புதிய பதிவுகள்2

சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை அரசாங்கம் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

2 weeks 4 days ago
(செ.சுபதர்ஷனி) நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது. தொடர்ந்து அரசாங்கம் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்க்ளையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (26) கொழும்பு நீதி மன்றத்துக்கு சமூகமளித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்ற வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தேன். எதிர்வரும் 18 ஆம் திகதியன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருடனும் மக்களோடு இணைந்து திருடனை பிடிப்பது போல தான் என்.பி.பி அரசாங்கமும் செயற்படுகிறது. அரசாங்கத்தில் உள்ள பலரின் சொத்து விபரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது. அரசாங்கத்தின் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களே சுங்கத்திலிருந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்துள்ளனர். ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர் கொள்கலன்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது தனக்கு தெரியும் என கூறியுள்ளார். குறித்த கொள்கலன்கள் சுங்கப் பிரிவு மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால் பரிசோதிக்கப்பட இருந்ததுடன், சர்வதேச புலனாய்வு பிரிவிடம் இருந்தும் தகவல்களும் கிடைத்திருந்தன. இந்நிலையில் அவை விடுவிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தொடர்ந்தும் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்களையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும் எம்மீது பழி சுமத்தி இதிலிருந்து தப்ப முடியாது. ஒரு வருடத்தை எமது தரப்பை குற்றம்சாட்டியே கடந்து விட்டனர் மீதமுள்ள 4 வருடங்களையும் அவ்வாறே கடந்து விடுவார்கள். என்.பி.பி அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளது. அதை தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர் என்றார். சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை அரசாங்கம் விரைவில் வெளிப்படுத்த வேண்டும் - நாமல் ராஜபக்ஷ | Virakesari.lk

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி

2 weeks 4 days ago
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி 26 Sep, 2025 | 04:16 PM (எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை பதிவு செய்யப்படவில்லை. காணியும் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவில்லை. காணி குறித்து வெளிப்படைத்தன்மையுடன் ஆராயப்படுகிறது. தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு உண்மை நோக்கத்துடன் தீர்வு காண்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை ஆராய வேண்டும். இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் தன்மை கிடையாது. நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டின் ஊடாக தையிட்டி திஸ்ஸ பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலை கலாசாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நிலையியற் கட்டளையின் 27.2 பிரகாரம் அண்மையில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் திஸ்ஸ விகாரை எனும் விகாரை ஒன்று உள்ளது. இந்த விகாரை பதிவு செய்யப்படவில்லை. இந்த விகாரையின் காணி தொடர்பான விடயங்கள் ஆராயப்படுகிறது. இந்த பகுதியில் இடம்பெறும் போராட்டங்கள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த போராட்டங்கள் குறித்து அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட தகவல்களே உள்ளன. இந்த விகாரை அமையப்பெற்றுள்ள காணியானது காணி அமைச்சினால் கைப்பற்றப்பட்டு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படவில்லை. காணி அரசுடடையாக்கல் சட்டத்தின் பிரகாரம் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தால் அதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் பிரசுரிக்கப்படவில்லை. இந்த காணி தொடர்பில் அமைச்சு மட்டத்தில் எவ்வித தீர்வும் எடுக்கப்படாத நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்குரிய தீர்மானங்கள் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்த காணி தமக்குரியது என்று போராடும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். ஜனாதிபதி எம்மை அழைத்து விரிவான கலந்துரையாடியுள்ளோர். யாழ் மாவட்ட சிவில் சமூகத்தினருடனும் கலந்துரையாடியுள்ளோம். தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவர் ரொஹான் பிரனாந்துவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தையிட்டி பிரச்சினைக்கு ஒரு இடத்தில் மாத்திரம் தீர்வு காண முடியாது. புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு, காணி அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் ஒன்றிணைந்தே இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு உண்மை நோக்கத்துடன் தீர்வு காண்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை ஆராய வேண்டும். இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் தன்மை கிடையாது. நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டின் ஊடாக தையிட்டி திஸ்ஸ பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என்றார். தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி | Virakesari.lk

காங்கேசன் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாததற்கான காரணம், பலாலி விமான நிலைய சம்பந்தமான மக்கள் இழப்பீடுகள் குறித்து பிமல் ரத்நாயக்க கேள்வி

2 weeks 4 days ago
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்ததற்கு காரணம் என்ன, பலாலி விமான நிலைய அபிவிருத்தி தவிர்ந்த பிறிதொரு காரணங்களுக்காக விமான நிலையம் என்ற போர்வையில் மக்களின் காணிகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படாமல் இராணுவ ஆக்கிரமிப்பால் அபகரிக்கப்படுகிறது என்ற கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து, அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த சிறப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தங்களுடைய தலைமையில் விவாதிக்கப்பட்ட விடயங்களில் இரண்டு முக்கியமான விடயங்கள் பொதுமக்களின் நலன் கருதி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாக மாற்றப்பட்டிருக்கிறது. முதலாவது பலாலி விமான நிலையம். சர்வதேச விமான நிலையம் என்று தாங்கள் சொல்லிக் கொள்ளும் ஒரு இடம்.இரண்டாவது காங்கேசன் துறை இறங்கு துறை. அதை துறைமுகம் என்றும் பொருள் கொள்ளலாம். வடக்கு மாகாணத்தின் இவ்விருத்தியில் எந்த ஒரு நபருக்கும் இல்லாத அக்கறையை இந்த அரசாங்கம் செலுத்துவது கண்டுப்பூரிப்படைந்து தங்கள் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புகளை நினைத்து பூரிப்படையும் பாமர மக்களில் நானும் ஒருவன். ஆனால் வெறும் வாய்ப்பேச்சுகளால் ஒரு வருடத்தை கடந்து விட்ட அரசாங்கத்திடமிருந்து நிலையான அபிவிருத்தி ஒன்றை வடக்கு மாகாணத்துக்கு பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற அடிப்படையில்தங்களிடம் கேட்க வேண்டி இருக்கிறது. வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற பலாலி உள்நாட்டு வெளிநாட்டு விமான நிலைய அபிவிருத்திக்காக தங்களுடைய அரசாங்கத்தால் 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட மொத்த பணம் எவ்வளவு? அதில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு? அதற்குரிய ஆதாரங்களை பாராளுமன்றத்தில் பொதுமக்களுக்காக சமர்ப்பிக்க முடியுமா? வடக்கின் ஒரே ஒரு பொருளாதார துறைமுகமாக இருக்கும் காங்கேசன் துறை இறங்குதுறைஅபிவிருத்திக்காக தங்களுடைய 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவு? அதில் 2025 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை செலவழிக்கப்பட்ட பணம் எவ்வளவு?அதனை ஆதாரங்களுடன் இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா? வடக்கு மாகாணத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் சிறு சிறு துறைமுகங்கள் மற்றும் இறங்கு துறைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம் எவ்வளவு? அவற்றில் செலவழிக்கப்பட்ட பணம எவ்வளவு? கடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் வலிகாமம் வடக்கில் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணி தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்தக் கருத்துக்களுக்கு அமைய, பலாலி விமான நிலையத்தின் தற்போதைய நில அளவு எவ்வளவு? பலாலி விமான நிலையத்தில் சட்டரீதியாகஅரசாங்கம் கொண்டிருக்கும் நில அளவு எவ்வளவு? விமான நிலையத்தில் சட்டரீதிய அல்லாத பொது மக்களின் கையகப்படுத்தப்பட்டு இருக்கும் காணி நில அளவு எவ்வளவு? பொது மக்களின் காணிகளில் இதுவரை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கம்பன்சேஷன் எத்தனை குடும்பங்களுக்குவழங்கப்பட்டது? எப்போது வழங்கப்பட்டது? யாரால் வழங்கப்பட்டது? அதன் மொத்த பெறுமதி எவ்வளவு? பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளில் இதுவரை அரசாங்கம் விடுவித்திருக்கும் தனியார் நிலப்பரப்பு எவ்வளவு? உரிமையாளர்களால் உரிமை கோரப்படாத தனியார் விடுவிக்கப்பட்ட காணிகள் எவ்வளவு? எத்தனை குடும்பங்கள்?, இலங்கையின் வடக்கு கிழக்கு தவிர்ந்த வேறு எந்த எந்த பகுதியில் ஆவது தனியார் காணிகள்விமான நிலைய அல்லது துறைமுக அபிவிருத்திக்காக உள்வாங்கப்பட்டு இதுவரை பணம் செலுத்தப்படாமல் இருக்கிறதா? அவ்வாறாயின் அவற்றின் விவரங்களை சமர்ப்பிக்க முடியுமா? காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாது என்ற தங்களுடைய முடிவினை அவதானித்த பின்னர், அவ்வாறான ஒரு முடிவுக்கு தாங்கள் வந்தது என்ன காரணம் என்பதை விளக்க முடியுமா? அவ்வாறாயின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்த பணம், மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்த பணம் வீண் விரயம் செய்யப்படுகிறது என்று நீங்கள் கருதினால் பலாலி விமான நிலையத்தினால் பயனடைய போகும் சர்வதேச பயணிகளின் வருடாந்த வரவையும் அனுமானமாக அதனால் ஏற்படப் போகின்ற லாபத்தையும் சொல்ல முடியுமா? பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுகின்ற போது அதுவும் மத்தள விமான நிலையம் போன்று சர்வதேச விமானங்களில் வரவுகள் அற்ற ஒரு விமான நிலையமாக மாற்றமடையும் என்ற கருத்து பொதுமக்களிடையே இருப்பதால் விமான நிலையம் அபிவிருத்தி தவிர்ந்த வேறெதுவோ காரணங்களுக்காக விமான நிலையம் என்ற போர்வையில் பொது மக்களின் காணிகள் தகுந்த பண கொடுக்கல் வாங்கல் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் இராணுவ ஆக்கிரமிப்பால் அபகரிக்கப்படுகிறது என்ற கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா ?இன்றேல் ஏன்? விமான நிலையம் மாத்திரம் அபிவிருத்தி செய்யப்படுவதும் காங்கேயன் துறை முகம் அபிவிருத்தி செய்யப்படாததும் இராணுவ அரசியல் நோக்கங்களுக்காக பொதுமக்களின் காணிகள் பறிக்கப்படுகின்ற என்ற பொதுமக்களின் கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லை என்றால் ஏன்? என்று கேள்வியெழுப்பினார். காங்கேசன் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாததற்கான காரணம், பலாலி விமான நிலைய சம்பந்தமான மக்கள் இழப்பீடுகள் குறித்து பிமல் ரத்நாயக்க கேள்வி | Virakesari.lk

பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில்

2 weeks 4 days ago
(எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன். ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வில் , நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் வடக்கில் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், அமைச்சர் அதற்கு சரியான பதில்களை வழங்கவில்லை என்று அரச்சுனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் சிரித்தவாறு குறிப்பிட்டார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதிலளித்த பின்னர் மேலதிக கேள்விகளை எழுப்பிய அர்ச்சுனா, சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியன்தான். யாழ்ப்பாணம் என்பது தேசிய மக்கள் சக்தியின் வெற்றிலை பெட்டி அல்ல. நான் கேட்ட கேள்விகளில் ஒன்றுக்கேணும் பதில் வழங்கப்படவில்லை. வடக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் காணிகள் பெறப்படுகின்றன. அங்கே மக்கள் காணிகளுக்காக சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பில் செய்த ஒரு வேலையை கூறுங்கள். கல் நடுவதாக ஆட்களை பேய் காட்டக்கூடாது. சும்மா ஆட்காட்டுதல், பேய் காட்டுதல் வேலையை யாழ்ப்பாணத்தில் வைக்க வேண்டாம். யாழ்ப்பாணம் உங்களின் வெற்றிலைப் பெட்டி இல்லை என்றார். இதன் பின்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதற்கு பதிலளிக்காமல் சபையின் தினப் பணிகளை முன்னெடுத்து அமைச்சின் அறிவித்தலொன்றை வாசிக்க ஆரம்பித்தார். ஆனால் அர்ச்சுனா தொடர்ந்தும் பதில் கூறுங்கள் என்று அமைச்சரை நோக்கி தெரிவித்துக்கொண்டே இருந்தார். இவ்வேளையின் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவும் ஏதோவொன்றை அமைச்சரை நோக்கி கூறினார். அந்த வாட்டுக்கே உங்களையும் அனுப்ப வேண்டி வரலாம் என்று சுஜீவ சேனசிங்கவை நோக்கி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சிரித்தவாறு கூறினார். இதேவேளை அர்ச்சுனா தொடர்ந்தும் சபைக்குள் கூச்சலிட்டுக்கொண்டிருந்த நிலையில் அமைதியான இருக்குமாறு சபாநாயகரும் தொடர்ந்தும் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அர்ச்சுனா அமைதியடையாமல் அமைச்சரை பார்த்து ஏதோவொன்றை கூறிக்கொண்டிருந்த போது ''நான் பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பேன் ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன். தயவு செய்து என்னை பேசுவதற்கு இடமளியுங்கள். இல்லையென்றால் இங்கே இடையூறு ஏற்படுத்துபவரை வெளியே போடுங்கள்'' என்று அமைச்சர் கூறினார். இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி எழுந்த அர்ச்சுனா அவர் பதிலை வழங்கவில்லை. அவர் இப்போது பைத்தியம் என்று கூறுகின்றார். அந்த வசனத்தை நீக்குமாறு கோருகின்றேன். என்றார். இதனை தொடர்ந்தும் அமைச்சர் அர்ச்சுனாவுக்கு பதிலளிக்காது,அமைச்சின் அறிவித்தலை வாசித்து அமர்ந்தார். பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது ; பிமல் ரத்நாயக்க அர்ச்சுனாவுக்கு பதில் | Virakesari.lk

டென்மார்க்கில் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் தென்படுவதாக தகவல்

2 weeks 4 days ago
சமீபத்திய தகவல் — டென்மார்க்கில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் டென்மார்க்கில் 2025 செப்டம்பர் 22-ம் தேதி கோபன்ஹேகன் விமானநிலையின் அருகில் 2‑3 பெரிய ட்ரோன்கள் பார்க்கப்பட்டு, அந்த விமானநிலை 4 மணி நேரம் தற்காலிகமாக மூடப்பட்டது. Reuters+2euronews+2 பின்னர், செப்டம்பர் 24‑25 இரவு காலத்தில், Aalborg விமானநிலைத் தற்காலீகமாக மூடப்பட்டது — இரவு 11:40 மணிக்குக் கூட இருந்தது. AeroTime+3Reuters+3Financial Times+3 அவ்விழிப்பில், Esbjerg, Sønderborg, Skrydstrup விமானநிலைகளிலும் ட்ரோன் செயல்பாடுகள் தொடர் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Kunc+4AP News+4Financial Times+4 Skrydstrup விமானநிலை, டென்மார்க் F‑16 மற்றும் F‑35 யுத்தவிமானங்கள் இருக்கும் இராணுவ விமானநிலையாகும். AeroTime+2Business Insider+2 டென்மார்க் அரசாங்கம் இந்த செயல்பாட்டை “hybrid attack” என அழைத்து, பயமும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடனானது என்று கூறியுள்ளது. AeroTime+4Reuters+4Financial Times+4 அதிகாரிகள் ட்ரோன்களை அழிக்க அல்லது பிடிக்க முடியவில்லை என்று கூறி வருகின்றனர். Financial Times+3AeroTime+3Kunc+3 டென்மார்க் எப்படியான எதிர் தொகுப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று பரிசீலனை நடக்கிறது — குறிப்பாக விமான அணுகல் மற்றும் விமான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள். Reuters+4The Guardian+4Financial Times+4

மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை

2 weeks 4 days ago
மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. சிறந்த வாழ்க்கை தரமுள்ள நாடுகள் Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது. இதில், 218.2 புள்ளிகளுடன் லக்சம்பர்க், சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து 2வது இடத்திலும், டென்மார்க் 3வது இடத்திலும், ஓமன் 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5வது இடத்திலும் உள்ளது. அந்தர் பல்ட்டி அடித்த ட்ரம்ப்... திடீரென உக்ரைனுக்கு ஆதரவு: என்ன காரணம்? முதல் 10 இடங்களில், ஓமன் மட்டுமே ஐரோப்பிய நாடு இல்லாத நாடு ஆகும். இந்த பட்டியலில், 124.4 புள்ளிகளுடன் இந்தியா 62வது இடத்தில் உள்ளது. உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் இந்தியா முன்னேறி இருந்தாலும், அதிக அளவிலான மாசுபாடு, மக்கள் தொகை அடர்த்தி, சுகாதாரப் பராமரிப்பில் சீரற்ற அணுகல், கடுமையான நகர்ப்புற கிராமப்புற வேறுபாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையை தொடர்ந்து பாதிக்கின்றன. 105.7 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 76வது இடத்தில் உள்ளது. 4வது இடத்தில் இலங்கை மோசமான வாழ்க்கை தரமுள்ள நாடுகளின் பட்டியலில், 15.6 புள்ளிகளுடன் நைஜீரியா முதலிடத்தில் உள்ளது. வெனிசுலா 2வது இடத்திலும், வங்கதேசம் 3வது இடத்திலும் உள்ளது. இதில், 82.8 புள்ளிகளுடன் இலங்கை 4வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்திய பொருளாதார மீட்சி, நிலையான வாழ்க்கை தரம் ஆகியவற்றின் மூலம், இலங்கையின் வாழ்க்கை தரம் வடிவமைக்கபட்டுள்ளது. அதேவேளையில், அதிக கடன், பண வீக்கம் ஆகியவை மக்களின் வாழ்க்கைதரம் மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையை பாதிக்கின்றன. எகிப்து 5வது இடத்திலும், ஈரான் 6வது இடத்திலும், பெரு 7வது இடத்திலும், கென்யா 8வது இடத்திலும், வியட்நாம் 9வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 10வது இடத்திலும் உள்ளது. Lankasri Newsமோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகள்; 4வது இடத்தில் இலங்கை...மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. சிறந்த வாழ்க்கை தரமுள்ள நாடுகள் Numb...

