Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

narathar

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

  1. சுவாமிநாதன் யாழ்ப்பாணத்தில் கல்லும் மண்ணும் இல்லை வீடு கட்டுவதற்கு என்று சொல்கிறார், அப்படியாயின் யாழ்ப்பாணத்தில் இந்திய வீட்டுத்திட்டம் எதனால் கட்டப்பட்டது? இதெல்லாம் கேட்பதற்கு பத்திரிகையாளர் இல்லையா? என்ன வெட்கக் கேடான நிலைமை இது? கல் மண் வீட்டிற்க்கு ஆகும் செலவை விட இரு மடங்கு செலவு ஆவாது பற்றி இவர் என்ன பதில் சொன்னார் ? யாரும் கேட்க வில்லையா? இவரால் கட்ட முடியாவிட்டால் , வட மாகாண சபையிடம் இந்தப் பணத்தைக் கொடுத்தால் அவர்கள் இரண்டு மடங்கு வீடுகள் கட்டி, மக்களுக்கு வேலை வாய்ப்பையும் கொடுப்பார்கள். அதனை ஏன் ஒருவரும் கேட்க வில்லை?
  2. தவறான செய்தி பிரித்தானியாவின் எதிர்க்கட்ச்சித் தலைவர் ஜிம்ஸ் பெரி அல்ல
  3. தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி (James Berry MP) அவர்கள் தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதுடன் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் என தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் இப் புது வருடத்தில் ஐ. நா சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி தொடர்பான பொறிமுறை நம்பகரமானதகவும் சுதந்திரமானதகவும் செயற்படுவதை உறுதிப்படுத்துவதுடன் தமிழர்களின் அரசியல் தொடர்பான அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிபர் மைத்திரி அவர்கள் தமிழர்களின் நிலங்களை மீள ஒப்படைத்தல் மற்றும் இராணுவ வெளியேற்றம் தொடர்பாக சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை மதிக்க வேண்டும் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் பிரித்தானிய அரசும், தமிழ் மக்களும் வெறும் வாக்குறுதிகள் மட்டுமல்லாது அவை நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் 11-04-2016ஆம் திகதி திங்கள் அன்று மாலை பிரித்தானியத் தொழில்கட்சிக்கும், பிரித்தானியத் தமிழர்களுக்குமிடையிலான ஒன்று கூடலில் கலந்து கொண்ட பிரித்தானியாவின் எதிர்க் கட்சித் தலைவர் திரு ஜெரேமி கொர்பின் (Jeremy Corbyn MP) அவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். பிரித்தானியாவின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளமை மிகுந்த கவனத்திற்குரியது. ஒரு நாட்டின் ஆழும் கட்சியையும் எதிர்க் கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தமிழர்கள் தொடர்பானதும் இலங்கை அரசுக்கு எதிரானதுமான இவ்வாறான வெளிப்படையான கருத்துகளுக்குப் பின்னால் புலம் பெயர் வாழும் தமிழ் அமைப்புக்களின் தீவிரமான அரசியல் செயற்பாடுகளே முக்கிய காரணமாக உள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையினரால் உருவாக்கப்பட்ட பிரித்தானியாவின் அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயற்ப்படும் அமைப்பாக தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழு செயற்பட்டு வருகின்றது. இவ் அமைப்பினூடாக பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ச்சியாக தமிழர்களின் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளை பிரித்தானியாவில் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பத்து வருடங்களாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் தொடர்ச்சியாக மேற்க்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான அரசியல் நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளின் தலைவர்களின் மத்தியில் தமிழர்கள் தொடர்பான கரிசனையையும் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேச நாடுகளின் தலையீட்டின் முக்கியத்துவம் குறித்தும் தாக்கத்தினை ஏற்ப்படுத்தி உள்ளது. பிரித்தானியா தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை பிரயோகிப்பதற்கும், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு தொடர்ச்சியாக குரல் கொடுப்பதற்கும் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) மற்றும் British Tamil Conservatives (BTC), Tamils for Labour (TfL), Tamil friends of Lib dem (TfLibDem) போன்ற ஏனைய புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் தொடர்ச்சியான அரசியல் செயற்ப்பாடுகள் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது. கடந்த மார்ச் மாதம் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கு பற்றிய பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசினால் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்க்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தமது கண்டனங்களை தெரிவித்ததுடன் இலங்கை அரசு யுத்தக் குற்றம் தொடர்பாக பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை மேற்க்கொள்வதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறித்தியிருந்தனர். அண்மைக்காலமாக பல உலகத் தலைவர்கள் சர்வதேச விசாரணை மற்றும் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை தொடர்பான தமது ஆதரவினை வெளிப்படையாக வெளிப்படுத்துவது தமிழர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையினை உருவாக்கியுள்ளது. குறிப்பாக தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்விற்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பிய பிரித்தானிய பிரதமர் சர்வதேச விசாரணை தொடர்பான தனது உறுதியான நிலைப்பட்டை மீண்டும் உறுதிப்படுத்தி இருந்ததுடன் ஸ்பெயினிலுள்ள காடலோனியா மாநிலத்தின் சுதந்திரத்துக்கான ஒருமைப்பாட்டு அமைப்பினை (Catalan Solidarity for independence) உருவாக்கியவரான அல்போன்ஸ் லோபெஸ் டேன (Alfons Lopez Tena) அவர்கள் இலங்கைத் தீவில் தமிழர் தேசத்திற்க்கான அங்கீகாரமும் சுய நிர்ணய உரிமையும் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. -- [email protected]
  4. விசுகு , இதை தமிழனி எழுதினாரா இல்லையா என்னும் விவாதத்திற்குள் நான் இறங்கவில்லை , ஏனெனில் அது எனக்குத் தெரியாத விடயம். ஆனால் அந்தப் புத்தகத்தை வாசித்ததில் இருந்து நான் புரிந்து கொண்டது, அதை எழுதியவர் மிகவும் குழப்ப நிலையில் இருந்து அதை எழுதி உள்ளார் என்பதே. உதாரனத்திற்கு . வரி விதிப்பின் மீது விமரிசனம் வைக்கிறார், அதே நேரம் போராளிக்களுக்கு சாப்பாடு இல்லை வசதிகள் இல்லை என்றும் விமரிசனம் வைக்கிறார். அப்படியாயின் தலைவர் என்ன மரத்தில் இருந்தா காசை எடுப்பது? முள்ளிவாய்க்கால் கடைசி நிமிடம் வரை ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட தமிழனி அதனையும் விமர்சிக்கிறார். இதில் தமிழனிக்குப் பங்கு இல்லையோ ? பல இடங்களில் தான் மவுனமாக இருந்தேன் என்கிறார் . ஏன் ? தலைமை செய்வது சரி என்பதை அமோதித்தால் தானே ? சரியான ஒன்று பின்னர் பிழையாகிப் போனது, தோல்வியின் பின்னர் தானே ? வென்று இருந்தால், இதனைப் பிழை என்று எழுதி இருப்பாரோ ? ஆகவே இங்கு சரி பிழை என்பது வெற்றி தோல்வியில் இருந்து பார்க்கப்படுகிறது. இது வெறும் உணர்வு சார்ந்த பார்வை. அறிவு சார்ந்தது கிடையாது. போராட்ட விமரிசனம் என்பது தன்னிலை சார்ந்த உணர்வின் அடிப்படையில் செய்யப்பட முடியாது. அது அறிவு சார்ந்தே முன் வைக்கப்பட வேண்டும் . அவ்வாறான விமர்சினத்தை தமிழனி செய்ய வில்லை. ஆகவே இதை தமிழினியின் , உணர்வு சார்ந்த , போராடப் போன ஒரு சாதாரணப் பெண்ணின் , தோல்வி அடைந்த போராட்டத்தில் , தன்னைச் சரியென நிறுத்தும் உணர்வு சார்ந்த வெளிப்பாடாக மட்டுமே பார்க்க முடியும். இது அறிவு சார்ந்த விமரிசனமோ, போராட்டத்தில் தாக்கம் செலுத்திய பூகோள நலன் சார் சக்திகளின், சிறிலங்கா அரசின் மனித விரோத செயற்பாடுகள் பற்றிய விமரிசனமோ கிடையாது. இதில் சொல்லப்பாடாத விடயங் களே இதன் பின்னால் இருக்கும் அரசியலையும், உளவியலையும் அதன் பின்னால் இருக்கும் சக்திகளையும் இனம் காட்டுகின்றன .
  5. தமிழினியும் தன்னை வெள்ளை அடிபதற்காக எழுதி உள்ளார் அல்லது எழுத வைக்கப்படுள்ளார் . தமிழினி நீண்ட ஒரு உளவியல் தயார்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுள்ளார் என்பது அவர் எழுத்தில் இருந்து தெரிகிறது. இதில் எழுதாதவர்கள், எழுத முடியாதவர்கள் பாவிகள் ஆக்கப்படுள்ளனர் . பதினாறு வயதில் வீட்டை விட்டுச் சென்ற ஒரு பாலகன் தன் சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகளோடு மோதி தன் இனத்தின் விடுதலைக்காக எல்லாப் பாவங்களையும் இழப்புக்களையும் தாங்கிச் சிலுவையில் அறயப்படுகிறான். இதில் எல்லாத் துயருக்கும் காரணமான பிரம்மாக்கள் இன்றும் நியாயவான்களாக உலா வருகின்றனர். இவர்களை அடையாளப்படுத்துவதை விடுத்து, நாம் போராட்டத்தைத் தொடர்வதை விடுத்து, இவ்வாறான உளவியல் போரை அடையாளாம் காண்பதை விடுத்து மீண்டும் மீண்டும் நம்மையே சிலுவையில் அறைகிறோம் . பிரபாகரனைத் தலைவன் ஆகியதில், முழுத் தமிழச் சமூகத்திற்கும் பொறுப்பு இருக்கிறது. பிராபகரனின் செயற்திறன், நேர்மை, அர்ப்பணிப்பு ,தியாகம் இதற்கு நிகராக என்னால் இந்த உலகில் எவரையும் காணமுடியாது. அந்த மனிதனுக்கும் எல்லைகள் உண்டு என்பதை நாங்கள் மனிதர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாப் பாவங்களையும் அவரிடம் சேர்ப்பது நாம் எமது ஆன்மாவுக்குச் செய்யும் வஞ்சகம் .
  6. முக்கியமா சுயநிர்ணய வாக்கெடுப்பும் அங்கு நடந்தது என்பதையும் அய்யா தெரிந்து கொள்ள வேண்டும்.
  7. //ஜனவரி 8ம் திகதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தோல்வியை சந்தித்திருந்தால், பழைய ஆட்சியாளர் மூலம் இலங்கை நினைத்து பார்க்க முடியாத ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும். மார்ச் மாதத்தில் போர்க்குற்ற அறிக்கையை வெளியிட்டு அதில் பெயர்கள் குறிப்பிட்டு இராணுவத்தினர் மீது போர்க்குற்றம் சுமத்த வாய்ப்பு இருந்தது. பின் சர்வதேச விசாரணை மூலம் இலங்கைக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டு சர்வதேச தடைகள் பல விதிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கை மீது தடை விதித்தால் போதும் இலங்கையில் முழு பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து ஆடைத்தொழிற்சாலை துறையில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்திருப்பர். ஆனால் அப்படி ஒன்று நடக்காமல் நாம் பாதுகாத்துள்ளோம். உண்மையை சொல்வதாயின் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச போர்க்குற்ற விசாரணை மூலம் மின்சார நாற்காலிக்கு செல்லவிருந்த ஆபத்தை தடுத்தது தமது அரசாங்கமே´ என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.//
  8. சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டதுஎன நேற்றைய (05.09.2015) தினம் மாவை சேனாதிராசா தெரிவித்த நிலையில் இன்று(06.09.2015) ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்மாவட்டத்தில் அதிகூடிய விருப்புவாக்கினை பெற்றவருமான சிறிதரன் அவர்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தான் ஐ.நா செல்லவுள்ளதாக உறுதியாக தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தலுக்கு முன்னர் தாம் கூறியதுபோல மக்களுக்கு உறுதியளித்த கொள்கைக்காக தொடர்ந்தும் தனக்குரிய பணியை செவ்வனே செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.அமெரிக்காவால் தான் எந்த தீர்மானத்தையும் கொண்டுவரமுடியும் என்றும் அதற்காக அமெரிக்கா சொல்லும் எல்லாவற்றுக்கும் நாம் தலைஆட்டவேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்வின்போது சர்வேதேச விசாரணை முடிவடைந்துவிட்டது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் தெரிவித்த கருத்தை மீண்டும் இந்த நிகழ்வில் வலியுறுத்திய மாவை சேனாதிராசா ஆனால் சிலர் சர்வதேச விசாரணை நடக்கவில்லை என்று புரியாமல் பேசுவதாகவும் நீதியரசராக இருந்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இது புரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம் தான் என்றும் தெரிவித்தார். அத்தோடு நின்றுவிடாமல் தற்போது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து போராட்டத்திற்கும் முதலமைச்சருக்கும் தொடர்பிருப்பதாகவும் அது தொடர்பில் தாம் முதலமைச்சரை அணுகுவதற்கு (கையாள்வதற்கு) திட்டமிருப்பதாகவும் மிடுக்குடன் தெரிவித்திருந்தார். இந்த கையெழுத்து போராட்டத்தில் சுரேஸ் பிரேமச்சந்திரன்,சிறிதரன்,சிவசக்தி ஆனந்தன்,சிவாஜிலிங்கம்,அனந்தி சசிதரன் மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகள் கையொப்பமிட்டிருந்தமை சுமந்திரன் மாவை தரப்பினரை கடும் கோபம் கொள்ள வைத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தல் பிரச்சாரங்களிலும் கடந்த பெப்ரவரி மாதம் பல்கலை சமூகம் மற்றும் சிவில் அமைப்புகளால் நடாத்தப்பட்ட மாபெரும் பேரணியில் பேசிய மாவை சர்வதேச விசாரணையை தாம் தொடர்ந்து வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். (மேலுள்ள காணொளியில் மாவையின் இரு கட்ட பேச்சும் இணைக்கப்பட்டுள்ளது 1.46 ஆவது நிமிடத்தில்) இவ்வாறு சுமந்திரனைப்போல தேர்தலுக்கு முன்னர் வாக்கை பெறுவதற்காக சர்வதேச விசாரணை என வலுயுறுத்தி வாக்கை பெற்று வெற்றி பெற்ற பின்னர் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும் அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் மாவை சுமந்திரன் மற்றும் சம்பந்தன் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மாகாணசபையில் 2ஆவது அதிகூடிய வாக்கினை பெற்ற(87,000) அனந்தி சசிதரன் அவர்களும் ஜெனீவா செல்லவுள்ளார். http://www.tamilkingdom.org/2015/09/7.html
  9. 2016ம் ஆண்டில் தீா்வைப் பெற்றுத்தருவேன் என்று நான் கூறவில்லை” “அவ்வாறு வெளியான சுடரொளி பத்திரிகையின் தலைப்புச் செய்தியை நான் ஏற்றுக்கொள்வில்லை“ “2016ம் ஆண்டில் இந்தத் தீா்வு ஏற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு..... அதைப் பெறுவதற்கு எம்மாலான அத்தனை முயற்சிகளையும் பெறுவோம் என்று உறுதியாகக் கூறியது உண்மை! நாங்கள் தீா்வைப் பெற்றுக்கொள்ள எம்மாலான அனைத்து நடவடிக்கை முயற்சிகளையும் மட்டுமே நாம் மேற்கொள்வோம்! (23.50ல் இருந்து கேளுங்கள்) ஐயா! என்னே உங்களின் ராசதந்திரம்! 2016ம் ஆண்டில் நாம் தீா்வைப் பெற்றுத்தருவோம். எமக்கு ஒரு சந்தா்ப்பத்தைத் தாருங்கள் என்ற தோ்தல்கால பிரசாரங்கள் என்னவாயிற்று! https://soundcloud.com/imurasuweb/i0wiuf6ehmt3
  10. நாராயணனுடன் சேர்ந்து செய்த சதித் திட்டத்தை சம்பந்தன் வெளியிடுவாரா?
