-
கொழும்பில் அரசுக்கு ஆதரவாக, மாபெரும் மக்கள் பேரணி.!!
அவரே தினமும் தன்னோட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார். துணிச்சலாக சில நடவடிக்கைகளை எடுத்தாலும் மறுகணம் சிங்களவர்களிடையே தனெக்கெதிராக ஏதும் எதிர்ப்பு கிளம்பிவிடுமோ என்ற உதறல் அநுரவிற்கு இருந்துகொண்டே இருக்கிறது. எதிர்கட்சிகளில் கொழும்பு கூட்டம், அநுராதபுர கூட்டம்.நாமல் கைது என ஒவ்வொரு நிகழ்விற்கும் அடுத்த ஓரிருநாளிற்குள் ஏதாவது ஒரு பொது நிகழ்வில் தன்னிலை விளக்கம் அளிக்கிறார். துணிச்சலாக சில நடவடிக்கைகளை எடுத்தாலும் எங்கே இனவாத கட்சிகள் தமக்கு எதிராக சிங்களவர்களை திருப்பிவிடுமோ என்ற பயம் அவருக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. அதன் ஒரு அங்கமே கொழும்பு ஊர்வலம். அரசுக்கு ஆதரவாகவும் பிக்குகள் போராட்டத்திற்கு எதிராகவும் கொழும்பில் நடந்த ஊர்வல ஏற்பாட்டிற்கு பின்னால் அரசே இருந்ததாக பேச்சுண்டு, இல்லையென்றால் திடீரென ஆயிரக்கணக்கானோரை திரட்டி தமிழ் சிங்கள பதாதைகள் தாங்கி ஊர்வலம் தலைநகரத்தில் செய்ய முடியாது. நாமல் ,உதயன் கம்மன்பில, பிக்குகள் போன்றோர் இப்போ அனோஜன் பிரச்சனையை கையில் எடுத்து , அனோஜன் விடுதலைக்காக அரசு குரல் கொடுக்க முடியும் என்றால் ஏன் ஞானசார தேரரை விடுதலை செய்ய முடியாது என்று மறைமுக இனவெறியை கையில் எடுக்கின்றனர். அனோஜன் சட்டத்தை ஏமாற்றி ஓடி ஒளிக்கவில்லை, அனோஜன் தான் தவறே செய்யவில்லையென்று நீதிமன்றில் வாதிடவில்லை, அனோஜன் பிடியாணை பிறப்பித்து ஆஜராகமல் நீதிமன்றை அவமதிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அனோஜனுக்கு விதிக்கப்பட்டதுபோல் தேரருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை. இலங்கை அரசு அனோஜனின் மரண தண்டனையை தளர்த்த சொல்லி சவுதியிடம் நேரடி கோரிக்கை வைத்தார்களேயொழிய அனோஜன் குற்றமே செய்யவில்லை அவரை பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யவேண்டுமென்று வாதிடவும் இல்லை. இது அனோஜன் பிரச்சனையை ஞானசார தேரர் பிரச்சனைக்குள் இழுக்கும் பிக்குகள் அரசியல்வாதிகளுக்கும் தெரியும் இருந்தும் அவர்கள் இந்த பிரச்சனையை இழுக்ககாரணம் தமிழனுக்காக அநுர குரல் கொடுக்கிறார் சிங்களத்திற்கும் பெளத்ததிற்கும் எதிராக செயற்படுகிறார் என்று காட்டி பச்சை இனவெறியை சிங்களவர்கள் மத்தியில் ஊட்ட தயாராகிவிட்டார்கள் என்பதே அர்த்தம். துணிச்சலாக சிலநடவடிக்கைகள் எடுத்தாலும் தினமும் கத்திமேல் நடப்பதுபோன்ற நிலையிலேயே அநுர இருக்கிறார், இதில் தமிழருக்கு தீர்வு தருவார் என்பது நடக்கவே நடக்காத ஒன்று. அப்படி ஒருவேளை தர முயற்சித்தால் இன்றைக்கு அநுரவிற்கு ஆதரவாக நிற்கும் பிக்குகளும் சிங்களவர்களும்கூட எதிர்கட்சிகளை ஆளும்கட்சியாக தயாராகிவிடுவார்கள் அதுதான் இலங்கை கள நிலவரம்.
-
மறைந்தார் தேனிசை தென்றல் தேவா
நல்ல இசையமைப்பாளர் அதைவிட நல்ல மனிதன் அஞ்சலிகள் ஐயா
-
இரத்து செய்யப்பட்டது அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை
உங்கள் கோபம் புரிகிறது தமது தரப்பு தவறுகளை ஒப்புக்கொள்ளாது தமிழர்களுக்கு வாழ்வு பிச்சை போட்டது போல் இன்னும் பல தலைமுறைக்கு சொல்லிக்கொண்டிருப்பார்கள் , அதன் தர்மசங்கடம் அங்குள்ளவர்களுக்கே புரியும், இருநதாலும் அனோஜனின் உயிர் எமக்கு முக்கியம். கழுத்து வரை வந்த கத்தியோடு தப்பிவிட்டான் தம்பி, அவன் ஆயுள் இன்னும் பலமாக அமையட்டும்
-
இரத்து செய்யப்பட்டது அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை
அனோஜன் விடுதலைக்காக உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி, பத்திரமாக நாடு திரும்பு ராஜா.
-
இரத்து செய்யப்பட்டது அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை
- மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
சிங்களவர்களின் கனவான தமிழர் போராட்ட சக்தியை அழிக்கவேண்டும், அதை தலைவரை கொல்லவேண்டும், தமிழர்களை முடிந்தவரை அழிக்கவேண்டும் என்ற கனவை நிறைவேற்றிய ஒரு சிங்களவர்களின் காவிய நாயகனும் அவர் குடும்பமும் காலம் காலமாக சிங்கள பெளத்த இலங்கையை ஆண்டிருக்கவேண்டும், அதுதான் நடக்கபோகிறது என்று தமிழர்களும் நினைத்திருந்தனர்.. ஆனால் மஹிந்த குடும்பத்தின் சரிவுகாலம் அடுத்த தேர்தலிலேயே தொடங்கிவிட்டது. இன்று ஏறக்குறைய அஸ்தமனத்தின் வாயிலில் நிற்கிறது, பதவிகள் பறிபோய் , ராச்சியம் பறிபோய், சகோதரர்கள் சிதறி திசைக்கொன்றாய் போய், மனைவி , உள்ளே, மகன் உள்ளே, அடுத்த மகனுக்கும் , கோட்டாவுக்கும் ஆப்பு நெருங்கி கொண்டிருப்பதாக கேள்வி. சிங்களவர்களின் போர் கதாநாயகர்கள் குடும்பமே சூனியம் வைத்ததுபோல் தொடர் சிக்கல்களால் சிதறிபோனது. விதியென்பதிலும், அதீத கற்பனை கதைகளிலும் நம்பிக்கை பெரிதாக இல்லாதிருந்தாலும், இதெல்லாம் எப்படி குறுகிய காலத்திற்குள் நடந்தது என்று நினைக்கும்போது நம்மை மீறிய சக்தி ஒன்று எப்போதும் எம்மை தொடர்ந்துகொண்டே இருக்கும், அது நாம் துன்பத்தில் விழுந்த பின்புதான் எம்மை ஓவர்டேக் செய்யும் என்றொரு எண்ணம் தோன்றுகிறது. முள்ளிவாய்க்கால் முடிவின் சிலகாலத்தின் பின்னர் வெளிநாடு ஒன்றிலிருந்து குடும்பத்துடன் மினி பஸ்ஸில் அந்த ஏரியாவுக்கு மாலை நேரம் போன ஒரு நண்பர், அந்த பகுதியில் பலரின் அலறல் குரல் கேட்பதுபோல் ஒரு உணர்வு ஏற்ப்பட்டு அத்தனை பேரும் பிரார்த்தனை செய்தபடி அங்கிருந்து ஓடி தப்பியதாக சொல்லியிருந்தார். சில விடயங்களில் பேய் பிசாசு நம்பிக்கைகளை மூடநம்பிக்கையென முற்றாக மறுப்பதுண்டு, ஆனாலும் சர்வநாசமாகிவிட்ட மஹிந்த குடும்பத்தின் இன்றைய நிலையை பார்க்கும்போது, ஏன் இப்படி அவர்களுக்கு ஆனது, எதனால் என்று யோசிக்கிறேன், முள்ளிவாய்க்கால் ஆத்மாக்கள் அங்கிருந்து நகர்ந்து மஹிந்த குடும்பத்தை சுற்றி வருவதாகவே ஒரு நம்பிக்கை, என் நம்பிக்கை நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று நானே எனக்காக பிரார்த்திக்கிறேன்.- நவநீதம் பிள்ளை நோபல் அமைதிப் பரிசை வென்றார்
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கிறார்கள், ஆனால் அவர்களால் எந்த நாட்டில் அமைதி நிலை நிறுத்தப்பட்டது என்றோ, அல்லது அவர்களின் குரலுக்கு செவிமடுத்து எந்த வல்ல சக்திகள் நீதியை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிலைநாட்டியிருக்கின்றன என்றோ குறிப்பிடுவதில்லை ஏனென்றால் அப்படியான சம்பவங்கள் பெரிதாக எங்கும் ஏற்பட்டதில்லை. அம்மையார் போன்றவர்களால் அமைதிக்காக குரல் மட்டும் கொடுக்க முடிகிறது ஆனால் அதனை அமுல்படுத்த எந்த திராணியும் அவர்கள் பக்கம் இல்லை, அப்புறம் எதுக்கு விருதுகள்? கதற கதற கொத்து கொத்தாக எம் மக்கள் கொல்லப்பட்டபோது நோபல் பரிசு வழங்கும் இந்த நோர்வேயே எம் பிரச்சனைகளை கையாண்டதில் ஒரு அங்கமாக இருந்தபோதும், அப்படியே சாகவிட்டார்கள் பின்பு அதே கையால் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கிறார்கள் விருதுகளும் பாராட்டுக்களும் வெறும் சட்டை பையில் குத்தும் மெடல்களாக இருந்து என்ன பயன், இந்த உலகின் எங்கோ ஒரு மூலையில் அடித்தால் கேட்க யாருமின்றி அனாதையாய் நிற்கும் இனங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு சுய கெளரவமாய் அவர்களை வாழ வைத்தால் மட்டுமே அந்த விருது பெற்றவர்களுக்கும் விருதுக்கும் மகிமை , இல்லையென்றால் அது சும்மா வீட்டுக்கு எடுத்து செல்லும் கேடயம் மட்டுமே. எப்படியோ சக்தியற்ற நிலையிலும் தன்னால் முடிந்த குரல் கொடுத்த தாய்க்கு வாழ்த்துக்கள்.- பௌத்த துறவிகள், ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான கைதுகள்: தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த அரசு முனைகிறது - சரத் வீரசேகர குற்றச்சாட்டு!
முஸ்லீம்களை பற்றி அவதூறு பேசியதால்தான் ஞானசாரதேரர் கைது செய்யப்பட்டிருக்கிறார், இதற்குள் தமிழர்களும் புலம்பெயர்ந்தவர்களும் ஏன் வருகிறார்கள்? சம்பந்தப்பட்ட முஸ்லீம்கள்பற்றி ஒருவரிகூட பேசாமல் சம்பந்தப்படாத தமிழர்களிடம் நேரே வருகிறார் சரத்வீரசேகர ஒரு சிலருக்கு அகத்தின் அழகு அப்படியே முகத்தில் தெரியும், சரத்வீர சேகர முகம் முழுவதும் தமிழர் தசையை உணவாக கேட்கும் கொடூரம் அப்பட்டமாக இழையோடுகிறது.- ஈழத் தமிழ் பெண் என அடையாளப்படுத்தியதற்காக மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு எதிரான பேரினவாத இணையத் தாக்குதல்களும், ‘ரேட்டிங் பாம்பிங்’ அரசியலும்
புலம்பெயர் தமிழ் இளைய சமூகத்துடன் கல்வி பொருளாதார கலை மற்றும் எந்த விடயத்திலும் எந்த கோணத்திலும் மோதி சிங்களவர்களோ சிங்கள அரசுகளோ எந்த காலமும் வெற்றிபெற முடியாது. வேண்டுமென்றால் புலம்பெயர் இளையோரின் பெற்றோர்களோடு மோதி அவர்களை இலங்கைக்கு வரவிடாமல் தடுக்கலாம், அது மட்டுமே அவர்களால் செய்யகூடியது. ஒரு ஹாலிவூட் பின்னணி கொண்ட திரைப்படத்திற்கெதிரான சிங்களரின் பிரச்சாரங்கள் அந்த படைப்பை தோற்கடிக்க முடியாது , படம் நல்லாயிருந்தால் வெற்றி பெறும் இல்லையென்றால் இல்லை அவ்வளவுதான். மற்றும்படி சிங்களவர்களின் இவ்வகையான முயற்சிகளெல்லாம் வெறும் வயிற்றெரிச்சலாக மட்டுமே பார்க்கப்படுமேயன்றி எக்காலமும் புலம்பெயர் இளையோரின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடைக்கல்லா அமையாது.- சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிப்பு
இடம்பொருள் ஏவல் அறியாமல் இரு சமூகங்களும் தெரிவித்த இணைய கருத்தே அனோஜனை இந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது என்பதும், அதே செயலை அனோஜனின் கழுத்தின்மேலே வாள் தொங்கி கொண்டிருக்கும்போதும் நம்மவர்கள் சிலர் இணைய ஊடகங்களில் தற்போதைய நிலையிலும் தொடர்வது மோசமான செயலின் மறுவடிவமின்றி வேறல்ல. முரண்பாடுகளை கடந்து வந்த சமூகங்கள் தொடர்பான எந்த ஒரு சம்பவங்களிலும் செய்திகளிலும் எதிர் ,ஆதரவு குற்றச்சாட்டு கருத்துக்கள் இருக்கும், இனிமேலும் இருந்து ஆகும். எந்த ஒரு சமூகமும் தன்னை நூறுவீதம் யோக்கியமானதாகவோ அல்லது மற்றைய சமூகத்தை நூறுவீதம் கொடூரமானதாகவோ நிறுவிடமுடியாது, நியாயங்களுக்கும் அநியாங்களுக்கும் பின்னால் பல சரி தவறான காரணங்களும் காரியமும் இருக்கும். ஆனால் அதனை பேசுவதற்கு இடம் பொருள் ஏவல் இருக்கிறது என்ன செய்தியில் எப்போது பேசிக்கொண்டிருக்கிறோம் எனும் மனதின் ஈரம் இருக்கிறது. ரிஷானா பாத்திமா தனது தளத்தில் அனோஜனுடன் இணையமோதலில் ஈடுபட்டவர்கள் ,அவர்பற்றிய தகவல்கள் வழங்கியவர்கள் அனோஜனுக்கு மரண தண்டனை என்றதும் தமது முகநூல் பக்கங்களை மூடிவிட்டு மறைந்துவிட்டனர் என்று சொல்கிறார். நாமும் அதேபோல் மரண வீட்டின் நடுவில் போய் நின்று செத்தவன் எனக்கு என்ன செய்தான் தெரியுமா என்பதுபோல் தர்க்கம் புரிவது, ஒருவரின் வாழ்க்கை முடியும் இடத்தில் வந்து நின்று எம் வாத திறமையை காண்பிப்பது என்பது , ஒருபக்கம் மட்டுமே விசாரணை பண்ணிவிட்டு அனோஜனுக்கு மரண தண்டனை விதித்த சவுதி நீதிமன்றின் செயலைவிட கொடூரமானது.- “டாஸ்மாக்கில் விற்பது என்ன புனிதத் தீர்த்தமா? - கள்ளுக்கான தடையை தவெக அரசு நீக்க மறுப்பது கொடுஞ்செயல்” - சீமான் காட்டம்
பூரண மதுவிலக்கை சீமான் ஆட்சிக்கு வந்தால்கூட கொண்டுவரமாட்டார். ஏற்கனவே பல லட்சம் கோடிகடனில் தவிக்கும் தமிழக அரசுகளுக்கு அரச வருமானம் தரும் மிக பெரும் துறை டாஸ்மாக் இந்த வருடம் டாஸ்மாக் வருமானம் 51 ஆயிரம் கோடி என்கிறார்கள், ஒவ்வொரு வருடமும் டாஸ்மாக்கினால் வரும் அரச வருமானம் பல ஆயிரம்கோடி அதிகரித்துக்கொண்டே போகிறது. கள்ளினால் அவ்வளவு வருமானமோ வரிகளோ கிடைப்பதற்கு வாய்ப்பேயில்லை அதனால் அதனை கண்டுக்காமல் வ்டுகிறார்கள், அத்துடன் கள்ளிறக்குதலை தாராளமாக அனுமதித்தால் கண்டிப்பாக டாஸ்மாக் வருமானத்தில் கணிசமான வருமான இழைப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. கள்ளு தடைக்கு தமிழக அரசு தெரிவிக்கும் பிரதான காரணம் கள்ளில் கலப்படம் செய்ய வாய்ப்புண்டு அதனால் பலர் உடல்நலம் கெடும் என்பதுதான். ஆனால் டாஸ்மாக் பிறண்டி, விஸ்கி, பியர்களுக்குள், பல்லி பூச்சி , அட்டை,கரப்பான் எல்லாம் கிடந்தது ஏற்கனவே செய்திகளில் வந்திருக்கிறது. அது கலப்படம் செய்ய வாய்ப்புள்ளதால் ஆரோக்கியம் இல்லையாம், இது பல்லி பாம்பு கிடந்தாலும் ஆரோக்கியமாம். எல்லாம் காசு துட்டு மணி... தனிநபரோ அரசுகளோ வருமானத்தை பொறுத்து தமது தவறுகளை நியாயப்படுத்துவார்கள். அது உலக வழக்கம்.- விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
ரணில் சொன்னது அத்தனையும் உண்மைதான், சிலதை சொல்லவும் மறந்துவிட்டார், கொக்கட்டிசோலையில் கருணாவை போட்டு தள்ள ஆழ ஊடுருவும் அணியை அனுப்பியதும் அவரே பின்னர் அவர்களை பின் வாங்க சொன்னதும் அவரே, யுத்த நிறுத்த காலத்தில் ரகசிய ரகசியமாக ஓரிரு லட்சம்பேரை படையில் இணைத்ததும் ,பெரும்தொகை ஆயுதங்களை கொழும்பு துறைமுகமூடாக இறக்கி குவித்ததும் , சர்வதேசரீதியாக புலிகளுக்கெதிரான வலைபின்னல் அமைப்பை ஏற்படுத்தியதும், பேச்சுவார்த்தை மேடைக்கு சர்வதேசத்தின் முன்னர் புலிகளை இழுத்து சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதித்து புலிகள் சர்வதேச முறுகலை ஏற்படுத்தி , இறுதியில் போர் என்று வந்தால் பெரும் எடுப்பில் தமிழர் தரப்பிற்கு பேரழிவை ஏற்படுத்த தயார் படுத்தலில் இருந்தார், பின்பு ஆட்சி மாற ரணில் கஷ்டப்பட்டு சமைச்சதை மகிந்த சாப்பிட்டுவிட்டு தானே சமையல்காரன் என்று பேர் எடுத்தார். இதில் பரிதாபம் இன்றுவரை நம்மில் சிலர் ரணிலோடு ஒத்துபோயிருக்கலாம், ரணிலுக்கு வாக்கு போடவிடாமல் தடுத்ததினால்தான் மஹிந்த ஆட்சிக்கு வந்து புலிகளை அழித்தார் என்று வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நூலகத்தை எரித்தது காமினி திசநாயக்க என்றே காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தது.- இணைய தளங்களை மிரட்டும் முத்துமணி 🎹🎸🎺📯🎼📻
மிக நீண்டநாட்களின் பின்னர் இசை ரசிகர்களினாலும் இணையவாசிகள் ஊடகங்களினாலும் கொண்டாடி தீர்க்கப்படும் இளையராஜாவின் பாடல்களாக முத்துமணி, கல்யாணவிருந்து பாடல்கள் அமைந்திருக்கின்றன. பெரும்பான்மையானோர் கருத்துக்கள் அனிருத் இசையை கேட்டு புளித்துபோன காதுகளுக்கு இது விருந்து எங்கிறார்கள். மிக நீண்டநாட்களின் பின்னர் இசைவடிவம் வேறாகி இந்த பாடல்கள் இனிப்பதற்கு இயக்குனரின் பாடல் எப்படி இருக்கவேண்டுமென்று கேட்டு வேலை வாங்கும் திறனும் இருக்கலாம், அதற்கு கார்த்திக் சுப்புராஜின் பங்கும் இருக்க வாய்ப்புண்டு. பொதுவாக மணிரத்னம் அந்த காலத்திலேயே பகல்நிலவு இதயகோவிலுக்கு அப்புறம் அவர் படங்களில் ஏஆர் ரஹ்மான் ஸ்டைல்லயே இளையராஜாவிடம் பாடல்களை வாங்கியிருப்பார். உதாரணங்களாக நாயகனில் தென்பாண்டி சீமையிலே, நிலா அது,அக்னிநட்சத்திரத்தில் வரும் நின்னுகோரி வர்ணம், இதயத்தை திருடாதேயில் விடிய விடிய நடனம்...காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்,மெளன ராகத்தில் ஓஹோஹோ மேகம் வந்ததோ, பனிவிழும் இரவு சத்திரியனில் வரும் மாலையில் யாரோ...அஞ்சலியில் வரும், அஞ்சலி அஞ்சலி, தளபதியில் வரும் ஜமுனை ஆற்றிலே, சுந்தரி கண்ணால், சின்ன தாயவள், ராக்கம்மா... போன்ற மணிரத்னம் பட பாடல்கள் ஏனைய இயக்குனர்களின் பாடல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ரஹ்மான் வருகையின் பின்னர் முற்றிலுமே இசைவடிவம் மாறிவிட்ட இன்றைய ஒரு சில ரசிக்ககூடிய பாடல்கள் தரத்தில் அன்றே இருந்திருக்கும். அதனை அன்றே இசையில் எது வேண்டுமென்றாலும் செய்யகூடிய வல்லவராக இருந்தார் இளையராஜா என்பதுதான் பிரமிப்பு. குறைபாடு என்று சொல்லபோனால் நிச்சயம் விடுதலைபடத்தில் வரும் வழிநெடுக காட்டுமல்லி, முத்துமணி போன்ற பாடல்களை தான் பாடாமல் தனது குரல் சாயல் கொண்ட லிடியனின் தந்தையை பாட வைத்திருக்கலாம் என்பது அபிப்பிராயம். அப்படி பாட வைத்திருந்தால் அந்த பாடல்கள் இன்னும் ஒருபடி மேலே போயிருக்கும் என்பது அபிப்பிராயம் அதற்கு இளையராஜாவின் ஆணவம் இடம் கொடுக்காது என்பது வேறு விடயம். https://www.youtube.com/watch?v=G1EHcHnNml8 இளையராஜாவே ஜேசுதாஸ் வயசானபின்னர் பாடலின் தரம் கருதி அவரை பாட வைக்காமல் அவர் குரல் சாயல் கொண்ட மதுபாலகிருஷ்ணனை பாட வைத்திருக்கிறார். மற்றும்படி கல்யாணவிருந்து, முத்துமணி பாடல்களை இளசுகள் முதல் பழசுகள்வரை இன்றைய தேதியில் கொண்டாடி தீர்க்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. 83 வயசில் பல மனிதர்கள் எழுந்து நடப்பதே அபூர்வம், இத்தனை தசாப்தங்களின் பின்னர் இன்றும் இளைஞர்களுக்கு போட்டியாக களத்தில் நிற்பதன்மூலம் இளையராஜா சந்தேகத்திற்கு இடமில்லாமல் இசை பிரம்மாதான். ஏறக்குறைய இந்த வயசில் சினிமா இசையமைப்பாளராக களத்தில் நிற்பது முன்பும் எவருக்கும் தமிழ் சினிமாவில் சாத்தியமானதில்லை என்று நினைக்கிறேன், இனியும் எவருக்குமே சாத்தியப்படாத ஒன்றும்கூட .- சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிப்பு
அனோஜனுக்காக குரல் கொடுக்கும் சக்தி வாய்ந்த அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வெறும் ஊடக அறிக்கைகளில் கவனம் செலுத்தாது நேரடியாக கட்சி பேதங்கள் அரசியல் மோதல்களை தற்காலிகமாகவாவது மறந்துவிட்டு இலங்கை அரச உயர்மட்டங்களை சந்திப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன், அறிக்கைகளும் கருத்துக்களும் வெறும் கால இழுத்தடிப்புக்கே வழி வகுக்கும். கால இழுத்தடிப்பு அனோஜனை காவு கொடுக்கும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டுவிடும். சவுதி சட்டப்படி சில குற்றங்களுக்கு பிற மதத்தவர்கள் செய்தால் தண்டனை குறைப்பு சலுகைகள் என்றிருக்க வாய்ப்புள்ளதாகவும், அதையே ஒரு முஸ்லீம் செய்தால் எந்த மன்னிப்பும் கிடையாது என்பதே உலா வரும் செய்தி.- இறப்பில்லா உயிரினங்கள்.
மனிதன் தொடக்கம் விலங்குகள், பிராணிகள், ஊர்வன, பறப்பன கடல்வாழ் உயிரினங்கள்வரை அதன் ஆயுட் காலத்தை குறிப்பிட்டிருக்கிறார்கள், இதில் பல உயிரினங்கள் பற்றிய உயிர்வாழ் கால தகவல்கள் விடுபட்டும் இருக்கின்றன. 5 நிமிடம் வாழ்நாளை கொண்டதிலிருந்து இதில் 15 ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழும் உயிரினம்வரையும், உயிரணுக்களை தாமே புதுப்பித்துக்கொள்வதால் எக்காலமும் உயிர் துறக்காத ஜீவராசிகள் பற்றியும் தகவல் தந்துள்ளார்கள். சரியும் தவறும் தகவல் தரவேற்றியவருக்கே உரித்தாகும். - மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் – நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.