Everything posted by Sasi_varnam
-
அன்னக்கிளி உள்ளிட்ட 134 பட பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்
எதுகை மோனையோட எதையும் எழுதலாம் என்கிற நினைப்பு 🤣
-
அன்னக்கிளி உள்ளிட்ட 134 பட பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்
சகோதரம்.. உங்களை போல நாலு தெரிந்த மனிதர்... பேசப்படும் விடயங்களை சற்று ஆராய்ந்து ஆங்கில புலமையோடு கருத்து சொல்லும் ஒருவர் இப்படி பொறுப்பற்று ஒரு மஹா கலைஞனை பற்றி தவறான தகவலை பதியலாமா? It is absolutely false to claim that non commercial events such as காது குத்து, கல்யாணம், கோவில் திருவிழா, கருமாதி etc.. required to pay royalties to Raja sir. Why such blanket misinformation? ஐரோப்பா, கனடா, அமேரிக்கா, சிங்கப்பூர் , மலேசியா, துபாய் இப்படி டிக்கெட் போட்டு பிரம்மாண்ட நிகழ்வு நடத்துவதும் மேலே சொன்ன நிகழ்வுகளும் ஒன்றல்ல.
-
அன்னக்கிளி உள்ளிட்ட 134 பட பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்
இந்த காப்புரிமை விசியத்தின் ஆழம், அகலம் தெரியாமல் மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு இப்படித்தான் தெரியும். 🙄
-
நா.த.க ரவுடிகளின் அட்டூழியம் - சீமான் சொத்து குவிப்பு ஊழலை அம்பலபடுத்திய வழக்கறிஞர் வீடு புகுந்து தாக்குதல்
வீட்டை விட்டு வெளியே வெளிக்கிட்டால் அனைத்து மக்களுமே தேடுவது public toilet. இப்படி யாராலும் நினைத்தும் பார்க்கமுடியாத அரிய கருத்தை சொன்னவருக்கு முட்டு கொடுப்பதுக்கு ( அதுதான் அவர்கள் பாஷையில் குண்டி கழுவி விடுவதற்கு ) செம்பபை தூக்கிக்கொண்டு வரும் அழகே தனி. அந்த லட்சணத்தில வர்ணமாம், வாழையிலையாம். யாழ்களம் போற போக்க பாரு தங்கம தில்லாலே ... டிங்கிரி டிங்காலே மீனாச்சி டிங்கிரி டிங்காலே 🤣
-
நா.த.க ரவுடிகளின் அட்டூழியம் - சீமான் சொத்து குவிப்பு ஊழலை அம்பலபடுத்திய வழக்கறிஞர் வீடு புகுந்து தாக்குதல்
இதென்ன வீட்டு வளவுக்குள்ள கக்கூசு இல்லாதவன் கதைக்கிற மாதிரி இருக்கே. வீட்டுக்கு வெளியே வெளிக்கிட்டாலேயே போய் "பப்ளிக் டாய்லெட்" தேடுவது ஒரு சிக்கலைதான் காட்டி நிட்கிறது. 😁
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
அதற்காகத்தான் தம்பி நன்னியிடம் இடியன் கடல் களம் பற்றி கேட்டேன், நான் பார்த்த ஒரு புகைப்படத்தில் + வீடியோ பதிவில் ஆமையின் ஓட்டைப்போலவே உருவமும் வர்ண அலங்காரங்களும் கொண்ட ஒரு சிறிய படகில் ஒரு போராளியோ அல்லது இருவரோ பயணித்ததை பார்த்திருக்கிறேன். அதற்கு மூடிய கூரை போன்ற அமைப்பு இல்லை, பரிசல் போல வடிவமும் உள்ளே தண்ணீர் வராமல் இருப்பதற்கு தடுப்பும், கடும் நீளம் பச்சை போன்ற வடிவத்தில் இருந்தது.
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
விடுதலைப் புலிகளின் "இடியன்" படைக்களம் (சிறப்புப் படகு) பற்றி ஏதாவது தெரிந்தால் பகிருங்கள்.
-
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுக்காக அனுராதபுர தலைமை புத்த பிக்குவை (அட்டமஸ்தானாதிபதி) கைது செய்ய உத்தரவு - நாட்டை விட்டு வெளியேறவும் தடை.
