-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
ஈழத்தின் புகழ் பெற்ற ஓவியர் ரமணி விடைபெற்றார் - எஸ்.கே.ராஜென் (வீரகேசரி வார வெளியீடு 04/01/2026) ஓவியக்கலை என்பது உணர்வுகள், கருத்துகள், கற்பனைகள் என்பவற்றை வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவம். வண்ணங்கள், கோடுகள், மூலம் உணர்வுகளும் கருத்துகளும், கற்பனைகளும் ஓவியங்களாக வடிவம் பெறும். ஓவியம் மனிதனின் பழமையான கலை வடிவங்களில் ஒன்று என்கிறது வரலாறு. ஒவ்வொரு சமூகத்தின் கலாசாரம், வரலாறு, நம்பிக்கைகள் என்பன ஓவியங்கள் மூலம் வெளிப்படுகின்றன. ஓவியக் கலைஞர்கள் தங்கள் மனநிலை, உணர்வுகள், சிந்தனைகள் என்பவற்றைத் தமது ஓவியப் படைப்புகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். சில ஓவியங்கள் சமூக பிரச்சினைகள், அரசியல் கருத்துகள் என்பவற்றோடு சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் வெளிக்காட்டுகின்றன. இப்பொழுது ஓவியக்கலை நவீன வடிவங்களுக்குள் உள்ளடங்கியிருக்கின்றது. கணினி மென்பொருட்கள் மூலம் வரையப்படும் ஓவியங்கள் - டிஜிட்டல் ஓவியங்களாகவுள்ளன. முப்பரிமாண விளைவுகளுடன் வரையப்படும் ஓவியங்கள் 3D ஓவியங்களாக விளங்குகின்றன. இன்று செயற்கை நுண்ணறிவு (AI) ஓவியக்கலையில் பெரும் சவாலாக அமைந்துள்ளது. எது எப்படியாயினும் கை வண்ணம் உயிர்ப்பானது என்பதே உண்மை. உயிர்ப்பான ஓவியக்கலைஞன், சிற்பி, ஓவியர் ரமணி என கலையுலகம் போற்றும் கலைஞன் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் விடைபெற்றுவிட்டார். அவரது தூரிகை ஓய்வெடுத்துக்கொண்டது. ஈழத்துக் கலையுலகிற்குக் கலைஞர் பெருமக்களைத் தந்த அளவெட்டி ஓவியக்கலைஞர் ரமணியையும் தந்துள்ளது. ஈழத்தின் முதற்தர ஓவியர் ரமணி என 'சிரித்திரன்' ஆசிரியர் சுந்தரால் பாராட்டப்பட்ட பெருமைக்குரியவர். ரமணியின் கருத்தோவியங்களுக்குச் 'சிரித்திரன்' இதழில் சுந்தர் களம் அமைத்துக் கொடுத்தார். ஓவியர் ரமணி தனது பயிற்சியை ஓவியர்கள் எஸ்.பொன்னம்பலம், மாற்கு ஆகியோரிடம் பெற்றுள்ளார். பின்னர், அரசினர் நுண்கலைக்கல்லூரியில் 5 ஆண்டுகள் பயின்று, 'Diploma in Art' முதற்தரத்தில் சித்திபெற்றார். இலங்கையின் புகழ்பெற்ற ஓவியர்களான ஸ்ரான்லி அபயசிங்க, கொஸ்தா கருணரட்னா ஆகியோரிடத்திலும் பயிற்சி பெற்றவராகத் திகழ்ந்த ஓவியர் ரமணி, இலங்கைத் தேசிய நூதனசாலையில் தயாரிப்பு உதவியாளராக 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். பலாலி ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் பயின்று பின்னர் அங்கே ஆசிரியராகவும் கடமையாற்றியிருந்தார். ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலயத்திலும் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். ஈழத்து எழுத்தாளர்கள் பலரது படைப்புகளுக்கு தனது ஓவியக் கலையினூடாக உயிரூட்டியவர் ரமணி என்பது அந்தப் படைப்பாளிகளின் சஞ்சிகைகள், நூல்கள் ஊடாகப் புலப்படுத்தப்பட்டுள்ளன. இதில், டானியலின் 'பஞ்சமர்' (1972), செங்கை ஆழியானின் 'போரே நீ போய்விடு', 'கிடுகுவேலி', 'மழைக்காலம்' ஆகிய நூல்களின் அட்டைப்படங்கள் ரமணியின் கைவண்ணத்தில் வடிக்கப்பட்டன. 'மல்லிகை' இதழின் முகப்பு உட்பட, டொமினிக் ஜீவாவின் மல்லிகைப்பந்தல் வெளியீடுகளான ஐ.சாந்தனின் ‘எழுதப்பட்ட அத்தியாயங்கள்’ மா.பாலசிங்கத்தின் ‘இப்படியும் ஒருவன்’ உட்பட பலரது நூல்களின் அட்டைப்படங்களையும் ரமணி வடிவமைத்துள்ளார். மல்லிகை ஆண்டு மலர்களிலும் இவரது ஓவியங்கள் இடம்பிடித்துள்ளன. வீரகேசரி வெளியிட்ட பல நூல்களுக்கும், மற்றும் பல படைப்பாளிகளின் நூல்களுக்கும் தனது ஓவியக் கலையால் மெருகூட்டினார். 'தமிழர் நிதியம்' அமிர்தலிங்கம் யாழ்ப்பாணத்தில் நிர்வகித்த ஈழமுரசு இலச்சினை, ஈழமுரசு நாளிதழின் முகப்புத் தலைப்பு. 'தமிழர் நிதியம்' இலச்சினை. திருமறைக் கலாமன்றத்தின் இலச்சினை, 'கலைமுகம்' சஞ்சிகையின் முகத்தலைப்பு என்பவற்றில் ரமணியின் தூரிகையின் ஒளிர்ப்பைக்காணலாம். ஓவியக் கலையுடன் சிற்பக்கலையிலும் ரமணி சிறந்தோங்கினார். ஈழத்தமிழினத்தின் விடுதலைக்கு வித்திட்ட தியாகி சிவகுமாரன் சிலையை வடித்தார். இது போன்று நெல்லியடி மத்திய மகா வித்தியாலய முன்றலில் அமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் கப்டன் மில்லரின் சிலையையும், தீருவிலில் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவுத் தூபியையும் இவரே வடிவமைத்தார். (மில்லரின் சிலை இப்பொழுது சிதைவடைந்த நிலையிலுள்ளது) ரமணியின் கைவண்ணத்தில் உருவான கடைசிச்சிலை நெல்லியடியில் அமைந்துள்ள உடுப்பிட்டி, நல்லூர் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மூத்த தமிழ்த்தலைவர் மு.சிவசிதம்பரம் அவர்களுடையதாகும். தமிழ்க் கலை, இலக்கியத்துறையில் சாதனையாளர்களாக விளங்கியவர்களைப் போற்றுவது நம் கடமையாகும். அந்த வகையில் ஓவியக்கலை, சிற்பக்கலை விற்பன்னராகத் திகழ்ந்த ரமணியின் நாமம் போற்றுதலுக்குரியதே.
-
கதைப்படங்கள்
-
Ramani_poly.png
-
618795141_1408630341274867_3472850456020024511_n.jpg
-
IMG_5085.JPG
-
600px-34704.JPG
-
117.jpg
-
Theeruvil.jpg
-
Sivakumaran.jpg
-
PhotoEditorCollageMaker_10_01_2026_09_41_07_pm.jpg
-
IMG_20260103_102836_small.jpg
-
sdgdcsuy8gca7dg3.jpg
-
6cr8dk6cr8dk6cr8.jpg
-
தொன்மம்.jpg
-
சிலந்தி.jpeg
-
ஊர்ந்து.jpg
-
Winner.jpg
-
நாய்.jpg
-
விதி.png
-
பூனை.jpg
-
காத்திருப்பு.jpg
-
goldsmith200CE.jpg
-
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
மூத்த ஓவியர் ரமணி - சந்திப்பு ந.மயூரரூபன், கை.சரவணன் (தளவாசல் யூலை - செப் 2016) கே: தங்களது படைப்பு - கலை - சமூக - குடும்ப வாழ்வுத்தளம் பற்றிய நிலைப்புள்ளி பற்றி தாங்கள் யார்? எனும் வினா ஒன்றிற்கான பதில்....? எனது தந்தையார் புத்துவாட்டி சோமு என்பவரிடம் முறையாக சங்கீதம் கற்றவர். ஹார்மோனியம் வாசிப்பதில் கைதேர்ந்தவர். அதே வேளையில் பொன் ஆபரணத் தொழிலிலும் தேர்ச்சியும் அனுபவமும் நிறைந்தவர். எமது காலம் விஞ்ஞான பாடநெறிக்கே அதிக கவனம் செலுத்தியது. கலைத்துறைக்கான ஈடுபாடோ நாட்டமோ மிக அரிது. குடும்ப வற்புறுத்தலில் விஞ்ஞானத்துறையையே கற்றேன். (சிரித்தபடியே....) கஷ்டப்பட்டு இரண்டாம் தடவையில் கணிதம் தேறினேன். இத்தகைய சூழலில் என்னை இனங்கண்டவர் ஆதவன் பொன்னம்பலம் அவர்கள்தான். எனது தொடக்க நாட்களின் ஓவியங்களை சிறுசிறு அன்பளிப்புகள் தந்து ஊக்கமூட்டியதுடன் வெளியிடங்களுக்கும் அனுப்பி என்னை இனங்காட்டினார். ஒருநாள் "உமக்கு விஞ்ஞானம் சரிவராது. ஓவியத்தைத் தெரிவுசெய்யும் நல்ல எதிர்காலம் உம்முன் இருக்கிறது. உமக்கேற்ற ஆசிரியர் இவர்தான்" என்று ஓவியர் "மாற்கு" அவர்களிடம் என்னைச் சேர்த்துவிட்டார். ஓய்வுகால ஓவியர் கழகத்தில் பயில்வதற்காக அனுமதியை எனது தகப்பனாரிடம் தனக்கிருந்த நட்புரிமையைப் பயன்படுத்தி பெற்று கழகத்தில் இணைத்துவிட்டனர். ஆதவன் பொன்னம்பலம் அவர்கள்தான். மூன்றுமாதகால தீவிர பயிற்சியின் பின் அரச கலைக் கல்லூரி நுழைவுத் தேர்வில் தேறினேன். (Government College of fine Arts) எனது கல்லூரிப் படிப்பு காலத்தின் தொடக்க நாட்களில் எனது அண்ணன் சச்சிதானந்தன் என்னை பொறுப்பேற்று ஊக்கம் தந்தார். இவர் சச்சி மாஸ்டர், ஞானரதன் போன்ற பெயர்களில் இலக்கிய உலகு நன்கறிந்த படைப்பாளி என்பதுடன் ஈழத்துத் திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் எனும் ஒளியூடகத்துறையிலும் பிரகாசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனக்கான செலவுகளை அவரே பொறுப்பேற்றார். கே: ஓய்வுகால ஓவியர் கழகம் என்று குறிப்பிட்ட விடயம் புதியதாக இருக்கிறது. ஆமாம். இப்போ மறந்து போனதாகிவிட்டது. சுவாம்பிள்ளை (சீனியர்), பருத்தித்துறை குலநாயகம் போன்றவர்களால் இயக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் ஓவியம் பயிற்றுவிக்கப்பட்டது. பலர் குறிப்பாக இளைஞர்கள் விருப்போடு இணைந்து பயின்றார்கள். கே: ஓவியர் 'மாற்கு' உலகறிந்து கொண்ட ஓவியர்களுள் ஒருவர். இவருடனான தங்கள் அனுபவம்? இவர் தனது கற்கைகளில் திறமையை வெளிப்படுத்தி இருமுறை இரட்டை உயர்வு (Double Promotion) பெற்றவர். வேரிலிருந்து கண்டறிதல் (Arleoricks) நுட்பத்தில் தேர்ந்தவர். புத்துருவாக்கத் திறன் கொண்டவர். மிகத் தேர்ந்த ஒருவர். மிகத் தீவிர மாணவர். ஓவியம் தொடர்பான ஆர்வத்தை தூண்டுவதில் நிகரற்றவர். ஓவியர் டேவிட் வியந்து போற்றிய ஒருவர். மூன்று மாத கால தீவிர பயிற்சியை வழங்கி என்னை கல்லூரித் தேர்வில் தேறவைத்தவர். என்னுள் அவரின் தாக்கம் மிக அதிகம். கே: தாங்கள் தங்கள் ஓவியங்களூடாக ஓவியத்துறைக்கு அப்பால் இலக்கிய வெளியிலும் அறியப்பட்டவர். ஓவியம் - இலக்கியம் இடைத்தொடர்பு பற்றிய கவனிப்பு? அப்போது கொழும்பில் வாழ ரூபா எழுபத்தைந்து போதுமானதாயிருந்தது. குடும்பச் சுமையுடன் என்னையும் பிரத்தியேகமாக பராமரித்த அண்ணன் சச்சிக்கு ஒரு விடுவிப்பைச் செய்ய விரும்பி பகுதிநேர வேலையொன்று தேட உத்தேசித்திருந்தேன். இதுகட்டாயமாகவுமிருந்தது. எம்.டி.