Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு முழுவதும் 10 நாட்களில் பரவலான மழையை எதிர்பார்க்கலாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 10 நாட்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை

Sep 16, 2026 - 12:12 PM

இன்னும் 10 நாட்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை

இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அதன் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனைத் தெரிவித்தார்.

 

தற்போது எல் நினோ (El Niño) நிலைமையை எதிர்கொள்வதற்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டுள்ள போதிலும், இனிவரும் நாட்களில் பலத்த மழை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற கணிப்பிற்கு அமைய நடவடிக்கைகளை தயார்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

 

ஒக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும், இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் தொடர்ச்சியாக கலக்க நிலைமைகள் ஏற்படும் காலம் என்பதால், எல் நினோ நிலைமையின் கீழ் இது தீவிரமடையக்கூடும் என்றும் அஜித் விஜேமான்ன கூறினார்.

 

இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகக் கூறிய அவர், சில வேளைகளில் IOD நிலைமையினால் அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

 

அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பநிலை அதிகரித்து, மழைவீழ்ச்சி குறைவடையும் வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

 

இதன் காரணமாக, எதிர்வரும் சில மாதங்களில் நாட்டிற்கு கிடைக்கும் மழையை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmu3pm93q0003356psrzssko2

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.