புதிய பதிவுகள்2

ஈஸ்டர் தாக்குதல்; கைது செய்யப்படவுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள்!

2 weeks 4 days ago
ஈஸ்டர் தாக்குதல்; கைது செய்யப்படவுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள்! 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ச்சியான விசாரணைகள் கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார். தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகளை நடத்த வேண்டியிருக்கலாம். சாட்சியங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படுவதும், விசாரணை தவறாக வழிநடத்தப்படுவதும் நடந்த பிற சம்பவங்களில் அடங்கும். அமெரிக்காவிற்கு தனது விஜயத்தின் போது நடைபெற்ற அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போது இந்த அறிவிப்பினை ஜனாதிபதி வெளியிட்டார். https://athavannews.com/2025/1448672

மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்! -டொனால் ட்ரம்ப் உறுதி

2 weeks 4 days ago
மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்! -டொனால் ட்ரம்ப் உறுதி. மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேற்கு கரையில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன். இஸ்ரேல் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கமுடியாது. இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். காசா முனை மற்றும் மேற்கு கரை என இரு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. அதேவேளை, மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனிடையே, மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக பல்வேறு நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனாலும், பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகளை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448657

"மூன்று கவிதைகள் / 11"

2 weeks 4 days ago
"மூன்று கவிதைகள் / 11" தீரா அலைகளின் ஓயா ஓசையினால் தீண்டித் தீண்டிச் செல்லும் அலைகளால் குளிர்ந்து நடுங்கி சிலிர்த்து நடக்கிறான் வெள்ளை மணலில் கோட்டை கட்டுகிறான்! நிமிர்ந்து எழும் கடலலை அருகே பிரிய மனமின்றி கடலில் நீந்துகிறாள் சிப்பிகள் சோகிகள் தேடி எடுத்து மாலை ஒன்று செய்து மகிழ்கிறாள்! ........................................... அலை சறுக்கு ஆனந்தம் ஆனந்தமே கடலில் பறக்கும் பறவை அதுவோ மேகத்தின் மேல் மிதப்பது போல பூரிப்பு ஒன்று ஆட்கொள்கிறது தாயே! இன்ப ஊற்று உள்ளத்தில் பாய சக்தி பாய்ந்து ஆன்மாவை நனைக்க உப்புச் சுவை நாவில் கரைய ஆழி சொர்க்கம் இன்பம் இன்பமே! ......................................................... மரக் கம்பம் விடிவெள்ளி நமக்கு விரி கடலே பள்ளிக்கூடம் - ஐலசா குட்டி மீன்கள் நம்தோழன் - ஐலசா கொக்காய் நாம் ஒற்றைக்காலில் - ஐலசா அருமை மேகம் நமதுகுடை - ஐலசா பாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலசா பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா பிடிக்கும் மீன்கள் நம்உணவு - ஐலசா [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "மூன்று கவிதைகள் / 11" https://www.facebook.com/groups/978753388866632/posts/31488051377510099/?

குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!

2 weeks 4 days ago
2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மக்கள் தொகை சுமார் 23.23 மில்லியன்ஆகும் என்று Worldometer போன்ற ஆதாரங்கள் மதிப்பிடுகின்றன, மேலும் இது 2024-ல் இருந்ததை விட சற்றே அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் இதை 23.2 மில்லியனாக குறிப்பிடுகிறது. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். 🐒

ஒரு பயணமும் சில கதைகளும்

2 weeks 4 days ago
இதைச் சொல்வதற்காக நானும் கொஞ்சமாக வருந்துகிறேன். ஆள் பாதி ஆடை பாதி என்றாலும் முகராசி ஒன்று இருகிறது அல்லவா. உங்களை நேரில் பார்க்காவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறது😊

மருந்துகளுக்கு 100 சதவீத வரி : ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு

2 weeks 4 days ago
யேர்மன் மருந்து உற்பத்தியில் கால் பங்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று ஒரு கணக்கிருக்கிறது. மனுசன் அடிக்கடி கரடி விட்டு வெருட்டிக் கொண்டிருக்கிறார்.

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

2 weeks 4 days ago
இந்தப் பாடலுக்காக ஒரு மாதத்துக்கு மேலாக பத்மினியும், வையேந்திமாலாவும் நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டதாக செய்தி இருக்கிறது. பாடலும், ஆடலும் நன்றாக அமைந்து ரசிகர்களை திரையரங்குக்கு இழுத்து வந்தாலும், இன்றுவரை பிரபலமாக இருப்பது, அந்த நடனத்துக்கு இடையில் பி.எஸ். வீரப்பாவின் குரலில் ஒலித்த, “சபாஸ் சரியான போட்டி” என்ற வசனம்தான்

