சமூகவலை உலகம்

கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசுப்படகு! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship

2 months 2 weeks ago

கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசு கப்பல்! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship

contact ship Sail lanka 0773874540 - Piradeep 0774023015 - U.Jenushan

வெளி நாட்டு சுற்றுலாப் பயணிக்கு, தனது அந்தரங்க உறுப்பை காட்டிய... ஸ்ரீலங்கா இளைஞன். (காணொளி)

2 months 2 weeks ago

581925393_10236519770008218_297368784632

காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=720409650518617 👈

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் அசிங்கம் காட்டிய இளைஞன் – வீடியோ வைரல்

இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு பெண் பயணியிடம், ஒரு இளைஞன் தனது அந்தரங்க உறுப்பை காட்டும் அசிங்கமான செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது.

இது ஒரு கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றம் ஆகும்.

நாட்டின் பெயருக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரும் சேதம் விளைவிக்கும் செயல் இது.

Nuraichcholai boys

பொய்யரை கண்டுபிடிக்க நாம் தவறுவது ஏன்? ஒருவர் கூற்று உண்மையா பொய்யா என்றறிய அறிவியல் கூறும் வழி

2 months 2 weeks ago

ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா? கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • பல்லப் கோஷ்

  • அறிவியல் செய்தியாளர்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

"பொய் சொல்லும் நபரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே கண்டுபிடித்தாலும், அது பகுத்தறிவதன் மூலமாகவே இருக்கும். நாம் அதிகமாக மதிக்கும் 'உள்ளுணர்வின்' அடிப்படையில் அல்ல" என்கிறார் 170க்கு மேல் ஐ.க்யூ (IQ) கொண்டவரான சர் ஸ்டீபன் ஃப்ரை.

பிபிசியின் 'தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ்' (The Celebrity Traitors) என்ற கேம் ஷோவில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு சற்று முன் அவர் இப்படிக் கூறினார்.

அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, அவரது கோட்பாடு நிச்சயம் உண்மையாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஏனெனில், அந்த நிகழ்ச்சியில் இருக்கும் 16 "விசுவாசமான" போட்டியாளர்கள், தங்கள் மத்தியில் இருக்கும் "துரோகிகளை" கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், கேம் ஷோ தொடங்கி ஏழு எபிசோடுகள் கடந்த பிறகுதான் "விசுவாசமான" போட்டியாளர்கள் தங்கள் மத்தியில் இருந்த மூன்று பொய்யுரைக்கும் "துரோகிகளில்" ஒருவரையே கண்டுபிடித்துள்ளனர்.

பெரும்பான்மையாக சொல்லப்படும் வழக்கமான 'ஞானத்திற்கு' முரணாக சர் ஸ்டீபனின் கோட்பாடு உள்ளது. அதாவது, பல நூற்றாண்டுகளாக மக்கள் முகங்களைப் பார்த்தே ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம் என்று நம்பினார்கள். இது ஒருவரது உடலில் நிகழும் மாற்றங்களைப் பகுப்பாயும் ஃபிசியோக்னோமி (physiognomy) என்றழைக்கப்படும் ஒரு பண்டைய முறை.

கடந்த 19ஆம் நூற்றாண்டில் குற்றவாளிகளை அடையாளம் காண இது பயன்படுத்தப்பட்டது. அதாவது, பெரிய தாடைகள், கன்னக் கதுப்பின் எலும்புகள், சமச்சீரற்ற முக அம்சங்கள், தட்டையான அல்லது பெரிதாக இருக்கும் மூக்கு, வலிமையான கண்புருவ முகடுகள் போன்றவை "நாகரிகம் குறைவான" மனிதர்களுடன் தொடர்புடைய அம்சங்களாகக் கருதப்பட்டன. இத்தகைய தோற்றம் உடையவர்கள் சந்தேகத்திற்குரிய நபர்களாகக் கருதப்படும் அபாயம் இருந்தது.

நிச்சயமாக, இது முற்றிலும் மடமைத்தனமான பார்வைதான். இது சமூக ரீதியாகவும் இன ரீதியாகவும் உருவாக்கப்படும் தப்பெண்ணங்களுடன் தொடர்புடையது. இதற்கும் அறிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் இந்தக் கருத்து முற்றிலுமாக மதிப்பிழந்துள்ளது.

இருப்பினும், சில நவீன ஆய்வுகள், ஒருவர் தம்மை எவ்வளவு தூரம் கவர்கிறார், அவர்களின் முக சமச்சீர்மை, முகபாவனைகள் ஆகியவற்றின் அடிப்படையில், மனிதர்களை நம்புவது, சந்தேகிப்பதில் மக்கள் ஈடுபடுவதாகக் கூறுகின்றன.

இதன் மூலம், நேர்மையற்ற ஒருவரது முகத்தைக்கூட மற்றவர்களின் பார்வைக்கு மிகவும் நம்பகமான ஒன்றாகக் காட்டலாம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.

அழகாக இருந்தால் நல்லவரா?

மக்கள் வெளிப்புறத்தில் தெரியும் மேலோட்டமான அம்சங்களில் அதிக கவனம் செலுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த 2000ஆம் ஆண்டில் வெளியான ஓர் ஆய்வு, கவர்ச்சிகர தோற்றம் கொண்ட மக்கள் மிகவும் நேர்மறையாக உணரப்படுவதாகக் கூறுகிறது. அதாவது, அவர்கள் அதிக புத்திசாலிகளாக, திறமையானவர்களாக, நம்பகமானவர்களாக கருதப்படுகிறார்கள் என்று அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

"எது அழகாக இருக்கிறதோ அது நல்லதாக இருக்கும் என்ற அனுமானம் இருக்கிறது" என்று கவன்ட்ரி பல்கலைக் கழகத்தின் உளவியலாளரும் விரிவுரையாளருமான ரேச்சல் மோலிட்டர் கூறுகிறார்.

"உங்களை ஒருவர் கவர்ந்திழுப்பதாகக் கருதினால், நேர்மறையான குணங்களாக நீங்கள் கருதும் குணங்களை அவர் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள்" என்கிறார் ரேச்சல்.

ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா? கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி என்ன?

படக்குறிப்பு, ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்கிறார் சர் ஸ்டீபன் ஃப்ரை

கவர்ச்சி, அழகு ஆகியவை குறித்த பார்வை உலகம் முழுவதும் நீண்ட காலமாக பெருமளவில் வேறுபடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 2015இல் வெளியான மற்றோர் ஆய்வு, கவர்ச்சி மற்றும் நம்பகத்தன்மை பற்றிய கருத்துகளை ஆராய்ந்தது. ஒரு முகம் மிகவும் பொதுவானதாகவோ அல்லது சராசரியான ஒன்றாகவோ மாறும்போது, மிகவும் கவர்ச்சிகரமான, நம்பகமான முகமாகவும் அது மாறுகிறது என்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

அதன்படி, ஒருவர் குறிப்பிட்ட அளவிலான கவர்ச்சியைக் கொண்டிருந்தால் அவர் மீதான நம்பகத்தன்மை அதிகமாக இருக்கிறது. அதுவே ஒருவர் அந்த வரம்பை மீறும் அளவுக்கு கவர்ச்சியாக இருக்கும்போது, அவர் குறித்த பிறரின் நம்பகத்தன்மை குறையத் தொடங்குகிறது.

தன்னியக்கமாக, சுயநினைவின்றி வெளிப்படும் நமது "அனிச்சையான நம்பிக்கை", மகிழ்ச்சியாகவும் நட்புறவு கொண்ட வகையிலும் தோன்றக்கூடிய முக அம்சத்தாலும் தூண்டப்படலாம். கடந்த 2008ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழக கல்வியாளர்கள் மேற்கொண்ட தொடர் சோதனைகளில் இது நிரூபிக்கப்பட்டது.

ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா? கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகபாவனைகளை, உடலியல் மாற்றங்களை வைத்து ஒருவர் பொய் சொல்வதைக் கண்டுபிடிக்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள்.

இந்தச் சோதனையில் பங்கேற்றவர்கள், கோபம், சோகம் அல்லது நடுநிலையான உணர்ச்சிகளை வெளிப்படுத்திய முகங்களைவிட, மகிழ்ச்சியான அல்லது புன்னகைக்கும் பாவனைகளைக் கொண்ட முகங்களை அதிக நம்பிக்கையானவை என மதிப்பிட்டனர்.

பிரெஞ்சு தன்னார்வலர்கள் மத்தியில் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மிகவும் உண்மையானதாக மதிப்பிடப்பட்ட புன்னகைகளைக் கொண்ட முகம் நம்பத் தகுந்தது என்றும் கருதப்பட்டதைக் கண்டறிந்தது. அதுமட்டுமின்றி, அத்தகைய முகங்களைக் கொண்டவர்கள் அதிக வருமானம் ஈட்டுபவராக இருக்கலாம் என மக்களை நினைக்க வைப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்தது.

சன்கிளாஸ், முகக்கவசம், முகத்தை மறைக்கும் வகையில் இருக்கும் நீளமான முடி ஆகியவை, நம்பகத்தன்மை அளவைக் குறைப்பதாகக் கூறுகிறார் உளவியலாளர் ரேச்சல்.

என் முகம் எவ்வளவு நம்பகமானது?

என் முகம் எவ்வளவு நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கிறது எனக் கூறுமாறு சில ஆய்வாளர்களிடம் கேட்டேன். இது சற்று ஆபத்தானதாகத் தெரிந்தாலும், எனக்கு ஆர்வமாக இருந்தது.

அவர்கள் முதலில், என் முகம் எவ்வளவு சமச்சீராக இருக்கிறது என்பதைப் பார்த்தார்கள். சமச்சீர் என்பது முகத்தின் இருபுறமும் எவ்வளவு சீராக இருக்கிறது என்பதாகும்.

ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா? கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி என்ன?

