Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்

Sep 16, 2026 - 07:53 AM

ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்

ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.


அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும்  புறப்பட்டுச் சென்றுள்ளார்.


இவர்கள் இன்று அதிகாலை 1.10 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் சேவைக்குச் சொந்தமான SQ-469 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.


ஷிரந்தி ராஜபக்ஷ வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmu3h5j7k0000356pe2ergbw4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷிரந்தி குறித்து வௌியான செய்தியில் உண்மையில்லை

Sep 16, 2026 - 11:31 AM

ஷிரந்தி குறித்து வௌியான செய்தியில் உண்மையில்லை

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ஷ தனியார் வைத்தியசாலையிலிருந்தே நேரடியாக விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு இதற்கு முன்னர் அவருக்கு எந்தவொரு அழைப்பாணையும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (16) அதிகாலை 12.50 மணிக்கு விமானம் புறப்படவிருந்த நிலையில், விமான நிலைய வாயிலுக்கு அருகில் வைத்து விமான நிலைய அதிகாரி ஒருவர் திடீரென குறித்த அழைப்பாணை கடிதத்தைக் கொண்டுவந்து ஷிரந்தி ராஜபக்ஷவிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த குடும்ப உறுப்பினர் விவரித்தார்.

முன்னதாக FCID யினால் ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு எவ்வித அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை என்றும், அவர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே அக்கடிதம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmu3ow6ij0002356pj7d7uv23

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி என்று செய்தி வந்ததே? அதற்கிடையில் சிங்கப்பூர் புறப்பட்டுவிட்டார். மகிந்தவுக்கு ஏதும் நடந்தால்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷ இன்று சிங்கப்பூர் புறப்பட்டார்

16 Sep, 2026 | 09:13 AM

image

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ இன்று (16) புதன்கிழமை அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஒரு உறவினரும் அவருடன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இவர்கள் இருவரும் இன்றையதினம் அதிகாலை 1:10 மணியளவில் 'சிங்கப்பூர் எயார்லைன்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான SQ469 ரக விமானத்தில் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (15) செவ்வாய்க்கிழமை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, மேலதிக சிகிச்சைகளுக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/260132

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (15) செவ்வாய்க்கிழமை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, மேலதிக சிகிச்சைகளுக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனியார் வைத்தியசாலையென்றால் வசதியாகப்போய்விட்டது. இல்லையேல், ரணிலுக்கு மருத்துவ சான்றிதழ் கொடுத்த வைத்தியரின் நிலையல்லவா வந்துவிடும். நன்றாக இருப்பார்கள், சுற்றுவார்கள், திட்டம் தீட்டுவார்கள், கூட்டம் நடத்துவார்கள், ஆலோசனை நடத்துவார்கள். விசாரணையென்றால் எங்கிருந்து இல்லாத நோயெல்லாம் அதுவும் அதிதீவிர சிகிச்சையில் போய்படுக்க வைக்கிறது இந்த அரசியல் வியாதிகளை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தனியார் வைத்தியசாலையென்றால் வசதியாகப்போய்விட்டது. இல்லையேல், ரணிலுக்கு மருத்துவ சான்றிதழ் கொடுத்த வைத்தியரின் நிலையல்லவா வந்துவிடும். நன்றாக இருப்பார்கள், சுற்றுவார்கள், திட்டம் தீட்டுவார்கள், கூட்டம் நடத்துவார்கள், ஆலோசனை நடத்துவார்கள். விசாரணையென்றால் எங்கிருந்து இல்லாத நோயெல்லாம் அதுவும் அதிதீவிர சிகிச்சையில் போய்படுக்க வைக்கிறது இந்த அரசியல் வியாதிகளை?

image_bc0f41db1b.jpg

HSA167saMAAIcRz?format=jpg&name=900x900

HSA167mawAA0x5D?format=jpg&name=900x900

வருகின்ற 24´ம் திகதி ஊழல் விசாரணைக்காக உளவுப் படையின் அலுவலகத்திற்கு அழைத்து இருந்தார்களாம். அதற்கிடையில்... ஆள் சிங்கப்பூருக்கு பறந்து விட்டார்.

(இவ்வளவும் செய்தவர்களுக்கு... இப்படி, பேய்க்காட்டி செல்வது பெரிய வேலை இல்லை.)

பாவம்.... புருசன், நடக்க ஏலாமல் இருக்குது. அதை அனாதையாய் விட்டுட்டுப் போனதுதான் எனக்கு கவலையாக உள்ளது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

795817492_1736934804267922_9149465476369

பெத்த பிள்ளை ஜெயிலில

பொண்டாண்டி நாட்டை விட்டு ஓட்டம்.

இன்னொரு மகன் எப்போது உள்ளே போவான் என்று தெரியாது

ஒரு தம்பி அமெரிக்காவில் ஒழிஞ்சுகொண்டு இருக்கான்

இன்னொரு தம்பி முன்னாள் ஜனாதிபதியாக இருந்தும் நாட்டை விட்டு வெளியே போக ஏலாது....

மகிந்த ராஜபக்ச

என்க்கு ஒரு கொடூரமான ஆசை,

நீங்க இன்னும் கனகாலம் உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.!

Sivachandran Sivagnanam

  • கருத்துக்கள உறவுகள்

812940300_3421098951405617_8553271391994

ஸ்ரீலஙகாவின் முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச,

அரைப் பாவாடை சட்டையுடன்... நாட்டை விட்டு தப்பி ஓடுகின்றார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் அவர் முன்னாள் முதல் பெண்மணி மட்டும் அல்ல, இலங்கையின் முன்னாள் அழகுராணி, அத்துடன் உலக அழகுராணி போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்டுள்ளார் என விக்கி தகவலில் பார்த்தேன். பிறப்பில் கத்தோலிக்கர் திருமணம் முன் பெளத்தராக மதம் மாற்றப்பட்டாலும் இப்போதும் தீவிர கத்தோலிக்கர் என சொல்லப்படுகின்றது. அவருக்கு சிங்கப்பூர் செல்வது பக்கத்து ஊருக்கு சென்று வருவது போன்றது என நினைக்கின்றேன்.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.