Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

zuma

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. கடும் சிங்ஹல தேசியவாதிகளும் , கடும் தமிழ் தேசியவாதிகளும், நவநீதம் பிள்ளை அவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்ததை விரும்பவில்லை. அவர்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். அவர்கள் ஒருபோதும் ஒன்றினைய போவதில்லை, ஆனால் அவர்களால் சாதாரண மக்களுக்கு எந்தவித பயனுமில்லை 🤪
  2. நவநீதம் பிள்ளை அவர்கள் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட தமிழ்-தெலுங்கு கலப்பு குடும்பத்தில் பிறந்தவர் ஆவர் . தாய் தெலுகு, தகப்பன் தமிழ்-தெலுகு கலப்பு-நாராயணசாமி நாய்டு. அவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவர்தான் தமிழ் கிறிஸ்தவர் . பரஞ்சோதி அந்தோனிப்பிள்ளை. நதி மூலம், ரிஷி மூலம் பார்ப்பது என கோவிக்க கூடாது . ஒரு சிலர் தெலுங்கு வழி தமிழர்களை , வடுகர் எனவும், துரோகிகள் எனவும் தூற்றி திரிகின்றார்கள். நவநீதம் பிள்ளை அவர்கள் உலகெங்கும் (அது ஸ்ரீலங்கா- தமிழீழம் ஆகட்டும், காசா- இஸ்ரேல் ஆகட்டும்) அநீதிகளுக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்தவர் ஆவர், நோபல் பரிசுக்கு மிகவும் தகுதியுடைய வீரப்பெண்மணி ஆவர்.
  3. 1. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) அரசியல் நடவடிக்கைகளுக்காக சதொச நிறுவனத்தின் 153 ஊழியர்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், இதனால் சுமார் ரூ. 40 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2. விமல் வீரவன்ச (Wimal Weerawansa) சட்டபூர்வமான வருமானத்தைவிட ரூ. 75.4 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு. 3. மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) 2014 ஜனாதிபதித் தேர்தலின்போது 14,000 கரம் பலகைகளை விநியோகிப்பதற்காக அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. 4. பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தேர்தலுடன் தொடர்புடைய வகையில் கூரைத் தகடுகளை விநியோகிப்பதற்காக திவிநெகும நிதியிலிருந்து ரூ. 2.991 பில்லியன் தொகையைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. 5. ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) மோதர மீன்பிடித் துறைமுகத்தை அதன் உண்மையான பெறுமதியைவிடக் குறைந்த வாடகைக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. 6. ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) 2016ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி பரிவர்த்தனைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளும், வாடகை செலுத்தாமல் பென்ட்ஹவுஸ் குடியிருப்பில் வசித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. 7. பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) ஒரு வர்த்தகரிடம் ரூ. 64 மில்லியன் கோரியதாகத் தொடர்புடைய வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அது ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ரூ. 25 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது. 8. பிரியங்கர ஜயரத்ன (Priyankara Jayaratne) குடியியல் விமானப் போக்குவரத்து அதிகாரசபைக்குச் சொந்தமான ரூ. 9.1 மில்லியன் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் சட்டவிரோத நியமனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள். 9. ஏ. எச். எம். ஃபௌஸி (A.H.M. Fowzie) அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு நெதர்லாந்து வழங்கிய வாகனத்தைத் தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். 10. சரண குணவர்தன (Sarana Gunawardena) அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்தபோது வாகனங்களைச் சட்டவிரோதமாக வாடகைக்கு எடுத்தமை மற்றும் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். 11. நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) இந்தியாவின் கிரிஷ் (Krrish) குழுமத்திடமிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் ரூ. 70 மில்லியன் தொடர்பாகப் பணமோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 12. யோஷித ராஜபக்ஷ (Yoshitha Rajapaksa) கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (Carlton Sports Network) நிறுவனத்தை நிறுவுவதற்காக ரூ. 234 மில்லியன் தொகையைச் சட்டவிரோதமாகப் பெற்றுப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 13. கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பாதுகாப்பு அமைச்சின் காணி மீட்பு மற்றும் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது ரூ. 33.9 மில்லியன் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. 14. ஷிரந்தி ராஜபக்ஷ (Shiranthi Rajapaksa) சிறிலிய சவிய (Siriliya Saviya) அறக்கட்டளையின் பரிவர்த்தனைகள் மற்றும் அந்த அறக்கட்டளையுடன் தொடர்புடைய வாகனப் பதிவுகள் தொடர்பான விசாரணை. 15. ரோஹித ராஜபக்ஷ (Rohitha Rajapaksa) சுப்ரீம் செட்டலைட் திட்டத்தின் (Supreme Satellite Project) கீழ் பொதுநிதி மற்றும் அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. 16. சமல் ராஜபக்ஷ (Chamal Rajapaksa) அரச நிதியைப் பயன்படுத்தி அமைச்சின் திட்டங்களுக்கு முறையான அனுமதியின்றி நிதி ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டு. 17. சஷீந்திர ராஜபக்ஷ (Shasheendra Rajapaksa) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரச காணிகளைச் சட்டவிரோதமாக விநியோகித்ததாகக் குற்றச்சாட்டு. 18. ஜலிய விக்ரமசூரிய (Jaliya Wickramasuriya) வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகக் கட்டடத்தைக் கொள்வனவு செய்தபோது அமெரிக்க டொலர் 332,000 தொகையைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. 19. உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) மிக்-27 (MiG-27) போர் விமானக் கொள்வனவுப் பரிவர்த்தனையில் அமெரிக்க டொலர் 7 மில்லியனுக்கும் அதிகமான நிதி மோசடி இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டு. 20. நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) ஜப்பானின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்துடன் தொடர்புடைய முறைகேடுகள் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அடையாளம் தெரியாத சொத்துக்கள் தொடர்பான விசாரணை. 21. லலித் வீரதுங்க (Lalith Weeratunga) 2014 ஜனாதிபதித் தேர்தலின்போது தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRC) நிதியிலிருந்து ரூ. 600 மில்லியன் தொகையைப் பயன்படுத்தியமை தொடர்பான விசாரணை. 22. அனுஷா பல்பிட்ட (Anusha Palpita) 2014 ஜனாதிபதித் தேர்தலின்போது தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் நிதியைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. 23. புஜித் ஜயசுந்தர (Pujith Jayasundara) 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கான புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதில் தவறிழைத்ததாகக் குற்றச்சாட்டு. 24. ஹேமசிறி பெர்னாண்டோ (Hemasiri Fernando) 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதில் ஏற்பட்ட தவறுகள் தொடர்பான விசாரணை. 25. அர்ஜுன மஹேந்திரன் (Arjuna Mahendran) 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை அரசாங்கத்திடமிருந்து வேண்டுமென்றே மறைத்ததாகக் குற்றச்சாட்டு. 26. அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal) அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், மத்திய வங்கிப் பிணைமுறி பரிவர்த்தனைகளுடன் தொடர்புடையதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 27. கஸுன் பலிஹேன (Kasun Palihena) மத்திய வங்கிப் பிணைமுறி பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய சதித்திட்டம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு. 28. நலக்க டி சில்வா (Nalaka de Silva) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றச்சாட்டு. 29. ஜயந்த விக்ரமரத்ன (Jayantha Wickramaratne) லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணையுடன் இணைக்கப்பட்ட பொலிஸ் தகவல் மூலத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு. 30. அருண சேனாநாயக்க (Aruna Senanayake) வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை மற்றும் தவறான அறிக்கைகளைச் சமர்ப்பித்தமை தொடர்பான விசாரணை. 31. சமரா ரணவீர (Chamara Ranawera) லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாகக் கூறப்படும் ரூ. 16 மில்லியன் முறைகேடு தொடர்பான விசாரணை. 32. எஸ். எம். ரஞ்சித் சமரகோன் (S.M. Ranjith Samarakoone) உத்தியோகபூர்வ கடமைகளைச் செய்வதற்காக அரச அலுவலர்களிடமிருந்து சட்டவிரோதமாக நிதி உதவிகளைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். 33. பியசேன கமகே (Piyasena Gamage) முதலீட்டுச் சபைக்குச் சொந்தமான காணியைத் தவறாக மாற்றியமை மற்றும் அங்கீகரிக்கப்படாத விலை நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டு. 34. பந்துல குணவர்தன (Bandula Gunawardana) அரசாங்கத்துக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி இழப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகள். 35. விமல் ஹீரவன்ச (Wimal Weerawansa) அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் தொழில்சார் நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கியமை தொடர்பான விசாரணை. 36.ரூபவதி கேதீஸ்வரன் (Ravukathy Ketheeswaran) அரச காணிகளைச் சட்டவிரோதமாக விநியோகித்தமை மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள். 37. ஜயந்த பெர்னாண்டோ (Jayantha Fernando) பொலிஸ் வைத்தியசாலைக்கான மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்ததில் ரூ. 15 மில்லியன் தொகையைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. 38. கீதா குமாரசிங்க (Geetha Kumarasinghe) இலங்கைப் பிரஜாவுரிமை தொடர்பான சட்டப் பிரச்சினைகள் இருந்தபோதிலும் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தமை தொடர்பான சட்ட நடவடிக்கைகள். 39. ரோஹித பொகொல்லாகம (Rohitha Bogollagama) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. 40. குமார வெல்கம (Kumara Welgama) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டபோது முறையற்ற நியமனம் இடம்பெற்றதாகவும், இதனால் ரூ. 32 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு. 41. லசந்த துப்பஹிடுன் கொலை (Lasantha Thuppahidu Murder) வசீம் தாஜுதீனின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணை மற்றும் ஆதாரங்களை அழித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள். 42. லசந்த விக்ரமதுங்க கொலை (Lasantha Wickrematunge Murder) லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணை மற்றும் ஆதாரங்களை அழித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள். 43. பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை (Prageeth Eknaligoda Disappearance) ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான சட்ட நடவடிக்கைகள். 44. லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் (Lalith Kumar Weeraraj and Kugan Muruganandan) அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணை. 45. கீத் நொயார் (Keith Noyahr) ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமை தொடர்பான விசாரணை. 46. உபாலி தென்னகோன் (Upali Tennakoon) ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்டமை மற்றும் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டமை தொடர்பான விசாரணை. 47. ரவிராஜ் படுகொலை (Ravikumar Raviraj Murder) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை தொடர்பான விசாரணை மற்றும் அரசாங்கத்தின் நீதித்துறைச் செயற்பாடுகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள். 48. விஜயதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapakshe) விஜயதாச ராஜபக்ஷவின் அமைச்சுப் பதவிக்காலத்தில், அரச காணிகள் திணைக்களத்தின் நடவடிக்கைகளில் தலையிட்டதாகக் கூறப்படும் முறைப்பாடு. 49. நிசங்க சேனாதிபதி (Nissanka Senadhipathi) அவந்த் கார்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சட்டவிரோதமாக வைத்திருந்தமை மற்றும் அனுமதியின்றி பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுகள். இதனால் ரூ. 11.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 50. திலக் விஜேசிங்க (Thilak Wijesinghe) அரச அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்கும்போது ஊழல் தடுப்புச் சட்டங்களை மீறியதாகக் குற்றச்சாட்டு. 50 corruption cases detailed in Parliament - Caption Stor.....
  4. 2026 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை நவநீதம் “நவி” பிள்ளைக்கு வழங்க நோர்வே நோபல் குழு தீர்மானித்துள்ளது. அமைதியையும் சர்வதேசச் சட்டத்தையும் மேம்படுத்துவதற்காக அவர் ஆற்றிய பணிகளைக் கௌரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது. உலகளாவிய சட்டக் கோட்பாடுகள் மீதான நவி பிள்ளையின் அர்ப்பணிப்பும், உறுதியான தார்மீக நெறிமுறைகளும் அவரது நீண்டகாலப் பணிவாழ்வில் தொடர்ந்து நிலைத்திருப்பவையாகும். தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நிறவெறி ஆட்சியின் கீழ், இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த பிள்ளை, வழக்கறிஞராகவும் சட்டத்துறையில் முன்னோடியாகவும் உருவெடுத்தார். ஆழமாக வேரூன்றிய கட்டமைப்புசார் பாகுபாடு, இனப் பிரிவினை மற்றும் சமூகத்திலிருந்து ஒதுக்குதல் ஆகியவற்றுக்கு எதிராக அவர் போராடினார் https://www.theguardian.com/world/live/2026/oct/09/2026-nobel-peace-prize-winner-russia-ukraine-sudan-war-france-protests-poland-latest-news-updates
  5. இது ஒரு சாதாரண மசாலா திரைப்படம் ஆகும் . ஆனால், சிங்கள இனவாதிகள் இதை ஒரு மாபெரும் வெற்றித் திரைப்படமாக மாற்றிவிட்டார்கள். ☺️
  6. யாழ் கள ஷிரந்தி ராஜபக்ஷ ரசிகர் சிறியர் அவர்களுக்கு, ஷிரந்தி ராஜபக்ஷவினால் பாடப்பட்ட பக்தி பாடல் ஒன்று சமர்ப்பணம். அன்பு மலர்கள் உள்ளங்களில் மலரட்டும், அன்பு மலர்கள் உள்ளங்களில் மலரட்டும், கருணை குணம் பெருகட்டும், உள்ளங்களில் கருணை நிறைந்திடட்டும். பேராசை, ஆசை, பகை, கோபம், சந்தேகம் ஆகியவை இல்லாமல் போகட்டும், பாவம், வெறுப்பு, மயக்கம், அகந்தை இவ்வுலகிலிருந்து அகன்றிடட்டும். ஒற்றுமையும் சமாதானமும், அன்பும் கடமைகளும் மேலோங்கட்டும், ஒற்றுமையும் சமாதானமும், அன்பும் கடமைகளும் மேலோங்கட்டும், திருட்டு, பொய், மோசடி, அச்சம் மற்றும் சந்தேகம் நீங்கி, அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்கட்டும்.