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 4 days ago
தோழரே நான் எங்கு திரு.ராமசந்திரன் அவர்களை சீமானோடு ஒப்பீடு செய்தேன் ..? அரசு நிலத்தை தாரை வார்த்தது வள்ளல் குணமா..? அன்றைய சாராய வியாபாரிகள் கல்வி தந்தையாக மாற ஏரி குளம் குட்டை அனைத்தையும் பட்டா போட்டு தன் கையாட்களுக்கு தானமாக கொடுத்தவர் தான் திரு.ராமசந்திரன். ஜேப்பியார்/ராமசந்திரா மருத்துவமனை. ஜெக்தரட்சிகன் எ.வ வேலு வேலூர் விசுவநாதன் இவர்கள் எல்லாம் . ஆக இன்றைய சென்னை இன்று தனியார் கல்வி மையம் ஆனதிற்கு காரணம் திரு.ராமசந்திரன் மறுபுறம் சென்னை பெருவெள்ளத்தத்தளிப்புக்கு காரணம் திரு.ராமசந்திரன் அவர்களே. மறுக்க முடியுமா? "குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்" மனிதர்களுக்கு குறைகளும் உண்டு;முழுதும் நிறைகளே இருந்தால் தெய்வமே..? குறைகளை விட நல்லவைகள் அதிகம் இருந்தால் நல்லவராக தெரிகிறார் அவ்வளவே ..

சமையல் செய்முறைகள் சில

2 weeks 4 days ago
5- வகையான நெத்திலி மீன் வறுவல் செய்முறைகள்.. 1. சாதாரண கார நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் மிளகாய் தூள் – 1½ டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – வறுக்க செய்முறை: 1. மீனை சுத்தம் செய்து மசாலா, எலுமிச்சை சாறு சேர்த்து மேரினேட் செய்யவும். 2. 30 நிமிடம் ஊறவைக்கவும். 3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். --- 2. மசாலா நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் கரம் மசாலா – ½ டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது வதக்கவும். 2. தக்காளி, மசாலா சேர்த்து வதக்கவும். 3. நெத்திலி மீன் சேர்த்து மெல்லிய தீயில் வதக்கவும். 4. குருமா போல் இல்லாமல் எண்ணெய் பிரியும் வரை வறுக்கவும். --- 3. கருவேப்பிலை நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் பச்சை மிளகாய் – 3 வெங்காயம் – 1 கருவேப்பிலை – 1 கைப்பிடி மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: 1. மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கருவேப்பிலை விழுது அரைக்கவும். 2. மீனை அதில் ஊறவைக்கவும். 3. வெங்காயம் வதக்கி, ஊறவைத்த மீன் சேர்த்து வறுக்கவும். 4. மணமிக்க கருவேப்பிலை நெத்திலி வறுவல் தயார். --- 4. குர்குரா நெத்திலி மீன் வறுவல் (Crispy) பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் கார்ன் பிளோர் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – ஆழ்வறுக்க செய்முறை: 1. மீனை மசாலா, அரிசி மாவு, கார்ன் பிளோருடன் கலக்கவும். 2. எண்ணெயில் ஆழ்வறுத்து மொறு மொறுப்பாக எடுத்துக்கொள்ளவும். 3. சூடாக சாப்பிட அருமை. --- 5. கொத்துமல்லி நெத்திலி மீன் வறுவல் பொருட்கள்: நெத்திலி மீன் – 250 கிராம் கொத்தமல்லி இலை – ½ கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – சிறிதளவு பூண்டு – 4 பல் எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கு எண்ணெய் – வறுக்க செய்முறை: 1. கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது அரைக்கவும். 2. மீனை அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து ஊறவைக்கவும். 3. எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும். 4. பச்சை மணம் மிக்க வறுவல் கிடைக்கும். தமிழ்நாடு ரெசிப்பீஸ்

பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு

2 weeks 4 days ago
சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர் அல்லவா? வரலாறு என்றால் பேராதனையில் இருந்த பத்மநாதன் அல்லது யாழ் பல்கலை புஷ்பரட்ணம். புஷ்பரட்ணம் இந்த மறைப்பைச் செய்யக் கூடியவராகத் தெரியவில்லை.

ராஜினி கொலையாளிகளை அம்பலப்படுத்திய பேரினவாதம்…!

2 weeks 4 days ago
உங்களுடைய "விரும்பி ஏற்ற கோமா" வைப் பற்றியா பேசுகிறீர்கள்😎? அவருக்கு அந்த நேரம் ஆயுதங்களுடன் திரிந்த எல்லோருடனும் முரண்பாடு இருந்தது. ஆனால், சாட்சிகள், சந்தர்ப்பங்கள் வைத்து அவர்கள் அன்று முதல் தெரிவித்து வருவது புலிகளின் ஆயுததாரி கொன்றார் என்று தான். இடையில், புலிகளின் பிஸ்ரல் குழுவிடம் இருந்து தான் தப்பிக் கொள்ள அற்புதன் என்ற ஒருவர் மட்டும் இன்னொரு அமைப்பைக் கைகாட்டி விட்டதால், "பெயின்ற் வாளி" ரீம் அதைத் தூக்கிக் கொண்டு திரிய ஆரம்பித்தனர். ஒவ்வொரு செப்ரெம்பரிலும், புலிகள் நினவு கூராமல் தடை செய்த ராஜினியின் நினைவு தினத்திற்கு அண்மையாக இத்தகைய பெயின்ற் வாளிகள் வெளியே வந்து மீண்டும் நித்திரைக்குப் போய் விடுவது வழமை😂!

பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு

2 weeks 4 days ago
பேராசிரியர் சிவத்தம்பியாக இருக்கலாம் என ஊகித்தேன். பாட புத்தகங்களில் உள்ளவை தான் வளரும் சந்ததியில் பதியும். பொதுத் தளங்களில் இருப்பதை ஒருசிலரே கவனிப்பார்கள்.

பாடநூலில் தமிழர் வரலாறுகள் மறைப்பு

2 weeks 4 days ago
பெயரைச் சுட்டிக் காட்டாமல் எழுதியிருக்கிறார், வழக்குப் போட்டு விடுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை😂. பேராசிரியர் பத்மநாதனாக இருக்குமென ஊகிக்கிறேன். அவர் தான் பாடநூலாக்கக் குழுவில் இருந்தார். இது தான் கொழும்பு நூதனசாலையில் இருக்கும் அந்த சிவன் பார்வதி சிலை பற்றிய கட்டுரை. https://amazinglanka.com/wp/shiva-kovil-no-1/ இவற்றைப் பாடப் புத்தகத்திலும், பேராசிரியரின் (யாரும் வாசிக்காத) புத்தகத்திலும் மறைத்து என்ன பயன்? பொதுத் தளங்களில் இந்தச் சிலை பற்றிய உண்மையான வரலாறு இருக்கிறது. இதை மறைக்க இயலாது.

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது

2 weeks 4 days ago
பெரியவர் 16 வயதில் வேலைக்கு சேர்ந்துள்ளார். முதலே இளைப்பாறி இருந்தால் 100 வயதுவரை வாழ்ந்திருக்க மாட்டார். இருந்தாலும் சுயநலம் பிடித்த மனிதன். எத்தனையோ பேர் வேலை இல்லாமல் தெருத்தெருவாக திரியும் நேரத்தில் 84 வயதுவரை வேலை செய்துள்ளார். அரசியல்வாதிகள் போல இவரும் குந்திய இடத்தைவிட்டு நகலாமல் இருந்துள்ளார்.
Checked
Tue, 10/14/2025 - 18:16
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed