Everything posted by zuma
-
ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்
யாழ் கள ஷிரந்தி ராஜபக்ஷ ரசிகர் சிறியர் அவர்களுக்கு, ஷிரந்தி ராஜபக்ஷவினால் பாடப்பட்ட பக்தி பாடல் ஒன்று சமர்ப்பணம். அன்பு மலர்கள் உள்ளங்களில் மலரட்டும், அன்பு மலர்கள் உள்ளங்களில் மலரட்டும், கருணை குணம் பெருகட்டும், உள்ளங்களில் கருணை நிறைந்திடட்டும். பேராசை, ஆசை, பகை, கோபம், சந்தேகம் ஆகியவை இல்லாமல் போகட்டும், பாவம், வெறுப்பு, மயக்கம், அகந்தை இவ்வுலகிலிருந்து அகன்றிடட்டும். ஒற்றுமையும் சமாதானமும், அன்பும் கடமைகளும் மேலோங்கட்டும், ஒற்றுமையும் சமாதானமும், அன்பும் கடமைகளும் மேலோங்கட்டும், திருட்டு, பொய், மோசடி, அச்சம் மற்றும் சந்தேகம் நீங்கி, அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்கட்டும்.
-
ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்
ஷிரந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரில் உள்ள 313 Somerset வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்வதாக கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்
இயக்கம் மக்களை வாக்களிக்க தடுக்காமல் இருந்தால், மஹிந்த ஆட்சிக்கு வந்து இருக்க முடியாது 😅
-
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று
வாழ்க்கை ஒரு வட்டம்டா! இங்க ஆரம்பிச்ச இடம் எதுவோ, அங்கேயே தான் வந்து முடியும் 😎
-
மின்சார வாகனங்களுக்குப் பச்சை நிற இலக்கத் தகடுகள்!
இலங்கையிலும், வரிச்சலுகைகள் மின்சார வாகனங்களுக்கு உண்டு. மின்சார வாகனங்களுக்கு 160 % வரியும், பெட்ரோல் வாகனங்களுக்கு 330% வரியும் செலுத்த வேண்டும். உதாரணமாக 30 இலட்சம் பெறுமதி உடைய மின்சார வாகனத்துக்கு 48 இலட்சம் வரியாகவும், அதே பெறுமதியுடைய பெட்ரோல் வாகனத்துக்கு 99 இலட்சம் வரியாக செலுத்த வேண்டும். https://tariff.lk/guides/vehicle-import-duty-sri-lanka
-
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று
இம்முறை சிறப்பு எதுவெனில், தற்போதைய அரசாங்கம் ராஜபக்சக்களின் மனித உரிமைகளை மீறுகின்றது என முறையிட அவர்களின் பிரதிநிதிகள் இம்முறை மகாநாட்டில் பங்குகொள்ளுகின்றார்கள். காலம் எவ்வளவு வேகமாக ஓடுகின்றது 😜 https://www.facebook.com/milindarajapaksha.lk
-
அம்பிட்டியே சுமனரதன தேரர் பொலிஸாரால் கைது
அம்பிட்டியே சுமனரதன தேரர், மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் அமைந்துள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்தில் அதிகாரிகள் தங்களது கடமைகளை மேற்கொள்வதற்கு அவர் இடையூறு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்பிட்டியே சுமனரதன தேரர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். Ven. Ampitiye Sumanarathana Thero arrested
-
நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் விமான கொள்முதல் ஊழல் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு நபர்கள், திடீர் மற்றும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் உயிரிழந்துள்ளனர். 1. ராஜீவ் ஜெயவீர - ஏர்பஸ் ஊழல் விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதை முதன்முதலில் வெளிப்படுத்திய மிஹின் லங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், தற்கொலை செய்து கொண்டார். 2. துசித் முதலிகே - ஏர்பஸ் விவகாரத்தை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் கையாண்ட அதிகாரி, 49 வயதில் மாரடைப்பினால் மரணம் அடைந்தார். 3. கபில சந்திரசேன: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). இந்த ஊழல் விவகாரத்தில் மூத்த அரசியல்வாதிகளுக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் முக்கியமான லஞ்சத் தகவல்களை அவர் வெளியிட்டதைத் தொடர்ந்து, 2026 மே மாதத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார். 4. யோஹான் அபேநாயக்க - ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத பணம் மற்றும் “கறுப்புப் பணத்தை” சட்டவிரோதமாகப் பணச் சலவை (Money Laundering) செய்வதில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. மர்மமான முறையில் இறந்து போனார். ராஜபக்சக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.
-
தலைமன்னார் கடற்பரப்பில் தவித்த இலங்கை அகதிகள் கடற்படையினரால் மீட்பு
இலங்கை அமைச்சரவை சமீபத்தில், உள்நாட்டுப் போரின்போது இலங்கையை விட்டு வெளியேறி, கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியாவில் வசித்து வரும் அல்லது முறையான அனுமதியின்றி இலங்கையை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் தன்னார்வமாக நாடு திரும்புவதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. https://www.dailymirror.lk/breaking-news/Cabinet-approves-return-of-Sri-Lankan-refugees-from-India/108-347912
-
இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது
இஸ்ரேலின் வடக்கு நகரங்களின் முக்கிய பகுதிகளை குறிவைத்து, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஒருங்கிணைந்த தீவிரத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. BBC NewsIran fires missiles towards Israel as IDF says it is work...The Israeli military earlier said it was "preparing for potential fire" after it had struck Lebanon's capital Beirut.
-
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுக்காக அனுராதபுர தலைமை புத்த பிக்குவை (அட்டமஸ்தானாதிபதி) கைது செய்ய உத்தரவு - நாட்டை விட்டு வெளியேறவும் தடை.
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம், குற்றச்சாட்டு செய்யப்பட்ட துஷ்பிரயோக வழக்குடன் தொடர்புடையதாக அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரரையும், 15 வயது சிறுமியின் தாயாரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு திறந்த நீதிமன்றத்தில் அல்லாமல், நீதவானின் அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு தேசிய அதிகாரசபையின் சட்ட அமலாக்கப் பிரிவு இயக்குநரும் சட்டத்தரணியுமான சஜீவனி அபேரத்ன அவர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தலைவர் இனோகா ரணசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்தே பிரதம நீதவான் சியாபத் சசிந்து விக்கிரமரத்ன இந்த உத்தரவை வழங்கினார். சட்ட அமலாக்கப் பிரிவு இயக்குநர் சஜீவனி அபேரத்ன அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, குற்றச்சாட்டுக்குட்பட்ட வண. ஹேமரதன தேரர் ஏன் கைது செய்யப்படவில்லை என்று குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை பொலிஸாரிடம் வாய்மொழியிலும் எழுத்துமூலமாகவும் விசாரணை மேற்கொண்டது என்றும், தொடர்ந்து நடைபெறும் பொலிஸ் விசாரணைகள் குறித்து அதிகாரசபை கவனமாக இருந்தது என்றும் ஆகும். பொலிஸாரிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காத காரணத்தால், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கச் செய்வதற்காக இந்த வழக்கை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ள தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வண. பல்லேகம ஹேமரதன தேரரையும் சிறுமியின் தாயாரையும் இந்த வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிட்டு, அவர்களை கைது செய்ய நீதிமன்ற அனுமதி கோரினார். அதோடு, வண. தேரர் வெளிநாடு செல்லாமல் தடுக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு வழங்குமாறும் அவர் கோரினார். இதையடுத்து பிரதம நீதவான், நிட்டம்புவ பொலிஸாருக்கு வண. தேரரையும் சிறுமியின் தாயாரையும் கைது செய்து சந்தேகநபர்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். மேலும், வண. ஹேமரதன தேரர் வெளிநாடு செல்லாமல் தடுக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கும் உத்தரவு பிறப்பித்தார். அரசு தரப்பிற்காக குழந்தைகள் பாதுகாப்பு தேசிய அதிகாரசபை தலைவர் மற்றும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி இனோகா ரணசிங்க, சட்ட அமலாக்கப் பிரிவு இயக்குநர் சஜீவனி அபேரத்ன மற்றும் உதவி இயக்குநர் ஹான்சி ஹலங்கொட ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். https://www.dailymirror.lk/breaking-news/Magistrate-orders-arrest-of-Ven-Hemarathana-Thera/108-339792
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கபில சந்திரசேன உயிரிழப்பு-தற்கொலையா?
கபில சந்திரசேனாவும் அரவிந்த டி சில்வாவும் சகோதரிகளைத் திருமணம் செய்துள்ளனர். https://www.dailymirror.lk/breaking-news/Kapila-Chandrasena-found-dead-at-cricketer-Aravinda-de-Silvas-residence/108-339776 எனக்கு என்னவோ அவைகள் தற்கொலைகள் அல்ல கொலைகள் மாதிரி தெரியுது.
