

யாழ் இனிது, குழல் இனிது என்பார், தம் மக்கள் மழலை சொல் கேளாதோர். என்பது பழ மொழி.
புது மொழி என்ன என்றால், சிங்கப்பூர் என்பார், துபாய் என்பார், மொனோக்கோ அறியாதோர்.

உலகில் மிகவும் அதிக விலை கூடிய ஹோட்டல் ரூம் எங்கே இருக்கிறது என்று கேட்டால், ஓ அதுவா, டுபாயில் உள்ள 7 நச்சத்திர ஹோட்டல், ஒரு இரவுக்கு $7,500 வசூலிக்கிறார்களாமப்பா என்று சொல்வதை கேட்ப்போம்.

ஹோட்டல் டீ பாரிஸ் என்னும் மொனோக்கோ ஹோட்டலின், றோயல் சூட்டின் ஒரு நாள் இரவுக்கு, 35,000 யூரோ வசூலிக்கிறார்கள்.

HOTEL DE PARIS

இந்த ஹோட்டலின் முன்னே உள்ள கார் பார்க்கில் இடம் கிடைப்பதில்லை. இருக்கும் இடத்தில், காரை பார்க் செய்து, பக்கத்தில் நின்று பந்தாவாக படம் எடுக்க, பெரும் தொகை செலவழிக்கிறார்கள்.... பந்தா பணக்கார்கள். அதாவது, இங்கே தங்கி இருக்கிறேன் என்று பீலா காட்டி, முகப்புத்தகத்தில், போட வேண்டுமே.
உலகின் பெரும் பணக்கார்களின் சொர்க்கபுரி, மொனோக்கோ. 2 சதுர கிலோ மீட்டருக்கு குறைவான பரப்பளவை கொண்ட மிக சிறிய ஒரு இளவரசரகம் தான் மொனோக்கோ. இது உலகின் இரண்டாவது சிறிய நாடாகும்.
மூன்று பக்கமும் பிரான்ஸ் தேசத்தினையும், ஒரு பக்கம் கடலினாலும் சூழப்பட்டது இந்த நாடு.

சில வருடங்களுக்கு முன்னர் வரை, ஓய்வு பெற்ற அல்லது வயதான பணக்காரர்களின் ஓய்வு மையமாக விளங்கிய இந்த சிறிய நாட்டினை, இளம் பணக்காரர்களை கவரும் ஒரு நாடாக மாத்துவதில் பெரும் வெற்றி கண்டுள்ளார், இப்போது ஆளும் இளவரசர். யூடூப்பில் முகப்புத்தகத்தில் பணம் குவிப்பவர்கள், இப்போது இங்கே தான் பொழுதினை போக்குகிறார்கள். காசும் வருகிறது. வாழ்வை அனுபவிப்பதும் ஆகிறது.
உலகின் மிக சிறந்த, கார்கள், ஹெலிகொப்டர்கள், உல்லாச கப்பல்கள் எல்லாம் இங்கே உள்ளது.

இந்த நாட்டில், பெரும் பணக்கார்கள் அடிக்கும் கும்மாளம், வெட்டி செலவுகள், தள்ளிக் கொண்டு வரும் அழகிகள், அழகர்கள் குறித்து வெளியே செய்திகள் வராமல் பார்த்துக் கொள்ளவதே இந்த இளவரசகத்தின் கவர்ச்சி ரகசியம்.

முக்கியமாக, பணக்கார விதவைகள் பண்ணும் அலம்பறைகள் சொல்லி மாளாது. தினமும் ஒரு பாய்...
ஒரு பப்பராசி கிடையாது. அதாவது ஒருவர் அரச அனுமதி இன்றி படம் பிடிக்க முடியாது. அப்படி படம் பிடித்து, அதனை ஏதாவது பத்திரிகை போட்டு விட்டால், அந்த பத்திரிகை, மொனோக்கோ நாட்டினுள் வரவே முடியாது என்பதால், பப்பராசிகளுக்கு பிரயோசனம் இல்லை. படம் எடுத்து, மாட்டினால், சிறை. நிரந்தர தடை.
அதேவேளை, உல்லாசப்பயணிகள், தம்மை படம் பிடித்துக் கொள்ளலாம். அவர்கள் தாம் அங்கே இருப்பதை தம்பட்டம் அடிக்க வேண்டும் என்பதால் அது பிரச்சனை இல்லை.

