Jump to content

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1232
  • Joined

  • Days Won

    14

valavan last won the day on July 20 2023

valavan had the most liked content!

1 Follower

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

valavan's Achievements

Mentor

Mentor (12/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Conversation Starter
  • Posting Machine Rare

Recent Badges

1.7k

Reputation

  1. பவனீசன் பற்றி கருத்து சொன்னவருக்கு: சாதியில் உயர்ந்தவர் மறைந்து நின்று காணொலியில் கருத்திடுகிறார். சாதியில் குறைந்தவர் பொதுவெளியில் நிமிர்ந்து நின்று நான் இன்னவர்தான் என்று சொல்கிறார். ஆண்மையோடு பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்துபவனே மனிதனில் உயர்ந்த சாதி. -------- மற்றும்படி சமூகங்களுக்கிடையிலான சாதிபிரிவினையை ஒருபோதும் ஒழிக்க முடியாது. உயர்ந்த ஜாதி தாழ்ந்த சாதி எனப்படுகிறவர்களுக்கு இடையில் மட்டும் சாதி பிரிவினை இருப்பதில்லை. முடிதிருத்துகிறவருக்கும் துணி துவைப்பருக்கும் இடையிலும், பனம்பொருள் தொழில் ஈடுபடுகிறவர்களுக்கும் சுமை தூக்கிற மக்கள் கூட்டத்துக்கு இடையிலும் சாதி பிரிவினை உண்ட குடும்ப விழாக்களிலிருந்து கோயில்கள் வரை அவர்களுமே தனித்து இயங்குவதுண்டு, அப்படியான நிலையில் எந்த சபையேறி இதனை ஒழிக்க முடியும்? பவனீசன் போன்ற யூடியூப்பர்கள் பல்லாயிரம் மக்களை சந்தித்தவர்கள் சந்திக்க போகிறவர்கள், அன்றாட நிகழ்வுகளிலிருந்து அரசியல்வரை சமுதாயத்தின் அனைத்து வகையான விஷயங்களையும் பிரச்சனைகளையும் எதிர்வினைகளையும் அனுபவத்தில் கண்டிருக்க கூடியவர்கள் , எதிர் கருத்துக்களை எதிர்பார்க்க வேண்டியவர்கள் அதை மிக இயற்கையானது என்று கடந்து போக வேண்டியவர்கள், சாதி சொல்லி சக மனிதனை திட்டினால் காயப்படத்தான் செய்யும் , சாதியம் எனும் பிரிவினை வலி தருவது அதில் மாற்று கருத்தே இல்லை, ஆனால் அதை அதை மன உறுதியோடு கடந்து போய் உங்கள் பாட்டுக்கு உங்கள் பணியை கவனிக்க முடியவில்லையென்றால் நிச்சயமாக மக்களை சந்திக்கும் ஒரு துறையில் நீங்கள் இயங்கவே முடியாது. என்னமோ வடபகுதியில் எதிர்பாராதது நடந்தது மாதிரியும் இன்னும் 5 நிமிடத்தில் தற்கொலை செய்யபோவதுபோன்று இடிந்து போய் நின்று காணொளி போடுவது நிச்சயமாக வியூ அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கை என்றே பிறரால் பார்க்கப்படும். வேறெதுவும் சொல்வதற்கில்லை.
  2. முன்பைவிட வேகமாக இயங்குவதுபோல் ஒரு உணர்வு. நன்றி,
  3. கடல்நீரால் பேப்பர் கொஞ்சம்கூட ஈரமாகாமல் கரையொதுங்கியது நாகர் கோயிலில் மட்டுமே நடக்க கூடிய அதிசயம். அந்தியேட்டி கிரியைக்கு இப்போ இங்கிலீஷில் எல்லாம் எழுதுவாங்களா? அந்தியேட்டியின் அசுர வளர்ச்சி.
  4. பையன் சொன்னதையே எழுதலாம் என்று வந்தேன் ஏற்கனவே எழுதியிருக்கிறார். இணையவனின் அண்மைய மென்பொருள் மெருகேற்றலின் பின்னர் உள் நுழைவதும், நுழைந்தபின்னர் பக்கங்களை பார்வையிடுவதும் மிக தாமதமாகிறது. அண்டைக்கு மாறி என்னத்தையும் கிண்டி போட்டாரோ தெரியவில்ல😜 ( என்ர ரேஞ்சிலயே மற்றவர்களையும் நினைக்கிறது பொழைப்பா போச்சு) தயவு செய்து சரி பாருங்கள்.
  5. நடந்தது ஆயுத போராட்டம் இங்கே உயிர்காவுகள்தான் மூலதனம். இங்கே மறுப்பதற்கோ மறைப்பதற்கோ ஏதுமில்லை. சுமந்திரன் சார்ந்திருக்கும் அரசியல் தலைமைகள் தெற்கிலிருக்கும்போது ஒரு பேச்சு வடக்கு வந்தால் வேறு பேச்சு என்று செய்த சாக்கடை அரசியலால்தான். உங்கள் அரசியலில் நம்பிக்கையில்லாத தமிழ் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தில் இறங்க காரணம். ஆகவே அந்த புதைகுழிகளுக்கு விதைபோட்டது உங்காளுங்களே என்று அனந்தி அப்போது பதில் சொல்லிருக்கவேண்டும். தமிழர் மத்தியில் மனித புதைகுழிகள் உருவாக மறைமுகமாக காரணமா இருந்த நீங்களே பேசும்போது நாங்கள் ஏன் பேசகூடாது எண்டு கேட்டிருக்கவேண்டும் எல்லாமே காலம் கடந்தவைதான் இதுவும் கடந்தே போகட்டும்.
  6. இவர்கள் மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களல்ல, வேறு வழி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். புலிகள் இருந்து அவர்கள் தேர்தலில் நின்றிருந்தால் இவர்கள் கட்டுப்பணம்கூட மீள பெற்றிருக்கமாட்டார்கள். இதைதான் நம்மிடையே உள்ள குழப்பம் என்றேன்.
  7. இவர்கள் நம்பிக்கைக்குரியவர்களில்லை என்று பல ஆண்டுகளாக கருத்து சொல்லிக்கொண்டிருந்தோம், இன்று என்னமோ நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டமாதிரி கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். குழப்பம் எங்களிடம்தான் அவர்களிடமில்லை , அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.
  8. எம் பக்கம் முழுசா நாமே இல்லை என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?
  9. சுமந்திரனை தமிழர் பிரச்சனைக்காக போராடுகிறவராக எவரும் ஏற்றுக்கொண்டதில்லை ரணிலை தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்க கூடியவரென்றும் எவரும் ஏற்றுக்கொண்டதில்லை அப்புறம் எவர் பக்கத்தில் எவர் இருந்தால் என்னதான் பிரச்சனை?
  10. மனைவி பாவம்தான் ஆனாலும் இறந்தவர் ஒன்றும் பரிதாபத்துக்குரியவர் அல்ல. குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் கூடுமிடம் என்றுகூட பார்க்காது ஒரு ஆலய வளாகத்தில் வாள்வெட்டு நடத்தி யாழின் அமைதியை முதலில் குலைத்தது அவர், அவர்மீது தாக்குதல் நடத்தி யாழின் அமைதியை இரண்டாவது தடவையாக குலைத்தது இவர்கள். கடற்படை இவரை காப்பாற்றியிருந்தாலும் யாழ்நகரில் வாழும்வரை கண்டிப்பாக இவர் தொடர்ந்து குறிவைக்கப்பட்டுக்கொண்டே இருந்திருப்பார். ஏனென்றால் இவரும் இவர் எதிரிகளும் வெட்டினால்தான் எதிரிக்கு பயத்தை ஏற்படுத்தலாம் தமக்கு கெளரவம் என்று வாழ்கிறவர்கள். இரு கூட்டம் மீதும் கவலையில்லை, பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாதது மெது மெதுவாக அழியலாம் தப்பில்லை.
  11. இலங்கையின் நீண்ட வரலாறு தெரிந்தும் கல்வியும்பொருளாதாரத்திலும் மேலோங்கிவிட்டால் இலங்கையை ஆள முடியும் தமிழர்கள் சொல்வதை இலங்கை கேட்கும் என்று எப்படித்தான் இவருக்கு பேச மனம் வந்ததோ தெரியவில்லை, அல்லது தனது சிங்கள அரச ராஜாங்க பதவியை நியாயப்படுத்த தமிழர்களுக்கு அல்வா கொடுக்கிறாரோ தெரியவிலை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் எவ்வளவு உச்சம் போனாலும் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் முஸ்லீம்களால்கூட அவர்கள் சொல்வதை இலங்கையை கேட்க வைக்க முடியாது அவற்றை வைத்து இலங்கையை ஆள முடியாது. ஏனென்றால் இலங்கையை ஆட்சி செய்வது அவை இரண்டுமல்ல முதலில் மதம் பின்பு அரசியல்! கல்வியில் மேல் நிலையில் உள்ளவனும் பொருளாதாரத்தில் நிலைபெற்றவனுக்கும் இலங்கை பணியும் என்றால் இன்றைய வங்குரோத்துக்கு இலங்கை வந்திருக்காது எப்போதோ ஆசியாவின் முதலாவது அபிவிருத்தி அடைந்த நாடு ஆகீருக்கும், 2 முக்கால் கோடி சனத்தை வைச்சுக்கொண்டு 140 கோடி மக்கள் தொகையை கொண்டிருக்கும் சீனாவிடமும் இந்தியாவிடமும் இருந்து அரிசியும் முட்டையும் கடன் வாங்கிகொண்டிருக்காது. 83 கலவரத்தின் பின்னர் தமிழர்களில் பெரும்பான்மையினர் யுத்தத்துடனும் புலம் பெயர்வுடனும் காலத்தை ஓட்டிக்கொள்ள சிங்களவர்கள் கல்வியில் எங்கோ போய்விட்டனர், இன்று புலம்பெயர்நாடுகளுக்கு படையெடுக்கும் சிங்கள மாணவர்களின் தொகையில் தமிழர்களையும் முஸ்லீம்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். இனதொகை ஒப்பீட்டளவில் தமிழர்கள் கல்வியறிவில் மேலோங்கியிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டாலும், அதை வைத்து நாங்கள் சிங்கள தேசம் நாம் சொல்வதை கேட்கும் நிலைக்கு கொண்டுவரமுடியாது , அதை செய்ய சிங்கள அரசியல் அனுமதிக்காது அதையும்மீறி அரசியல் அனுமதித்தாலும் தேரர்கள் அந்த அரசியல்வாதிகளை ஆட்சியைவிட்டே அகற்ற பார்ப்பார்கள். இலங்கையில் சர்வவல்லமை பொருந்திய பெளத்த சிங்கள இனத்தை சேர்ந்த கல்விமான்கள் , பெரும் பணக்காரர்களே கல்வி பணத்தில் உச்சம் தொட்டும் ஆளைவிடுடா சாமியென்று அப்படியே ஆயிரக்கணக்கில் நாட்டை காலி செய்துவிட்டு ஓட்டம்பிடிக்கும்போது இந்த இரண்டும் இருந்தால் நாங்கள் சொல்வதை நாடு கேட்கும் என்று இயம்புவது இந்த நூற்றாண்டின் அதி பயங்கர நகைச்சுவை. ஒருவேளை கல்வியிலும் பொருளாதாரத்திலும் அதி பயங்கரமாக முன்னேறிவிட்டால் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் அதை வைத்து எப்படி மேற்குலகத்தில் நிரந்தரமாக குடியேறலாம் என்பதே அடுத்தகட்டமாக சிந்திக்கிறார்கள், சிந்திப்பார்கள்.
  12. சம அளவிலான பிரச்சனைகளாக இருந்தாலும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுவதில் புலிகளின் போராட்டத்தையும் பாலஸ்தீனர்களின் போராட்டத்தயும் ஒரே தராசில் வைத்து பார்க்கும் புலி வெறுப்பாளர்களுக்கான பதிலாகவே உங்களின் கருத்தை எடுகோளாக்கினேன், மற்றும்படி அது உங்களின் மீதான விமர்சனம் அல்ல. பெரும்பாலும் எவருடனும் கருத்து மோதலில் ஈடுபடுவதில்லை, பொத்தாம் பொதுவாக மனசில் பட்டதை சொல்வதுதான் வழமை,
  13. பொருளாதார ரீதியாகவோ அல்லது பிராந்திய ரீதியாகவோ முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளுக்கே சர்வதேசம் முன்னுரிமை கொடுக்கிறது, தமக்கு முக்கியத்துவம் இல்லாத நாடுகளில் பல ஆயிரக்கணக்கில் செத்து கிடந்தாலும் முக்கியத்துவம் தராத உலகம் , தமது ஆளுமை அல்லது பின்புலம் கொண்ட நாடுகளுக்கு ஒன்றென்றால் நேச நாடுகள் என்று சொல்லி படை திரட்டி முட்டி மோத வருகிறது. எமது நிலையும் அதுதான் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளத்தை ரில்லியன் டொலர் கணக்கில் எடுக்க முடியும் நிலை என்ற ஒன்று வந்தால் சிங்களம் அதனை தம்முடன் பகிர்ந்து கொள்ள மறுத்தால் இலங்கை தமிழருக்கு ஒரு பிரச்சனையென்றால் அதனை ஒரு போர் பிரகடனமாகவே மேற்குலகம் எடுக்கும். பாலஸ்தீன பிரச்சனை என்பது இஸ்ரேலின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, இஸ்ரேல் என்பது மேற்குலகின் முற்றுமுழுதான ஆசீர்வாதம் பெற்ற பிரதேசம், பாலஸ்தீனம் என்பது தனி ஒரு பிராந்தியமல்ல, முற்றுமுழுதாக அரபுநாடுகளின் அனுதாபம் பெற்ற பிரதேசம், அரபு நாடுகளென்பது அமெரிக்காவின் மறைமுக ஆளுகைக்கு உட்பட்ட வலயம், எப்படி முக்கியத்துவம் தராமல் இருப்பார்கள்? எமது போராட்டமும் பிராந்தியமும் எந்த வகையில் அவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறது? அகதிகளாய் எம்மவர்கள் தஞ்சம் கோருவதால் மட்டுமே ஓரளவாவது உற்று நோக்குகிறார்கள், இல்லையென்றால் அதுவும் இல்லை. பாலஸ்தீனத்திற்கு கொஞ்சமும் குறையாத படுகொலைகள் கொங்கோவிலும்,கம்போடியாவிலும்,உகண்டாவிலும், சோமாலியாவிலும் அரங்கேறியது அரங்கேறுகிறது எவர் கண்டு கொண்டார்கள்? இழவு வீடென்றாலும் வசதியுள்ளவன் செத்தால் வரிசை கட்டி ஓடி வரும் சமூகம், இல்லாதவன் செத்தால் அனாதை பிணமாகவே விட்டுவிடும், அது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் பொருந்தும்.
  14. பாலஸ்தீனத்தின் தன்னாட்சியை பலநாடுகள் ஏற்றுகொண்டன இன்றுவரை அமெரிக்காகூட அதை ஏற்றுக்கொள்கிறது. புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது சுயாட்சியுடன் கூடிய தமிழர் தாயகபகுதி என்பதையாவது எவராவது ஏற்றுக்கொண்டார்களா? அமெரிக்கா உட்பட்ட மேற்குலகமும் சிங்கள அரசும் அழுத்தம் முதலில் கொடுத்தது புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டுமென்பது. ஆயுதங்களை கீழே போட்டிருந்தால் பேச்சுவார்த்தை என்ற ஒரு மேடைக்கே புலிகளை அழைத்திருப்பார்களா? கண்டிப்பாக தமிழர்கள் என்ற பெயரில் டக்ளசையும், கூட்டணிகாரர்களையும்தான் கொண்டுபோய் உலகின் முன் தமிழர் தரப்பு என்று நிறுத்தியிருக்கும் சிங்களம். புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் தீர்வு என்று அடிக்கடி சிங்கள தேசம் சர்வதேசத்துக்கு சொல்லிக்கொண்டிருந்தது, இன்று புலிகளே இல்லை என்ன தீர்வு இதுவரை தமிழருக்கு வந்து சேர்ந்திருக்கிறது? சமகால நிலமைகளை கண்கூடே பார்த்துவிட்டு புலிகளையும் பாலஸ்தீனத்தையும் எந்த வகையில் ஒப்பிடலாம்?
  15. அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி காசு பார்த்தார் ரஜனி எந்தக்காலமும் அரசியலுக்கு வரமாட்டேன் , ஒருவேளை துப்பாக்கி எடுத்து எல்லோரையும் சுட்டு தள்ளணும்னு ஒரு நினைப்பு வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றார் கமல். பின்னாளில் வருவேன் என்றவர் வரவில்லை வரவேமாட்டேன் என்றவர் வந்தார். கமல் கட்சி ஆரம்பிச்சு அரசியலுக்கு வந்தது ஒன்றும் முதல்வராகவோ அல்லது தமிழகத்தை காப்பாத்தவோ அல்ல , தனிப்பட்ட கோவத்துக்காகவே வந்தார். பிரதமர் கனவிலிருந்த ஜெயலலிதாவை வெறுப்பேத்த வேட்டிகட்டிய தமிழன் ஒருவர் பிரதமராவதையே வரவேறிகிறேன் என்று கமல் ஒருபோது அறிக்கைவிட்டார், அதனால்கோபத்தின் உச்சிக்கே போனார் ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாக தனது பணம் முழுவதையும் கொட்டி எடுத்த விஸ்வரூபம் படத்தை வெளிவரவிடாமல் பண்ணி அவரை பொருளாதார ரீதியாகவும் மனநிலை ரீதியாகவும் சினிமாவைவிட்டே ஓடவிட பார்த்தார் ஜெயலலிதா, இயல்பாகவே கர்வமும் கோப குணமும் அதிகமான தன்மான உணர்வும் கொண்ட கமல் தன் இயலாமையால் கண்கலங்கி அழுது தமிழகத்தை விட்டே வெளியேறுவேன் என்றது விஸ்வரூப விவகாரத்தில்தான். அதனால்தான் ஜெயலலிதா மறைவின்போது இரங்கல்கூட தெரிவிக்கவில்லை கமல், பின்னர் பலரின் விமர்சனங்களால்’;சார்ந்தோர்க்கு அனுதாபங்கள்’’ என்று மட்டும் டிவிட்டரில் ஒருவரி போட்டார். அதன் உள்ளார்ந்த அர்த்தம்கூட ஒருவகையில் நக்கல்தான் அதாவது ஜெயலலிதாவின் அல்லகைகளுக்கு அனுதாபங்கள் என்பதே அது. அதற்கு பின்னர்தான் அரசியலில் முழுமூச்சாய் இறங்கினார், அவர் அரசியலில் இறங்கியது அதிமுக ஓட்டுக்களை பிரிக்க ஏதாவது ஒருவகையில் தானும் ஒரு காரணியாக அமையத்தான். சினிமா, பிக்பாஸ் என்ற வியாபாரங்களை கவனித்தபடி அரசியலை சும்மா தொட்டுக்கொள்கிறார், மற்றும்படி தமிழக அரசியலில் ஏதும் புதுமைகளை நிகழ்த்துவது என்பதும் ஆட்சியை கைப்பற்றுவது என்பதும் நடைமுறை சாத்தியமில்லை என்பது இயல்பாகவே அறிவுஜீவியாக இருக்கும் கமலுக்கு எப்போதோ தெரிந்திருக்கும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.