இந்த அட்டமஸ்தான தேரனுக்கு சார்பாக 20 க்கும் மேட்பட்ட வழக்கறிஞ்சர்கள் ஆஜராகி இருக்கிறானுகள். ஆனால் பல வருடங்கள் தொடர் பாலியல் கொடூரத்துக்கு ஆளான அந்த சிறுமி சார்பா ஒருத்தனும் நீதி மன்றம் போகவில்லை. பல்லேகம ஹேமரத்தன(அட்டமஸ்தான) மொட்டையனும் நீதிமன்றம் போகவில்லை. நீதி மன்றத்து 3 உத்தரவுகள் முழுமையாக நிறைவேறிடப்பட முடியாமல் அதே உத்தரவுகள் மீண்டும் மீண்டும் போடப்பட்டு அட்டமஸ்தான தனது பௌத்த பீடாதி பதவியை வைத்தது தனது அதிகாரத்தை நிறுபிக்கிறார். இவரை கைதுசெய்வதற்கு முன்னம் அஸ்கிரிய பீடாதிபதியிடம் அனுமதியும் ஆசீர்வாதமும் பெறப்பட்டுள்ளது. இந்த செய்திகள் இலங்கையின் முக்கிய நாளிதழ்கள், செய்திகள் முற்றாக தவிர்த்தும் வருகின்றன.
-
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுக்காக அனுராதபுர தலைமை புத்த பிக்குவை (அட்டமஸ்தானாதிபதி) கைது செய்ய உத்தரவு - நாட்டை விட்டு வெளியேறவும் தடை.
பௌத்தமத பக்தியின் வெளிப்பாடாகவே இதை அந்த தாயார் செய்துள்ளாராம். காலக்கொடுமை.
-
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுக்காக அனுராதபுர தலைமை புத்த பிக்குவை (அட்டமஸ்தானாதிபதி) கைது செய்ய உத்தரவு - நாட்டை விட்டு வெளியேறவும் தடை.
- Screenshot_20260512_094801_Facebook.jpg
- தமிழக முதல்வர் விஜய் - ஸ்டாலின் சந்திப்பு
கண்டிப்பாக விஜய்யை பாராட்டலாம் . நேற்றைய தினமொன்றில் இதே அறையில் இதே மனிதனோடு சீமான் சந்திப்பை, பெட்டி வாங்கிட்டான்... பேரம் பேசிட்டான்... என்று பேசி குதூகலித்து கருத்து எழுதும் பொது மௌனம். இன்று அதே அரசியலை இன்னும் ஒருவன் செய்யும் போது அரசியல் மாண்பு என்று புகழாரம். அதை சுட்டிக்காட்டினால் அரசியல் நாகரீகம் தெரியாதவர்கள் என்று செர்டிபிகேட்க் கூட தருகிறீர்கள். என்னா தல இது?- ‘ஜோசப் விஜய் எனும் நான்...’ - தடைகளைத் தகர்த்து அமைகிறது தவெக ஆட்சி!
https://www.facebook.com/share/v/1B3mBFGuoA/- இவர்களைதான் பயங்கரவாத இஸ்ரே அரசு கொன்றது
நமது இனத்தின் வலிகளை வெறுமனே கடந்துவிட்டு போகக் கூடியதல்ல. இன்றும் கூட உலகத்திடம் அதற்கான நீதியயை, ஆறுதலை வேண்டியே நிட்கிறோம். இன்றுவரைக்கும் கூட உலகம் எம்மை கைவிட்டு தள்ளி நிட்பதாகவே நான் உணர்கிறேன். பாலஸ்தீனிய "அரசும்" சரி, அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் ஈரான் உட்பட்ட ஏனைய நாடுகளும் சரி, நாம் ஒடுக்கப்படும் போதும், இனவழிப்புக்குற்படும் போதும் நமது பக்கம் நிற்கவில்லை!!! உண்மைதான். நாடுகள் தங்கள் புவிசார் அரசியலை மனதில் கொண்டு பல விதமான முடிவுகளை நெறி தாண்டியும் எடுக்கும். அதில் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால் மக்கள் அப்படி நெறி தாண்டி சிந்திக்க கூடாது. அப்படி சிந்தித்தால், எனக்கு உதவினவருக்கும் , எனக்காக வந்து நிட்பவனுக்கும் மட்டுமே நான் ஞாயம் பேசுவேன் என்கிற "selective empathy" என்கிற நிலைக்கு வந்துவிடுவோம். அது சரியாகாது.. எம்மை உண்மையின்பால் நிற்க விடாது தடுக்கும். ஆகவே பாதிக்கப்பட்டவன் யார், அவனால் எனக்கென்ன நன்மைஎன்று வகைப்படுத்தி பார்க்காது, ஒடுக்குகிறவனை எதிர்ப்பதும் பாதிக்கப்பட்டவனுக்கு துணையாக நிற்பதுமே சரி என்று நினைக்கிறேன். தர்மம் கிலோ என்ன விலை? 😆 "தர்மம்" சரியான சொல்லாகாது எழுதும் போது மனதில் வந்ததை பதிந்தேன். "Morality" அப்படி வைத்துக்கொள்ளவோம்.- இவர்களைதான் பயங்கரவாத இஸ்ரே அரசு கொன்றது
பொதுவாக உங்கள் கருத்துகளோடு உடன்படும் எனக்கு உங்களின் இந்த பார்வையில் உடன்பாடு இல்லை. மனிதகுலத்துக்கு எதிரான இஸ்ரேலிய சியோனிச சிந்தனாவாதத்துக்கு இரையாக்கப்படும் மனித பேரவலங்கள் நடத்தும் ஒரு நாட்டை வெறுமனே "Israel has right to defend" என்று கூறிவிட்டு செல்ல முடியாதுள்ளது. தவிர இஸ்ரேல் எனும் பொறுப்பு கூறவல்ல அரசின் செயற்பாட்டை ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற ஆயுத குழுக்களோடு ஒரே தராசில் வைத்து பார்ப்பது பொருத்தமாகுமா தெரியவில்லை. அவர்களில் விமர்சனம் நிறையவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட இனமாக என்னால் பாலஸ்தீனிய மக்களுக்காக அவர்கள் பக்கமாகத்தான் நிற்க முடியும். அதுவே தர்மம் என்றும் நினைக்கிறேன்.- யாழ் கள உறவு பெருமாள் காலமானார்
தம்பி பெருமாளின் பிரிவால் துயருற்று இருக்கும் அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். 💮💐 "பெருமாள்" என்கிற பெயரோடு உலாவந்த அந்த திடமான கருத்துக்கள், வாதங்களுக்கு பின்னால் தனது சுற்றத்தின் மேலும், வீழ்ந்துகிடக்கும் தமிழ் சமூகம் மேலும் அக்கறையும்; ஆர்வமும்; கரிசனையும் கொண்ட இளையவர் ஒருவர் இருந்திருக்கிறார் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. சில நேரங்களில் உங்களின் கடும்போக்கு என்று நான் கருதிய கருத்துக்களோடு முரண்பட்டிருக்கிறேன். ஆனாலும் தமிழர் நலனில் என்றுமே பெரும் அக்கறை கொண்டவர் நீங்கள். 🙏 உங்களை போன்றவர்கள் எம்மை விட்டு, இந்த உலகை விட்டு விடைபெற்று செல்வது பெரும் இழப்பு. உங்கள் ஆத்மா சந்தியடையட்டும் பெருமாள். தமிழர் குறித்து நீங்கள் கண்ட கனவுகள் என்றாவது நனவாகட்டும். 🙏- நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!
ஒட்டாவா திரை அரங்கம் ஒன்றில் சனிக்கிழமை தனி ஆளாக (வேறு எவருமே இல்லாத) நீளிரா திரைப்படத்தை பார்தேன். இந்திய திரைத்துறையினரின் அனுகூலத்தோடு எமது தேசத்தின் விடுதலைப் போர் கால (1987..) வாழ்வியலை, துன்பங்களை காட்ட எடுக்கப்படும் ஒரு திரைப்படம் ஒரு சில விட்டுக்கொடுப்புகளை, சமரசங்களை சந்திக்க வேண்டி வரும் என்பது நிதர்சனம். இந்த திரைப்படம் ஓரளவுக்கு விட்டுக்கொடுப்புகளை குறைத்து, 1987 சமகால வாழ்வியலை ஒரு சம்பவம் சார்ந்து ஓரளவுக்கு சொல்லியுள்ளது. கல்யாண வீடு , வீட்டு மனிதர்கள், திடிரென்று வரும் இந்திய ராணுவம், வீட்டை சூழ போராளிகள். இது நமக்கான விவரணப்படமோ அல்லது சரித்திரப் படமோ அல்ல. எல்லா போர்க்களமும் ரத்தத்தை சிந்த வேண்டும் என்றில்லை... இன்றைய போர்க்களம் இப்படி அமைகிறது. ஆனால் நாளை இப்படி இருக்காது என்னும் வசனத்தையும் பதிந்து கொண்டே திரை படம் முடிகிறது. நேர்த்தியான திரைக்கதை வசனம், ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரு சஸ்பென்ஸ், யுத்தத்தின் இறுக்கமான சூழல் என்று பல விடயங்களை கதை பேசுகிறது. இந்திய "அமைதிப்படை" ராணுவத்தின் திசை மாறிய குரூர யதார்த்தத்தை நேரடி காட்சிகளாக வைக்காவிட்டாலும் கதை வசனங்களிலும், குரியீடுகளையும் காட்டி செய்தியை கடத்தி இருக்கிறார் சோமிதரன். எம்மை காப்பதாக கூறி அமைதிப்படையாக வந்தவர்களே கடைசியில் எம்மை வேட்டையாடுகிறார்கள் என்கிற பதிவோடு, யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை நிகழ்வு பேசப்படுகிறது. இந்திய ராணுவத்தின் கெடுபிடி காட்டப்படுகிறது. இந்திய ராணுவம் சாதாரண மக்களை பணய கைதிகளாக வைத்து உயிர் தப்பும் காட்சிப்படுத்தல் இருக்கிறது. மக்களும் புலிகளும் அன்னியோன்யமாக இருந்தார்கள் , புலிகளின் மேல் மக்களுக்கு நம்பிக்கையும் ஆதரவும் இருந்த செய்தி காட்டப்படுகிறது. மக்களின் உயிரை காக்கும் பொறுப்பு புலிகளுக்கு இருந்தது, அதை அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்கிற செய்தி சொல்லப்பட்டு இருந்தது. அந்த அளவில் இந்த படத்தை கட்டாயம் பாராட்டலாம். நாம் கடந்து வந்த பாதை நெடியது. கொடுத்த விலைகள் அதிகம். சொல்வதற்கு நிறைய கதைகள், செய்திகள் இருக்கின்றன. சினிமா இலகுவாக மக்களை சென்றடையும் ஊடகம். ஆனால் அதில் நமக்கென்று ஒரு ஸ்தீரமான துறை இல்லை. அதற்கான ஆதரவும் குறைவு. இந்திய, இலங்கை ராணுவத்தின் குரூர வெறித்தனங்களை நேரடி காட்சிகளாக வைத்து சினிமா எடுப்பது இப்போதைக்கு நம்மவருக்கு சாத்தியம் இல்லை. அது ஏற்படுத்தும் வரை போராட்ட வரலாறு பற்றிய திரிபுகள் இல்லாமல் குறைந்தவிதமான சமரசங்களோடு அனைவராலும் பார்க்கக்கூடிய ஒரு சினிமா வருவதை பாராட்டலாம். குறை, நிறைகள் இருக்கும். சில காட்சிகள் இன்னும் மெருகூட்டி இருக்கலாம். இவற்றை கடந்து இந்திய ராணுவத்தை வெள்ளை அடித்தோ புலி எதிர்ப்பு, புலி நீக்க பிரச்சாரத்தை மையமாக்கியோ இந்த படம் செய்யவில்லை . எனக்கு நீளிரா பிடித்திருந்தது.- ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது - ட்ரம்ப்
சாமியார்... இதே கருத்துத்தான் எனக்கும். ஆனாலும் எனக்கு இந்த "நாதன்யாஹு இஸ்ரரேலின்" கொட்டம் அடக்கப்பட்ட வேணும் என்கிற வெறியும் இருக்கிறது.- ’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
தரமான Tik Tok இணைப்பு. நன்றி- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
3 பகுதி கட்டுரையும் வாசித்து விட்டேன். கட கடவென்று நடந்ததை எழுதி இருக்கிறீர்கள். சிறப்பு!! 👌 உங்களை தங்களோடு கூட்டிக்கொண்டு உள்ளே செல்கிறேன் என்ற அந்த குடும்பத்துக்கு, நீங்கள் எனக்கு இன்னும் ஒருவர் கூட்டி செல்கிறார் என்று சொல்லி இருக்கலாமே என்று தோன்றுகின்றது. இன்னும் ஒன்று... விமானநிலையத்தில் சந்தித்த பணிப்பெண் வேலைக்கு போகும் அந்த பெண்ணிடம் நிறையவே அவரின் குடும்ப விவகாரங்கள் பேசிவிட்டீர்களோ என்றும் தோன்றியது. ஹோட்டல் கட்டில் விரிப்பில் பொட்டு பொட்டாய் ரத்தம்... வாசிக்கும் பொது கொஞ்சம் வில்லங்கமான சிந்தனை வந்து தொலைத்துவிட்டது. 🤭 சிக்கலான கால கட்டத்தில் தனி ஆளாக Expired ஆனா கிரெடிட் கார்ட்டுடன் "2 x 23kg அரிசிமாவு, பலகாரம், பாறை கருவாடு" சகிதம் சேதாரம் இல்லாமல் லண்டன் வந்து சேர்ந்து இருக்கிறீர்கள். அது புலம்பெயர்ந்த தமிழருக்கேயான கெத்து. 😁- அவள் வைரம் செதுக்கிய பளிங்கு தேவதை
Prompt Engineer , Song Prompter, Music Prompter கிருபன்.- இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
.. விடுங்க பாஸ் ... ஆளான சரத் பொன்சேகாவுக்கே வாக்கு போடச்சொல்லி மேடையேறி முழங்கிய தமிழ் அரசியல் தலீவர்களை கொண்ட கூட்டம் நாங்கள்.- அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ நாவலில் மிகவும் விரிவாக இதைப்பற்றி எழுதி உள்ளார். அவர் இப்பொழுது இங்கிலாந்தில் வசிக்கிறார். 1970களில் இவர் கிழக்கு இலங்கை சம்மாந்துறையில் 4 ஆம் - 5ஆம் வகுப்புகளில் கல்விகற்கும் காலத்தில் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக "தூய இஸ்லாமிய" (அரேபிய) நடைமுறைகள் பள்ளிக்கூடங்களில், வீடுகளில் புகுத்தப்பட்டது, அதை ஊரில் யார் முன்னின்று செய்தார்கள், அவர்களுக்கான நிதி முதலில் ஈரானில் இருந்து தொடங்கி பின்னைய காலங்களில் சவுதியின் பங்கு எப்படி இருந்தது என்று விரிவாக எழுதியுள்ளார். அருமையான புத்தகம், கிடைத்தால் எடுத்து வாசியுங்கள். கிழக்கு இலங்கை முஸ்லீம் மக்களின் வட்டார மொழியோடு வாசிக்க சுவாரஸ்யமாக இருக்கும். Ethir Veliyeeduபர்தாAuthor: மாஜிதா Genre: நாவல் Language: தமிழ் Type: Paperback பாத்திமா மாஜிதாவின் ‘பர்தா’ காலத்துக்குப் பொருத்தமான படைப்பாக வெளிவருகிறது.உண்மையில், காலத்தைத் தீவிரமாக விசாரிக்கும் படைப்பு இது. இஸ்லாம- அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
1970, 1980 களில் இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை விதைத்ததே ஈரான் தான். முஸ்லீம் அரசியல்வாதிகளினூடாக பள்ளிவாசல் முதல் பள்ளியறை வரை அபாய முதல் ஹலால் வரை மத அடிப்படை சிந்தனையை வளர்த்துவிட்டவர்கள் அவர்கள் தான்.- இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
நம்ம குருநகர் மண்ணின் கதை ... இசைஞானி இளையராஜாவின் இசை.. ❤️
Important Information
By using this site, you agree to our Terms of Use.