குணசேன நிறுவனத்தின் பகுதியாயிருந்து "தவச", "ராதா" வார இதழ்களுக்கு தமிழ் ஓவியர் தேவை என்ற கோரலை திரு. எம்.எஸ்.கந்தையா தெரிவித்து இணைத்துவிட்டார். அங்கே ஆசிரிய பீடத்தில் ஆசிரியராயிருந்த திரு. வி.கே.பி.நாதன் எனது ஓவியங்கள் சிலவற்றைப் பார்த்து திருப்தியுடன் இணைத்துக்கொண்டார். முதல்மாத ஊதியம் ரூபா நூற்று முப்பத்தொன்பது என்பது மறக்கமுடியாதது. படித்துக் கொண்டே படம் வரைந்ததால் ஒரு வித்தியாசமான தனித்துவமான ஓவியங்கள் வந்தன. கே: படிப்பு - பத்திரிகை ஓவியர் இரு தளங்கள்.... எனக்கு இரு தளங்களும் ஒத்தியங்கின. கல்லூரியின் மூன்றாம் ஆண்டுத் தேர்வு முதல் வகுப்புச் சித்தியை (1st class) தந்ததால் வரைதலும் வண்ணந்தீட்டலும் (Drawing and Painting) கற்கைநெறிக்கான அனுமதி இலகுவாகக் கிடைத்தது. நான்காம் ஐந்தாம் வருடங்களின் தேர்வுகளையும் முதல் வகுப்பில் தேறினேன். இதே காலங்களில் வீரகேசரி, மித்திரன், ராவய, ராதா.... என ஊடகங்களிலும் பணியாற்றினேன். பணி என்பது ஓவியம்தான். படிப்பு - வரைதல் என்னுள் ஒன்றுதான். கே: தங்களது கற்கைக் காலம் நிறைவடைந்ததும்.... ஆம். முக்கியமானது. பலத்த போட்டிக்கு மத்தியில் தேசிய அருங்காட்சியக தயாரிப்பு உதவியாளராக (National Museum Preparation Assistant) திரு. பிரபாத் விஜயசேகரவிற்கு உதவியாக நியமனம் கிடைத்தது. தொழில் திருப்தியின்மை காரணமாக குறுகிய காலத்துள் விலகிக்கொண்டு விட்டேன். ஆசிரியர் நியமனம் கிடைத்தது. ஓவியபாட உதவிக் கல்விப் பணிப்பாளராக இருந்து ஓய்வுபெற்றேன். கடந்த பதினைந்து ஆண்டுகளாக யாழ். பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் வருகை விரிவுரையாளராக உள்ளேன். கே: ஓவியர் என்னும் அறிமுகத்துடன் சிற்பி எனும் சிறப்பான அறிமுகமும் உள்ளதே? சிற்பத்துறை ஈடுபாடு.... கல்லூரியின் கலைத்திட்டத்தில் சிற்பம் ஒரு பாடமாக இருந்தது. வாரம் ஒரு பாடவேளை என அமைந்திருந்தது.அப்போது பத்து வருட அரச ஒப்பந்தத்தில் இந்தியாவிலிருந்து சிற்பத்திற்காகவே வந்திருந்த மணி எனும் சிற்பியுடன் இருந்து சிற்ப நுணுக்கங்களை அவதானித்தது மிகப்பெரிய அனுபவம். அவர் சிற்பி மட்டுமல்ல, சிறந்த நடனக் கலைஞரும் கூட. அவரது தந்தையார் கூட இந்தியாவின் பிரபலமான சிற்பிதான்.... கே: ஓவியம் - சிற்பம் இரண்டுக்கும் அவசியமென கருதும் திறன்....? சுருங்கச் சொன்னால், ஆர்வம், முயற்சி, பயிற்சி என்றுதான் கூறுவேன். இருப்பினும் இவற்றோடு "உடற்கூற்றியல்" (Anatomy) அறிவு இருக்குமாயின் ஓவியம் - சிற்பம் ஆகியவற்றில் உயிர்ப்பும் தேர்ச்சியும் ஒரு நேர்த்தியும் இருக்கும். கே: கலைத்துவம் - தொழில் வாய்ப்பு... இன்றைய போக்கு....? தொழில்சார் அறிவுடைய பலருடைய பட்டறிவு பகிரப்படுகிறது. அறிவுசார் - கலைத்துவம் சார் நிலைக்கு அப்பாலும் யாழ். பல்கலைக்கழகம் போதிக்கிறது. ஆயினும் தற்போது பெரும்பான்மையாகத் தொழில்தேடும் பட்டத்துறையாகவே உள்ளது கவலையாகவே உள்ளது. ஆயினும் விதிவிலக்காகச் சிலர் கலைத்துவ வெறியோடு துறை சார்ந்திருப்பது நம்பிக்கை தருகிறது. கே: அட்டை (Cover) ஓவியங்கள் தொடர்பில் நிறைந்த பட்டறிவுள்ள தங்களின் பார்வை என்ன? உடற்கூற்றியல் தெரிந்து வெளிப்படுத்தப்பட்ட ஓவியங்கள் என்னைப்பலருக்கு அறிமுகப்படுத்தியது. நூலின் உள்ளடக்கம் சார்ந்ததும் அதன் உணர் மையம் பற்றியும் அமைய வேண்டியது. கே: தங்களது தலைப்பெழுத்து (Title) - வெட்டித் துண்டாக வைத்தது போன்ற எழுத்து இது தங்களது சிற்ப அனுபவம் சார்ந்த தாக்கமா? எழுத்து வடிவம் சாந்து படத்தோடும் பக்க அளவுடனும் நுணுக்கமாக ஒத்திசைய வேண்டும். தனிக் கவனம் எடுக்கப்பட வேண்டிய விடயம். கே: அட்டைப்படம் - தலைப்பு - வடிவமைப்பு தொடர்பில் தங்கள் பார்வை... மூன்றுக்கும் சம அளவு கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒன்றுடனொன்று சரியான அளவில் நேரும்போதுதான் ஒத்திசைவு ஒன்று தோன்றும். ஒவ்வொன்றும் தனித்தனியே இருப்பின் பொருத்தமற்ற ஒரு வெளிப்பாடே கிட்டும். அது நூலுருவாக்கத்தின் பலவீனமாகவே இருக்கும். கே: போர் நெருக்கடி மிகுந்த சூழலில் பதிப்புத்துறை சந்தித்த நெருக்கடிகள் யாவருமறிந்ததொன்று. இச் சூழலில்அட்டை வடிவமைப்பு தொடர்பில் தாங்கள் சந்தித்த வேறுபட்ட அனுபவங்கள்? அந்தக் காலத்தில் புளொக் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் பெறுவதற்கு முடியாதிருந்தது. ஈயம் முற்றாகவே தடைசெய்யப்பட்ட பொருளாகிவிட்டது. புராதன அச்சு முறையான மரக்கட்டை புளொக்கிற்கு பழகப்பட வேண்டியிருந்தது. நாச்சிமார் கோவிலடி விக்கி என்பவர் இதில் வல்லவராயிருந்தார். மரக்கட்டை புளொக் ஓவியத்திலும் சில பல மாற்றங்களை வேண்டியிருந்தது. மெல்லிய கோடுகள், அழிவுகள், நெருக்கமான குறுகிய வடிவ உருக்கள் என்பன மரக்கட்டையில் புளொக் செய்ய பெரும் சவாலாக இருந்தன. இதனால் கூடியளவு நேரான தடித்த சிக்கலற்ற எளிய ரேகைகளாலான வடிவங்களை வரையவேண்டியிருந்தது. இது வழக்கமான எமது பாணிக்கு மாறானது. அதனால் எம்மை மாற்றவேண்டியிருந்தது. மாற்றிக்கொண்டோம். அதுவே ஒரு மரபு போலவும் உத்தி போலவும் அமைந்தது. கே: இலக்கியம் தொடர்பான தங்களது ஈடுபாடு - ஊடாட்டம் எத்தகையது? அன்றும் இன்றும் தொடர்பும் ஊடாட்டமும் கொஞ்சம் குறைவுதான். ஆனாலும் அ.ந. கந்தசாமி, மஹாகவி, சில்லையூர் செல்வராசன் முதலானவர்களிடம் ஈடுபாடு இருந்தது. கே: தங்களது இலக்கிய - வாசிப்பு அனுபவம் பற்றி.... முன்னர் நிறைய வாசிக்கக்கூடியதாக இருந்தது. தற்போது இல்லாமலாகிவிட்டது. கே: அறுபதுகள் மற்றும் பின்னான ஆண்டுகளில் ஈழத்துக் தமிழ் இலக்கியச் சூழலில் கம்யூனிச மார்க்சியச் செல்வாக்குகளை அறியமுடிகிறது. இச்சூழலில் தங்களது நிலைப்பாடு எவ்வாறிருந்தது? இவை தொடர்பான வாசிப்புகள் அவதானிப்புகள் இருந்தாலும் அதை எனது கருத்து நிலையாக்கிச் செயற்படும் மனோபாவம் இருக்கவில்லை. கே: நமது இலக்கியச் சூழலில் கேலிச்சித்திரம் (Cartoon) ஒரு காலப்பகுதியில் தனித்துவமான இடத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தது. தற்போது அது ஒரு வெற்றிடமாகியுள்ளதாக உணரப்படுகிறது. தங்களது இயங்குநிலை இத்தளத்தில் எவ்வாறிருந்தது? என்னுடைய காலத்தில் பிரபலமாயிருந்த இந்திய கேலிச் சித்திரக்காரர் மிரியன், கோபுலு மற்றும் எம்மவரான சிரித்திரன் சுந்தர் ஆகியோர் என்னுள் பிரமிப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தியவர்கள். நானும் சில காட்டூன்களைச் செய்திருக்கிறேன். அதனால் யாராவது வந்து வலிந்து கேட்டாலன்றி இல்லை ஸ்பெசலாக இத்துறையில் எதுவும் செய்யவில்லை. கே: நவீன தொழில்நுட்பம் படைப்புவெளியில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? நவீன தொழில்நுட்பம் பரவலாகும்பொழுது நாம் நாமே அடங்கிவிட்டது போன்ற உணர்வு எழுகிறது. நாம் எமது அறிவு, அரசியல், பட்டறிவு என்பவற்றூடாக படம் வரைவோம். ஆனால் தற்போது படைப்புத்திறன் வெளிப்பாட்டுக்கு அதிக இடத்தினை நவீன தொழில்நுட்பம் தருவதில்லை. கணினி ஊடாக வரையப்படும் ஓவியங்கள் முழுமையான ஒரு படைப்பா? என்றொரு கேள்வி இருக்கிறது. அதேபோல் ஒரு அட்டை வடிவமைப்பில் எழுத்துரு, ஓவியம், வர்ணம், தெரிவு, வடிவமைப்பு என்பது தனித்தனியாகப் பிரிந்து ஒவ்வொன்று ஒவ்வொருகரங்களிலிருப்பதால் துருத்திக்கொண்டு இருக்கின்றன. கே: தங்களுக்கென தனித்துவ அடையாளம் படைப்பு வெளியில் உள்ளதென உணர்கிறீர்களா? இருக்கிறது. அந்தத் தனித்துவத்தை வைத்துத்தான் வரைகிறேன். எனது கோடுகள் எனக்கிருப்பவை. புதிதுபுதிதாக வடிவங்களை மாற்றினாலும் கோடுகளின் தனித்துவத்தைப் பேணுகிறேன். எனது அடையாளம் பற்றிய பிரக்ஞையுடன் தான் எதையும் ஆரம்பிக்கிறேன். கே: தற்போதைய தங்கள் வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொள்வீர்களா? ஓய்வு மனோநிலையுடன் இருக்கிறேன். எனினும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கற்பிப்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. எனது துணைவியாரின் பிரிவின் வலி என்னுடனேயே இருந்தாலும் ஐந்து ஆண்பிள்ளைகளையும் சிறப்பான நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஒருவர் என் துறையிலேயே ஆசிரியர், அடுத்தவர் சுகாதாரத் திணைக்களத்தில் சுகாதார பயிற்சி உத்தியோகத்தர், அடுத்தவர் நியூஸிலாந்தில் கணினி பொறியியலாளர், நான்காமவர் வர்த்தகத் துறையிலுள்ளவர். கடைசி இயந்திர பொறியியல் துறை மாணவனாக இருக்கிறார். இவை போதும்.
- துயர் பகிர்வு
-
⚠️🚨முக்கிய செய்தி: யாழ் நூலகத்தின் 'noolaham.org' சிங்களவர்களால் hacking மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது
https://web.archive.org/ இந்த இணைப்பில் சென்று நூலகக் கோப்பின் முகவரியைக் கொடுத்துத் தேடினால் முன்னரே அது பதிவெடுக்கப்பட்டு இருந்தால் அதைப் பெற்றுக் கொள்ளலாம். அது இருந்தால் இப்படிக் கிடைக்கும்: https://web.archive.org/web/20240810023631/https://noolaham.net/project/793/79283/79283.pdf
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
சுயநலன்கருதாது, நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் எமது தேச சுதந்திரப்போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிய கலைஞர் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ரமணி)அவர்களை நாம் இழந்து விட்டோம்.தமிழினம் பெருமைப்படும்படியாக கலையுலகில் பெரும் சாதனைகளைப் புரிந்த இந்தக் கலைமாமணியை இழந்துவிட்டோம்.இவர் ஒரு சிறந்த கலைப்படைப்பாளி, இவரிடம் கலைஞர்களுக்கே உரித்தான உள்ளம் இருந்தது. வற்றாத கலையுணர்வு இருந்தது. கட்டுக்கடங்காத கற்பனை வளம் இருந்தது. கலைக்கு அணிசெய்கின்ற நிறைந்த அறிவு இருந்தது. தமிழ் மீது அளவுகடந்த பற்றும் பாசமும் இருந்தது. தனது தாய் மண்ணின் விடுதலைக்கு பங்காற்ற வேண்டும் என்ற உயரிய குறிக்கோள் இருந்தது. சுயமான ஆளுமை இருந்தது. இவை எல்லாம் ஒன்று கலந்த மனிதம் இருந்தது. இந்த அழகான மனித மாண்பே அனைவரையும் அவரை நோக்கிக் கவர்ந்து கொண்டது. சுதந்திரப்போராட்டங்களுக்கு உந்துசக்தியாக ஊக்க சக்தியாக அமைவது தேசப்பற்று. இந்தத் தேசப்பற்று இவரிடம் நிறைந்திருந்தது. அவரது ஆழ்மனதில் ஆழமாக வேரோடிநின்றது. அவரை ஆட்கொண்டு நின்றது. விடுதலை வேட்கையாக அவரிடம் வெளிப்பட்டு நின்றது.எமது சுதந்திர இயக்கம் முன்னெடுத்துவரும் விடுதலைப் போராட்டத்திலே ஒரு இலட்சியப் பிடியை அவரிடம் ஏற்படுத்திவிட்டது. அவர் தமிழீழ மண் தந்த ஒரு சிறந்த ஓவியர், சிறந்த சிற்பவல்லுனர், சிறந்த நாடகநெறியாள்கையாளர். அவர் கலைகளுக்காகவே வாழ்ந்தார். கலைகள் பற்றியே சதா சிந்தித்தார். புதிய கலைவடிவங்களைக் கண்டறிந்து அவற்றோடு புதிய நுட்பங்களைப் புகுத்தி, காலத்திற்கேற்ப, வரலாற்று ஓட்டத்திற்குஏற்ப கலைப்படைப்புக்களைச் செய்தார். அவரைப் போலவே அவரது கலைப்படைப்புக்களும் அழகும் ஆழமும் வாய்ந்தவை. அனைவரையும் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தவை. அத்தோடு அவர் தனது கலைப் படைப்புக்கள் ஊடாக மக்களிடையே போராட்ட விழிப்புணர்வையும் ஒடுக்கு முறைக்கு எதிரான கொதிப்புணர்வையும் தூண்டிவிட்டார். போராட்டவாழ்வில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் பல்வேறு கோணங்களில் படம்பிடித்தார். தனது கலைப்படைப்பின் உச்சமாக முதல் மாவீரன் பொன் சிவகுமாரன் நினைவு தூபி,கரும்புலி கப்டன் மில்லர் நினைவு தூபி,தீருவில் நினைவு தூபி வடிவமைப்புகள் அவரின் விடுதலைப் பற்றின் சான்றுகளாகி விட்டது.அன்னார் ஆற்றிய பெரும் பணி என்றுமே போற்றுதற்குரியது. கலைஞர் ரமணி அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக "மாமனிதர்"என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம் சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள். மாவீரர் பணிமனை தமிழீழ விடுதலைப் பு*லிகள். @top fans TOP Paris Tamil இது 18 ஜனவரியில் வெளியிடப்பட்டிருக்கிறது. இவரது மூத்த சகோதரர் அமரர் வை.சச்சிதானந்தமும் (ஞானரதன்) மாமனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதவி தேவை: அவசரம் என்ற சொல்லுப் பகரமாக எமது நாட்டில் வழங்கும் சொல் என்ன?
எனக்கு ஏமிலாந்தி என்ற சொல்லுத் தான் தெரியும், அப்பா அடிக்கடி பேசிற படியால். கவனமில்லாமல் மனம் போன போக்கில் எங்கையாவது வாய் பார்த்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும். மற்றது தடுதாளி கேள்விப்படல்லை, பதகளி தெரியும்.
-
உதவி தேவை: அவசரம் என்ற சொல்லுப் பகரமாக எமது நாட்டில் வழங்கும் சொல் என்ன?
கடுகதி மீகதி சடுதி கடிதாக
-
உதவி தேவை: அவசரம் என்ற சொல்லுப் பகரமாக எமது நாட்டில் வழங்கும் சொல் என்ன?
அந்தரம்? உடனடி?
-
பொருந்தாப் போட்டி
நீங்கள் விளையாடின போட்டியையும் கட்டாயம் பார்த்திருப்பன். ஓமோம் ஒரு பக்க D பொக்ஸ் முழுக்க கிறவல்/சிறுகல், மண் நல்ல கட்டிச் செம்மண், ஓடி வந்தால் நிக்கேலாது. அங்கே இருந்த க்ரிக்கெட் பிட்ச் சையும் சேர்த்து ஆமி போனாப்பிறகு உழுத படியால் தான் அப்பிடி.
-
பொருந்தாப் போட்டி
சிறப்பான ஆரம்பம் @ரசோ அண்ணை, நெல்லியடி மத்திய கல்லூரி விளையாட்டு மைதான போட்டிகளிலும் (90 - 95) உதைபந்தாட்டத்திலும் நிறைய நேரத்தை வாழ்ந்திருப்பதால் மனதுக்கு நெருக்கமாக உள்ளது. தொடருங்கள்...
-
யாழ் கள உறவு பெருமாள் காலமானார்
துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
-
ஈழத்தின் ஓவிய, சிற்ப ஆளுகை ரமணி மறைவு !
ரமணி மாஸ்டரின் இரசிகர்கள், அவருடைய ஓவியங்களைப் பார்த்த உடனேயே அதன் பாணி மூலமாக அவர் வரைந்தவை என்பதை அடையாளப்படுத்தி விடுவார்கள். நல்ல உடற்கூற்றியலுடன் கூடிய மனித உருவங்களும், விரைவான தன்மை கொண்ட எளிமையான, ஆனால் மிகச்சரியாக அமைந்துள்ள கோடுகளும் அவரின் தனித்தன்மையாகும். அவருடைய நீர்வண்ணம் தீட்டும் பாணி இலங்கையில் முன்னோடியானது. அது, மென்மையான வண்ணக் கலவைகளையும் துடிப்பான தூரிகை வீச்சுகளையும் உள்ளடக்கிய ஒரு தனித்துவமான நுட்பமாகும். அவர் நீர்வர்ணத்தின் ஈரமான தன்மையைப் பயன்படுத்தி, பின்னணிகளில் வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று மென்மையாகக் கலக்கும்படி தீட்டியுள்ளதோடு, தாளின் வெள்ளை நிறத்தையே ஒளியாகப் பயன்படுத்தி நிழல்களுக்கும் வெளிச்சத்திற்கும் இடையிலான முப்பரிமாணத் தன்மையை உருவாக்கியிருப்பார். ஓஃப்செட் வருவதற்கு முன்னமே, புளொக் அச்சடிக்கும் நேரத்திலும் அவர் எளிமையான கோடுகளுடனும் சிறப்பான நிறத் தெரிவுகளுடனும் கவர்ந்திழுக்கும் வகையிலான முகப்போவியங்களைப் படைத்திருந்தார். கருப்பு வெள்ளையில் படத்துக்கான ஸ்கெட்ச் வரைந்து, ஒயில் பேப்பரை அதன் மேல் இருக்குமாறு ஒரு பக்கம் மட்டும் ஒட்டி, அதன் மேல் வண்ணங்களைத் தீட்டிக் குறித்திருப்பார். 1990 அளவில் அவர் தீருவிலில் போராளிகளின் சிற்பத்தைச் செய்தார். ஏழு போராளிகள், ஏழும் வேறு வேறு நிலைகளில், ஆண்கள், பெண்கள், வேறு முகங்கள் முக பாவனைகள் அப்படி ஒரு அமைவு இலங்கையில் வேறு எங்கும் இல்லை. அதன் பிறகு கிட்டு பூங்கா நல்லூரில் அமைக்கும் போது அங்கே கிட்டுவின் சிலையை உருவாக்கினார். கிட்டுவுடைய நிறையப் படங்கள் வைத்துக் கொண்டு அவருடைய முப்பரிமாணத் தோற்றத்தைக் கம்பீரமாக உருவாக்கினார். கிட்டுவின் மனைவியும் அங்கே அடிக்கடி வந்து தனது கருத்துக்களைச் சொல்வார். சிலை முடிந்த பிறகு அவர் சிலையைத் தொட்டுத் தடவி மிகவும் பூரிப்படைந்தார். அடுத்ததாக நெல்லியடி மத்திய கல்லூரியில் மில்லர் சிற்பமும் அருமையாக அமைந்து இருந்தது. மில்லரின் தாயார் கூட அவரை மிகவும் பாராட்டினார். பின்னராக அவர் உருவாக்கிய சேர் பொன் ராமநாதன் சிலை, நுண்கலைக் கல்லூரியின் முகப்பில் கம்பீரமாய் நிற்கிறது. தந்தை செல்வா, இந்து போர்ட் ராஜரத்தினம், கந்தையா உபாத்தியாயர், சரஸ்வதி சிலை என்று அதன் பின்னர் தொடர்ந்து சிற்பங்களைச் செய்து கொண்டே இருந்தார். அதன் பின்னர் ஆறுமுக நாவலர், தேவரயாளி நிறுவுனர் சூரன், பின்னர் அவர் செய்த சரஸ்வதி சிலையைத் திறந்து வைத்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுடைய சிலையையும் செய்தார். கடைசியாக அவர் உருவாக்கிய சிவசிதம்பரம் அவர்களுடைய சிலை நெல்லியடிச் சந்தியில் நின்றிருக்கிறது. அவர் தன்னால் இனிமேல் சிற்பங்கள் செய்ய உடல்நிலை ஒத்துழைப்பதில்லை என்பது தெரிந்ததும், தன் சிறப்பான மாணவர்களை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டி அவர்களை ஊக்குவித்தார். ஈழத்தில் நவீன