Everything posted by valavan
-
ஈழத் தமிழ் பெண் என அடையாளப்படுத்தியதற்காக மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு எதிரான பேரினவாத இணையத் தாக்குதல்களும், ‘ரேட்டிங் பாம்பிங்’ அரசியலும்
புலம்பெயர் தமிழ் இளைய சமூகத்துடன் கல்வி பொருளாதார கலை மற்றும் எந்த விடயத்திலும் எந்த கோணத்திலும் மோதி சிங்களவர்களோ சிங்கள அரசுகளோ எந்த காலமும் வெற்றிபெற முடியாது. வேண்டுமென்றால் புலம்பெயர் இளையோரின் பெற்றோர்களோடு மோதி அவர்களை இலங்கைக்கு வரவிடாமல் தடுக்கலாம், அது மட்டுமே அவர்களால் செய்யகூடியது. ஒரு ஹாலிவூட் பின்னணி கொண்ட திரைப்படத்திற்கெதிரான சிங்களரின் பிரச்சாரங்கள் அந்த படைப்பை தோற்கடிக்க முடியாது , படம் நல்லாயிருந்தால் வெற்றி பெறும் இல்லையென்றால் இல்லை அவ்வளவுதான். மற்றும்படி சிங்களவர்களின் இவ்வகையான முயற்சிகளெல்லாம் வெறும் வயிற்றெரிச்சலாக மட்டுமே பார்க்கப்படுமேயன்றி எக்காலமும் புலம்பெயர் இளையோரின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடைக்கல்லா அமையாது.
-
சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிப்பு
இடம்பொருள் ஏவல் அறியாமல் இரு சமூகங்களும் தெரிவித்த இணைய கருத்தே அனோஜனை இந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது என்பதும், அதே செயலை அனோஜனின் கழுத்தின்மேலே வாள் தொங்கி கொண்டிருக்கும்போதும் நம்மவர்கள் சிலர் இணைய ஊடகங்களில் தற்போதைய நிலையிலும் தொடர்வது மோசமான செயலின் மறுவடிவமின்றி வேறல்ல. முரண்பாடுகளை கடந்து வந்த சமூகங்கள் தொடர்பான எந்த ஒரு சம்பவங்களிலும் செய்திகளிலும் எதிர் ,ஆதரவு குற்றச்சாட்டு கருத்துக்கள் இருக்கும், இனிமேலும் இருந்து ஆகும். எந்த ஒரு சமூகமும் தன்னை நூறுவீதம் யோக்கியமானதாகவோ அல்லது மற்றைய சமூகத்தை நூறுவீதம் கொடூரமானதாகவோ நிறுவிடமுடியாது, நியாயங்களுக்கும் அநியாங்களுக்கும் பின்னால் பல சரி தவறான காரணங்களும் காரியமும் இருக்கும். ஆனால் அதனை பேசுவதற்கு இடம் பொருள் ஏவல் இருக்கிறது என்ன செய்தியில் எப்போது பேசிக்கொண்டிருக்கிறோம் எனும் மனதின் ஈரம் இருக்கிறது. ரிஷானா பாத்திமா தனது தளத்தில் அனோஜனுடன் இணையமோதலில் ஈடுபட்டவர்கள் ,அவர்பற்றிய தகவல்கள் வழங்கியவர்கள் அனோஜனுக்கு மரண தண்டனை என்றதும் தமது முகநூல் பக்கங்களை மூடிவிட்டு மறைந்துவிட்டனர் என்று சொல்கிறார். நாமும் அதேபோல் மரண வீட்டின் நடுவில் போய் நின்று செத்தவன் எனக்கு என்ன செய்தான் தெரியுமா என்பதுபோல் தர்க்கம் புரிவது, ஒருவரின் வாழ்க்கை முடியும் இடத்தில் வந்து நின்று எம் வாத திறமையை காண்பிப்பது என்பது , ஒருபக்கம் மட்டுமே விசாரணை பண்ணிவிட்டு அனோஜனுக்கு மரண தண்டனை விதித்த சவுதி நீதிமன்றின் செயலைவிட கொடூரமானது.
-
“டாஸ்மாக்கில் விற்பது என்ன புனிதத் தீர்த்தமா? - கள்ளுக்கான தடையை தவெக அரசு நீக்க மறுப்பது கொடுஞ்செயல்” - சீமான் காட்டம்
பூரண மதுவிலக்கை சீமான் ஆட்சிக்கு வந்தால்கூட கொண்டுவரமாட்டார். ஏற்கனவே பல லட்சம் கோடிகடனில் தவிக்கும் தமிழக அரசுகளுக்கு அரச வருமானம் தரும் மிக பெரும் துறை டாஸ்மாக் இந்த வருடம் டாஸ்மாக் வருமானம் 51 ஆயிரம் கோடி என்கிறார்கள், ஒவ்வொரு வருடமும் டாஸ்மாக்கினால் வரும் அரச வருமானம் பல ஆயிரம்கோடி அதிகரித்துக்கொண்டே போகிறது. கள்ளினால் அவ்வளவு வருமானமோ வரிகளோ கிடைப்பதற்கு வாய்ப்பேயில்லை அதனால் அதனை கண்டுக்காமல் வ்டுகிறார்கள், அத்துடன் கள்ளிறக்குதலை தாராளமாக அனுமதித்தால் கண்டிப்பாக டாஸ்மாக் வருமானத்தில் கணிசமான வருமான இழைப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. கள்ளு தடைக்கு தமிழக அரசு தெரிவிக்கும் பிரதான காரணம் கள்ளில் கலப்படம் செய்ய வாய்ப்புண்டு அதனால் பலர் உடல்நலம் கெடும் என்பதுதான். ஆனால் டாஸ்மாக் பிறண்டி, விஸ்கி, பியர்களுக்குள், பல்லி பூச்சி , அட்டை,கரப்பான் எல்லாம் கிடந்தது ஏற்கனவே செய்திகளில் வந்திருக்கிறது. அது கலப்படம் செய்ய வாய்ப்புள்ளதால் ஆரோக்கியம் இல்லையாம், இது பல்லி பாம்பு கிடந்தாலும் ஆரோக்கியமாம். எல்லாம் காசு துட்டு மணி... தனிநபரோ அரசுகளோ வருமானத்தை பொறுத்து தமது தவறுகளை நியாயப்படுத்துவார்கள். அது உலக வழக்கம்.
-
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
ரணில் சொன்னது அத்தனையும் உண்மைதான், சிலதை சொல்லவும் மறந்துவிட்டார், கொக்கட்டிசோலையில் கருணாவை போட்டு தள்ள ஆழ ஊடுருவும் அணியை அனுப்பியதும் அவரே பின்னர் அவர்களை பின் வாங்க சொன்னதும் அவரே, யுத்த நிறுத்த காலத்தில் ரகசிய ரகசியமாக ஓரிரு லட்சம்பேரை படையில் இணைத்ததும் ,பெரும்தொகை ஆயுதங்களை கொழும்பு துறைமுகமூடாக இறக்கி குவித்ததும் , சர்வதேசரீதியாக புலிகளுக்கெதிரான வலைபின்னல் அமைப்பை ஏற்படுத்தியதும், பேச்சுவார்த்தை மேடைக்கு சர்வதேசத்தின் முன்னர் புலிகளை இழுத்து சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதித்து புலிகள் சர்வதேச முறுகலை ஏற்படுத்தி , இறுதியில் போர் என்று வந்தால் பெரும் எடுப்பில் தமிழர் தரப்பிற்கு பேரழிவை ஏற்படுத்த தயார் படுத்தலில் இருந்தார், பின்பு ஆட்சி மாற ரணில் கஷ்டப்பட்டு சமைச்சதை மகிந்த சாப்பிட்டுவிட்டு தானே சமையல்காரன் என்று பேர் எடுத்தார். இதில் பரிதாபம் இன்றுவரை நம்மில் சிலர் ரணிலோடு ஒத்துபோயிருக்கலாம், ரணிலுக்கு வாக்கு போடவிடாமல் தடுத்ததினால்தான் மஹிந்த ஆட்சிக்கு வந்து புலிகளை அழித்தார் என்று வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நூலகத்தை எரித்தது காமினி திசநாயக்க என்றே காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தது.
-
இணைய தளங்களை மிரட்டும் முத்துமணி 🎹🎸🎺📯🎼📻
மிக நீண்டநாட்களின் பின்னர் இசை ரசிகர்களினாலும் இணையவாசிகள் ஊடகங்களினாலும் கொண்டாடி தீர்க்கப்படும் இளையராஜாவின் பாடல்களாக முத்துமணி, கல்யாணவிருந்து பாடல்கள் அமைந்திருக்கின்றன. பெரும்பான்மையானோர் கருத்துக்கள் அனிருத் இசையை கேட்டு புளித்துபோன காதுகளுக்கு இது விருந்து எங்கிறார்கள். மிக நீண்டநாட்களின் பின்னர் இசைவடிவம் வேறாகி இந்த பாடல்கள் இனிப்பதற்கு இயக்குனரின் பாடல் எப்படி இருக்கவேண்டுமென்று கேட்டு வேலை வாங்கும் திறனும் இருக்கலாம், அதற்கு கார்த்திக் சுப்புராஜின் பங்கும் இருக்க வாய்ப்புண்டு. பொதுவாக மணிரத்னம் அந்த காலத்திலேயே பகல்நிலவு இதயகோவிலுக்கு அப்புறம் அவர் படங்களில் ஏஆர் ரஹ்மான் ஸ்டைல்லயே இளையராஜாவிடம் பாடல்களை வாங்கியிருப்பார். உதாரணங்களாக நாயகனில் தென்பாண்டி சீமையிலே, நிலா அது,அக்னிநட்சத்திரத்தில் வரும் நின்னுகோரி வர்ணம், இதயத்தை திருடாதேயில் விடிய விடிய நடனம்...காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்,மெளன ராகத்தில் ஓஹோஹோ மேகம் வந்ததோ, பனிவிழும் இரவு சத்திரியனில் வரும் மாலையில் யாரோ...அஞ்சலியில் வரும், அஞ்சலி அஞ்சலி, தளபதியில் வரும் ஜமுனை ஆற்றிலே, சுந்தரி கண்ணால், சின்ன தாயவள், ராக்கம்மா... போன்ற மணிரத்னம் பட பாடல்கள் ஏனைய இயக்குனர்களின் பாடல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ரஹ்மான் வருகையின் பின்னர் முற்றிலுமே இசைவடிவம் மாறிவிட்ட இன்றைய ஒரு சில ரசிக்ககூடிய பாடல்கள் தரத்தில் அன்றே இருந்திருக்கும். அதனை அன்றே இசையில் எது வேண்டுமென்றாலும் செய்யகூடிய வல்லவராக இருந்தார் இளையராஜா என்பதுதான் பிரமிப்பு. குறைபாடு என்று சொல்லபோனால் நிச்சயம் விடுதலைபடத்தில் வரும் வழிநெடுக காட்டுமல்லி, முத்துமணி போன்ற பாடல்களை தான் பாடாமல் தனது குரல் சாயல் கொண்ட லிடியனின் தந்தையை பாட வைத்திருக்கலாம் என்பது அபிப்பிராயம். அப்படி பாட வைத்திருந்தால் அந்த பாடல்கள் இன்னும் ஒருபடி மேலே போயிருக்கும் என்பது அபிப்பிராயம் அதற்கு இளையராஜாவின் ஆணவம் இடம் கொடுக்காது என்பது வேறு விடயம். https://www.youtube.com/watch?v=G1EHcHnNml8 இளையராஜாவே ஜேசுதாஸ் வயசானபின்னர் பாடலின் தரம் கருதி அவரை பாட வைக்காமல் அவர் குரல் சாயல் கொண்ட மதுபாலகிருஷ்ணனை பாட வைத்திருக்கிறார். மற்றும்படி கல்யாணவிருந்து, முத்துமணி பாடல்களை இளசுகள் முதல் பழசுகள்வரை இன்றைய தேதியில் கொண்டாடி தீர்க்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. 83 வயசில் பல மனிதர்கள் எழுந்து நடப்பதே அபூர்வம், இத்தனை தசாப்தங்களின் பின்னர் இன்றும் இளைஞர்களுக்கு போட்டியாக களத்தில் நிற்பதன்மூலம் இளையராஜா சந்தேகத்திற்கு இடமில்லாமல் இசை பிரம்மாதான். ஏறக்குறைய இந்த வயசில் சினிமா இசையமைப்பாளராக களத்தில் நிற்பது முன்பும் எவருக்கும் தமிழ் சினிமாவில் சாத்தியமானதில்லை என்று நினைக்கிறேன், இனியும் எவருக்குமே சாத்தியப்படாத ஒன்றும்கூட .