  11. இலங்கை பாராளுமன்ற தேர்தல் - 2015 எதிர்வரும் 17 ஆகஸ்ட் 2015 இல் இலங்கையில் மேலும் ஒரு பாராளுமன்றத் தேர்தல் இடம் பெறுகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இத் தேர்தல்கள் அர்த்தமற்ற நிகழ்வுகளாகவே இருந்து வந்துள்ளன. சிங்கள மேலாதிக்கம் ஓங்கும் இப் பாராளுமன்றம் சனநாயகப் போர்வையில் தமிழர் தேசியத்தின் அத்திவாரத்தையே அழித்தொழிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு வந்திருக்கின்றது. இதே பாராளுமன்றமே எமது மக்கள் மீது மீண்டும் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்புத் தாக்குதல்களை முடுக்கி விட்டிருக்கின்றது. 70,000ற்கும் மேற்பட்ட எம் மக்களை காவு கொண்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்புத் தாக்குதலுக்கான ஆணையை வழங்கியதும் இதே பாராளுமன்றமே. எமது பாரம்பரிய தாயக மண்ணை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் சிதைத்தொழிக்கும் செயலையும் இப் பாராளுமன்றமே நிறைவேற்றி வந்திருக்கின்றது. எம் மக்களின் மேல் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும் அநீதிகளுக்கும் நீதி கிடைப்பதற்கு தடையாக இருப்பதும் இதே பாராளுமன்றமே. 1948ஆம் ஆண்டு தொட்டு தமிழ் மக்கள் இப் பாராளுமன்றத்திற்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பி வந்திருக்கின்றார்கள். சிங்கள மேலாதிக்கம் ஓங்கும் இப் பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள் எதையுமே சாதிக்க முடியவில்லை. தமிழ் மக்களின் கோரிக்கைகளை சிங்கள மேலாதிக்கம் முற்றிலும் புறக்கணித்தே வந்திருக்கின்றது. இலங்கை அரசியலில் தமிழர் தலைமைகளுக்கும் சிங்களத் தலைமைகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டு பின் கிழித்தெறியப்பட்ட உடன்படிக்கைகள் ஏராளம். இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனத்தை ஒரு சம பங்காளியாக ஏற்க சிங்கள தேசம் மறுத்து வருகின்றது. மாறாக தமிழ் தேசியத்தின் அத்திவாரத்தையே தகர்த்தழிக்கும் செயற்பாடுகளில் சிங்கள தேசம் முனைப்புடன் ஈடுபடுகின்றது. இத் தேர்தலில் போட்டியிடும் சிங்களக் கட்சிகள் எதுவும் தமிழர் தேசியப் பிரச்சினை பற்றியோ அல்லது அதிகாரப் பகிர்வு பற்றிய தமது கொள்கைகளையோ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடவில்லை. சிங்கள வாக்குகளை இழக்க நேரிடும் என்ற பயமே இதற்கான காரணம் ஆகும். சிங்கள தேசம் தமிழர் தேசத்துடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு தயாராகவில்லை என்பதையே இது கோடிட்டுக் காட்டுகின்றது. மேற்குறிப்பிட்ட ஒரு பின்னணியிலேயே தமிழ் மக்கள் சிங்கள மேலாதிக்கப் பாராளுமன்றத்திற்கான தேர்தலை எதிர்கொள்கின்றார்கள். இந்த இன அழிப்புச் சிங்கள அரசின் கீழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பேரபாயத்தை உணரத் தொடங்கியிருக்கும் சர்வதேச சமூகம் இந்தத் தேர்தலை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. சிங்கள தேசம் தமிழின அழிப்பை தொடரும்போது தமிழ் மக்கள் வாழாதிருக்க மாட்டார்கள் என்ற தெளிவான செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்தியம்ப வேண்டிய தருணமிது. எமது உயிர்களுக்கும் எம் மண்ணுக்கும் எம் வாழ்வாதாரங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இன அழிப்பு சிங்கள தேசத்திடமிருந்து எம்மைப் பாதுகாக்கவும் எமது எதிர்காலத்தை நாமே நிர்ணயிக்கவும் வேண்டிய அவசியத்தை சர்வதேச சமூகத்திற்கு நாம் உணர்த்துவோம். இனவழிப்புச் சிங்கள தேசத்திடமிருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாப்பதில் நேர்மையாகவும் உறுதியுடனும் இருக்கும் பிரதிநிதிகளை தமிழ் மக்கள் தெரிவு செய்தல் இன்றியமையாதது. தம் மக்களின் மேல் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு அனைத்துலக மன்றத்தில் நீதி கோரும் நடவடிக்கைகளில் தம் பிரதிநிதிகள் செயல்பட வேண்டுமென்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. வெறுமனே பாராளுமன்ற கதிரைகளை நிரப்பும் பணிகளை விடுத்து மக்களை அணி திரட்டி எமது விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் பிரதிநிதிகளையே தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்றார்கள். எமது மக்கள் எதிர்நோக்கும் வாழ்வபாயத்தைச் சிறிதும் உணராத சக்திகளுக்குப் பணியாத தைரியமுள்ள தலைமைகளையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையே சர்வதேச சனநாயக சமூகம் சட்டபூர்வமான மக்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்கின்றது. எனவே தமிழ் மக்கள் எமது விடுதலையில் உறுதியுடன் இருக்கும் பிரதிநிதிகளை தெரிவு செய்வது அத்தியாவசியம் ஆகும். சர்வதேச அரசியல் போக்குகளைப் புரிந்து கொண்டு சர்வதேச சமூகத்தை எம் விடுதலையின்பால் வென்றெடுக்கும் சாதுரியமுள்ளவர்களையே எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அதிவேகத்தில் நடந்து வரும் இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கையினால் தமிழ் மக்களின் இருப்பு பெரும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. அரசியல் தீர்வொன்றிற்கான அடிப்படைகள் இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்காக எமது மூத்த தலைவர்கள் முன்மொழிந்த பின்வரும் மூன்று அடிப்படைக் கோட்பாடுகளை நாமும் வலியுறுத்துகின்றோம். 1. தமிழர் தேசத்தை அங்கீகரித்தல். 2. வடக்கு கிழக்கு தமிழரின் பாரம்பரிய தாயக பூமியாக ஏற்றுக் கொள்ளல். 3. தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளல். சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றே தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனப் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வழி செய்யுமென்று தமிழ் மக்கள் உறுதியாக நம்புகின்றார்கள். உள்ளக விசாரணையோ அல்லது உள்ளகக் கலப்புப் பொறிமுறையோ வெறும் கண் துடைப்பாக அமைவது மட்டுமல்லாது குற்றவியல் சாட்சியங்களை பேராபத்திற்கு உள்ளாக்கும் என்பதனால் தமிழ் மக்கள் இப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கின்றார்கள். இராணுவத்தை வெளியேற்றல் உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தமிழ் மக்கள் பாரிய ராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளக்கப்பட்டுள்ளனர். போர் முடிவக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அடித்தளங்களை தகர்த்தெரிவதற்கு சிங்கள ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கை அரசின் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டு சிங்கள ராணுவமனது விவசாயம்இ வர்த்தகம் இ சுற்றுலா போன்ற பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சட்டத்திற்கு முரணாக துப்பாக்கி முனையில் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. எமது மக்களின் வீடுகளையும் நிலங்களையும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்குள் வைத்து அவர்களை இடம்பெயர் முகாம்களுக்குள் தள்ளி நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்க வைத்துள்ளது. எம் தாயக பூமியில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் தமிழ் பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர். தமிழர் தேசத்தின் சமூக கட்டமைப்பை நிர்மூலமாக்கும் இலங்கை அரசின் மூலோபாயத்தின் ஒரு அம்சமாக சிங்கள ராணுவம் எம் தாயகப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. தெரிவு செயப்படும் பிரதிநிதிகள் மேற்ப்படி பாதிப்புக்குள்ளான மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கி வழி நடத்தவேண்டும். தமிழ் தேசிய பொருளாதாரம் எம் தாயகத்தில் எம் மக்களின் சமூகஇ பொருளாதார மற்றும் மருத்துவ தேவைகளை கண்டறியும் முகமாக ஒருங்கிணைக்கப்பட்ட தேவைகள் மதிப்பீட்டாய்வினை செய்ய விடாது ஸ்ரீலங்கா அரச தடுத்துவருகின்றது. இவ் ஆய்வினைச் செய்து முடிப்பதற்கும் தமிழர் தாயகத்தின் பொருளாதரத்தை மீள கட்டியெழுப்பி பேணுவதற்கு தேவைப்படும் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வழிமுறைகளை திறந்து விடுவதற்கும் தெரிவு செயப்பட்டிருக்கும் தமிழ் பிரதிநிதிகள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல் தீர்வுக்கு அடிப்படை கோட்பாடுகளில் உறுதியாக நிற்கும் அதேநேரத்தில் இராணுவமயமாக்கல்இ போதைப்பொருள் பாவனைஇ வேலைவாய்ப்பின்மைஇ தமிழ் தேச பொருளாதார மீளமைப்பு போன்ற விடயங்களை சரியாகக் கையாளக்கூடியவர்களையே தமிழ் மக்கள் தெரிவு செய்வார்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை எதிபார்க்கிறது. சிங்கள மேலாதிக்க பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள் பெரிய மாற்றங்களை செய்ய முடியாவிட்டாலும்இ அவர்கள் சர்வதேச அரங்கில் தமிழ் மக்களிடமிருந்து வேறு பிரிக்க முடியாத சுயநிர்ணய உரிமைக்காக செயல் படுவதும் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடும் மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை கொடுப்பதும் அவசியமானதாகும். மேற்படி காரணங்களுக்காக தகுதியுள்ள ஒவ்வொரு தமிழர் வாக்காளர்களும் தமது வாக்குரிமைகளை சரியான முறையில் பயன்படுத்துவர் என எதிர்பாக்கிறோம். நீதிக்கும் சுயநிர்ணய உரிமைக்குமான புலம் பெயர் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் குரலுக்கு வலுச்சேர்க்கும் முகமாக தமது வாக்குரிமைகளை பயன்படுத்துமாறு தாயகத்தில் வாழும் எம் உறவுகளை வேண்டிக் கொள்கிறோம். பிரித்தானிய தமிழர் பேரவை http://seithy.com/breifNews.php?newsID=138102&category=TamilNews&language=tamil
  12. தயாரிப்பு: பிரித்தானியா தமிழர்கள்
  13. //கூட்டமைப்பு உள்ளக விசாரணை என்ற கருத்தை முன்வைப்பதால்// //அவர்களுடைய பேச்சுகளிலேயே ஒற்றையாட்சிப் பாராளுமன்ற எல்லைக்குள் தமக்குத் தேவையானதை கெஞ்சிக் கூத்தாடிப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம் என்று கூறுகின்றனர். // //ஆக, சர்வதேச விசாரணை என்று கஜேந்திரகுமார் அணி கூறுவதன் உள்ளர்த்தம் என்ன? இதை அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். வெற்று கோசம் என்று கூறுவது இதுதானோ? // இவ்வாறான உள்ளகப்பொறிமுறையை பாதிக்கப்பட்ட மக்கள் நிராகரிப்பார்களேயானால் அந்தப் பொறிமுறைக்கு சர்வதேச மட்டத்தில் எந்தப் பெறுமானமும் இருக்கப்போவதில்லை. அதற்கு பதிலாக ஒரு தீர்ப்பாயத்தையோ, சிறப்பு நீதிமன்றத்தையோ அமைக்கும் நிலை ஏற்படலாம். இந்த விடயத்தில்தான், உள்ளகப் பொறிமுறையுடனான நீதி விசாரணையை கூட்டமைப்பினர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவ விழைகிறார்கள். இவ்வாறு உதவுவதை 'நல்லிணக்க' அடிப்படையில் வெளித்தரப்புகள் வரவேற்கின்றன. http://www.yarl.com/forum3/topic/161624-இடத்திற்கிடம்-வேறுபாடாகக்-கதைத்து-சுமந்திரன்-தப்பிக்-காெள்கிறார்/ // அதில் பாதிக்க பட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் நீதியும் முன்னேற்றம் பெற ஏதும் வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகின்றது. காரணம் அவர்களின் எதிர்பார்ப்பு, நோக்கம் எல்லாம் சர்வதேச விசாரணையை சார்ந்தே இருக்கின்றது.// //அவர்கள் இலங்கை அரசே விசாரணையை நடத்தும் என்றால் அது போலி நீதிமன்றமாகவே இருக்கும். அது நீதியை பெற்று தரும் என்று துளியும் நம்பிக்கை இருக்காது. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் விவாதம் வர இருக்கும் நிலையில் கிடைத்துள்ள இந்த ஆவணம் அதிர்ச்சியாக உள்ளது.// // இந்த ஆவணத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தாலும் வட மாகாண முதல்வரிடம் இதை பற்றி நங்கள் கேட்ட போது, இந்த ஆவணத்தை தாம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அதற்காக ஏதும் செய்ய விரும்பவில்லை, இந்த ஆவணம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் என்றும் தெரிவித்தார். அதிர்ச்சியூட்டும் இந்த ஆவணத்தை பார்க்கும்போது இதில் ஐநாவும் அல்லது ஐநாவில் இது தொடர்பில் இயங்குவோரும் இலங்கை அரசோடு சேர்ந்து திரைமறைவில் உள்நாட்டு விசாரணையை கொண்டுவருகிறார்கள் என்ற சொல்லப்பட்டு வந்த குற்றசாட்டு மேலும் உறுதியாகிறது. ஆயினும் நமக்கு தெரியும் பாதிக்கப்பட்டவர்களும் பெரும்பாலான தமிழ் அமைப்புக்களும் இதனை 'ஒரு போலி நீதிமன்றத்தை தவிர வேறொன்றும் இல்லை - நீதியை எதிர்பார்த்தவருக்கு நம்பிக்கை துரோகத்தை தவிர வேறொண்டும் இல்லை' - என்றே கருதுவார்கள்."// ////கூட்டமைப்பு உள்ளக விசாரணை என்ற கருத்தை முன்வைப்பதால்//// http://www.yarl.com/forum3/topic/161623-சானல்-4-அம்பலப்படுத்திய-ஐநாவின்-ஆவணம்-குறித்த-காணொளி-அதன்-தமிழாக்கம்/

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.