படக்குறிப்பு, பல்லப் கோஷ் தனது சொந்த முகத்தின் நம்பகத்தன்மையை ஆராயுமாறு ஆய்வாளர்களிடம் கேட்டுக்கொண்டார்

"மக்கள் பெரும்பாலும் சமச்சீரான முகங்களை மிகவும் அழகானவையாகக் கருதுகிறார்கள். அழகான முகங்கள் பெரும்பாலும் நம்பகமானவையாக கருதப்படுகிறது" என்று கூறினார் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் உளவியல் மற்றும் குற்றவியல் துறையில் விரிவுரையாளராக இருக்கும் மிர்சியா ஸ்லோடானு.

அதோடு ஹேலோ விளைவு என்ற ஒன்றும் உள்ளது. அதாவது, ஒருவர் ஒரு வழியில் நல்ல விதமாகத் தென்பட்டால், அவர் பிற விஷயங்களிலும் நல்லவராக இருப்பார் என்று கருதுவது.

உளவியலாளர் மிர்சா ஸ்லோடானு, "அனைவரிடமும் சிறிய அளவிலான சமச்சீரற்ற தன்மை இயல்பாக இருக்கும்" என்று விளக்கினார். ஆகையால், "சில சமச்சீர்மை அம்சங்கள் ஒருவரை நல்லவராகக் காட்டலாம். ஆனால், ஒரு முகம் மிகச் சரியானதாக இருந்தால் அது விசித்திரமாகவோ அல்லது இயற்கைக்கு மாறானதாகவோ தோன்றத் தொடங்குகிறது" என்கிறார் முனைவர் ஸ்லோடானு.

இந்தக் காரணத்தாலேயே, டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட முகங்கள் அல்லது ரோபோக்களின் முகங்களின் சமச்சீர் மிகுந்த துல்லியத்தன்மை, பார்ப்போருக்கு விசித்திரமாகத் தோன்றுகிறது.

ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா? கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி என்ன?

படக்குறிப்பு, பல்லப் கோஷின் முகத்தில் உள்ள சமச்சீர்மையை முனைவர் மிலேவா ஆராய்ந்தார் (இந்தப் புகைப்படங்கள் தன்னார்வலர்களுக்கு காட்டப்பட்டவை அல்ல)

என் முகத்தை எப்படி அதிகம் நம்பகமான ஒன்றாகத் தோன்ற வைப்பது என்பதைக் காட்ட, மற்றொரு ஆய்வாளரான முனைவர் மிலா மிலேவா என் புகைப்படத்தில் சில திருத்தங்களைச் செய்தார். அவர் முக சமச்சீர்மையை சிறிது மாற்றி, என் உதடுகளில் புன்னகையைக் கொண்டு வந்தார்.

கூடுதலாக ஒரு படி மேலே சென்று, என் முகத்தை இளமையானதாகவும் பெண்மை கொண்டதாகவும் மாற்றிக் காட்டினார். அதாவது, பெண் முகங்கள், குரல்கள், பெயர்கள் பெரும்பாலும் ஆண் முகங்களைவிட நம்பகமானவையாகக் கருதப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, ஒரு முகம் எவ்வளவு பெண்மையுடன் தெரிகிறதோ, அவ்வளவு நம்பகமானது என மக்கள் நினைக்கிறார்கள்.

இந்த மாற்றங்களைச் செய்த பிறகு, அவர் 26 தன்னார்வலர்களுக்கு வெவ்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட என் முகத்தின் வெவ்வேறு வடிவங்களைக் காட்டினார். ஒவ்வொரு நபரும் 35 முகங்களின் புகைப்படங்களில் ஒன்றாக என் முகத்தையும் பார்த்தார்கள். அந்தத் தன்னார்வலர்கள் ஒவ்வொரு முகத்திற்கும், 1 (நம்பகமானதல்ல) முதல் 9 (மிகவும் நம்பகமானது) என்ற அளவுகோலில் மதிப்பிட்டனர்.

இது ஓர் அதிகாரபூர்வ அறிவியல் ஆய்வு இல்லை. ஆனால் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே இருந்தன. அதாவது மக்கள் என் முகத்தின் இளைய, புன்னகைக்கும், பெண்மை கூட்டப்பட்ட வடிவத்தின் மீது அசல் முகத்தைவிட அதிகமாக நம்பிக்கை வைத்தனர்.

இந்தச் சோதனையின் இறுதியில் நான் எளிமையான விஷயத்தை கற்றுக் கொண்டேன். அதாவது நான் கொஞ்சம் கூடுதலாகச் சிரித்தால், மக்கள் என் அறிவியல் கட்டுரைகளை அதிகமாக நம்பக்கூடும்.

ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா? கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி என்ன?

படக்குறிப்பு, குழு மனப்பான்மை மக்களின் முடிவுகளை அதிகம் பாதிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

மக்களின் மந்தை மனோபாவம்

ஆரம்பத்தில் பார்த்த கேம் ஷோவில் இருப்பதைப் போல, துரோகிகளைக் கண்டறிவதை பொறுத்தவரை, குழு மனப்பான்மை காரணமாக யாரை நம்புவது என்பது பற்றிய கேள்வி மிகவும் சிக்கலான ஒன்றாக மாறுகிறது.

முனைவர் மோலிட்டர் ஏமாற்றுவதில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் துரோகிகளாக கேம் ஷோ நிகழ்ச்சியில் வந்தவர்களுடைய மிகப்பெரிய ரசிகராகவும் உள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த இந்த ஆண்டின் போட்டியாளர்கள் ஒரேயொரு பொய்யரை அடையாளம் காண்பதற்குக் கூட இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டதற்கான காரணம் குறித்து அவருக்குச் சொந்தக் கருத்து உள்ளது. அதாவது "குழு மனப்பான்மை மோசமான முடிவுகளை எடுக்கவே வித்திடுவதாக" அவர் வாதிடுகிறார்.

"துரோகத்திற்கான சான்றுகள் மெல்லியதாகவோ, தெளிவற்றதாகவோ இருந்தாலும்கூட, மந்தை மனநிலை கொண்ட மக்களை அது கூட்டாகப் பிழை செய்வதற்கு இழுக்கிறது," என்று கூறுகிறார் அவர்.

மக்களின் மனம், குழு சிந்தனையில் எழக்கூடிய, பெரும்பாலும் தவறாக இருக்கக்கூடிய அனுமானத்தை ஆதரிக்காத ஆதாரங்களை புறக்கணிப்பதாகவும் கூறுகிறார்.

ஒருவர் எவ்வளவு நம்பகமானவர் என்பது குறித்து மக்களுக்கு எண்ணங்கள் எழுவதன் வேகமும் இந்தப் பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்கலாம். இது ஒரு நபரின் நம்பகத்தன்மையை தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா? கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துல்லியமான சமச்சீர்மை இருப்பது, ரோபோ முகங்கள், டிஜிட்டலாக உருவாக்கப்பட்ட முகங்கள் மீது மக்களுக்கு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது

நம்பிக்கையை அளவிடக்கூடிய திறன் என்பது, மனித பரிணாம வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே உருவாகிவிட்டதாக முனைவர் மிலேவா விளக்குகிறார். "நமது முன்னோர்கள் ஒருவர் நண்பரா, பகைவரா என்பதை ஒரு நொடியில் சொல்ல வேண்டியிருந்தது. இது மிகவும் விரைவான சிந்தனைச் செயல்முறை. நம்பகத்தன்மை குறித்த நிலையான எண்ணங்கள் நமக்குள் உருவாவதற்கு ஒரு விநாடியில் பத்தில் ஒரு பங்கு நேரமே ஆகிறது" என்று அவர் விளக்குகிறார்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அனிச்சையாக ஏற்படும் நமது நம்பிக்கைகள் விரைவாக உருவாகும் அதேவேளையில், அவை மிக மோசமானவை என்று மிலேவாவின் ஆராய்ச்சி காட்டுகிறது.

பொய்யர்களை கண்டுபிடிக்க நாம் தவறுவது ஏன்?

பொய் கண்டறிதலுக்கான அறிவியல் அணுகுமுறைகள், ஏமாற்றுதலின் சமூகப் பங்கு ஆகியவற்றில் நிபுணரான மிர்சியா ஸ்லோட்டானு, விரைவாக உருவாகும் நமது அனிச்சையான நம்பிக்கை மோசமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார்.

நம்பத்தகுந்த நபர்களையும் பொய் சொல்பவர்களையும் கண்டறிவதில் நாம் மிகவும் திறமையானவர்கள் என்று நமக்கு நாமே கருதிக் கொள்கிறோம் என்பதையும் ஆனால் உண்மையில் அப்படி இல்லை என்பதையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.

"வியர்வை, நேராகக் கண்களைப் பார்க்காதது, முகம் சிவத்தல், நடுக்கம் அல்லது பிற உடலியல் குறிப்புகளைத் தேடுவதன் மூலம் நம்மால் ஒரு பொய்யைக் கண்டுபிடித்துவிட முடியும் எனக் கருதுகிறோம். ஆனால், உண்மையில், இந்தக் குறிப்புகள் நம்ப முடியாத அளவுக்கு சுற்றியிருக்கும் சூழல் சார்ந்தவையாக உள்ளன. இவை ஏமாற்றுதலின் நம்பகமான குறியீடுகள் இல்லை" என்று கூறுகிறார் ஸ்லோடியனு.

ஒருவர் சொல்வது உண்மையா, பொய்யா? கண்டுபிடிக்க அறிவியல் கூறும் வழி என்ன?