அதிக விலையில் மது இங்கே விற்பனை ஆகின்றது. ஒரு போத்தல் மது வியாபாரத்தில், ஆக குறைந்தது 5,000 யூரோ வரி மட்டும் இளவரசரின் அரசுக்கு போகின்றது என்றால், விலையினை பார்த்துக் கொள்ளுங்கள். அரசின் முழு வருமானமும், 20% சேவை வரி மூலமே வருகிறது.
இங்கே வருமான வரி இல்லை என்பது, முக்கியமான விடயம். இதுவே பெரும் பணக்காரர்கள் இங்கே தங்கி இருக்க காரணம். முக்கியமாக யூடூப்பில் முகப்புத்தகத்தில் பணம் குவிப்பவர்கள், இங்கே இருந்து தொழில் செய்ய விரும்பும் காரணமும் அதுவே.
நாட்டின் குடிமக்கள் 8,000 பேர்கள். இந்த குடிமக்களின் வம்சமே பிரயாஉரிமையினை பெறுவதற்கு உரிமை உள்ளவர்கள். நாட்டின் சனத்தொகை 37,000. இவர்களில் பெரும்பாலானோர் உலகின் மிகப் பெரும் செல்வந்தர்கள். அங்கே தங்க, வதிவிட உரிமை பெறுவதும், அவர்களது பின்னணி குறித்தும், (போதை பொருள் கோஸ்ட்டிகளுக்கு இடமில்லை), பண இருப்பு குறித்தும் விபரங்கள் அறிந்தே வழங்கப்படும். ஆக குறைந்தது, ஒரு மில்லியன் யூரோ, மொனோகாவில் உள்ள வங்கியில் எப்போதும் இருக்க வேண்டும்.
இரண்டாம் ஆல்பர்ட் இளவரசரே, நாட்டினை நிருவகிக்கின்றார். விளையாட்டில் ஆர்வமிக்க இவர், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற, தென் ஆப்பிரிக்காவின் நீச்சல் வீராங்கனை ஒருவரை, 2011ல் திருமணம் செய்துள்ளார்.

2005ல் இளவரசரின் தந்தையார், இளவரசர் ரெய்னர் இறப்புக்கு பின்னர், இவர் பதவிக்கு வந்தார். 7 நூறாண்டுகளாக ஆட்சி செய்யும், கில்மாடி வம்சத்தின் 32வது வாரிசே இவராவார்.
1955 ஆண்டில் நடந்த கேய்ன்ஸ் திரைப்பட விழாவில், கலந்து கொண்ட, ஆஸ்கார் பரிசினை வென்றிருந்த அமேரிக்க நடிகை கிரேஸ் கெல்லி என்னும் பெண்மணியே இவரது தயாராவார். இந்த விழாவிலேயே, தந்தையும், தாயும் கண்டு காதல் கொண்டனர்.

இவரது தாயார் மேலே நாட்டு மக்கள் பெருமதிப்பு வைத்திருந்தனர். ஒரு கார் பந்தயத்தில், தனது 52வது வயதில், அந்த பெண் இறந்து போனது சோகம்.
தாயின் மீது பேரன்பு கொண்ட இளவரசர் அண்மையில் செய்த அரசியல் அமைப்பு மாறுதல் மூலம், எதிர்காலத்தில், இளவரசிகளும் ஆள முடியும்.
நாட்டின் குடியுரிமை, வெளிநாட்டில் பிறந்த யாருக்காவது கொடுப்பதனால், அந்த விண்ணப்பம், இளவரசரின் நேரடி பரிசோதனைக்கு போகும். இலகுவான விவகாரம் இல்லை. மேலும், அனுமதிக்கப்படும் விண்ணப்பங்களை இளவரசரின் கையெழுத்து இருக்கும். அதாவது, யார், யார், தனது நாட்டு பிரியைகள் ஆகின்றனர் என்பது இளவரசரின் முடிவு.
அடுத்த வருசம் 2022 முதல், நானும் அங்கேயே செட்டில் பண்ணலாம் எண்டு இருக்கிறன். விரும்பின வேறேயாராவது இருக்கிறீயளே?