ஓவியத்தை வெகுஜன ஊடகங்களில் அனைவரும் அடையும் வகையில் அறிமுகப்படுத்தியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. பத்திரிகைகளில் வந்த வரைபடங்களிலும் முகப்போவியங்களிலும் அவர் நவீன மற்றும் மறைபொருள் ஓவியங்களை நிறையவே படைத்தார். இதன் மூலம் நவீன ஓவிய ரசனையைத் தமிழ் மக்களிடையே பரப்பினார். கற்பனைத்திறனோடு புத்துருவாக்கம் செய்யும் பிரம்மாவாக அவர் உருவாக்கிய பல ஓவியப் படைப்புகளும் சிற்பங்களும் காலத்தால் அழியாதவை. எங்கள் சமூகத்தில் மீளுருவாக்கத்துக்கும் புத்துருவாக்கத்துக்கும் உள்ள வித்தியாசங்களைப் பிரித்தறியும் ஓவிய ரசனையை வளர்க்க அவர் தன்னாலானவற்றைச் செய்தார். காலம் தான் அதற்கான விடையை இனிமேல் அளிக்க வேண்டும். அவருடைய விவரங்களும் படைப்புகளும் இலங்கை ஓவியப்பாட ஆண்டு 10,11 பாடத்திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளது. அவருடைய கடின உழைப்புக்குக் கிடைத்த ஒரு மரியாதையே அதுவாகும். தனியே ஒரு வர்த்தக ரீதியிலான ஓவியராக இல்லாமல் அவருடைய தனிப் பாணியில் இலங்கைத் தீவில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த மாபெரும் ஓவியரின் தனிச்சிறப்புக்கு இந்த அங்கீகாரம் கட்டியம் கூறி நிற்கிறது. தற்பொழுது அவரிடம் பயின்ற, மற்றும் ஓவியம் பயிலும் மாணவர்களுக்கெல்லாம் அவர் படைப்புகள் உந்துசக்தியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பது அவருக்குப் பெருமை. வாழ்க அவர் புகழ்!
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்.
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
தனித்துவம் மிக்க ஓவியக் கலைஞர் ஓவியங்கள் - கதைகளுக்கு உயிர்த் துடிப்பை ஊட்டுவதோடு கதை சித்திரிக்கும் பாத்திரம், பகைப்புலம், காட்சிகளை வாசகர் மனதில் பதியவும் செய்கிறது என்பதில் தவறிருக்க முடியாது. சிலவேளை எனது கதைகளுக்கு வரையப்பட்டுள்ள படங்களைப் பார்த்துக் கொண்டு அதில் நான் ஒன்றிப்போய் விடுகின்றேனென்றால் அது ரமணியின் படங்களில் தான். இப்படிச் சொல்லும் போது ஒரு ஓவியன் எவ்வளவு தூரம் வெற்றியடைகின்றானென்பதை, அப்படைப்பாளியால் தான் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும் என்ற உண்மையை யாரும் மறுக்க மாட்டார்களென்றே நினைக்கிறேன். அப்போதெல்லாம் யார் இந்த ஓவியர் ரமணி? பெரிய பத்திரிகை நிறுவனங்களில் கொழுத்த சம்பளத்துடன் கடமையாற்றுகின்றவரோ! என்ற எண்ணம் தவிர்க்க முடியாது ஏற்பட்டதுதான்! அன்று......... பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் முதல் வருட மாணவனாகப் பிரவேசித்த முதலாம் நாள் - முன்பே தெரிந்த சில நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போதுதான், புன்னகை சிந்திய படி சாந்தம் ததும்பும் அந்த உருவம் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. 'இவர்தான் ரமணி இவரது சொந்தப் பெயர் வி. சிவசுப்பிரமணியம்' அறிமுகப் படலம் நடக்கிறது. திறமையில் மாத்திரமல்ல வயதிலும் முதிர்ந்தவர் தானென்று எனது எண்ணத்தை உடனே மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. மகிழ்ச்சித் துடிப்பில் அந்த ஆற்றல் மிக்க கரத்தை என்னால் விட்டு விட முடியவில்லை. அவருடைய அனுபவங்களையிட்டுக் கதைக்க வேண்டும் போலவும் இருந்தது. ஆயினும் இனித் தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்பு முழுமையாக இருக்கிறது தானே என்பதால் கூடவே ஒரு நிம்மதி. 'காலையில் இருந்தே எதிர் பார்த்திருந்தனான்' இதுதான் முதன் முதலில் என் செவிகள் சந்தித்த ரமணியின் குரல். முதல் வருட மாணவர்களை, பழைய மாணவர்கள் - ஆசிரிய கலாசாலை. பல்கலைக் கழகம் முதலிய இடங்களில் எதிர்பார்ப்பது எதற்காகவென்று தெரியும்தானே..........? அத்தகைய முதன்மைத் திமிர்களைத் தாண்டிய அக்குரலில் ஒரு புலமை நெஞ்சின் துணை முதல் நாளிலேயே கிடைத்துவிட்ட பூரிப்பு எனது மெய்யெல்லாம் பரவியது. அதைத் தொடர்ந்து எந்த வேளையிலென்றாலும் எத்தனை முறையென்றாலும் தனக்கேயுரித்தான புன்னகையை உதிர்த்த படிதான் செல்வார். நானும் கூட எப்பொழுது கலாசாலை நேரத்தில் ஓய்வு கிடைக்கிறதோ, அப்பொழுது நுண்கலைப் பகுதியை ஒருமுறை நோட்டம் விட்டு, அங்கும் பாடவேளையில்லாமலிருந்தால் ரமணியை நெருங்கி விடுவேன். நண்பர் அன்பு ஜவஹர்ஷாவும் கூடவே வந்து விடுவார். பிறகென்ன? பரஸ்பரம் கருத்துப் பரிமாறல்களும் அனுபவ வெளிப்பாடுகளும் தான். கொழும்பிலிருந்த காலத்தில் சில பத்திரிகாசிரியர்கள் நாலைந்து கதைகளைத் தூக்கித் தந்து, விருப்பமானதொன்றுக்குப் படம் கீறித் தருமாறு தந்துவிடுவதாகவும் இதனால் மிகுந்த ஆர்வத்துடன் அனுப்பும் குறிப்பாக இளம் எழுத்தாளர்களின் நிலையை எண்ணிப் பார்க்கத் தவறுகிறார்களென்றும் அவர் சொல்லும் போது, ஒரு பத்திரிகாசிரியன் எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற கருத்தை ரமணி அனுபவ வாயிலாகச் சொன்னது இன்று கூட பத்திரிகாசிரியர்களுக்குப் பொருத்தமானதுதான். இன்று நேற்றல்ல, கடந்த பத்தாண்டுக்காக ஓவியத் திறமையை, பத்திரிகைத் துறையோடு பிணைத்துப் பணிபுரிந்து வரும் இவர் இதுவரை சுமார் நூறு புத்தகம், சஞ்சிகைகளுக்கு அட்டைப்படம் வரைந்துள்ளார். அநேகமாக எல்லா ஈழத் தமிழ் தேசியப் பத்திரிகைகளிலும், 'தவச', வீரகேசரி வெளியீடுகளிலும் படம்வரைந்து வருகின்றார். குறிப்பாக நவீன பாணித் தமிழ் எழுத்துக்களையும் பத்திரிகை, சஞ்சிகைகளில் அறிமுகப்படுத்தியதும் ரமணி என்றே சொல்ல வேண்டும். இதை எழுதும் போது, அண்மையில் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட 'பூ' ஞாபகம் வருகின்றது. அதன் உள்ளடக்கத்தைப் பாராட்டியவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமானோர் நேரிலும் கடிதமூலமும் அதன் அட்டையைத்தான் பாராட்டினார்கள் என்ற செய்தி இதைப் படித்த பின்புதான் ரமணிக்குக் கூடத் தெரியவரலாம். 'பஞ்சமர்' வெளிவந்த புதிதில், அதன் அட்டையைப் பார்த்தவுடனே ஒருவர்... 'ஏன் இந்த முகங்கள் இவ்வளவு ஆவேசமாக இருக்கின்றன?' என்று கேட்டதாக மன்னார் நண்பரொருவர் சொன்னார். 'போராட்ட உணர்வு கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களை டானியல் சித்திரித்துள்ளார். அதைத் தானே ரமணி அட்டையில் தீட்டியுள்ளார்' என்று அவரிடம் கேட்டேன் நான். அதிகமேன் கடந்த பல வருடங்களாக 'மல்லிகை' அட்டையை அலங்கரித்து வருவது இவரது நவீன படங்கள்தானே. 'மல்லிகை அட்டையா? அது ரமணிதான் வரைய வேண்டும்' என்று திரு. டொமினிக் ஜீவா வாய்விட்டுச் சொல்வார். 'ஈழத்தின் முதல் தரமான ஓவியர்' என்று ஓவியக் கலைஞரான 'சிரித்திரன் - சுந்தர்' கூடப் பலதடவை மனந் திறந்து கூறியுள்ளார். இத்தனைக்கும் இவர் ஒரு சிற்பக் கலைஞரும் கூட என்பது பலருக்குத் தெரியாமலிருக்கலாம். என்ன இருந்தாலும் இங்கு கலைஞர்களுக்கு ஏற்ற சன்மானங்களும் கௌரவங்களும் அளிக்கப்படுவதில்லையென்ற உண்மையை 'சில வேளை நான் அட்டை வரைந்த புத்தகங்களை நானே வாங்கிப் பாதுகாக்க வேண்டியுள்ளது' என்று கூறும் பொழுது அறிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலைமை எப்போதுதான் மாறுமோ? ஒருநாள் கையில் 'கணையாழி' யுடன் நடந்து கொண்டிருந்தேன் நான். எதிர்ப்பக்கமாக சைக்கிளில் வந்தவர், நிறுத்தி இறங்கி என் கையிலிருந்த சஞ்சிகையை வாங்கி அட்டைப் படத்தைப் பார்த்தவர் 'இத்தகைய நவீன ஓவியங்களை ஈழத்துச் சஞ்சிகைகளும் வெளியிட வேண்டும். இத்தகைய படங்களை வாசகர்கள் இரசிக்கச் செய்ய வேண்டுமல்லவா?' என்று கேட்டவாறே பக்கங்களைப் புரட்டத் தொடங்கினார். இடையிடையே அவரது கவனம் புதுக்கவிதைகளில் படிவதை நான் அவதானிக்கத் தவறவில்லை. 'ஆழமான விடயங்களைக் கூட மிக அழகாகப் புதுக்கவிதைகளில் எழுதுகிறார்கள். ஈழத்தில் கூட நிறைய வெளிவருகின்றன' என்று தனது கருத்தைக் கூட அப்போது கூறி வைத்தார். இயற்கையான கலைத்துவம் கொண்ட ரமணி அத்தோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. நுண்கலைகளைக் கல்லூரியில் பயின்று, தனது ஆற்றலை நெறிப்படுத்தி 'டிப்ளோமா இன் ஆர்ட்' இல் முதற்தரத்தில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து, தேசிய நூதன சாலையில் தயாரிப்பு உதவியாளராக மூன்று வருடம் கடமையாற்றியுள்ளார். மல்லாகத்தில் வசிக்கும் இவர் தற்பொழுது ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலயத்தில் விசேட ஆசிரியராகப் பணிபுரிகிறார். ரமணியிடமிருந்து கலையுலகம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பு நிச்சயம் வீண் போகாது என்றே நம்புகிறேன். - திக்குவல்லை கமால் (மல்லிகை அட்டைப்பட ஓவியங்கள் - மார்ச் 1974)