Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. இன்னொரு வழி , அமெரிக்காவில் தீவிர வலது சாரிகள் தங்கள் எதிர்க் கருத்தாளர்களைப் பழிவாங்கப் பயன்படுத்தும் வழி: பாலியல் ரீதியான வசவை எழுதிய ஒருவரின் அடையாளம் தெரிந்திருந்தால், அவரை "முன்னுதாரணமாக்கி" விடுதல்😎. உதாரணமாக அவர் வேலை செய்யும் இடத்தின் சமூகவலை ஊடகக் கணக்கிற்கு அவர் எழுதியதை tag செய்து விட்டால், அவரது தொழில் துறையைப் பொறுத்து பின்விளைவுகள் இருக்கும். ஒரு கல்லூரி ஆசிரியரோ, மருத்துவரோ கீழ்த்தரமான பாலியல் தாக்குதல்களை தன் தனிப்பட்ட நேரத்தில் பதிந்தாலும் விளைவுகள் இருக்கும். ஆனால், இதைச் செய்யும் போது செய்பவர் தன் கணக்கை அடையாளம் தெரியாத மாதிரி வைத்திருப்பது பாதுகாப்பானது. எங்கள் நிலைமைக்குப் பொருந்தா விட்டாலும் இந்த இடத்தில் ஒரு சிறந்த உதாரணம் சுட்டிக் காட்டலாம்: அண்மையில் பிரிட்டனின் ஒரு அதிவலதுசாரியை அமெரிக்கக் குடிவரவுத் துறைப் பொலிஸ் பிடித்து நாடுகடத்தியது. அவர் எழுதிய ஒரு கருத்தைப் பிடித்துக் கொண்டு அவரை மாட்டி விட்டது இன்னொரு அதி வலது சாரிப் பெண் பிரபலம்😂.
  2. என்னிடம் சோசியல் மீடியா கணக்குகள் இல்லை (வட்சப் தவிர). முகநூல், இன்ஸ்ரா, எக்ஸ் பிரசன்னமுடையோர், ஒரு "இளம்பெண் பிரபலம் மீதான ஆபாசத்தாக்குதலாக" இந்த இனவாதச் சிங்களவர்களின் தாக்குதலை வகைப் படுத்தி உரிய இடங்களில் பகிர வேண்டும். ஒரு ஆணாக இருந்தால் இத்தகைய பாலியல் ரீதியான தாக்குதல்கள் வந்திருக்காது என்பது உறுதி. இது போன்ற வக்கிரத் தாக்குதல்களை எதிர் கொள்ளும் முதல் பெண் பிரபலம் மைத்திரேயி அல்ல, பிரிட்டனின் எம்மா ரடுகானு என்ற ரெனிஸ் வீராங்கனை முதல், அண்மையில் சமூக வலை ஊடகங்களில் இருந்து விலகிய அரியானா கிராண்டே வரை இதே வக்கிரங்களை எதிர் கொண்டவர்களின் பட்டியல் நீளமானது. இத்தகைய வக்கிரக் கருத்துக்களை flag செய்ய முடியுமா என எனக்குத் தெரியாது. ஆனால், தங்களுடைய சக கலைஞரை சிங்களவர்கள் இப்படி பாலியல் வசவு செய்கிறார்கள் என்பதை கீழுள்ள ஆட்களின் கணக்குகளுக்கு தெரியப் படுத்தலாம் (tagging என நினைக்கிறேன், சரியா?) இயக்குனர் லீனா கான்: Lena Khan (@imlenakhan) ஹசன் மின்காஜ்: Hasan Minhaj (@hasanminhaj) பிரியங்கா கேடியா:priyanka kedia (@pkwizzles) தயாரிப்பாளர் ப்ரஷாந் வெங்கட்ராமானுஜம்:Prashanth Venkataramanujam (@prashanthvenkat) தயாரிப்பாளர் ஜொனாதன் ஐரிக்:Jonathan Eirich (@joneirich) • Instagram photos and videos
  3. இது புங்கங்குளம் ரயில் கடவையில் நிகழ்ந்த இரண்டாவது மரணம் என நினைக்கிறேன். சோகமான நிகழ்வு , ஆனால் தவிர்த்திருக்கக் கூடியது. இது முற்றிலும் பாதுகாப்பற்ற ரயில் கடவையல்ல என நினைக்கிறேன். STOP sign உம், தடி மறிப்பும் இருக்கிறது. இரண்டையும் கடைப் பிடிக்காதோர் உயிரை இழக்கின்றனர். ஏனையோரும் பாடம் படிப்பதில்லை!
  4. நன்றி @நிழலி . படத்தை வார இறுதியில் மகளோடு பார்த்தோம், இன்று காலையில் இப்படியொரு விடயம் போய்க் கொண்டிருப்பதாக வீட்டில் சொன்னார்கள். மைத்ரேயியை இறுதியாக நடந்த இலங்கைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்துக் கௌரவிக்கும் அளவுக்கு அவர் ஈழத்தமிழ் சமூகத்தின் பக்கம் நிற்கும் ஒரு உறுதி மிக்க இளையவர் என்று அறியப் பட்டவர். நான் நினைக்கிறேன், இந்த முக மூடி போட்ட சிங்கள இனவாதிகள் மைத்ரேயியை தாக்கியதன் மூலம் தங்கள் அசிங்கத்தைத் தான் உலகத்திற்குக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் மைத்திரேயி மட்டுமல்லாமல், நன்கு அறியப் பட்ட நகைச்சுவையாளர் (Standup Comedian) ஹசன் மின்காஜும் நடித்திருக்கிறார். அடுத்து அவர் செய்யும் அரசியல் நகைச்சுவை (Satire) நிகழ்ச்சிகளில், சிங்கள இனவாதிகளும், சிறிலங்காவும் மாட்டிக் கொண்டு சின்னாபின்னப் படுவதைக் காணலாம் என நம்புகிறேன். திரைப்படம் நெற்பிளிக்ஸில் இருக்கிறது. எங்கள் மக்கள் நெற்பிளிக்சில் பார்த்தால் அதிலேயே double thumbs-up கொடுத்து ரேட்டிங்கை உயர்த்தி விடலாம். அப்படியான ரேட்டிங்கிற்குரிய திரைப் படம் தான் அது.
  5. திணிப்பது எங்கே நடக்கிறது? ஒரு தவறான வெளிப்படையான முடிவைக் கூட "தவறு" என்று சொல்ல முடியாமல் நின்ற இடத்தில் நிற்கும் உங்களைப் பார்த்து நகைக்கிறேன்! அவ்வளவு தான். நானாவது வெளியே சொல்கிறேன், சொல்லாமல் சிரித்துக் கடந்து போவோர் பலர் இருக்கக் கூடும், உங்கள் இஷ்டம் நீங்கள் எப்படியும் இருப்பது. தோற்ற தரப்பை எதிர்த்து வென்ற தரப்பை நோக்கி ஆதரவு யார் தருகிறார்கள்? எங்கே இராணுவ வெற்றி பெற்ற சிங்கள, இந்தியத் தரப்பிற்கு என் ஆதரவைக் கண்டீர்கள் என்று காட்டுங்கள்? தற்போதும் தோற்றுக் கொண்டிருக்கிற தமிழர் பக்கம் தானே நான் நிற்கிறேன்? விக்கிரகத்தைத் தூக்கித் தலையில் வைக்காமையால் தாயகத்தில் தோற்றுக் கொண்டிருக்கிற மிதவாதிகள் பக்கம் அல்லவா நான் நிற்கிறேன்? பழைய வீரப் பிரதாபங்களிலும், கோஷங்களிலும் மெய்மறந்திருக்கும் உங்களைப் போன்றவர்கள் அல்லவா "வெற்றி" களின் அடிமைகளாக இன்னும் இருக்கிறீர்கள்😎?
  6. அப்ப இனி "கொட்டை இரிக்கா?" என்று தமிழில் கேட்டது மருவி, "கோஸ்ராரிக்கா" என்ற பெயர் உருவானது போன்றவையெல்லாம் செ.நு இங்கிருந்து கற்றுக் கொண்டு உலகை ஒளிமயமாக்கப் போகுது போல😂!
  7. ம்..நம்மை விடுங்கள், இருவரும் வெளியே இருந்தோம், நம்மை யார் கணக்கிலெடுத்திருக்கப் போகிறார்கள்? ஒரு எடுகோளுக்கு, வன்னியில் இருந்த ஒரு பகுதி மக்கள் இந்த ராசதந்திர முடிவை எதிர்த்திருந்தால், நிச்சயமாக இயக்கம் முடிவை மாற்றிக் கொண்டிருக்கும்😂 என்பதை நம்பும் அளவுக்கு நீங்கள் முட்டாள் என நான் கருதவில்லை! ஆனால், ஒரு மாயக் கனவில் திளைத்திருப்பதைக் கைவிடாமல் தவிர்ப்பதற்காக முட்டாள் மாதிரி நடிக்க முடிகிறது உங்களுக்கு! பத்தாயிரக் கணக்கான மக்களின் உயிரையும், எதிர்காலத்தையும் பற்றிய முடிவை எந்த தேர்தலிலும் நின்று வெல்லாத ஒரு தரப்பிடம் கொடுத்து விட்டு நீங்களும், நானும் அதற்கு விசிலடித்தது முட்டாள் தனம். வன்னி மக்களுக்கு தெரிவுகள் இருக்கவில்லை. எனவே அவர்களுக்கு இதில் பொறுப்பில்லை. எங்களுக்கு இருக்கும் பொறுப்பு, "பிழை விட்டு விட்டோம்" என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டு விட்டு, இனி அது நடக்காமல் இருக்க ஆகும் காரியங்களைப் பார்க்க வேணும். அதையா செய்கிறீர்கள் உங்களைப் போன்றோர்? யாராவது பேசினால் பேசக் கூடாது என்று பாய்க்குக் கீழ் கூட்டித் தள்ளி விடுவதும், அழிவுக்கு வழி வகுத்த முடிவுகளை "ராசதந்திரம், தீர்க்க தரிசனம்" என்று ஓவராக அக்ரிங் கொடுப்பதும், போதாக் குறைக்கு இந்த ராசதந்திரத்தில் எமக்கும் பங்கிருக்கு என்று பெருமையும்..இதையெல்லாம் பார்த்து சிரிக்காமல் இருப்பது மிகக் கடினம் விசுகர்!
  8. சரியாக நான் முன்னர் பல தடவைகள் எழுதியவற்றைக் கவனித்தால், 2009 இற்கு முன் அல்ல, 2012 இற்கு முன் என்று வரவேண்டும்! அப்போது நானும் உங்களையும் ரஞ்சித்தையும் போலத் தான் - எது செய்தாலும் சரியாகத் தான் செய்திருப்பர் என்ற குருட்டு நம்பிக்கையில் இருந்தேன். அப்படியல்ல, 2004- 2008 இல் வன்னியில் நடந்தது அவர்களது இலக்கில் முதன்மையானது மக்களின் நலன் அல்ல என்று தெரிந்து கொண்டேன். இப்போது பொது வெளியில் இருக்கும் தகவல்களைப் பார்க்காமல் நீங்கள் கண்மூடித் தூங்குங்கள்! இனி "ராசதந்திர சோதனைகள்" செய்ய யாரும் வரப் போவதில்லை! அடுத்த பொதுத் தேர்தலில், பெரும்பான்மைக் கட்சிகளில் இருந்து தான் தமிழ் பா.உக்களே வரப் போகிறார்கள். உங்களதும், மயக்கம் தெளியாத தீவிர தமிழ் தேசியர்களினதும் நோக்கம் நிறவேறி விட்டது😎!
  9. "சொர்க்கத்தில் நகைச்சுவை (க்கான தேவை) இருக்காது" என்றார் Mark Twain. ஏனென்றால் சிரிப்பு/நகைப்பு என்பதே துன்பங்களைக் கையாள உருவான ஒரு கருவி தான்! எனவே நான் சிரித்தது ஏனென்று உங்களுக்கு புரியும். பேச்சுவாத்தைக்கு அனுப்பப் பட்டு அங்கே மேற்குலகின் எண்ணங்களை அறிந்து கொண்ட பாலசிங்கம் எச்சரிக்கை கொடுக்கிறார், இந்தியா மரக்கொப்பில் இருக்கும் கழுகு போலக் காத்திருக்கிறது. இதெல்லாம் தெரிந்த பின்னும் ஒரு முடிவு எடுக்கப் படுகிறது. பத்தாயிரக் கணக்கில் மக்கள் இறக்கிறார்கள், இயக்கத்தின் கீழ் நிலைப் போராளிகள் இங்கே எழுதவே முடியாத முடிவை நோக்கித் தள்ளப் படுகிறார்கள், அவர்கள் பலரின் குழந்தைகள் அனாதைகளாகியிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த பிறகும், வெளிநாட்டில் இருந்தபடி ஒருவர் "சர்வதேசத்தை நம்பினார், ராச தந்திர முடிவெடுத்தார்" என்று மீண்டும் மீண்டும் எழுதும் போது, இதற்கெல்லாம் சிரிக்காமல் இருக்க முடியுமா😂? நகைப்பை விட இந்தத் துன்பத்திற்கும், கண்டனத்திற்கும் வேறெதுவும் coping mechanism இருக்கிறதா?
  10. உங்களுக்கு வந்த இளவயது மாரடைப்பு உணவு, வாழ்க்கை முறை சம்பந்தப் படாததாக இருந்திருக்கலாம்! இதனால் இளவயது மாரடைப்பிற்கு உணவு, உடற்பயிற்சியின்மை என்பன காரணமாக இருக்கவே முடியாது என்று பொதுமைப் படுத்த முடியாது. அண்மையில் இலங்கையின் சுகாதார அமைச்சரின் உரையொன்றில் குறிப்பிட்டது போல, தங்களுக்கு "நீரிழிவு இருக்கிறதா?" என்றே தெரியாமல் தான் பெரும்பாலான மக்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என்றால், கொலஸ்திரோல் இருப்பதை யார் தான் அறிந்திருக்கப் போகிறார்கள்?
  11. Stent வைப்பதா இல்லையா என்ற முடிவு பல காரணிகளை வைத்தே எடுக்கப் படும். இதய இரத்தக் குழாயில் கல்சியம் 400 என்று இருந்தால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று அர்த்தம். ஆனால், உங்கள் வயது, ஏற்கனவே கொலஸ்திரோல் குறைப்பு மருந்துகளை எடுப்பவரா, மாரடைப்பு மரணம் குடும்பத்தில் இருக்கிறதா, நெஞ்சுவலி இருக்கிறதா - இவையெல்லாம் ஸ்ரென்ற் வைப்பதா அல்லது மருந்துகளையும், வாழ்க்கை முறை மாற்றங்களையும் பயன்படுத்துவதா என்பதைத் தீர்மானிக்க உதவும் காரணிகள்.
  12. 🤣யாருடைய நலனுக்கு "சரியாக" அமைந்த முடிவு? இயக்கத்தின் ஓர்ம நலனுக்கா? பிரபாகரனின் நற்பெயர் காக்கும் நோக்கத்திற்கா? இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு இப்போது என்ன நன்மைகளை தமிழர்கள் "அறுவடை" செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லி விடுங்கள்!
  13. கார்னியின் முன்னெடுப்புகள், பேச்சு வார்த்தைகள் எவ்வளவு தூரம் ஒப்பந்தமாக மாறுகின்றன எனப் பொறுத்திருந்து பார்க்கலாம். ஒப்பந்தங்கள் ட்ரம்பின் அழுத்தம் காரணமாக துரிதமாகச் செய்யப் படா விட்டால், அடுத்த ஆட்சியிலும் பேச்சு வார்த்தைகள் தொடர வேண்டி வரும். அந்த வேளையில் அமெரிக்காவில் ஆட்சி மாறினாலும், கனடாவின் தலைமை திசையை மாற்றாமல் தொடர வேண்டும் என்பதே என் அவா! அதிருக்கட்டும். அடுத்த 10 ஆண்டுகளில் எனக்கு 62 வயது. இது கட்டையில் போகிற வயதல்ல! கனடாவின் 80 வயது ஆயுட்காலத்தோடு (இது அமெரிக்காவை விட 4 வருடங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது😇!) பார்க்கையில் அது மத்திம வயது-middle age. ஆண்களுக்கு மத்திம வயதில் வரும் midlife crisis இல் அல்லாடியபடி, சிவப்புக் கலர் convertible கார் வாங்கி, பீச்சில் வலம் வரும் "கனிந்த" வயது 62😊! நிச்சயம் லிபரல் கனடாவில் ஒரு கால் வைக்கத் தான் வேணும்! ஐடியாவுக்கு நன்றி!
  14. கனடா தன் புதிய யாதார்த்தின் படியான பொருளாதார இலக்குகளை 5 வருடங்களுக்குள் அடைய முடியாது. அப்படி நீங்கள் எதிர்பார்ப்பதே உங்களுக்கு உங்கள் நாட்டின் பொருளாதாரம் எப்படி இயங்குகிறது என்ற தெளிவில்லை என்பதைத் தான் காட்டுகிறது. உங்களுக்கு விருப்பக் குறி போட்டிருக்கும் ஜேர்மன் பிரசைக்கும் இதே பிரச்சினை தான்: "மரக்கறி விலையும், மண்ணெண்ணை விலையும் கூடினால் நாடு நலிந்து விட்டது" என்று எடுத்துக் கொள்ளும் ஆட்கள் தான் தங்கள் வட்டத்தை விட்டு வெளியே பார்க்க முடியாத வலதுசாரிகள், நீங்கள் இருவரும் அத்தகய வலதுசாரிகளின் உதாரணங்கள் - poster boys! ஆனால், இன்று கார்னி எடுக்கும் நடவடிக்கைகள் அடுத்த 10 வருடங்களில் ஒரு பயனைத் தரும். அந்தப் பயன், இனி ட்ரம்பை விட மொக்கன் ஒருவன் அமெரிக்காவில் பதவிக்கு வந்தாலும் (நிச்சயம் வரலாம்!) யாரும் பறிக்க இயலாததாக இருக்கும். அது வரை, விலைகள் கூடும், வேலைகள் இழக்கப் படும், 12 மாதங்கள் அரைச்சம்பளத்தில் கர்ப்ப விடுமுறை எடுத்து விட்டு வீட்டில் இருக்க முடியாத நிலை வரும், வகேஷன் போக முடியாத நிலை வரும்..இதெல்லாம் கனேடியர்கள் கொடுக்க வேண்டிய விலைகள். இதைக் கொடுத்து அவர்கள் நீண்டகால நன்மைகளை அடைவார்கள் என்பது தான் கார்னியின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது எனக்குப் புரிகிறது. இந்த விலைகளைக் கொடுக்க இயலாத கனேடியர்கள், அப்படியே அமெரிக்காவிற்கு அகதியாக வந்து அசைலம் கேளுங்கள்! ட்ரம்ப் உங்களை எப்படி நடத்துகிறார் என்பதைக் கண்டு கொள்வீர்கள்😂!
  15. இதுக்கே அசந்தால் எப்பிடி நியாயம் சார்? " பூமி தட்டை, ஆனால் அது கோளம் என்று எங்கள் எல்லோருடைய மண்டையையும் கழுவி விட்டார்கள்!😎 இதை நம்பி, பயணம் போன மலேசியன் விமானம் தட்டைப் பூமியின் ஓரத்தில் இருந்து விழுந்து மறைந்து விட்டது!" இப்படியான உண்மைகளை நீங்கள் அறிய வேண்டுமெனில், உள்ளூர் பத்திரிகை, பிபிசி, சிபிசி, எல்லாவற்றையும் தூக்கிக் கடாசி விட்டு அப்பன் ஆத்தையின் உழைப்பில், வீட்டில் பேஸ்மென்ரில் வாழும் சில சோம்பேறிகள் தயாரித்துப் போடும் யூ ரியூப் வீடியோக்களை கிறெடிற் காட்டில் காசு கட்டிப் பார்க்க வேண்டும்😂!

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.