Everything posted by Justin
-
ஈழத் தமிழ் பெண் என அடையாளப்படுத்தியதற்காக மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு எதிரான பேரினவாத இணையத் தாக்குதல்களும், ‘ரேட்டிங் பாம்பிங்’ அரசியலும்
இன்னொரு வழி , அமெரிக்காவில் தீவிர வலது சாரிகள் தங்கள் எதிர்க் கருத்தாளர்களைப் பழிவாங்கப் பயன்படுத்தும் வழி: பாலியல் ரீதியான வசவை எழுதிய ஒருவரின் அடையாளம் தெரிந்திருந்தால், அவரை "முன்னுதாரணமாக்கி" விடுதல்😎. உதாரணமாக அவர் வேலை செய்யும் இடத்தின் சமூகவலை ஊடகக் கணக்கிற்கு அவர் எழுதியதை tag செய்து விட்டால், அவரது தொழில் துறையைப் பொறுத்து பின்விளைவுகள் இருக்கும். ஒரு கல்லூரி ஆசிரியரோ, மருத்துவரோ கீழ்த்தரமான பாலியல் தாக்குதல்களை தன் தனிப்பட்ட நேரத்தில் பதிந்தாலும் விளைவுகள் இருக்கும். ஆனால், இதைச் செய்யும் போது செய்பவர் தன் கணக்கை அடையாளம் தெரியாத மாதிரி வைத்திருப்பது பாதுகாப்பானது. எங்கள் நிலைமைக்குப் பொருந்தா விட்டாலும் இந்த இடத்தில் ஒரு சிறந்த உதாரணம் சுட்டிக் காட்டலாம்: அண்மையில் பிரிட்டனின் ஒரு அதிவலதுசாரியை அமெரிக்கக் குடிவரவுத் துறைப் பொலிஸ் பிடித்து நாடுகடத்தியது. அவர் எழுதிய ஒரு கருத்தைப் பிடித்துக் கொண்டு அவரை மாட்டி விட்டது இன்னொரு அதி வலது சாரிப் பெண் பிரபலம்😂.
-
ஈழத் தமிழ் பெண் என அடையாளப்படுத்தியதற்காக மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு எதிரான பேரினவாத இணையத் தாக்குதல்களும், ‘ரேட்டிங் பாம்பிங்’ அரசியலும்
என்னிடம் சோசியல் மீடியா கணக்குகள் இல்லை (வட்சப் தவிர). முகநூல், இன்ஸ்ரா, எக்ஸ் பிரசன்னமுடையோர், ஒரு "இளம்பெண் பிரபலம் மீதான ஆபாசத்தாக்குதலாக" இந்த இனவாதச் சிங்களவர்களின் தாக்குதலை வகைப் படுத்தி உரிய இடங்களில் பகிர வேண்டும். ஒரு ஆணாக இருந்தால் இத்தகைய பாலியல் ரீதியான தாக்குதல்கள் வந்திருக்காது என்பது உறுதி. இது போன்ற வக்கிரத் தாக்குதல்களை எதிர் கொள்ளும் முதல் பெண் பிரபலம் மைத்திரேயி அல்ல, பிரிட்டனின் எம்மா ரடுகானு என்ற ரெனிஸ் வீராங்கனை முதல், அண்மையில் சமூக வலை ஊடகங்களில் இருந்து விலகிய அரியானா கிராண்டே வரை இதே வக்கிரங்களை எதிர் கொண்டவர்களின் பட்டியல் நீளமானது. இத்தகைய வக்கிரக் கருத்துக்களை flag செய்ய முடியுமா என எனக்குத் தெரியாது. ஆனால், தங்களுடைய சக கலைஞரை சிங்களவர்கள் இப்படி பாலியல் வசவு செய்கிறார்கள் என்பதை கீழுள்ள ஆட்களின் கணக்குகளுக்கு தெரியப் படுத்தலாம் (tagging என நினைக்கிறேன், சரியா?) இயக்குனர் லீனா கான்: Lena Khan (@imlenakhan) ஹசன் மின்காஜ்: Hasan Minhaj (@hasanminhaj) பிரியங்கா கேடியா:priyanka kedia (@pkwizzles) தயாரிப்பாளர் ப்ரஷாந் வெங்கட்ராமானுஜம்:Prashanth Venkataramanujam (@prashanthvenkat) தயாரிப்பாளர் ஜொனாதன் ஐரிக்:Jonathan Eirich (@joneirich) • Instagram photos and videos
-
யாழில் பாடசாலையில் இருந்து மகளை ஏற்றி சென்றவர் புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழப்பு
இது புங்கங்குளம் ரயில் கடவையில் நிகழ்ந்த இரண்டாவது மரணம் என நினைக்கிறேன். சோகமான நிகழ்வு , ஆனால் தவிர்த்திருக்கக் கூடியது. இது முற்றிலும் பாதுகாப்பற்ற ரயில் கடவையல்ல என நினைக்கிறேன். STOP sign உம், தடி மறிப்பும் இருக்கிறது. இரண்டையும் கடைப் பிடிக்காதோர் உயிரை இழக்கின்றனர். ஏனையோரும் பாடம் படிப்பதில்லை!
-
ஈழத் தமிழ் பெண் என அடையாளப்படுத்தியதற்காக மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு எதிரான பேரினவாத இணையத் தாக்குதல்களும், ‘ரேட்டிங் பாம்பிங்’ அரசியலும்
நன்றி @நிழலி . படத்தை வார இறுதியில் மகளோடு பார்த்தோம், இன்று காலையில் இப்படியொரு விடயம் போய்க் கொண்டிருப்பதாக வீட்டில் சொன்னார்கள். மைத்ரேயியை இறுதியாக நடந்த இலங்கைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்துக் கௌரவிக்கும் அளவுக்கு அவர் ஈழத்தமிழ் சமூகத்தின் பக்கம் நிற்கும் ஒரு உறுதி மிக்க இளையவர் என்று அறியப் பட்டவர். நான் நினைக்கிறேன், இந்த முக மூடி போட்ட சிங்கள இனவாதிகள் மைத்ரேயியை தாக்கியதன் மூலம் தங்கள் அசிங்கத்தைத் தான் உலகத்திற்குக் காட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் மைத்திரேயி மட்டுமல்லாமல், நன்கு அறியப் பட்ட நகைச்சுவையாளர் (Standup Comedian) ஹசன் மின்காஜும் நடித்திருக்கிறார். அடுத்து அவர் செய்யும் அரசியல் நகைச்சுவை (Satire) நிகழ்ச்சிகளில், சிங்கள இனவாதிகளும், சிறிலங்காவும் மாட்டிக் கொண்டு சின்னாபின்னப் படுவதைக் காணலாம் என நம்புகிறேன். திரைப்படம் நெற்பிளிக்ஸில் இருக்கிறது. எங்கள் மக்கள் நெற்பிளிக்சில் பார்த்தால் அதிலேயே double thumbs-up கொடுத்து ரேட்டிங்கை உயர்த்தி விடலாம். அப்படியான ரேட்டிங்கிற்குரிய திரைப் படம் தான் அது.
-
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
திணிப்பது எங்கே நடக்கிறது? ஒரு தவறான வெளிப்படையான முடிவைக் கூட "தவறு" என்று சொல்ல முடியாமல் நின்ற இடத்தில் நிற்கும் உங்களைப் பார்த்து நகைக்கிறேன்! அவ்வளவு தான். நானாவது வெளியே சொல்கிறேன், சொல்லாமல் சிரித்துக் கடந்து போவோர் பலர் இருக்கக் கூடும், உங்கள் இஷ்டம் நீங்கள் எப்படியும் இருப்பது. தோற்ற தரப்பை எதிர்த்து வென்ற தரப்பை நோக்கி ஆதரவு யார் தருகிறார்கள்? எங்கே இராணுவ வெற்றி பெற்ற சிங்கள, இந்தியத் தரப்பிற்கு என் ஆதரவைக் கண்டீர்கள் என்று காட்டுங்கள்? தற்போதும் தோற்றுக் கொண்டிருக்கிற தமிழர் பக்கம் தானே நான் நிற்கிறேன்? விக்கிரகத்தைத் தூக்கித் தலையில் வைக்காமையால் தாயகத்தில் தோற்றுக் கொண்டிருக்கிற மிதவாதிகள் பக்கம் அல்லவா நான் நிற்கிறேன்? பழைய வீரப் பிரதாபங்களிலும், கோஷங்களிலும் மெய்மறந்திருக்கும் உங்களைப் போன்றவர்கள் அல்லவா "வெற்றி" களின் அடிமைகளாக இன்னும் இருக்கிறீர்கள்😎?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்ப இனி "கொட்டை இரிக்கா?" என்று தமிழில் கேட்டது மருவி, "கோஸ்ராரிக்கா" என்ற பெயர் உருவானது போன்றவையெல்லாம் செ.நு இங்கிருந்து கற்றுக் கொண்டு உலகை ஒளிமயமாக்கப் போகுது போல😂!
-
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
ம்..நம்மை விடுங்கள், இருவரும் வெளியே இருந்தோம், நம்மை யார் கணக்கிலெடுத்திருக்கப் போகிறார்கள்? ஒரு எடுகோளுக்கு, வன்னியில் இருந்த ஒரு பகுதி மக்கள் இந்த ராசதந்திர முடிவை எதிர்த்திருந்தால், நிச்சயமாக இயக்கம் முடிவை மாற்றிக் கொண்டிருக்கும்😂 என்பதை நம்பும் அளவுக்கு நீங்கள் முட்டாள் என நான் கருதவில்லை! ஆனால், ஒரு மாயக் கனவில் திளைத்திருப்பதைக் கைவிடாமல் தவிர்ப்பதற்காக முட்டாள் மாதிரி நடிக்க முடிகிறது உங்களுக்கு! பத்தாயிரக் கணக்கான மக்களின் உயிரையும், எதிர்காலத்தையும் பற்றிய முடிவை எந்த தேர்தலிலும் நின்று வெல்லாத ஒரு தரப்பிடம் கொடுத்து விட்டு நீங்களும், நானும் அதற்கு விசிலடித்தது முட்டாள் தனம். வன்னி மக்களுக்கு தெரிவுகள் இருக்கவில்லை. எனவே அவர்களுக்கு இதில் பொறுப்பில்லை. எங்களுக்கு இருக்கும் பொறுப்பு, "பிழை விட்டு விட்டோம்" என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டு விட்டு, இனி அது நடக்காமல் இருக்க ஆகும் காரியங்களைப் பார்க்க வேணும். அதையா செய்கிறீர்கள் உங்களைப் போன்றோர்? யாராவது பேசினால் பேசக் கூடாது என்று பாய்க்குக் கீழ் கூட்டித் தள்ளி விடுவதும், அழிவுக்கு வழி வகுத்த முடிவுகளை "ராசதந்திரம், தீர்க்க தரிசனம்" என்று ஓவராக அக்ரிங் கொடுப்பதும், போதாக் குறைக்கு இந்த ராசதந்திரத்தில் எமக்கும் பங்கிருக்கு என்று பெருமையும்..இதையெல்லாம் பார்த்து சிரிக்காமல் இருப்பது மிகக் கடினம் விசுகர்!
-
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
சரியாக நான் முன்னர் பல தடவைகள் எழுதியவற்றைக் கவனித்தால், 2009 இற்கு முன் அல்ல, 2012 இற்கு முன் என்று வரவேண்டும்! அப்போது நானும் உங்களையும் ரஞ்சித்தையும் போலத் தான் - எது செய்தாலும் சரியாகத் தான் செய்திருப்பர் என்ற குருட்டு நம்பிக்கையில் இருந்தேன். அப்படியல்ல, 2004- 2008 இல் வன்னியில் நடந்தது அவர்களது இலக்கில் முதன்மையானது மக்களின் நலன் அல்ல என்று தெரிந்து கொண்டேன். இப்போது பொது வெளியில் இருக்கும் தகவல்களைப் பார்க்காமல் நீங்கள் கண்மூடித் தூங்குங்கள்! இனி "ராசதந்திர சோதனைகள்" செய்ய யாரும் வரப் போவதில்லை! அடுத்த பொதுத் தேர்தலில், பெரும்பான்மைக் கட்சிகளில் இருந்து தான் தமிழ் பா.உக்களே வரப் போகிறார்கள். உங்களதும், மயக்கம் தெளியாத தீவிர தமிழ் தேசியர்களினதும் நோக்கம் நிறவேறி விட்டது😎!
-
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
"சொர்க்கத்தில் நகைச்சுவை (க்கான தேவை) இருக்காது" என்றார் Mark Twain. ஏனென்றால் சிரிப்பு/நகைப்பு என்பதே துன்பங்களைக் கையாள உருவான ஒரு கருவி தான்! எனவே நான் சிரித்தது ஏனென்று உங்களுக்கு புரியும். பேச்சுவாத்தைக்கு அனுப்பப் பட்டு அங்கே மேற்குலகின் எண்ணங்களை அறிந்து கொண்ட பாலசிங்கம் எச்சரிக்கை கொடுக்கிறார், இந்தியா மரக்கொப்பில் இருக்கும் கழுகு போலக் காத்திருக்கிறது. இதெல்லாம் தெரிந்த பின்னும் ஒரு முடிவு எடுக்கப் படுகிறது. பத்தாயிரக் கணக்கில் மக்கள் இறக்கிறார்கள், இயக்கத்தின் கீழ் நிலைப் போராளிகள் இங்கே எழுதவே முடியாத முடிவை நோக்கித் தள்ளப் படுகிறார்கள், அவர்கள் பலரின் குழந்தைகள் அனாதைகளாகியிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த பிறகும், வெளிநாட்டில் இருந்தபடி ஒருவர் "சர்வதேசத்தை நம்பினார், ராச தந்திர முடிவெடுத்தார்" என்று மீண்டும் மீண்டும் எழுதும் போது, இதற்கெல்லாம் சிரிக்காமல் இருக்க முடியுமா😂? நகைப்பை விட இந்தத் துன்பத்திற்கும், கண்டனத்திற்கும் வேறெதுவும் coping mechanism இருக்கிறதா?
-
பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உயிரிழந்த இளைஞன்!
உங்களுக்கு வந்த இளவயது மாரடைப்பு உணவு, வாழ்க்கை முறை சம்பந்தப் படாததாக இருந்திருக்கலாம்! இதனால் இளவயது மாரடைப்பிற்கு உணவு, உடற்பயிற்சியின்மை என்பன காரணமாக இருக்கவே முடியாது என்று பொதுமைப் படுத்த முடியாது. அண்மையில் இலங்கையின் சுகாதார அமைச்சரின் உரையொன்றில் குறிப்பிட்டது போல, தங்களுக்கு "நீரிழிவு இருக்கிறதா?" என்றே தெரியாமல் தான் பெரும்பாலான மக்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என்றால், கொலஸ்திரோல் இருப்பதை யார் தான் அறிந்திருக்கப் போகிறார்கள்?
-
பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உயிரிழந்த இளைஞன்!
Stent வைப்பதா இல்லையா என்ற முடிவு பல காரணிகளை வைத்தே எடுக்கப் படும். இதய இரத்தக் குழாயில் கல்சியம் 400 என்று இருந்தால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று அர்த்தம். ஆனால், உங்கள் வயது, ஏற்கனவே கொலஸ்திரோல் குறைப்பு மருந்துகளை எடுப்பவரா, மாரடைப்பு மரணம் குடும்பத்தில் இருக்கிறதா, நெஞ்சுவலி இருக்கிறதா - இவையெல்லாம் ஸ்ரென்ற் வைப்பதா அல்லது மருந்துகளையும், வாழ்க்கை முறை மாற்றங்களையும் பயன்படுத்துவதா என்பதைத் தீர்மானிக்க உதவும் காரணிகள்.
-
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
🤣யாருடைய நலனுக்கு "சரியாக" அமைந்த முடிவு? இயக்கத்தின் ஓர்ம நலனுக்கா? பிரபாகரனின் நற்பெயர் காக்கும் நோக்கத்திற்கா? இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு இப்போது என்ன நன்மைகளை தமிழர்கள் "அறுவடை" செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லி விடுங்கள்!
-
கனடா 'இணை உறுப்பினர்' ஆவதற்கான திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஆதரவு.
கார்னியின் முன்னெடுப்புகள், பேச்சு வார்த்தைகள் எவ்வளவு தூரம் ஒப்பந்தமாக மாறுகின்றன எனப் பொறுத்திருந்து பார்க்கலாம். ஒப்பந்தங்கள் ட்ரம்பின் அழுத்தம் காரணமாக துரிதமாகச் செய்யப் படா விட்டால், அடுத்த ஆட்சியிலும் பேச்சு வார்த்தைகள் தொடர வேண்டி வரும். அந்த வேளையில் அமெரிக்காவில் ஆட்சி மாறினாலும், கனடாவின் தலைமை திசையை மாற்றாமல் தொடர வேண்டும் என்பதே என் அவா! அதிருக்கட்டும். அடுத்த 10 ஆண்டுகளில் எனக்கு 62 வயது. இது கட்டையில் போகிற வயதல்ல! கனடாவின் 80 வயது ஆயுட்காலத்தோடு (இது அமெரிக்காவை விட 4 வருடங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது😇!) பார்க்கையில் அது மத்திம வயது-middle age. ஆண்களுக்கு மத்திம வயதில் வரும் midlife crisis இல் அல்லாடியபடி, சிவப்புக் கலர் convertible கார் வாங்கி, பீச்சில் வலம் வரும் "கனிந்த" வயது 62😊! நிச்சயம் லிபரல் கனடாவில் ஒரு கால் வைக்கத் தான் வேணும்! ஐடியாவுக்கு நன்றி!
-
கனடா 'இணை உறுப்பினர்' ஆவதற்கான திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஆதரவு.
கனடா தன் புதிய யாதார்த்தின் படியான பொருளாதார இலக்குகளை 5 வருடங்களுக்குள் அடைய முடியாது. அப்படி நீங்கள் எதிர்பார்ப்பதே உங்களுக்கு உங்கள் நாட்டின் பொருளாதாரம் எப்படி இயங்குகிறது என்ற தெளிவில்லை என்பதைத் தான் காட்டுகிறது. உங்களுக்கு விருப்பக் குறி போட்டிருக்கும் ஜேர்மன் பிரசைக்கும் இதே பிரச்சினை தான்: "மரக்கறி விலையும், மண்ணெண்ணை விலையும் கூடினால் நாடு நலிந்து விட்டது" என்று எடுத்துக் கொள்ளும் ஆட்கள் தான் தங்கள் வட்டத்தை விட்டு வெளியே பார்க்க முடியாத வலதுசாரிகள், நீங்கள் இருவரும் அத்தகய வலதுசாரிகளின் உதாரணங்கள் - poster boys! ஆனால், இன்று கார்னி எடுக்கும் நடவடிக்கைகள் அடுத்த 10 வருடங்களில் ஒரு பயனைத் தரும். அந்தப் பயன், இனி ட்ரம்பை விட மொக்கன் ஒருவன் அமெரிக்காவில் பதவிக்கு வந்தாலும் (நிச்சயம் வரலாம்!) யாரும் பறிக்க இயலாததாக இருக்கும். அது வரை, விலைகள் கூடும், வேலைகள் இழக்கப் படும், 12 மாதங்கள் அரைச்சம்பளத்தில் கர்ப்ப விடுமுறை எடுத்து விட்டு வீட்டில் இருக்க முடியாத நிலை வரும், வகேஷன் போக முடியாத நிலை வரும்..இதெல்லாம் கனேடியர்கள் கொடுக்க வேண்டிய விலைகள். இதைக் கொடுத்து அவர்கள் நீண்டகால நன்மைகளை அடைவார்கள் என்பது தான் கார்னியின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது எனக்குப் புரிகிறது. இந்த விலைகளைக் கொடுக்க இயலாத கனேடியர்கள், அப்படியே அமெரிக்காவிற்கு அகதியாக வந்து அசைலம் கேளுங்கள்! ட்ரம்ப் உங்களை எப்படி நடத்துகிறார் என்பதைக் கண்டு கொள்வீர்கள்😂!
-
சில ஐரோப்பிய செப்டம்பர் மாத கச்சா எண்ணெய் விநியோகத்தை அராம்கோ ஒத்திவைத்தது
இதுக்கே அசந்தால் எப்பிடி நியாயம் சார்? " பூமி தட்டை, ஆனால் அது கோளம் என்று எங்கள் எல்லோருடைய மண்டையையும் கழுவி விட்டார்கள்!😎 இதை நம்பி, பயணம் போன மலேசியன் விமானம் தட்டைப் பூமியின் ஓரத்தில் இருந்து விழுந்து மறைந்து விட்டது!" இப்படியான உண்மைகளை நீங்கள் அறிய வேண்டுமெனில், உள்ளூர் பத்திரிகை, பிபிசி, சிபிசி, எல்லாவற்றையும் தூக்கிக் கடாசி விட்டு அப்பன் ஆத்தையின் உழைப்பில், வீட்டில் பேஸ்மென்ரில் வாழும் சில சோம்பேறிகள் தயாரித்துப் போடும் யூ ரியூப் வீடியோக்களை கிறெடிற் காட்டில் காசு கட்டிப் பார்க்க வேண்டும்😂!
-
தண்டவாளத்தில் தவறி விழுந்த நண்பரை காப்பாற்ற முற்பட்ட பெண்! ; ரயில் மோதி இருவரும் உயிரிழப்பு - நியூயோர்க்கில் சம்பவம்
சோகமான நிகழ்வு, அதிகாலை 3 மணிக்கு நடந்திருக்கிறது. நீண்டகால நண்பர்களான இருவரும் நல்ல வேலையில் இருந்திருக்கிறார்கள், மேற்படிப்பிற்கும் தயார் செய்த படி வேலை செய்திருக்கிறார்கள். இவர்கள் இங்கேயே பிறந்த இரண்டாம் தலைமுறைக் குழந்தைகள் - றட்கர்ஸ் பல்கலைக் கழகம் இந்தியாவில் அல்ல, இங்கே நியூஜேர்சியில் தான் இருக்கிறது.
-
சில ஐரோப்பிய செப்டம்பர் மாத கச்சா எண்ணெய் விநியோகத்தை அராம்கோ ஒத்திவைத்தது
இதையெல்லாம் நீங்கள் "மாதாந்தம் காசு கட்டிச் செய்தி பெற்றுக் கொள்ளும் புலநாய்" இணையத்தளத்தில் வாசித்தீர்களா? மாதாந்தம் சொந்தமாகப் பணம் செலவழித்து "காதில் பூ வாங்கி வைத்துக் கொள்ளும்" ஒருவரை யாழ் உறுப்பினராகக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி😇! உங்கள் சியோனிஸ்ட்டுகள் காடுகளை எரிக்கும் கதையைப் பற்றிய தகவல் கீழே👇: https://politiko.al/english/80-e-zjarreve-nga-turistet-izraelite-cfare-fshihet-pas-pretendimit-qe-po-perhapet-ne-rrjet-i561621
-
கனடா 'இணை உறுப்பினர்' ஆவதற்கான திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஆதரவு.
நானும் 100% கார்னியின் ரசிகன்😂! இந்த ஐ.ஒ உடனான ஒப்பந்தம் நீண்டகாலப் போக்கில் அமெரிக்காவிற்கு ஆப்பு என நினைக்கிறேன். உலகிலேயே மிகப் பெரிய பண/பொருளாதார பலம், இராணுவ பலம் எல்லாம் இருந்தாலும், "மொக்கன் ஒருவனிடம் தலைமையைக் கொடுத்தால் எல்லாம் பயனற்றுப் போகும்" என்ற பாடத்தை அமெரிக்கர்கள் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்! அந்த~ 80 மில்லியன் மொக்கராசுகளில் பலரும் கூட இங்கே உள்ளூரில் அழுது வடிக்கிறார்கள் - தங்கள் வருமானத்தில் அடி விழுந்திருப்பதால் மட்டும் தான்😇!
-
வீதிகளில் வசிக்கும் நாய்களால் 30% வீதி விபத்துகள்: மனிதர்களின் பொறுப்பற்ற தனமே காரணம் என எச்சரிக்கை
எல்லாம் முறைப்படி செய்தால், விசர் நோயினால் ஒவ்வொரு ஆண்டும் இறக்கும் ஆட்களின் எண்ணிக்கை இலங்கையில் பூச்சியமாக இருக்க வேண்டும் (70 மில்லியன் மக்கள் கொண்ட பிரிட்டனில் இது தான் விசர் நோயினால் இறப்போரின் வருடாந்த எண்ணிக்கை). ஏனெனில், இலங்கை ஒரு தீவு, விலங்கொன்று கடிப்பதால் மட்டுமே பரவும் ஒரு நோயைக் கட்டுப் படுத்துவது மிகவும் இலகு - உலகின் பல நாடுகள் எப்படிச் செய்வதென்று காட்டியிருக்கின்றன. அதுவும் இலங்கையில், கிட்டத்தட்ட எல்லா விசர் நோய் மரணங்களும் நாய்களில் இருந்து தான் உருவானது என்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப் பட்ட நிலையில், இன்னும் ஏன் கட்டுப் படுத்த இயலவில்லை? என் அபிப்பிராயம், இது அரசின் கையாலாகாத் தனம் என்பதை விட, மக்களின் அசட்டையான, பொதுச் சுகாதாரத்தில் எந்த அக்கறையுமில்லாத போக்கின் விளைவு. வீதியில் குப்பையைக் கொட்டுவதில் இருந்து, தெரு நாய்களுக்கு உணவளிப்பது, சொந்த வளர்ப்பு நாயை எந்த தடுப்பூசியும் போடாது ஊர் மேய விடுவது வரை - மக்களின் பொது நலன் பேணாத நடவடிக்கைகள் தான் இன்றும் ஒரு நூறு பேர் வரை விசரினால் இறக்கக் காரணம். இலங்கையில் வெற்றி பெற்ற மலேரியாக் கட்டுப் பாடு (anti-malaria campaign), தற்போதைய டெங்கு நுளம்புக் கட்டுப் பாடுகள் போலவே, இறுக்கமான சட்டங்களை அமல் படுத்தினால் மக்களின் நடவடிக்கைகளை மாற்றலாம் என நினைக்கிறேன்.
-
இலங்கைத் தமிழரை செருப்பால் அடிக்க பாய்ந்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆட்சியர்
"வீட்டுக்கொரு செத்தகிளி வேண்டும்"- எங்கேயோ கேட்ட குரல்!😂
-
தனியார் நீண்ட தூர ஜெட் விமான உரிமையாளரான இலங்கையர் நாட்டுக்கு வருகை
சும்மா வாயில் கொழுக்கட்டையோடு இருந்தால் எப்பிடித் தெரியும்? சரவெடி, சக்கரவெடி எண்டு அங்கால இங்கால போட்டால் தானே ஆக்களுக்குத் தெரிய வரும்? நான் வேணுமெண்டால் "போயிங் ட்ரீம்லைனரில், emergency exit row ஆசனத்தில் அமர்ந்து பறந்த முதல் ஈழத்தமிழர்" என்று ஒரு செய்தியை ஆதவனுக்கு அனுப்பி வைக்கவா😂?
-
தமிழின படுகொலையை சர்வதேச தரப்புக்கள் ஏற்பதில் தொடர்ந்தும் தயக்கம் காண்பிக்கின்றன ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்க குற்றசாட்டு
கஜேந்திரகுமார் பா.உ கூட தமிழினப் படுகொலை விவகாரத்தை வைத்து தனது கட்சிக்கு வாக்குச் சேர்த்து தன் "parliament கன்ரீன் சாப்பாட்டை" மட்டும் தான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்😎. இல்லா விட்டால், இங்கிலாந்தில் இருந்த ஒரு பரிஸ்ரர், "தமிழினப் படுகொலையை அனேக நாடுகள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது ஏன்?" என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் இருக்கிறாரா? இந்த இடத்தில் தான் சுமந்திரனின், தனக்குத் தெரிந்ததை வெளியே பகிரங்கமாகச் சொல்லும் வெளிப்படைத் தன்மையும், "தெரிந்தாலும் தெரியாதமாதிரி தம் வாக்குகளுக்காக முட்டாள் வேடம் போடும்" கஜேந்திரகுமாரின் செவாலியர் தர நடிப்பும் தெளிவாகத் தெரிகின்றன. இது வரை எத்தனை தேசிய அரசுகள் மீது இனப்படுகொலை குற்றச் சாட்டு நிரூபிக்கப் பட்டிருக்கிறது? இப்படி ஒரு நாட்டின் அரசை இனப் படுகொலைக்குப் பொறுப்பு என்று நிறுவ எந்த நீதிப் பொறிமுறையை நாட வேண்டும்? கஜேந்திரகுமார், அல்லது அவரது தீவிர ரசிகர் @புலவர் பதில் தருவார்களா?
-
முதல் மடிக்கக்கூடிய ஐபோனை வெளியிட்ட ஆப்பிள் - 20 ஆண்டுகளில் செய்த பெரிய மாற்றம் கைகொடுக்குமா?
ஸ்மார்ட் போன் என்பது ஆடம்பரமல்ல, வெளிநாடுகளின் அனேக நகரங்களில் வாகனம் போலவே அத்தியாவசியமான ஒரு சொத்து. ஆனால்..பெரும் விலை கொடுத்து அதை வாங்கினால் அதற்குத் தனியாகப் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக தரத்தில் குறைந்த போனையும் வாங்கி அல்லல் படக் கூடாது. நான் பட்டிருக்கிறேன். ஸ்மார்ட் போன்களின் பெரிய பிராண்டுகள் எதையும் தொடாமல் மலிவானது என்று பார்த்து சீனாவின் தயாரிப்பான BLU பல வருடங்கள் முன்னர் வாங்கி வைத்திருந்தேன். கனடாவிற்குப் போகும் ஒரு பயணத்தில், மாலை மங்கிய நேரம், ஒரு நெடுஞ்சாலையில் போனின் ஜிபிஸ் அப்படியே உறைந்து விட்டது. 5 மைல்கள் ஓடி, ஒரு நிறுத்தக் கூடிய இடத்தில் நிறுத்தி கைகாவலாகக் கொண்டு வந்த Garmin GPS கருவியை இயக்கி பயணத்தைத் தொடர வேண்டியிருந்தது. பின்னர் ஒட்டாவாவினுள் ஒரு கிராமப் புற வீதியிலும் இதே பிரச்சினையால் திசை தெரியாமல் தவித்து விட்டோம். இரு சந்தர்ப்பங்களிலும் குடும்ப நிர்வாகியிடம் நல்ல அர்ச்சனையும் வாங்கிக் கொண்டேன்😂. அதன் பிறகு, தரமான ஆனால் விலை கொஞ்சம் அடக்கமான நல்ல பிராண்டுகளை வாங்க ஆரம்பித்தேன்.
-
முதல் மடிக்கக்கூடிய ஐபோனை வெளியிட்ட ஆப்பிள் - 20 ஆண்டுகளில் செய்த பெரிய மாற்றம் கைகொடுக்குமா?
போன் பாவிக்க கரண்டி எதற்கு?
-
இடைத்தேர்தல் வெற்றி வாக்குறுதி : அமெரிக்கர்களுக்கு தலா 5,000 டொலர் வழங்கப்படும்! – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
ட்ரம்பினுடைய "கணக்குத் திறமைக்குப் பல உதாரணங்கள், அவற்றுள் ஒன்று: நியூயோர்க்கில் இருக்கும் தன் மாடி வீட்டை ஈடாக (collateral) வைத்து பல வங்கிகளிடம் ட்ரம்ப் கடன்வாங்கியிருக்கிறார். ஈடாக வைக்கும் வீட்டின் வசிக்கக் (habitable) கூடிய பரப்பளவை கடன் பத்திரத்தில் நன்கு உயர்த்திக் காட்டியிருக்கிறார். "இந்த சிறிய வீட்டிற்கு இது எப்படி சாத்தியம்?" என்று கேட்ட போது, "வீட்டுக் கூரையின் பரப்பளவையும் சேர்த்துப் போட்டேன்" என்று சொல்லியிருக்கிறார்😂! இவையெல்லாம் நியூயோர்க்கில் 30 இற்கு மேற்பட ஆவணங்களில் மோசடி செய்த வழக்கின் போது வெளியே வந்து, எங்களைச் சிரிக்க வைத்த தகவல்கள் (அந்த வழக்கில் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் ட்ரம்ப் குற்றவாளியென்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது). இது தான் இங்கேயும் ட்ரம்பின் கணக்காக இருக்கும்!