-
சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிப்பு
அனோஜனுக்காக குரல் கொடுக்கும் சக்தி வாய்ந்த அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வெறும் ஊடக அறிக்கைகளில் கவனம் செலுத்தாது நேரடியாக கட்சி பேதங்கள் அரசியல் மோதல்களை தற்காலிகமாகவாவது மறந்துவிட்டு இலங்கை அரச உயர்மட்டங்களை சந்திப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன், அறிக்கைகளும் கருத்துக்களும் வெறும் கால இழுத்தடிப்புக்கே வழி வகுக்கும். கால இழுத்தடிப்பு அனோஜனை காவு கொடுக்கும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டுவிடும். சவுதி சட்டப்படி சில குற்றங்களுக்கு பிற மதத்தவர்கள் செய்தால் தண்டனை குறைப்பு சலுகைகள் என்றிருக்க வாய்ப்புள்ளதாகவும், அதையே ஒரு முஸ்லீம் செய்தால் எந்த மன்னிப்பும் கிடையாது என்பதே உலா வரும் செய்தி.
-
இறப்பில்லா உயிரினங்கள்.
மனிதன் தொடக்கம் விலங்குகள், பிராணிகள், ஊர்வன, பறப்பன கடல்வாழ் உயிரினங்கள்வரை அதன் ஆயுட் காலத்தை குறிப்பிட்டிருக்கிறார்கள், இதில் பல உயிரினங்கள் பற்றிய உயிர்வாழ் கால தகவல்கள் விடுபட்டும் இருக்கின்றன. 5 நிமிடம் வாழ்நாளை கொண்டதிலிருந்து இதில் 15 ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழும் உயிரினம்வரையும், உயிரணுக்களை தாமே புதுப்பித்துக்கொள்வதால் எக்காலமும் உயிர் துறக்காத ஜீவராசிகள் பற்றியும் தகவல் தந்துள்ளார்கள். சரியும் தவறும் தகவல் தரவேற்றியவருக்கே உரித்தாகும்.
-
வீதிகளில் வசிக்கும் நாய்களால் 30% வீதி விபத்துகள்: மனிதர்களின் பொறுப்பற்ற தனமே காரணம் என எச்சரிக்கை
நாய்க்கடி மருந்துக்காக வருடம் நூறுகோடி ரூபாய் செலவிடுவதென்பது இலங்கை இப்போது இருக்கும் பொருளாதார நிலையில் மிக பெரும் தண்ட செலவு, இந்த காசை வருடா வருடம் ஒவ்வொரு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பாவிச்சால் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் கொஞ்சமாவது மேலே வரலாம். . தெருநாய் விரட்டி குப்புற விழுந்தால் நாம் விழுந்த பிறகுதான் நாய் ஓடிபோகும், அதனால் முதலில் காயம் வருவது முழங்கால் முழங்கையில்தான், அதன் காயங்கள் கை கால்களை மடிக்க மடிக்க வெடிச்சுக்கொண்டே போகும் புண் மாறாது, கொஞ்சம் கவனக்குறைவென்றால் குழந்தைகளை ஒரே கடியில் கொன்றே போட்டுவிடும். ஜீவகாருண்யம் பார்ப்பவர்கள் அதனை கொல்லாது தெருநாய்களுக்கு தொடர் கருத்தடை செய்து வந்தால் பதினைந்து வருடத்திற்குள் முற்றாகவே கட்டுக்குள் வந்துவிடும். விசர்நாய்கடியினால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவிய குழந்தைகள் பெரியவர்களின் வீடியோக்கள் யூடியூப் எங்கும் பரவி கிடக்கிறது, அதனை பார்க்கவும் இணைக்கவும் மனதில் தனியாக உறுதிவேண்டும், ஒரு விழிப்புணர்வுக்காக இணைத்தே ஆகவேண்டிய கட்டாயம், பார்த்த பின்னர் தெருநாய்களுக்காக மஹிந்த தெருநாய்போல் எந்த மனிதனும் கவலைப்படமாட்டான். கீழே உள்ள குழந்தைகள் இரண்டும் இப்போ உயிருடன் இல்லை. இணைப்பு தவறென்றால் நிர்வாகம் நீக்கிவிடலாம்.
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
சிங்களவரும் தமிழரும் வேலை செய்யும் இடத்தில் சிங்களவருக்கு முதுகு குனியும் தமிழர் ஒருவர் தனியாக அவங்களுக்கு சொல்லியிருக்கிறார் எனக்கு தமிழ் ஆக்களை பிடிக்காது சிங்களவரைதான் பிடிக்கும் என்று, அவர் நினைச்சு சொன்னது இனிமே சிங்களவர் மனசில் அசையாத இடம் தனக்கு கிடைக்கும் என்று. அதை நமட்டு சிரிப்புடன் கடந்த சிங்களவன் ஒருவன் சிங்களவர்களுன் பேசிக்கொண்டான் இவன் விஷபாம்பை விட கேவலமானவன் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் , ஏனென்றால் தனது இனத்துக்கே விசுவாசமில்லாத ஒருவன் எப்படி நமது இனத்துக்கு விசுவாசமா இருப்பான் என்று. சிங்கள எஜமான விசுவாசம் காட்டியவர்களை சிங்களம் எங்கே வைத்தது என்பதற்கு ஆதிகாலத்திற்கு போக தேவையில்லை, கண்முன்னே வாழும் கழிசறை ஓவியங்களான கருணா பிள்ளையான் ஆனந்த சங்கரி, டக்ளஸ் போன்றோர் சாட்சி. சீந்த ஒரு சிங்களவன் இல்லாமல் திசைக்கொன்றாய் ஓய்ந்துபோய் கிடக்கிறார்கள். நாமலின் அப்பன், சித்தப்பன் பெரியப்பன், சிங்களவர்களாலேயே நாமலை ஜனாதிபதியாக்க முடியவில்லை, அர்ச்சுனாவினால் எப்படி முடியும் என்று யாராவது சிங்களவர்கள் இவரை கேக்க மாட்டார்களா? அர்ச்சுனாவின் பிசு பிசுத்த பேச்சிற்கு, பிசு என்று இவரை சொல்லிவிடமாட்டார்களா? மஹிந்தவை மனசில் இடம் பிடிக்க, அனுர கோஷ்டியை ஆட்சியில் இருந்து அகற்ற அர்ச்சுனா தமிழர்களால் பெற்ற அங்கீகாரத்தை பயன்படுத்துகிறார், சாவகச்சேரி மண் தந்த அங்கீகாரம் அர்ச்சுனாவை சிங்கள சபையேற வைத்திருக்கிறது , என்னமோ இவர் சொன்னால் ஒட்டுமொத்த தமிழர்களுமே மஹிந்தவிற்கு ஆதரவாக நிற்பார்கள் என்ற மாயயை சிங்களவர்களிற்கு உருவாக்க பார்க்கிறார். உலகிலேயே கட்சி ஆரம்பித்த உடனேயே பாராளுமன்றம் சென்றவர்கள் வரிசையில் அர்சுனாவிற்கும் இடமுண்டு, அதற்கு காரணம் சாவகச்சேரி ஆஸ்பத்திரி விவகாரத்தில் நேர்மையாளன்போல் இவர் முழங்கியதும், தமிழீழ லட்சியத்திற்காக உருகி ஆவியாய்போன தலைவர் போராளிகள் பெயரை விசுவாசமாய் அர்ச்சுனா உச்சரித்ததும்தான் மக்கள் இவரை தேர்ந்தெடுக்க காரணம், இன்று அதே தலைவர் போராளிகள் பெயரை உச்சரித்ததால் பெற்ற அங்கீகாரத்தை , அவர்கள் நாமம் உச்சரித்ததால் பெற்ற வெற்றியை, அவர்களை அழித்த சிங்களவன் முன்னாடி அவர்கள் மனசில் சுமந்த தமிழீழமே சாகும்வரை வேண்டாம் என்று சொல்ல பயன்படுத்துகிறார். எந்த தொகுதியில் வென்று அங்குபோய் என்பிபி அரசாங்கத்தை அகற்றபோறேன் நாமலை ஜனாதிபதி சீட்டில் இருத்தபோறேன் என்று முழங்குகிறாரோ , அடுத்த தேர்தலில் அர்ச்சுனா தனது அதே தொகுதியை என்பிபி கட்சியிடமே இழப்பார். இதை எழுதியும் வைத்துக்கொள்ளலாம் எழுதாமலும் வைத்துக்கொள்ளலாம். இது என்பிபி அரசிற்கு ஆதரவான கருத்தல்ல அங்குள்ள தற்கால தமிழர் அரசியல் கள நிலமை . நம்பிய தமிழ் அரசியல் தலைமை எவனுமே தமிழருக்கு விசுவாசமாய் இல்லையென்றால் அவர்கள் வேறு எதைதான் செய்வார்கள்? மற்றும்படி இன்று இருக்கும் அனுரவோ மஹிந்தவோ சஜித்தோ ...அல்லது, நாம் இறந்த பின்னர் வரும் ஏதாவது ஒரு சிங்கள தலைமையோ ... ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு அர்ச்சுனாபோல் நல்லா சூவை கொடுத்து நீங்கள் முதுகில் அடியுங்கோ எண்டு சிங்கள விசுவாசம் காண்பித்தாலும், சிங்களவன்.எந்த காலமும் தமிழனை சொந்தகாலில் இயங்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டான் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை எப்போதும் உண்டு.
-
இந்தியாவுக்கும் புலம்பெயர் அமைப்புகளுக்கும் நாட்டை கைப்பற்றும் சூழ்ச்சி உள்ளது -பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றச்சாட்டு
புலம்பெயர் அமைப்புக்களீனால் உங்கள் நாட்டை ஒருபோதும் கைப்பற்ற முடியாது, இன்னும் சொல்லபோனால், இன்னும் ஓரிரு தசாப்தங்களில் புலம்பெயர் தேசத்தில் இன்றுள்ள பழையன கழியவும், புதியன புகவும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் தாயகத்திற்குமான ஒன்றிணைந்து மண்மீட்பு சம்பந்தமான உணர்வோ, அல்லது சமூக பொருளாதார ரீதியான உதவிகளோ அறவே இல்லாது போகும். 95% புதிய தலைமுறை புலம்பெயர் இளசுகள் தாயக பிரச்சனையை தலையில் எடுப்பது ஒரு தேவையற்ற சுமையென்றே கருதும். அதுகள் பாட்டுக்கு டொச்சும் பிரெஞ்சும் ஆங்கிலமும், டச்சும் பேசிக்கிட்டு கையோடு கை கோர்த்தபடி அலைந்து இளமையை அனுபவிக்கும். அப்புறம் இந்தியாவிற்கு இலங்கையை கைப்பற்ற சூழ்ச்சியுள்ளதா? பிக்கு இன்றுவரை கோமாவில்தான் இருக்கிறார். இலங்கை என்பது அன்றும் இன்றும் என்றும் ஹிந்திய மத்திய அரசின் மறைமுக ஆளுமைக்குட்பட்ட ஒரு இந்திய மாநிலம்தான். இனிமே கைப்பற்ற என்ன இருக்கு? பிக்குகளா இருந்தாலும் சரி, சிங்கள அரசுகளா இருந்தாலும் சரி இந்தியாவின் விருப்பு வெறுப்பில்லாமல் சர்வதேச அளவில் ஒரு துரும்பைகூட இலங்கையினுள் நீங்கள் நகர்த்த முடியாது அது எழுதப்படாத இந்திய மத்திய அரசு சட்டம். இன்றைய ஆட்சியில் உள்ள கட்சி இந்திய எதிர்ப்புக்காகவே பல ஆயிரம்பேரை ஒருகால கட்டத்தில் கொன்று குவித்தது, ஆனாலும் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவின் காலடியில்தான். வேற வழி? பிக்குகளூம், சிங்களவரும் இலங்கையில் தமிழர் இரண்டு பரப்பைகூட சொந்தமாய் ஆள முடியாது என்று அரசியல் செய்யபோய் ஒட்டுமொத்த இலங்கை நிலப்பரப்பையும் இந்தியாவிடம் பறிகொடுத்ததுதான் பிக்குகளின் வரலாற்று சோகம்.
-
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”
இதற்கான பதில் செய்தியிலேயே உள்ளது. களுத்துறை தெற்குப் பகுதியைச் சேர்ந்த 36 வயதான சந்தேகநபர், கொலை, கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்தார். அவர் ஏற்கனவே புரிந்த பல உள்நாட்டு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர், சர்வதேச காவல்துறையால் தேடப்படகூடிய நபர், கொழும்பு அவிசாவளை நீதிமன்றங்களென பிடியாணை பிறப்பிக்கப்பட்டு அதில் ஆஜராக தவறிய நபர், செய்தி முழுவதுமே குற்றங்களுக்குமேல் குற்றம் புரிந்திருக்கிறார்,தேடப்பட்டிருக்கிறார், அது சம்பந்தமாக நீதிமன்ற அவமதிப்பு செய்திருக்கிறார் என்று இருக்கிறது, இதில் இனிமே விசாரணைக்கு என்ன இருக்கு ஒன்லி தீர்ப்புத்தான். அதனால்தான் அவரை வெட்டவெளிச்சமாக அழைத்து வந்திருக்கிறார்கள். அதுபோல்தான் செவ்வந்திக்கும் , அவர்தான் துப்பாக்கியை உள்ளே கொண்டுவந்தார் கொலைகாரனுடன் கூட வந்தார் என்ற வீடியோ ஆதாரமே இருந்தது, இவரா குற்றவாளியென்று நீதிமன்றம் விசாரணை செய்ய இனி எதுவுமே இல்லை அதனால்தான் முகத்தை மூடாமல் அழைத்து வந்தார்கள்.
-
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”
தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தகவல்கள் பெறவேண்டியவர்களுக்கு முகத்தை மூடியும், சந்தேகத்திற்கு இடமின்றி இவர்தான் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டவருக்கு முகம் மூட தேவையில்லை என்றும் அறிந்ததுண்டு.
-
ஜெர்மனி தனது குடிமக்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தவுள்ளது.🏴
உலகம் முழுவதுமே பொருளாதாரம் பலத்த அடி வாங்கிவருகிறது. அமெரிக்காவின் கடன் தொகை 41 லட்சம் கோடி என்கிறார்கள், ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டிலும் சரி பாதி 2026ல் வீழ்ச்சி கண்டிருக்கிறது என்பதும் செய்தி. ஆசியாவில் சீனாவின் உள்ளூர் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் மிக மந்த நிலையில் உள்ளதெனவும், இந்தியா ஜப்பான் சிங்கப்பூர் தவிர ஏறக்குறைய அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை தொட்டு நிற்கின்றன. ஆப்ரிக்காவின் நிதி நிலமை சொல்லவே தேவையில்லை. தென்னமெரிக்க அவுஸ்திரேலிய பொருளாதார வளர்ச்சி நிலையும் அதே கதைதான். வீணாபோன ட்ரம்பின் வரியாலும், மத்திய கிழக்கு போரினாலும் உலகின் அனைத்து நாடுகளுமே கடன் சுமையினாலும், பண வீக்கத்தினாலும் , கடன்களுக்கான எகிறும் வட்டி வீதத்தினாலும் திணறுகின்றன. பணவீக்கத்தின் தாக்கத்தை சமாளிக்க புதிய வரிகள், விலைவாசி அதிகரிப்புக்களைத்தான் அரசுகள் உலகம் முழுவதும் கையில் எடுகின்றன. அதில் நகைச்சுவை என்னவென்றால் பணவீக்கம் என்பது என்னவென்றால் விலைவாசிகளில் ஏற்படும் தொடர்ச்சியான அதிகரிப்பென்று பொருள், அந்த பணவீக்கத்தை சமாளிக்க அதே விலை அதிகரிப்பை கையில் எடுத்தான் இருக்குற பணவீக்கம் இன்னும் வீங்கோ வீங்கென்று வீங்கும்.
-
ஒன்றாக இணைந்து வாழ்ந்து கொண்டே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தமிழர் செயற்படுவது முறை இல்லை… சிங்கள அரசை முஸ்லிம்கள் மீண்டும் நெருங்கி சிங்கள கட்சியிடம் கிழக்கை ஒப்படைத்து விட்டால், பின்னர் ஒப்பாரி வைக்க வேண்டாம் ; முபாறக் அப்துல் மஜீத்
அப்போ ஆயுத போராட்டமில்லாத தமிழர்களின் அரசியல் போராட்ட காலாத்தில் நீங்கள் தமிழர்களுடன் இணைந்து சிங்களவர்களுக்கு எதிராகாவா நின்றீர்கள்? முஸ்லீம்களும் தமிழர்கள் என்று எமது மூத்த அரசியல் தலைமைகள் உங்களையும் அரவணைத்து போவதற்காக சொன்னதுண்டு, ஆனால் நாங்களும் தமிழர்கள் என்று எந்த முஸ்லீமாவது எப்போதாவது சொன்னதுண்டா நீங்களுட்பட? ஓ நீங்களும் சிங்களவனிடம் அடி வாங்கியபடியால்தான் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சர்களாக, அரசுடன் சேர்ந்தியங்கும் அரசியல்கட்சிகளாக, சிங்கள பொலிசாக, ராணுவத்தினராக ,புலனாய்வு உத்தியோகத்தர்களாக ,ஒட்டுகுழுக்களாக எல்லாம் சிங்கள அரச இயந்திரத்தில் அங்கம் வகித்தீர்களா? சிங்கள அரசியல் ராணுவத்தில் நீங்கள வகித்த பங்குகள் அனைத்திலும் எதுவாவது தமிழர்களுக்கு இரக்கம் காட்டடுவதாகவோ அனுதாபம் காட்டுவதாகவோ அமைந்திருந்தனவா? அப்புறம் எதுக்கு இனவாதம்பற்றி விரிவுரை ஆற்றுகிறீர்கள்? கல்முனை விவகாரம் என்பது அந்த வைத்திய சாலை நிர்வாகத்துக்கும் அங்கு பணியாற்றும் முஸ்லீம்களுக்குமான பிரச்சனை, அதனை தவறென்று உங்களின் தேசிய கட்சிகளே உரத்து குரல் எழுப்ப தயங்கியபோது, அதனை தவறென்று ஓரிரு தமிழ் அரசியல்வாதிகள் உட்பட ,இந்த செய்தி பகிரப்பட்ட யாழ்களத்தின் உறுப்பினர்கள் ஒரு சிலரும்கூட சொல்லியிருக்கிறார்கள்.அப்படியிருக்க கல்முனை விவகாரம் எப்போது ஒட்டுமொத்த தமிழனும் உங்களுக்கு எதிராக கையில் எடுத்த பிரச்சனையாக மாறியது? தலையை துணியால் மூடும் பிரச்சனையை தமிழர் முஸ்லீம் பிரச்சனையாக மாற்ற முயற்சி செய்துவிட்டு தமிழர்கள் இனவாதம் புரிகிறார்கள் என்று சொன்னால் நல்ல பாம்பைவிட எத்தனை மடங்கு விஷம் உங்கள் நாவின் அடியிலும் மனதின் அடியிலும் மறைந்திருகிறது என்பது புரிகிறது. ஹலோ எக்ஸ்கியூஸ்மீ..... இப்போது நீங்கள் ஒன்றும் சிங்களவனைவிட்டு விலகியிருக்கவில்லை, சஹ்ரானின் தாக்குதலின் பின்னர் சிங்களவன்தான் உங்களை தள்ளி வைத்திருக்கிறான், அதை என்னமோ தமிழ் முஸ்லீம் இன நல்லிணத்துக்காக சிங்களவர்களை எதிர்த்து தமிழர்களுடன் இணைந்திருப்பது போன்ற சாயலில் ஈயம் பூசுகிறீர்களே இதவிட முஸ்லீம் இனவாத மொல்லமாரிதனத்திற்கு உதாரணம் உலகில் வேறேதும் உண்டா? மைத்திரியின் ஆட்சிவரை கிழக்கில் தமிழர்களுக்கு எதிரா என்ன ஆட்டம் ஆடி முல்லைதீவு, கிளிநொச்சிவரை எவ்வளவு வேகமாக முன்னேறி வந்தீர்கள் என்று இப்போதும் நினைவில் உண்டு. இனவாதம்பற்றி உரை ஆத்துகிறாராம் ஆத்தி.....
-
உலகை ஆளும் BYD
வாகன தயாரிப்பு சந்தை உலகின் மிக நீண்டகால ஆதிக்கம் கொண்ட பெரும்பாலும் அனைத்து கார்களின் உற்பத்தியை தூக்கி சாப்பிட்டு அவற்றின் மூடு விழாவிற்கும் வழி சமைத்துக்கொண்டிருக்கும் BYDன் அசுர வளர்ச்சியும் அதன் தற்போதைய தளம்பலும் பற்றி விபரிக்கிறது காணொலி. ஏற்கனவே யாரும் இணைத்திருந்தால் அசடு வழிய ஐயாம் சாரி...
-
உதவி தேவை: 1987 விடுதலை நடவடிக்கை (ஒபரேசன் லிபரேசன்) காலத்தில் நீங்கள் பட்ட வேதனைகள், அனுபவங்கள் எத்தகையது?
இந்தியாவின் தலையீடுதான் விடுதலை புலிகளின் ஆயுத போராட்டத்தை காப்பாற்றியது என்றால் ஒரு சில மாதங்களிலேயே இந்திய பெரும்படைக்கும் புலிகளுக்கும் ஏற்ப்பட்ட மோதலின்போது புலிகளின் ஆயுத போராட்டத்தை காப்பாற்றியது எது? சொல்லபோனால் இலங்கை ராணுவத்துடனான போரின் போது இருந்ததைவிட இந்திய ராணுவபோரின் பின்னர் புலிகள் பல மடங்கு பலம் அதிகமானார்கள் என்பதே யதார்த்தம். ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கையில் நிச்சயமாக யாழ்ப்பாணம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை , ஆனால் புலிகள் கெரில்லா போர்முறைக்கு மாறி காட்டிற்குள் நகர்ந்திருப்பார்கள், காட்டுக்குள் தளம் அமைத்து இலங்கை ராணுவம்மீது கெரில்லா போர்முறையை தொடுத்திருந்தால் நிச்சயமாக இலங்கை ராணுவம் மிக பெரும் இழப்பை தினமும் சந்தித்திருக்கும். ஏனென்றால் புலிகளில் ஆரம்பகால கெரில்லா போரின்போது இருந்த உறுப்பினர்களைவிட பல மடங்கு போராளிகள் ஒபரேசன் லிபரேசன் காலத்தில் இருந்தனர் , அந்த எண்ணிக்கை கெரில்லா போர் முறைக்கு மித மிஞ்சிய உறுப்பினர் எண்ணிகையாக கொள்ளலாம். காட்டுக்குள் உள்ள போராளிகளை தேடி வேட்டையாட அக்காலகட்டத்தில் பெரும் வலிமை பெற்ற ஆகாய கடல் தரை படைகள் இலங்கை ராணுவ வசம் இருந்திருக்க வாய்ப்பேயில்லை. இதை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான ஒன்று இருந்தது அக்காலகட்டத்தில் இந்தியாவில் புலிகளுக்கு தடையும் இல்லை, எம்ஜிஆரும் இருந்தார். போதாக்குறைக்கு புலம்பெயர் தமிழர்களில் அதிகரிப்பும் பண உதவியும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டதும் அக்காலத்திருந்துதான். மருந்து உணவு ஆயுதங்கள் எரிபொருள் என்று தங்கு தடையின்றி தாராளமாக தமிழகத்திலிருந்து வன்னிக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கும்.
-
உதவி தேவை: 1987 விடுதலை நடவடிக்கை (ஒபரேசன் லிபரேசன்) காலத்தில் நீங்கள் பட்ட வேதனைகள், அனுபவங்கள் எத்தகையது?
ஒபரேஷன் லிபரேசன் பற்றிய யசோதரனின் தொடர் பதிவு , அந்த ராணுவ ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய சாட்சி ஒருவரே பகிரும் ஒரு ஆவணப்பதிவாகவே உள்ளது. பெறுமதியானது.
-
சவூதியில் இலங்கையருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை; சமூக ஊடக பதிவு தொடர்பில் தீர்ப்பு
இந்த மனிதனுக்கு அறிவு எங்க போனதென்றே தெரியவில்லை. பல இஸ்லாமியர்கள் சமூக ஊடக பதிவில் எமது உயிரிலும் மேலான இறை தூதரை அவமதித்த இவரை கொல்லவேண்டும் மரண தண்டனை விதிக்கவேண்டும் என்றெல்லாம் பதிவிட்டதை கவனித்தேன். ஆனால் அவர்கள் மட்டும் அடுத்தவன் மதத்தை கல்லை கும்பிடுகிறார்கள் மண்ணை கும்பிடுகிறார்கள் உண்மையான இறைவன் எங்க அல்லாஹ் மட்டும்தான் என்று அடுத்தவன் இறையை அவமதிப்பார்கள் அது வேறு விஷயம். அவர்களது மதத்தை விமர்சித்தால் தற்கொலை படையைகூட அனுப்பி கொல்லும் அளவிற்கு மத பித்தம் தலைக்கேறியவர்கள், அதற்கு சிறந்த உதாரணம் சல்மான் ருஷ்டி. அப்படியிருக்க மத சார்பற்ற குற்றங்களுக்கே மதத்தின் பெயரால் தலையை சீவும் அவர்கள் நாட்டில் இருந்தபடி அவர்கள் மதத்தை பற்றிய விமர்சனங்களை பதிவேற்றிய இந்த மனிதன் ஒரு நிமிடம் அதை பதிவேற்றும் முன்னர் சரி பார்த்தாரா தெரியவில்லை. அனேகமாக ஒரு வெள்ளிகிழமை தொழுகையின் பின்னர் இவர் சிரசு கொய்யப்படும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். யார் செய்த புண்ணியமோ 5 வருஷத்துடன் தப்பித்தார் , அதேவேளை அபராத தொகை செலுத்தாவிட்டால் தண்டனை காலம் இரு மடங்காக நீளவும் வாய்ப்புண்டு. அடுத்த மதக்காரனை காபிர் என்று சொல்லி கொன்றால் சொர்க்கம் போகலாம் என்று நம்பும் ஒரு சமூகத்தின் நடுவில் நின்றபடி அவர்கள் சார்ந்து நிற்கும் நம்பிக்கையை விமர்சித்த அனோஜன் சாவை கூப்பிட்டு வாங்க பாத்து எதேச்சையா தப்பிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.
-
இசை குயில் ஜானகி அம்மா காலமானார்.
- அமெரிக்க டாலர் ‘ஆதிக்க’ வரலாறு
டாலரினால் போர், போரினால் டாலர் என்று வர்த்தகம் தொடங்கி யுத்தம்வரை எதற்கெடுத்தாலும் டாலரிலேயே பணப்பரிமாற்றம் செய்யும் உலகில் எப்போதிருந்து எப்படி டாலர் உலகில் செல்வாக்கு செலுத்த தொடங்கியது என்பதை சுருக்கமாக விளக்குகிறார்.- அன்னக்கிளி உள்ளிட்ட 134 பட பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்
இளையராஜா ஒரு யுக புருஷன், ஒவ்வொரு விஷயங்களுக்கும் தலைமுறை மாற்றங்கள், ரசனைகள் ,ஆச்சரியங்கள் வேறுபடும், ஆனால் எந்த தலைமுறைக்கும் எந்த வித மாற்றமும் இன்றி ரசிக்கப்படவும் போற்றப்படவும் போகிற பொக்கிஷம் இளையராஜாவின் இசை அதில் மாற்று கருத்து ஏதுமில்லை. ஆனால் அவரின் இசை இலவசமாக இசைப்பிரியர்களுக்கு வழங்கப்பட்டதல்ல, அது இசையமைப்பாளருக்கும், தயாரிப்பாளருக்கும், வெளியீட்டு நிறுவனங்களுக்கும் இடையில் நடந்த ஒரு வியாபாரம். அதை எப்படி இன்னமும் தனது என்று இளையராஜா ஏகபோக உரிமை கொண்டாடலாம்? ஒரு வீட்ட கட்டி தர சொல்லி அதி திறமை வாய்ந்த மேசனிடம் காசு கொடுக்கிறோம், அவரும் அழகாக கட்டி தருகிறார் , கட்டி முடிந்து காசும் வாங்கி பல தசாப்தம் ஆன பின்பும் மேசன் அது தனது வீடு என்று அடம்பிடிக்க எந்த சட்டத்தில் இடம் உள்ளது? என் ரேஞ்சுக்கு இன்னும் சொல்ல போனால் நல்ல சுவையாக சமைப்பார்கள் என்று அறிந்து தமிழ் சாப்பாட்டு கடையில போய் பிரியாணி வாங்குகிறேன், காசும் கொடுத்தாச்சு , பார்சலும் வாங்கியாச்சு , சோத்தை தூக்கிக்கொண்டு காருக்குள்ள ஏற போகையில் கடைக்காரன் ஓடி வந்து நீங்கள் காசு தந்தா என்ன கஷ்டப்பட்டு சமைச்சது நான், அது எனக்குத்தான் சொந்தம் எண்டு எண்டு சொல்லி கையில இருந்து பிரியாணியை பறிச்சால் அது எந்த ஊரு நியாயம் ?- 43 வருட கனவு....