-
தமிழ் நாடு: சட்டசபைத் தேர்தல் முடிவுகள் - 2026
நான் எதிர்பார்க்கவில்லை இந்த தேர்தல் முடிவுகளை , மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ஆகும். வாழ்த்துக்கள் விஜய் அவர்களுக்கு. 😊
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தேர்தலில் அலையடித்தது, வரலாறு காணாத வாக்குப்பதிவு என்பது தரவுகளில் தெரியவில்லை. வாக்காளர் பதிவு திருத்தத்தின் (SIR) பின்னர் வாக்களிப்பு வீதம், ஓர் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 இல் வாக்களித்தோர் மொத்த தொகை 2016 விட குறைவாகும், மொத்த வாக்களித்தோர் தொகை SIR பின்னர் வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது. வாக்களித்தவர்களின் வீதம் 2021 விட 2026 இல் 4.79 % தான் அதிகரித்தது உள்ளது, இது ஒரு சாதாரண அதிகரிப்பு ஆகும். எனது கணிப்பின் படி ,திமுக கூட்டணி வென்றிபெற்று ஆட்சி அமைக்கும், கடந்த தேர்தலைவிட குறைந்த சதவீத வாக்குகளை பெறும். விஜய் அவர்கள் மூன்றாவதாக வருவார், அவரது தொகுதியில் மாத்திரம் வெற்றிபெற கூடிய வாய்ப்பு உள்ளது. சீமான் கடந்த தேர்தலைவிட குறைந்த சதவீத வாக்குகளை பெறுவார், ஒரு தொகுதியில் கூட வெல்ல மாட் டார்.
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
தம்பரின் விசிலடிச்சான் குஞ்சுகளான கிறிஸ்தவ அடிப்படைவாதிகள், தாங்கள் கண்ணை மூடினால் உலகமேஇருண்டு விடும் என நினைக்கின்றார்கள். என்னவே காய்லாங்கடையிலே போற விமானங்களை ஈரான் வான்பரப்பில் பறக்கவிட்டு, ஈரான் சுட்டு விழ்த்துவதினால் நேர மிச்சம் என கதை விடுகின்றார்கள். சமீபத்திய அறிக்கைகளின் அடிப்படையில், அமெரிக்காவின் இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஏப்ரல் 6, 2026 நிலவரப்படி, பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது ஒன்பது விமானங்களை இழந்ததாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள், இழந்த விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் மொத்தஎண்ணிக்கைகள் மிக அதிகம் ஆகும். · F-15E ஸ்ட்ரைக் ஈகிள்: 4 · மார்ச் 2: 3 விமானங்கள் குவைத்தின் மீது தற்செயலான நட்பு நாட்டுத் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டன(அனைத்து குழுவினரும் வெளியேற்றப்பட்டனர்). · ஏப்ரல் 3: 1 விமானம் ஈரானுக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது (விமானிகள் மீட்கப்பட்டார்கள்). · A-10 தண்டர்போல்ட் II: 1 - ஏப்ரல் 3 அன்று, ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் F-15 மீட்புப் பயணத்தின் போது இரானில் தாக்குதலில்சிக்கி கடலில் வீழ்ந்தது, விமானி மீட்கப்பட்டார் · F-35 லைட்னிங் II: 1 இரனின் தாக்குதலில் சேதமடைந்தது (அவசர அவசரமாக இஸ்ரேலில் தரையிறக்கப்பட்டது). · E-3 சென்ட்ரி (AWACS): 1 விமானம் சவூதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தில்தரையில்இருக்கும்போதே ட்ரான் தாக்குதலில் அழிக்கப்பட்டது. · KC-135 ஸ்ட்ராடோடேங்கர்: 1 ஈராக்கில், இரான் ஆதரவு குழுவினால் வீழ்த்தப்பட்டது (6 பேர் கொல்லப்பட்டனர்); · C-130 ஹெர்குலஸ்: 2 விமானிகள் மீட்புப் பயணத்தின் போது ஈரானால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது; இரான் வான்பரப்பு தமது முழு கட்டுப்பாடில் இருப்பதாகவும், ஈரான் படைகள் ஒரு செல்லக் காசு என கதைஅடித்து விட்ட தம்பரின் பரிவாரங்களும், உயிர்த்த ஞாயிறு அன்று தம்பரின் வசை மொழி காது குளிர கேற்ககூடியதாக இருந்தது.😜 - கைபேசியில் தட்டச்சு செய்வதினால் எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்.
-
உறுதிப்படுத்தாத செய்தி: டொனல்ட் டிரம்ப் வைத்தியசாலையில்?
தம்பருக்கு பைத்தியம் முற்றிவிட்டது.
-
இரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?
எதிரிகளிடம் பிடிப்படாமல் இருப்பதற்கு இரண்டு C-130 இராணுவ போக்குவரத்து விமானங்களை தாமே அழித்ததாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதை தான் அமெரிக்காவின் கதை இருக்கின்றது. அமெரிக்காவின் தரைவெளி தாக்குதல் என்பது, கானல் கதையாய் தான் இருக்கின்றது
-
இரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?
இன்றைய தாக்குதலில் மொத்தமாக, இரண்டு சி-130 இராணுவ விமானங்கள் மற்றும் இரண்டு அமெரிக்க பிளாக் ஹாக் உலங்குவானூர்திகளை அழித்ததாகக் இரான் அறிவித்துள்ளது.
-
இரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?
காணாமல் போன இரண்டாவது விமானப்படை விமானியும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது. காணாமல் போன அமெரிக்க விமானப்படை வீரரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானத்தை ( C-130 ) சுட்டு வீழ்த்தி உள்ளதாக ஈரான் அறிவித்து புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இன்றைய தாக்குதலில் ஈரான், இரண்டு இராணுவ விமானங்களை - எஃப்-15 மற்றும் ஏ-10 - வீழ்த்தியுள்ளது, மேலும் இரண்டு பிளாக்ஹாக் ( Blackhawk) உலங்குவானொர்திகளுக்கு சேதத்தை எற்படித்தியுள்ளது.
-
போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில்’ முடிவடையும் என டிரம்ப் தெரிவித்தார்.
போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில்முடிவடையும். இப்போது நாம் வேலையை முடித்துக்கொண்டிருக்கிறோம். இரண்டு வாரங்களில் அல்லது இன்னும் சில நாட்களில் அந்த வேலையைச் செய்து முடிப்போம் என்று நினைக்கிறேன். அவர்களிடம் உள்ள அனைத்தையும் அழித்தொழிக்க வேண்டும் என்பதே நம் நோக்கம். ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா பாதுகாப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அந்த முக்கிய எரிபொருள் மையத்தை மீண்டும் திறக்கும் பொறுப்பு, அதை நம்பியிருக்கும் நாடுகளிடமே உள்ளது. -theguardian.com தம்பர் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என நைசாக மாறப் பக்கிறார் 😜
-
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் நிறைவடையும்
கவுண்டமணி: யுத்தத்த எப்போ நிறுத்துவீங்க சார்? ட்ரம்ப்: ஹோர்முஸ்ஸ திறந்தா நிப்பாட்டிடுவன். கவுண்டமணி: நீங்க யுத்தத்த ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, ஹோர்முஸ் எப்டி இருந்துச்சு சார்? டிரம்ப்: திறந்திருந்துச்சு. கவுண்டமணி: அப்போ என்ன மயிருக்கு யுத்தத்த ஆரம்பிச்ச?🤣"
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
சமயங்களினால் உலகுக்கு நம்மைகளை விட தீமைகளே அதிகம், குறிப்பாக ஆபிரகாம் சமயங்கள் ( கிறிஸ்தவம், இஸ்லாம், யூதம் ) ஆல் தான் அநேக யுத்தங்கள வரலாற்றில் நடைபெற்றன. எப்போதுஅவைகள் அழிகின்றவனோ அப்பொழுது தான் உலகில் சாந்தியும், சமாதானமும் உருவாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எந்தவிதத்திலும்குறைந்தவர்கள் அல்ல கிறிஸ்தவ, யூத அடிப்படைவாதிகள். யுத்தம் தொடரவேண்டும் என விரும்பும் எல்லா பக்கஅடிப்படைவாதிகளையும் பிடித்து, அவர்களுக்கு தேவையானஆயுதங்களை கொடுத்து, ஆக்கள் இல்லாத தனி தீவில் விடவேண்டும், அப்போது அவர்கள் தமக்கு தெரிந்த மொழியில் பேசிபிரச்சனைய் தீர்த்து கொள்வார்கள்.😜
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
அமெரிக்க - இஸ்ரேலின் இந்த வலிந்த தாக்குதல் மூலம், ஈரான்முன்னரை விட வலிமை பெற்றுள்ளது. இத்த தாக்குதல் மூலம் அதிக நட்டம் அடந்தவர்கள் அரபுஷேக்குகளே ஆகும்.
-
தம்பரும் , இரானும் யுத்த நிறுத்தத்திற்கு தயார்
ஐக்கிய நாடும், ஈரான் நாடும், கடந்த இரண்டு நாட்களாக மத்திய கிழக்கில் எங்களின் பகைமைகளுக்கு முழுமையான மற்றும் மொத்தமான தீர்வு குறித்து மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள உரையாடல்களை நடத்தி வருவதாகத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆழமான, விரிவான, ஆக்கபூர்வமான உரையாடல்களின் போக்கையும் நெருக்கடியையும் அடிப்படையாகக் கொண்டு, இவை வாரம் முழுவதும் தொடரும். நடைபெற்று வரும் சந்திப்புகள் மற்றும் விவாதங்களின் வெற்றிக்கு உட்பட்டு, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து இராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாள் காலத்திற்கு ஒத்திவைக்குமாறு போர் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த விஷயத்திற்கு நீங்கள் அளித்த கவனத்திற்கு நன்றி! ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்ப் -பிபிசி.com