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 4 days ago
எம் ஜி ஆர் இடம் உதவி கேட்டு போனாவார்கள். ...பெறமால். போன வரலாறு இருந்தால் எழுதுங்கள் ....அவரை கொடைவள்ளல். என்பார்கள் ...அவர் செய்த உதவிகள். பட்டியல் இட முடியாது எதை கேட்கின்றீர்களே அதை பெறுவீர்கள். அந்த வகையில் நடிகைகள் காணியையே கேட்டார்கள். பெற்றார்கள். ஒரு வள்ளல். அள்ளி கொடுப்பதை நீங்கள் கேட்பதை தருவதை படுக்கத் தான் ...தன்னுடைய பாலியல் தேவைக்காக. கொடுத்தது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய கருத்துகள் அந்த தலைவனின் கால் தூசுக்கும். பெறுமதி அற்றவர் தான் இந்த சீமான் மேலும் விசஷயலாட்சிமி விஷி. விட தற்போதைய சீமான் மனைவியை விட. பணக்காரியாக. இருந்தால் .....அவளை ஒருபோதும் களட்டி விட்டிருக்க மாட்டார் மனைவியாக அவளுடன் குடும்பம் நடத்தி கொண்டு இருப்பார் இப்படி பக்கம் பக்கமாக. எழுத வேண்டிய தேவை வந்து இருக்காது அந்த பெண் நம்ம பிள்ளை இல்லை சகோதரி இல்லை தாய் இல்லை மனைவி இல்லை உறவினர் இல்லை எனவே… சீமான் மொழியில் விரும்பி தான் வந்தாய். படுத்துக் கொண்டேன் என்பதை ஆதரிக்கலாம் இல்லையா???? இவனை. போய் தமிழ்நாட்டின். வரலாற்றில் ஒப்பற்ற. தலைவன் எம் ஜி ஆருடன். ஒப்பிட. எப்படி மனம் வந்தது ??????????🙏🙏🙏🙏🙏🙏

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம்

2 weeks 4 days ago
புதிய அதிபருக்கு வாழ்த்துக்கள்!! மட்டக்களப்பு விருந்தோம்பலுக்குப் பெயர்போனது. அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்கள் அங்கு மக்கள் வருந்தாமல் ஆட்சிபுரிவார் என நம்புவோம்.🙏

அதிசயக்குதிரை

2 weeks 4 days ago
Creativity கிரியேட்டிவிட்டி · Anbu Anbu ·redonSospt450ut120t6ài44934437973fui3:c12r29i,g0941H72 eft2 · இராணித் தேனீ 🐝" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tf8/1/20/1f41d.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;"> இராணிமார்கள் பிறக்கவில்லை, அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.. இது தேனீ உலகில் ஒரு அற்புதமான கதை! ஒரு இராணித் தேனீ இறந்துவிட்டால் கூட, ஒரு நாட்டைப் போலவே தேனீ கூட்டத்தில் குழப்பம், அரசியற்ற நிலை ஏற்படுவதில்லை. அதற்கு பதிலாக, முழு கூட்டமும் அமைதியாக ஒரு இலக்கிற்காக ஒன்றிணைகிறது.. தேனீ கூட்டம் உடையாது. அது ஏற்கின்றது. அத்துடன், புதிய இராணி ஒருவருக்காக ஒரு குட்டி தேர்ந்தெடுக்கப்படுகிறது. சாதாரண தோற்றமுள்ள குட்டிகள் பலரிலிருந்து சிலரை தேர்வு செய்கின்றார்கள். அவர்கள் சிறப்பானவர்கள் என்பதாலல்ல, அவர்கள் சிறப்பானவர்களாக மாறும் வாய்ப்பு இருப்பதால் தான். எந்த குட்டி எதிர்கால இராணியாக மாறும் என்பதை தீர்மானிப்பது விதியோ ஜீன்களோ அல்ல. அது அவருக்குக் கொடுக்கப்படும் உணவாகும். அதாவது, அவருக்கு வழங்கப்படும் சிறப்பு உணவான ராயல் ஜெல்லி (Royal Jelly) காரணமாகும். இந்த அடர்த்தியான, ஊட்டச்சத்து நிறைந்த திரவம் தான் மாற்றத்தின் அமிர்தமாக விளங்குகிறது. அதுவே ஒரு சாதாரண குட்டியை அசாதாரணமான இராணியாக மாற்றும் மாயாஜாலம். இங்கே முக்கியமானது விதியல்ல, ஊட்டச்சத்துதான். ராயல் ஜெல்லி என்பது தேனீகள் தயாரிக்கும் ஒரு தனிப்பட்ட திரவமாகும். இது வெண்மையான, கிரீம் போன்ற தோற்றம் கொண்டதாகும். தேனீ உலகில், இந்த ராயல் ஜெல்லி தான் இராணி தேனீயின் வாழ்க்கையும் வளர்ச்சியிலும் முக்கிய ரகசியமாக இருக்கிறது. இது பெரும்பாலும் நீர், புரதங்கள், சர்க்கரை வகைகள் (பிருக்டோஸ் மற்றும் கிளூகோஸ் உட்பட), கொழுப்புகள், B வகை வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்களைக் கொண்ட கலப்பாகும். இதில் உள்ள மிக முக்கியமான தனித்துவம் வாய்ந்த சேர்க்கை 10-HDA (10-hydroxy-2-decenoic acid) எனப்படும். இது ராயல் ஜெல்லியில் மட்டுமே காணப்படும், சுகாதார நன்மைகளுக்குத் தோற்றம் தரும் தன்மை கொண்டது. ராயல் ஜெல்லி தயாரிக்கப்படுவது இளம் வேலைக்கார தேனீக்களால் (worker bees). அவற்றின் உடலில் உள்ள pharyngeal மற்றும் mandibular glands என்பவற்றின் ஸ்ராவங்களை கலப்பதன் மூலம் இந்த ஜெல்லி உருவாகிறது. குறிப்பாக 5 முதல் 15 நாட்கள் வயதுடைய இளம் வேலைக்கார தேனீகள் இந்த பணிக்குத் தனிப்பட்டவை. அவர்கள் தங்கள் உடலில் உள்ள கொழுப்பு சுரப்பிகளில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, பின் அதை pharyngeal gland மூலம் ஜெல்லியாக மாற்றுகிறார்கள். ஒரு புதிய இராணித் தேனீ உருவாக்க வேண்டியபோது, வேலைக்கார தேனீக்கள் விசேட இராணி அறைகள் (Queen cells) கட்டுகிறார்கள். அவற்றில் முட்டை இடப்பட்ட பிறகு, அந்த குட்டிக்குத் தொடர்ந்து அதிகளவில் ராயல் ஜெல்லி வழங்கப்படுகிறது. மற்ற சாதாரண குட்டிகள் ராயல் ஜெல்லி பெறுவது வாழ்நாளின் ஆரம்ப 2–3 நாட்களுக்கு மட்டுமே. பின்னர் அவர்கள் Bee Bread எனப்படும் தேன் மற்றும் மகரந்தக் கலவையை உண்ணுகிறார்கள். ராயல் ஜெல்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஹார்மோன் போன்ற சேர்மங்கள் அந்த குட்டியின் மரபணு செயல்பாடுகளை மாற்றி, சாதாரண தேனீவைக் காட்டிலும் பெரியதாகவும், நீண்ட நாட்கள் வாழக் கூடியதாகவும், முட்டை இடக் கூடியதாகவும் மாற்றுகின்றன. இது ஊட்டச்சத்துக்களால் உயிரினரின் விதியை மாற்ற முடியும் என்பதற்கான அபூர்வமான எடுத்துக்காட்டாகும். ராயல் ஜெல்லி தொடர்ந்து பெறும் ஒரே குட்டி தான் இராணியாக மாறுகிறாள். அவள் பெரிதாக மாறுகிறாள், நீண்ட காலம் வாழ்கிறாள், கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்கிறாள், அதை மறுபடியும் கட்டியெழுப்புகிறாள். குழப்பமிருந்த இடத்தில் ஒழுங்கும் ஒற்றுமையும் ஏற்படுத்துகிறாள். அவள் அதிகாரத்துக்காக பிறக்கவில்லை, ஆனால் அதற்கேற்ப உருவாக்கப்படுகிறாள்........! படித்ததில் பிடித்தது.. பகிர்வு பதிவு !!

லஞ்சம் -ஊழலுக்கு உள்ளாகக்கூடிய நிறுவனங்களாக 10 நிறுவனங்களை மக்கள் தேர்ந்தெடுப்பு!

2 weeks 4 days ago
அதிகாரம்காட்டி பயம்காட்டி வற்புறுத்திக் கேட்டுப் பெற்றுவதுதான் லஞ்சம் ஊழலுக்குள் அடங்கும். தவறில்லாத நன்மைபெற்று அதற்கான பிரதி உபகாரத்தை மனமகிழ்ந்து செய்வதை லஞ்ச ஊழல் என்று அடக்குவது தவறு. அடக்கினால் அது மனிதத்தைப் புண்படுத்தும் செயலாகும்.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

2 weeks 4 days ago
இது ஒரு கோணம். ஆனால் இது உண்மை எனில் அந்த குடும்பத்தின் சுவடே இல்லாமல் அழித்திருப்பார் கே என் நேரு. சட்டத்துக்கு எல்லாம் காத்திருக்க மாட்டார். நேருவுக்கு கூட யார் செய்தது என்பது இன்றுவரை தெரியாது என்பதே உண்மை. இன்னொரு கோணம் - ஜெ கூட்டம் நடத்த விடாமல் தடுத்து, வாயில் வைக்கபட்ட உறுப்பை பற்றி ஜெயிடம் சவால்விட்டார் என்பது. சந்திப்போம்.

கொஞ்சம் ரசிக்க

2 weeks 4 days ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் ·dprsotSone c2919ucu711i1iulm1u6ga1a6cg6790803mt52tt45h15cufa · 1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது. கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும். இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள். ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" . அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு. இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள். அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,, இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள். 1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும். சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள். சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது. அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது. இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம். எப்படி ஆயினும் ...... பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன. படித்ததில் பிடித்தது.... Voir la traduction.....!
Checked
Wed, 10/15/2025 - 00:17
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed