வாழும் புலம்

புலம்பெயர் தேசங்களில் மாவீரர்நாள் நிகழ்வுகள்

2 months ago

புகலிட மாவீரர் நிகழ்வுகள்! ஒரே பார்வையில்….

தமிழர்தாயகத்தில் கடுமையான காலநிலை சீர்கேடுகளுக்கு மத்தியில் இன்று (27.11.2025) தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற நிலையில் புகலிட தேசங்களிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

மாவீரர் நாள் பாரம்பரியப்படி தாயகத்தில் மாலை 6.05 க்கு ஈகைச் சுடரேற்றப்பட்ட நேரத்தில் ஐரோப்பிய நாடுகளிலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அவற்றின் உள்ளுர் நேரப்படி மாலையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

நியூசிலாந்து

நியூசிலாந்தில் பிரதான நிகழ்வு தலைநகர் ஓக்லாந்தில் இடம்பெற்றன.

நியூசிலாந்தை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் மெல்பேர்ன் மற்றும் சிட்னி உட்பட்ட நகரங்களிலும் நடத்தப்பட்டிருந்தன.

திறந்தவெளியில் உருவாக்கப்பட்ட கல்லறை தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா வான் கலம் ஒன்று தமிழீழ தேசியக்கொடியை தாங்கியபடி வானில் பறந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அவுஸ்திரேலியாவின் செனட் சபையின் பசுமைக்கட்சி உறுப்பினர் டேவிட்சூ பிறிட்ஜ் ஏற்கவே செனட்டில் மாவீரர் நாளை கௌரவித்து உரையாற்றிய போது தமிழர்களின் நாட்காட்டியில் மாவீரர் நாள் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றெனவும் கண்ணியம் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் தங்கள் உயிரைக் கொடுத்தவர்களை கௌரவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிரித்தானியா

பிரித்தானியாவை பொறுத்தவரை லண்டன் எக்ஸல்மண்டபம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பகுதியில் உள்ள உலகத்தமிழர் வரலாற்றுமையம் ஆகிய இடங்களில் முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றன இதேநேரத்தில் ஐ.நா மனித உரிமை பேரவை முன்றலில் தீக்குளித்து தியாச்சாவடைந்த ஈகைபேரொளி முருகதாசனின் வித்துடல் உள்ள கல்லறையிலும் அஞ்சலி இடம்பெற்றிருந்தது .

அதேபோல ஸ்கொட்லாந்து உட்பட்ட ஏனைய முக்கிய இடங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

பிரித்தானியாவில் அரசியல் கட்சிகளின் பிரபலங்களும் நினைவேந்தல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் ஆளும் தொழிற்கட்சியின் முன்னாள் நிழல் நிதியமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் மக்டொனால் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாக் ஆகியோர் தமது செய்திகளை காணொளியில் வெளியிட்டனர்.

அதேபோல தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ஈழத்தமிழ்பூர்வீகத்தை சேர்ந்த உமாகுமரன் தனது மாவீரர் நாள் அறிக்கையிடலை அறிக்கை வடிவத்தில் வெளியிட்டிருந்தார்.

காணொளி - https://youtu.be/cpRrbAbCruM

25-69283aed1175a.webp

25-69283aedc5e57.webp

25-69283aee76d16.webp

பிரான்ஸ்

பிரான்சில் இன்று பல நகரங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

முதன்மை நிகழ்வு தலைநகர் பரிசின் புறநகரப் பகுதியான லே போர்த் மார்லி பகுதியில் உள்ள பிரமிட் பெரு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதேநேரத்தில் கப்டன் கஜன், லெப்.கேர்ணல் நாதன் மற்றும் கேர்ணல் பரிதி ஆகியோரின் வித்துடல்கள் உள்ள பந்தன் கல்லறை தோட்டத்தில் மதியம் 12.35 க்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டிருந்தது.

இதனைவிட போர்தோ,  நீஸ், லியோன் , தூலூஸ் ,  ஜியான் உட்பட்ட பல முக்கிய நகரங்களிலும் நிகழ்வுகள் நடக்கின்றன.