  7. ஷிரந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரில் உள்ள 313 Somerset வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்வதாக கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
  8. இயக்கம் மக்களை வாக்களிக்க தடுக்காமல் இருந்தால், மஹிந்த ஆட்சிக்கு வந்து இருக்க முடியாது 😅
  9. வாழ்க்கை ஒரு வட்டம்டா! இங்க ஆரம்பிச்ச இடம் எதுவோ, அங்கேயே தான் வந்து முடியும் 😎
  10. இலங்கையிலும், வரிச்சலுகைகள் மின்சார வாகனங்களுக்கு உண்டு. மின்சார வாகனங்களுக்கு 160 % வரியும், பெட்ரோல் வாகனங்களுக்கு 330% வரியும் செலுத்த வேண்டும். உதாரணமாக 30 இலட்சம் பெறுமதி உடைய மின்சார வாகனத்துக்கு 48 இலட்சம் வரியாகவும், அதே பெறுமதியுடைய பெட்ரோல் வாகனத்துக்கு 99 இலட்சம் வரியாக செலுத்த வேண்டும். https://tariff.lk/guides/vehicle-import-duty-sri-lanka
  11. இம்முறை சிறப்பு எதுவெனில், தற்போதைய அரசாங்கம் ராஜபக்சக்களின் மனித உரிமைகளை மீறுகின்றது என முறையிட அவர்களின் பிரதிநிதிகள் இம்முறை மகாநாட்டில் பங்குகொள்ளுகின்றார்கள். காலம் எவ்வளவு வேகமாக ஓடுகின்றது 😜 https://www.facebook.com/milindarajapaksha.lk
  12. அம்பிட்டியே சுமனரதன தேரர், மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்தில் அதிகாரிகள் தங்களது கடமைகளை மேற்கொள்வதற்கு அவர் இடையூறு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்பிட்டியே சுமனரதன தேரர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். Ven. Ampitiye Sumanarathana Thero arrested
  13. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் விமான கொள்முதல் ஊழல் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு நபர்கள், திடீர் மற்றும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் உயிரிழந்துள்ளனர். 1. ராஜீவ் ஜெயவீர - ஏர்பஸ் ஊழல் விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதை முதன்முதலில் வெளிப்படுத்திய மிஹின் லங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், தற்கொலை செய்து கொண்டார். 2. துசித் முதலிகே - ஏர்பஸ் விவகாரத்தை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் கையாண்ட அதிகாரி, 49 வயதில் மாரடைப்பினால் மரணம் அடைந்தார். 3. கபில சந்திரசேன: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). இந்த ஊழல் விவகாரத்தில் மூத்த அரசியல்வாதிகளுக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் முக்கியமான லஞ்சத் தகவல்களை அவர் வெளியிட்டதைத் தொடர்ந்து, 2026 மே மாதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார். 4. யோஹான் அபேநாயக்க - ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத பணம் மற்றும் “கறுப்புப் பணத்தை” சட்டவிரோதமாகப் பணச் சலவை (Money Laundering) செய்வதில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. மர்மமான முறையில் இறந்து போனார். ராஜபக்சக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.
  14. இலங்கை அமைச்சரவை சமீபத்தில், உள்நாட்டுப் போரின்போது இலங்கையை விட்டு வெளியேறி, கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியாவில் வசித்து வரும் அல்லது முறையான அனுமதியின்றி இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் தன்னார்வமாக நாடு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. https://www.dailymirror.lk/breaking-news/Cabinet-approves-return-of-Sri-Lankan-refugees-from-India/108-347912
  15. இஸ்ரேலின் வடக்கு நகரங்களின் முக்கிய பகுதிகளை குறிவைத்து, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஒருங்கிணைந்த தீவிரத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. BBC NewsIran fires missiles towards Israel as IDF says it is work...The Israeli military earlier said it was "preparing for potential fire" after it had struck Lebanon's capital Beirut.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.