Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vanangaamudi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. கட்சியின் அங்கத்தவராக வயது எல்லை இல்லை கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 மாநகரப் பகுதிகளில் கிளைச் செயலாளரின் அதிகபட்ச வயது 45 வட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 50 பேரூர்க் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 பகுதி செயலாளருக்கு அதிக பட்ச வயது 60. நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 ஒன்றியக் கழக செயலாளரின் அதிகபட்ச வயது 60 மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 அப்படியிருக்க கழக தலைவருக்கு மட்டும் வயது எல்லை அறிவிக்கப்படவில்லை. சக்கரவர்த்தி இராஜாதி இராஜன் மு.க.ஸ்டாலினுக்கு இப்போது வயது 73 இவருக்கு மேற்குறிப்பிட்ட பொறுப்புகள் எதற்குமே லாயக்கு இல்லை. குடும்ப அரசியல், குடும்ப கட்சி, இவங்க மீண்டும் வந்தா மன்னராட்சிதான்.
  2. ரஸ்யா வெற்றிபெற முடியாது என்றாலும் நீண்ட காலத்துக்கு நின்று தாக்குப்பிடிக்கும் அதுவரைக்கும் உக்கிரேனுக்கு ஆயுதங்களை கொடுத்துகொண்டே இருக்கவும் முடியாது என்பதைதான் மெர்ஸ் இப்படி சொல்கிறார்.
  3. இலங்கையில் ஒரு இராணுவப் புரட்சிக்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் தோற்றம் பெறுகிறது என்றே இதை எண்ண வேண்டியுள்ளது. போரின் போதும் அதன்பின்னரும் சிறுபான்மை மக்களின் இன அழிப்பு, கொலை, குற்றசெயல்கள், நாட்டில் போதைவஸ்து கலாச்சாரத்தை வளர்த்தது போன்ற அனைத்து தேச துரோக செயற்பாடுகளில் ஈடுபட்ட இராணுவத்தின் தான்தோன்றித்தனமான இந்த முயற்சியால் அரசுக்கு எதிரான சதிவலை ஒன்று பின்னப்படுவதை அனுர அரசு தடுத்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றால் மீண்டும் நாட்டில் இரத்தவெள்ளம் ஓடுவதை தவிர்க்க முடியாது.
  4. த. வெ. க ஆட்சியமைக்க காங்கிரசுடன் கூட்டு சேர்வது வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விடுவதுபோல் உள்ளது. ஒரே கட்சியுடன் இணைந்தால் மேலதிக ஆதரவை பல்க்காக(bulk) எடுக்கலாம் என்ற வசதி ஒன்றைத் தவிர த. வெ. கட்சிக்கு காங்கிரஸ் காலப்போக்கில் பெரிய முட்டுக்கட்டைகளை போடவும் வலைக்குள் சிக்கவைக்கவும் விஜையின் எண்ணப்படி ஆட்சி செய்ய பல தடைகள் உண்டு. இதிலும் பார்க்க தனித்தனியாக வென்றவர்களையும் சிறிய கட்சியில் அல்லது சுயேட்சையாக வேன்றவர்களையும் விஜை இணைத்து பெரும்பான்மையை கொண்டுவந்திருக்கலாம். அப்போது கடிவாளம் எப்பவும் விஜையின் கையிலேயே இருந்திருக்கும்.
  5. TN ல 234 க்கு 108 தொகுதி ஜெயிச்சவன், அங்க 30 க்கு 3 தொகுதி கூடவா ஜெயிக்க முடியாது? 🤣🤣🤣 பாண்டிசேரி தேர்தலில் அங்கு மொத்தம் 30 தொகுதியில் TVK சார்பில் போட்டியிட்ட 2 பேரும் DMK சார்பில் 5 பேரும் ஜெயிச்சாங்க. ஆனா பாண்டிசேரி ஒரு தனியான ஒன்றிய பிரதேசம்(union territory) ஆனபடியா இவங்கட தேர்தல் தொகுதிகள் தமிழ் நாடு மாநிலத்து தேர்தல் கணக்கில் சேராது. பாண்டிசேரியில் தனியாக முதலமைச்சர், (லெப்டினன்ட்) கவர்னர், மற்றும் சட்டசபை என்பன உள்ளது. பாண்டிசேரி மாநிலம் என்பது 4 தனி தனியான பிரதேசங்கள் அதில் பாண்டிசேரி(தமிழ்நாடு) + காரைக்கால்(தமிழ்நாடு) + யானம்(ஆந்திரா) + மாஹே(கேரளம்). இவை அனைத்தும் முன்னாள் பிரென்சுக் காலனிகள்.
  6. இந்த துப்பாக்கியை வெச்சு நீ வேட்டு தீர்த்தேண்டு வெச்சுக்க மவனே அப்புறம் டவுசரை இறக்கிட்டு இடுப்புக்கு கீழ உனக்கு செங்கல்லடிதான் பாத்துக்க. ரொம்பதான் இந்த சோமாரி பயலுக்கு லூசுத்தனம். வளத்த கடா மார்புல பாஞ்ச கதை மாதிரி போயிட்டுது. வேள்வி நெருங்கும் உன் கதை முடியும்.
  7. பி.எம்.டி என்றால் ஆங்கிலத்தில் என்ன பொருள் என்பதை கட்டுரையாளர் எங்கும் சொன்னதாக தெரியவில்லை. PMD = Post Micturition Dribble
  8. இணையத்தளங்கள் உருவாக்கும்போது ஒரு பொதுவான நடைமுறை என்னவென்றால் ஒரு பயனாளர் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தின் உள்ளே எங்கிருந்தாலும் அதன் தலைப்பில் உள்ள லோகோவில்(logo) சொடுக்கும்போது மீண்டும் அதே இணையத்தளத்தின் முகப் பக்கத்திற்கு செல்வதுதான் . இதை Express way to home அல்லது Clickable logo linking to home page என்று அழைப்பார்கள். பாதை மாறி போகும் பயனாளர் ஒருவர் ஒரே கிளிக்கில் இணையத்தளத்தின் முகப்பைச் சென்றடையும் இந்தப் பயன்பாடு யாழ் இணயத்தில் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கே ஒவ்வொரு முறையும் முகப்பு பக்கத்தைக் கடந்து உள்ளே சென்றபின் யாழ் லோகோவில் கிளிக் செய்யும்போது மீண்டும் முகப்புப் பக்கத்துக்குச் (front page / first page / Landing page) செல்லாமல் யாழ் இணையத்தின் உப பக்கங்களின் தலைப்பு விபரங்கள் அடங்கிய பட்டியலுள்ள forum3 என்று குறியிடப்பட்டுள்ள ஒரு பக்கத்திற்கே செல்கிறது.
  9. ஈரானின் கடற்படை கப்பல் மூழ்கியபோது அதிலிருந்த சிலரை காப்பாற்றிய ஶ்ரீ லங்காவையும் நன்றியுணர்வுடன் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளும்படி ஈரானின் புதிய ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
  10. இந்த இடத்தில தான் கிளைமாக்‌ஸ் வருது.
  11. அல்பிரேட் நோபல் தனது சொந்த விருப்படி எழுதிவைத்த மரண சாசனத்தில் சொல்லப்பட்ட பரிசுகள் 5 (Physics, Chemistry, Physiology or Medicine, Literature, Peace) ஆனால் பின்நாளில் வந்தது அல்பிரேட் நோபல் நினைவுப்பரிசு எனப்படும் பொருளாதார(Economic Sciences) பரிசு. இதையும் நோபல் கமிட்டியே பொறுப்பேற்று வழங்குகிறது ஆனால் அதற்கான செலவை சுவீடன் நாட்டின் மத்திய வங்கி ஏற்றுக் கொள்கிறது. ஏனைய 5 பரிசுகளுக்கான செலவுகளுக்கு மறைந்த நோபலின் சொத்துக்களால் கிடைக்கும் வருமானம் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்துக்கான பரிசை நோபலின் நினைவுப்பரிசாக அவரின் உண்மையான 5 மரண சாசன பரிசுகளுடன் இணைத்துக்கொண்டதற்கு நோபலின் சந்ததியினர் கடும் விசனம் தெரிவித்து அதை மத்திய வங்கியின் ஒரு விளம்பர உத்தி என தமது அதிருப்தியை வெளியிட்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
  12. இந்த போர்மூலாவின்படி பார்த்தால் உலக ஒழுங்கு பிழைத்துவிடும்.
  13. கிரீன்லாந்தை டென்மார்க் நேரடியாக தனது காலனி ஆதிக்கத்துக்குள் வலிந்து கொண்டுவரவில்லை. நோர்வேயிலிருந்து புறப்பட்டு ஐஸ்லாந்து வழியாக சென்ற எரிக் ரௌட என்ற வீக்கிங் கொள்ளைக்காரத் தலைவன் 980-ஆண்டளவில் வேறும் பல நோர்வே குடியேறிகளுடன் கிரின்லாந்து நாட்டை முதன்முதலாக சென்றடைந்து ஆக்கிரமிப்பு செய்தான். அதற்கு முன்னர் அந்த நாட்டில் பூர்வீககுடிமக்களாக எஸ்கிமோவர்கள் என்று இன்று அழைக்கப்படும் இனுட் இனத்தை சேர்ந்த ஆதிவாசிகளே காணப்பட்டார்கள். சில நுற்றாண்டளவில் இஸ்கண்டிநேவியன் நாடுகள் தமக்குள் ஒப்பந்தங்கள் செய்து ஒரு டேனிஷ் நாட்டு அரசனின் தலைமையில் இணைந்தன. அந்த காலகட்டத்தில் நோர்வே நாட்டின் வீக்கிங் கொள்ளைகாரர்கள் Greenland, Iceland, Faroe island, Hebrides, Isle of Man, Orkney, Shetland ஆகிய பிரதேசங்களை படிப்படியாக கையகப்படுத்திவர அவற்றை நோர்வே நாடும் பல்வேறு காலங்களில் காலனிகளாக வைத்திருந்தது. ஐக்கிய நாடாக மாறிய டென்மார்க், நோர்வே மற்றும் சுவிடன் சில நூற்றாண்டுகள் (1536-1814) அதை நீடித்து பின் முரண்பட்டு சுவீடனும் நோர்வேயும் கூட்டாக பிரிந்தன. அப்போது டென்மார்க் நோர்வேக்கு சொந்தமான காலனிகள் சிலவற்றை பிரிந்து செல்லும் நோர்வே நாட்டுக்கே திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்தும் தனது கைவசமே வைத்துக்கொண்டது. டென்மார்க்குக்கு அப்படி கிடைத்ததுதான் கிரீன்லாந்து. இப்படி காலனியாக உள்வாங்கப்பட்ட கிரீன்லாந்து படிப்படியாக டென்மார்க்கின் முடியரசுக்கு கீழ் உள்ள ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய ஒரு சுயாதீன பிரதேசமாகவும் பின்னர் படிப்படியாக மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட்ட சுயாட்சியுள்ள டேனிஷ் முடியுரிமை கொண்ட நாடாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. இன்று நோர்வே நாட்டு மன்னரின் முடியாட்சிக்கு உட்பட்டு வடதுருவம் தொடக்கம் தென்துருவம் வரை அமைந்துள்ள Svalbard, Jan Mayen, Bouvet Island, Bouvet Island, Peter I Island, Queen Maud Land(South pole) ஆகிய பிரதேசங்கள் உள்ளன.
  14. டக்கி ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துவிட்டார் என்று நம்பவைத்து பாதாள சாக்கடையில் குதித்துவிட்டார் என்பதுதான் உண்மை. அரசியலில் இருந்தபோது எஜமானர்களின் ஏவல்நாயாகவும் சேவை செய்து தனக்காகவும் சிங்கள எஜமானருக்காகவும் அரங்கேற்றிய அராஜகங்களிலும் கொலை கடத்தல்கலிலும் சுமார் 60% வீதமான வேலையை பாதாள மாபியாக்களை வைத்தே முடித்துக்கொண்டார்.
  15. DNA மூலம் ஒருவருக்கு யூத பின்னணி இருக்கிறதா என்பதை உறுதியாக அடையாளம் காண முடியாது. ஏனெனில் யூத மதம் என்பது ஒரு மதம் மற்றும் கலாச்சார அடையாளம் ஒரு மரபணு பண்பு அல்ல.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.