ஒரு தந்தைக்கு மகள் இருப்பது சிறிய கர்வம், அவர் மருத்துவராக இருப்பது பெரிய கம்பீரம். வாழ்த்துக்கள் விசுகு அண்ணா குடும்பத்திற்கு.- நந்திக்கடல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது ; சானி அபேசேகரவின் சித்திரவதையால் மாவீரன் சலேவை இழக்க போவதில்லை - விமல் வீரவன்ச
நாட்டுக்காக இவ்வளவு நல்லது செய்த உங்களையா ஒரு பூங்கொத்துகூட வைக்கவிடாமல் குப்புற விழ விடுறாங்கள் குறுக்கால போவாங்கள்? நீங்க ஒண்டும் அழாதீங்க, அவங்கள் ஏத்துக்காட்டி என்ன நீங்களும் ஒரு ரெளடிதான் நாங்கள் ஏத்துக்குறோம். அரசியல் சூனியம் நெருங்கும்போது,தனது இருப்பை காண்பிக்க சுயதம்பட்டமும் கோமாளி தனங்களும் காண்பிக்கும் அரசியல்வாதிகள் மூவினத்திலும் உண்டு. அந்த இனத்தின் பிரதிநிதிகளில் அண்ணன் வீரவன்சவும் ஒன்று. ஆனால் ஒன்று கவனிக்கப்படவேண்டியது கருணா பிரிந்த அந்த காலகட்டத்தில் , விமல் வீரவன்ச ஒரு கட்சி, ரணில் வேறு கட்சி, சந்திரிக்கா வேறு கட்சி, மஹிந்த குழு, ராணுவம் என்னதான் இலங்கை ஜனாதிபதி கட்டுப்பாட்டிலிருந்தாலும் அதற்குள்ளும் ஜேவிபி, யூஎன்பி, சந்திரிக்கா ஆதரவு பிரிவுகள்,பிக்குகள் மறுபுறம் அவர்களுக்கென்று அரசியல் கட்சிகள் ஒருபுறம், என்று பல பிரிவுகள். தங்களுக்குள்ளேயே அடித்தும் கொண்டிருக்கிறார்கள். அத்தனையும் இருந்தும் தமிழர்களுக்கு அடிக்கும்போது மட்டும் தங்களுக்கிடையே உள்ள பிரிவினைகளை தூக்கியெறிந்துவிட்டு அத்தனைபேரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள். அவர்களிடையே ஆயிரம் பிரிவுகள் என்று இருந்தாலும் இனம் என்று வரும்போது ஒன்றாய் சேர்வார்கள், நாம் இனம் என்று வரும்போது ஆயிரமாய் பிரிவோம்., கருத்துக்களத்திலிருந்து போர்க்களம் வரை! அருமை அருமை.- தாயக பாடல்களை பாடிய கிளிநொச்சி இளைஞன் கைது
புலிகள் பயங்கரவாதிகள் , அவர்களால் தமிழ் மக்களுக்கு அழிவு மட்டுமே ஏற்பட்டது என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்குவீர்களே, அப்புறம் எப்படி புலிகளால் அழிவுக்குள்ளான மக்கள் மத்தியில் புலிகள் பற்றிய பாடல்கள் போட்டு அவர்கள் வாக்குகளை அபகரிக்க முடியும்? நாமும் இருக்கிறோம் என்பதை காண்பிக்க எதாச்சும் பேசணும் போல இருக்கு ஆனா என்ன பேசுறதுனு தெரியல்ல இல்ல? ஒருகாலம் தியாகி திலீபனின் நினைவேந்தல்கூட ஏற்கமுடியாது அவர் ஒரு கொலையாளி என்று மஹிந்த விமல் வீரவன்ச புடைசூழ முழங்கியவர் இந்த அன்னார். https://www.battinews.com/2020/09/blog-post_874.html?m=1 இன்று தேச உணர்வு பாடல் பாடுவது தவறில்லையென்று வகுப்பெடுக்கிறார். அவரின் பிரச்சனை அவரிடமிருந்த அரச பதவிகளை அபகரித்த வடபகுதி அரச சார்பு அரசியல்வாதிகளை வறுத்தெடுக்க ஒரு சந்தர்ப்பம், மற்றும்படி இளைஞனின் கைது பற்றிய கவலையல்ல.- தாயக பாடல்களை பாடிய கிளிநொச்சி இளைஞன் கைது
தாயகத்திலிருக்கும் இளைஞர்கள் சுயமாகவோ அல்லது யாரினதும் தூண்டுதலிலோ உணர்ச்சிவசப்பட்டு புலிகள் பாடல்களையோ உணர்வு பாடல்களையோ பாடாதீர்கள் . அன்றிருந்த புலிகள் இன்று உங்களை பாதுகாக்க இல்லை, புலிகளின் போராட்ட வழிமுறையைத்தான் தொடரணும் என்று இல்லை , அது ஒரு காலப்பதிவு அப்படியே மறைந்துவிட்டது, அவர்கள் தமது பங்களிப்பை செய்துவிட்டு சென்றுவிட்டனர். அதனை மாற்றுவழிகளில் தொடரலாம் அதற்கு யாருமே தயாரில்லை . வெறும் உணர்ச்சி வசங்களுக்குள்ளாகி அடி உதை சிறை என்று சிக்காதீர்கள் உங்களை காப்பாற்ற விசிலடித்த யாருமே வரபோவதில்லை, வெறும் செய்திகளில் கவலை மட்டும் யாரும் தெரிவிப்பார்கள். போராட்ட வழிமுறைகள் மாறலாம் என்று புலிகளே அறிவித்து இருந்தனர். புலம்பெயர்நாட்டில் இருக்கும் சிலரே இலங்கை போகவேண்டும் என்பதற்காக போராட்ட நினைவு கூரல்களை தவிர்த்து இருந்தனர், நீங்கள் சிங்கள முதலையின் திறந்த வாய்க்குள் தலையை வைத்திருந்தபடி உங்கள் சிரசை சிங்களத்திற்கு இரையாக்காதீர்கள், - அமெரிக்க டாலர் ‘ஆதிக்க’ வரலாறு
Important Information
By using this site, you agree to our Terms of Use.