இதேபோல சுவிற்சலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து, இத்தாலி , டென்மார்க் , நோர்வே மற்றும் சுவிடன் உட்பட்ட நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

புலம்பெயர் நாடுகளில் அதிகமான ஈழத்தமிழ் மக்கள் வசிக்கும் கனடாவிலும் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/heroes-day-event-in-the-diaspora-1764243639

லண்டனின் வீதியில் நின்ற தமிழ் இளைஞருக்கு கொள்ளையர்களால் நேர்ந்த கதி

2 months 1 week ago

லண்டனின் வீதியில் நின்ற தமிழ் இளைஞருக்கு கொள்ளையர்களால் நேர்ந்த கதி

uk-3.jpg

லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவர் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் தாக்குதலுக்கு உள்லான இளைஞன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈழத் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் சவுத்ஹாலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

லண்டன் சவுத்ஹால் பகுதியில் வீதியில் நின்ற இளைஞரை குறிவைத்து சிலர் தாக்கியுள்ளார்கள்.

அடித்துக் காயப்படுத்திய நபர்கள் அவர் அணைந்திருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், அவரைச் சரமாரியாகத் தலையில் தாக்கி, கீழே தள்ளிவிட்ட நிலையில், அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த பாரா மெடிக்ஸ் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நிலையில், அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது சவுத்ஹால் பிரதேசத்தில் ஆப்பிரிக்கர்கள் மற்றும் ருமேனிய நாட்டவர்களும் அதிகம் வசித்து வருகிறார்கள். குறிப்பாக ருமேனிய சமூக இளைஞர்கள் இது போன்ற பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

அவர்கள் தமிழர்களையும் இந்தியர்களையும் குறிவைத்து செயல்பட்டு வருவதானால் அங்குள்ள இலங்கையர்களும் , இந்தியர்களும் அச்சத்தில் உள்ளலதாக கூறப்படுகின்றது.

https://akkinikkunchu.com/?p=350056

ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்

2 months 1 week ago

ரில்வின் சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டம்

Published By: Digital Desk 3

24 Nov, 2025 | 09:20 AM

image

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை ( 23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின்  வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம்  ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மேலும்  மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பிரித்தானியாவுக்கு சுற்று பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். 

இந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றை முன்னெடுத்ததாகவும்  இதன் போதே ஈழத்தமிழர்கள் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததாகவும் தெரிய வருகின்றது.

WhatsApp_Image_2025-11-23_at_7.33.35_PM.

WhatsApp_Image_2025-11-23_at_7.33.34_PM.

https://www.virakesari.lk/article/231256

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியது அவசியம் ; ஸ்கொட்லாந்து முதலமைச்சரிடம் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்து

2 months 1 week ago

23 Nov, 2025 | 10:41 AM

image

(நா.தனுஜா)

இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும், சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றின் தேவைப்பாட்டினையும் பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னிக்கிடம் வலியுறுத்தியுள்ளனர். 

ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் (முதலமைச்சரே ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் தலைவரும் அரசாங்கத்தின் சகல கொள்கைகள், தீர்மானங்களுக்குப் பொறுப்பானவரும் ஆவார்) ஜோன் ஸ்வின்னிக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. 

இச்சந்திப்பின்போது சுமார் 16 வருடங்களாக நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது முகங்கொடுத்துவரும் மிகமோசமான நிலைவரம் தொடர்பில் பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

அதுமாத்திரமன்றி சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றின் தேவைப்பாட்டினையும், இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியுடனான தொடர்புகளைத் தொடர்ந்து பேணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும், தமிழ் மக்களுக்கான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நியாயமான அரசியல் அபிலாஷைகள் என்பவற்றை அடைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு ஸ்கொட்லாந்து தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/231170

கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு

2 months 2 weeks ago

கனேடிய தம்பதியரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விமான நிறுவனம்: 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு

canada-1.png

கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் ஒரு இந்திய தம்பதியர் திருமணமாகி முதன்முறையாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கனேடிய விமான நிறுவனம் ஒன்று அவர்களை மோசமாக நடத்தியுள்ளது.

ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் பார்வதி (Parvathy Radhakrishnan Nair) மிதுன் (Midhun Haridas) தம்பதியர், திருமணமாகி முதன்முறையாக டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

சுற்றுலா முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்கள் விமான நிலையத்தில் சந்தித்த அனுபவம், அவர்கள் இவ்வளவு நேரம் செலவிட்ட இனிமையான நேரத்தை மறக்கச் செய்யும் அளவுக்கு மோசமாக இருக்கும் என அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

கனடா திரும்புவதற்காக, Punta Cana சர்வதேச விமான நிலையத்தில் Air Transat நிறுவனத்தின் விமானத்தில் ஏறுவதற்காக தம்பதியர் செல்ல, அங்கு அவர்கள் வித்தியாசமாக நடத்தப்பட்டுள்ளார்கள்.

பார்வதி அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி, தன்னிடம் இந்திய பாஸ்போர்ட்தான் உள்ளது, கனேடிய பாஸ்போர்ட் இல்லை, தாங்கள் அதற்கென தனியான வரிசை எதிலாவது நிற்கவேண்டுமா என தனது சந்தேகத்தை வெளிப்படுத்த, அவர்களை தனியாக நிறுத்திய வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் ஒருவர், ஒரு சிவப்புக் கோட்டுக்கு பின்னால் நிற்கும்படி கூறியிருக்கிறார்.

மற்றவர்கள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட பார்வதி, மிதுன் தம்பதியர் மட்டும் அங்கேயே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

தாங்கள் வேண்டுமென்றே வித்தியாசமாக நடத்தப்படுவதை உணர்ந்த தம்பதியர், நடப்பதை வீடியோ எடுக்கத் துவங்க, அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் பார்வதியை திட்டியிருக்கிறார்.

தங்களிடம் பாஸ்போர்ட்டும் பயணச்சீட்டும் இருந்தும் ஏன் தங்களை மட்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என தம்பதியர் கேட்க, உங்களை விமானத்தில் ஏற அனுமதிக்கவேண்டுமானால் நீங்கள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அழிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அந்த அலுவலர்.

வேறு வழியில்லாமல் கடைசி நேரத்தில் ஏர் கனடா விமானம் ஒன்றில் விலை அதிகமான பயணச்சீட்டு வாங்கி தாமதமாக வீடு திரும்பியுள்ளனர் தம்பதியர்.

தாங்கள் சந்தித்த மோசமான விடயத்தை நீதிமன்றம் கொண்டு செல்ல முடிவு செய்த தம்பதியர், small claims court என்னும் நீதிமன்றத்தை அணுக, நடந்ததை அவர்கள் வீடியோ எடுத்ததற்காக Justice Marcel Mongeon என்னும் நீதிபதி அவர்களை பாராட்டியுள்ளார்.

இதுபோன்ற விடயங்களின்போது, வெறுமனே புகாரளிக்காமல், இதுபோல் வீடியோ ஆதாரங்கள் கொடுப்பதால், என்ன நடந்தது என்பதை நீதிபதி தனது கண்ணாலேயே பார்க்கமுடியும் என்றும் கூறியுள்ளார் நீதிபதி.

அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் பார்வதி மிதுன் தம்பதியரை நடத்திய விதத்தைக் கண்ட நீதிபதி விமான நிறுவனத்திடம் விளக்கம் கேட்க, தம்பதியரால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படுமென தாங்கள் எண்ணியதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்படி அவர்களால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றால், வீடியோவை அழித்துவிட்டால் உங்களை விமானத்தில் ஏற அனுமதிப்பேன் என அந்த வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் எப்படிக் கூறினார்? வீடியோவை அழித்துவிட்டால் பாதுகாப்பு பிரச்சினை சரியாகிவிடுமா?

அவர்கள் அதற்கு அடுத்தபடியாக ஏர் கனடா விமானத்தில் வீடு திரும்பியுள்ளார்களே, அவர்களால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றால் ஏர் கனடா விமான நிறுவனம் அவர்களை எப்படி விமானத்தில் ஏற அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி.

ஆக, பார்வதி, மிதுன் தம்பதியருக்கு Air Transat விமான நிறுவனம் 7,000 டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.

https://akkinikkunchu.com/?p=348636

உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் வாகீசன் மதியாபரணம் கனடாவின் பெற்றார்.!

2 months 3 weeks ago

உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் வாகீசன் மதியாபரணம் கனடாவின் பெற்றார்.!

Vhg நவம்பர் 09, 2025

AVvXsEh6P9OUgkoo5IMWz3uqQ43_CaQep3yTiNDhao04J1nuPkkO34CzcsISKcTWtTLDmHiZzD1iDaqMvYlYS2Fp8P0vyRQwCYHnlyejwl0MS-tU4GU6--zA15-CyPdyXKzoWcroEgrczkd2xqNP7SKnp3_sSKZLtmnZx956nZfLk3X4VheLENFTNnqARgUUVj9z

இலங்கையில் பிறந்த தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு படைத்துள்ளார்.

கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் நடைபெற்ற விழாவில், வாகீசன் மதியாபரணத்திற்கு இந்த பெருமை வழங்கப்பட்டது. 

AVvXsEiOSqI2e2qq_cb0rgXRjqxXatMRmO01Gb2CmGIYfnHMDss1sEoIKOtwl2P_CSMGI6-ILtQdRlAUEiy8ZNUM3QwnmbWH80DJ8gpGLDtSeNRVGaCEfVd0PEzvYLxbDSMzwCBMUrHchcWwX-vw-cGf47VW3J3xYrpSEyo-XM2h0HuBg2VUb5xiKiEpCj6NRMRQ

அகதியாக கனடாவுக்கு வந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் கனடா இராணுவத்தில் பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்றார்.

“இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, என் கனவின் நிறைவேற்றம்,” என அவர் கூறினார். “அகதியாக வந்த ஒரு தமிழ் இளைஞன், கனடா என்ற தேசத்துக்கு பணியாற்றி, இன்று அதன் உயரிய மரியாதையைப் பெறுவது பெருமையாக உள்ளது.”

AVvXsEgdAQq1titfHJweJzdgGJVyOiGuxkebiEuy6puZ5R3yeEovU64LQ93s3_0txPg4BJkQR5eakMf89XwFlUau8_X_cMqCuDmpOWqc2JyHGJhGDGoyqjWeVJrpb5X-QvCoWzbmIGAuUCXDRbuxFm-eu8xm_d9pEm5bxlEgEJ-pXsjaBPxWp3AhY-zQIU4k4Hhj

அவரது சாதனை, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், அகதியாக புதிய வாழ்க்கையைத் தொடங்கிய அனைவருக்கும், ஊக்கம் அளிக்கும் பெருமைமிகு வரலாறு ஆகும்.

https://www.battinatham.com/2025/11/blog-post_894.html

கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு

2 months 4 weeks ago

கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு

05 Nov, 2025 | 11:38 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வெற்றியுடன், கியூபெக், மொன்றியலில் தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்று மைல்கல்லை அவர் நாட்டினார். 

கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) பகுதியில் பிறந்து வளர்ந்த மிலானி தியாகராஜா, இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட லிங்கராஜா தியாகராஜா (சட்டத்தரணி - இலங்கை ), சண்டிலிப்பாயைச் சேர்ந்த பாமதி சிவபாதத்தின் மகளாவார்.

'அன்சாம்பில் மொன்ட்ரியல்' (Ensemble Montréal) கட்சியின் உறுப்பினராக மிலானி தியாகராஜா, இணைந்து, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு டார்லிங்டன் மாவட்டத்தை கட்டியெழுப்பும் வாக்குறுதியுடன் பிரச்சாரத்தில் இறங்கினார். கனடா சேவை மையத்தில்  (Service Canada) பல ஆண்டுகளாகப் பணியாற்றிய இவர், மக்களுக்கு சேவை செய்வதில் நீண்ட அனுபவம் பெற்றவர். 

தனது வெற்றியையடுத்து வீரகேசரிக்கு கருத்துத் தெரிவித்த மிலானி தியாகராஜா, "இது ஒரு வெற்றி மட்டுமல்ல, ஒரு புதிய தொடக்கம். டார்லிங்டனில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் குரலும் மதிக்கப்படும், பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்கிறேன்.  நமது சமூகத்தின் இணைப்பை வலுப்படுத்தியே இந்தப் பணியை மேற்கொள்வேன். நகரத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்தல். வீடற்றவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வீதிப் போக்குவரத்துகளில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்று கூறினார்.

கியூபெக் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பிரதிநிதியின் இந்த வரலாற்று வெற்றி, மொன்ட்ரியால் மற்றும் கியூபெக்கின் பல்பண்பாட்டு ஜனநாயகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Virakesari.lk
No image previewகனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர...
கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

3 months ago

New-Project-1-15.jpg?resize=600%2C300&ss

பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 34 வயதுடைய இலங்கையர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லாட்விய எல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர், ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1451646

இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ஒத்துழையுங்கள் - சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி

3 months ago

இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க ஒத்துழையுங்கள் - சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம்

Published By: Vishnu

28 Oct, 2025 | 08:17 PM

image

(நா.தனுஜா)

இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்வதற்கு சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் சுவிற்ஸர்லாந்து சமூக ஜனநாயகக் கட்சி அதன் மாநாட்டில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான 'இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள்' எனும் அமைப்பினால் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட சட்ட அறிக்கையில் உள்ள விடயங்களை அடிப்படையாகக்கொண்டு வரையப்பட்டிருக்கும் மேற்படி தீர்மானத்தில் 'ஈழத்தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், மிகமோசமான மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை அத்தீர்மானத்தில் இலங்கையில் இடம்பெற்ற மீறல்களை ஐக்கிய நாடுகள் இனவழிப்புப் பிரகடனத்தின்படி இனவழிப்பாகக் கருதமுடியுமா என்பது பற்றி சர்வதேச கட்டமைப்புக்களின் ஒத்துழைப்புடன் ஆராயுமாறு சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பு, சுவிற்ஸர்லாந்தில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படுவதை முன்னிறுத்தி பல தசாப்தகாலமாக அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் என்பவற்றை உள்வாங்கக்கூடியவகையில் மிகத்தெளிவான மனித உரிமைகள்சார் சுவிற்ஸர்லாந்து வெளிநாட்டுக்கொள்கை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும் சுவிற்ஸர்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது.

மேலும் வருடாந்தம் மேமாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று நடைபெறும் நிகழ்வு உள்ளிட்ட நினைவுகூரல் நிகழ்வுகள் எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் எனவும், சுவிற்ஸர்லாந்தில் உள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பும், நீதியும் உறுதிப்படுத்தப்படும் வரை அவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பியனுப்புவது தவிர்க்கப்படவேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/228926

இலங்கை தொடர்பான புதிய தீர்மானம்: நீதிக்குப் பதிலாக தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கையே ஊக்குவிக்கிறது - ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்

3 months 1 week ago

27 Oct, 2025 | 06:18 PM

image

(நா.தனுஜா)

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படைக்காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியுள்ளது. குறிப்பாக அத்தீர்மானம் தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பிரித்தானிய தமிழர் பேரவை தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்றுமுடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 60/1 தீர்மானம் குறித்து தமது கரிசனையை வெளிப்படுத்தி பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் வி.ரவிகுமார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இப்புதிய தீர்மானமானது தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

அத்தோடு 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படை காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியிருப்பதுடன், தமிழர் தாயகத்தில் பல தசாப்த காலமாக அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்டவரும் வன்முறைகளுடன் கூடிய இனவழிப்பின் கூறுகளை முழுமையாகப் புறக்கணித்திருப்பதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று 1956 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சட்டத்துக்கு முரணான கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் இடம்பெற்றுவருவதைக் காண்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை வசம் 120,000 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ள போதிலும், இப்புதிய தீர்மானம் தமிழர்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதாக அதில் விசனம் வெளியிடப்பட்டிருப்பதுடன் நம்பகத்தன்மையும், சுயாதீனத்துவமும் அற்ற உள்ளகப்பொறிமுறைகளிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை 'ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திடம் சாட்சியம் அளிக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்கள், அதுகுறித்த இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே அதனை வழங்குகின்றனர். அவ்வாறிருக்கையில் மேற்படி சாட்சியங்கள் இலங்கையின் அரச கட்டமைப்புக்களுக்கு அனுப்பப்படுமாயின், அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மீது ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதற்கு வழிவகுப்பதுடன் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையின்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைவடையச்செய்யும்' என்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/228824

நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

3 months 1 week ago

நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

9d0229d1fabcc616d20cd99669b16a9e?s=32&d=Posted on October 23, 2025 by சமர்வீரன்

342 0

K800_IMG_4047-300x225.jpgயேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களது இறுதி வணக்க நிகழ்வானது இன்று (23.10.2025) மிகவும் உணர்வுப்பூர்வமாக தலைநகரில் நடைபெற்றது.

அனைத்துலகச் செயலகத்தினால் வழங்கப்பெற்ற நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பட்டு, யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும், அனைத்துலக மக்களவையால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும் வாசிக்கப்பட்டது.

நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பெற்ற வரலாற்று ஆவணம், திருவுருவப்படப் பேளை, வித்துடல்மீது போர்த்திய தமிழீழத் தேசியக் கொடி என்பன, மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பிற்கு அமைவாக குடும்பத்தாரிடம் கையளிக்கப்பெற்றது.

K800_IMG_3911.jpg

K800_IMG_3908.jpg

K800_IMG_3912.jpg

K800_IMG_3914.jpg

K800_IMG_3955.jpg

K800_IMG_3956.jpg

K800_IMG_4047.jpg

K800_IMG_3915.jpg

QKMP3513.jpg

FJIR2655.jpg

LNCF4789.jpg

XTAS2169.jpg

XTIF3381.jpg

NDDV5467.jpg

XBHP1592.jpg

CMWE8159.jpg

CMWE8159-1.jpg

QRYI5917.jpg

VNGF0866.jpg

XTSN2311.jpg

EZNG0331.jpg

XHSZ2436.jpg

PFLL8463.jpg

XJYK1850.jpg

XLAX3417.jpg

K800_LNCF4789.jpg

K800_XHDU1293.jpg

GBDH7282.jpg

XPAE6833.jpg

K800_QKMP3513.jpg

K800_IZAP5402.jpg

K800_NTHU2536.jpg

K800_XHDU1293.jpg

K800_FJIR2655.jpg

K800_LNCF4789.jpg

K800_UGRW1986.jpg

K800_XTAS2169.jpg

K800_XTIF3381.jpg

K800_LIWN2571.jpg

K800_NDDV5467.jpg

K800_XBHP1592.jpg

K800_PYPF4416.jpg

K800_RKKQ5293.jpg

K800_CMWE8159.jpg

K800_EJRS3148.jpg

K800_PMVU5554.jpg

K800_QRYI5917.jpg

K800_HFLI5021.jpg

K800_JVGW1872.jpg

K800_VNGF0866.jpg

K800_XTSN2311.jpg

K800_EZNG0331.jpg

K800_XHSZ2436.jpg

K800_HTZG0369.jpg

K800_XAJB6791.jpg

K800_WYGG5820.jpg

K800_XBGR9137.jpg

K800_PAAA0397.jpg

K800_QUQW3632.jpg

K800_VEVT7872.jpg

K800_MWBF5053.jpg

K800_UCRP7334.jpg

K800_NZJX5538.jpg

K800_ADUO8593.jpg

K800_CYAP3445.jpg

K800_KZVI0011.jpg

K800_PUVM3272.jpg

K800_EDIU8195.jpg

K800_BPDH0793.jpg

K800_LUPT0838.jpg

K800_XUHR9433.jpg

K800_EKUZ1046.jpg

K800_GIKZ3824.jpg

K800_HYAF4076.jpg

K800_HTGN2283.jpg

K800_NONQ4884.jpg

K800_RMCI4048.jpg

K800_MBMO9762.jpg

K800_NEXL4153.jpg

K800_OPML6297.jpg

K800_OZII3836.jpg

K800_PDTF4045.jpg

K800_PFLL8463.jpg

K800_RHQY6343.jpg

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.19_5b4

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.18_5ae

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.19_0f7

WhatsApp-Bild-2025-10-23-um-19.38.18_667

WhatsApp-Bild-2025-10-23-um-18.03.05_8bd

https://www.kuriyeedu.com/?p=704009

Checked
Wed, 02/04/2026 - 07:31
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed