கவிதைக் களம்

"இதயமே பேசு"

13 hours 52 minutes ago

"இதயமே பேசு"


"இதயமே பேசு ஆறுதல் கொடு 
இனிய காதலை மீண்டும் தந்திடு! 
இன்பம் காட்டி ஏமாற்றியது போதும் 
இரட்டை வேடம் இனிமேலும் வேண்டாம் 
இணக்கம் கொண்டு திரும்பி வந்திடு!"

 

"அன்பு பொழிந்து ஆசை தெளித்து 
அழகு மொழியில் கொஞ்சிக் குலாவினியே!
அகன்ற கண்ணும் சிறுத்த இடையும் 
அளவான மார்பும் கனவில் தோன்றி 
அக்கினியாய் இன்று என்னை எரிக்கிறியே!"    
 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

448599099_10225363013965101_8083378114217714550_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=90NcEO78JZsQ7kNvgF9MyMe&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDgyd56o6Wx9mkE0CKdlBk-njML7pGPLDjchwWOJxvBkw&oe=667514FC 448551112_10225363012725070_5938142132067767357_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ao_cjVgqIVwQ7kNvgHpiLcj&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCe8Fk8xZJLvVNgh3nHNQlbGB5SrPeTB4C9LP81wmQzNg&oe=667542DA

"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்"

2 days 1 hour ago
"உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய தத்துவங்கள்"
 
 
"சாக்குப்போக்கு வேண்டாம் மனிதா
சாதகமாக எடுத்த காரியத்தை மேம்படுத்தி
சான்றாக உலகிற்கு காட்சிப் படுத்தி
சாதாரண மக்களுக்கும் உற்சாகம் கொடு!"
 
"சோர்வாக இருக்கே என்று பின்போடாமல்
சோதனை வருகுதென மனம் தளராமல்
சோம்பல் கொள்ளாமல் எடுத்த காரியத்தை
சோதித்து வெற்றி கண்டதுமே நிறுத்து!"
 
"கொள்கைகளில் சிறந்தது நேர்மை மனிதா
கொண்ட கருத்தில் நிலையாய் நிற்பது
கொடுமையிலும் கொடுமை எல்லோரிடமும் எதிர்பார்ப்பது
கொப்பூழ் கொடியென மலிவானவர்களிடமும் எதிர்பார்ப்பது!"
 
"உழைப்பு நேர்மையாக கடினமாக இருக்கட்டும்
உயர்ந்த எண்ணங்களே அங்கு ஒளிரட்டும்
உங்கள் வெற்றியே உங்கள் பலமாகட்டும்
உதவாக்கரை என்றவர்கள் காலில் விழட்டும்!"
 
"போகும் பாதையை தெளிவாக அறிந்து
போதும் என்றமனதுடன் விட்டு விலகாமல்
போவார் வருவார் சொற்களை கேட்காமல்
போதை கொண்டு கொள்கையில் முன்னேறு!"
 
"வெற்றிபடிக்கு பின்னல் பல தோல்விப்படிகள்
வெறிகொண்டு தோல்விகளை கடந்து செல்
வெற்றிகள் ஒன்றும் ஒரேஇரவில் வராது
வெளிச்சம் காட்டி உன்னைக் கூப்பிடாது!"
 
"நல்லதை மற்றவர்களுக்கு என்றும் செய்யுங்கள்
நச்சுப் பாம்பாய் மோசமாய் பேசாதீர்கள்
நற்பெயர் தங்கத்தை விட உயர்ந்தது
நட்புடன் பழகி தரமாக வாழுங்கள்!"
 
"சாதனைகள் புரிய கனவுகள் வேண்டும்
சாத்திரம் பார்த்து வாழ்வு அமைவதில்லை
சாட்சியாக உன்பாதை மற்றவர்களுக்கும் இருக்கும்
சாந்தமாய் அதை தொடர்ந்து மகிழ்வாயாக!"
 
"எதிர்த்து போராடுவது தோல்வியல்ல, முயற்சி
எங்கு விடாமுயற்சியோ அங்கு வளர்ச்சி
எங்கு வளர்ச்சியோ அங்கு வெற்றி
எனவே மனிதா எதிர்த்து மல்லாடு!"
 
"திறந்த மனநிலையுடன் வாழ்வை அணுகினால்
தித்திக்க வைக்கும் உன்னை வெற்றியாக்கும்
திறக்காத மூடியமனம் மாற்றம் அடையாது
திறம்பட இயங்க ஒன்றையும் மாற்றாது!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
[1] Don’t make excuses, make improvements
2] Don’t stop when you’re tired, stop when you’re done
3] Honesty is a very expensive gift, do not expect it from cheap people
4] Work Hard in Silence, Let Your Success Be Your Noise
5] Don’t get side-tracked by people who are not on track
6]Behind every successful person are a lot of unsuccessful years
7]Live in such a way that if someone spoke badly of you, no one would believe it
8]Sometimes when you follow your dream, it opens the door for others to be able to follows theirs
9]Just because you are struggling does not mean you are failing
10] The hardest thing to open is a closed mind]
217594299_10219557526751549_6095430094450028238_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=YpGC2yYr7v8Q7kNvgE8vX8-&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYDiWNICItCp5_jCF3YNVWA8bEjY628zDCzEScgM4-9VVQ&oe=66732BC6 217444694_10219557527191560_6130419685418778728_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=YRacA5rFf-4Q7kNvgHazarg&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDMfWEE6ZKcf6UtyD22FrVgYPSBPYGydEEwQZG3tvyyQQ&oe=66732A0F
 

'உன் நினைவுகளில் என்றும் நாம்'

4 days 15 hours ago
'உன் நினைவுகளில் என்றும் நாம்'
 
 
 
"எங்கள் வீட்டின் குலமகளாய் இணைந்து
எல்லார் நெஞ்சையும் சிரிப்பால் இணைத்து
எடுப்பாய் குடும்பத்தில் இரண்டற கலந்து
எம்மோடு ஒருவளாக வாழ்ந்த திருமகளே!"
 
"மனதை கவர்ந்து அன்புமழையில் நனைத்து
மணக்கோலம் கொண்டு மணமகளாய் வந்து
மகரிகை தொங்க வலதுகால் வைத்த
மகிமை பொருந்திய எங்கள் கலைமகளே!!"
 
"வந்தாரை மகிழ்வித்து மனமார வாழ்த்தி
வஞ்சனை இன்றி வெளிப்பட கதைத்து
வயிறு நிறைய உபசாரம் செய்து
வணக்கம் கூறி வழியனுப்பும் மலைமகளே!"
 
"கல்விஞானம் அத்தனையும் ஒருங்கே கொண்டு
கண்ணாக குடும்பத்தை அணைத்து வாழ்ந்து
கருணையுடன் எல்லோரையும் வழி நடத்தி
கண்டவர்கள் மனம் நிறைந்த அலைமகளே!"
 
"மீதி வாழ்வை பாதியில் விட்டுவிட்டு
மீளாதுயரில் எம்மை ஆழ்த்தியது எனோ?
மீட்சி உண்டோ விடிவுஉண்டோ எமக்கு ?
மீண்டும்நீ எம்மிடம் வரும் வரை?"
 
"சொல்லாமல் கொள்ளாமல் நீ பிரிந்ததை
சொல்லியழ எமக்கு வார்த்தை இல்லை
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்
சொந்தமாய் அதில்நீ என்றும் இருப்பாய்!"
 
இயற்கையின் அழைப்பை ஏற்றதனால் - நீர்
இசைந்து எம்மை விட்டு விரைந்தீரோ ?
இளகிய இதயம் கொண்டதனாலா - அவன்
இயமன் வலையில் நீர் விழுந்தீரோ?"
 
"உறவாய் உற்றவளாய் உடன் பிறப்பாய்
உத்தமியாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர்?
உயிராய் உன்கொள்கைகளை நாம் போற்றி
உன்நினைவுகளில் என்றும் நாம் வாழ்ந்திடுவோம்!".
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
127987488_10218197777318663_840289903256894978_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=1PW4GNEHPJEQ7kNvgH_eE_L&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYD7V_NX7fTpFBTlynKclvEwd-OvcbnVSiztWBTSeO2QJQ&oe=6691538F 127796302_10218197780838751_2130840792304440418_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=5BYAvabjYDwQ7kNvgF7lNWW&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDUBr-wHVBTrat9JZxa9rwW2SXhAvFT1BBDVBToYaal5Q&oe=66915E6D
 

"மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்"

5 days 18 hours ago
"மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்"
 
 
"வாலிப வயதில் தவற விட்டதை
வானம் பார்த்து ஏங்கி துடித்ததை
வாலைக் குமாரியை தொழுது கேட்கிறேன்
வாட்டம் தராமல் வாலியம் அருள்வாயா
வாழா என் வாழ்வை வாழவே!"
 
"வண்டுக் கண்கள் விரிந்து பார்த்து
கண்டும் காணாத அழகை ரசித்து
குண்டுக் கன்னத்தில் முத்தம் கொடுக்க
மண்ணின் வாழ்வு முழுமை பெற
மீண்டும் வேண்டும் இளமைப் பருவம்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
[‘வாலைக் குமரி’ : இது, பொதுவாக, கடவுளைப் பெண்ணாக வணங்கிப் போற்றும் கவிஞர்கள் கையாளும் சொற்றொடர்!]
448226667_10225331935068148_680262239350907587_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=b-n1WqFam7kQ7kNvgHLh81M&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDMANt9twJk36X7J2zndFY7zt9V54TXD-zgxdcPdIDZAw&oe=666E479D 448242659_10225331919187751_3098904894461186611_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=R5R2NsR4bBUQ7kNvgGzMeRI&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDj92Tu-Dt3_ccEPFoO0b0CotvuOKXWrnXN9MfVcdTINQ&oe=666E6003
 
 

"ஊர்ந்து போகிறான் கல்லறை தேடி!"

5 days 21 hours ago
"ஊர்ந்து போகிறான் கல்லறை தேடி!"
 
 
"அமைதியாய் இருந்து அவன் படித்தான்
அடக்கம் கொண்டு தனிமை கண்டான்
அறிவு பகிர்வென துணையாய் வந்தாள்
அழகாக அமர்ந்து ஆசை ஊட்டினாள் !"
 
"ஆசிரியர் போல அவனுக்கு இருந்தாள்
ஆனந்தமாய் அவனும் கனவு கண்டான்
ஆகாரம் தீத்துவது போல அவளோ
ஆதரவாய் அன்பாய் காதலும் கொடுத்தாள் !"
 
"இன்பம் என்றால் என்ன என்று
இலக்கியம் காட்டிய தனி வழியில்
இனிதாய் இருவரும் ஒன்றி இருந்து
இரகசியம் இல்லா பாடம் பகிர்ந்தனர் !"
 
"ஈசன் இவளே இனி என்று
ஈடு இல்லா இச்சை கொண்டு
ஈயம் உருகியது போல அவனும்
ஈருடல் ஓருடலாக எண்ணி வாழ்ந்தான் !"
 
"உடலை உடைத்து எங்கோ போனாள்
உருவம் கண்ணில் மறைந்து போனது
உள்ளம் ஒடிந்து காரணம் தேடுகிறான்
உயிரை பிடித்து இன்னும் வாழ்கிறான்!"
 
"ஊமையாக வாழ்வு எதோ நகருது
ஊக்கம் குறைந்து சோர்வு தொற்றுது
ஊர்கள் எல்லாம் இருட்டாய் தெரியுது
ஊர்ந்து போகிறான் கல்லறை தேடி!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
291346751_10221263337835760_2132544717353309238_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ao0E3ilVzeUQ7kNvgG-F8KK&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCnkxxVhZ_NpeBUHlxdazc74oQm3sNpB4faWra2oRrxbA&oe=666E1468 May be an illustration of 2 people, tree and outdoors
 

பெண்கள் கூடுதல் கருத்துக்களுடன் பாவிக்கும் ஐந்து சொற்கள் [FIVE WORDS WOMEN USE WITH MORE MEANING]

6 days 21 hours ago

பெண்கள் கூடுதல் கருத்துக்களுடன் பாவிக்கும் ஐந்து சொற்கள் [FIVE WORDS WOMEN USE WITH MORE MEANING]

 

 

"நல்லது [Fine] என்று 'என்னவள்'
நயமாக உரைத்தால்
நாகரிகமாக அவள் தானே
சரி என்று சொல்வதை விளங்கி
'நானும்' விவாதத்தை நிறுத்தி
நா அடக்கி மெல்ல
நழுவினேன் அங்கிருந்து !"
 
 
"ஐந்தே நிமிடத்தில் [5 mins]
கட்டாயம் வருவேன் என்று
கதவை மூடி 'என்னவள்'
அலங்காரம் செய்தால்
சந்தடி இல்லாமல் 'நானும்'
ஒரமாய் இருந்து காப்பி குடித்து
டிவியும் பார்த்து ரசித்தேன்!"
 
 
"ஒன்றும் இல்லை [Nothing] என்று
'என்னவள்' மழுப்பினால்,
புயலுக்கு முன்
அமைதி போல நின்றால்
என்னை 'நானும்' அதற்கு
உசார் படுத்தி
ஏதோ மர்மத்தை
எதிர் பார்த்து நின்றேன்!"
 
 
"செய்யுங்க [Go ahead]
நான் தடை இல்லை என்று
கொஞ்சம் கடினமாக 'என்னவள்'
உறைத்து சொன்னால்
சொல்லும் நோக்கை
'நானும்' குரலில் அறிந்து
செய்யாமல் பின் வாங்கி
அமைதி நிலைநாட்டினேன்!"
 
 
"உரத்த பெருமூச்சுடன் [loud sigh]
இடையில் 'ஆம்' என்றால்
முட்டாளுடன் நேரம்
வீணா போகுதே என்று
எனக்கு சொல்லாமல்
'என்னவள்' சொன்னால்
பணிந்து 'நானும்'
மெல்ல ஒதுங்கினேன்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]
 
84963716_10216062854986939_9221458014744084480_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=IC3ulm5_2nIQ7kNvgFG4Bll&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYC9HqIJovpT_ewpbfRnRYIkGbZM4lE7UY3s2oNx0TyGxw&oe=668E6481 84927653_10216062855586954_2091467280071262208_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=QpqPvi9cD8oQ7kNvgGyXY3i&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDOQSKVg9gG8SJJH9mGcv6YFPT8GKZkxwf-TiVbn0YVuA&oe=668E7C9D 84659011_10216062856226970_6497880048165453824_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=RWH4Gg8rR14Q7kNvgFQqNXv&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYC2rBdv9wbEG1_MQgaowJEcR8sYJGFH8HZua01jXY_X9g&oe=668E6294

 

"தாய்மொழி" [அந்தாதிக் கவிதை] 

1 week ago

"தாய்மொழி" [அந்தாதிக் கவிதை] 

 

"தாய்மொழி என்றும் எங்கள் அடையாளம் 
அடையாளம் தொலைந்தால் நமக்கு மாய்வே!
மாய்வைத் தடுக்க தமிழால் பேசுவோம் 
பேசும் மொழியைக்  கலக்காமல் கதைப்போம்! 
கதைப்பதில் பண்பாடு சொற்களில் நிலைக்கட்டும்!!"


"நிலைத்த புகழை அது பரப்பட்டும் 
பரப்பிய கருத்துக்கள் பெருமை சேர்க்கட்டுமே!
சேர்க்கும் புதிய சொற்கள் முழுவதும் 
முழுமையான முறைப் படி வளரட்டும்!  
வளரும் நாமும் பேசுவோம் தாய்மொழி!!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

66213777_10214462444217670_2734324271105966080_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=31jDM6K68FEQ7kNvgE57kpw&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAXM2_K1vEmctPkVBBEYcjiBpYOb6vl2zQ3hwbqpijKVQ&oe=668D4F84 448164329_10225320667706471_5088906701974720696_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=x0ZmsWirRPUQ7kNvgGi2Vx3&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDGfAoM5GwEPJz5_x5r4B2vFM7P0uO0oHmz9cdxpkPmEA&oe=666BB58B 447974413_10225320667586468_370777998474947553_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=mENRRsbQT9AQ7kNvgHqOHBq&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYCtZKlXEGRSLJEQ_2yEF6wdNgqXnBafdsyTxcJgwYBJNA&oe=666BA45E

"மனதைத் திருடியவளே"

1 week 1 day ago
"மனதைத் திருடியவளே"
 
 
"மனதைத் திருடியவளே என்னை மயக்கியவளே
மன்றாடிக் கேட்கிறேன் திருப்பித் தந்துவிடு!
மகிழ்வைத் தந்து விலகிப் போனவளே
மஞ்சள் நிலாவில் தனிமையில் வாடுகிறேனே!!"
 
"மஞ்சத்தில் உறங்கையில் கனவு விரியுது
மகர தோரணம் பந்தலில் ஆடுது!
மங்கல அரிசி காத்து கிடக்குது
மணமகள் நீயோ அங்கு இல்லையே!!"
 
"மழையும் புயலும் பழகி விட்டது
மது வாசனையில் என்னை மறக்கிறேன்!
மரணம் என்னை நெருங்க முன்
மவுனம் களைத்து மடியைத் தாராயோ!!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
447974182_10225315582019332_325649868146661871_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=gqyuJFnyc2YQ7kNvgHuvX1u&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBooxTltnwyO6xj9LRJAcYywVovRcaak3Dgqs4LUyopLA&oe=666A8B2F 448058313_10225315587779476_4294409002958166757_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=pLEvVEmVyQAQ7kNvgHmBos6&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCQ-vq8njsmLa7fQFZT3efKJhMLogZ-Y4i51fqUjAxKPQ&oe=666A9AF7 No photo description available.
 

"நேரிய பாதையில்"

1 week 2 days ago
"நேரிய பாதையில்"
 
 
"நேரிய பாதையில் மனிதா நட
நேர்மை கொண்ட தீர்மானம் எடு!
 
நேசம் உள்ள நண்பர்களை அணைத்து
நேரார் தரும் தொல்லைகளை அகற்று!
 
ஆர்வம் வேண்டும் ஆராவாரம் வேண்டாம்
ஆசை வைத்து செயலில் ஈடுபாடு!
 
இன்பம் துன்பம் யாரும் தருவதில்லை
இருப்பதை அறிந்து நடையைக் கட்டு!
 
கொள்கை ஒன்றைத் தரமாக வகுத்து
கொடுத்து எடுத்து சமாதானம் காணு!
 
தெரிந்ததும் தெரியாததும் அறிந்து உணர்ந்தால்
தெளிவான முடிவு தருமே வெற்றி!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
399861749_10224270106163089_2284620154713609794_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=h1XiT38SYfoQ7kNvgEvR0vv&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYC7Rmc-HvizmhNRxcjuzEjWR6ITdizTfbrGbQwZSumODQ&oe=66694E3B No photo description available.
 
 
 

"தேநீர்க் கடையும் நினைவழியாக் காலமும்"

1 week 4 days ago
"தேநீர்க் கடையும் நினைவழியாக் காலமும்"
 
 
"மனதின் மூலையில் ஒரு நினைவு
அணையா தீபமாய் இன்றும் எரிகிறது
தேநீரின் வாசனை காற்றில் வருகிறது
வடையின் மெதுமை வாயில் ஊறுது!"
 
"உரையாடல் மலர்ந்து நட்பு வளர்ந்தது
கிசுகிசு கதைகளும் இடையில் வந்தது
சிரிப்பும் சச்சரவும் முட்டி மோதின
வெற்றிலை பாக்கு வாயில் ஆடின!"
 
"விடைகள் புரியா வாங்கு அரசியல்
குடையில் போகும் பூவையர் மகிழ்ச்சி
இடையில் பறக்கும் ஈக்கள் ஒருபக்கம்
கடையின் நினைவு மறையா காலமே!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
362683474_10223675621861353_1299478488458797221_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=8S8T4YcPxNQQ7kNvgFIxf62&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDmfjzjYv7BnCZGxJI8sZaLWGNU460RiBbo81ydYzKErw&oe=66669C15 447638169_10225299718902764_7521881445312193637_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=YNfMjIiXsXoQ7kNvgHIp5P4&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYDES-ogjrqjqh2P4TBR93LKYob84jvkfYCCm6-2sLw6Tg&oe=66668201 May be an image of tick
 

"சிலுசிலு காத்துல சிணுங்குறியே சிங்காரி"

1 week 5 days ago

"சிலுசிலு காத்துல சிணுங்குறியே சிங்காரி"


"சிலுசிலு காத்துல சிணுங்குறியே சிங்காரி
கொழுகொழு கன்னத்தில் குழி விழுகுதே!
குளுகுளு தென்றலில் பொன்மேனி சிலிர்க்க     
நொழுநொழு என்று குழைவதைப் பார்க்க 
தழுதழுக்குதே வார்த்தைகள் என் வாயிலே!!


"தளதளவென்று ததும்பும் இளமைப் பருவமே   
சலசலக்கும் நீரோடையில் உன்னைக் கண்டனே! 
கலகலக்கும் புன்னகையில் என்னை அழைத்தாய்  
வளவள பிதற்றலில் நெஞ்சை இழுத்தாய்
மலங்கமலங்க விழித்தேன் செய்வது அறியாது!! 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

May be an image of 1 person and text that says 'தலைப்பு சிலு சிலு காத்துல சிணுங்குறியே சிங்காரி'

"நட்பு என்பது நடிப்பு அல்ல"

1 week 6 days ago
"நட்பு என்பது நடிப்பு அல்ல"
 
 
"நட்பு என்பது நடிப்பு அல்ல
நடனம் ஆடும் மேடை அல்ல
நயமாக பேசும் பொய்யும் அல்ல
நலம் வாழ என்னும் பாசமே!"
 
"வடிவு என்பது உடல் அல்ல
வட்டம் இடும் கண்ணும் அல்ல
வளைந்து பொங்கும் மார்பும் அல்ல
வளையாமல் நிமிர்ந்து நிற்கும் உள்ளமே!"
 
"காதல் என்பது பொழுதுபோக்கு அல்ல
காது குளிர பேசுவது அல்ல
காமம் கொடுத்து மயக்குவது அல்ல
காலம் முழுவதும் உண்மையாக இருப்பதே!"
 
"அன்பு என்பது கடமை அல்ல
அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பது அல்ல
அற்பம் சொற்பம் தருவது அல்ல
அறிவுடன் உணர்ந்து பாசமாக நேசிப்பதே!"
 
"முகநூல் நட்பு தேடுவது அல்ல
முகர்ந்து பார்க்க அலைவது அல்ல
முகத்தை மாற்றி ஏமாற்றுவது அல்ல
முழுதாய் சொல்லி அறிவாய் நடப்பதே!"
 
"பொறுப்பு என்பது வீட்டில் இருப்பது அல்ல
பொது நண்பர்களுடன் சுற்றுவது அல்ல
பொய்கள் பேசி திரிவது அல்ல
பொருள் தேடி குடும்பத்தை காப்பதே!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
290732799_10221244899574815_5574166228355732030_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=xQ7q9SoK7x8Q7kNvgHkM0Eg&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDl6tWiUYbh3R0mUPFquHjxLOSJSk2SC85e04ngLcNj4g&oe=666402F3 290898179_10221244900214831_7683258841725289106_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=eqCiZDovQOEQ7kNvgGzPCoq&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYDepq81f19iVk5d3BwQ5h6ExyCbtyB-DW7Z9EUfymyy1w&oe=66640750 290663802_10221244898934799_2861531148812096290_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rRBfVhsKfm0Q7kNvgFRJz1x&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCelMOGJ1IF1yuCjirZUP_Bxp41RwZazGJUx8r57kWWaA&oe=6663E5E5
 

பெற்றோர் வடிவில் கடவுள்

2 weeks 1 day ago
ஜூன் 1, 2024
இன்று உலக பெற்றோர் தினம்
 
போரில் வாழ்ந்த குழந்தைகள் போல்
போருள் வாழ்ந்த பெற்றோரும்
பரிதாபத்துக்குரியவர்களே
 
குண்டுகள் மழை போலப் பொழியத் தொடங்கின
இடியோசை மரண பயத்தைத் தந்தது
குழந்தைகளின் பெறுமதியான நாட்கள்
பதுங்குகுழிகளில் கழிந்தன
இரைதேடும் பருந்திடம் இருந்து
குஞ்சுகளைக் காப்பாற்ற பறவைகள் போராடின
 
ஒருநாள் பெற்றோர் வடிவில் கடவுள்
பூமிக்கு இறங்கி வந்தார்
பானையில் எஞ்சியிருந்த பழைய சோற்றை
கவளமாகக் திரட்டி குழந்தைகளுக்குக் கொடுத்தார்
எஞ்சிய சோற்றில் ஒருபிடி
தானுண்டு சிறுபசியாறினார்
 
அன்றைய நாளின் பின்னிரவில்
பதுங்கு குழியை குழந்தைகள் நிறைத்தனர்
பதுங்குகுழி வாசலில் அமர்ந்தபடி
ஆசீர்வதிக்க தன் குழந்தைகளுக்காக
அவர்களின் பெற்றோர்கள்
கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்கள்
 
445826926_7462149040499872_2074851023355
447051278_7462149833833126_4945516113472
 
 

"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"

2 weeks 1 day ago
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?"
 
 
"உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு
உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து
உயிரோடு கலந்து உடலோடு உறவாடி
உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே"
 
"சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று
சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று
சொக்கி போகும் பேரழகு பெற்று
சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?"
 
"ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு
ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு
ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு
ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?"
 
"அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி
அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு
அலங்காரம் செய்து கண்டு களித்து
அக்கினிக்கு இரையாக போனது ஏனோ?"
 
"கண்மணியே எம் குடும்ப தலைவியே
கருத்துக்கள் கலந்து ஞானமாய் பேசுபவளே
கடுகளவும் பாசம் குன்றாத குலமகளே
கண்களில் இரத்தக்கண்ணீர் தந்தது எனோ?"
 
"கள்ளம்கபடம் இல்லாமல் சிரித்துப் பேசி
கண்டவரையும் மயக்கும் வசீகர விழியாளே
கடைசிவரை குடும்பம் தழைக்க வாழ்ந்தவளே
கண்காணாத உலகம் சென்றது நீதியோ?"
 
"அவனியிலே குழந்தைகள் வாழ்வதை ரசிக்காமல்
அவர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தாமல்
அன்புடன் பேரப் பிள்ளைகளை அணைக்காமல்
அவர்கள் முத்தம் சுவைக்காமல் மறைந்ததுஎனோ?"
 
"ஆட்டம் முடிந்ததுவென்று யாருக்கும் சொல்லாமல்
ஆரவாரம் செய்யாமல் அமைதியாக பறந்தாயோ
ஆடிஅசைந்து அழகுபொழிந்து வரும் உன்னுருவம்
ஆரத்தியெடுத்து தினம் வணங்கும் தெய்வமானதோ?"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
289632158_10221219582781911_1853753610137533960_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=OjiiwxTZZ3kQ7kNvgGGXjMW&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDDeffWCAJPN3W1SzE7L_eMpR4mGxNnlD5d62N3dzLN5Q&oe=66612724 289577187_10221219582661908_1668301774033110619_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=5vxcNyWF4FEQ7kNvgGmWmAX&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYC6dz0h84Y7ei1aj3j15EjtdIneUynoP27eUj-kjxkZ5w&oe=66615036
 

"என் உயிரோட்டமும் நீதானே"

2 weeks 1 day ago

"என் உயிரோட்டமும் நீதானே"

 

"மின்னல் இடை கண்ணைக் குத்த  
அன்ன நடை நெஞ்சை வருத்த 
கன்னி இவள் அருகில் வந்தாள் 
சின்ன சிரிப்பு செவ்விதழில் தவழ 
கன்னக் குழியில் இடறி விழுந்தேனே!"


"அன்பே  ஆருயிரே அழகு தேவதையே  
இன்பம்  கொட்டும் வண்ணக் கிளியே 
துன்பம் எனோ எனக்குத் தருகிறாயே     
என் எந்திரவாழ்வை மாற்ற வந்தவளே   
என் உயிரோட்டமும் நீதானே இன்று!!"  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

445174281_10225278558493767_204967356480688363_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=T851xk3D4DwQ7kNvgG-1Onv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBGI9gw8gad3pEt_Ny2-tXxhY2Kh7aA5O7AFQr-1Hm_7A&oe=6661395C 447206622_10225278557693747_5428827743638648041_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zcqtxCgDNJgQ7kNvgF3c7Iq&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBUPYRbTk_-6ZE9eh1vGKeHATfogRyHEOnGd4F3om73ig&oe=66613D94

 

"யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"

2 weeks 2 days ago
"யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"
 
 
"உலக வாழ்க்கையின் மகத்தான மேடையில்
வரலாறு படைக்கும் இதயங்களின் மத்தியில்  
மானிடப் பிறவி எடுத்தவன் மனிதனா?   
மனிதம் கொண்ட ஒருவன் மனிதனா??"
 
"வெறும் சதையும் எலும்பும் மனிதனல்லா 
வெறும் பலமும் செல்வமும் மனிதனல்லா 
வெறும் புகழும் பதவியும்  மனிதனல்லா 
யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"
 
"கண்கள் விழித்து கருணை காட்டும் 
கொடுமையைக் கண்டு மனது குமுறும்     
அறிவுடன் அறிந்து உதவும் கரமும்  
எங்கே இருக்குதோ? அவனே மனிதன்!!"
 
"துயரம் கண்டு அக்கறை காட்டி 
ஆறுதல் கொடுக்கும் புன்னகை உதிர்ந்து  
தனக்கென வாழாது உலகத்துக்கும் வாழும் 
அவனே மனிதன்! அவளே மனிதன்[மனிதி]!!" 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
438089478_10225132704367505_875313461725228404_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rkNZKYR2Wr8Q7kNvgExt_9H&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCxYmhbUlhRWppZvsv694-dlRCgK7kW9vXWkBrmaWDGbw&oe=66606C06
 

சற்றே விலகி இருப்போம்

2 weeks 3 days ago
வாழ்க்கை ஒருவழிச்சாலை
பயணத்தின் இடையே நாம்
பலரைக் கடந்து போகிறோம்
சிலர் தொடர்ந்து வருபவர்கள்
பலர் கடந்து செல்பவர்கள்
மேலும் சிலர்
எம்மை உளவு பார்ப்பவர்கள்
 
மனித மனங்கள் விசித்திரமானவை
நட்சத்திரங்கள் போல் வித்தியாசமானவை
துரதிர்ஷ்டவசமாக யாரும் பார்க்க முடியாதவை
 
எல்லோரும் எல்லோரையும்
ஏற்றுக்கொள்ள முடியாதென்ற
தத்துவம் நாமறிவோம்
ஆதலால் நாம்
நம் இலட்சியங்களை
இழிவுபடுத்த முயற்சிக்கும் நபர்களிடமிருந்து
சற்றே விலகி இருப்போம்
 
May be an illustration of map and text that says 'ILIFE SUPI'
 
 
 

"மனக்கதவை திறவுங்கள் மாற்றம் உனதாகும்"

2 weeks 4 days ago
"மனக்கதவை திறவுங்கள் மாற்றம் உனதாகும்"
 
 
"மனக்கதவை திறவுங்கள் மாற்றம் உனதாகும்
உங்கள் எண்ணத்துக்குள் அவை வெளிப்படட்டும்
கட்டுகளை விடுவித்து சங்கிலிகளை உடைத்து
உங்கள் மனம் திறந்தவெளியில் உலாவட்டும்!"
 
"திறந்த இதயத்துடனும் திறந்த மனதுடனும்
மாற்றம் மென்மையாக அன்பாக அமையட்டும்
எதிரியை விட நண்பனை அறிந்தால்
புதிய மாற்றம் புரிந்து வளரும்!"
 
"மனதைத் திறந்து தன்பாட்டில் பறக்கவிட்டால்
எதிர்காலத்தை தழுவி புதியதை வரவேற்றால்
உங்கள் கனவுகள் விரைவில் நனவாகும்
தேடிய எதிர்பார்ப்பு தானாக திறக்கும்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
395474173_10224240624746072_932492637743521133_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=0Zm2a7Ke_1sQ7kNvgFrxunY&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCoRZq6K4arZQnLXori380cfASFEo06GxZV7fqu4c58bQ&oe=665D2BDF 395471016_10224240623946052_8181571789141965761_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=3gXsAYv2HSsQ7kNvgHUKw3h&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCnpbxmedSXreeGPrrx0mdTw5Nu7Qu5ORox1CAv_DvkOg&oe=665D3FC4 398263600_10224240624066055_6321211100708861130_n.jpg?stp=dst-jpg_p235x350&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=-QwLYwdPoa0Q7kNvgEKTlBm&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYA9THe1sBNt9Qhb3H8v17suDXIDDGYGzrfIYh37vFB4TA&oe=665D3DFF

புனைபெயர்

2 weeks 4 days ago
எப்போதாவது உங்களை
புனைப்பெயர் சொல்லி
இன்னொருவர் அழைத்ததுண்டா
 
எப்போதாவது உங்கள் பெயரை
உச்சரித்த நாட்களை விட
புனைபெயரை அதிகம் உச்சரித்ததுண்டா
 
அவரவர் வாழ்வில்
பட்டப் பெயராகவோ செல்லப் பெயராகவோ
ஒரு புனை பெயர் இருந்திருக்கக் கூடும்
 
பிடித்த தலைவர், பிடித்த நபர்
பிடித்த நதி,பிடித்த மலை
அன்றேல்
பிடிக்காமல் போன எது வேண்டுமானாலும்
புனை பெயராக இருக்கலாம்
 
முன்னொரு நாளில்
விரும்பி நான் சூட்டிக் கொண்ட
என் புனைபெயர்
அண்மைய நாட்களில் அடிக்கடி
என் பெயரை மறக்கச் செய்கிறது
 
May be a doodle
 
 
 
 

"என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி"

2 weeks 5 days ago
"என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி"
 
 
"என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி
சின்ன இடையாளே! செருக்குப் பிடித்தவளே
துன்பம் வேண்டாமே! மௌனம் கலைத்தாலென்ன?
இன்பமொன்றே எண்ணி உன்னிடம் வந்தேனே!"
 
"மின்னல் வேகத்தில் கோபம் கொள்ளாதே
கன்னம் சிவக்க உற்றுப் பார்க்காதே!
அன்ன நடையில் மனதைப் பறிகொடுத்து
கன்னி உன்னை மனதாரக் காதலித்தேனே!"
 
வண்ணக்கிளியே அழகே! தனிமை என்னைவாட்டுதே
மண்ணில் வாழும்வாழ்வும் எனக்கு வெறுக்குதே!
கண்கள்கூட நீயில்லாமல் இரவில் மூடமறுக்குதே
எண்ணமெல்லாம் நீயொருத்தியே! அருகில் வாராயோ?"
 
"விண்ணில் மலரும் நிலாவும் சுடுகுதே
உண்ண உணவிருந்தும் பட்டினி கிடக்கிறேனே!
கண்டகண்ட ஓடுகாலிப்பயல் நான் அல்ல
பெண்ணே அன்பொளியே! என்னை ஏற்பயோ?"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
447023463_10225258781879364_1903409872379228140_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=JAfXeUwHuskQ7kNvgE-EABc&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYD-r5GfzdFObAEvn7RuDJWmqDzRVbhA5LpBsYe9pkKN3A&oe=665C4338 446805756_10225258781719360_7588183648042679769_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XipebldRSrYQ7kNvgFxxumv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDJZ8S19udfINv0eXhkEhhc97KXj1l-RoeX_zAEEFGoNw&oe=665C62C8
Checked
Mon, 06/17/2024 - 10:19
கவிதைக் களம் Latest Topics
Subscribe to கவிதைக் களம் feed
texte-feed
https://www.yarl.com/forum3/forum/214-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/