பட மூலாதாரம், Getty Images

"ஒருவர் பதற்றமாக, கூச்ச சுபாவமுள்ளவராக இருப்பதால் வியர்த்துக் கொண்டிருக்கலாம் அல்லது கண்களை நேராகப் பார்க்காமல் இருக்கலாம். அதற்காக அவர்கள் பொய் சொல்வதாகப் பொருள் இல்லை. பெரும்பாலும், இந்த சமிக்ஞைகளை நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம். ஏனெனில், அவை நேர்மையற்ற தன்மையைக் குறிப்பதாக நாம் கருதுகிறோம். ஆனால் உண்மையில் அவை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படும் அசௌகரியம் அல்லது உணர்ச்சித் தூண்டுதலின் அறிகுறிகளே" என்றும் அவர் விளக்கினார்.

பல்வேறு சோதனைகளில், தன்னார்வலர்கள், ஒருவரின் வீடியோவை பார்த்து, அவர் சொல்வது பொய்யா, உண்மையா என்பதைக் கண்டறிய, வியர்த்தல், விலகி வேறுபுறமாகப் பார்ப்பது, முகம் சிவத்தல் போன்ற வழக்கமான குறிப்புகளைப் பயன்படுத்தினார்கள்.

முனைவர் ஸ்லோடானுவும் அவரது குழுவினரும் சோதனைகளில் பங்கெடுத்த தன்னார்வலர்களால் உண்மை மற்றும் பொய்க்கு இடையிலான வித்தியாசத்தை அறிய முடியவில்லை என்பதையும், போலி உணர்ச்சிகள் அல்லது கற்பனையான கதைகள் போன்ற பல்வேறு வகையான பொய்களைக் கண்டறிவதில் அவர்கள் சிறந்து விளங்கவில்லை என்பதையும் கண்டறிந்தனர்.

மீண்டும் குழு மனப்பான்மையுடன், தவறான பதிலையே உறுதி செய்வதில் அதிகமான மக்கள் ஈடுபட்டது துல்லியத்தன்மையை மேலும் குறைத்தது.

"அறிவியல் ஆய்வுகளைப் பார்க்கும்போது, அதைப் பிரதிபலிக்கும் எங்கள் சொந்தப் பரிசோதனை முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் பொய்களைக் கண்டுபிடிப்பதில் சிறந்தவர்கள் அல்ல என்பது புரியும். அதாவது இது அடிப்படையில் ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டு, கையில் இருப்பது பூவா, தலையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு நிகரானதுதான்" என்று முனைவர் ஸ்லோட்டானு கூறினார்.

பொய்யர்களால் பிறரை முட்டாளாக்க முடிந்தது எப்படி?

ஆரம்பத்தில் கூறிய நிகழ்ச்சியில் பங்கெடுத்த துரோகிகளால் இவ்வளவு காலம் அனைவரையும் முட்டாளாக்க முடிந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதில் போட்டியாளர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் முக்கியப் பங்கைக் கொண்டிருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அப்படியெனில், தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ் நிகழ்ச்சியில் இருந்து கிடைத்த பாடம் என்ன? நாம் நம்பும் நபர்களால் எளிதில் ஏமாற்றப்படலாம் என்பதுதானா?

இது உண்மையெனில், அது எப்போதும் மோசமான விஷயமாக இருப்பதல்ல என்று முனைவர் ஸ்லோட்டியனு கூறுகிறார். பொய் சொல்வது நீண்டகாலமாக மிகவும் மோசமான விஷயமாக கருதப்படுகிறது என்று விளக்கும் அவர், "ஆனால் உண்மையில், கொஞ்சம் பொய் சொல்லும் திறனும், சில நேரங்களில் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் திறனும் இருப்பது சமூகத்தில் உதவிகரமாக இருக்கும்" என்கிறார்.

எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சிறிய விஷயங்களில் பொய் கூறலாம். அதாவது, அவர்கள் நன்றாக இருக்கிறார்கள், எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகிறீர்கள். அல்லது கூடுதலாக ஒரு துண்டு கேக் சாப்பிடுவது நல்லது எனக் கூறுகிறீர்கள். இவை மோசமான பொய்கள் அல்ல. அவை நட்பை உருவாக்கிக் கொள்ளவும், நல்ல உறவுகளைப் பராமரிக்கவும், மக்கள் நல்லவிதமாக உணர்வதற்கும் உதவுகின்றன. இந்த வகையான பொய்கள், "பசை" போலச் செயல்பட்டு, மக்களை இணைக்கிறது.

ஒருவர் உண்மையைத்தான் பேசுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ளவும் விஞ்ஞானிகள் சில பரிந்துரைகளைக் கூறுகிறார்கள். அதாவது, நமது சொந்தச் சார்பு நிலைகளைப் புரிந்து கொள்வது, நமக்கு உடனடியாக ஏற்படும் முதல்கட்ட எண்ணங்களையே முற்றிலுமாக நம்பாமல் இருப்பது, உள்ளுணர்வுகளை மட்டுமே அதிகமாக நம்புவதைத் தவிர்ப்பதும், அதற்கு உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த அடிப்படையில் பார்த்தால், சர் ஸ்டீபன் ஃப்ரை கூறியது சரிதான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm2w7yvvmy2o

யாழ் மாவட்டத்திற்கு காற்று மாசுபடுத்தலினால் ஆபத்தா??

2 months 3 weeks ago

அண்மைக்கலாமாக வடமாகாணத்தில் காற்றின் தரம் குறைந்து வருகின்றது அதாவது யாழ்ப்பாணத்தில் காற்று அதிகளவில் மாசுபட்டு வருகின்றது. தற்பொழுது அது ஆபத்தான நிலைக்கு அண்மித்து உள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது காற்று சுவாசிக்க உகந்தது அல்ல என்று கூறப்படுகின்ற நிலையில் இவ்வாறு மாசுப்படல் பல்வேறு காரணங்களால் நடைபெறுகின்றது அது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

air_polu.png?w=447

  1. யாழ் மாவட்டத்தில் இவ்வாறு காற்று மாசு படுவதற்கான காரணங்கள் என்ன?

முக்கியமாக அயல்நாடான இந்தியாவில் இருந்து குறிப்பாக டில்லி போன்ற நகரங்களில் இருந்து மாசுபட்ட காற்று யாழ் மாவட்டத்தினை நோக்கி நகர்வதாகும். குறிப்பாக வடகீழ் பருவ பெயர்ச்சி காற்று நிலவும் நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இவ்வாறான மாசடைந்த காற்று யாழ் மாவட்டத்தினை  வந்தடைகின்றது. மேலும் இக்காலப்பகுதியில் நிலவவும் அதிகரித்த ஈரப்பதன் காரணமாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் குப்பைகளினை எரிப்பதினால் வரும் புகை என்பன வளிமண்டலத்தில் மேல் நோக்கி செல்லாமல் தரை மட்டத்தில் தங்குவதினால் மனிதர்கள் அதிகளவு மாசடைந்த காற்றினை சுவாசிக்க நேரிடுகின்றது.

air-pollution-in-colombo-sri-lanka.jpg?w

2. வேறு என்ன காரணங்களினால் காற்று மாசடைகின்றது?

மேற்குறிய காரணங்கள் தவிர கட்டிட நிர்மாண பணிகளினாலும், வாகனங்கள் வீதியில் செல்லும் பொழுது வீதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் படிந்த தூசுக்கள் வளி மண்டலத்திற்கு வெளிக்கிளம்புவதினால் காற்று மாசுபடுகின்றது

3. கொழும்பு போன்ற நகரங்களில் காற்று மாசுபடுவதற்கான பிரதான காரணங்கள் என்ன?

பிரதானமாக வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையே காரணம் ஆகும்

4. யாழில் தற்போது நிலவவும் அதிக மாசுப்பட்ட காற்று எவ்வாறு குறைவடையும்?

வட கீழ் பருவ காற்று முடிவடைந்து தென் மேல் பருவ காற்று (May to September) தொடங்கும் பொழுது இந்து சமுத்திரத்தில் இருந்து வரும் ஈரப்பதன் நிறைந்த காற்று இம்மாசுக்களை கழுவி செல்ல தற்பொழுது நிலவும் சூழ்நிலை மாறும். இடைப்பட்ட காலங்களில் உள்ளூரில் நிலவும் காற்று ஒட்டத்தினை  பொறுத்து காற்று மாசுபடல் இருக்கும்

 5. எவ்வாறான மாசுக்கள் இந்த மாசடைந்த காற்றில் இருக்கும்?

வாகன மற்றும் தொழில் சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகளில் இருக்கும் கார்பன் துகள்கள், கார்பன் மோனோக்ஸ்சைடு, கந்தகம், நைட்ரோஜென் ஓட்ஸ்சைட், ஈயம், பிளாஸ்ட்டிக் துகள்கள் …. போன்ற பல்வேறு மாசுக்கள் இருக்கும்.

இவை தவிர பல்வேறு சிறு துணிக்கைகள் இருக்கும் இவை மிக மிக மெல்லிய துகள்களாக இருக்கும். முக்கியமாக 2.5 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில் இம்மாசுக்கள்  இருக்கும் இதன் காரணமாக இந்த மாசுக்கள் நுரையீரலின் சுவாச சிற்றறை வரை சென்றடையும் இவை பொதுவாக PM 2.5 என்றழைக்கப்படும். பல சந்தர்ப்பங்களில் இவை நுரையீரலினை தாண்டி இரத்தத்தில் கலக்கும்

PM 10 என்பது 10 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில்  இருக்கும் மாசுக்கள். உதாரணமாக வீதியோர தூசுக்கள், மகரந்த மணிகள் போன்றன இதில் அடங்கும். இவை எமது நாசிக்குழியுடன் நின்று விடும். எனவே PM 2.5 என்பது PM 10 என்பதினை விட ஆபத்தானது.

6. ஏன் மாசடைந்த காற்று மணக்கவில்லை?

சாதாரணமாக நாம் மாசடைந்த காற்றினை சுவாசிக்கும் பொழுது வித்தியாசமான மணமாக இருக்கும் ஆனால் தற்போதைய மாசடைந்த காற்று அதிகளவு ஈரப்பதன் மூலம் நிரம்பி இருப்பதினால் இவ்வாறான மணம் இருக்க மாட்டாது

7. மாசடைந்த காற்றினை சுவாசித்தினால் மனிதருக்கு எவ்வாறான சுகாதார சீர்கேடுகள் ஏற்படும்?

ஏற்கனவே சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு அந்த நோய்கள் அதிகரிக்கும் அதாவது தீவிரத் தன்மை அடையும். சிலருக்கு புதிதாக சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அதாவது இருமல் மற்றும் சுவாசிப்பதில் கடின தன்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்

8. எம்மை எவ்வாறு நாம் பாதுகாத்து கொள்ளலாம்?

வீட்டினை விட்டு வெளியில் செல்லும் பொழுது பொதுவாக போக்குவரத்தில் ஈடுபடும் பொழுது முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் எமது சூழலில் குப்பைகளை இருக்கது தவிர்க்க வேண்டும்.

9. எவ்வாறு காற்றின் தரத்தினை அறிந்து கொள்ளலாம்?

IQAir, World’s Air Pollution, AirNow App, Accu weather போன்ற சர்வதேச வலைத்தளங்களில் இருந்தும் இலங்கையின் AQ.LK, https://www.nbro.gov.lk/ வலைத்தளங்களில் இருந்தும் realtime முறையில் நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசுபட்டுள்ளது என்பதினை அறிந்து கொள்ளலாம்

இவ்வாறு மாசடைவதன் காரணமாக பாதிப்பினை எதிர்கொண்ட வைத்தியர் ஒருவர் மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்றினை தாக்குதல் செய்துள்ள நிலையில்  யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்ட விரிவான திட்டத்தைத் தயாரிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA) மற்றும் யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 22, 2026 அன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

https://tinyurl.com/3mynhy82

கதைகளை வாசிக்கும் போது நம் மூளையில் என்ன நடக்கிறது?

2 months 3 weeks ago

சிறுமி ஒருவர் புத்தகத்தை வாசிக்கும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீங்கள் வாசிக்கும்போது உங்கள் தலைக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா?

கட்டுரை தகவல்

  • அனலியா லோரென்டே

  • பிபிசி நியூஸ் முண்டோ

  • 8 நவம்பர் 2025

" நம் அனுபவத்தின் எல்லைகளை விரிவாக்குவதற்கு வாசிப்பது ஒரு சிறந்த வழியாகும்,"

மூளையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்துள்ள கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் முனைவர் ரேமண்ட் மார் இதை விளக்கியுள்ளார்.

மூளையின் செயல்பாட்டைக் குறித்த ஆய்வுகளின்படி, ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரத்தின் கதையை வாசிப்பது, அதை நிஜத்தில் வாழ்வதற்குச் சமமானதாக இருக்கிறது.

ஆனால், மனிதர்களின் மிக சிக்கலான உறுப்பான மூளையின் புதிரான செயல்பாட்டிற்கும் வாசிப்பிற்கும் இடையிலான உறவு குறித்த விஞ்ஞானிகளின் பல கண்டுபிடிப்புகளில் இது ஒன்றுதான்.

வாசிக்கும்போது நம் மூளையில் என்ன நடக்கிறது என்று ஆய்வு செய்த மூன்று ஆராய்ச்சியாளர்களை பிபிசி பேட்டி கண்டது.

மூளையும் மனமும்

ஆராய்ச்சியாளர்கள் முதலில் இருந்து வலியுறுத்தி வருவது ஏதாவது இருக்குமானால் அது மூளைக்கும் மனதிற்கும் உள்ள வித்தியாசமே ஆகும்.

"மூளை என்ன செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, மனம் என்ன செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மூளையைப் பற்றி தனியாகப் பேச முடியாது," என்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் உளவியல் (Cognitive Psychology) பேராசிரியரான கீத் ஓட்லி சுட்டிக்காட்டினார்.

"நாம் வாசிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட மூளைப் பகுதி செயல்படுகிறதா என்பதை அறிவது மட்டும் போதாது. அந்தச் செயல்பாட்டில் மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம்," என்று மார் ஏற்றுக்கொள்கிறார்.

பெண் ஒருவர் படிக்கும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாம் வாசிக்கும்போது மூளை அதற்கானப் படங்களை உருவாக்குகிறது.

மனதில் தோன்றும் படங்கள்

வாசிக்கும்போது தூண்டப்படும் முதல் எதிர்வினைகளில் ஒன்று, மனதில் படங்களை உருவாக்குவதுதான்.

"நாம் வாசிக்கும்போது, விளக்கப்பட்டதைப் போன்ற உருவங்களை மனம் உருவாக்குகிறது அல்லது நினைவுபடுத்துகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன," என்று மார் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

"அடிப்படையில், நீங்கள் ஒரு காட்சியைப் பற்றிய விரிவான விளக்கத்தைப் வாசித்தால், உங்களால் மூளையின் காட்சிப் புறணியில் (visual cortex) செயல்பாட்டைக் காண முடியும். அறிதலுக்கும் (perceiving) அறிதல் பற்றி வாசிப்பதற்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன," என்று அவர் கூறினார்.

நாம் வாசிப்பதையே நிஜத்திலும் வாழ்கிறோமா?

புனைகதைக் கதாபாத்திரத்தின் அனுபவத்தைப் பற்றி வாசிப்பதற்கும், அந்தச் செயல்பாட்டை நிஜ வாழ்க்கையில் அனுபவிப்பதற்கும் இடையில் மூளை பெரிய வேறுபாட்டைக் காண்பதில்லை என தோன்றுவதாக ஓட்லியும் மாரும் முடிவுக்கு வந்துள்ளனர்.

"ஏதோவொன்றைப் பற்றி வாசிப்பதற்கும் அதை அனுபவிப்பதற்கும் மூளை ஒரே மாதிரியாகவே வினைபுரிவதாக தெரிகிறது," என்று மார் விளக்கினார்.

அந்த நிபுணரின் கூற்றுப்படி, ஒரு நாவலில் ஒரு கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதைப் பற்றி ஒருவர் வாசிக்கும்போது, அந்த நபர் நிஜத்தில் அந்தச் செயலைச் செய்யப் பயன்படுத்தும் அதே மூளைப் பகுதிகளே செயல்படுகின்றன.

"உதாரணமாக, ஒரு கதையின் கதாநாயகன் ஆபத்தான அல்லது பயப்படக்கூடிய சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நாம் பயத்தை உணர்கிறோம் என்பது நமக்குத் தெரியும்," என்று மார் உதாரணம் அளித்தார்.

இது ஒன்றில் அல்லது ஒருவரிடத்தில் தன்னைப் பொருத்திப்பார்க்கும் தெளிவான பச்சாதாப உணர்வு.

"நிஜ வாழ்க்கையில் மக்கள் பச்சாதாபம் உள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதை அறிய மூளையின் சில பகுதிகளை கண்காணிக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டது. கதைகளில் உள்ள கதாபாத்திரங்களைப் பற்றிப் வாசிக்கும்போது அதே மூளைப் பகுதிகள்தான் தூண்டப்படுகின்றன. ஏனெனில், உளவியல் செயல்முறை ஒத்திருக்கிறது," என்று ஓட்லி பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

சிறுவன் ஒருவன் புத்தகம் படிக்கும் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை வாசிக்கும்போது, நாம் நம்மை அவர்களின் இடத்தில் வைத்து, ஏறக்குறைய அதே உணர்வுகளை அனுபவிக்க முடியும்.

இயக்கம்

செயலைக் குறிக்கும் ஒரு வினைச்சொல்லை நாம் வாசித்தால், நாம் அதைச் செய்வதாக மூளை புரிந்துகொள்கிறதா?

"நாம் ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை மௌனமாகப் வாசிக்கும்போது செயல்படும் மூளையில் உள்ள இயக்கப் பகுதிகளும், நாம் இயக்கத்தைச் செய்யும்போது செயல்படும் பகுதிகளும் மிக அருகில் உள்ளன," என்று பிரான்சின் லியோனில் உள்ள மொழியியல் இயக்கவியல் ஆய்வகத்தின் (Language Dynamics Laboratory) அறிவாற்றல் நரம்பியல் ஆராய்ச்சியாளர் வெரோனிக் பூலெங்கர் சுட்டிக்காட்டினார்.

காலால் உதைப்பது, நடப்பது அல்லது ஓடுவது போன்ற செயல்களை ஒருவர் வாசித்தால், மூளை இயக்கப் பகுதியைத் தூண்டும் என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார்.

"ஒரு வகையில், மூளை நாம் வாசிக்கும் செயலை உருவகப்படுத்துகிறது," என்று பூலெங்கர் பிபிசி முண்டோவிடம் கூறினார்.

போட்டி

ஆனால், ஒரு செயல்பாட்டு வினைச்சொல்லை வாசித்து, அதே நேரத்தில் ஒரு அசைவைச் செய்ய முயற்சித்தால் என்ன நடக்கும்?

"ஒரு ஆய்வில், பங்கேற்பாளர்களை ஒரு திரையில் செயல்பாட்டு வினைச்சொற்களை வாசிக்கும் அதே நேரத்தில் ஒரு பொருளை எடுக்கச் சொன்னோம். அப்போது, வாசிக்காதபோது இருப்பதைவிட, அசைவுகளின் வேகம் குறைவாக இருந்தது," என்று பூலெங்கர் விளக்கினார்.

மூளையின் அதே வளங்களைப் பயன்படுத்துவதில் "குறுக்கீடு அல்லது போட்டி" இருப்பதால் இது நடக்கிறது என்று அந்த ஆராய்ச்சியாளர் கூறினார்.

பெண் ஒருவர் உடற்பயிற்சி செய்துகொண்டே புத்தகம் படிக்கும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாசிப்பதும் செயல்படுவதும் மூளையில் "குறுக்கீடு அல்லது போட்டி"யை உருவாக்குகின்றன.

நேரடி அல்லது மரபுத்தொடர்

மூளையின் செயல்பாட்டைக் கண்டறியும் செயல்பாட்டு காந்த அதிர்வு இமேஜிங் (functional magnetic resonance imaging - fMRI) என்ற மற்றொரு ஆய்வில், கை அல்லது கால் தொடர்பான செயல்பாட்டு வினைச்சொற்களை உள்ளடக்கிய நேரடி வாக்கியங்கள் அல்லது மரபுத் தொடர்களை வாசிக்கும்போது மூளையின் செயல்பாட்டை பூலெங்கர் பகுப்பாய்வு செய்தார்.

"இரண்டு வகையான வாக்கியங்களுக்கும், மூளையின் மொழி பகுதிகளின் செயல்பாடுகளுடன், இயக்க மற்றும் முன்-இயக்க மூளைப் பகுதிகளின் (motor and premotor brain regions) செயல்பாடுகளும் காணப்பட்டன," என்று அவர் விளக்கினார்.

அந்த நிபுணரின் கூற்றுப்படி, கை தொடர்பான வாக்கியங்கள் மூளையில் கையைச் சித்தரிக்கும் இயக்கப் பகுதியையும், அதே சமயம் கால் தொடர்பான வாக்கியங்கள் மூளையின் வேறுபட்ட இயக்கப் பகுதியையும் தூண்டுகின்றன.

இது, மூளையின் இயக்கப் புறணியின் (motor cortex) உடலமைப்பு பிரதிபலிப்புக்கு (somatotopy) பதிலளிக்கிறது. அதாவது, உடலின் வெவ்வேறு பாகங்கள் இயக்கப் புறணியின் வெவ்வேறு துணைப் பகுதிகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அமைப்பு இது.

நிஜ வாழ்க்கையில் எப்படி உதவும்?

கதைகளைப் புரிந்துகொள்வதில் ஈடுபட்டுள்ள மூளைப் பகுதிகளுக்கும், மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் நாம் பயன்படுத்தும் பகுதிகளுக்கும் இடையே பொதுவான பகுதிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அப்படியானால், புனைகதைக் கதாபாத்திரங்களைப் வாசிப்பதன் மூலம் பச்சாதாபம் கொள்வது, நிஜ வாழ்க்கையில் மக்களை நன்கு புரிந்துகொள்ள உதவுமா?

மார் அப்படித்தான் நம்புகிறார்.

"நாம் அடிக்கடி வாசிப்பதிலும், அதில் உள்ள கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் ஈடுபாடு காட்டுவதாக இருந்தால், அது மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் நம் திறனை மேம்படுத்தலாம் அல்லது கற்றுக்கொள்ளலாம் என்று இது பொருள்படலாம்," என்று அவர் பகுப்பாய்வு செய்தார்.

"உதாரணமாக, ஒரு மாற்றுத்திறனாளி போல வாழ்வது எப்படி என்று நமக்கு ஒருபோதும் தெரியாமல் இருக்கலாம்," என்று அவர் கூறினார், "ஆனால், அதை அனுபவிக்கும் நபரின் இடத்தில் நம்மை வைக்கும் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட ஒரு கதையை வாசித்தால், நாம் அந்த அனுபவத்தைப் புரிந்துகொள்ளும் நிலையை அடையலாம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2310jvzpzpo

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிரித்தானியா வாழ் தமிழனுக்கு தெற்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இனத்துவேசம்....முகநூலில் பிரதி பண்ணப்பட்டது..நன்றி..Thapes Vlogger

3 months ago

Thapes Vlogger is at Ahangama Beach, Sri Lanka.

deposSntro68a15fm785396h318iitflm7g0uf89i11694g2clmmf1acg4cf ·

🇬🇧" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t96/1/16/1f1ec_1f1e7.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;"> பிரித்தானியா வாழ் தமிழனுக்கு தெற்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இனத்துவேசம்..

கீழே படத்தில் இருப்பவர் எனது நண்பர்.

இலங்கையில் பிறந்து சிறு வயதிலையே பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து அங்கு உயர் படிப்பை முடித்து தொழில்நுட்பத்துறையில் நல்லதொரு வேலையில் இருந்தவர்.

ஆனாலும் இலங்கை மீது அவருக்கு தீராத காதல்..

அதனால் பிரித்தானியாவில் எல்லாவற்றையும் உதறித்தள்ளி விட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் வந்து குடியேறினார்..

அதற்க்கு இலங்கையில் தேர்த்து எடுத்த இடம், தெற்கு,

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகப் பிரபலமான அந்த Ahangama பிரதேசம்.

தான் படித்ததற்கும், தொழில்நுட்ப துறையில் செய்த வேலைக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ஆனால் தான் ஆழமாக காதலித்த இசைத்துறையில்..

DJ ஆக அறிமுகமானார் தெற்கில்..

இந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் தெற்கின் முக்கியமான எல்லா உணவகங்கள், Bars, Clubs என அவரின் இசை விருந்து நடக்காத இடங்களே இல்லை என்று சொல்லலாம்..

அது மட்டுமல்ல Jaffna, Goa, Chennai,Dhaka, Singapore என பல நகரங்களில் தனது DJ இசையரங்கை நடத்தியிருக்கிறார்..

Instagram வளைத்தளத்தில் 45000 பின்தொடர்பாளர்களுடன் தனது இந்த DJ துறையில் பிரபலமாக இருக்கும் ஒருவர்.

இந்த ஆண்டு February எனது தெற்கு பயணத்தின் போது Ahangama சென்றிருந்தேன்..

நீண்ட நேரம் உரையாடினோம்.

அந்த நேரம் தான் அந்த இடத்தில் ஒரு இந்திய உணவகம் இல்லை, தான் ஒரு சிறிய இந்திய உணவகம் திறக்க இருப்பதாக சொன்னார்.

அதற்கான வேலைகளும் நடந்துகொண்டிருந்தது..

நானும் அது பற்றி ஒரு காணொளி போட்டிருந்தேன்.

அந்த நேரம் என்னை பின் தொடர்ந்தவர்களுக்கு அது ஞாபகம் இருக்காலாம்.

அவர் இன்று தனது Facebook பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார்..

அந்த செய்தியை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அந்த சிறிய இந்திய உணவகத்தை சில மாதங்களுக்கு முன்பு Ahangama வில் திறந்திருந்தார்.

இன்று அது எப்பவும் மூடப்படும் நிலையில் இருக்கிறது என்று அறிவித்திருக்கின்றார்.

காரணங்கள்..??

பல தடவை உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது அந்த இடத்தில்..

காரணம் ஒரே ஒரு தமிழன் அதில் வியாபாரம் தொடங்கியதற்காக..

இந்த சம்பவத்தை அவர் Facebook ல் பகிர முன்பும் கடைக்கு வந்து காசு கேட்ட ஒரு காடையனால், காசு தர மறுத்ததற்க்காக கழுத்தில் பிடித்து நெரித்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது..

தீபாவளி அன்று கடையில் தமிழ் பாட்டு போடக்கூடாது என்றும், நீ திரும்பி உன் யாழுக்கே போய்விடு என்றும் மிரட்டியிருக்கிறார்கள்.

அவர்களின் அதே கீறல் விழுந்த பழைய “நீயொரு 🐅" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td1/1/16/1f405.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;">பயங்கரவாதி” என்ற மிரட்டல்கள்..

ஒரு சுற்றுலாப்பயணியாக தெற்கை சுற்றும் போது, பார்ப்பவர்களெல்லாம் நல்லவர்களாக தெரிந்தார்கள்..

இதையொரு வியாபார போட்டியாகவும் பார்க்கமுடியாது.

Ahangama வில் இருக்கும் சுற்றுலா சம்பந்தமான வியாபாரங்கள் முக்கால்வாசி வெளிநாட்டுக்காரர்கள் உடையது..

அதுவும் அந்த இடத்தில் இன்னொரு தென்னிந்திய உணவகமும் இல்லை, அதை போட்டியாக பார்ப்பதற்க்கு..

சில நாட்களுக்கு முன் ஒரு பதிவில் எழுதியிருந்தேன்..

புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏன் இலங்கையில் முதலீடுகள் செய்ய விரும்புகிறார்கள் இல்லை என்று..

அதில் நீங்கள் பல பேர் கூறியிருந்தீர்கள்..

இவர்களை நம்ப முடியாது, எப்போ என்ன செய்வார்கள் என்று..

அதென்னவோ உண்மை தான்..

அவர்களில் பல நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள், ஆனால் பல பேருக்கு இனத்துவேசமும் இருக்கிறது..

போகும் போதெல்லாம் தெற்க்குக்கும் போய், தெற்கின் மகிமைகளை எல்லாம் காணொளியாக போட்டதை நினைத்தால் இப்ப ஒரு Guilty feeling ஆ இருக்கிறது..

புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து போய் அங்கு வியாபாரம், அதுவும் தெற்கு போன்ற சுற்றுலாபயணிகள் அதிகளவில் கூடும் நகரங்களில் வியாபாரம் தொடங்க நினைப்பவர்கள், அது சரியான தெரிவு தானா என யோசிக்க வைக்கிறது இந்த சம்பவம் அதுவும் இந்த 2025ல்..☹️" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td3/1/16/2639.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;">

இது அங்கிருக்கும் ஒருவருக்கு நடந்திருந்தாலும் அது என்னை பெரிதாக பாதித்து இருக்காது, காரணம் நாங்கள் சின்ன வயதிலிருந்தே அவர்களின் துவேசத்தை பார்த்து வளர்ந்தவர்கள்.

ஆனால்..

6-7 வயதில் இலங்கையை விட்டு புலம்பெயர்ந்து போன ஒருவன், எல்லா வசதிகள் இருக்கும் ஒரு நாட்டில் இருந்தும், தனது நாட்டின் மீது உள்ள காதலால் மீண்டும் இலங்கையில் வந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் வந்த ஒருவனுக்கு கிடைத்த இந்த அனுபவம் மிக மோசமானது..☹️" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/td3/1/16/2639.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;">

அவரது Facebook பதிவை Commentல் இணைத்துவிடுகிறேன். #fblifestyle

ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? உணவாகச் சாப்பிடுவது நல்லதா?

3 months ago

ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா?

பட மூலாதாரம், Getty Images

31 அக்டோபர் 2025

பருவமழை மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கிவிட்டால் போதும், பல வீடுகளில் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துவிடும்.

அப்படி மழையின்போது வீட்டு உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் வரும் ஈசல்களைப் பிடித்து இறக்கைகளை பிய்த்துவிட்டு மூங்கில் கூடை ஒன்றில் சேகரிப்பதை ஊர்ப்புறங்களில் பார்த்திருப்போம்.

ஒரு கூடை நிறைய ஈசல் சேர்ந்த பிறகு அவற்றை வாணலியில் நன்கு வறுத்தெடுப்பார்கள். அப்போதே, ஈசல்களின் தலை தனியே உடல் தனியே பிரிந்துவிடும்.

பின்னர், தலை மற்றும் மீதமுள்ள இறக்கையை முறம் கொண்டு புடைத்து பிரித்துவிட்டு, வறுக்கப்பட்ட ஈசலை பொறியில் கலந்து சாப்பிடுவது, பொடியாக்கி உணவுடன் சேர்த்துக் கொள்வது எனப் பல வடிவங்களில் அது உணவாகிறது.

ஆனால், இந்த ஈசல்கள் எப்போதும் மழை நேரத்தில் மட்டுமே வருவது ஏன்? அவற்றின் மொத்த ஆயுளே ஒருநாள்தான் என்பது உண்மையா? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா?

அதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பூச்சியியல் ஆய்வாளர்களிடம் பேசினோம்.

ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா?

பட மூலாதாரம், Getty Images

ஈசல்கள் எங்கிருந்து வருகின்றன?

ஈசல் என்பது ஒரு தனிப்பட்ட பூச்சியினம் கிடையாது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உண்மையில், இறக்கைகள் முளைத்த கரையான்களே ஈசல்கள். அவ்வளவு ஏன், கரையான்களின் அடுத்த சந்ததிகள் பிறப்பதற்கே ஈசல்கள்தான் அடிப்படைக் காரணமாகத் திகழ்கின்றன.

கரையான்கள், எறும்புகளைப் போலவே ஒரு சமூகமாக வாழும் பண்புடையவை. ஒரு புற்றில் சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை என்ற எண்ணிக்கையில் கரையான்கள் வாழக்கூடும்.

தேனீக்கள், எறும்புகள் போன்ற கூட்டு சமுதாய வாழ்க்கை முறையைக் கொண்ட பிற பூச்சிகளைப் போலவே கரையான்களிலும் ஒரு புற்றில் ராணி, ராஜா, வேலைக்கார கரையான்கள், காவல்கார கரையான்கள் ஆகிய நான்கு பிரிவுகளாக அவை வாழ்கின்றன.

அதில், அந்தப் புற்று உருப்பெறக் காரணமாக இருக்கும் ராணி கரையான் நிமிடத்திற்கு 25 முட்டைகள் முதல் நாளொன்றுக்குச் சில ஆயிரம் முட்டைகள் வரை இடுகின்றன.

ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா?

படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன்

தேனீக்கள், எறும்புகள் போன்ற சமூக வாழ்வுமுறை கொண்ட பிற பூச்சிகளில் இல்லாத ஒரு தனித்துவம் கரையான்களுக்கு உள்ளது.

"பொதுவாக, இனப்பெருக்க செயல்பாடுகள் முடிந்தவுடன் ஆண் எறும்பு அல்லது ஆண் தேனீ இறந்துவிடும். ஆனால், கரையான்களைப் பொறுத்தவரை ராணி, ராஜா இரண்டும் சேர்ந்துதான் ஒரு புற்றையே உருவாக்குகின்றன" என்றார், பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன் தர்ம ராஜன்.

மேலும், "ராணி கரையானின் உடலில் விந்தணுவை சேகரித்து வைக்கும் தன்மை இல்லை என்பதால், ராஜா கரையான் அதனுடனே இருந்து பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும்" என்றும் விளக்கினார்.

அதுமட்டுமின்றி, ஒரு புற்றில் முதன்மையாக ராணி, ராஜா இருப்பதைப் போலவே, இரண்டாவது, மூன்றாவது நிலைகளில் சில ஆண் மற்றும் பெண் கரையான்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"ஒருவேளை புற்றின் முக்கிய அங்கமாக இருக்கும் ராஜாவோ, ராணியோ இறந்துவிட்டால், அவர்களின் இடத்தை நிரப்பிக் கொள்வது இந்த இரண்டாம் நிலை ஆண், பெண் கரையான்களின் வேலையாக இருக்கும். அதன்மூலம், ஒரு புற்று பல்லாண்டுக் காலத்திற்குப் பற்பல சந்ததிகளைக் கொண்டு செழுமை பெற அவற்றின் சமூகக் கட்டமைப்பு உதவுகிறது."

பல கரையான் புற்றுகள் நன்கு உயர்ந்து நிற்பதைப் பல இடத்தில் பார்த்திருப்போம். இனி அதைப் பார்க்கையில், அந்தப் புற்று அவ்வளவு அதிகமான சந்ததிகளைப் பார்த்துள்ளது எனப் புரிந்து கொள்ளலாம்.

இப்படிப்பட்ட சுவாரஸ்யமான கரையான் புற்று உருப்பெறுவதில் முக்கியப் பங்கு வகிப்பதே மழைக் காலத்தில் கூட்டம் கூட்டமாக வீடுகளை மொய்க்கும் ஈசல்கள்தான்.

ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்? அவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லதா?

பட மூலாதாரம், Getty Images

ஈசல்கள் மழை நேரத்தில் மட்டும் வருவது ஏன்?

முனைவர் பிரியதர்ஷனின் கூற்றுப்படி, ஒரு புற்றில் அதன் தோற்றம் மற்றும் நீட்சிக்குக் காரணமாக இருக்கும் ராணி, ராஜா கரையான்கள் மட்டுமின்றி, மேலும் பல ஆண், பெண் கரையான்கள் இனப்பெருக்க திறனுடன் இருக்கும்.

அவை, "மழைக் காலத்தின்போது வெளியேறி வந்து உயரப் பறந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அப்படி இறக்கைகளுடன் புற்றுகளில் இருந்து வெளியேறி வரும் கரையான்களையே ஈசல்கள் என அழைக்கிறோம்," என்று விவரித்தார் அவர்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா, "இனப்பெருக்கம் செய்து புதிய புற்றுகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஈசல்கள் தாங்கள் ஏற்கெனவே வாழ்ந்து வந்த புற்றுகளை விட்டு வெளியே வருகின்றன," என்றவர், அவை அதற்கு உகந்த காலமாக மழைக் காலத்தை தேர்வு செய்வது ஏன் என்பது குறித்தும் விளக்கினார்.

மழைக்காலம் மிகவும் ஈரப்பதம் நிறைந்திருக்கும். ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் கலவை அவற்றுக்கு உகந்த சூழ்நிலையை வழங்குவதாகக் கூறுகிறார் சஹானாஶ்ரீ.

மழைக்காலம் ஈசல்களுக்கு மட்டுமின்றி பெரும்பாலான உயிரினங்களின் இனப்பெருக்க காலமாகவும் இருக்கிறது. மழையின்போது அதிகளவில் உணவு கிடைப்பதும் அதற்கான ஒரு காரணமாக இருக்கிறது.

இவற்றோடு ஈசல்களைப் பொறுத்தவரை, "மழைக்குப் பிறகு நில அமைப்பு ஈரப்பதம் கொண்டு, மண் நிறைவுற்று இருக்கும். அதன் விளைவாக மண் மென்மையான தன்மையில் இருப்பதால், புதிதாக இணைந்த கரையான் ஜோடிகள் துளையிட்டுப் புதிய புற்றைக் கட்டுவது எளிதாகிறது," என்று விவரித்தார் சஹானாஸ்ரீ.

அவரிடம் ஈசல்களின் ஆயுள் ஒருநாள்தான் என்று கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அது உண்மையில்லை" என்று தெரிவித்தார்.

"பொதுவாக பல ஆயிரம் ஜோடிகள் புற்றை விட்டு இனப்பெருக்கம் செய்யக் கிளம்பினாலும், இறப்பு விகிதம் அதிகம் என்பதால் அதில் குறைந்த அளவிலானவையே உயிர் பிழைத்து, புற்று அமைக்கின்றன. எனவே பல நூறு ஈசல்கள் விரைவில் மடிவதைப் பார்த்ததன் அடிப்படையில் இந்தக் கட்டுக்கதை உருவாகியிருக்கலாம்."

மழைக்காலம், ஈசல், கரையான்

படக்குறிப்பு, பூச்சியியல் ஆய்வாளர் சஹானாஸ்ரீ ராமகிருஷ்ணய்யா

ஈசல்களை மக்கள் உணவாகச் சாப்பிடலாமா?

புற்றை விட்டு வெளியே வரும் ஈசல்களின் இறப்பு விகிதம் அதிகளவில் இருப்பதற்கு, பறவைகள், வேட்டையாடிப் பூச்சிகள், தவளை போன்ற வேட்டையாடி உயிரினங்கள் பலவும் காரணமாக இருக்கின்றன.

அதேவேளையில் அவற்றின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு மனிதர்களும் ஒரு காரணம் என்கிறார் பூச்சியியலாளர் முனைவர் பிரியதர்ஷன்.

இந்தியாவின் பல பகுதிகளில் ஈசல்களை உணவாகக் கொள்ளும் பழக்கம் பல்வேறு கலாசாரங்களில் இருப்பதாகக் கூறுகிறார் சஹானாஸ்ரீ.

"மழை நேரத்தில் ஈசல்கள் அதிக எண்ணிக்கையில் வெளியே வரும்போது அவற்றை உணவுக்காக கிராமப்புறங்களில் மக்கள் சேகரிப்பார்கள். சில இடங்களில், அவற்றை உலர்த்தி, வறுத்து கொள்ளுப் பருப்பு போன்ற தானியங்களுடன் கலந்து பயன்படுத்துவது உண்டு."

ஈசல்கள் ஒரு காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த, சுவைமிக்க உணவாகக் கருதப்பட்டது எனக் கூறும் சஹானா, "இது கிராமப்புற உணவு மரபுகளுக்கும் நிலையான புரத மூலங்களுக்கும் இடையிலுள்ள ஆழமான தொடர்பைப் பிரதிபலிப்பதாக" குறிப்பிட்டார்.

ஈசல்களை உணவாகச் சாப்பிடுவது நல்லதா, அவை உண்மையாகவே புரதம் நிறைந்த உணவுதானா என்று ஊட்டச்சத்து நிபுணர் பிரியங்காவிடம் கேட்டபோது, "அவற்றை உணவாக உட்கொள்ளும் பழக்கம் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் உள்ளது. கோழி, ஆடு, மாடு ஆகியவற்றைச் சாப்பிடுவது போலத்தான் இவையும்.

எனவே, ஈசல்களை சுகாதாரமான முறையில் உட்கொள்வதால் எந்தவிதப் பிரச்னையும் இல்லை. அதோடு அவை புரதம் மிக்க உணவு எனச் சொல்லப்பட்டாலும், அதுகுறித்த அறிவியல்பூர்வ ஆய்வுகள் இந்தியாவில் இன்னும் விரிவாகச் செய்யப்படவில்லை," என்று தெரிவித்தார்.

இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, ஜார்கண்ட், சட்டீஸ்கர், மேகாலயா, அசாம் போன்ற மாநிலங்களில் இன்றளவும் ஈசல்களை உணவாகப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5y938124ylo

இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!

3 months ago

இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல!

அண்மையில் இளங்குமரன் பற்றி பதிவு போட்டதும் திடீரென NPP யிட்ட காசு வாங்கிட்டார் என்று கொஞ்சபேர் பேச தொடங்கிட்டினம். நான் முகநூலில் எழுதுவதை குறைக்க நினைப்பதற்கான காரணம் இதுதான். இங்கே இருக்கும் அநேகமான வாசிப்பாளர்களுக்கு யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் ஆர்வமில்லை .

தங்களுக்கு தேவையான பொய்களையும், புரட்டுகளையும் மட்டுமே எதிர்பார்ப்பவர்களாக பெரும்பாலானோர் மாறிவிட்ட சமூகமாகிவிட்டோம். இளங்குமரன் பற்றி நான் அவதானிப்பை வெளியிட்டேன். கட்சி அவரை பயிற்சி கொடுத்து வளர்த்து எடுக்கிறது என்று அவரது நடவடிக்கைகளை பார்த்து கூறி இருந்தேன்.

அதற்குப்பிறகு நடந்த ஒரு நேர்காணலில் இளங்குமரனே அதை ஒத்துக்கொண்டு உள்ளார். பாராளுமன்ற நாட்களில் இரவு 11 மணிவரை கூட வகுப்பு வைத்து கட்சி அவர்களுக்கு பயிற்சி வழங்குவதாக சொல்லி உள்ளார். அந்த நேர்காணலில் கட்சி எப்படி வடகிழக்கில் கால் ஊன்றுகிறது என்று தெளிவாக சொல்லி இருந்தார்.

அது கூட நான் பல தடவை சொன்னதுதான். ஒவ்வொரு பிரதேச மட்டத்திலும் இணைப்பாளர்கள் உள்ளார்கள். அரசியலுக்கு அப்பால் கட்சியை வளர்ப்பதில் கபிலன் போன்றோர் கடுமையாக உழைக்கிறார்கள்.

இளங்குமரன் அந்த பேட்டியில், "கபிலன் இங்கே இருந்து செயற்படுவதால் தான் எங்களால் ஓரளவு நிம்மதியாக கொழும்பிலே சென்று பாராளுமன்றத்தில் கலந்துகொள்ள முடிகிறது" என்று சொல்லியிருந்தார்.

தமிழ் எந்திரன் என்ற யூ டியூப் தளத்தில் அந்த பேட்டி உள்ளது. பாருங்கள், ஆச்சரியப்படுவீர்கள், சில மாதங்களுக்கு முன் வாய் தடுமாறி உளறிக்கொட்டி ஊரெல்லாம் மீம்ஸ் ஆன ஒருத்தர் குறுகிய காலத்திற்குள் எப்படி இப்படி ஒரு பேட்டி கொடுக்க கூடிய ஆளாக மாற முடிந்தது?

நான் ஒரு ஊகத்தில்தான் எழுதினேன். ஆனால், சத்தியமாக பாராளுமன்றத்தினுள்ளேயே எக்ஸ்ரா கிளாஸ் வச்சு வகுப்பு எடுக்கும் அளவுக்கு யோசிக்கவில்லை. ஏதோ நான் எழுதுவதெல்லாம் உண்மை என்று சொல்வதற்காக இதை எழுதவில்லை.

எச்சரிக்கை மணிகளை புரிந்து கொள்ளுங்கள்.

சுமந்திரன் மாகாண சபை தேர்தலில் நின்றால் படு கேவலமாகத் தோற்பார்.

சைக்கிள் கட்சி தனித்து நின்றாலும் படு கேவலமாக தோற்கும்.

கஜேந்திரகுமார் மற்றும் மற்றைய கட்சிகள், (மறைமுகமாக) சிறீதரனின் ஆதரவுடன் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் போன்ற ஒருவரை முன்நிறுத்தினால் மட்டுமே மாகாண சபை தேர்தலில் வடக்கில் NPP நிறுத்துபவர் முதலமைச்சர் ஆவதை தடுக்க முடியும் என்று நான் எழுதியது போன வருசம்.

இளம்செழியனுக்கு கருத்து கணிப்பு நடத்தி ஆறு மாதம் ஆகிவிட்டது.

ஆனால், மாகாண சபை தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்று தமிழ் தலைவர்கள் யோசிக்கத் தொடங்க முன்னமே NPP ஒரு பல்கலைக்கழக விரிவுரைளாளரை மாகாண சபை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தி மக்கள் மத்தியில் நன்கு தெரியப்பட்ட ஆளாக வளர்த்து எடுத்துள்ளது.

இப்போதைய நிலைமையில் வடமாகாண சபை தேர்தலில் NPP யை தோற்கடிப்பது கடினமாகிவிட்டது.

கடைசி நேரத்தில் விக்னேஸ்வரன் போன்று ஒருத்தரை திடீரென ஃபேமஸ் ஆக்கி கைகாட்டினால் சனம் வாக்கு போடும் என்று சினிமா தன அரசியலையே நம்மட ஆட்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், NPP நேர்த்தியாக திட்டமிட்டு தன்னை வளர்த்தெடுத்து அரசியல் சித்தாந்த வகுப்பெடுக்கிறது.

ஜே.வி.பி. என்ற சிங்கள கட்சி யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்து அங்கே தமிழ் நூலகம் வச்சு இங்கே எந்தநாளும் எவரும் வந்து புத்தகத்தை எடுத்து போகலாம். இங்கே வேறு எந்த பாதுகாப்பும் இல்லை என்று சொல்லுகிறது என்பதைவிட அந்தக் கட்சியின் அரசியல் திட்டமிடலை விபரிக்க வேறு என்ன தேவை?

இப்போதைய நிலையில் NPP முன் நிறுத்தும் ஆள்தான் வட மாகாண முதலமைச்சர்.

கபிலனை விட இன்னும் அதிக தகுதியானவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்து நாங்கள் பதவிக்காக அரசியல் செய்பவர்கள் இல்லை என்று அதிரடி காட்டுவது பற்றியும் அந்த கட்சி யோசிக்கிறது.

தமிழ் தேசிய கட்சிகளுக்கு இருக்கும் ஒரே வழி கூட்டணி வச்சு பொது வேட்பாளரை நிறுத்தி, கணிசமான அளவு புதிய வேட்பாளர்களை நிறுத்துவது மட்டும்தான். அதுவும் இப்போதே செய்யவேண்டும். கடைசி நேரம் வரை காத்திருந்தால் அரோகரா தான்தான்.

சினிமா பாணியில் கடைசி நேரத்தில் திடீர் கூட்டணி அமைச்சு அதிரடி காட்டி, புதுசா ஒருத்தரை வேட்பாளராக காட்டி திடீர் முதல்வர் ஆக்கலாம் என்ற தேய்ந்து போன மக்களை முட்டாளாக்கும் அரசியல் இனி சரி வராது.

ஏனென்றால் உங்களுக்கு போட்டியாக இருப்பது சாதாரண ஆள் அல்ல!

NPP என்ற, வெளியே காட்டிக்கொள்ளாத அறிவுஜீவிகளால் நடத்தப்படும் பெரிய அமைப்பு!

திரும்பவும் சொல்லுறன், இது NPP யிற்கு சொம்பு தூக்கும் பதிவல்ல, தமிழ் அரசியலின் தற்போதைய நிலையை விளக்கும் பதிவு.

ஆறு மாதங்களுக்கு முன் நீதிபதி இளம்செழியனை முன்நிறுத்தி கருத்து கணிப்பு நடத்தியபோது பலர் திட்டி இருந்தார்கள். அப்போது அதை நான் செய்ய காரணம் இப்படி நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான்.

இன்னும் ஆறு மாதம் கழித்து இந்த பதிவை காட்டி நான் இதை அப்போதே சொல்லி விட்டேன் கேட்டீர்களா என்று எழுதும் நிலை வந்தால், வடமாகாணத்தில் NPP யின் முதலமைச்சரே இருப்பார்.

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!

சிவச்சந்திரன் சிவஞானத்தின் முகநூல் பக்கத்தில் இருந்து...

காணி மோசடிகள்⚠️: மக்களே அவதானம்❗| வெளிப்படுத்தல் உறுதி சட்டரீதியானதா? 🤔🤷‍♂| Thananchayan LL.B LL.M

3 months 1 week ago

In this video I explain,

Kinds of Deeds,

Legality of Deed of Declaration,

Procedure of Deed of Declaration,

Problems in the North and East Sri Lanka,

Land Scams through Deed of Declaration,

Duty of Notary Public,

Procedure of Deed Attestation,

Registration of Land,

Prevention of Fraud,

Land Sale Scams,

And Etc.

இந்த வீடியோவில், உறுதிகளின் வகைகள் எவை? வெளிப்படுத்தல் உறுதி என்றால் என்ன ? காணிப் பதிவு, வெளிப்படுத்தல் உறுதிகள்-காணி மோசடிகள், காணி மோசடிகளை தவிர்ப்பது எவ்வாறு ? என்ற தகவல்களுடன் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.

3 months 1 week ago

571315221_122197693334293440_65666361895

இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.

கடந்த காலங்களில் மருத்துவத்துறையில் இன்று இருப்பதுப்போல நவீன கருவிகள் அன்று இல்லை. எனவே நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவது ஒரு சவாலான காரியமாக இருந்து வந்தது. பின்னர் எக்ஸ் ரே, ஈசிஜி, எம்ஆர்ஐ போன்ற தொழில்நுட்ப கருவிகள் வந்த பின்னர் மருத்துவர்களுக்கு நோயாளிகளின் பிரச்சனையை கண்டறிவது மிகவும் எளிதாவிட்டது. அதிலும் எம்ஆர்ஐயின் வருகைக்கு பின்னர் நோய்களை துல்லியமாக கணித்து அதற்கு தகுந்த மருத்துவ நடைமுறைகளை எடுக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலங்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள். இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதற்கு பின்னால் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு காரணம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன காரணம் என்பதை இங்கு பார்ப்போம்.

எம்ஆர்ஐ கருவியானது உடலின் உள்ளுருப்புகள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பை எக்ஸ் ரேயின் உதவியில்லாமல் பதிவு செய்வதற்கான ஒரு செயல் முறையாகும். இந்த செயல் முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் உயர்தர காந்தங்களை பயன்படுத்தி மிக அதிக சக்திவாய்ந்த காந்தப்புலங்களை இந்த கருவி ஏற்படுத்துமாறு வடிவமைக்கப்படுள்ளது. இந்த காந்தப்புலங்கள் மனித உடல் உள்ளுறுப்பகளின் உயர்த்தர முப்பரிமாண படத்தை உருவாக்க பயன்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் இந்த முப்பரிமாண படங்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் காயங்கள் அல்லது தேவையற்ற வளர்ச்சி இருக்கிறதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.

இந்த எம்ஆர்ஐ கருவி எப்படி வேலை செய்கிறது என்றால், ஒரு உளுந்த வடையை நிற்க வைத்தது போல் ஒரு உள்ள அமைப்பில் நடுவே படுக்கை ஒன்று நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படுக்கையில் படுத்திருக்கும் நபர் மெதுவாக உள்ளே நகர்த்தப்படுவார். எம்ஆர்ஐ உள்ளே உள்ள சக்திவாய்ந்த காந்த புல சக்தி ஸ்கேன் செய்யப்படும் ஒவ்வொரு திசுக்களின் புரோட்டானையும் வரிசைப்படுத்துகிறது. அதே நேரத்தில் ரேடியோ அதிர்வலைகள் இந்த புரோட்டங்களில் மின்சார சமிஞ்க்கைகளை உருவாக்கி அவற்றின் வரிசையை சிதறடித்துவிடுகிறது. இப்போது எம்ஆர்ஐயின் காந்த புலங்கலையும், ரேடியோ அதிர்வலையையும் நிறுத்திவிடுவார்கள்.

இதனால் உறுப்பின் புரோட்டான்கள் காந்தத்தன்மையை இழந்து தங்களது பழைய அமைவிடத்திற்கு திரும்பும். அவ்வாறு திரும்பும்போது புரோட்டான்கள் தங்களை சிதறடித்த ரேடியோ அதிர்வலைகளை வெளியில் அனுப்பும். இதை எம்ஆர்ஐ கருவியில் பொருத்தபட்டிருக்கும் ஒரு சென்சார் கிரகித்து அதனை கணினிக்கு அனுப்பும்.

கணினியானது சென்சார் அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருகிணைத்து அதனை முப்பரிமாண படங்களை தயாரித்து திரையில் காண்பிக்கும்.

எம்ஆர்ஐ கருவியின் முக்கிய பாகமாக இருப்பது அதன் சக்தி வாய்ந்த காந்தங்களாகும்.

இவை ஸ்கேன் செயல் முறையின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த காந்தங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் சுமார் 15அடி தூரத்தில் உள்ள உலோகத்தையும் ஈர்க்கவல்லது. காந்தங்கள் இந்த அதீத சக்திகொண்டதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இப்போது புரிந்திருக்கும் ஏன் எம்ஆர்ஐ அறைக்குள் ஆபரணங்களை கழற்ற சொல்கிறார்கள் என்று. சிலர் எச்சரித்தும் அதை மதிக்காமல் இந்த ஆபரணங்களை அணிந்திருந்தால் என்னவாகும் என்றால் எல்லா ஆபரணங்களையெல்லாம் அந்த காந்தங்கள் வேகமாக இழுத்துக்கொள்ளும்.

எந்த அளவிற்கு இழுத்துக்கொள்ளும் என்றால் ஒரு வழிப்பறி கொள்ளையன் நகையை திருடுவதற்கு வேகமாக கழுத்திலிருந்து பிடுங்கிக்கொள்ளும் வேகமும் அதன் வேகமும் சமமாக இருக்கும். இதனால் காயம் ஏற்படும் சமயத்தில் மரணம் சம்பவிக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அடுத்த முறை எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது சென்மெட் பார்க்காமல் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழற்றி வைத்துவிட்டு உள்ளே செல்லவும்.

சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் 

அதென்ன குதிரை திறன்? ஏன்... கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா?

3 months 1 week ago

2dpY.gif

அதென்ன குதிரை திறன்? ஏன் கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா?

எனது பள்ளி நாட்களில் நான் இப்படித்தான் சிந்தித்தேன்!

மிக அருமையான வினா!

குதிரையை விட வேகமாக ஓடி, அடித்துத் தின்னும் வலிமை படைத்த, புலி, சிங்கம் ஆகிய வலிமையான விலங்குகள் பெயரில் திறன்-அலகு தீர்மானிப்பதுதானே இயல்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்!

இன்னும் சொல்லப்போனால், சிறுத்தைகள், ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும்!

ஏன் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, குதிரைத்திறன் - HorsePower என்று சொன்னார்களோ?

ஒருவேளை, திறன்-அலகு தீர்மானித்தவர்கள், சைவர்களாக இருப்பார்களோ?

அப்போதும் உதைக்கிறதே!

குதிரையைவிட வேகமாக ஓடும் மான்கள் இருக்க, குதிரைக்கு ஏன் ஓட்டு விழ வேண்டும்?

ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும் சிறுத்தையும், மணிக்கு 60 மைல் வேகத்தில் ஓடும் சிங்கம், புலி போன்ற விலங்குகள், சில-நிமிட நேரத்திலேயே, சோர்வடைந்து, வேகம் குறைந்து நின்றுவிடும்.

இவற்றுக்கு, அதிக-வேக ஓட்டத்தை, வெகுநேரம் தாக்குப்பிடிக்கும் திறன் - STAMINA - இல்லை!

குறுகிய தூரத்துக்குள் அடிக்க இயலவில்லை என்றால், இவற்றின் இரை-விலங்குகள் தப்பிவிடும்!

மாறாக, மற்ற எல்லா விலங்குகளிடமும் இல்லாத ஒரு திறன் குதிரையிடம் உண்டு!

சீராக, ஒரே வேகத்தில், நீண்ட நேரம் ஓடக் கூடிய திறன் - STAMINA, குதிரையிடம் மட்டுமே உண்டு!

எனவேதான், குதிரைத்திறன் (HORSE POWER) திறன்-அலகாகக் கொள்ளப்படுகின்றது!

வெகுநேரம் தாக்குப் பிடிக்கும் திறனில், குதிரைக்கு இணையான விலங்குகள் இவ்வுலகில் இல்லை.

Umamahesvari Ck

சோழன் உலக சாதனை படைத்த 2 வயது பதுளைக் குழந்தை

3 months 2 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான மிர்திக் தேவ். 

இவர் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார். 

இதற்கான நிகழ்வு நேற்று (16) ஹாலிஎல ஹெவன்ஸ் ஹொட்டலில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா முன்னிலையில் நடைபெற்றது. 

குழந்தையின் உலக சாதனை நிகழ்வை கூர்மையாக கண்காணித்த நடுவர், குழந்தையின் முயற்சியை உலக சாதனையாக உறுதி செய்தார். 

சோழன் உலக சாதனை படைத்த மிர்திக் தேவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கேடயம் மற்றும் பைல் போன்றவை வழங்கிப் பாராட்டப்பட்டது.‌ 

ஊவா மாகாண பிரதி கல்வி பணிப்பாளர் திரு.நடராஜ் வெங்கடேஸ்வரன், ஊவா மாகாண ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்குகொண்டார். 

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்துடன் இணைந்து பீபல்ஸ் ஹெல்பிங் பீபல்ஸ் பவுண்டேஷன் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

https://adaderanatamil.lk/news/cmgub9xog011gqplp35xryhh5

Checked
Wed, 02/04/2026 - 07:31
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed