-
BLUE BIRD changed their profile photo
-
இலங்கையின் உண்மையான நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இச் செய்தியை தொடர்ந்து இங்கு இணைக்கின்றேன் HOT....
- இலங்கையின் உண்மையான நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இச் செய்தியை தொடர்ந்து இங்கு இணைக்கின்றேன் HOT....
- இலங்கையின் உண்மையான நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இச் செய்தியை தொடர்ந்து இங்கு இணைக்கின்றேன் HOT....
- இலங்கையின் உண்மையான நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இச் செய்தியை தொடர்ந்து இங்கு இணைக்கின்றேன் HOT....
- இலங்கையின் உண்மையான நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இச் செய்தியை தொடர்ந்து இங்கு இணைக்கின்றேன் HOT....
- இலங்கையின் உண்மையான நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இச் செய்தியை தொடர்ந்து இங்கு இணைக்கின்றேன் HOT....
- இலங்கையின் உண்மையான நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இச் செய்தியை தொடர்ந்து இங்கு இணைக்கின்றேன் HOT....
- இலங்கையின் உண்மையான நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இச் செய்தியை தொடர்ந்து இங்கு இணைக்கின்றேன் HOT....
- அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதே சர்வதேசத்திற்கு முக்கியம்: கெலும் மெக்ரே
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதே சர்வதேசத்திற்கு முக்கியம்: கெலும் மெக்ரே [ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 12:37.38 PM GMT ] இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார். அடுத்து என்ன நடக்க போகிறது என்பதே சர்வதேசத்திற்கு மிகவும் முக்கியமானது எனவும் மெக்ரே கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளதையும் வரவேற்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொறுப்புக் கூறல், உண்மையை கண்டறிதல், நீதி, நல்லிக்கணம், அரசியல் தீர்வு போன்றவை அடுத்த முக்கியமான கேள்விகளாகும் என அவர் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmtyJScSVjx2C.html- இலங்கையில் ஒரு அதிசயமான உண்மை நடக்கப் போகிறது
அதிசயமான ஒரு உண்மை நடக்கப் போகிறது இலங்கையில்..! [ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 07:38.51 AM GMT ] இது உண்மை, இது தான் நிதர்சனம், இதுவே யதார்த்தம். இலங்கை நாட்டில் வித்தியாசமானதொரு அரசியல் போக்கை இலங்கையர்கள் காண இருக்கின்றார்கள். ஆம்! இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பை இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையாக விசாரிக்கவுள்ளது. 2009ம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் இலங்கையில் என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றியே இவ்விசாரணை அமையவிருக்கின்றது. இது தொடர்பாகவே இலங்கை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளில் இருந்து அதிகம் பேசப்படுகின்றது. அமெரிக்க அரசாங்கம் எதிர்பார்த்திருந்த ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் அதற்கு எதற்கு தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரம் என்று தான் எடுத்த இனப்பிரச்சினை சிக்கலை இலங்கையிடமே திருப்பிக் கொடுத்திருக்கிறது. அதாவது இது உங்கள் பிரச்சினை, நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என்பதைப் போல. அழித்தவர்களும் இலங்கையர்கள் தான். அழிக்கப்பட்டவர்களும் இலங்கையர்கள் தான். ஆகையால் இலங்கையர்களே அதை விசாரிப்பது நல்லது. இதற்குள் நாங்கள் எதற்கு என்பதைப் போல இருக்கின்றது ஆட்சி மாற்றத்தின் பின்னரான சர்வதேசத்தின் இலங்கை மீதான கண்காணிப்பு. இவ்விடத்தில் பல உள்ளக மற்றும் சர்வதேச முரண்பாடுகள் உண்டு என்பதையும், அதையும் தாண்டிய பல சிக்கல்களையும் ஆராய வேண்டிய தேவை நமக்குண்டு. இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து இந்த நிமிடம் வரை அது தனது அரசியல், இராஜதந்திரக் கொள்கைகளை தமிழர்களை அழிப்பதிலும், அவர்களின் அரசியல் எதிர்காலத்தை சிதைப்பதிலுமே குறியாக இருந்து செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக சர்வதேச விசாரணைகளும், போர்க்குற்றவாளிகளும் என்று இப்பொழுது பேசப்படுபவர்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவர் சகோதரர்களும், மற்றும் இராணுவத்தில் உள்ள சில வீரர்களுமே. மற்றைய யாரும் போர்க் குற்றவாளிகளாக நாமும் சரி சர்வதேசமும் சரி பேசிக்கொள்வதும் இல்லை. அலட்டிக் கொள்வதும் இல்லை. ஆனால் மிகப்பெரிய போர்க்குற்றவாளிகள் யார் என்று நோக்கில், அவர்கள் வேறு யாருமல்ல. இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தினர் என்பது தெளிவாகும். இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகட்டும் இரண்டு கட்சியுமே தமிழின அழிப்பை பாரபட்சமின்றி செய்து முடித்த மகா உத்தமர்கள் தான். சாதாரணமாக நமக்கு அதிகம் தெரிந்த இனவழிப்புக்களை இங்கே நோக்கின் 1983ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பு இலங்கையின் அதி உச்சமான மோசமானதொரு கலவரமாக இன்று வரை நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்துகின்றது. எனில் தமிழர்களின் சொத்தாக இதயமாக திகழ்ந்த யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்ட போது அத்தனை ஈழத் தமிழனின் இதயம் மட்டுமல்ல, உலகத் தமிழினத்தின் உடலையும் பொசுக்கியது. அது தமிழர்களின் அடையாளமாக, சொத்தாக, வரலாற்றுச் சின்னமாக, தமிழர்களின் அறிவுப் பொக்கிசமாக திகழ்ந்தது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் அவ்வினத்தின் அறிவுத் தேடலை மழுங்கடித்தாலே போதும். அது தானாகவே அழிந்துவிடும். அதனை இலக்கு வைத்தே இதனைச் செய்தனர். அதை வேறு யாரும் செய்யவில்லை. இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, இன்னுமொருவர் இருக்கிறார். அவர் கணவனை இழந்தவர் அதனால் குடும்பங்களின் வேதனைகளை அறிந்தவர். ஒரு பெண். ஆகையால் எங்கள் துன்பங்களை நன்கு உணர்ந்திருப்பார். அதனால் ஆட்சிப் பொறுப்பேற்றதும் எங்கள் துயர் துடைப்பார். என்று தமிழர்கள் எண்ணியிருக்க, வந்தவர், ஜனாதிபதி ஆசனம் ஏறியவர், செய்வார் என்று நினைக்க, செத்துமடி என்று இலங்கை அரசியல் பல்லவியை பாடினார். இவரின் ஆட்சிக் காலத்தில் தான் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டன. அவர் தான் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் மிகப் பெரிய பங்காற்றிய, இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறமையில் இரண்டு முறை ஒய்யாரமாக ஆட்சி செலுத்திய உலகின் முதல் பெண் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க. அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்காத கொடுமைகள் இல்லை. தேவாலயங்களிலும், ஆலங்களிலும், பாடசாலைகளிலும், வயல் வெளிகளிலும் விமானக் குண்டுமழை பொழிந்தவர். எத்தனை உயிர்கள் சிலுவையின் மடியிலும், கருவறை தெய்வத்தின் மடியிலும் கசங்கிப் போயின. இன்றுவரை எங்களை இன்னுமொரு அழிப்பு நினைவுபடுத்திக் கொண்டு இருக்கின்றது. அவள் தான் எங்கள் கிரிசாந்தி அக்கா. செம்மணியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கபட்டவள் தான் எங்கள் அக்கா. அக்கா வேறு யாருடைய ஆட்சிக் காலத்தில் புதைக்கப்பட்டாள்? சமாதானப் புறா உன்று வர்ணிக்கப்பட்ட அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் அல்லவா.? செம்மணிப் புதைகுழி யாருடைய காலத்தில் என்று நாங்கள் இங்கே எழுதித் தான் தெரிய வேண்டுமா? இப்படி ஆட்சி ஏறிய இவர்கள் அனைவரும் தமிழ் இனத்தை வேர் அறுக்கத் தானே களம் புகுந்தனர். தவிர இவர்களுக்கு வேறு திட்டங்களே இருந்ததில்லை. இன்னும் ஒருபடி மேல் சென்று பார்த்தால் இன்னொன்று புரியும். ஜனாதிபதியாக சந்திரிக்கா இருக்க, பிரதமராக ரணில் பதவி வகிக்க, புலிகளை சமாதான ஒப்பந்தத்தை செய்து முடித்த சந்திரிக்கா, ஆட்சியை கலைத்து மகிந்தரை பிரதமர் ஆக்கினார். பின்னர், தனது ஆட்சிக் காலம் முடிய அவரை ஜனாதிபதி ஆக்குவதற்கும் அரும்பாடுபட்டார். புலிகளுடன் ரணில் மூலம் ஒப்பந்தம் செய்து மகிந்தரை ஆட்சி ஏற்றி, முள்ளிவாய்க்கால் கொடுமையான யுத்தத்திற்கு வழியமைத்தவர்கள் இந்த ரணிலும் சந்திரக்காவுமே. ஆனால் கால மாற்றத்தின் கோலமோ என்னமோ இவர்கள் உள்ளக விசாரணையை இலங்கை அரசாங்கமே செய்யும் என்று கூறுகின்றார்கள். அதாவது இதுவரை காலமும் அழித்தவர்களிடமே அதற்கான விசாரணையையும் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். எப்படியிருக்கின்றது தமிழனின் நிலமை. அவர்களாலேயே அழிக்கப்பட்டு, அவர்களாலேயே பாடை ஏற்றப்பட்டு, நாசமறுக்கப்பட்ட கையறு நிலையில் சர்வதேசமானது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், கொடுமைகளுக்கும் ஏதேனும் உபகாரம் செய்யும் என நினைத்தால், அது சொல்கிறது உள்ளக விசாரணைப் பொறிமுறையினூடாக தீர்வு காணப்படும் என்று. கடவுளே..! இங்கே இவர்கள் யாரை யார் விசாரிப்பார்கள்? அனைவருமே போர்க்குற்றம் செய்தவர்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவாகட்டும், முன்னாள், இந்நாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சரி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவாகட்டும், ஏன் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் வன்னிப் போர் நடந்து கொண்டிருந்த வேளையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் தான். ஆக! இன்றைய நிலவரப்படி இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கான உள்ளக விசாரணையானது யாரால்? யாரை? எப்படி? மேற்கொள்ளப்படும் என்பதே கேள்வி? தவிர, எக்காலப்பகுதியில் எந்த ஆட்சியாளரின் வழிநடத்தலில் எங்கே வைத்துக் கொல்லப்பட்டனர் என்றும் விசாரணைகளை யார் மேற்கொள்வார்கள்.? நல்லாட்சி எனும் அரசாங்கமே இனப்படுகொலையாளிகளின் கூட்டாக இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய காலகட்டத்தில் இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையை நடத்தும் எனக் கூறும் போது தமிழ் மக்கள் என்ன நினைப்பர்? கடவுளே இது அடுக்குமா? இத்தனை உயிர்களும் காவு கொள்ளப்பட்டு, உள்நாட்டுப் பிரச்சினையாக இருந்த தமிழர் விவகாரத்தை சர்வதேசத்திடம் கொண்டு சென்றால் அதே சர்வதேசம் உள்நாட்டில் விசாரித்து தீர்த்துக்கொள்ளுங்கள் என்கிறது. இது தான் ஜனநாயகமோ? இது தான் அரசியல் சாணக்கியமோ? காலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது. உண்மையில் இலங்கையில் ஒரு அதிசயம் நடக்கத்தான் போகின்றது. குற்றவாளிகளே குற்றங்களைப் பற்றி விசாரித்து தாங்களே அதற்கு தீர்வினை அறிவித்து தண்டையையும் ஏற்கப்போகின்றார்கள். அதை தமிழர்கள் பார்த்து மனம் மகிழ்ந்து கொள்ளுங்கள். நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் மெல்ல தலைப்படுகின்றது. இன்னும் எத்தனையோ விடையங்களை காணவேண்டியிருக்கின்றது. காத்திருப்போம். இன்னும் எத்தனையே அதிசயங்களை ஈழத்தமிழினம் காணப்போகின்றது. எஸ்.பி. தாஸ் http://www.tamilwin.com/show-RUmtyJScSVjxzI.html- ஜெனிவாச் செய்திகள் ஒரே திரியில்.........
தமிழ் இன அழிப்பின் புதிய வதைகள்... ஐ.நா மன்றத்தில் கண்ணீரில் பலர்! [ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 03:57.52 PM GMT ] இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே ஐ.நா சபையின் பக்க அறையில் காட்சிப்படுத்தினார். இதில் சா்வதேச மன்னிப்புச் சபை மனித உரிமைகள் ஆர்வலர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் புலம்பெயர் தமிழர் அமைப்பின் தமிழர் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் இதில் கலந்து கொண்ட அனைவரும் கண்ணீரில் மூழ்கியதை அவதானிக்க முடிந்தது. ஐ.நாவின் சில பெறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் இவ் ஆவணப்பட வெளியீட்டில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/show-RUmtyJScSVjx3I.html அப்பாவைச் சுட வேண்டாம்! கொழும்பில் கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ்த் தாய் [ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 03:39.43 PM GMT ] 2009 பெப்ரவரி மாதம் எனது கணவன் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். மூன்று மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட அதே நாளில் கடத்தப்பட்டார். எனது பிள்ளைகளின் கண் முன், இராணுவ சீருடையில் வந்தவர்கள் கணவரைக் கடத்தும்போது என்னுயை மூத்த மகன் dont shoot uncle i want my father என அழுதார் என ஐ.நா மன்றத்தில் தாயெருவர் கண்ணீருடன் தனது சாட்சியத்தைப் பதிவு செய்தார். http://www.tamilwin.com/show-RUmtyJScSVjx3F.html இலங்கையின் வெளிவரா தடுப்பு முகாம்கள்! ஐ.நாவில் வெளிவரும் இலங்கைப் பெண்ணின் சாட்சியம் [ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 02:21.39 PM GMT ] இலங்கையில் வெளிவராத இரகசிய தடுப்பு முகாம்கள் உள்ளதாக இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது. Forum Asia Franisans Intenational ஆகிய அமைப்புக்கள் இணைந்து நிமல்கா பெர்னாண்டோ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடா்பான பக்க அறைக் கலந்துரையாடலில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியாரான சந்தியா தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் சா்வதேச மற்றும் தமிழா் மனித உரிமைகள் ஆா்வலர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் ஆகியோர்களும் கலந்துகொண்டனர். http://www.tamilwin.com/show-RUmtyJScSVjx2J.html தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்பிக்க கூடாது: யஸ்மின் சூகா [ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 11:36.06 AM GMT ] இலங்கையின் இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்றவைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என அனைத்துலக மனித உரிமைகள் நிபுணர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் உரையாற்றும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். திரளான மக்கள் மடிந்துள்ளனர், போர்க்குற்றங்கள், மனித உரிமைகளுக்கெதிரான அச்சுறுத்தல்கள் என நிகழ்ந்துள்ளன, ஆனாலும் அவையாவும் இன்னமும் தொடர்கின்றன. இவையாவும் பாதிக்கப்பட்டவர்களின் இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தால் மட்டுமே முடிவானதும் சாதகமானதுமான தீர்வினை பெறமுடியும். ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை என்பது இந்த விவகாரத்தில் முதற்படியே. சர்வதேச அளவில் நிபுணர்கள் அடங்கிய பல்வேறு குழுவினர் இந்த விவகாரத்தை முக்கியமானதாக கருதி செயல்பட்டு வருகின்றனர். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விசாரணைக்கு அங்கு அமைந்துள்ள புதிய அரசு நடவடிக்கை எடுக்கும் என மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக முக்கியமானதாக கருதப்படுவது தேசிய தலத்தில் ஒட்டுமொத்த கலந்தாலோசனையே ஆனால் இந்த தேசிய அளவிலான கலந்தாலோசனையில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள் பிரதிபலிக்குமா? பாதிக்கப்பட்டவர்கள், ஒன்றுமல்லாமல் சிதைக்கப்பட்டவர் என இலங்கையின் ஒட்டுமொத்த பொதுமக்களின் பங்களிப்பு இருக்குமா? மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்துவதற்கென இலங்கையில் பல்வேறு அமைப்புகளை அமைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவை அனைத்துமே வரலாற்றுப் பிழை அன்றி வேறில்லை. அடுத்ததாக அனைவருக்கும் எழும் கேள்வி என்பது பாதுகாப்பு சீரமைப்பு குறித்துதான். மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் மட்டுமல்ல பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டுவது கெட்டுப்போன சிலர் குறித்து அல்ல. இங்கு நாம் சுட்டிக்காட்டுவது பொலிஸ் அல்லது இராணுவ வீரர்கள் களங்கமடைந்திருப்பதாக அல்ல, தவறிழைத்தவர்களை தண்டனையில் இருந்து தப்புவிக்க கூடாது என்பதே. பாதுகாப்புத்துறையில் சரியான சீர்திருத்தம் அமைந்தால் மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் அது பலனை அளிக்கும், வெளிவந்துள்ள அறிக்கையில் விடுபட்டுள்ள முக்கியமான கருத்து மிரட்டல்களால் உடமையை அபகரித்தல். அதுகுறித்து பல ஆண்டுகளாக நாங்கள் உழைத்து வருகின்றோம். மிரட்டல்களால் உடமையை அபகரிப்பது அல்லது பணம் பறிப்பது என்பது முகியமான பணிகளில் ஒன்றாக உள்ளது. உயிர் பிழைத்து தப்பிக்க வேண்டும் எனில் பணம் தரவேண்டிய கட்டாயம் உள்ளது, இதுபோன்ற முறைகேடுகளை இலங்கையில் இருந்து மொத்தமாக ஒழிக்க வேண்டும். பாதுகாப்புத்துறையின் சீரமைப்பினால் மட்டுமே இதுபோன்ற முக்கிய விடயங்கள் சாத்தியமாகும். சாட்சியம் அளிப்பவர்களை பாதுகாப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சாட்சியம் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பை நாம் உறுதி செய்யவில்லை எனில் அவர்களின் குரல்களை நாம் உதாசீனம் செய்வதேயாகும். நம்பிக்கை என்பது இலங்கையில் முக்கியமான விடயமாக உள்ளது. பல்வேறு மதத்தினருக்கிடையே இருக்கும் நம்பிக்கையல்ல, மாறாக அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான நம்பிக்கை. மக்களிடம் அரசின் மீதான நம்பிக்கை மீள்கொணர்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சர்வதேச அமைப்புகளாலான நீதிமன்றம் குறித்து மனித உரிமை ஆணையர் குறிப்பிட்டார், ஆனால் அதற்கும் இலங்கை அரசு கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் நிபுணர்களை கொண்ட ஒரு அமைப்பையே பரிந்துரைத்திருக்கிறது மனித உரிமைகள் ஆணையம். பல்வேறு காரணங்களால் இலங்கையில் பாதிப்புக்குள்ளான மக்கள் அங்குள்ள விசாரணை அமைப்புகளை நம்ப தயாராக இல்லை. மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டது போன்று இலங்கை அரசு இதுவரை நடைமுறைப்படுத்தியுள்ள விடயங்கள் குறித்து சர்வதேச சமூகத்தோடு பகிர்ந்துகொள்ள முன்வர வேண்டும். அதுவரையில் நமக்கு அங்குள்ள மூன்னேற்றம் குறித்து மதிப்பிட முடியாமல் போகும். இதுவரையான அறிக்கைகளில் நமக்கு தற்போது கிடைத்திருப்பது மிக முக்கியமான அறிக்கை, மட்டுமின்றி மிக முக்கியமான பரிந்துரைகளும் கூட. மிக முக்கியமாக ஒடுக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்டவர்களின் குரல்கள் சர்வதேச சமூகத்தின் முன்பு கேட்கப்பட வேண்டும் என்பதே என தெரிவித்துள்ளார். ஐ.நாவை உருக்கிய இலங்கையின் சித்திரவதைகள் http://www.tamilwin.com/show-RUmtyJScSVjx1I.html இலங்கையின் இரகசிய முகாம்களை பார்வையிட விரையும் நிலையில் ஐ.நா அதிகாரிகள் [ வியாழக்கிழமை, 17 செப்ரெம்பர் 2015, 05:06.53 PM GMT ] காணாமல் ஆக்கப்பட்டோரை விசாரிக்கும் நிபுணர் குழுவை சந்தித்து அக்குழுவிடம், இரகசிய முகாம் இருப்பதையும் அவர்கள் வந்து சந்திக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தோம். அக்குழுவினர் இலங்கைக்கு வரும்போது, அவற்றைப் பார்வையிட இலங்கை அரசாங்கம் அனுமதி கொடுக்குமென நம்பபுகிறேன். இரகசிய தடுப்பு முகாம் இருந்ததாக நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்ட விடயம். அதனை இலங்கையின் புதிய அரசாங்கம் மறைப்பதற்கு வழியில்லை என மனித உரிமைகள் ஆர்வலரான அருட்தந்தை யோகேஸ்வரன் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmtyJSbSVjw5J.html- தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கு வருந்துகின்றேன்! கோத்தபாய
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கு வருந்துகின்றேன்! கோத்தபாய [ வெள்ளிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2015, 06:40.37 PM GMT ] [ பி.பி.சி ] தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்தமையை நினைத்து தான் வருத்தம் கொள்வதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளை யுத்த களத்தில் தோல்வியடையச் செய்து நாட்டை மீட்டதற்காக தான் வருந்துவதாகவும், அதன் காரணமாகவே இப்பொழுது என் மீது போர்க்குற்றங்களை சுமத்துகின்றார்கள் என அவர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையை தாம் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் ஒரு குளிர்சாதன அறைக்குள் இருந்து கொண்டு இந்த அறிக்கையை அவர்கள் தயார் செய்திருக்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு பிரச்சார வெளீடுகளின் அடிப்படையிலேயே இவ்வறிக்கை அமைந்திருக்கின்றது என்றும் அவர் குறிப்பிடுகின்றார். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளும், இலங்கை அரசாங்கப் படைகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இரு தரப்பினரையும் குற்றம் சாட்டியுள்ளதுடன், சர்வதேச நீதிமன்றம் ஒன்றை அமைத்து இது தொடர்பாக விரிவாக ஆராய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத் தரப்பில் இருந்து இது தொடர்பாக பல்வேறு மறுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் இளைய சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்ட இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், போர்க்குற்றச்சாட்டுக்களும் உண்டு. எனினும், இது பற்றி அமைச்சர் ராஜித சேனாரத்தன குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவோ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவோ குற்றம் இழைத்தார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டாள் விசாரிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர்கள் பலர் ஐ.நா அறிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/show-RUmtyJScSVjx4G.html#- இலங்கையின் உண்மையான நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இச் செய்தியை தொடர்ந்து இங்கு இணைக்கின்றேன் HOT....
- ஜெனிவாச் செய்திகள் ஒரே திரியில்.........
சிறிலங்கா காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – ஐ.நா பொதுச்செயலர்SEP 18, 2015 | 13:03by கி.தவசீலன்in செய்திகள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்டுள்ள சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவரது பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த அறிக்கையின் பரிந்துரைகள், சிறிலங்கா அரசாங்கத்தினதும், மக்களினதும் அனைத்துலக தர நியமங்களுக்கேற்ப உண்மையான நம்பகமான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயல்முறைகளின் மூலம், நிலையான அமைதி, உறுதித்தன்மை, மனித உரிமைகளை மதிக்கின்ற நிலையை அடைவதற்கான முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும். பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மோதல் காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக எல்லா பங்காளர்களுடனும், பரந்தளவில் ஆலோசித்து பொறிமுறைகளை வடிவமைக்க வேண்டும்.” என்றும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.net/2015/09/18/news/9812 சிறிலங்காவின் பொறுப்புக்கூறல் வலிமிக்கது, ஆனால் அவசியமானது – ஐ.நா சிறப்பு ஆலோசகர்கள்SEP 18, 2015 | 13:41by கார்வண்ணன்in செய்திகள் மோதல் காலங்களில் எல்லா சமூகங்களுக்கும் பாரிய துன்பங்களை விளைவித்த இருண்ட காலத்தை சிறிலங்கா கடந்து வந்திருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் வெளியிட்ட அறிக்கையில், பாகுபாடற்ற பீரங்கித் தாக்குதல்கள், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமற்போகச் செய்யப்படுதல், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், சிறார் படைச்சேர்ப்பு என்று மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின், இனப்படுகொலையைத் தடுத்தலுக்கான சிறப்பு ஆலோசகர் அடமா டையிங், மற்றும் பாதுகாப்புப் பொறுப்புக்கான சிறப்பு ஆலோசகர் ஜெனிபர் வெல்ஸ் ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர். ”பொறுப்புக்கூறல் என்பது, தனியே நீதியை நிலைநாட்டுவதற்கு மட்டுமானது அல்ல. இது நல்லிணக்கம், அமைதி, மீளத்திரும்பாமை ஆகியவற்றுக்கும் முக்கியமானது. சிறிலங்காவின் வரலாற்றில் புதிய அமைதியான பக்கங்களை எழுதுவதற்கு கடந்தகாலக் காயங்களுக்கு பொருத்தமான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட வேண்டும். அனைத்துலக மனித உரிமை சட்ட நியமங்களுக்கு ஏற்ப, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளை உருவாக்கப்பட வேண்டும். இந்த செயல்முறை வலிமிக்கதாகவும், கடினமானமாகவும் இருக்கும். ஆனால், நீண்டகால அமைதிக்கும், நாட்டின் உறுதிப்பாட்டுக்கும் இது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல், சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல், பாடுபாடின்மை என்பன தேசிய கொள்கைகளாக வகுக்கப்பட வேண்டும். எல்லா இன, மத சமூகங்களின் அதிக பிரதிநிதித்துவத்தை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். சிறுபான்மையினரின் குரல்களையும் கூட கேட்கவேண்டிய தேவை உள்ளது, ஏனென்றால், அவர்களும் இலங்கையர்கள் தான்.” என்றும் ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் இருந்து தனது நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய அடிப்படைப் பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருக்கிறது. குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதிலும் இந்தப் பொறுப்பு இருக்கிறது. மீள நடக்காது என்பதற்கான உறுதியான நகர்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் பாதுகாப்புப் பொறுப்புக்கான சிறப்பு ஆலோசகர் ஜெனிபர் வெல்ஸ். அதேவேளை, சிங்கள தமிழ் சமூகங்களிடையே காணப்படும் ஆழமான குறைகளால் மேலும் வன்முறைகள் நிகழக் கூடும் என்று இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான சிறப்பு ஆலோசகர் அடமா டையிங் எச்சரித்துள்ளார். http://www.puthinappalakai.net/2015/09/18/news/9814- இந்தியாவால் மட்டுமே சிறிலங்காவை காப்பாற்ற முடியும் – கேணல் ஹரிகரன்
இந்தியாவால் மட்டுமே சிறிலங்காவை காப்பாற்ற முடியும் – கேணல் ஹரிகரன்SEP 18, 2015 | 12:45by நித்தியபாரதிin கட்டுரைகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கு அமெரிக்கா உடன்பட்டுள்ளது. இது தொடர்பில் தனது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி சிறிலங்காவுக்குத் தேவைப்படுகிறது. இவ்வாறு dailyo ஊடகத்தில் கேணல் ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதுடில்லி அரசியல் வட்டாரத்திற்கு அந்நியமானவரோ அல்லது இந்திய அரசாங்கத்தின் மத்தியில் பரீச்சயமற்ற ஒருவரோ அல்லர். எனினும், கடந்த ஒராண்டாக, ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசியலில் வரவேற்கப்படுகின்ற ஒருவராகக் காணப்படுகிறார். சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் அரசியலில் பெற்றுக் கொண்ட வெற்றிகளை விட இவர் சந்தித்த தோல்விகளே அதிகம். ஆனாலும் இவர் வெற்றிகரமாக தனது நாட்டில் இடம்பெறவிருந்த அரசியல் சதியை முறியடித்திருந்தார். இதனால் இவர் தற்போது பெரிதும் வரவேற்கப்படுகின்ற ஒரு அரசியற் தலைவராக இடம்பிடித்துள்ளார். சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உதவியுடன் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இரண்டு தடவைக்கும் மேலும் அதிபராக இருக்க முடியும் என்கின்ற அரசியல் சீர்திருத்தத்தை அரசியல் சாசனத்திலிருந்து நீக்கிய பெருமை ரணில் விக்கிரமசிங்கவைச் சாரும். கடந்த ஜனவரியில் சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச ஏழு மாதங்களின் பின்னர் தனது விசுவாசிகளின் உதவியுடன் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இதன் மூலம் மீண்டும் சிறிலங்காவின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மகிந்த முனைந்தார். ஆனாலும் இந்த முயற்சியையும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மிகவும் வெற்றிகரமாக முறியடித்தனர். இதன் பெறுபேறாக, கடந்த ஒரு ஆண்டு காலத்தில் இரண்டு தடவைகள் சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். பல்வேறு அரசியற் தடைகள் இருப்பினும், விக்கிரமசிங்க-சிறிசேன கூட்டணி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யும் விதமாக சில நகர்வுகளை மேற்கொண்டுள்ளனர். நிறைவேற்று அதிபர் கொண்டிருந்த சில அதிகாரங்கள் தற்போது நாடாளுமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளமை, பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமை, ஊழல் மற்றும் மோசடி நிறைந்த நிர்வாகம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளமை உட்பட பல்வேறு அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராஜபக்சவின் எதேச்சதிகார ஆட்சியால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் களங்கப்படுத்தப்பட்ட சிறிலங்காவின் நல்லாட்சியானது தற்போது சிறிசேன-விக்கிரமசிங்க ஆகிய இரு தலைவர்களாலும் மீளவும் நிலைநிறுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விக்கிரமசிங்க சிறிலங்காவின் தேசிய அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குகின்றார். 1977 இன் பின்னர் தற்போது முதன் முறையாக, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் இணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியுள்ளன. இதன்மூலம் நாட்டில் ஒற்றுமை, சமாதானம் மற்றும் அமைதி போன்ற சூழலில் அபிவிருத்தியை முன்னுரிமைப்படுத்தி தேசிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை நிறுவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் நாட்டில் பிரபலம் பெற்றிருந்த மகிந்த ராஜபக்ச அமைதியை உருவாக்குவதில் தோல்வியடைந்துள்ளார். போருக்குப் பின்னான ஐந்து ஆண்டுகால அமைதிச் சூழலில் தனக்கான ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதிலேயே மகிந்த ராஜபக்ச குறியாக இருந்தார். இதன் பெறுபேறாக, சிறிலங்காவின் சமூக-அரசியல் சூழலானது கசப்புணர்வு, விரோதப்போக்கு, அவநம்பிக்கை மற்றும் இன-மத எதிர்ப்புக்கள் மற்றும் கலவரங்களால் நாசமாக்கப்பட்டது. சிறிலங்காவின் அரசியல் சூழலில் பரவலாக ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றிருப்பினும், அரசியல் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் ஒன்றை வரையறுப்பதற்கான வாய்ப்பை தற்போதைய அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது. ஆனால் சிறிலங்காவின் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் தற்போது புதுடில்லிக்கான தனது சுற்றுப்பயணத்தை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ளமையானது முன்னரை விட இவருக்கு மிக அதிகளவான நம்பிக்கையை வழங்கியுள்ளது. சிறிலங்கா மற்றும் இந்தியத் தலைவர்களுக்கிடையில் முன்னரைவிடத் தற்போது அதிகளவு தொடர்பாடல்கள் ஏற்பட்டுள்ளன. ராஜபக்ச ஆட்சியில் இருந்த போது நாட்டின் பாதுகாப்பு மூலோபாயம் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் சீனா தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலானது சீனா நோக்கிய சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டை மாற்றியமைப்பதாக அமைந்துள்ளது. ஆகவே சில மாதங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதுடன் அதன்மூலம் சிறிலங்காவுடன் விரிவான உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது அதனை விக்கிரமசிங்க-சிறிசேன கூட்டணி வரவேற்றதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. இவ்விரு நாடுகளுக்கும் இடையில் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட விரிசல்களை சீர்செய்வதற்கான மோடியின் விருப்பத்திற்கு விக்கிரமசிங்க-சிறிசேன கூட்டு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியது. ஆகவே சிறிலங்காவின் பிரதமர் புதுடில்லிக்கான தனது பயணத்தை மேற்கொண்டுள்ளமையானது இந்திய அரசியல் வட்டாரத்தால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. ஏனெனில் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தை விடத் தற்போதுள்ள சிறிலங்கா அரசாங்கமானது புதுடில்லியின் நம்பிக்கையை அதிகம் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பச் செயற்படுவதற்கு விக்கிரமசிங்க மற்றும் சிறிசேன ஆகியோர் தயாராக உள்ளனர். இது சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் துணைபுரியும். ராஜபக்சவின் அரசாங்கத்தால் போரின் போதும் அதன்பின்னரும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்தியா மற்றும் மேற்குலகம் அழுத்தம் கொடுத்தபோது, அதனை முறியடிப்பதற்காக ராஜபக்ச பல்வேறு சதித்திட்டங்களை மேற்கொண்டார். இது இந்தியா மற்றும் மேற்குலகை எரிச்சலடையச் செய்தது. ராஜபக்ச தனது அரசியல் நலன்களை அடைந்து கொள்வதற்காக, சிங்களத் தேசியவாதம் மற்றும் சீனாவின் தலையீட்டைப் பெரிதும் வரவேற்றார். இதேபோன்று, தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசியல் கலந்துரையாடல்களை மகிந்த ராஜபக்ச புறந்தள்ளினார். தமிழ் மக்களின் நீண்டகால அரசியற் கோரிக்கைகளைப் பரசீலிக்காது அதனை மகிந்த ராஜபக்ச தட்டிக்கழித்தார். இது இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியலில் அதிகம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது இந்திய மத்திய அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தமாக இருந்தது. சிறிலங்காவுடன் வெற்றிகரமான நட்புறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்கின்ற முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டிருந்த போதும் சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கைகளைத் தட்டிக்கழித்தமையானது இதன் உள்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்பலவீனத்தை சீனா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்காவிற்குள் நுழைந்து கொண்டது. இந்தியாவின் கூட்டணி ஆட்சி முடிவடைந்துள்ள போதிலும், சிறிலங்காவில் நிலவும் இனமுரண்பாடுகள் இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லது இதன் தேசிய பாதுகாப்பு நலனிலும் தொடர்ந்தும் தாக்கம் செலுத்தும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதே. புவியியல் ரீதியாக இந்தியாவும் சிறிலங்காவும் மிகவும் நெருக்கமானவை. ஆகவே இவற்றின் தேசிய பாதுகாப்பு நலன்கள் மிகவும் பாராட்டத்தக்கவையாகும். இதுவே இவர்கள் தமக்கிடையிலான உறவைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றது. சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது இந்தியாவால் ஆதரவளிக்கப்படும் 13வது திருத்தச் சட்டத்திற்கு ஏற்ப தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இருப்பினும் இத்திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளிடம் காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களைக் கையளிப்பதானது சிறிலங்காவின் அரசியலைப் பொறுத்தளவில் மிகவும் கடினமான ஒன்றாகும். இந்தியா மற்றும் மேற்குலகைப் பொறுத்தளவில் ராஜபக்ச சீனாவைத் தனது நாட்டிற்குள் வரவேற்றமையானது இவற்றின் கேந்திர மூலோபாய அதிகாரத்திற்கு சவாலாக விளங்கியது. குறிப்பாக ராஜபக்சவின் ஆதரவுடன் இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சித்தமையானது இந்தியாவின் தேசிய நலன்களுக்கு சவாலாக எழுந்தன. இந்திய மாக்கடலின் ஊடாக சீனா தனது கடல்சார் வர்த்தகத்தை விரிவுபடுத்தியது. அத்துடன் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் குறிப்பாக இந்திய மாக்கடலில் சீனா தனது கடற்படைத் தளத்தை நிறுவியதானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்துள்ளது. இதற்கு ராஜபக்சவே காரணம் என்பதால் சிறிலங்காவுடனான இந்திய உறவு கடந்த சில ஆண்டுகளாக விரிவடைந்திருந்தது. தற்போது சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க ஆகியோர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இவர்கள் சீனாவை விட இந்தியாவுடனேயே உறவை நீட்டித்துக் கொள்ள முனைகின்றனர். சிறிலங்காவைப் பொறுத்தளவில் சில விவகாரங்களில் இந்தியாவின் உதவியும் அதன் புரிந்துணர்வும் மிகவும் அவசியமானதாகும். சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது கடந்த மூன்று ஆண்டுகளாக ஆராயப்பட்டு வரும் வெள்ளியன்று இறுதி வடிவாக்கப்படவுள்ளது. ஆகவே சிறிலங்கா மீதான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையகம் வெளியிடப்பட்ட பின்னர் சிறிலங்காவைப் பொறுத்தளவில் இதற்கு இந்தியாவின் உதவியும் புரிந்துணர்வும் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும். அமெரிக்காவின் தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உதவியுடன் சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கு அமெரிக்கா உடன்பட்டுள்ளது. ஆகவே சிறிலங்கா இது தொடர்பில் தனது ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி தேவைப்படுகிறது. அமெரிக்காவின் நகர்வானது தமிழ்நாடு, புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விமர்சனத்திற்கு உட்பட்டுள்ள போதிலும் அனைத்துலக விசாரணைக்குப் பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்துள்ளது. இந்தவகையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியாவும் ஆதரவளிக்கும் என நம்பப்படுகிறது. இந்தியா – சிறிலங்கா வர்த்தக உறவு இரண்டாவது விவகாரமாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போது, முழுமையான பொருளாதார உடனப்பாட்டில் கைச்சாத்திடுவதற்கான கருத்தை முன்வைத்திருந்தார். இந்த உடன்பாடானது 2008ல் ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட முற்பட்ட போது சிறிலங்காவின் உள்நாட்டு வர்த்தகர்களின் எதிர்ப்பால் இது கைவிடப்பட்டது. தற்போது சிறிலங்கா பொருளாதார ரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளது. சீனாவின் கடன்களை சிறிலங்கா ஈடுகட்டுவதற்கு அனைத்துலக நாணய நிதியம் தனது பக்க ஆதரவை வழங்குவதில் பெரிதளவில் ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டுள்ள சிறிலங்காவானது இந்தியாவின் கைகளை இறுகப்பற்ற வேண்டிய தேவையுள்ளது. எனினும், வெளிப்படையாக இந்தியாவின் முழுமையான பொருளாதார உடன்பாட்டிற்கு ஆதரவளிப்பதென்பது சிறிலங்காவின் அரசியலில் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்படலாம். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிறிலங்காப் பிரதமர் முழுமையான பொருளாதார உடன்பாடு தொடர்பாக முன்னுரிமைப்படுத்தியுள்ளதாக சிறிலங்காவின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஹார்சா டீ சில்வா தெரிவித்திருந்தார். எதுஎவ்வாறிருப்பினும், இது போன்ற உடன்படிக்கைகளை இந்தியா போன்ற நாடுகளுடன் சிறிலங்கா மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும், ஆனாலும் கண்மூடித்தனமாக இவ்வாறான உடன்படிக்கைகளைச் செயற்படுத்தத் தொடங்கக்கூடாது எனவும் இதனை முழுமையாக ஆராய்ந்து கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு இவ்வாறான பொருளாதார உடன்படிக்கைகளில் கைச்சாத்திட வேண்டிய தேவையுள்ளதாக ஹார்சா டீ சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்காவுக்கு நலன் பயக்கக்கூடிய இருதரப்பு அல்லது பல்தரப்பு வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கான உந்துதல் அளிக்கப்பட வேண்டும் எனவும் பிரதி வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.puthinappalakai.net/2015/09/18/news/9810 இவர் ஏன் ஒரு றோவின் அதிகாரியாகவிருக்கக் கூடாது? - இலங்கையின் உண்மையான நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இச் செய்தியை தொடர்ந்து இங்கு இணைக்கின்றேன் HOT....
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.