Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. El Toro Photo ⁠Sponsorisé · Clown Frogfish.......! 😂
  2. Abu Farhana Suggestions ·il y a un jour1 j · அதீத புழுக்கத்தின் காரணமாக இரண்டு நாட்களாக அறையில் சமைக்கவில்லை. மீன் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. சரி மார்க்கெட்டுக்கு போயி ஏதாவது நல்ல மீன் இருக்கானு பார்த்துட்டு இன்றைக்காவது ஏதாவது சமைக்கலாம்னு மீன் கடை பக்கம் கரையொதுங்கி விட்டேன். எல்லா மீன்களும் நல்ல மீன்கள் தான். ஆனால் நம்மவர்கள் சில மீன்களை தான் சாப்பிடுவார்கள். துண்டு துண்டாக இருக்க வேண்டும், முள் இருக்க கூடாது , குறிப்பாக சுவையாக இருக்க வேண்டும் என பல நிபந்தனைகள் உண்டு. இந்த நிபந்தனைகளில் தேர்ச்சி பெறுவது சீலா, ஊளி, வாவல் மீன்கள் தான். சேட்டன் கடையில் சீலா சரியில்லை.. ஊளியில் ஒளியில்லை.. கருப்பு வாவல் கட்டுப்படியாகாது. அதனால் பாறை மீன் பக்கம் பார்வையை கொண்டு போயாச்சு. பெரிய பாறை மீன் ஒன்றரை கிலோ. பாதி மீனை ஆணத்துக்கு சிறிய துண்டுகளாகவும் மீதியை பொரிக்க ஏற்ற மாதிரி துண்டு போடுமாறு சொல்லியாச்சு !!! சேட்டன் மீனுடன் கதகளி ஆடிட்டு இருக்கையில் நமது கண்கள் அங்கிருந்த நண்டு பக்கம் தாவியது. வெயில் காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்க போவதால் பெரும்பாலானோருக்கு சளி காய்ச்சல் தொல்லை இருக்கிறது. எனவே ஒரு நண்டு ரசம் போடுவோம். சளிக்கு அது தான் பாயாசம். அதில்லாமல் நண்பர்களின் விருப்ப பட்டியலில் நண்டு ரசமும் ஒன்று !!! ஆறேழு பெரிய நண்டுகளை எடுத்து அதையும் சுத்தம் செய்து வாங்கியாச்சு. மாங்காய், முருங்கைகாய் போட்டு மீன் ஆணம் சமைக்க வேண்டுமென ரொம்ப நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். மீன் வாங்கிவிட்டு வரும் வழியில் காய்கறி சந்தையில் மாங்காயும் முருங்கைகாயும் வாங்கிட்டு வந்தாச்சு... மாங்காயின் பச்சை வாசத்தை நுகர்கையிலேயே குடலில் சிட்ரிக் அமிலம் சிறகடிக்கிறது... வெங்காயம், தக்காளி, மிளகாய், பூண்டு எல்லாவற்றையும் இலேசாக வதக்கி அதோடு ஊர் மசாலா சேர்த்து இறக்கியாச்சு. ஆறியதும் அதனை மையாக அரைத்து வைத்தாச்சு. அடுத்து பாறை மீனின் இளஞ்சிவப்பு துண்டுகளுக்கு மசாலா தடவணும்.. வத்தத்தூள், மஞ்சள் தூள், சிக்கன் 65 மசாலா , பொடிப்பொடியாக வெட்டிய கறிவேற்பிலை, உப்பு , எண்ணெய் சேர்த்து விரவும் போதே அம்புட்டு வாசம். மசாலா தடவியதும் மீன் துண்டுகளின் அழகு கூடிவிட்டது. எண்ணெய்யில் குளிப்பதற்கு முன் சிறிது நேரம் மசாலாவை கிரகித்துக் கொள்வதற்காக மீனை தொந்தரவு செய்யாமல் மூடி போட்டு வைத்தாச்சு. மசாலா தடவிய கைகளுக்கு பிரத்யேக வாசம் உண்டு. உணர்ந்தவர்கள் ஞானிகள் !! இரண்டு அடுப்புகளில் பாத்திரம் வைத்து ஒன்றில் மீன் ஆணத்திற்கும் மற்றொன்றில் நண்டு ரசத்திற்கும் தாளிப்பை தொடங்கியாச்சு.. கொஞ்சமா எண்ணெய் ஊற்றி வெங்காயம், நைத்து வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய் , கறிவேற்பிலை மற்றும் தக்காளியை போட்டு வதக்கி பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிளகு தூள் , ஜீரக தூள் சேர்த்து கொதிக்க விட்டாச்சு. நண்டு சாப்பிடாத நண்பர்களுக்காக கொதித்த மிளகு ரசத்தை தனியாக ஒரு கிண்ணியில் எடுத்து வைத்து விட்டு பின்னர் நண்டை உள்ளே இறக்கி உப்பு சேர்த்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இறக்கியதும் நண்டு ரசம் ரெடி.. இறக்குவத்ற்கு முன் உப்பும் கொத்தமல்லி இலையும் சேர்த்தாச்சு... வழிநெடுக காட்டு மல்லி வாசம் போல, அடுக்களை தாண்டி அறை முழுவதும் நண்டு ரசம் வாசம் தான்.. உப்புக்காரம் பார்க்கையில் உள்ளே சென்ற ரசம் பசிக்கு பச்சை விளக்கு காட்டி விட்டது. நண்டு ரசத்திற்கு நாக்கின் சுவையூக்கிகளையும் மூக்கின் நுகர் உணர்விகளையும் கிளர்த்தெழ செய்யும் அற்புதமான சக்தி இருக்கிறது. ஆம் அதுவரை அடைத்திருந்த மூக்கு திறந்து விட்டது... இன்னொரு சட்டியில் சிறிது எண்ணெய் சேர்த்து வெந்தயம், பாதி வெங்காயம், பாதி தக்காளி, நாலு பல் பூண்டு சேர்த்து இலேசாக வதக்கி அரை கரண்டி வத்தல் தூள் சேர்த்து இரண்டு தடவை அங்கேயிங்கேன்னு ஆப்பையை சட்டிக்குள்ள ஆட்டிட்டு, அரைத்து வைத்த மசாலாவை சேர்த்தாச்சு. இலேசாக கொதித்ததும் வெட்டி வைத்த மாங்காய் துண்டுகளையும் முருங்கைகாயையும் சேர்த்து கொதித்ததும் மீன் சாப்பிடாதவர்களுக்கு ஆனத்தை எடுத்து விட்டு மீனை ஆணத்தில் இறக்கி விட்டேன்.. மீன் சேர்த்ததும் ஆனத்தின் வாசமும் சுவையும் இரட்டிப்பாக மாறி விட்டது. ஆணம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது பாறை எனும் கடல் அழகி. ஆனம் கொதிக்கையில் சமையற்கட்டு முழுவதும் அம்புட்டு வாசம். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து மூடி போட்டாச்சு. மீன் சால்னாவிற்கு சுடுசோறு தான் பெஸ்ட் காம்போ. ஆனால் இரவில் சோறு சாப்பிடுவதில்லை என்பதால், சப்பாத்தியும் மீன் சால்னாவும் சாப்பிட்டேன். ஒரு புடி சப்பாத்தி ஒரு மிடரு நண்டு ரசம் !!! ப்பா சரியான ஜோடி ... நண்டு ரசம் தொண்டையை கடக்கையிலேயே சளி எல்லாம் பெட்டி படுக்கையோடு வெளியேற காத்திருக்கிறது. மிளகு காரத்தில் மூக்கு, நெற்றி எல்லாம் வியர்வையில் குளிக்கிறது. சுடுசோறு + மீன் ஆனம் + நண்டு ரசம் + பொரித்த மீன் வைத்து சாப்பிட்ட நண்பன் சொன்னான், மச்சி நைஸ்டா.. You done a Good Job.. You stole my heart ❤️" வயிறு மட்டுமில்லை மனதும் நிறைந்து விட்டது... அல்ஹம்துலில்லாஹ் அபு பர்ஹானா Voir moins......!
  3. சிடான் பிரான்சின் பயிற்றுவிப்பாளராய் பங்கேற்று முதலாவது விளையாட்டு பிரான்சிக்கும் துருக்கிக்கும் நடந்தது . ..... அதில் பிரான்ஸ் - 01....... 00 துருக்கி ......! அந்த ஒரு கோலும் எம்பாப்பே அடித்தார் .........! 👍
  4. வணக்கம் வாத்தியார் . .........! பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : ஆண்டொன்று போனால் பெண் : வயதொன்று போகும் ஆண் : அதற்கு முன்னாலே இருவர் : வா வா வா வா பெண் : அழகுடன் இளமை ஆண் : தொடர்ந்து வராது இருவர் : இருக்கின்ற போதே வா வா வா ஆண் : {வாலிபம் என்பது தோட்டம் வண்ண மலர்களின் கூட்டம் வாடிய பின்னே மலராது பெண் : கண்களில் பொங்கும் வெள்ளம் கலகலவென்னும் உள்ளம் அடங்கிய பின்னே ஆடாது} (2) பெண் : {என்னென்ன இன்பம் எங்கெங்கு உண்டோ அங்கங்கு செல்வோம் வா வா வா ஆண் : இரவென்ற ஊரில் உறவென்ற தேரில் துயில் கொண்டு வாழ்வோம் வா வா வா} (2)......! ...... ஆண்டொன்று போனால் .......
  5. ஆண்டொன்று போனால் ....... போலீஸ்காரன் மகள் ....... பாலாஜி & சகுந்தலா ......! 😍
  6. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sarathkumar Dhanlakshmi ·14 septembre à 15:56 · ஸ்காட்லாந்தில் ஒரு மிக எளிய யோசனை, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டைக் குறைத்து வருகிறது. மக்களுக்குத் தேவையான இடத்திலேயே இலவசமாக குடிநீரை வழங்குவது! 💧" 2018ஆம் ஆண்டு முதல், நாட்டின் குடிநீர் விநியோகத்துக்குப் பொறுப்பான பொதுத்துறை நிறுவனமான Scottish Water, மக்கள் அதிகம் கூடும் தெருக்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் “Top Up Taps” எனப்படும் குடிநீர் குழாய்களை நிறுவத் தொடங்கியது. இதன் செயல்பாடு மிகவும் எளிமையானது. மக்கள் தங்களுடைய மறுபயன்பாட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு, அருகிலுள்ள இந்தக் குடிநீர் குழாயைத் தேடி, இலவசமாக சுத்தமான குடிநீரை நிரப்பிக்கொள்ளலாம். ஆப் தேவையில்லை. பதிவு செய்ய வேண்டியதில்லை. தாகம் எடுத்தவுடன் புதிதாக ஒரு பிளாஸ்டிக் பாட்டில் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. ♻️" இந்த முயற்சி மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு நேரடியான பதிலாக உருவானது. உலகம் முழுவதும் தினமும் கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் வாங்கப்படுகின்றன. அவற்றில் கணிசமான அளவு குப்பைக் கிடங்குகள், ஆறுகள் அல்லது கடல்களில் சென்று சேர்கின்றன. 🌊" பிளாஸ்டிக் குப்பையாக மாறிய பிறகு அதைச் சமாளிப்பதற்குப் பதிலாக, அந்த பாட்டிலையே மக்கள் வாங்க வேண்டிய தேவையை ஆரம்பத்திலேயே குறைக்க வேண்டும் என்பதுதான் ஸ்காட்லாந்தின் அணுகுமுறை. பல ஆண்டுகளாக இந்தக் குடிநீர் குழாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 132 பொது இடங்களில் இவை உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இதுவரை சுமார் 2 கோடி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு இணையான பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. 🌱" இந்த முயற்சியை சுவாரஸ்யமாக்குவது அதன் எளிமைதான். புரட்சிகரமான புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டியதில்லை. இலவசமான குடிநீரை மக்கள் எளிதாகப் பெறக்கூடிய இடத்தில் கிடைக்கச் செய்தாலே போதும். சில நேரங்களில் மிகப்பெரிய பிரச்சினைகளுக்கான தீர்வு சிக்கலானதாக இருக்க வேண்டியதில்லை. சரியான இடத்தில் வைக்கப்பட்ட ஒரு குடிநீர் குழாயிலிருந்தே அந்த மாற்றம் தொடங்கலாம். 💧" object-fit: fill;"> #PlasticFree #Sustainability #CleanWater— en pleine forme, à Inde. Voir moins..........!
  7. கனகாலத்துக்கு பின் நல்லதொரு குட்டிக் கவிதையுடன் வந்திருக்கிறீர்கள் ....... மிக்க மகிழ்ச்சி ...........! 😂
  8. ப்ரோக்கோலியை இப்படி செய்து சாப்பிட்டுப் பாருங்கள் ....... செமையா இருக்கும் ...........! 😂
  9. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 கு.மயூரன் கு.மயூரன் ·il y a 5 jours5 j · 1884 ஆண்டு நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!! அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன. அப்படி நம்முடைய ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்..! ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்..! ஐடாவோ, "நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார். "இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது. நாங்க பிராமணாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார். அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் துடித்து பதறுகிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள், தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து போய், தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா. "என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்" என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார். டாக்டராகிறார்..! இதனிடையே, சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார். ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார். மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே நல்ல வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஐடா அதையும் நிராகரிக்கிறார். தமிழகத்தில் இறந்து போன அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள் மட்டுமே அவர் கண்முன் வந்து வந்து போயின..!! ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார். பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி பிச்சை எடுக்காத குறையாக, நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது...! இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 1900-ம் ஆண்டு, ஜனவரி மாதம், தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கிறார் ஐடா. ஆஸ்பத்திரி கட்டும் பணியை ஆரம்பிக்கிறார். படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை ஒருவழியாய் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா! அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி" ஆஸ்பத்திரி! ஐடாவின் பணி இத்துடன் முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி, உங்கள் வீட்டு இளம்பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புங்கள் என்று கெஞ்சி கூத்தாடினார். இறுதியில் 5 இளம்பெண்களை மட்டுமே அவரால் திரட்ட முடிந்தது. அவர்களுக்கு மருத்துவ பயிற்சி தந்து, முறைப்படி தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற வைத்தார் ஐடா..! இவர்கள் தான் நம் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..! நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடா தான் என்பதை எத்தனை பேர் நன்றியுடன் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை..! ஆனால், யார் இந்த பெண்? இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காக உருகினார்? இவர் ஏன் நமக்காகவே கடைசிவரை வாழ்ந்தார்? எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம் தமிழ்நாட்டுக்காக, தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிகாட்டி" என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?!! ஆனால், ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது..! Voir moins.......!
  10. ஊரில எல்லாவற்றிற்கும் நாலுபேர் நாலுவிதமாய் சொல்லுவார்கள்தான், அதைக் கணக்கில் எடுக்காமல் நீங்கள் தனிவழியில் செல்லுங்கள் .......! 😂
  11. வணக்கம் வாத்தியார் . .........! பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : எஸ் ஐ லவ் திஸ் இடியட் ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட் ஆண் : காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட ஆண் : கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல் இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ பெண் : பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும் அது மழையோ புனலோ நதியோ கலையழகோ ஆண் : மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி பெண் : இது தொடரும் வளரும் மலரும் இனி கனவும் நினைவும் உனையே பெண் : பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும் உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை ஆண் : தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள் அது புதுமை பெண் : கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ ஆண் : இனி வருவாய் தருவாய் மலர்வாய் எனை உயிராய் உறவாய் தொடர்வாய் .........! ........ இதம் தரும் காதல் கவிதைகள் ........
  12. ஒரு கதாநாயகன் கதை சொன்னான் .......... வேடடைக்காரன் ......எம் . ஜி .ஆர் & சாவித்திரி ..........! 😍
  13. Kovilpatti Kokila Tailors முதன் முதலில் சுடிதார் எனக்கு அணிவித்தது என் தந்தை. அணிவிக்கும் போதே இரண்டு புறமும் சால் போட்டு பின் குத்தி அணிவித்தார் அதை இன்று வரை நான் கடைப்பிடிக்கிறேன்.......!👍
  14. கடைல வாங்காம இனி வீட்லயே பிரட் சாண்ட்விச் செய்ங்க | Iyengar Bakery Sandwich | Masala Bread Toast......! 😂
  15. Writer Sujatha Reader Circle · Ram Sridhar ·il y a un jour1 j · வசந்துக்குக் கல்யாணம்..... சுஜாதா (2003) (விகடன் சிறியதிலிருந்து பெரியதாக மாறிய பொழுது, இது இளமை விகடன் என்று வந்த புதிய இதழ். ஒரு வாரம் முழுக்க சுஜாதா தயாரித்த புத்தகம். அதில் வந்த பதிவு இது.) ============== வசந்த்தை ஒரு காபி ஷாப்பில் சந்தித்தேன். "சார். வாங்க! என்ன எழுதிட்டிருக்கீங்க..? இப்பல்லாம் எங்களைப் பத்தி எழுதறதே இல்லையே?" "கணேஷ் ஊருக்குப் போயிருக்கிறதா கேள்விப்பட்டேன்?" "ஆமா! ப்ரஸ்ஸல்ஸ்ல ஒரு கான்ஃபரன்ஸுக்குப் போயிருக்கார்!" "எப்படி இருக்கே வசந்த்?" "டாப் ஆஃப் த வேர்ல்ட்!" அப்போதுதான் என்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணைப் பார்த்தேன். ஒப்பனைகளால் ஒப்பேற்றப்பட்ட ஒல்லியான பெண். “திஸ் இஸ் சித்ரா! மூக்குத்தி சூப்பரா போட்டிருக்கா பாருங்க! சித்து, திஸ் இஸ் சுஜாதா சார்! மை மெண்ட்டர்” என்றான். "வசந்த், இஸ் தி காபி கமிங்?” என்றாள். “ஆன் தி வே டியர்!" "ஐ'ல் ஹேவ் அன் ஐஸ்க்ரீம் இன்ஸ்டெட்!” “இதான், இவகிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம். மூணு நிமிஷத்துல மூணு தடவை ஆர்டரை, மாத்தியாச்சு!" “வாட்... வாட்?" “தமிழ் வராதா?" “வராம என்ன, ஷி இஸ் ஃப்ரம் ஏக்னாம்பட்டு நியர் கான்ஜீவரம்!” "எக்ஸ்க்யூஸ்மீ” என்று அவள் டாய்லெட் நோக்கிச் செல்ல, "வசந்த், நீ இந்தப் பொண்ணை..." "கல்யாணம் பண்ணிக்கப் போறேன். என்ன அழகு... எத்தனை அழகு பார்த்தீங் களா?" "அப்படியா?" “ஷி இஸ் எ டிவைன் ஏஞ்சல்! ஒரு ட்ராஃபிக் லைட்ல நானும் நிறுத்தினேன், அவளும் நிறுத்தினாள். கண்ணொடு கண்ணினை நோக்கொக் கொக்..." "ஐ காட் தி ஐடியா" "வாய்ச் சொற்களுக்குத் தேவையே இல்லாம, அடுத்த கணம் காதல்! அது, அது, அதான் அதன் கெமிஸ்ட்ரி!" "எப்ப கல்யாணம்?" "பாஸ் வந்த கையோட" "எப்ப வரார்?" "அடுத்த வாரம். அதுவரைக்கும் தாங்காதுனா, நாங்க ஃபோர் ஷோர் எஸ்டேட்ல கையெழுத்து மாத்திக்கிட்டு, கல்யாணம் பண்ணிக்கிட்டு, ப்ரஸ்ஸல்ஸ் போய், பாஸ்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கப் போறதா ஒரு ப்ளான்!" "ஓ! தட் ஃபாஸ்ட்" ஆமா ஸார்! இப்ப எல்லாமே 'கட் டு தி சேஸ்'தான். அவனவன், இந்நேரத்துக்கு கர்ப்பமாக்கி, பத்மா சேஷாத்ரில் அப்ளிகேஷன் வாங்கி வெச்சுர்றான். கட்டாயம் கல்யாணத்துக்கு வரணும்!" "நம்ம வசந்த் கல்யாணத்துக்கு நான் வராம இருப்பனோ?" ====================== அடுத்தமுறை வசந்த்தைச் சந்தித்தபோது, தனியாக யோசனையில் உட்கார்ந்து இருந்தான். "என்ன வசந்த், கல்யாணம் எல்லாம் ஆச்சா? ஸாரி, என்னால வர முடியலை! தேதி தெரியலை. Do you feel sufficiently married?" "இல்லை சார், ஒரு மாசம் தள்ளிப் போட்டிருக்கோம்!" "?" "அட்டிட்யுட் ப்ராப்ளம் கொஞ்சம் இருக்கு! அதைக் கொஞ்சம் ட்வீக் பண்ணித் திருத்திக்கப் போறோம்!" "புரியலை!" “பாருங்க, ரெண்டு பேரும் காதலர்கள்தானே..ஒரு தடவையாவது முத்தம் கொடுத்துக்க வேண்டாமா? நியாயமான கோரிக்கையா, இல்லையா? அவனவன் முழுசா உதட்டை கெச்சப்போட சாப்பிடறான்!" "இல்லை வசந்த், கட்டுப்பாடா காஞ்சிபுரத்தில் வளர்ந்த பொண்ணுக்கு இதெல்லாம் அவசரப்படக் கூடாது!" "அவசரமே படாம அரை மூட்டை பாப்கார்ன், ஆளுயர ஐஸ்க்ரீம், நியூஸ்பேப்பர் நிறைய சுண்டல், ஆறு குஜராத்தி டோக்லா... எல்லாம் வாங்கிக்கொடுத்து, பீச்சுக்கு கரெக்ட் பண்ணிக் கூட்டிட்டுப் போய் சந்திரோதயம், தூரத்துக் கப்பல் எல்லாம் காட்டி, ரேகை பார்த்து, மணலை அளைந்து, ஒரு ஹைக்கூ சொல்லிட்டுக் கடைசிலதான் 'சித்து! ஒரு முத்து கொடுக்கலாமா?'னு கேட்டேன். அதுக்கு பதில் என்ன தெரியுமா. சார்? 'எச்சப் பண்ணாம குடு'ன்னா! கன் யு பிலீவ் இட்? சரி, இதான் சான்ஸ்னு பச்சக்குனு உதட்டில் கொடுத்துப் பார்த்தேன். மூஞ் சியைப் புளிப்புமிட்டாய் சாப்ட்டாப்ல வச்சுக்கிட்டா. 'எச்சப் பண்றே.. எச்சப் பண்றே'னு காட்லிவர் ஆயிலுக்குப் படுத்தற குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிச்சு உடனே விலகிண்டு... கன் யு பிலீவ் இட்? அழ ஆரம்பிச்சா! மைகாட்! நான் சீரியல் கில்லர் மாதிரி, 'வசந்த்! என் மதிப்புல நீ விழுந்துட்டே! உன்னை நான் தெய்வ ஸ்தானத்தில் வெச்சிருந்தேன். என்னை 23பி-ல அல்லது ஸி-ல ஏத்திவிட்டு, புண்ணியமாப்போகும்'னு கெஞ்சறா!" அடுத்த முறை சரவணபவனில் நின்றுகொண்டே, காபி சாப்பிட்டுக் ெகாண்டிருந்தான். "வசந்த், என்ன ஆச்சு? கல்யாணமெல்லாம் லா நடந்துச்சா? சித்ரா எங்கே?" 'கல்யாணமா?" சித்ரா எப்படியிருக்கா?" "சித்ராவா? ஓ... சித்து! அது ஒர்க் அவுட் ஆல தலைவா!" "கம் எகைன்?" "முதல்ல அந்தப் பெண்ணைச் சரியா கிஸ் அடிக்க முடியலை!" "அதான் சொன்னியே... புளிப்பு மிட்டாய்...." "அடுத்த முறை பீச்ல உக்காந்துகிட்டு,கைகோத்து மணல்ல நடந்தா ஒர்க் அவுட் ஆகும்னு கை கோத்தா, விரலுக்கு விரல் சரியா கோக்கவே இல்லை! என் ரெண்டு விரலுக்கு நடுவே அவ மூணு விரல்...எந்த ஊர் நியாயம் இது? சகுனமே சரியில்லை! அதிகபட்சம் கை விரல் ஒத்துப்போக வேண்டாமா? அப்புறம், அவளைக் கிட்டக்கப் பார்த்தப்ப ஒரு புருவம் லேசா தூக்கலா, பர்மனன்ட்டா கவலைப்படற மாதிரி ஒரு தோற்றம் கொடுத்தது. அப்பப்ப, 'வசந்த், இங்க பாருனு கதகளி டான்ஸர் மாதிரி புருவத்தை மாத்தி மாத்தி ஏத்தி இறக்கிக் காட்டறா. ஒரு கண்ணு தன்னிச்சையா அப்பப்ப துடிக்குது! சின்ன வயசில அவ தம்பி கிட்டிப்புள் ஆடறப்ப பட்ட காயமாம். அன்னிக்கு பார்த்தீங்களே. உங்களுக்குத் தெரியலை?" "அவ்வளவு உன்னிப்பா பாக்கலை! வசந்த், எனக்கென்னவோ அவ அழகாத்தான் இருந்தாப்பல!" "உத்துப் பாத்திருந்தா நோட்டீஸ் பண்ணிருப்பீங்க!" "மிகையா சொல்றப்பா!" "இல்லை சார்! யோசிச்சுப் பார்த்தேன். வாழ்நாள் முழுக்க இந்தக் கிட்டிப்புள் பட்ட கதகளி புருவத்தோடயும், எதிர்பாராம துடிக்கிற கண்ணோடயும் வாழனுமா ? பொறிதட்டிப் போச்சு! காதலைத் தியாகம் பண்ணிட்டேன்" "சித்ரா வருத்தப்படலயா?” "இதிலதான் பாருங்க, என் ஜாதக ராசி. கணேஷுக்கு போன் பண்ணேன். அவர் கட் அண்ட் ரைட்டா 'நீ பண்றது நல்லால்லை. முதல்ல அவகிட்ட மன்னிப்புக் கேளு'னாரு 'என் பேஸ் ஹெட்போன் ஒண்ணும், சோனி வாக்மேனும் அவகிட்ட மாட்டிட்டிருக்கு'னேன். அதைத் திருப்பிக் கேக்காதே. அசிங்கம்!'னாரு. 'போய், நாம நண்பர்களாக இருக்கலாம்னு ஏதாவது ஜெர்க் விட்டுட்டு, அப்புறம் கட் பண்ணு'னார். 'டாபிக்கை நீ ஆரம்பிக்காதே!'னார் அந்த மகான்! எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி! நான் முகத்தைச் சோகமா வெச்சுக்கிட்டுப் போறேன்". 'வசந்த், நான் உன்கிட்ட ஒரு அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் சொல்லணும்!'னா. 'என்ன சித்ரா?" 'நான் கமலேஷ்கூட சமாதானமாயிட்டேன். யோசிச்சுப் பார்த்தா. நான் அவனைத்தான் நிஜமா லவ் பண்ணிட்டிருந்திருக்கேன். நடுவுல நீ வந்து கொஞ்சம் குழப்பிட்டே! ஸாரி வசந்த்! ஆமா, நீ என்னவோ சொல்ல வந்தியே?" 'நத்திங்! டெண்டுல்கர் மூணு ரன் எடுத்து போல்டாயிட்டான்னு வருத்தமா இருந்தது. அதை ஷேர் பண்ணிக்கத்தான் வந்தேன்! எனக்கு உள்ளுக்குள்ள சந்தோஷமான சந்தோஷம்! சுமலேஷ் ஒரு அல்லக்கை. சித்ராவுக்குப் பொருத்தமான கதகளி ஜோடி. சந்தோஷத்தை அடக்கி வெச்சுக்கிட்டு, தலையைப் பிடிச்சுக்கிட்டு குனிஞ்சேன். 'ஐம் ஸாரி வசந்த்"னா! 'எதும் சொல்லாதே! எதுவுமே சொல்லாதே! எங்கிருந்தாலும் வாழ்க! அடுத்த ஜன்மத்திலயாவதுஉன்னோட சரியா கை கோத்துக்க சான்ஸ் கிடைக்கிறதா, பார்க்கறேன்! - அப்படியே தலை நிமிராம பரீட்சார்த்த நாடகத்தில் வர்ற மாதிரி பின்வாங்கினேன். நேரா பாத்ரூம் போயிட்டு, ஆசை தீரச் சிரிச்சுட்டுத் திரும்பி வந்தேன்.. கணேஷ் சொல்வார். 'நீயெல்லாம் கல்யாணம் பண்ணிக்கிற ஜாதியில்லை'னு. சார். ஒரு பிரில்லியண்ட் ஐடியா வெச்சிருக்கேன். அதை எங்கயாவது எழுதுங்க. இந்தியாவுல குடும்பக் கட்டுப்பாட்டுக்கு முக்கியமான ஒரு முறை இருக்கு!" "தெரியும். தண்ணி குடிக்கிற ஜோக்தானே."" "இல்லை. எந்த வீட்லயும் பெட்ரும் லைட்டுக்கு சுவிட்சே கூடாது!" என்று எழுந்தான். "வசந்த், போறதுக்குள்ள அந்த மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் சொல்லிட்டுப் போயேன்.. வாசகர்கள் கேட்டுக்கிட்டே இருக்காங்க!" "வேண்டாம் சார். ஏற்கெனவே 'பாய்ஸ்'க்கப்புறம் உங்களை ஆளாளுக்குப் புரட்டுறாங்க. என்னையும் திட்டுவாங்க. விகடன்ல போடவும் மாட்டாங்க. கொஞ்சம் மைல்டா ஒரு ஜோக் சொல்றேன்.." "சொல்லு!" வசந்த் சொன்னான்... “என் ஃப்ரெண்டு பார்த்தசாரதி ரொம்ப மானஸ்தன். யாராவது ஏதாவது எசகுபிசகா பேசினா, கோபத்தைக் காட்ட இடத்தைவிட்டு எழுந்து போயிடுவான். இப்படித்தான் சாஸ்திரி ஹாலிலோ, பாரதிய வித்யாபவனிலோ, காலஞ்சென்ற டாக்டர் மாத்ருபூதம் பழைய பாட்டெல்லாம் பாடிக்கொண்டு, கிளுகிளு அட்வைஸ் கொடுத்துககொண்டிருந்தார். 'செக்ஸுங்கறது இடுப்புக்குக் கீழ் இல்லை. இரண்டு காதுகளுக்கு இடையில், புருவத்துக்கு மேலே, மண்டைக்குள்ள இருக்கறது' என்றபோதே பாச்சு நெளிந்தான். முன் வரிசையில் விற்றிருந்த அவனை நேராகப் பார்த்து. 'அழகுங்கறது அவங்கவங்க டேஸ்ட்டைப் பொறுத்தது. தேசத்துக்கு தேசம் மாறும். ஆப்பிரிக்க தேசத்தில் பெண்கள் பெரிய மூக்கும், பெரிய உதடுகளும், பெரிய (சைகை காட்டி). களுமா வாட்டசாட்டமா கட்டுக்கடங்காம இருப்பாங்க. இரண்டு கைகள் போதாது. இதைக் கேட்ட உடனே பாச்சு முகம் சிவந்து, 'திஸ் இஸ் தி லிமிட்' என்று கோபத்தில் எழுந்து. விருட்டென வெளிவாசலை நோக்கி நடந்தான். 'எங்க இப்பவே கிளம்பிட்டீங்க? ஆப்பிரிக்காவுக்கு நாளைக்குதான் ஃப்ளைட்டு!' என்றார் டாக்டர்!" வசந்த்தின்மேல், ரோஜர் பென்ரோஸின் 'ஷாடோஸ் ஆஃப் த மைண்ட்' புத்தகத்தை நான் எறியும் முன், கில்லெஸ்பி 'பம்பர்' முன் 'டக்' பண்ணும் சேவாக் போலக் குனிந்துவிட்டு, "சுஜாதா சார், உங்க 'ஏன் எதற்கு எப்படிக்கு ஒரு அறிவியல் கேள்வி அனுப்பியிருந்தேன். நீங்க பதிலே சொல்லலையே!" என்றான். "என்ன கேள்வி?" "விண்வெளியில் செல்பவர்கள் எப்படி கக்கா சுச்சா போறங்கனு கேட்டிருந்தேன்!" "வசந்த்!" என்று அதட்டி மற்றொரு புத்தகத்தைத் தேடுமுன் புறப்பட்டுச் சென்றான். வசந்த்தைத் திருத்தவே முடியாது......!
  16. இன்றைய நவீன பயன்பாட்டுப் பொருட்களின் சீரான பெயர்கள் ......... நன்றி தோழர் ......! 👍
  17. Sri Legacy Media Suggestions ·16 h · "குங்குமப் பொட்டின் மங்கலம்... நெஞ்சம் இரண்டின் சங்கமம்..." மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நடித்து 1968-ல் வெளியான ‘குடியிருந்த கோயில்’ படத்தில் வாலிபக் கவிஞர் வாலியோ அல்லது கவியரசு கண்ணதாசனோ தான் இந்தப் பாடலை எழுதியிருப்பார்கள் என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருப்போம் ஆனால், ஆண்களே ஆதிக்கம் செலுத்திய அந்த காலத்துத் திரையிசை உலகில், ஒரு பெரும் சாதனையாக ஒரு பெண் எழுதிய பாடல் தான் இது அவர் தான் கோயம்புத்தூரைச் சேர்ந்த ரோஷனாரா பேகம் 60-களில் ஒரு இஸ்லாமியக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, தமிழ் சினிமாவில் பாட்டெழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல. கவிதையின் மீது கொண்ட காதலால் அவர் எழுதிய வரிகளைப் பார்த்துவிட்டு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனே வியந்து போனாராம் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்துப் பண்பாட்டின் மிக முக்கிய அடையாளமான "குங்குமப் பொட்டு", மாங்கல்யம், ஏழு அடி எடுத்து வைக்கும் சப்தபதி போன்ற அத்தனை விஷயங்களையும் அக்குவேற ஆணிவேறாகப் புரிந்து கொண்டு, அத்தனை அழகான தூய தமிழில் வரிகளாக வடித்திருப்பார் "மங்கலக் குங்குமம் பொன்னிற மங்கையின் நெற்றியில் விளங்குவதே.. அவள் நெஞ்சில் விளங்கும் காதலன் எண்ணம் நிலைத்து வாழும் என்பதற்கே..." – என்று காதலின் ஆழத்தையும், திருமணப் பந்தத்தின் புனித்தையும் அந்த வரிகள் அத்தனை அழகாகப் பேசும். துரதிர்ஷ்டவசமாக, அன்றைய சினிமா சூழல் மற்றும் குடும்பக் கட்டுப்பாடுகள் காரணமாக ரோஷனாரா பேகத்தால் அதற்குப் பிறகு தொடர்ந்து பாடல்கள் எழுத முடியாமல் போனது தமிழ் சினிமாவுக்கு அவர் தந்தது இந்த ஒரே ஒரு பாடல் தான் என்றாலும், அது நூறு பாடல்களுக்குச் சமமான ஒரு காவியமாக மாறிப் போனது இன்று பெண் பாடலாசிரியர்கள் பலரும் தங்களின் திறமைகளைத் திரையில் நிரூபித்துக் கொண்டிருக்கும் வேளையில், 60-களிலேயே ஒரு சாகாவரம் பெற்ற பாடலைக் கொடுத்த ரோஷனாரா பேகத்தின் பெயர் தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் அழியாது அடுத்த முறை இந்த அழகான பாடலைக் கேட்கும் போது, இதற்குப் பின்னால் இருக்கும் இந்த வரலாற்றுப் பெருமையையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! #RoshanaraBegum #TamilCinemaHistory #MGRSongs #MSV #TamilLyrics #UnsungHeroes #RetroTamil #SriLegacyMedia Voir moins......!
  18. Manikandan G Suggestions ·4 j · #நாணயஸ்தன் முன்னொரு காலத்தில் குருவாயூரப்பன் என்னும் வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் ஊர் ஊராகச் சென்று பழைய ஈயம், பித்தளைப் பொருட்களை வாங்கி, நகரத்தில் உள்ள மொத்தக் கடைகளில் விற்று பணம் பெற்றுக் கொள்வான். அவன் செல்லும் இடங்கள் பெரும்பாலும் கிராமங்களாக இருந்ததால், பொருட்கள் கிடைப்பது கடினமாக இருந்தது. இருப்பினும், அவனது வாழ்க்கையும் வறுமையில் தான் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு முறை, பக்கத்து ஊரில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்று, பழைய பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா எனக் கேட்டான். அந்த வீடு ஒரு காலத்தில் செல்வத்துடன் வாழ்ந்தவர்களுடையது. ஆனால், இப்போது அவர்களது செல்வம் கரைந்து, இரு குழந்தைகளுடன் ஒரு தாய் வறுமையில் வாழ்ந்து வந்தாள். அந்தத் தாய், வீட்டில் உள்ள பழைய பொருட்களை விற்று, அதன் வருமானத்திலேயே வாழ்க்கையை நடத்தி வந்தாள். அந்தப் பெண், குருவாயூரப்பனிடம் பழைய பொருட்களை விற்று, அவன் நாணயமாகக் கொடுக்கும் பணத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்தி வந்தாள. குருவாயூரப்பனுக்கு இது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், அவனும் அவர்கள் கொடுக்கும் பழைய பொருட்களை விற்றுத் தான் வாழ வேண்டியிருந்தது. ஒரு நாள், அந்த வீட்டிற்குச் சென்று, பழைய பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா எனக் கேட்டான். அந்தப் பெண் பரிதாபமாகப் பார்த்து, “என்னிடம் இப்போது ஒன்றுமே இல்லை. ஒரு காலத்தில் எங்க தாத்தா சாப்பிட்ட பழைய சாப்பாட்டுத் தட்டு ஒன்று இருக்கு. ஆனால், அது வளைந்து நெளிந்து கிடக்கு. அதை எடுத்துக்கொண்டு, எங்களுக்கு ஏதாவது கொடுத்துட்டுப் போ. இரண்டு நாள் சாப்பாட்டுக்கு நிம்மதியாக இருக்கலாம்,” என்று வருத்தத்துடன் சொல்லி, அந்தத் தட்டைக் கொண்டு வந்து கொடுத்தாள். குருவாயூரப்பன் அந்தத் தட்டை வாங்கிப் பார்த்தான். அது மிகவும் பழையதாகவும், அழுக்காகவும் இருந்தது. அதை நன்கு துடைத்துப் பார்த்தான். மதிப்பு எவ்வளவு இருக்கும் என யோசித்தவன், மீண்டும் மீண்டும் துடைத்துப் பார்த்தான். அவன் இப்படி துடைத்து யோசிப்பதைப் பார்த்த அந்தப் பெண், “தம்பி, இந்தத் தட்டு உனக்கு எதுக்கும் உதவாது என்றாலும், எங்களுக்கு உதவி செய்யறதுக்காகவாவது ஏதாவது கொடுத்துட்டுப் போ,” என்று பரிதாபமாகச் சொன்னாள். குருவாயூரப்பன், “அம்மா, இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. என் கையில் கொஞ்சம் பணம் இருக்கு, இந்தாங்க,” என்று அவள் கையில் கொடுத்தான். அந்தப் பணம் அவளுக்கு அதிகமாகத் தோன்ற, “தம்பி, இதுவே அதிகம்,” என்று மனநிறைவுடன் பெற்றுக் கொண்டாள். குருவாயூரப்பன் எதுவும் பேசாமல் நகரத்துக்கு விரைந்தான். அங்கு, அவனுக்கு நன்கு தெரிந்த ஒரு நகை ஆசாரியிடம் சென்று, அந்தத் தட்டைக் காண்பித்தான். ஆசாரி அதைப் பார்த்து, “அப்பா… இது சுத்த தங்கம்!” என்று வாயைப் பிளந்தார். இருவரும் ஒரு பெரிய நகைக் கடைக்குச் சென்று, தட்டைக் காண்பித்து, அந்தக் குடும்பத்தின் விவரங்களையும் குருவாயூரப்பன் விளக்கினான். நகைக் கடைக்காரர், அந்தப் பெண்ணையும் குழந்தைகளையும் அழைத்து வரச் சொன்னார். வாகன வசதியும் ஏற்பாடு செய்து கொடுத்தார். குருவாயூரப்பன் விரைந்து சென்று, அந்தப் பெண்ணையும் அவர்கள் குழந்தைகளையும் கூட்டி வந்தான். நகைக் கடைக்காரர் அந்தப் பெண்ணிடம், “அம்மா, இந்தத் தட்டு மாதிரி வேறு ஏதாவது உங்க கிட்டே இருக்கா?” என்று கேட்டார். “இல்லை, ஐயா. இது எங்கேயோ கிடந்தது. நான்தான் பொறுக்கி எடுத்து வைத்து இவரிடம் கொடுத்தேன்,” என்றாள் அந்தப் பெண். “அம்மா, இது சுத்த தங்கம். இதன் மதிப்பு ஐந்து லட்ச ரூபாய்க்கு இருக்கு. பணமாகக் கொடுத்துடவா?” என்று கேட்டார். அந்தப் பெண், குருவாயூரப்பனைப் பார்த்து, “தம்பி, நீதான் என்ன செய்யணும்னு சொல்லணும்,” என்றாள். குருவாயூரப்பன், “ஐயா, இந்தப் பணத்தை பேங்கில் டெபாசிட் செய்து கொடுங்க. அதுல இருந்து மாசாமாசம் வட்டி வரும். அதை வைத்து இவங்க வாழ்க்கையை நடத்துவாங்க,” என்று சொன்னான். நகைக் கடைக்காரர், குருவாயூரப்பனை கட்டிப்பிடித்து, “உன்னை மாதிரி நாணயஸ்தன் எங்கேயும் கிடைக்க மாட்டான்,” என்று சொல்லி, மேனேஜரை அழைத்து, பக்கத்தில் உள்ள வங்கியில் எல்லா ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னார். பின்னர், குருவாயூரப்பனையும் ஆசாரியையும் அழைத்து, “தம்பி, இந்தாங்க, என்னால் முடிந்த அன்பு பரிசு,” என்று கொஞ்சம் பணம் கொடுத்தார். குருவாயூரப்பன் மறுத்து, “இல்லை, ஐயா, இந்தப் பொருள் என்னுடையது இல்லையே,” என்றான். அதற்கு நகைக் கடைக்காரர், “தம்பி, நான் கொடுத்தது பொருளுக்காக இல்லை, உன் நாணயத்துக்கு. நீ நினைச்சிருந்தா இது உன்னுடையதுன்னு சொல்லி பணத்தை வாங்கியிருக்கலாம். ஆனா, நீ அந்தக் குடும்பத்தை கூட்டி வந்து, அவங்களுக்கு ஒரு வருமானத்துக்கு வழி காட்டியிருக்கியே, அதுக்குத்தான்,” என்றார். குருவாயூரப்பன் நன்றி கூறி, அந்தத் தொகையைப் பெற்று, அங்கிருந்து விடைபெற்றான். குருவாயூரப்பன் ஏழை வணிகனாக இருந்தாலும், நாணயஸ்தனாக இருந்ததால், அவனுக்கு புகழும், பெருமையும், செல்வமும் கிடைத்ததல்லவா! பகிர்வு! Voir moins......!
  19. அவசரம் . .....எல்லாவற்றிலும் அவசரம் . ....... பிள்ளையோடு செல்லும்போது கூட ........!

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.