற்கும் ஊக்கப்படுத்தினோம். உடல் இயக்கம் இவர்களுக்கு ரொம்ப முக்கியம். என் பையன் ஒரு மாரத்தான் ஓடும் அளவுக்குச் சிறந்து விளங்குகிறான். கல்லூரியில் கூட உடற்பயிற்சி உடலியல்தான் படிக்கிறான். அவன் இப்போது இந்த ADHD-ஐ பிரச்னையாக பார்க்கவில்லை. அதை தன் பலமாகக் கருதுகிறான்!" என்றார் பெருமையாக!

ADHD: இது பெரிய பிரச்னையா? எப்படிக் கண்டறிவது? மருத்துவ உதவியில்லாமல் சமாளிக்க முடியுமா? | Explained | A complete guide on ADHD and how to control it - Vikatan

நோய் பாதிப்பை பல ஆண்டுக்கு முன்பே வெளிப்படுத்தும் உடல் வாசனை - எந்த நோய்க்கு என்ன வாசனை?

3 months ago

மனித உடல் வாசனை மற்றும் நோய் பாதிப்பை கண்டறிதல்

பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images

கட்டுரை தகவல்

  • ஜஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

நமது சருமத்தில் உள்ள நுண்துளைகள் மற்றும் மூச்சுக்காற்று மூலம் பல்வேறு வேதிப்பொருட்களை நாம் வெளியிடுகிறோம். இவற்றில் சில நாம் நோய்வாய்ப்படவிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சில நோய்களை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியவும் இவை பயன்படுத்தப்படலாம்.

"இது முற்றிலும் முட்டாள்தனம்."

பார்கின்சன் நோயை முகர்ந்து கண்டறியும் திறன் தனக்கு இருப்பதாக ஒரு ஸ்காட்லாந்துப் பெண்மணி கூறியதைப் பற்றி உடன் பணிபுரியும் ஒருவர் கூறிய போது, பகுப்பாய்வு வேதியியலாளர் பெர்டிடா பாரன் இப்படித்தான் எதிர்வினையாற்றினார்.

"அவர் வயதானவர்களின் வாசனையை முகர்ந்து, பார்கின்சன் நோயின் அறிகுறிகளை அடையாளம் கண்டு, ஏதோ ஒன்றை தொடர்புபடுத்தியிருக்கலாம்" என்று நினைத்ததாக பாரன் நினைவு கூர்ந்தார். ஜாய் மில்னே என்ற 74 வயதான ஓய்வுபெற்ற செவிலியர், 2012-ல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி திலோ குனாத் என்பவர் ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போது அவரை அணுகினார்.

மில்னே, பல ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் லெஸ் உடலில் ஒரு புதிய வாசனை தோன்றியதை முதன் முதலில் கவனித்த பிறகு, தனது திறனைக் கண்டறிந்ததாகக் குனாத்திடம் தெரிவித்தார். பின்னர், நடுக்கம் மற்றும் பிற இயக்க அறிகுறிகளால் வகைப்படுத்தப்படும் ஒரு படிப்படியாக அதிகரிக்கும் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோயால் அவரது கணவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஸ்காட்லாந்தில் உள்ள பெர்த் நகரில் பார்கின்சன் நோயாளிகளின் குழு கூட்டத்தில் மில்னே கலந்து கொண்ட போதுதான், அவரால் அந்தத் தொடர்பைக் கண்டறிய முடிந்தது: அனைத்து நோயாளிகளுக்கும் அதே வாசனை இருந்தது.

"அதனால், அவர் சொன்னது சரியா என்று சோதித்துப் பார்க்க நாங்கள் முடிவு செய்தோம்" என்று அந்த நேரத்தில் எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த பாரன் கூறுகிறார். தற்போது அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.

மில்னே சொன்னது நேரத்தை வீணடிக்கும் விஷயம் இல்லை என்பது தெரியவந்தது. குனாத், பாரன் மற்றும் அவர்களது சகாக்கள் மில்னேவை 12 டி-ஷர்ட்களை முகர்ந்து பார்க்கச் சொன்னார்கள். அதில், ஆறு பார்கின்சன் நோயாளிகளால் அணியப்பட்டவை. மேலும் ஆறு அந்த நோய் இல்லாத மற்றவர்களால் அணியப்பட்டவை. அவர் ஆறு நோயாளிகளையும் சரியாக அடையாளம் கண்டார். அடுத்த ஒரு வருடத்திற்குள் பார்கின்சன் நோய் பாதிக்கப்படவிருந்த ஒருவரையும் அவர் அடையாளம் கண்டார்.

"இது ஆச்சரியமாக இருந்தது," என்று பாரன் கூறுகிறார். "அவர் தனது கணவரிடம் செய்தது போலவே, அந்த நிலையையும் முன்கூட்டியே கண்டறிந்தார்."

2015-ல், அவரது இந்த அற்புதமான திறன் குறித்த செய்திகள் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளாகின.

மில்னேவின் கதை நீங்கள் நினைப்பது போல் விசித்திரமானது அல்ல. மக்களின் உடல்கள் பல்வேறு நாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. ஒரு புதிய வாசனை உடலில் ஏதோ மாற்றம் அல்லது தவறு நடந்திருப்பதைக் குறிக்கலாம்.

இப்போது, பார்கின்சன் நோய் மற்றும் மூளைக் காயங்கள் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நிலைகளைக் கண்டறிவதை விரைவுபடுத்தக் கூடிய வாசனைகளைக் கண்டறியும் நுட்பங்களில் விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். அவற்றைக் கண்டறியும் திறன் நம் மூக்கின் அடியிலேயே மறைந்திருந்திருக்கலாம்.

மனித உடல் வாசனை மற்றும் நோய் பாதிப்பை கண்டறிதல்

பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images

படக்குறிப்பு, நாற்றங்கள் நமது மூக்கில் உள்ள வாசனை வாங்கிகளுடன் தொடர்பு கொள்ளும் வேதிப்பொருட்களால் ஏற்படுகின்றன.

"ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய, அவர்களின் பின்புறத்தில் ஊசிகளைச் செருகுகிறோம். ஆனால், அதைக் காட்டும் சமிக்ஞை ஏற்கனவே வெளியே உள்ளது. அதை நாய்களால் கண்டறிய முடியும் என்கிற நிலையில் மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்பது என்னைக் கோபப்படுத்துகிறது," என்கிறார் ஆண்ட்ரியாஸ் மெர்ஷின். இவர், வாசனை அடிப்படையில் நோய்களைக் கண்டறிய ஒரு ரோபோ மூக்கை உருவாக்கி வரும் ரியல்நோஸ்.ஏஐ (RealNose.ai) என்ற நிறுவனத்தின் இயற்பியலாளர் மற்றும் இணை நிறுவனர் ஆவார். ஒரு நோயின் ஆரம்ப கட்டங்களில் தோன்றும் இந்த உயிர் வேதியியல் பொருட்களைக் கண்டறிய போதுமான சக்திவாய்ந்த மூக்கு சிலரிடம் மட்டுமே இருப்பதால், இத்தகைய தொழில்நுட்பம் அவசியமானது.

ஜாய் மில்னே, அந்தச் சிலரில் ஒருவர் என்பது தெரியவந்தது. அவருக்கு மரபுவழி ஹைபரோஸ்மியா உள்ளது. இதனால் அவரது வாசனை உணர்வு சராசரி மனிதரை விட மிகவும் அதிக உணர்திறன் கொண்டது – அதாவது அவருக்கு ஒரு வகையான அதீத முகர்ந்து பார்க்கும் திறன் இருக்கிறது.

சில நோய்கள் மிகவும் வலுவான, தனித்துவமான வாசனையை வெளியிடுகின்றன. பெரும்பாலான மனிதர்களால் அவற்றின் வாசனையை முகர்ந்து பார்க்க முடியும். உதாரணமாக, நீரிழிவு நோயாளிகளின் மூச்சு அல்லது தோலில், ரத்த ஓட்டத்தில் கீட்டோன்கள் எனப்படும் பழ வாசனை கொண்ட அமில வேதிப்பொருட்கள் அதிகமாகச் சேர்வதால், ஒரு பழ வாசனை அல்லது "அழுகிய ஆப்பிள்" வாசனை வரலாம். உடல் குளுக்கோஸுக்குப் பதிலாகக் கொழுப்பை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தும்போது இவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு மூச்சு அல்லது சிறுநீரில் ஒருவித கந்தக வாசனை வெளிப்படலாம். அதே சமயம், உங்கள் மூச்சில் அமோனியா வாசனை வீசினால் அல்லது "மீன் போன்ற" அல்லது "சிறுநீர் போன்ற" வாசனை இருந்தால், இது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

சில தொற்று நோய்களும் தனித்துவமான வாசனையை வெளியிடுகின்றன. இனிப்பு மணம் கொண்ட மலம் காலரா அல்லது குளோஸ்ட்ரிடியோய்ட்ஸ் டிஃபிசில் பாக்டீரியாவால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். இது வயிற்றுப்போக்கிற்கு ஒரு பொதுவான காரணமாகும் - இருப்பினும், ஒரு ஆய்வில், ஒரு மருத்துவமனை செவிலியர்கள் குழுவால் மலத்தை முகர்ந்து நோயாளிகளின் நோய்களை சரியாகக் கண்டறிய முடியவில்லை என தெரியவந்தது. இதற்கிடையில், காசநோய் ஒரு நபரின் மூச்சில் பழைய பீர் போன்ற துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம் மற்றும் அவர்களின் தோல் ஈரமான பழுப்பு நிற அட்டை மற்றும் உப்புக் கரைசல் போன்ற வாசனையை வெளிப்படுத்தலாம்.

இருப்பினும், மற்ற நோய்களைக் கண்டறிய ஒரு சிறப்பு வகையான மூக்கு தேவைப்படுகிறது.

உதாரணமாக, நாய்களுக்கு மனிதர்களை விட 100,000 மடங்கு வலுவான வாசனை உணர்வு இருப்பதாகக் கூறப்படுகிறது. நுரையீரல், மார்பகம், கருப்பை, சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களை மக்களிடம் முகர்ந்து கண்டறிய நாய்களுக்கு விஞ்ஞானிகள் பயிற்சி அளித்துள்ளனர். உதாரணமாக, புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த ஒரு ஆய்வில், சிறுநீர் மாதிரிகளில் நோயைக் கண்டறிய நாய்களால் 99% வெற்றிகரமாகச் செயல்பட முடிந்தது. பார்கின்சன் நோய், நீரிழிவு நோய், வலிப்பு நோய்க்கான அறிகுறிகள் மற்றும் மலேரியா ஆகியவற்றின் ஆரம்ப அறிகுறிகளை வெறும் வாசனையை வைத்து கண்டறியவும் நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.

ஆனால், எல்லா நாய்களுக்கும் ஒரு நோய்க் கண்டறிதல் நாயாக மாறத் தேவையான திறமை இல்லை. அத்தகைய திறமை இருக்கும் நாய்களுக்குப் பயிற்சி அளிக்க நேரம் எடுக்கும். சில விஞ்ஞானிகள், நாய்கள் மற்றும் மில்னே போன்றவர்களின் அற்புதமான வாசனை திறன்களை ஆய்வகத்தில் உருவாக்கி, ஒரு எளிய துணியின் மூலம் நோயை கண்டறியும் வாய்ப்பை வழங்கலாம் என்று கூறுகிறார்கள்.

உதாரணமாக, பார்கின்சன் நோயாளிகளிடமிருந்து செபத்தை (மக்களின் தோலில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் போன்ற பொருள்) பகுப்பாய்வு செய்ய பாரன், வாயு நிற மூர்த்தம்-நிறை நிறமாலைமானியைப் (gas chromatography-mass spectrometry) பயன்படுத்துகிறார். வாயு நிறமூர்த்தம் சேர்மங்களைப் பிரிக்கிறது. நிறை நிறமாலைமானி அவற்றின் எடையை அளவிடுகிறது. அதில் உள்ள மூலக்கூறுகளின் தன்மையைத் துல்லியமான தீர்மானிக்க இது உதவுகிறது. உணவு, பானம் மற்றும் வாசனைத் திரவியத் தொழில்கள் ஏற்கனவே இந்த வாசனைப் பகுப்பாய்வு முறையை வழக்கமாகப் பயன்படுத்துகின்றன.

மனித தோலில் பொதுவாகக் காணப்படும் சுமார் 25,000 சேர்மங்களில், சுமார் 3,000 சேர்மங்கள் பார்கின்சன் நோய் உள்ளவர்களிடம் வித்தியாசமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்று பாரன் கூறுகிறார். "பார்கின்சன் நோய் உள்ள அனைவரிடமும் தொடர்ந்து வித்தியாசமாக இருக்கும் சுமார் 30 சேர்மங்களை நாங்கள் வகைப்படுத்தியுள்ளோம்."

பல சேர்மங்கள் கொழுப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் என்று அவர் கூறுகிறார். உதாரணமாக, ஒரு ஆரம்ப ஆய்வு, இந்த நோயினால் ஏற்படும் வாசனைக்கு தொடர்புடைய மூன்று கொழுப்பு போன்ற மூலக்கூறுகளில் கவனம் செலுத்தியது. அவை, ஹிப்பியூரிக் அமிலம், ஈகோசேன் மற்றும் ஆக்டாடெகானல். முந்தைய ஆய்வுகள், அசாதாரண கொழுப்பு வளர்சிதை மாற்றம் பார்கின்சன் நோயின் ஒரு முக்கிய அம்சம் என்று கூறுவதால், இது சரியான முறையாக தோன்றுகிறது.

"பார்கின்சன் நோய் உள்ளவர்களிடம் கொழுப்பு அமிலங்களை மைட்டோகாண்ட்ரியாவுக்குள் கொண்டு செல்லும் செல்களின் திறன் குறைபாடுள்ளதைக் கண்டறிந்துள்ளோம்" என்று பாரன் கூறுகிறார். "எனவே, இந்த கொழுப்புகள் உடலில் அதிகமாக சுழன்று கொண்டிருக்கின்றன என்று எங்களுக்குத் தெரியும். அவற்றில் சில தோலின் வழியாக வெளியேற்றப்படுகின்றன, அதைத்தான் நாங்கள் அளவிடுகிறோம்."

