Everything posted by Kavi arunasalam
-
நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது
- கருத்துப்படம் 08.09.2026
From the album: கிறுக்கல்கள்
- டிப்ஸ் கொடுப்பதா… அல்லது டிப்ஸ் கேட்கப்படுகிறதா?
உண்மைதான். சிலவேளை அது முதலாளிக்கு நட்டத்தை கொடுத்துவிடும். 😁 உண்டபின் நான் கொடுத்த அனுபவம், போர்த்துக்கல் நாட்டின் போர்டோ (Porto) நகரில், முற்றிலும் பெண்களே சமையல் செய்து பெண்களே பரிமாறும் (All-female kitchen team) பிரபலமாக இயங்கும் ரெஸ்ரோரண்ட் Gruta. சுவையான கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது. ஒவ்வொரு முறையும் போர்டோ போகும் போது, இங்கே ஒரு தடவையாவது சாப்பிடப் போவேன். இங்கே பரிமாறப்படும் கோரினா மீன் சாப்பிட சுவையாக இருக்கும். கோரினா மீன் பற்றி, யாழில் முன்னர் எழுதியிருக்கிறேன். சென்ற வருடம் Grutaவுக்கு சாப்பிடப் போன பொழுது எங்களுக்கு உணவு பரிமாறியவர் ஒரு இந்தியப் பெண். நல்லமுறையில் உபசரித்தார். அவரது உபசரிப்பு பிடித்துப்போக, அவருக்கு டிப்ஸாகப் பணம் கொடுத்தேன். தயக்கத்துடன் வாங்கிக்கொண்டார். ரெஸ்ரோரண்ட்டை விட்டு வெளியே வந்தபோதுதான், நினைவுக்கு வந்தது, அங்கே சாப்பிட்டதற்கு யாரும் பணமாக கொடுத்ததில்லை. எல்லாமே ‘கார்ட்’தான். ஒருவேளை பணமாக டிப்ஸ் வாங்கக்கூடாது என்ற நிலை அங்கே இருந்திருக்கலாம். அந்தப் பெண்ணை சிக்கலில் மட்டிவிட்டேனா? யாராவது முதலாளியிடம் போட்டுக் கொடுத்துவிடுவார்களா? என்று கவலையாக இருந்தது. மீண்டும் இரண்டுநாள் கழித்து அங்கே சாப்பிடப் போனேன். அந்தப் பெண் அங்கே இல்லை- டிப்ஸ் கொடுப்பதா… அல்லது டிப்ஸ் கேட்கப்படுகிறதா?
உணவகத்துக்குப் போனால் ‘டிப்ஸ்’ கொடுப்பது உங்களுக்குப் பழக்கமாகிவிட்டதா? நல்ல சேவை செய்தால் மனதார டிப்ஸ் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இப்பொழுது டிப்ஸ் கொடுப்பதற்கும் ஒரு புதிய ‘தொழில்நுட்பம்’ வந்துவிட்டது. ஒரு உணவகத்தில் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது, கார்ட் ரீடரில் டிப்ஸ் கொடுப்பதற்கான விருப்பங்களையும் பார்க்க முடிகிறது. 7%, 10%, 20% என்று பெரிய எழுத்தில், அங்கே கண்ணைக் கவரும் விதத்தில் மூன்று தெரிவுகள் இருக்கும். அதற்குக் கீழே, “No Tip” “டிப்ஸ் வேண்டாம்” என்ற தெரிவு இருக்கும். ஆனால் அதைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும் போல, சிறிய எழுத்தில் இருக்கும். இதைத்தான் இப்போது ஜேர்மனியின் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளன. வாடிக்கையாளரை டிப்ஸ் கொடுக்க மறைமுகமாகத் தூண்டும் ஒரு வகையான ‘வடிவமைக்கப்பட்ட தந்திரம்’ இது என்று அவர்கள் விமர்சிக்கின்றனர். உண்மையில் டிப்ஸ் என்பது வாடிக்கையாளரின் விருப்பம். சேவை நன்றாக இருந்தால், “நன்றி” என்று சொல்லும் விதமாக 10% அல்லது 20% கொடுக்கலாம். அதைவிடக் குறைவாகவும் கொடுக்கலாம். அல்லது ஒன்றுமே கொடுக்காமலும் போகலாம். வாடிக்கையாளர் தானாக முடிவு செய்ய வேண்டிய ஒரு விஷயத்தில், ஏன் முன்கூட்டியே 7%, 10%, 20% என்று தெரிவுகளை நிர்ணயித்து வைக்க வேண்டும்? ஒருவருக்கு 5% கொடுக்க வேண்டும் என்று தோன்றியிருக்கலாம். இன்னொருவருக்கு அதைவிடக் குறைவாகக் கொடுக்க வேண்டும் என்று தோன்றலாம். மற்றொருவருக்கு சேவை பிடிக்காமல் இருக்கலாம். அப்படியிருக்கும்போது, கார்ட் ரீடர் நம்மைப் பார்த்து,“குறைந்தது 7% ஆவது கொடுங்கள்!” என்று சொல்வது என்ன நியாயம். இதே டிப்ஸ் விவகாரம் இப்போது உணவு டெலிவரி நிறுவனமான Lieferando-வையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. Lieferandoவில் உணவை ஓடர் செய்யும்போதே, உணவை கொண்டு வரப்போகும் டெலிவரி ஊழியருக்கான டிப்ஸையும் முன்கூட்டியே ஒன்லைனில் செலுத்தலாம். பிரச்சினை என்னவென்றால், ஓடர் செய்த பின்னர் ரத்து செய்யப்பட்டாலும், முன்கூட்டியே கொடுத்த டிப்ஸைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்ற விதி இருந்தது. இதற்கு எதிராக ஜேர்மனியின் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பான Verbraucherzentrale Bundesverband (Federation of German Consumer Organizations) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. “உணவே வழங்கப்படவில்லை என்றால், அந்தச் சேவைக்காக வழங்கப்பட்ட டிப்ஸையும் ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்?” என்பதுதான் அவர்களின் வாதம். பேர்லீன் நீதிமன்றம், இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டது. 2026 ஜூன் 24ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், முன்கூட்டியே கொடுக்கப்பட்ட டிப்ஸை எந்தச் சூழ்நிலையிலும் திருப்பித் தர வேண்டியதில்லை என்ற Lieferando விதி வாடிக்கையாளர்களுக்கு நியாயமற்ற பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, அந்த விதியை செல்லாது என்று அறிவித்தது. நீதிமன்றத்தின் கருத்து மிகவும் எளிமையானது: டெலிவரி சேவை கிடைக்கவில்லை என்றால், அந்தச் சேவைக்கான டிப்ஸுக்கும் அடிப்படை இல்லை. ஆனால் இங்கே இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. “நாங்கள் ஏற்கனவே அந்த விதியை மாற்றிவிட்டோம். ஓடர் ரத்து செய்யப்பட்டால், மார்ச் 2026 முதலே டிப்ஸ் தொகையையும் தானாகத் திருப்பிக் கொடுத்து வருகிறோம்” என்று Lieferando நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அப்படியென்றால்… நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னரே விதியை மாற்றிவிட்டார்களே! தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்று அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததா? எது எப்படியிருந்தாலும், இந்த இரண்டு சம்பவங்களும் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுபடுத்துகின்றன. டிப்ஸ் என்பது பாராட்டுக்காக வாடிக்கையாளர் மனதார வழங்கும் ஒரு சிறிய நன்றியாக இருக்க வேண்டும்; வாடிக்கையாளரைத் தயக்கத்தில் ஆழ்த்தி, அழுத்தத்தின் மூலம் வாங்கப்படும் பணமாக மாறிவிடக் கூடாது. “எவ்வளவு டிப்ஸ் கொடுக்க வேண்டும்?” என்பது வாடிக்கையாளரின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் “டிப்ஸ் கொடுக்க வேண்டுமா?” என்பது மட்டும் எப்போதும் வாடிக்கையாளரின் உரிமையாகவே இருக்க வேண்டும்.- கச்சத்தீவு இலங்கைக்கே உரித்தானது: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கருத்துப்படம் 07.09.2026
From the album: கிறுக்கல்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுசிலாஅம்மாவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. “கங்கையின் வெள்ளம் தண்ணீரோ இல்லை கன்னியர் சிந்தும் கண்ணீரோ..” என்று கண்ணதாசன் நல்ல வரிகளை சேர்த்திருப்பார். கண்ணனுக்கு தான் அடிமை என்பதாலோ என்னவோ கண்ணன் சம்பந்தப்பாடல்களில் கண்ணதாசன் நல்ல கவிதை வரிகளை தந்திருப்பார். போதாதற்கு இந்தப் படத்தை தயாரித்தவர் அவரது அண்ணன் ஏ.எல்.எஸ். சௌகர்ஜானகி சொந்தமாகத் தயாரித்து கையைச் சுட்டுக்கொண்ட படம். இந்தப் பாட்டு அன்றும் இன்றும் மட்டுமல்ல என்றும் கேட்கக் கூடிய ஒருபாடல். தாயை இழந்து நிற்பவர்களுக்கு இது ஒரு தாலாட்டுப் பாடல். நான் அதிகம்விரும்பும் பாடலும் கூட இணைப்புக்கு நன்றி suvy🙏- நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது
- கருத்துப்படம் 06.09.2026
From the album: கிறுக்கல்கள்
- உங்கள் சிறுநீரகம் சுகமா?
சுகம். நல்லவிடயத்தை பதிந்திருக்கிறீர்கள்🙏- தேர்தல் களம் காணும் சக்ஸனி - வெல்லுமா AfD
என்ன கோசான் சார் ஆளைக் காணோம்? தேர்தல் முடிவை அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தேன். Sachsen-Anhalt தேர்தலில், "ஜெர்மனிக் கூட்டணி" (CDU,SPD,GREEN,FDP) படுதோல்வி அடைந்திருக்கிறது. ஆளும் கட்சியான CDUவின் ஆதரவு பாதியாகக் குறைந்துள்ளது (18 சதவீதம்), SPDயும் பசுமைக் கட்சியும் சென்ற தேர்தலில் பெற்ற வாக்கைத் தக்கவைத்திருக்கின்றன (8 சதவீதம்), மற்றும் FDP தற்போது ஒரு சிறு பிடிப்பாக மட்டுமே உள்ளது (2 சதவீதம்). மறுபுறம், AFD கட்சி, அதன் ஒரு தெளிவான வெற்றியை (ஏறக்குறைய 45 சதவீதம்) அடைந்திருக்கின்றது. ஆனாலும், AFDஆல் ஆட்சி அமைக்க முடியுமா என்பது இன்னும் முற்றிலும் தெளிவாகத் தெரியவில்லை. Sachsen-Anhaltஇல், இந்தத் தேர்தலில் ஒரு புதிய அரசாங்கத்திற்கான பாதை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போதைய நிலவரப்படி, AFD கட்சிக்கு முழுமையான பெரும்பான்மையைப் பெற மூன்று இடங்கள் குறைவாகவே இருக்கின்றன. மேலும் அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க யாருமே விரும்பவில்லை. BSW கட்சி ஒருவேளை ஆதரவைத் தரலாம். ஆனால்BSW தற்போது 5 சதவீத எல்லையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. AFDகட்சியின் கைக்கு எட்டியிருக்கிறது. வாய்க்கு எட்டுமா? எட்டினலும் நீண்ட காலம் நிலைக்குமா? இந்தக் கட்சிக்கு கிழக்கு யேர்மனியில்… என்று வந்திருக்கவேண்டும் எழுதுவதற்கு சற்று நேரம் எடுத்துக்கொண்டேன். நான்கு நிமிடத்தில் வென்றுவிட்டீர்கள்😋- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீண்ட காலத்துக்குப் பின் கேட்கிறேன். 🙏- எங்கே அவர்கள்?
அது தெரிய வாய்ப்பில்லை ஈழப்பிரியன்- இன்று போய் நாளை வா
பேராசிரியர் அவர்களே,நல்ல உவமையை எடுத்தாண்டிருக்கிறீர்கள்👏🏽 ஆனாலும் பதில் கொடுத்தால் ஆவணம் இருக்கிறதா? என்ற கேள்வி அடுத்து வரும். அது திமுக ‘கோரஸ்’ ஆகி சட்டசபையையே அதிரவிடும். எதற்கும் திங்கட் கிழமை தெரிந்துவிடும்தானே. சட்டசபையில் திரௌபதியின் ஆடையை பிடித்திழுத்த துச்சாதனர்கள் திங்கள்வரை பொறுத்திருந்தால் என்ன தேய்ந்தா போய் விடுவார்கள்?- கிருஷாந்தியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் 7 ஆம் திகதி செம்மணி வளைவுப் பகுதியில்
கிருசாந்தியின் தாயார் இராசம்மா குமாரசாமி எங்கள் ஊரில் வட இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியை. 72களில் அவரை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். இந்தக் கொலைகள் அன்று பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.- தேர்தல் களம் காணும் சக்ஸனி - வெல்லுமா AfD
முதலில் ஒரு நிருபராக நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். அதற்கு எனது வாழ்த்துக்கள்🌹👏🏽 மாநிலத் தேர்தலில் AFD வெல்லுமா எனக் கேட்டிருக்கிறீர்கள். வெல்லும் என்பதே யதார்த்தம். கடந்த தேர்தலில் 20 வீதமான AFDஇன் வாக்கு வங்கி, இப்பொழுது 41. பசுமைக்கட்சி, FDP இரண்டும் ஐந்து வீதத்துக்கு குறைவான வாக்குகளை பெற்றால் சட்டசபைக்குள் நுளைய முடியாது. CDU,SPD இணைந்தாலும் பெரும்பான்மை கிடையாது. ஒரு சிக்கலான நிலை. ஒரு வேளை AFD பெரிய வெற்றி பெற்றால் நீங்கள் குறிப்பிட்டது போல் நவநாசிகளின் முதலாவது மாநிலத் தேர்தல் வெற்றி என்றாகிவிடும். இந்தத் தேர்தலை இன்னும் ஒருவர் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் புட்டின்.- கருத்துப்படம் 05.09.2026
From the album: கிறுக்கல்கள்
- எங்கே அவர்கள்?
இப்போது கோடை விடுமுறை. சுற்றுலாக் காலம். அநேக யேர்மனியர்களின் விருப்பமான விடுமுறை இடங்களில் ஒன்று மல்லோர்கா (Mallorca). அதிக நேரம் விமானத்தில் பறக்க வேண்டியதில்லை. மொழிப் பிரச்சினையும் பெரிதாக இல்லை. செலவும் ஓரளவுக்குக் கைக்குள் அடங்கிவிடுகிறது. அதனால் கோடை வந்துவிட்டால், மல்லோர்காவை நோக்கிப் படையெடுக்கும் யேர்மனியர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தக் கோடை விடுமுறையில் மல்லோர்காவுக்குச் சென்ற ஒரு யேர்மனியத் தந்தைக்கு ஏற்பட்ட விசித்திரமான அனுபவம்தான் இது. வடக்கு மல்லோர்காவில் தனது 14 வயது மகனுடனும், 7 வயது மகளுடனும் சைக்கிள் ரூர் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு சைக்கிளின் டயர் பஞ்சராகிவிட்டது. சுற்றிப் பார்த்தால். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. “நீங்கள் இருவரும் இங்கேயே இருங்கள். நான் போய், எங்கேயாவது சைக்கிள் திருத்தும் கடை இருக்கிறதா என்று பார்க்கிறேன். வழியில் யாராவது தட்டுப் பட்டால் அவர்களிடம் உதவி கேட்கிறேன்” என்று பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு அவர்களை ஒரு இயற்கை பூங்கா அருகே விட்டு விட்டுப் போயிருக்கிறார். போனவர் போனவர்தான்… திரும்பி வரவேயில்லை. வழியில் யாருமே கண்ணில் படவில்லை. அதனால் இன்னும் கொஞ்சம் தூரம் என்று மனுசன் கனதூரம் வந்துவிட்டார். வந்த பாதை நேரான பாதையாக இருந்திருந்தால் பரவாயில்லை. அதே வழியில் திரும்பிப் போயிருக்கலாம்.ஆனால், பாதை சுற்றிச் சுற்றிச் சென்றதால், ஒரு கட்டத்தில் தான் வந்தது எந்தப் பாதை? என்பதே அவருக்குத் தெரியாமல் போய்விட்டது. அதிர்ஸ்ரவசமாக, சிறிது நேரத்தில் உள்ளூர் காவல்துறை அலுவலகம் ஒன்று அவர் கண்ணில் பட்டது. அங்கே சென்று, “என் பிள்ளைகள் இருவரையும் காணவில்லை. தயவுசெய்து அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க உதவுங்கள்” என்று காவல்துறையிடம் கேட்டிருக்கிறார். ஆனால் உண்மையான நிலைமை? பிள்ளைகள் இருவரும் தொலைந்து போகவில்லை. தொலைந்து போனது அவர்தான். பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கை தொடங்கியது. அவர் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று பார்த்தபோது, பிள்ளைகள் இருவரும் அங்கு இல்லை. அவர்களும் தங்களுடைய தந்தையைக் காணவில்லை என்பதால், அவரைத் தேடிப் புறப்பட்டுவிட்டார்கள். தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டிகள் பத்தடி பாயமாட்டார்களா என்ன? உள்ளூர் காவல்துறை, ஊர் மக்கள், வேறு நகரங்களிலிருந்து வந்த காவல்துறையினர், இயற்கைப் பூங்காவின் சுற்றுச்சூழல் பணியாளர்கள் எனப் பலரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் ஆறு மணி நேரத்துக்குப் பிறகு தேடுதல் வெற்றியில் முடிந்தது. பிள்ளைகள் தங்களுடைய தந்தையைக் கண்டவுடன் ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். இவ்வளவு நேரம் இருந்த கலக்கமும் பதற்றமும் முடிவுக்கு வந்தது. தந்தைக்கும் நிம்மதி. எப்படியோ வீட்டுக்குப் போனதும் அந்தத் தந்தைக்கு ஒரு “விசேஷமான வரவேற்பு” கண்டிப்பாக இருக்கும்- கச்சத்தீவுக்கு பதிலாக இந்தியாவின் கைகளுக்கு சென்ற பெட்ரோலியம் வளமிக்க கடல் மேடை! போட்டுடைத்த காங்கிரஸ்
கச்சதீவையும் பெயரளவில்தான் தந்தார்கள். கச்சதீவையும் தாண்டி நெடுந்தீவு வரை இந்திய மீனவர்கள் ‘அசால்டாக’ வந்து போய்க் கொண்டிருக்கிறார்களே.- பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உட்கொண்ட சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு
உண்மை 😂 பாம்பு தாவரபட்சினியா? யாரோ சங்கு சும்மா இருக்கிறது என்று எடுத்து ஊதிப் போட்டு போயிருக்கிறான். நாவற் பழம் சத்தானது. அதையும் சாப்பிட விடாமல் செய்துவிடுவார்கள் போல் இருக்கிறது- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கில்லாடியா இருக்கிறீங்கள். கன்னம் பார்த்து கண்டு பிடிச்சிட்டீங்கள்.😂 அன்று பட்டையை கிளப்பிய பாடல். இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னுமொரு பாடல் இருக்கிறது. அது MSVயும் ஜானகியும் இணைந்து பாடிய “சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்….” மலையாளுகளுக்கு ‘ப’ உச்சரிப்பது கஸ்ரம் என்று முன்னர் வாசித்திருந்தேன். MSV பாடும் போது கவனித்துப் பார்த்தால் தெரியும்- 59 வயதில் சிக்ஸ் பேக் வைத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வைரல் புகைப்படம் இணையத்தை அதிரவைத்துள்ளது.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து வந்த சில அரசியல்வாதிகள், (நெடுமாறன், வைகோ, சுபவீ. உள்ளிட்டவர்கள்)புலம்பெயர்ந்த தமிழர்களிடையே விடுதலைப் போராட்டத்தின் குரல்களாகவும், புலிகளின் அரசியல் தூதர்களாகவும் பார்க்கப்பட்டார்கள். லண்டன் மாவீரர் நிகழ்வில் ஒருமுறை அன்ரன் பாலசிங்கம் அவர்கள், “இந்த முறை சின்ன மேளம் பிடிக்கேல்லை போல, என்னைப் பேசச் சொல்லிட்டாங்கள்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர், அந்தத் தூதர்களின் குரல்கள் புலம்பெயர் தமிழர் மத்தியில் மெல்ல மெல்ல மறைந்து விட்டன. இப்போது புலிகள் தரப்பில் பேசுவதற்கோ, அவர்களின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கோ யாரும் இல்லை. அந்த வெற்றிடத்தில் சீமான் என்ற அரசியல் மாயை மிகப்பெரிய உருவத்தை எடுத்திருக்கிறது. தான்தான் உண்மையான தமிழ்த் தேசியவாதி, “அண்ணனின் தம்பி”, தமிழர்களைக் காப்பவன், மீட்பவன் மேய்பபவன் என்று பல்வேறு வார்த்தைகளால் ஒரு உணர்ச்சிக் களத்தை உருவாக்கி, புலம்பெயர் தமிழர்களின் ஆதரவையும் பணத்தையும் திரட்டிக் கொண்டிருக்கிறார். இங்கே நான் கேட்க விரும்புவது ஒன்றுதான். தாயக விடுதலைக்காக எத்தனை உறவுகளை, உடன்பிறப்புகளை, நண்பர்களை இழந்திருக்கிறோம்? போராட்டத்தின் முடிவில் எத்தகைய பேரழிவைச் சந்தித்தோம்? அந்தப் போராட்டம் முடிந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், தாயகத்தில் வாழும் மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா? அழிந்த வீடுகள் இருக்கின்றன. வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள் இருக்கின்றன. கல்வி, தொழில், மருத்துவம், பொருளாதாரம் என்று இன்னும் பல துறைகளில் உதவி தேவைப்படும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்காக ஒரு குடையின் கீழ் ஒன்றுபட முடியாத நாமோ, இன்னொரு நாட்டின் அரசியல்வாதிக்கு தொடர்ந்து பணத்தையும் ஆதரவையும் அள்ளிக் கொடுத்து, அதைத் தமிழ்த் தேசியப் பணியாகக் கருதி பெருமிதப்படுகிறோம். “சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே செம்மை மறந்தாரடி கிளியே…” பாரதியின் இந்த வரிகள் இன்றும் நம்மை நோக்கிக் கேள்வி கேட்பதுபோல் இருக்கின்றன. தமிழ்த் தேசியம் என்ற ஒற்றைச் சொல்லை விதைத்துவிட்டு, காலம் காலமாக அதன் அறுவடையைச் செய்து கொண்டிருப்பது அரசியலா? ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் “திரள் நிதி” என்று உண்டியலை நீட்டும் போது, நாமும் எதற்காகக் கொடுக்கிறோம் என்று சிந்திக்காமல் அதை நிரப்பிவிட்டு பெருமிதப்படுகிறோம். தமிழ்நாட்டுத் தேர்தல்களாலும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாலும் ஈழத் தமிழர்களுக்கு உண்மையில் என்ன கிடைக்கப் போகிறது? குறைந்த பட்சம் ஈழத்து மீனவர்கள் கவலைகள் தொல்லைகள் இல்லாமல் தங்கள் கடலில் மீன் பிடிக்கவாவது விடுவார்களா? ஒரு போராட்டம் முடிந்த பிறகு, உலகின் எந்தப் பகுதியிலும் முதலில் செய்யப்படுவது என்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, அழிந்த சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவது, அடுத்த தலைமுறைக்கு கல்வியும் வாழ்வாதாரமும் ஏற்படுத்துவது. ஆனால் நம்முடைய நிலை என்ன? தாயகத்தில் இன்னமும் தேவைகள் இருக்கும் நிலையில், அடுத்த நாட்டில் வாழும் ஒரு அரசியல்வாதியின் அரசியல் கனவுகளுக்கு சொகுசான வாழ்க்கைக்கும் நமது பணத்தையும் உணர்ச்சியையும் அள்ளிக் கொடுத்துவிட்டு, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்பவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுகிறோம். ‘மட்டமான’ பதில்களையும் அள்ளி வீசுகிறோம். இதற்கிடையில், “நான் நெடுமாறனின் சத்திரசிகிச்சைக்கு பணம் கொடுத்தவன்” என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறுபவர்களையும் பார்க்கிறோம். ஒருவருக்கு உதவியது நல்ல விஷயம்தான். ஆனால் அதையே அரசியல் அறிவுக்கு மாற்றாகக் கருத முடியுமா? தனக்குள் சாமி வந்துவிட்டதாகக் கூறி பக்தர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தும் போலிச் சாமியாருக்கும், தமிழ்த் தேசியம் என்ற உணர்ச்சியைப் பயன்படுத்தி தொடர்ந்து அரசியல் ஆதரவும் நிதியும் திரட்டும் அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று சில நேரங்களில் எனக்கே புரியவில்லை. ஒரு கேள்வி மட்டும் நம்மிடம் இருக்கட்டும்: நாம் தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்கிறோமா? அல்லது தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இன்னொருவரின் அரசியலைப் பாதுகாக்கிறோமா? “உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் நான் கதறி என்ன குளறி என்ன தோழா… ஒன்றுமே நடக்கவில்லை ரொம்ப நாளா.”- கருத்துப்படம் 03.09.2026
From the album: கிறுக்கல்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வாணிஶ்ரீ மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம்?😊- 59 வயதில் சிக்ஸ் பேக் வைத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வைரல் புகைப்படம் இணையத்தை அதிரவைத்துள்ளது.
நியாயம் இது நியாயம் இல்லை. நான் (என் சொந்தக் காசில்)ஜிம்முக்குப் போகிறவன். உடம்பை பேணிக் காப்பவன். ஊரான் காசில் உடம்பை வளக்கிறவன், உடற்பயிற்சி செய்வதில் என்ன புதுமை இருக்கிறது.? படம் நான் வரையவில்லை. உபயம் AI - கருத்துப்படம் 08.09.2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.