இந்த குழு இப்போது பார்கின்சன் நோயை அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறியக் கூடிய ஒரு எளிய பரிசோதனையை (skin swab test) உருவாக்கி வருகிறது. தற்போது, நடுக்கம் போன்ற அறிகுறிகளைக் காட்டும் நபர்கள் பொதுவாக ஒரு நரம்பியல் நிபுணரிடம் பரிந்துரைக்கப்படுகிறார்கள். அவர் பின்னர் ஒரு நோயறிதலைச் செய்வார். இதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்.

"ஒருவரை திறம்பட பரிசோதிக்க உதவும் ஒரு மிக விரைவான, ஊடுருவல் இல்லாத பரிசோதனை முறையை நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் அவர்கள் ஒரு நரம்பியல் நிபுணரைச் சந்தித்து, அவர் ஆய்வு செய்து 'ஆம்' அல்லது 'இல்லை' என்று சொல்ல முடியும்" என்று பாரன் கூறுகிறார்.

ஆனால், நோய்கள் ஏன் நமது உடல் நாற்றத்தைப் பாதிக்கின்றன? இதற்கு காரணம், கொந்தளிப்பான கரிம சேர்மங்கள் (volatile organic compounds - VOCs) எனப்படும் மூலக்கூறுகளின் ஒரு குழுவாகும். உயிருடன் இருக்க, நமது உடல் தொடர்ந்து உணவு மற்றும் பானங்களை ஆற்றலாக மாற்ற வேண்டும். நமது உணவில் உள்ள சர்க்கரைகளை நமது உடல் பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றும் சிறிய கட்டமைப்புகளான நமது செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியாவுக்கு உள்ளே நிகழும் வேதிவினைகளின் தொடர் மூலம் இது நடக்கிறது. இந்த வேதிவினைகள் வளர்சிதை மாற்றங்கள் எனப்படும் மூலக்கூறுகளை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் சில அறை வெப்பநிலையில் எளிதில் ஆவியாகி, நமது மூக்குகளால் கண்டறியப்படலாம். பின்னர், இந்த VOC-க்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன.

"உங்களுக்கு ஒரு நோய்த்தொற்று அல்லது ஒரு நோய், அல்லது ஒரு காயம் ஏற்பட்டால், அது உங்கள் வளர்சிதை மாற்றத்தில் ஒரு விளைவை ஏற்படுத்தும் என்பது தர்க்கரீதியானது" என்று அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான மோனல் கெமிக்கல் சென்சஸ் மையத்தின் ரசாயன சூழலியலாளர் புரூஸ் கிம்பால் கூறுகிறார்.

"வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் அந்த மாற்றம் உங்கள் உடலில் உள்ள வெவ்வேறு இடங்களில் உள்ள வளர்சிதை மாற்றப் பொருட்களின் விநியோகத்தில் உணரப்படும்."

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நோய் இருந்தால், அது உற்பத்தி செய்யப்படும் விஓசி-க்களை(ஆவியாகும் கரிம சேர்மங்கள்) மாற்றி, நமது உடல் நாற்றத்தில் ஒரு தனித்துவத்தை உருவாக்கும்.

மனித உடல் வாசனை மற்றும் நோய் பாதிப்பை கண்டறிதல்

பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images

படக்குறிப்பு, எளிய பரிசோதனைகள் மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறிவது, சில நிலைகளுக்கான சிகிச்சைகளை மாற்றியமைக்கக்கூடும்.

"நாங்கள் பல வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளைப் பார்த்துள்ளோம். கணைய புற்றுநோய், ரேபிஸ் ஆகியவற்றைப் பார்த்துள்ளோம். இது ஒரு நீண்ட பட்டியல்," என்கிறார் கிம்பால். "ஒரு ஆரோக்கியமான நிலையுடன் ஒப்பிடும்போது, நாம் பார்க்கும் எந்தவொரு நிலையையும் ஆரோக்கியமான நிலையில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் திறன் நமக்கு இல்லை என்பது மிகவும் அரிது என நான் சொல்வேன். இது மிகவும் பொதுவானது."

ஆனால், மிக முக்கியமாக, இந்த நோய்களுடன் தொடர்புடைய பல விஓசி (ஆவியாகும் கரிம சேர்மங்கள்)மாற்றங்கள் மனிதர்களால் கண்டறிய முடியாத அளவுக்கு நுட்பமானவை. அதனால்தான் நாய்கள் - அல்லது நாற்றத்தை முகர்ந்து பார்க்கும் மருத்துவ சாதனங்கள் - எதிர்காலத்தில் சில தீவிரமான ஆனால் கண்டறிய கடினமான நிலைகளைக் கண்டறிய நமக்கு உதவக்கூடும்.

உதாரணமாக, விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளிடையே மூளைக் காயங்களைக் கண்டறிய, அவர்களின் உடலால் வெளிப்படுத்தப்படும் விஓசி-களில் (ஆவியாகும் கரிம சேர்மங்கள்)ஏற்படும் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரிசோதனையை உருவாக்க கிம்பால் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

2016-ல், எலிகளுக்கு ஏற்படும் மூளைக் காயங்கள் ஒரு தனித்துவமான வாசனையை ஏற்படுத்துவதாகவும், அதை முகர்ந்து பார்க்க மற்ற எலிகளுக்குப் பயிற்சி அளிக்க முடியும் என்றும் அவர்கள் ஒரு ஆய்வை வெளியிட்டனர். விரைவில் வெளியிடப்படவுள்ள புதிய ஆய்வில், மூளை அதிர்ச்சி ஏற்பட்ட முதல் சில மணிநேரங்களில் மனித சிறுநீரில் உள்ள குறிப்பிட்ட கீட்டோன்களை கிம்பால் கண்டறிந்தார். இத்தகைய காயங்களுக்குப் பிறகு ஏன் வாசனைப் பொருட்கள் வெளியிடப்படுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஒரு கோட்பாட்டின்படி, மூளை தன்னைத்தானே சரிசெய்ய முயற்சிக்கும் போது, ஒரு துணைப் பொருளாக விஓசிக்களை வெளியிடுகிறது.

"நாம் காணும் கீட்டோன்களின் வகை, அது மூளைக்கு அதிக ஆற்றலைப் கொண்டு செல்ல முயற்சிப்பதை அல்லது ஒருவேளை காயத்தை எதிர்த்துப் போராடுவது அல்லது மீள்வதை ஆதரிப்பதை தொடர்புடையது" என்று கிம்பால் கூறுகிறார்.

அப்படி நினைக்க காரணம் உள்ளது. மூளைக் காயத்திற்குப் பிறகு கீட்டோன்கள் மாற்று ஆற்றல் ஆதாரங்களாகச் செயல்பட முடியும் என்றும், அவை நரம்புப் பாதுகாப்பிற்கான குணங்களைக் கொண்டிருப்பதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.

உடல் துர்நாற்றம் ஒருவருக்கு மலேரியா இருப்பதையும் வெளிப்படுத்தலாம். 2018-ல், மலேரியா நோய்த்தொற்று உள்ள குழந்தைகள் தங்கள் தோல் வழியாக ஒரு தனித்துவமான வாசனையை வெளியிடுவதாகவும், இது கொசுக்களை மேலும் கவர்வதாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மேற்கு கென்யாவில் உள்ள 56 குழந்தைகளிடமிருந்து மாதிரிகளை ஆய்வு செய்ததன் மூலம் பறக்கும், கடிக்கும் பூச்சிகளை ஈர்க்கும் ஒருவித "பழ மற்றும் புல்" வாசனையை குழு அடையாளம் கண்டது.

இந்த மாதிரிகளின் கூடுதல் பகுப்பாய்வு, ஹெப்டானல், ஆக்டானல் மற்றும் நோனானல் எனப்படும் வேதிப்பொருட்கள் இருப்பதை கண்டறிந்தது. இவை தனித்துவமான வாசனைக்குக் காரணமாக இருந்தன. இந்த ஆராய்ச்சி மலேரியாவைக் கண்டறிய ஒரு புதிய பரிசோதனையை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம். இப்போதைக்கு, விஞ்ஞானிகள் இந்த வாசனையை மீண்டும் உருவாக்கி, அதை ஒரு கொசுக்களை கவர்ந்திழுக்க ஒரு பொறியாக பயன்படுத்தி சமூகங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து வெளியே இழுத்துச் செல்ல பயன்படும் என நம்புகிறார்கள்.

எம்ஐடி-யில் ஒரு முன்னாள் ஆராய்ச்சியாளரான மெர்ஷின், இப்போது ரியல்நோஸ்.ஏஐ-ல் பணிபுரிகிறார். அவர் மற்றும் அவரது குழு, புரோஸ்டேட் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய ஒரு வாசனை-கண்டறியும் சாதனத்தை உருவாக்க முடியும் என நம்புகிறார்கள். புரோஸ்டேட் புற்றுநோய், 44 ஆண்களில் ஒருவரை கொல்லும் ஒரு நோய்.

"டிஏஆர்பிஏ (டிபன்ஸ் அட்வான்ஸ்டு ரிசர்ச் புராஜெக்ட் ஏஜென்சி) கண்டறிதலின் உச்சத்தில் இருக்கும் நாயின் மூக்கைத் தோற்கடிக்க என்னிடம் சொன்னபோது, நான் எம்ஐடி-யில் 19 வருடம் நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த நிறுவனம் உருவானது," என்று மெர்ஷின் கூறுகிறார். " அடிப்படையில் உயிரியல்-சைபோர்குகளை உருவாக்க எங்களிடம் சொல்லப்பட்டது."

மனித உடல் வாசனை மற்றும் நோய் பாதிப்பை கண்டறிதல்

பட மூலாதாரம், Serenity Strull/BBC/Getty Images

படக்குறிப்பு, பல விதமான வாசனைப் பொருட்களை பரிசோதனை செய்யக்கூடிய ஆய்வக அடிப்படையிலான பரிசோதனையை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

ரியல்நோஸ்.ஏஐ தற்போது உருவாக்கி வரும் சாதனத்தில் உண்மையான மனித வாசனை வாங்கிகள் (olfactory receptors) உள்ளன. அவை ஆய்வகத்தில் ஸ்டெம் செல்களால் வளர்க்கப்படுகின்றன. புரோஸ்டேட் புற்றுநோயுடன் தொடர்புடைய ஏராளமான வாசனை மூலக்கூறுகளைக் கண்டறிய அவை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இயந்திர கற்றல் (machine learning), ஒரு வகையான செயற்கை நுண்ணறிவு, பின்னர் வாங்கிகளின் செயல்பாட்டில் உள்ள வடிவங்களை தேடுகிறது.

"ஒரு மாதிரியின் உள்ளே உள்ள கூறுகளை அறிவது மட்டும் போதாது," என்று மெர்ஷின் கூறுகிறார். "ஒரு கேக்கை உருவாக்க பயன்படும் பொருட்கள் அதன் சுவை அல்லது வாசனையைப் பற்றி நமக்குக் குறைவாகவே கூறுகின்றன. அது உங்கள் சென்சார்கள் இந்த பொருட்களுடன் தொடர்பு கொண்ட பிறகுதான் நடக்க வேண்டும். உங்கள் மூளை அந்தத் தகவலைச் செயலாக்கி அதை ஒரு புலனுணர்வு அனுபவமாக மாற்றுகிறது.

"ஒரு மனம், ஒரு மூளை செய்வதைப் போலவே, உணர்ச்சி செயல்பாட்டில் உள்ள வடிவங்களை நாங்கள் தேடுகிறோம்," என்று மெர்ஷின் கூறுகிறார்.

இதற்கிடையில், ஜாய் இப்போது பாரனின் ஆராய்ச்சிக் குழுவில் பணிபுரிந்து வருகிறார். பார்கின்சன் மற்றும் பிற நிலைகளுக்கு ஒரு கண்டறிதல் சோதனையை உருவாக்க அவருக்கு உதவுகிறார்.

"நாங்கள் இப்போது அவரை வாசனை கண்டறிதலுக்கு அதிகம் பயன்படுத்துவதில்லை," என்று பாரன் கூறுகிறார். "அவரால் ஒரு நாளில் அதிகபட்சம் 10 மாதிரிகளைச் செய்ய முடியும், அது அவருக்கு உணர்வு ரீதியாக மிகவும் சோர்வளிக்கிறது. அவருக்கு 75 வயதாகிறது, அவர் மிகவும் மதிப்பு வாய்ந்தவர்."

இருப்பினும், பாரனின் நுட்பம் ஜாயின் திறனைப் பிரதிபலிக்க முடியுமானால், பார்கின்சன் நோயை அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறிய முடியுமானால், அது ஜாய் மற்றும் லெஸ்ஸுக்கு ஒரு சிறந்த மரபுரிமையாக இருக்கும்.

"ஜாய் மற்றும் லெஸ் மருத்துவப் பயிற்சி பெற்றவர்கள் என்பதால், இந்த அவதானிப்பு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது என்று நான் நினைக்கிறேன்" என்று பாரன் கூறுகிறார். "ஆனால், இங்குள்ள கதை என்னவென்றால், எல்லோரும் தங்கள் ஆரோக்கியம் அல்லது தங்கள் நண்பரின் ஆரோக்கியம் அல்லது தங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் குறித்து உறுதியாக தெரிந்தவர்களாக உணர்ந்து, ஏதாவது தவறு இருப்பதாக உணர்ந்தால் அதற்கேற்ப செயல்பட வேண்டும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gk60y523go

கூன் விழுவதன் காரணம் – மருத்துவர் விளக்கம்

3 months ago

கூன் விழுவதன் காரணம் – மருத்துவர் விளக்கம்

September 16, 2025

0

What_is_Kyphosis_Roundback_of_the_Spine1

வயதாகும்போது தங்கள் உயரத்தில் சில அங்குலங்கள் குறைவது அல்லது உடலில் கூனல் விழுவது அல்லது குனிந்த முதுகு ஏற்படுவது போன்ற பிரச்னையை சில முதியோர் சந்திக்கின்றனர். ஆனால், இதை பலரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. இதை முதுமையின் இயல்பான ஒரு பகுதியாகவே கருதி அலட்சியம் செய்துவிடுவார்கள்.

ஒரு குறுகிய காலத்தில் 1.5 அங்குலம் (4 செ.மீ) உயரம் குறைந்தால், அது வெறும் முதுமையின் பாதிப்பல்ல. குனிந்த அல்லது கூன் விழுந்த தோற்றத்துடன் கூடிய திடீர் (கவனிக்கத்தக்க அளவிற்கு) உயர இழப்பு ஏற்படுமானால், அது முதுகெலும்பு அழுத்த முறிவின் (VCF) ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கலாம். இந்த முறிவுகள், 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்கும் எலும்புப்புரை (osteoporosis) நோயினால் ஏற்படும் பின்விளைவுகளாகும் என்கிறார் தண்டுவட அறுவை சிகிச்சை முதுநிலை நிபுணர், மருத்துவர் விக்னேஷ் ஜெயபாலன். இதற்கு காரணம் என்ன.. தீர்வு என்ன.. என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

முதுகெலும்பில் உள்ள ஒன்று அல்லது பல எலும்புகள் நசுங்கும்போது முதுகெலும்பு அழுத்த முறிவு ஏற்படுகிறது. இது பொதுவாக பலவீனமான, நுண்துளைகள் கொண்ட எலும்புகளின் காரணமாக நிகழ்கிறது. எலும்புப்புரை பாதிப்பு இருக்கும்போது, முதுகை வளைப்பது, குனிவது, இருமுவது அல்லது பொருட்களைத் தூக்குவது போன்ற அன்றாட செயல்களே இதுபோன்ற முதுகெலும்பு முறிவுகளை ஏற்படுத்தப் போதுமான காரணமாக இருக்கலாம்.

இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தாமதமாக கண்டறிவதற்கு முக்கிய காரணம், தாங்கள் என்ன பாதிப்புக்கு உள்ளாகிறோம் என்பதை நோயாளிகள் உணர்வது அவர்களுக்கு மிகவும் கடினமானது. ஏனெனில், முதுகெலும்பு அழுத்த முறிவுகள் குறிப்பிட்டு சொல்ல முடியாத முதுகுவலியாகவே இருக்கும். மேலும், காலப்போக்கில் அந்நபரின் தோற்றத்தில் வெளிப்படையாகத் தெரியும் மாற்றம் ஏற்படும். தொடர்ச்சியாக திரும்பத் திரும்ப நிகழும் நுண் முறிவுகள் நோயாளிக்கு நாள்பட்ட வலி, உயர இழப்பு மற்றும் கூன் விழுந்த தோற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தி, சிரமப்படுமாறு செய்வதுடன் அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

இதற்கான அதிக ஆபத்தில் இருப்பவர்கள் யார்?

மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள்: இவர்களிடம் ஈஸ்ட்ரோஜென் குறைவாக இருப்பது எலும்பு வலுவிழப்பை மேலும் துரிதப்படுத்துகிறது.

50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் குறைந்த உடல் எடை அல்லது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள நபர்கள்: குறிப்பாக வைட்டமின் டி குறைபாடுள்ளவர்கள் மற்றும் குறைவான அளவு கால்சியம் உட்கொள்பவர்கள்.

பரிந்துரைக்கப்படும் மருத்துவத் தீர்வுகள்

எலும்பு அடர்த்தி சோதனைகள் (DEXA ஸ்கேன்): முதுகெலும்பு முறிவைக் கண்டறிவதில் ஆரம்பகால நோயறிதல் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் மற்றும் வயதான ஆண்களுக்கு எலும்புப்புரைக்கான பரிசோதனையை குறித்த காலஅளவுகளில் செய்து கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். குறிப்பாக அவர்களுக்கு உயர இழப்பு, முதுகெலும்பு வளைவு போன்ற அறிகுறிகள் இருக்குமானால், இச்சோதனையை தவறாமல் செய்ய வேண்டும்.

வெர்டிப்ரோபிளாஸ்டி அல்லது கைஃபோபிளாஸ்டி: எலும்பு முறிவானது கடுமையான அழுத்த முறிவு வகையாக இருக்குமானால், வலியைக் குறைக்கவும் முதுகெலும்பை உறுதிப்படுத்தவும், தண்டுவட எலும்பில் முறிவு ஏற்பட்ட இடத்தில், எலும்பு சிமென்ட்டைக் கொண்டு உறுதியாக்கவும் மற்றும் ஊசிமூலம் செலுத்தவும் சிறிய கீறல்கள் மட்டுமே இந்த மருத்துவ செயல்முறைக்கு தேவைப்படும்.

உடற்பயிற்சி சிகிச்சை: முதுகெலும்பை நீட்டுதல், தோற்றத்தைச் சரிசெய்தல் மற்றும் முதுகின் மையப்பகுதியை வலுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு மறுவாழ்வுத் திட்டம் உருவாக்கப்படலாம். ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தைக் குறைக்கவும் மற்றும் இயக்கத்திறனை மேம்படுத்தவும் கண்காணிப்பின் கீழ், அத்திட்டத்தை செயல்படுத்துவது உதவக்கூடும்.

பாரம்பரிய வீட்டு வைத்திய முறைகள் மற்றும் சுய-பராமரிப்பு நடவடிக்கைகள்

மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சை முறைகள் முக்கியமானவையே. எனினும், அச்சிகிச்சைக்கு சில வீட்டு வைத்திய வழிமுறைகள் ஆதரவளிக்கக்கூடும்:எலும்பு அடர்த்தி குறையும்போது, எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். சுவரில் கைகளை வைத்து நகர்த்துவது அல்லது தாடையை உள்ளிழுத்து (சின் டக்ஸ்) மெதுவாக விடுவது போன்ற உடற்பயிற்சிகள் கூன் விழுவதை தடுக்கவும், குறைக்கவும் உதவும். இதன்மூலம் கூன் விழாமல் உங்கள் உடல் தோற்றத்தை உங்களால் பராமரிக்க முடியும்.

குறைவான தாக்கம் ஏற்படுத்தும் அல்லது தாக்கம் இல்லாத எடை தாங்கும் பயிற்சிகள் (எ.கா. நடைபயிற்சி, யோகா (கண்காணிப்பின் கீழ்)) வயதாகும்போது எலும்பு அடர்த்தி இழப்பை தாமதப்படுத்தவும் மற்றும் கீழே தவறி விழுவதைக் குறைக்கவும் உதவும்.

முதியவர்கள் தரையில் ‘விழாமல் தடுக்கும்’ வகையில் வீட்டை மாற்றியமைப்பது: இலேசாக கீழே விழும் நிகழ்வுகள் கூட மோசமடைந்திருக்கும் எலும்புகளில் முறிவுகளை உருவாக்கலாம். போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்வது, பொருட்கள் அடைசலாக சிதறிக்கிடக்கும் நிலையை அகற்றுவது தேவைப்படும் இடங்களில் பிடிமானக் கம்பிகளை அமைப்பது ஆகியவற்றின் மூலம், உங்கள் வீட்டை முடிந்தவரை ‘விழாமல் தடுக்கும்’ வகையில் பாதுகாப்பானதாக மாற்றலாம்.

பயன்பாட்டிற்கு ஏற்ற பாதுகாப்பான தளவாடங்களைப் பயன்படுத்துதல்: முதுகுக்கு ஆதரவு தரும் நாற்காலிகள் ஒரு நபரின் இயற்கையான நேரான முதுகெலும்பு தோற்றத்தை ஆதரிக்க உதவுகின்றன; மேலும் ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் அழுத்தத்தையும் குறைக்கின்றன.

உணவுமுறை: கால்சியம் (பருப்பு வகைகள், பால் பொருட்கள், செறிவூட்டப்பட்ட உணவுகள், கீரை வகைகள்) மற்றும் மெக்னீசியம் (பருப்பு / கொட்டைகள்) எலும்புகளின் உறுதியை

மேம்படுத்துகின்றன. கூனல் விழுந்த தோற்றத்தை அல்லது உயரம் குறைந்து வருவதை வயது முதிர்வால் வரும் ஒரு பிரச்னையாக கருதி அலட்சியம் செய்யக்கூடாது. முதுகெலும்பு முறிவுகள் பெரும்பாலும் தடுக்கக்கூடியவையே; ஆரம்பத்திலேயே இவை கண்டறியப்படுமானால், சிகிச்சையின் மூலம் சரிசெய்யக்கூடியவையே.

எனவே ஆரம்பகாலத்திலேயே பாதிப்புகளையும் மற்றும் அதன் அறிகுறிகளையும் கண்டறிவது மிக முக்கியமானது. ஆரம்பகட்ட பரிசோதனை, சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைப் பெறுவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பது ஆகியவை ஒரு நபரின் குறிப்பாக, நடுத்தர வயதை கடந்த நபரின் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் உதவும்.

https://akkinikkunchu.com/?p=341076

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் ஏற்படுத்தியுள்ள புதிய புரட்சி 'Bone-02'

3 months ago

சீன விஞ்ஞானிகள் ஏற்படுத்தியுள்ள புதிய புரட்சி 'Bone-02'

15 Sep, 2025 | 03:17 PM

image

உடைந்த எலும்புகளைச் சரிசெய்ய சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதிய 'எலும்புப் பிசின்' (bone glue), எலும்பியல் சிகிச்சையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 'போன்-02' (Bone-02) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருத்துவப் பசையானது, எலும்பு முறிவுகளை மூன்று நிமிடங்களுக்குள் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.

கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு ஆய்வுக் குழுவினர் இந்தப் பசையை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான லின் சியான்ஃபெங், கடலுக்கு அடியில் உள்ள பாலத்தில் சிப்பிகள் எப்படி உறுதியாக ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதைக் கவனித்து இந்த பிசினை உருவாக்க உத்வேகம் பெற்றதாகக் கூறுகிறார்.

இரத்தம் நிறைந்த சூழலிலும், இந்த பிசின் இரண்டு முதல் மூன்று நிமிடங்களில் எலும்பை துல்லியமாக ஒட்டி உறுதிப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், எலும்பு குணமடைந்த பிறகு, இந்த பிசின் இயற்கையாகவே உடலால் உறிஞ்சப்பட்டுவிடும். இதனால், இரும்புத் தகடுகள் அல்லது தழும்புகளை அகற்றுவதற்காக இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

வழக்கமான அறுவை சிகிச்சை முறைகளுக்குப் பதிலாக, இந்த பிசினைப் பயன்படுத்தும்போது, எலும்பு முறிவுகளை மிகக் குறைந்த நேரத்தில் சரிசெய்ய முடியும். இதுவரையில் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இது வெற்றிகரமாகச் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இந்த பிசினால் ஒட்டப்பட்ட எலும்புகள் அதிகமான பிணைப்பு சக்தியைக் கொண்டிருப்பது ஆய்வக சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பாரம்பரிய உலோக உள்வைப்புகளுக்கு மாற்றாக இருக்கலாம் எனவும் இந்த பிசின் தொற்று மற்றும் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய கண்டுபிடிப்பு, எலும்பியல் துறையில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/225149

'அழுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்'; ஆய்வுகள் சொல்வது என்ன?

3 months ago

மனதில் இருக்கும் வருத்தம், துன்பம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தம் ஒன்றாக அழுகை உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனதில் இருக்கும் வருத்தம், துன்பம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தம் ஒன்றாக அழுகை உள்ளது.

கட்டுரை தகவல்

  • பாமினி முருகன்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தினமும் காலை தூக்கத்தில் இருந்து விழிக்கும்போது என்ன நினைப்பீர்கள்? இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய வேண்டும் என்றுதானே. ஆனால், அந்த நாள் அழுகையுடன் தொடங்கினால் எப்படி இருக்கும்?

மனித வாழ்க்கையில் சிரிப்பு எந்தளவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே அளவிற்கு அழுகையும் முக்கிய பங்கு வகிக்கிறதுதானே. மனதில் இருக்கும் வருத்தம், துன்பம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தம் ஒன்றாக அழுகை உள்ளது.

இது சோகமான நிகழ்வுகள், இழப்பு என பல்வேறு காரணங்களால் வெளிப்படும். சில சமயங்களில் காரணமே இன்றியும் இந்த உணர்வு வெளிப்படும். இன்னும் சொல்லப்போனால் நம் மனதில் இருக்கும் நெருடல்கள், பாரங்கள், குமுறல்களை பல சமயங்களில் கண்ணீர் மூலம் வெளியேற்றுகிறோம்.

சிரிப்பு நம்மை எந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக்குகிறதோ அதே அளவிற்கு அழுகையும் நம்மை உணர்வுப்பூர்வமாக ஆக்குகிறது. இருப்பினும் இத்தகைய ஓர் உணர்வை நாம் ஏன் எதிர்மறையான உணர்வாக பார்க்கிறோம்? அழுவதால் நம் உடலுக்கும், மனதுக்கும் ஏற்படும் நன்மைகள் என்ன?

கண்ணீர் வெளிப்படுவதற்கான காரணம்:

அழுகை ஒரு வகையில் விளித்திரையை மேம்படுத்தி பார்க்கும் திறனை அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அழுகை ஒரு வகையில் விளித்திரையை மேம்படுத்தி பார்க்கும் திறனை அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது.

மனித பிறவிக்கு மட்டுமே தனித்துவமான உணர்வு சார்ந்த திரவமாக கண்ணீர் உற்பத்தி ஆகிறது என தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH) தி நியூராலஜி ஆஃப் ஹூமன் க்ரையிங் (The neurobiology of human crying) என்ற ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் ஜே.எட்.டிஃபானி, கடந்த 2003ஆம் ஆண்டில் உடல்நலனிலும் நோயிலும் கண்ணீரின் பங்கு (Tears in health and disease) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

"நாம் விழித்திருக்கும் சமயத்தில் கண்ணீர் சுரக்க உதவும் லேக்ரிமல் க்ளாண்ட் தொடர்ச்சியாக கண்ணீரை உற்பத்தி செய்துகொண்டிருக்கும். இது கண்ணின் ஓரங்களிலும், மேல் இமைக்குக் கீழும் இருக்கும். கண்ணை இமைக்கும்போது, கண்ணீரை மெல்லிய பாதுகாப்பு படலமாக கண்ணின் மேல் பரப்புகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

"கண் இமைகளில் உள்ள டார்சல் தகடுகளுக்குள் அமைந்துள்ள மெய்போமியன் சுரப்பிகளில் அழுத்தம் ஏற்படும்போது விளிம்பில் எண்ணெய் போன்ற திரவம் ஏற்படும். இது கண்ணீர் படலத்தின் நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது. இதன் மூலம் வெளிப்படும் கண்ணீர் கார்னியா மற்றும் வெண்படலத்தின் செல்லுலார் மேற்பரப்புகளை சீராக்கும். இது விளித்திரையை மேம்படுத்தி நமது பார்க்கும் திறனை அதிகரிக்கிறது" என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதர்கள் அழுவது ஏன்?

மனிதர்கள் அழுவது குறித்து 2 நேரெதிர் கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைப்பதாக தி நியூராலஜி ஆஃப் ஹூமன் க்ரையிங் ஆய்வறிக்கை மேற்கோள்காட்டுகிறது.

ஒன்று துயரத்தால் ஏற்படும் தூண்டுதலால் அழுவது. உதாரணமாக ஒருவர் அதீத சோகமாகவோ, கோபமாகவோ இருக்கும்போது இயற்கையான ஓர் உணர்வாக கண்ணீர் வெளிப்படுகிறது என்பதாகும்.

மற்றொன்று அழுகை ஒரு ஆறுதல் செயலாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஒருவர் நன்றாக அழுத பின்பு அவர் மிகவும் இலகுவாக உணர்கிறார். மனதின் பாரங்கள் குறைந்து நிதானமாகிறார் என்பது ஆகும்.

மனிதர்கள் அழுவதற்கு 2 கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனிதர்கள் அழுவதற்கு 2 கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர்.

'இங்கே அழலாம்'

பெரும்பாலும் பொதுஇடங்களில் நாம் அழுவதில்லை. தனி அறையிலோ, மறைவான பகுதிகளிலோ, ஆள் இல்லாத தனிமையான இடங்களில்தான் இந்த உணர்வை வெளிப்படுத்தி ஆசுவாசப்படுத்திக்கொள்வோம். ஏனென்றால் இதைவைத்து நம்மை யாரும் மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதே இதற்கு காரணம். ஆனால் அழுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சுதந்திரமாக இந்த உணர்வை வெளிப்படுத்த இதற்கென்றே சில மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை சூரத் நகரில் 2017ஆம் ஆண்டு அழுகை கிளப் (Cry Club) ஒன்று தொடங்கப்பட்டது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த கிளப்பின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி அழுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அழுகை மன அழுத்தத்தை அகற்றி, மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்று இவர்கள் நம்புகின்றனர். இது பின் மும்பையிலும் விரிவுப்படுத்தப்பட்டது.

சமீபத்தில் கடந்த ஜூன் 15ஆம் தேதி மும்பையில் 'தி க்ரை கிளப்' எனப்படும் ஒருநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'உங்களின் உணர்வுகளை அரணவணைத்துக் கொள்ளுங்கள்' என்ற வாசகத்துடன் இருந்தது.

இது வழக்கமான பார்டியோ, இசைநிகழ்ச்சியோ அல்ல. முன்பின் தெரியாதவர்கள் கூடி, அழுவதற்கு சுதந்தரமான ஒரு சூழலை கொண்ட இடம். 399 ரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தி உள்ளே சென்று உங்களின் மனக்குமுறல்களை கொட்டலாம்.

யாரும் உங்களை எடைபோட மாட்டார்கள். டிஷ்யூ பேப்பர், தேநீர் மற்றும் உங்களின் மனநிலைக்கு ஏற்ற இசையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேண்டுமென்றால் சாய்ந்து அழுவதற்கும், யாரையேனும் கட்டியணைத்து புலம்பி அழுவதற்குமான வசதியும் அங்கு இருந்தது.

இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கான நோக்கம் குறித்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Small World என்ற நிறுவனத்திடம் கேட்டோம்.

இந்த நிகழ்ச்சிக்கான யோசனை எங்கிருந்து வந்தது எனக் கேட்டபோது, ருய்காட்சு (Ruikatsu) என்ற ஜப்பானிய பழக்கத்தில் இருந்து ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சவுரவ். ருய்காட்சு என்பது கண்ணீரை வெளியேற்றும் ஒரு ஜப்பானிய நடைமுறை ஆகும்.

சூரத்தில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அழுகை மன்றம்.

பட மூலாதாரம், Healthy Crying Club Surat

படக்குறிப்பு, சூரத்தில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அழுகை மன்றம்.

"மக்கள் தங்கள் உணர்ச்சிகளை சரிசெய்யவோ அல்லது பகுப்பாய்வு செய்யவோ வேண்டிய கட்டாயம் இல்லாமல், எவ்வித ஆலோசனைகளும் இல்லாமல், அவர்கள் எப்படி உணர்கிறார்களோ அதை அப்படியே வெளிப்படுத்த உதவுவதே எங்களின் நோக்கமாக இருந்தது" என்றார் சவுரவ்.

"அழுவது பலவீனமான அறிகுறி அல்ல என்பதை உணர்த்தவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் மக்கள் பெரும்பாலும் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த பாதுகாப்பான இடங்கள் கிடைப்பதில்லை. இதில் பங்கேற்ற ஒரு விருந்தாளி, என்னை நானே கட்டியணைத்து, எதுவும் சரியாக நடக்காவிட்டாலும் பரவாயில்லை எனத் தேற்றிக்கொள்வது போன்ற உணர்வு ஏற்பட்டதாக விவரித்தார்" என சவுரவ் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிரித்தும், புலம்பியும், அழுதும் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது வெளிப்படையாக அழுவது புத்துணர்சி அளித்ததாக ஒருவர் கூறினார்.

"ஒரு பாதுகாப்பான சூழலில் நாம் புரிந்துகொள்ளப்படுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுவது மாதிரியான வாய்ப்பு கிடைப்பது அரிதானது" என பலரும் கருத்து தெரிவித்ததாக சவுரவ் கூறினார்.

உளவியல் ரீதியாக என்ன பலன்?

அழும்போது நாம் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் உளவியல் நிபுணர் அபிாஷா.

படக்குறிப்பு, அழும்போது நாம் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் உளவியல் நிபுணர் அபிலாஷா.

"அழும்போது நமது உடலின் நரம்பு மண்டலத்தை சீர்செய்து, நமது உணர்ச்சிகளை மீட்பதுதான் நரம்பியல் அமைப்பின் வேலை. நாம் அழும்போது ஆக்ஸிடோசின், எண்டோர்பின் ஹார்மோன்கள் வெளியேறும். இந்த ஹார்மோன்கள் நம் உடல் மற்றும் மனரீதியான வலிகளை குறைத்து, நம்மை ஆசுவாசப்படுத்தும் ஹார்மோன்கள் என்பதால் இவை வெளியேறியபின் நமக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்" என்கிறார் உளவியல் நிபுணர் அபிலாஷா.

மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது "அழும்போது நாம் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும். மற்றவர்கள் அழும்போது நமக்கு அக்கறை, இரக்கம் ஏற்படும். இந்த இரக்க குணம் சமூகத்திற்கே மிகவும் முக்கியமாக உள்ளது." என்கிறார்.

மேலும் பேசிய அவர், "அழுகை என்ற உணர்ச்சி நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் ஒன்று. உடலளவில் நமக்கு ஏற்படும் காயங்களை சரிசெய்ய மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால் நமக்கு கஷ்டம் ஏற்படும்போது நம்மை நாமே தேற்றிக்கொள்வதுதான் இந்த அழுகை" என விளக்குகிறார்.

அடிக்கடி அழுதால் ஆபத்தா?

அதேசமயம் அதீத அழுகையும், மனஅழுத்தம், பயம் போன்ற பிரச்னைக்கான அறிகுறியாக பார்க்கப்படலாம் எனவும் எச்சரிக்கிறார். "ஒருவர் அதிகமாக அழுதுகொண்டே இருப்பது க்ரையிங் ஸ்பெல் (Crying Spell) எனப்படுகிறது. இது ஒருவரை பலவீனமடையச் செய்யும். ஒரு கட்டத்தில் ஏன் அழுகிறோம் என்பதே தெரியாமல் அழுகை ஒரு பழக்கமாக மாறிவிடக் கூடும்" எனக் கூறினார்.

"உணர்ச்சிகள் அடக்கப்படுவது போல தோன்றும்போது, மனதில் பாரம் ஏற்படும்போது அதை குறைப்பதற்கு அழுவது தவறில்லை. ஆனால், சிரிப்பு சிகிச்சை (laughter therapy) போல இதையும் ஒரு பழக்கமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல. இதுவே மனஅழுத்தத்திற்கு வழிவகுக்கும்" எனக் கூறுகிறார்.

ஆண்களுக்கும் பொருந்துமா?

அழுவது ஆண்களுக்கான பண்பு இல்லை என நினைப்பது முட்டாள்தனம் என்கிறார் அபிலாஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அழுவது ஆண்களுக்கான பண்பு இல்லை என நினைப்பது முட்டாள்தனம் என்கிறார் அபிலாஷா

பெரும்பாலான ஆண்கள் அழுகை என்ற உணர்வை வெளிப்படுத்தாமல் இருப்பது குறித்து கேட்டபோது "காலம் காலமாக வீரத்திற்கு எதிர்ப்பதமாக அழுகை சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அழுகைக்கும் வீரத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. சங்க கால மன்னர்கள் கூட வலிமையானவர்கள்தான். ஆனால் உணர்ச்சிவசப்பட்டால் அவர்களும் அழுதுள்ளனர். இது அவர்களின் இரக்க குணத்தை தான் காட்டுகிறதே தவிர கோழைத்தனம் கிடையாது" என்கிறார்.

"இப்போது பெரும்பாலும் அனைவருக்கும் அதிக மனஉளைச்சல் ஏற்படுகிறது. தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வலி ஏற்படும்போது அதை வெளிப்படுத்தாமலேயே இருந்தால் மாரடைப்பு வரை கொண்டு செல்லும் அபாயமும் உள்ளது" என எச்சரிக்கிறார்.

மேலும் "ஆண்கள் பலரும் அழக்கூடாது என நினைத்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இழப்போ, மனசோர்வோ, தாங்கிக்கொள்ள முடியாத பிரச்னைகளோ ஏற்படும்போது அழுவது தவறில்லை. மனிதர்கள் அனைவருக்கும் அழுகை வேண்டும் என்பதால்தான் நாம் அனைவருக்கும் பாலின வேறுபாடின்றி Tear Duct எனப்படும் கண்ணீர் சுரபி உள்ளது. அழுவது ஆண்களுக்கான பண்பு இல்லை என நினைப்பது முட்டாள்தனம்." எனவும் கூறினார்.

"அழும்போது நம் கண்களும் புத்துணர்ச்சி பெறுகிறது. உடலில் இருக்கும் தண்ணீர் கண் வழியே வெளியேறும்போது இந்த புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதனால் தேவைப்படும்போது அழுவது என்பது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நல்லதே" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c7v1zvpjndeo

தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை

3 months 1 week ago

தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை

தினமும் சிரமமின்றி மலம் கழிக்க நிபுணர் சொல்லும் 4 எளிய பரிந்துரை

Getty Images

கட்டுரை தகவல்

  • ரஃபேல் அபுச்சைபே

  • பிபிசி நியூஸ் முண்டோ

    13 நிமிடங்களுக்கு முன்னர்

இரைப்பை குடல் மருத்துவர் ஜூலியானா சுவாரெஸ் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஓர் முக்கியமான பிரச்னையை கவனித்தார். அது, மக்கள் தங்களின் செரிமான அமைப்பின் செயல்பாடு குறித்து பேசுவதை அசௌகரியமாக உணர்கின்றனர்.

"அதை அவமானமாக நினைக்கின்றனர்; தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் குறித்து பேச தயங்குகின்றனர்," என அவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

"இரைப்பை அழற்சி (gastritis), ஹெபடைடிஸ், கணைய அழற்சி (pancreatitis), ரிஃப்ளக்ஸ் (reflux) என பல பிரச்னைகள் குறித்தும் நான் பேசத் தொடங்கினேன். கேஸ்ட்ரோயென்ட்ராலஜிஸ்ட் (gastroenterologist) என்பதைக் கூட பலரால் சரியாக உச்சரிக்க முடியவில்லை."

"அப்போதுதான் நான் மலம் குறித்து பேச ஆரம்பித்தேன். மக்கள் அதுகுறித்து எளிதாக பிணைத்துக் கொள்ளும் விதமான தரவுகளை வழங்கினேன். மக்கள் என்னை 'டாக்டர் பூப்' (Dr. Poop) என அழைத்தனர்," என கொலம்பியாவை சேர்ந்த அந்த நிபுணர் விவரித்தார்.

குடல்நலம், உடல்நலம், மலம் கழிக்க உதவும் டிப்ஸ்

Dr. Juliana Suárez தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் செரிமான அமைப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மருத்துவர் சுவாரெஸ்

அப்போதிலிருந்து, ஜூலியானா சுவாரெஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை (@ladoctorapopo) செரிமான அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பது குறித்தும் மலம் தொடர்பான முக்கியமான உரையாடல்களை நிகழ்த்தவும் பயன்படுத்திவருகிறார்.

"தி ஆர்ட் ஆஃப் பூப்பிங்: ஹெல்த்தி டைஜெஷன், எ ஹப்பி லைஃப்" ("The Art of Pooping: Healthy Digestion, a Happy Life) எனும் மின்னணு புத்தகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

"நாம் குழந்தைகளாக இருந்தபோது மலம் குறித்த ஒவ்வாமை நமக்கு ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இப்பொது வயதுவந்தவர்களாக நாம் அதுகுறித்து இயல்பாக பேசுவதற்கான வெளி இருக்கிறது."

தங்களின் செரிமான ஆரோக்கியம் தொடர்பாக மக்கள் செய்யும் முக்கிய தவறுகள் குறித்தும், எளிதாக மலம் கழிப்பதற்கான சில டிப்ஸ்கள் குறித்தும் அவர் பிபிசி முண்டோவிடம் பேசினார்.

1. அதிக உணவுகளை சேருங்கள்

குடல்நலம், உடல்நலம், மலம் கழிக்க உதவும் டிப்ஸ்

Dr. Juliana Suárez மருத்துவர் ஜூலியானா சுவாரெஸின் புத்தகம்

தொலைக்காட்சி, இதழ்கள், சமூக ஊடகங்கள் என பலவற்றிலும் பல "அதிசய டயட்கள்" குறித்து குறிப்பிடப்படுவதை நாம் கடந்துவருகிறோம். அவை, சில உணவுகளை நம் உணவுமுறையிலிருந்து நீக்குவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என உறுதி கூறுகின்றன.

ஆனால், ஜூலியானா சுவாரெஸ் இதற்கு எதிரான அறிவுரையை வழங்குகிறார்: "உணவு மட்டுமே பிரச்னை அல்ல, ஆனால் ஒவ்வொருவரின் உடலில் உள்ள நுண்ணுயிர்களும் முக்கியம் என நான் மக்களிடம் கூறுகிறேன்."

நமது செரிமான அமைப்பில் பல பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும் சூழல்தான் நுண்ணுயிர்களாகும், அவை நாம் உண்ணும் உணவை உடைக்க உதவுகின்றன. பலவித சூழலில் தான் நுண்ணுயிர்கள் செழித்து வாழும்.

சமூக ஊடகங்களில் "நேர்த்தியான உணவுமுறையை" கண்டறிவதில் பலருக்கும் தற்போது இருக்கும் பெரு விருப்பம், பலரையும் பலவித உணவுகளை தங்கள் உணவுமுறையிலிருந்து நீக்க வழிவகுக்கிறது என விளக்கும் அவர், இதனால் நுண்ணுயிர்கள் பலவீனமடைவதாக கூறுகிறார்.

"பருப்பு அல்லது க்ளூட்டன் (கோதுமை, சோளம் போன்ற உணவுகளில் உள்ள ஒட்டும் தன்மையுள்ள பொருள்) ஆகியவை இதற்கு காரணமல்ல. அவை தீயவை என்ற எண்ணம் உருவாகியுள்ளது. பூண்டும் காரணமல்ல, ஆனால் உணவுமுறையில் போதுமான நார்ச்சத்து உணவுகள் இல்லாதது, மன அழுத்தம், போதியளவு உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் இந்த குடல் நுண்ணுயிர்கள் பாதிக்கப்படுகின்றன…"

குடல்நலம், உடல்நலம், மலம் கழிக்க உதவும் டிப்ஸ்

Getty Images இயற்கையான உணவுகளை சேர்த்துக்கொள்ளும்போது செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படும் என, மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார்

"நீங்கள் மறுபடியும் தேவையானவற்றை உண்ண ஆரம்பிக்க வேண்டும் என்றே நான் அந்த புத்தகத்தில் கூறியுள்ளேன். ஆனால், உங்கள் நுண்ணுயிரிகளை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரிசெய்ய முடியும்."

அனைத்து விதமான உணவுகளையும் உணவுமுறையில் சேர்ப்பதற்கு முன்பாக, சிறிது சிறிதாக இயற்கை உணவுகளை சேர்த்து பரிசோதிக்க வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்: "பால் சம்பந்தப்பட்ட உணவுகள், அதிக பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, நட்ஸ், விதைகள் உள்ளிட்டவற்றை சேர்க்க வேண்டும்."

2. ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள், நேர்த்தியான உணவுமுறை மீது அதீத கவனம் வேண்டாம்

9dbea0e0-8e4c-11f0-9cf6-cbf3e73ce2b9.jpg

Getty Images நல்ல தூக்கமும் செரிமானத்துக்கு உதவும் என்கிறார் மருத்துவர் சுவாரெஸ்

உண்ணும் உணவை உடைப்பதுடன் இந்த நுண்ணுயிர்கள், நம் உடலில் நடக்கும் பலவித செயல்முறைகளை கட்டுப்படுத்துவதாக கூறுகிறார் ஜூலியானா சுவாரெஸ்.

அதாவது நம் மனநிலை முதல் நோயெதிர்ப்பு அமைப்பு வரை அவை கட்டுப்படுத்துகின்றன. எனவே, இந்த நுண்ணுயிர்கள் நம் நலனுக்கு அடிப்படையான அம்சமாக திகழ்வதாக அவர் தெரிவிக்கிறார்.

"வளர்சிதை மாற்ற ஆரோக்கியம், இதய நலன், ஹார்மோன் நலன், தோல் ஆரோக்கியம் ஆகியவற்றை இவை கட்டுப்படுத்துகின்றன. நுண்ணுயிர்கள் செழித்திருக்க நார்ச்சத்து உணவுகளை பிரதானமாக உண்ண வேண்டும், அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அல்ல," எனக் கூறுகிறார் அவர்.

மேலும், நுண்ணுயிர்கள் வாழும் சூழல், நம் வாழ்வின் பல காரணிகளுக்கு உணர்திறன் மிக்கவையாக உள்ளன. அதாவது மன அழுத்தம், நீண்ட காலமாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவது மற்றும் உடலுழைப்பு இல்லாத வாழ்வியல் முறை போன்றவை அவற்றை பாதிக்கின்றன.

"பலவித நுண்ணுயிர்களை கொண்டவர்கள்தான் வலுவான செரிமான அமைப்பை கொண்டிருக்கின்றனர், அவர்கள் பலவிதமான உணவுகளை உண்கின்றனர், நல்ல தூக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்."

எதை உண்ண வேண்டும், எதை உண்ண வேண்டாம் என்பதில் அதிகமாக கவனம் செலுத்துவது, அதுதொடர்பான பதற்றத்தை ஏற்படுத்தி, உணவை ரசித்து உண்ண முடியாதபடி செய்துவிடும் என ஜூலியானா சுவாரெஸ் நம்புகிறார்.

"இது நேர்த்தியான உணவுமுறையை பற்றியது அல்ல, சிறப்பானவற்றை தேர்ந்தெடுப்பதை பற்றியது, மேலும், எப்போதும் விதிவிலக்குகளுக்கு இடமிருக்க வேண்டும்."

தன்னிடம் வரும் நோயாளிகள் பலருக்கும் அவர்களின் குடல் நுண்ணுயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் எனக்கூறும் அவர், "அவர்கள் கேரட்டுடன் கோழி இறைச்சியை சாப்பிடுவார்கள், ஏனெனில் மற்றவையெல்லாம் ஆபத்தானவை என நினைப்பார்கள்." என்கிறார்.

"உணவின் காரணமாக அறிகுறிகள் ஏற்படும்போது, செரிமானம் கடினமாகிறது, அப்போதுதான் மக்கள் சமூக வலைதளங்கள், ஊடகங்களை நாடுகின்றனர், உணவை குறைகூறுகின்றனர். அது பதற்றத்தை ஏற்படுத்தி, அதிக உணவுகளை தங்கள் உணவுமுறையிலிருந்து நீக்குவதற்கு வழிவகுக்கிறது."

அதை அவர்கள் உணரும்போது, ஆரோக்கியமான நுண்ணுயிர்களுக்கு தேவையான பல உணவுகளை ஏற்கெனவே உணவுமுறையிலிருந்து நீக்கியிருப்பார்கள்.

3. உடனடியாக தொடங்குகள், எப்போதும் நிறுத்தாதீர்கள்

குடல்நலம், உடல்நலம், மலம் கழிக்க உதவும் டிப்ஸ்

Getty Images பொம்மை வடிவில் குழந்தைகளுக்கு காய்கறிகளை பழக்க வேண்டும் என, மருத்துவர் சுவாரெஸ் அறிவுறுத்துகிறார்

"இந்த பிரச்னைகளுள் பல குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகின்றன," என மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார்.

"குழந்தைகளின் வளர்ச்சியில் சில குறிப்பிட்ட தருணங்கள் உள்ளன, அதாவது மலம் கழிக்க பயிற்றுவிப்பது, இது கடும் அதிர்ச்சியை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துபவையாக இருக்கும். அல்லது, குழந்தைகளின் உணவில் பழங்கள், காய்கறிகளை சேர்ப்பது, இதுவும் மிகவும் எளிதானது அல்ல."

மருத்துவர் சுவாரெஸ் கூற்றுப்படி, குழந்தை பருவத்திலிருந்தே அவர்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு பழக்க பெற்றோர்கள் பெரும்பாலும் தவறிவிடுகின்றனர். அவற்றை பொம்மை வடிவில் வழங்குவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும்.

"உதாரணமாக, அவகடோவை வைத்து பொம்மைக்கு மாஸ்க் செய்ய வேண்டும், அதை குழந்தைகள் உண்ணப் போவதில்லை, ஆனால் அதன்மூலம் குழந்தைக்கு அவகடோ குறித்து தெரியப்படுத்தி, விளையாடுவதன் மூலம், வளர்ந்தபிறகு தன்னுடைய உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம்."

புதிய வாசனை, சுவை, பலவித தன்மை (texture) கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது மிகுந்த பலனளிக்கும்: வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் இதை செய்யலாம் எனக்கூறும் சுவாரெஸ், இது தனக்கே நிகழ்ந்திருப்பதாக கூறுகிறார்.

"எனக்கு கத்தரிக்காய் (eggplant) பிடிக்காது, ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அதனை சாப்பிட கற்றுக்கொண்டேன். எனக்கு அவகடோ எப்போதுமே பிடிக்காது. ஆனால், அதன் சுவைக்கு நீங்கள் பழகாவிட்டால், அது உங்கள் உணவிலிருந்து வெளியேறிவிடும்."

அவரின் கூற்றுப்படி, இத்தகைய புதிய உணவுகள் மூலம் குடல் நுண்ணுயிர்களை பழக்குவதன் வாயிலாக நம்முடைய சுவையையும் நாம் பயிற்றுவிக்கிறோம்.

"சுவை என்பது நுண்ணுயிர்களை பொறுத்து பெரிதும் கட்டுப்படுத்தப்படுவதால், அதற்கேற்ப மாறுபடுகிறது."

4. உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள்

குடல்நலம், உடல்நலம், மலம் கழிக்க உதவும் டிப்ஸ்

Getty Images

ஏராளமான தகவல்களை நம் விரல் நுணியில் வைத்திருந்தாலும், மக்கள் தங்களின் உடல்கள் குறித்து எவ்வளவு குறைவாக அறிந்துவைத்துள்ளனர் என்பதையும் பல விஷயங்களை கேட்பது குறித்து சங்கடமாக உணருவதையும் குறித்து தான் ஆச்சர்யப்படுவதாக மருத்துவர் சுவாரெஸ் கூறுகிறார்.

"சரியாக மலம் கழிக்காதவர்கள் தான் உடலை சுத்திகரிப்பது (cleanse) குறித்து கேட்கின்றனர். மனிதர்களாக நம் உடலில் பலவித வேலைகளை செய்யும் உறுப்புகள் உள்ளன; சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் உள்ளன, மேலும் கழிவுகளை கையாளும் பெருங்குடல் உள்ளது."

"அதுகுறித்து நாம் தெரிந்துவைத்திருந்தால், உடலை சுத்திகரிக்க வேண்டும் என நினைக்க மாட்டோம், மாறாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகளை அதிகமாக உட்கொள்வோம், உடற்பயிற்சி செய்வோம், நன்றாக உறங்குவோம், சரியான வழியில் மலம் கழிப்போம்."

உங்கள் உடல் சொல்வதை கேளுங்கள், தனக்கு என்ன தேவை என்று உங்கள் உடல் தான் முதலில் சொல்லும்.

"ஜிம் அல்லது வேலைக்கு செல்வதற்காக காலையில் சீக்கிரமாக எழும் பலர் காலை உணவை தவிர்ப்பதை பார்க்கிறோம், அதனால், காலையில் மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் பணியிடங்களில் தான் தோன்றும். ஆனால், "யாராவது முகம் சுளிப்பார்கள்" என நினைத்து அதனை அடக்கிவைப்பார்கள்."

"செரிமான அமைப்பு என்பது வாய் மற்றும் ஆசனவாயை இணைக்கும் மிக பிரத்யேகமான குழாய் என்பதை நாம் அறிந்துகொள்ளவில்லை. அதன் வழியாகத்தான் சத்துக்கள் உறிஞ்சப்படுகின்றன, கழிவுகள் உற்பத்தியாகின்றன. தினந்தோறும் கழிவுகளை வெளியேற்றாவிட்டால், மலம் கழிக்க போதிய நேரம் ஒதுக்கவில்லை என்றால், நீங்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c147nnmnxxpo

விரத உணவு முறையால் இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் ஆபத்து அதிகமா?

3 months 1 week ago

இன்டமிட்டன்ட் ஃபாஸ்டிங்

பட மூலாதாரம், The San Francisco Chronicle via Getty Images

படக்குறிப்பு, கோழி, காய்கறிகள் மற்றும் நட்ஸ் அடங்கிய உண்ணாவிரத உணவு.

கட்டுரை தகவல்

  • சௌதிக் பிஸ்வாஸ்

  • பிபிசி செய்தியாளர்

  • 6 செப்டெம்பர் 2025

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்த தசாப்தத்தில் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் எனப்படும் விரத உணவுமுறை டிரெண்டாக உள்ளது.

இந்த உணவுமுறை மூலம் கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது அல்லது கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது உள்ளிட்ட கடினமான எதையும் கடைபிடிக்காமல் ஒருவரின் உடல் எடையை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. இந்த உணவுமுறையில் நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும் என்பதை மட்டுமே மாற்ற வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதை அல்ல.

தொழில்துறையில் செல்வாக்கு மிக்கவர்கள் இதை உறுதியாக நம்புகின்றனர், ஹாலிவுட் நட்சத்திரங்கள், இந்த உணவுமுறை தங்களுக்கு ஒழுங்கான உடலமைப்பை தருவதாக கூறுகின்றனர். பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சூனக் 36 மணிநேர விரதத்துடன் தன் வாரத்தை தொடங்குவது குறித்து ஒருமுறை பேசியிருந்தார்.

இந்த உணவுமுறைக்கு ஆதரவாகவே அறிவியல் இதுவரையிலும் இருந்துள்ளது. காலையில் முதல் உணவை தள்ளிப்போடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும், செல்களை சரிசெய்யும்,நீண்ட ஆயுளை கூட வழங்கும் என ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. எனினும், உணவை தவிர்ப்பது சிறந்த தீர்வு அல்ல என்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என்பது குறுகிய நேர இடைவெளியில் மட்டும் உணவை உண்பது, பெரும்பாலும் இது எட்டு மணிநேரமாக உள்ளது, மீதமுள்ள 16 மணிநேரத்தில் எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது. நேரத்தைக் கட்டுப்படுத்தி கடைபிடிக்கப்படும் 5:2 போன்ற மற்ற உணவுமுறைகளில் குறிப்பிட்ட சில நாட்களில் கலோரிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

தற்போது சமீபத்தில் வெளியான முதல் பெரியளவிலான ஆய்வு முடிவுகள், இந்த உணவு முறை குறித்து பல மோசமான ஆபத்துகள் குறித்த கவலையை எழுப்புகின்றன. வயது வந்த 19,000க்கும் மேற்பட்டோரிடம் மேற்கொண்ட இந்த ஆய்வில், அவர்களுள் எட்டு மணிநேர இடைவெளிக்கும் குறைவான நேரத்தில் மட்டுமே உணவுகளை உண்பவர்கள், 12-14 மணிநேர இடைவெளியில் உண்பவர்களைவிட இதய நோய்களால், குறிப்பாக இதய மற்றும் ரத்த நாள நோய்களால் இறக்கும் ஆபத்து 135% அதிகம் உள்ளதாக கூறுகிறது.

இந்த இதய நோய்கள் ஆபத்து ஒருவரின் உடல்நலன், வாழ்வியல் முறை மற்றும் முந்தைய மருத்துவ தகவல்களின் அடிப்படையிலேயே, ஆய்வில் பங்கேற்ற மற்றவர்களைவிட மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

பிற காரணங்களால் இறப்பதற்கும் இந்த உணவுமுறைக்குமான தொடர்பு வலுவானதாக இல்லை. நிலையற்றதாக உள்ளது. ஆனால், அதிக பரிசோதனைகளுக்கு பின்னரும் வயது, பாலினம், வாழ்வியல் முறையைக் கடந்தும் இதய நோய்களுக்கான ஆபத்து நீடிக்கிறது.

மற்ற வார்த்தைகளில் சொல்வதானால், இத்தகைய நேர கட்டுப்பாட்டு முறைக்கும் மற்ற காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இடையேயான தொடர்பு வலுவற்றதாகவும் நிலையற்றதாகவும் இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இதயநோய்களால் இறப்பதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆய்வு இறப்புக்கான காரணம் மற்றும் அதன் விளைவுக்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்கவில்லை. ஆனால், விரத முறையை கடைபிடிப்பது என்பது சிறந்த உடல்நலனுக்கான ஆபத்துகள் இல்லாத வழிமுறை என்ற கருத்துக்கு இந்த ஆய்வு முடிவுகள் சவால் விடுக்கின்றன.

ஆய்வாளர்கள் இதற்கென அமெரிக்காவை சேர்ந்த வயதுவந்தவர்கள் மத்தியில் எட்டு ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் உணவுமுறையை புரிந்துகொள்ள இரண்டு வாரங்களில் ஏதேனும் இரு நாட்களுக்கு அவர்கள் உண்ட, அருந்திய எல்லாவற்றையும் நினைவுபடுத்தும்படி அறிவுறுத்தினர். இதன்மூலம், ஒருவரின் சராசரி உணவு நேரம் என்ன என்பதை கணக்கிட்டு, அதை அவர்களின் நீண்ட கால வழக்கமாக எடுத்துக்கொள்கின்றனர்.

எட்டு மணிநேரத்துக்குள் உணவுகளை உண்பவர்களுக்கு 12-14 மணிநேரத்துக்கு தங்கள் உணவுகளை பிரித்து உண்பவர்களைவிட இதய நோய்களால் இறக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதயநோய் ஆபத்து ஏன்?

பலவித சமூக பொருளாதார குழுக்களிடையே இந்த இதயநோய் ஆபத்து நிலையானதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர், மேலும், புகைபிடிப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் அல்லது ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களிடையே இந்த ஆபத்து அதிகமாக உள்ளது, எனவே அவர்கள் குறுகிய நேர இடைவெளியில் உண்பதை நீண்ட காலத்துக்குக் கடைபிடிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

உணவுமுறையின் தரம், உணவுகள் மற்றும் எவ்வளவு தின்பண்டங்கள் உண்கிறோம், மற்ற வாழ்வியல் காரணங்களை மாற்றியும் இந்த தொடர்பு இருப்பதாக, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதயநோய்களால் இறப்பு அதிகரிப்பது மற்றும் ஒட்டுமொத்த இறப்புகள் அதிகரிக்காததை எப்படி புரிந்துகொள்வது என ஆய்வாளர்களிடம் எழுப்பினோம், இது உயிரியல் ரீதியிலானதா அல்லது இந்த தரவுகளில் பக்கச்சார்பு ஏதேனும் உள்ளதா என கேட்டோம்.

உணவுமுறை தான் நீரிழிவு மற்றும் இதயநோய் சம்பந்தமான நோய்களுக்கு முக்கியமான காரணியாக உள்ளது. எனவே, இதயநோய்களால் இறப்பு அதிகரிப்பதுடன் உள்ள தொடர்பு எதிர்பாராதது அல்ல என, திறன் வாய்ந்தவர்களால் மதிப்பீடு செய்யப்பட்ட (peer-reviewed) ஆய்வின் ஆய்வாசிரியர் விக்டர் வென்ஸ் ஸோங் கூறுகிறார். இந்த ஆய்வு, டயாபட்டீஸ் & மெட்டபாலிக் சிண்ட்ரோம்: க்ளீனிக்கல் ரிசர்ச் அண்ட் ரிவ்யூஸ் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

"எட்டு மணிநேரத்துக்கும் குறைவான நேரத்தில் உண்பது இதய நோயால் ஏற்படும் இறப்புகள் அதிகரிப்பதுடன் தொடர்புடையது என்பதுதான் இதில், எதிர்பாராத முடிவாக உள்ளது," என கூறுகிறார் பேராசிரியர் ஸோங். இவர், சீனாவில் உள்ள ஷாங்காய் ஜியாவ் டோங் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் தொற்றுநோயியல் நிபுணராக உள்ளார்.

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்

பட மூலாதாரம், NurPhoto via Getty Images

படக்குறிப்பு, இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இந்த தசாப்தத்தின் டிரெண்டிங் உணவுமுறையாக உள்ளது

ஓரிரு மாதங்கள் முதல் ஓராண்டு வரையிலான குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், இத்தகைய விரத உணவுமுறைகள் இதயம் மற்றும் வளர்சிதை மாற்ற நலனை மேம்படுத்துகிறது என்ற நம்பிக்கைகளுக்கு சவால் விடுக்கிறது.

பலன்களும் குறைகளும்

அதே இதழில் முன்னணி உட்சுரப்பியல் நிபுணர் அனூப் மிஸ்ரா எழுதிய தலையங்கத்தில் இந்த உணவுமுறை தரும் நம்பிக்கைகள் மற்றும் ஆபத்துகளை சீர்துக்கி பார்க்கிறார்.

பல்வேறு சோதனைகள் மற்றும் ஆய்வுகள் இந்த உணவுமுறை உடல் எடை குறைதல், இன்சுலின் ஹார்மோனுக்கு உடல் எதிர்வினையாற்றும் விதம், ரத்த அழுத்தம் குறைதல் மற்றும் அழற்சிக்கு எதிரான பலன்கள் குறித்த சில ஆதாரங்களுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பு (கொலஸ்ட்ரால்) மற்றும் ட்ரைகிளிசரைடுகளை (lipid profiles) மேம்படுத்தும் என பரிந்துரைப்பதாக அவர் கூறுகிறார்.

மேலும், கலோரிகள் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், கலாசார அல்லது மத ரீதியிலான விரத நடைமுறைகளுடன் எளிதாக பின்பற்றக்கூடிய இந்த உணவுமுறை ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதிலும் உதவலாம்.

"எனினும், ஊட்டச்சத்துக் குறைபாடு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பது, பசி அதிகரிப்பது, எரிச்சலூட்டும் தன்மை, தலைவலி மற்றும் நீண்ட காலத்துக்குப் பின் உணவுமுறையை கடைபிடிப்பது குறைந்துபோதல் போன்றவை அதன் குறைகளாக இருக்கின்றன," என பேராசிரியர் அனூப் மிஸ்ரா கூறுகிறார்.

"நீரிழிவு நோய் உள்ளவர்கள், சரியான கண்காணிப்பு இல்லாமல் விரதத்தைக் கடைபிடித்தால் ரத்த சர்க்கரை அளவு குறையும் ஆபத்து உள்ளது; மேலும் சாப்பிடக்கூடிய நேரத்தில் நொறுக்குத் தின்பண்டங்களை உண்பதையும் ஊக்குவிக்கிறது. அதிக வயதானவர்கள் அல்லது நாள்பட்ட நோய்களை உடையவர்கள், நீண்ட காலத்துக்கு இந்த உணவுமுறையை கடைபிடிக்கும்போது பலவீனத்தையோ அல்லது தசையிழப்பையோ ஏற்படுத்தும்."

இப்படி, இத்தகைய உணவு முறை ஆய்வுக்கு உட்படுவது இது முதன்முறையல்ல.

ஜாமா இண்டர்னல் மெடிசின் இதழில் 2020ல் பிரசுரமான மூன்று மாத கால ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு இந்த உணவுமுறையின் மூலம் சிறிதளவு எடையே குறைந்துள்ளது, அதில் அதிகமான அளவு தசையிழப்பின் மூலம் நிகழ்ந்திருக்கலாம்.

மற்றொரு ஆய்வில், இந்த உணவு முறையால் பலவீனம், பசி, நீரிழப்பு, தலைவலி மற்றும் கவனச்சிதறல் போன்றவை ஏற்படும் என குறிப்பிடுகிறது.

புதிய ஆய்வில், பேராசிரியர் அனூப் மிஸ்ரா கூறுகையில், மற்றொரு புதிய எச்சரிக்கையையும் சேர்க்கிறார், சில குழுக்களிடையே இதய நோய்கள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகரிப்பதாக அவர் கூறுகிறார்.

சமீபத்திய ஆய்வு முடிவுகளில் இருந்து அதன் விளைவுகளை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தான் அறிவுறுத்துவதாக பேராசிரியர் ஸோங் கூறுகிறார்.

இதய நோய் அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்கள் இத்தகைய எட்டு மணிநேரம் மட்டும் உணவு உண்ணுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கூறுகிறார். தனிநபர்கள் தங்களின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் தங்களுக்கான உணவுமுறை குறித்த அறிவுரை பெற வேண்டிய தேவை குறித்து இந்த ஆய்வு முடிவுகள் குறிக்கின்றன.

"தற்போது உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், மக்கள் எந்த நேரத்தில் சாப்பிடுகின்றனர் என்பதைவிட, என்ன சாப்பிடுகின்றனர் என்பதில் கவனம் செலுத்துவதே முக்கியமானதாக தெரிகிறது. குறைந்தபட்சம், இதய நலனை மேம்படுத்துதல் அல்லது ஆயுட்காலத்தை நீட்டிக்கும் நோக்கத்துடன் நீண்ட காலத்துக்கு எட்டு மணிநேர உணவுமுறையை கடைபிடிப்பதை யோசிக்க வேண்டாம்."

இப்போதைக்கு, முக்கியமான செய்தி என்னவென்றால் விரதத்தை ஒட்டுமொத்தமாக தவிர்ப்பது அல்ல, அது தனிப்பட்ட ஒருவரின் ஆபத்துகளுடன் இணைப்பது தொடர்பானது. ஆபத்துகளுக்கான ஆதாரங்கள் தெளிவாகும் வரை, நேரத்தைவிட, என்ன உண்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது நல்லது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp8z36n3mgvo

மருந்துகள் மீது உணவு ஏற்படுத்தும் விளைவுகள்

3 months 1 week ago

மாதுளைச் சாற்றுக்குப் பின் வயாகரா சாப்பிட்டவர் பட்ட பாடு: மருந்துகள் மீது உணவு ஏற்படுத்தும் விளைவுகள்

உணவு - மருந்து, உணவு, பானங்கள், மூலிகைகள், மனித உடல், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Serenity Strull/ BBC

கட்டுரை தகவல்

  • சோபியா குவாக்லியா

  • 5 செப்டெம்பர் 2025, 04:03 GMT

மருந்துகளின் செயல் முறையில் நாம் சாப்பிடும் உணவு சில நேரங்களில் தலையிடலாம். இதுகுறித்து விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விளைவை நேர்மறையாக பயன்படுத்தி மருந்துகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் இந்த ஆய்வுகள் நடக்கின்றன.

ஐந்து மணி நேரமாக நீடித்த ஆணுறுப்பு விரைப்புத் தன்மை, அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்னையாக இருந்திருக்கும். அவரை சோதித்த மருத்துவர்கள் முதலில் குழப்பமடைந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வந்த 46 வயது ஆண் ஒருவருக்கு ஏற்பட்ட பிரச்னை மருத்துவ பணியாளர்களை திகைக்க வைத்தது.

அவர் தனது மனைவியுடன் உடலுறவு கொள்ளும் முன், விரைப்பு தன்மையை அதிகரிக்க (erectile dysfunction) பொதுவாக வயாகரா என்று அழைக்கப்படும் சில்டெனஃபில் என்ற மருந்தை பரிந்துரைக்கப்பட்ட அளவுக்குள் உட்கொண்டார்.

விசாரணையில், அந்த நபர் முன்னதாக அதிகளவு மாதுளை பழச்சாறு குடித்திருந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் எதிர்விளைவை தடுக்கும் ஊசியை கொடுத்து, இனி மாதுளை ஜூஸை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.

அந்த நபர் குடித்த மாதுளை பழச்சாறு, வயாகரா மாத்திரையின் செயல்பாட்டை அதிகரித்து விட்டதாக மருத்துவர்கள் முடிவுக்கு வந்தனர்.

உணவு - மருந்து இடையிலான தொடர்புகள்

இந்தச் சம்பவம், நாம் சாப்பிடும் உணவுகள் எதிர்பாராத முறையில் மருந்துகளுடன் வினைபுரியக் கூடும் என்பதற்கான ஒர் எடுத்துக்காட்டு.

உணவு மருந்துகளுடன் சேர்ந்து ஏற்படுத்திய பல விசித்திரமான, சில நேரங்களில் கவலைக்கிடமான பக்கவிளைவுகளை மருத்துவ இதழ்கள் பதிவு செய்துள்ளன.

இப்போது உணவு, பானங்கள், மூலிகைகள் மனித உடலின் உள்ளே செலுத்தப்படும் மருந்துகளுடன் எவ்வாறு வினைபுரிகின்றன என்பதைக் அறியும் ஆராய்ச்சிகள் அதிகரித்து வருகின்றன.

உணவு - மருந்து, உணவு, பானங்கள், மூலிகைகள், மனித உடல், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மருந்துடன் பம்பளிமாஸ் பழம் அல்லது பழச்சாறை எடுத்துக்கொள்ளும் போது, மருந்தின் செயல்திறன் பல நேரங்களில் அதிகரித்த சம்பவங்கள் நடந்துள்ளன.

உதாரணமாக, சாத்துக்குடி பழத்தை ஒத்திருக்கும் பம்பளிமாஸ்(Grapefruit) என்று அழைக்கப்படும் பழம் இது போன்ற விளைவுகளை பல தருணங்களில் ஏற்படுத்தி இருக்கிறது. மருந்துடன் இந்த பழம் அல்லது பழச்சாறை எடுத்துக்கொள்ளும் போது, மருந்தின் செயல்திறன் பல நேரங்களில் அதிகரித்த சம்பவங்கள் நடந்துள்ளன.

ஒரு சில நபர்களுக்கு எதிர்மறை பக்கவிளைவுகளை ஏற்படுத்தி, நஞ்சாகவும் இது மாறியிருக்கிறது. மறுபுறம் நார்ச்சத்து மிகுந்த உணவுகள், மருந்தின் செயல்பாட்டையும் குறைத்துள்ளன.

மருந்துகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவை பல தசாப்தங்களுக்கு மேல் ஆராய்ச்சி மற்றும் சோதனைகளை கடந்து வருகின்றன. ஆயினும் சந்தையில் ஆயிரக்கணக்கான மருந்துகளும், அவற்றுடன் சேர்ந்து சேர்ந்து எதிர்வினையை ஏற்படுத்த வாய்ப்புள்ள கோடிக்கணக்கான உணவு கலவைகளும் உள்ளன.

பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சைக்கு பெரிய அச்சுறுத்தலாக இத்தகைய மருந்து - உணவு கலவைகள் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

பரிசோதனைகள் மற்றும் வரம்புகள்

நிபுணர்கள் இப்போது இந்த தொடர்புகளை முறையாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் இந்த வினையினால் மருந்துகள் தனித்து செயல்படுவதை விடச் சிறப்பாக செயல்படுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

"பெரும்பாலான மருந்துகள் உணவால் பாதிக்கப்படுவதில்லை," என்கிறார் கலிபோர்னியாவைச் சேர்ந்த மருந்தியல் பேராசிரியர் பேட்ரிக் சான். "சில குறிப்பிட்ட மருந்துகள் மட்டுமே உணவால் பாதிக்கப்படுகின்றன, அவற்றை நாம் கவனிக்க வேண்டும்."

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் ஐரோப்பிய மருந்து நிறுவனம் (EMA) ஆகிய இரண்டும் மருந்துகளில் உணவினால் ஏற்படும் தாக்கத்தை சோதிக்கின்றன. அதிக கொழுப்பு மற்றும் கலோரி கொண்ட உணவை எடுத்துக் கொண்ட நபர்களிடமும், எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றுடன் இருக்கும் நபர்களிடமும் இந்த சோதனைகள் எடுக்கப்பட்டுகின்றன. அதில் வெற்றியடையும் மருந்துகளை மட்டுமே இவை பரிந்துரைக்கின்றன.

ஆனால் அனைத்து விதமான உணவு கலவைகளுடன் மருந்துகளை சோதிப்பது சாத்தியமற்றது. மனித உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறை (மெட்டபாலிஸம்) சிக்கலானது எனக் கூறும் செர்பியாவின் நியூட்ரிஷன் மற்றும் மெட்டபாலிசம் ஆராய்ச்சி மையத்தில் (Nutrition and Metabolism Center of Research Excellence) பணிபுரியும் ஆராய்ச்சியாளர் ஜெலேனா மிலேஷெவிச், "இது ஒரு சிறிய தொழிற்சாலை மாதிரி. அதற்கு பல உள்ளீடுகளும், பல வெளியீடுகளும் உண்டு," என்று விவரிக்கிறார்.

உடலின் நடக்கும் வேதியியல் வினைகளின் பலனாக உணவும், மருந்தும் ஒன்றாக கலந்துவிட்டால், "அதனை பிரித்து காட்டுவது மிகவும் கடினம்," என்று கூறுகிறார் மிலேஷெவிச். வைட்டமின் டி மருந்துகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

உணவு நாம் எடுக்கும் மருந்துகளை இரண்டு விதமாக பாதிக்க முடியும்: அது மருந்தின் மூலப்பொருட்களுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது நமது உடல் மருந்துக்கு எப்படி எதிர்வினையாற்றும் என்பதை மாற்றக்கூடும்.

பிரபலமான உதாரணங்கள்

உணவு - மருந்து, உணவு, பானங்கள், மூலிகைகள், மனித உடல், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வயகரா மாத்திரை எடுத்த பிறகு மாதுளை ஜூஸை தவிர்ப்பது நல்லது.

1980களிலிருந்தே சில உணவு–மருந்து கலவைகள் குறித்து தெரியவந்துள்ளது.

அதில் மிகவும் அறியப்பட்ட எடுத்துக்காட்டு பம்பளிமாஸ் மற்றும் அதன் பழச்சாறு. இது கொழுப்பை குறைக்க பயன்படும் statin மருந்து, உயர் ரத்த அழுத்த மருந்தான nifedipine, felodipine ஆகியவற்றுடன் அதிகளவில் வினைபுரிகின்றன..

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு உடலில் பொருத்தப்பட்ட புதிய உறுப்புகளை நோய் எதிர்ப்பு அமைப்பு ஏற்க மறுக்கும் போது வழங்கப்படும் cyclosporine போன்ற மருந்தும் பம்பளிமாஸ் உடன் வினையாற்றுகிறது.

சில மலேரியா எதிர்ப்பு மருந்துகள் (artemether, praziquantel) மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை (saquinavir) உட்கொள்ளும் போதும் இந்த பழத்தினால் ரத்த ஓட்டத்தில் தாக்கம் ஏற்படுகிறது.

வயாகரா என்று பரவலாக அழைக்கப்படும் சில்டெனஃபில் மருந்துடன் சேரும் போது இந்த பழச்சாறு உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கிறது.

குருதிநெல்லி பழத்தினால் ஏற்படும் விளைவுகள்

அதேபோல் கிரான்பெரி என்று அழைக்கப்படும் குருதிநெல்லி பழச்சாறு, ரத்த உறைதலை சீராக்கும் warfarin உடன் சேரும் போது உடலில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

தினமும் கிரான்பெரி ஜூஸ் குடித்தவர்கள் அல்லது கிரான்பெரி சாஸ் உடன் உணவை எடுத்துக் கொண்ட நபருக்கு warfarin மருந்து எடுத்துக் கொண்ட பிறகு ரத்த உறைதலைத் தடுக்கும் அதன் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் மருத்துவ சோதனைகள், மதிப்பீடுகள் இந்த ஜூஸை எவ்வளவு குடித்தால் இத்தகை நேர்மறை விளைவுகள் உடலில் ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் முழுமையாக ஆய்வு ஏதுமில்லை. இதுகுறித்து அதிகமாக பகிரப்படும் ஓர் ஆய்வறிக்கையும், கிரான்பெரி ஜூஸ் தயாரிப்பாளரால் நிதியளிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.

warfarin மருந்து உட்கொள்ளும் நூற்றுக்கணக்கானவர்களை வைத்து கிரான்பெரி ஜூஸ் தொடர்பான இத்தகைய ஆய்வுகள் முறையாக செய்யப்பட வேண்டும், என்கிறார் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக மருந்தியல் துறை இயக்குநரான ஆன்னே ஹால்ப்ரூக்.

2011-இல், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், warfarin மருந்து வழிகாட்டுதல்களில் இருந்து கிரான்பெரி எச்சரிக்கையை நீக்கியது. ஆனால் இங்கிலாந்தின் NHS, நோயாளிகள் warfarin எடுத்துக்கொள்ளும் போது கிரான்பெரி ஜூஸ் குடிக்க வேண்டாம் என்று இன்றும் எச்சரிக்கிறது.

உணவு - மருந்து, உணவு, பானங்கள், மூலிகைகள், மனித உடல், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாம் சாப்பிடும் உணவுகள் எதிர்பாராத முறையில் மருந்துகளுடன் வினைபுரியக் கூடும்.

மூலிகை மருந்துகள்

2017-இல், டா கிராசா காம்போஸ் இன்னொரு விசித்திரமான சம்பவத்தை கண்டறிந்தார். மூட்டு வாதநோய்க்காக மருந்து எடுத்திருந்த நோயாளி, கைகளில் வலி மற்றும் ரத்த சோகை பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் ஆர்டிச்சோக் எனப்படும் மூலிகை செடியில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட திரவத்தை குடித்திருந்தார். அது மூட்டுவாத நோய்க்காக பயன்படும் colchicine என்ற மருந்துடன் வினையாற்றி அவரது கல்லீரிலில் நச்சுச் தன்மையை சேர்த்தது. அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான மருந்துடனும் அந்த உணவு வினையாற்றியது.

"இது மிகவும் மோசமாக இருந்தது. ஆரம்பத்தில் அவருக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை தேவைப்படும் என்று நினைத்தோம். ஆனால் அவர் தானாகவே முழுமையாக குணமடைந்தார்," என்கிறார் காம்போஸ்.

ஆர்டிச்சோக் போன்ற மூலிகை பானங்கள் பாரம்பரிய மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் காம்போஸ்.

அதேபோல், மஞ்சள் மற்றும் chlorella algae மூலம் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து பானங்கள், புற்றுநோய் மருந்துகளுடன் தொடர்பு கொண்டு, கல்லீரலில் கடுமையான நச்சுத்தன்மையை ஏற்படுத்தியதாகக் காம்போஸ் ஆய்வு செய்துள்ளார்.

ரத்த உறைதலை தடுக்கும் மருந்து மற்றும் நீரிழிவு மருந்துகளின் விளைவுகளை அதிகரிக்க மஞ்சள் பரவலாக பயன்படுகிறது.

St John's Wort என்ற மலர் சாறு, மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு மருந்துகள் சில புற்றுநோய் மருந்துகளுடன் தொடர்பு கொள்கிறது.

பால், தயிரால் என்ன பாதிப்பு?

உணவு - மருந்து, உணவு, பானங்கள், மூலிகைகள், மனித உடல், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

பால், தயிர், சீஸ் போன்றவை, சில ஆன்டிபயாட்டிக் மருந்துகள் (ciprofloxacin, norfloxacin) குடலால் உறிஞ்சப்படுவதை மாற்றுகின்றன,

இதை ஆராய்ச்சியாளர்கள் 'cheese effect' என்று அழைக்கிறார்கள். நார்ச்சத்து அதிகம் உள்ள முழு தானிய உணவுகளும் இதேபோல் செயல்படுகின்றன. பால் பொருட்களின் மூலக்கூறுகள், மருந்து மூலக்கூறுகளை குடலில் "அணைத்துக் கொள்வதால்" அவை ரத்தத்தில் நுழையாமல் தடுக்கின்றன என்று பேட்ரிக் சான் கூறுகிறார்.

"மருந்து உங்கள் ரத்தத்தில் கூட சேராது, ஏனெனில் குடலில் பால் பொருட்கள் மருந்துகளுடன் இணைவதால், அவை குடலில் சிக்கிக் கொள்கின்றன," என்கிறார் சான்.

இதற்கான தீர்வு எளிது எனக்கூறும் பேட்ரிக் சான், நோயாளிகள் மருந்து எடுத்துக்கொள்வதற்கு முன் அல்லது பின் இரண்டு முதல் நான்கு மணி நேரத்திற்குள் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்க வேண்டும்.

"பால், சீஸ் என அனைத்தையும் சாப்பிடலாம். ஆனால் மருந்துடன் ஒரே நேரத்தில் எடுக்க வேண்டாம்," என்று அவர் கூறுகிறார்.

சிகிச்சைக்கு எப்படி உதவுகின்றன?

இந்த தொடர்புகள் சற்று பயமுறுத்துவதாகத் தோன்றினாலும், எல்லாமே எதிர்மறையாக இல்லை.

சில ஆராய்ச்சியாளர்கள், உணவு–மருந்து தொடர்புகளை பயன்படுத்தி சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். உதாரணமாக, சில புற்றுநோய் மருத்துவர்கள், உணவு குறிப்பிட்ட மருந்துகளுடன் தொடர்பு கொண்டு சிகிச்சையை வலுப்படுத்துகின்றனவா என்று ஆராய்கிறார்கள்.

"மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இறைச்சி மற்றும் சமைக்காத காய்கறிகளை சாப்பிட்டு வந்தனர். அது உணவுக்குப் பின் குளுக்கோஸ் விரைவாக அதிகரிக்க வைக்காது," என்கிறார் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் உயிரியல் விஞ்ஞானி லூயிஸ் கான்ட்லி.

"அப்போது மரணத்திற்கு காரணமாக புற்றுநோய் அரிதான ஒன்றாகவே இருந்திருக்கும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் புற்றுநோய் அதிகரித்திருப்பது, விரைவாகக் கரையக்கூடிய கார்போஹைட்ரேட் உணவின் அதிகரிப்புடன் தொடர்புடையது," என அவர் கூறுகிறார்.

2018-இல் எலிகளுக்கு கீட்டோஜெனிக் டயட் (குறைந்த கார்போ, அதிக இறைச்சி மற்றும் காய்கறி) கொடுத்து நடத்திய கான்ட்லியின் பரிசோதனைகள், புற்றுநோய் மருந்துகள் டயட் எடுத்த எலிகளில் அதிக விளைவுடன் செயல்பட்டதை காட்டின.

இதன் அடிப்படையில், அவர் தொடங்கிய Faeth Therapeutics நிறுவனம், மனிதர்களிடையே சோதனை செய்கிறது. இதனை அவர் "மரபணுவை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் அறிவியலை மறுபரிசீலனை செய்வது" என்று அழைக்கிறார்.

நியூயார்க் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் புற்றுநோய் மையமும், கருப்பை புற்றுநோய் கொண்ட பெண்களிடம் இதேபோல் சோதனைகள் நடத்துகிறது.

ஆனால் உணவு–மருந்து இடையேயான தொடர்புகளின் எண்ணிக்கை மில்லியன்கணக்கில் உள்ள நிலையில் இதை ஆய்வு செய்வது சவாலானது.

அதனால், மிலேஷெவிச் கணினி உயிரியலாளர்களுடன் சேர்ந்து, அறிவியல் இதழ்களில் கிடைக்கும் உணவு–மருந்து தொடர்பான தரவுகளை ஒருங்கிணைத்து, ஒரு புதிய தரவுத்தளத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.

"இது எளிதாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அது அப்படியில்லை," என்கிறார் ஸ்பெயின் IMDEA Food Institute-இன் கணினி உயிரியலாளர் என்ரிக் காரிலோ டி சான்டா.

சில தரவுத்தளங்கள் மட்டுமே கிடைத்தன, ஆனால் அவை ஒத்துப்போகவில்லை. இறுதியில், கோடிக்கணக்கான உணவு–மருந்து தொடர்புகளை ஒருங்கிணைத்து, மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடிய புதிய தளத்தை உருவாக்கினர்.

இது இன்னும் சிக்கலானது, முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில், மருத்துவர்கள் மருந்து சிகிச்சையுடன் பொருந்தும் உணவு திட்டத்தை பரிந்துரைக்கக்கூடும். அதுவரை, வயாகரா மாத்திரை எடுத்த பிறகு மாதுளை ஜூஸை தவிர்ப்பது நல்லது.

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுத் தகவல்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. உங்கள் தனிப்பட்ட மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் மருத்துவ ஆலோசனைகளுக்கான மாற்றாக இவற்றை கருதக்கூடாது. இந்தத் தளத்தின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பயனர் மேற்கொள்ளும் எந்தவொரு சிகிச்சைக்கும் பொறுப்பேற்காது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெளிப்புற இணையதளங்களின் உள்ளடக்கங்களுக்கும் பிபிசி பொறுப்பல்ல; அவற்றில் பரிந்துரைக்கப்பட்ட அல்லது குறிப்பிடப்பட்ட எந்தவொரு வணிகப் பொருள் அல்லது சேவையையும் பிபிசி ஆதரிக்கவில்லை. உங்கள் உடல்நலனைப் பற்றிய எவ்விதக் கவலையாயினும், எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gzlyzq1p3o

கண்கள் திடீரென இருட்டாகிறதா? மூளை பக்கவாதம் வரும் ஆபத்தை உணர்த்தும் 6 அறிகுறிகள்

3 months 2 weeks ago

மூளை பக்கவாதம், 6 அறிகுறிகள்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, எம்ஆர்ஐ பரிசோதனையை ஆய்வு செய்யும் ஒரு மருத்துவர் (சித்தரிப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • சந்தன் குமார் ஜஜ்வாரே

  • பிபிசி செய்தியாளர்

  • 3 செப்டெம்பர் 2025, 05:39 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

முழு உடலையும் கட்டுப்படுத்துவதால் மூளை, மனித உடலின் மிக முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது.

உடலின் ஒவ்வோர் உறுப்பில் இருந்தும் மூளைக்கு சமிக்ஞைகள் செல்கின்றன. பின்னர் மூளை தேவைக்கேற்ப செயல்பட அந்த உறுப்புக்குக் கட்டளையிடுகிறது.

ஆனால், உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் இருந்து மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும் போது, அதை மருத்துவர்கள் மூளை பக்கவாதம் என்று அழைக்கின்றனர்.

மூளை பக்கவாதம் உடலின் ஒரு பகுதியுடன் அல்லது பல பகுதிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

உடலின் ஏதேனும் ஓர் உறுப்பு அல்லது பகுதியில் இருந்து மூளைக்கு சமிக்ஞைகள் செல்லவில்லை என்றால், அந்தப் பகுதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிவிடும்.

ஒரு நபருக்கு மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்து இருந்தால், அதன் அறிகுறிகளை எவ்வாறு அடையாளம் காணலாம்? அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

மூளை பக்கவாதம், 6 அறிகுறிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூளை பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்

மூளை பக்கவாதத்தின் 6 அறிகுறிகள்

மூளை பக்கவாதம் திடீரென ஏற்படும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், ஓர் ஆரோக்கியமான நபர் எதிர்காலத்தில் மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதைச் சில ஆரம்ப அறிகுறிகளில் இருந்து அறிய முடியும்.

பொதுவாக மருத்துவர்கள் இதை **பிஇஎஃப்ஏஎஸ்டி (BEFAST) என்று அழைக்கின்றனர்:

  • (B)பி – (பேலன்ஸ்) சமநிலை: ஆரோக்கியமாகத் தோன்றும் ஒரு நபரின் சமநிலை திடீரென பாதிக்கப்பட்டு, பின்னர் சிறிது நேரத்தில் சரியாகி விடுதல்.

  • (E)இ – கண்கள் (Eyes): திடீரென கண்களுக்கு முன்பாகத் திரை விழுந்ததைப் போல் இருட்டாகி, பின்னர் சாதாரணமாகத் தோன்றுதல்.

  • (F)எஃப் – முகம் (Face): பேசும்போது திடீரென ஒருவரின் முகம் கோணி, உடனடியாகச் சரியாகிவிடுதல்.

  • (A)ஏ – கைகள் (Arms): கை திடீரென கட்டுப்பாடற்று இருந்து, பின்னர் சரியாகிவிடுதல்.

  • (S)எஸ் – பேச்சு (Speech): திடீரென பேச்சு நின்று, சிறிது நேரம் பேச முடியாமல் இருத்தல்.

  • (T)டி – நேரம் (Time): இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டு, சிறிது நேரத்தில் சரியாகிவிட்டாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஏனெனில், இந்த அறிகுறிகள் மூளைக்கு ரத்தம் செல்வதில் தடை இருப்பதைக் குறிக்கின்றன. இது எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

"இத்தகைய அறிகுறிகளுக்குப் பின்னால் வேறு ஏதேனும் நோய்களும் இருக்கலாம். ஆனால், ஒரு நபர் முழுமையாக ஆரோக்கியமாக இருந்தால், இந்த அறிகுறிகள் எதிர்காலத்தில் மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்துள்ளதைக் குறிக்கின்றன. மேலும், இது உடனடியாகச் சரியாகவில்லை என்றால், அந்த நபருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டுவிட்டது என்று பொருள்," என டெல்லியின் பிஎல் கபூர் மேக்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் பிரதீக் கிஷோர் கூறுகிறார்.

மூளை பக்கவாதம், 6 அறிகுறிகள்

பட மூலாதாரம், Getty Images

மூளை பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு நபருக்கு சமநிலை பாதிப்பு, திடீரென பார்வை இழப்பு, பேசுவதில் சிரமம், கைகால்கள் செயல்படாமை அல்லது முகம் கோணுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டு, அவை உடனடியாகச் சரியாகவில்லை என்றால் அது மூளை பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

இத்தகைய சூழலில், நேரத்தை வீணாக்காமல் உடனடியாக மருத்துவரிடம் செல்வது அவசியம்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) நரம்பியல் துறையின் டாக்டர் மஞ்சரி திரிபாதி, "மூளை பக்கவாதம் ஏற்பட்டால், முதல் நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டியது மிகவும் முக்கியம். இது தமனியில் அடைப்பு ஏற்படுவதாலோ அல்லது தமனி வெடிப்பதாலோ நிகழ்கிறது, இதனால் மூளைக்கு ரத்தம் செல்ல முடியாது" என்று கூறுகிறார்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, மூளை பக்கவாதம் ஏற்பட்டால் இந்த முதல் நான்கரை மணி நேரம் 'கோல்டன் பீரியட்' என்று அழைக்கப்படுகிறது.

இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், ஆறு முதல் எட்டு மணிநேரத்திற்குள் சிகிச்சை தொடங்கினாலும், நோயாளி மீண்டு வருவது சாத்தியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

"தமனியில் ரத்த உறைவு இருந்தால், ரத்த உறைவு கரைப்பான் ஊசி மூலம் அதைக் கரைக்க முயற்சி எடுக்கப்படுகிறது. சில நேரங்களில், தேவைப்பட்டால் மற்றும் சாத்தியமாக இருந்தால், த்ரோம்பெக்டமி (ஒரு வகை அறுவை சிகிச்சை) மூலம் உறைந்த ரத்தம் அகற்றப்படுகிறது," என மருத்துவர் மஞ்சரி திரிபாதி கூறுகிறார்.

மூளை பக்கவாதம், 6 அறிகுறிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கட்டுப்படுத்தப்படாத மற்றும் அதிக ரத்த அழுத்தம் மூளை பக்கவாத ஆபத்தை அதிகரிக்கிறது

"அறுவை சிகிச்சை மூலம் உறைந்த ரத்தத்தை அகற்ற முடியும். ஆனால் இதற்கு வரம்புகள் உள்ளன. பெரிய தமனியில் ரத்தம் உறைந்திருந்தால் இது சாத்தியம். மூளை பக்கவாதம் ஏற்பட்ட நிலையில், நோயாளியை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது முக்கியம்," என மெட்ரோ குழும மருத்துவமனைகளின் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர் சோனியா லால் குப்தா கூறுகிறார்.

மூளை பக்கவாதம் ஏற்பட்ட நோயாளி மீட்கப்படுவது, அதாவது மீண்டும் ஆரோக்கியமடைவது சாத்தியம்தான். ஆனால் இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

சிறந்த சிகிச்சையை அளிக்க சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற பரிசோதனைகள் மூலம் மூளை பக்கவாதத்தின் தன்மை மற்றும் தீவிரத்தன்மை கண்டுபிடிக்கப்படுகிறது.

பல நேரங்களில் மக்கள் மூளை பக்கவாத விவகாரத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் நோயாளி முழுமையாகக் குணமடைவது கடினமாகிறது.

"மூளை பக்கவாதம் அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்றுவதில் முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியம். இந்தக் காலகட்டத்தில் பிசியோதெரபி மூலமும் பயனடையலாம்," என மருத்துவர் சோனியா லால் குப்தா கூறுகிறார்.

இத்தகைய நோயாளிகளுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகும் முன்னேற்றம் காணப்படுகிறது, ஆனால் அதன் வேகம் மிகவும் மெதுவாக இருக்கும்.

மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள்

மூளை பக்கவாதம் எந்த வயதினருக்கும் ஏற்படலாம் என்றாலும் சிலருக்கு இதற்கான ஆபத்து அதிகம்.

கட்டுப்படுத்தப்படாத மற்றும் தொடர்ந்து நீடிக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், புகைப் பிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன் ஆகியவை இதன் முக்கியக் காரணங்கள்.

சில நேரங்களில் இளைஞர்களுக்கு மரபணு காரணங்களால் ரத்தம் கெட்டியாகி, மூளை பக்கவாத ஆபத்து அதிகரிக்கிறது.

"இது பொதுவாக முதியவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது, ஆனால் மோசமான வாழ்க்கை முறை, ஜிம்மில் உடற்பயிற்சியின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் கழுத்தில் மசாஜ் செய்வதாலும் மக்கள் மூளை ரத்தக்கசிவுக்கு ஆளாகலாம்" என எய்ம்ஸ் மருத்துவர் மஞ்சரி திரிபாதி கூறுகிறார்.

குளிர்காலத்தில் மூளை பக்கவாத பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது.

குளிர்காலத்தில் மக்கள் பொதுவாக அதிக கொழுப்பு உணவுகளை உண்கின்றனர் என்பதால் இந்தியா போன்ற நாடுகளில் உணவு பழக்க வழக்கங்கள் இதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது

இந்தப் பருவத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகிறது.

"பொதுவாக 60-65 வயதுடைய முதியவர்களுக்கு மூளை பக்கவாத ஆபத்து அதிகம். ஆனால் சமீப காலங்களில் எங்களிடம் வரும் 40-45% மூளை பக்கவாத நோயாளிகளின் வயது 50ஐ விட குறைவாக உள்ளது," என டெல்லி பிஎல் கபூர் மேக்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் பிரதீக் கிஷோர் கூறுகிறார்.

இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் மது அல்லது சிகரெட் புகைப்பது போன்ற பழக்கங்களைக் காரணமாகக் கருதுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgdgllmprjo

Checked
Thu, 12/18/2025 - 20:15
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed