புதிய பதிவுகள்2

'பாலஸ்தீனம் ஒரு உரிமை, பரிசு அல்ல' - ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்

3 weeks 1 day ago
23 Sep, 2025 | 10:56 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பு நாடுகள் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பாலஸ்தீன நாடு என்பது ஒரு உரிமை, அது பரிசு அல்ல என்று வலியுறுத்திப் பேசினார். பல தலைமுறைகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்த மோதலில், பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை இழந்துவிட்டன. ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று குட்டெரெஸ் வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த மோதலுக்கு 'இரு நாடுகள்' என்பதே ஒரே தீர்வு என்றும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு இறையாண்மை கொண்ட, சுதந்திர மற்றும் ஜனநாயக நாடுகள் தங்கள் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. தீர்மானங்களின்படி, இரு நாடுகளும் ஜெருசலேம் நகரைத் தலைநகராகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஹமாஸ் அமைப்பை இலக்காகக் கொண்டு, காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், இதுவரை 63,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஹமாஸ் அமைப்பினரும் அடங்குவர். உணவு மற்றும் இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் பாலஸ்தீனியர்கள், பட்டினியாலும் நோய்த்தொற்றுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். குட்டெரெஸ், ஒரு பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க மறுப்பது பயங்கரவாதத்திற்குப் பரிசளிப்பது போன்றது என்றும், இரு நாடுகள் இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/225826

விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்திருந்து டில்லியை வந்தடைந்த ஆப்கான் சிறுவன்!

3 weeks 1 day ago
23 Sep, 2025 | 03:26 PM ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டில்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு, குறித்த சிறுவன் அதே விமானத்தில் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். காபூலிலிருந்து புறப்பட்ட கேஏஎம் (KAM) விமானம், இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது, விமானத்தின் சக்கரப் பகுதிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாகத் திரிந்த ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர் கண்டனர். அவனை விசாரித்தபோது, தான் விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து வந்ததாகத் தெரிவித்தான். சிறுவன் ஒளிந்திருந்த பகுதியைச் சோதனையிட்டபோது, அங்கு ஒரு சிறிய ஒலிபெருக்கி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், விமானம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், எந்தவிதமான சதிச் செயல்களும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர், அந்தச் சிறுவன் மீண்டும் அதே விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. https://www.virakesari.lk/article/225836

பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

3 weeks 1 day ago
பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா! கொழும்பில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை முட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது. கொழும்பில் மிகவும் பரபரப்பான வீதியான கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காரை போக்குவரத்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என கேட்டதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அவமரியாதையாக பொலிஸ் அதிகாரியிடம் நடந்து கொள்வது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள மற்றும் பேருந்துகள் நிறுத்தப்படும் குறித்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இராமநாதன் அர்ச்சுனா இவ்வாறு செயற்பட்டுள்ளார். நேற்றையதினம்(22) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1448248

பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரித்துள்ளது!

3 weeks 1 day ago
கண் கெட்ட பின், சூரிய நமஸ்காரம். மேற்கு நாடுகளின் இரட்டை வேடம். பாலஸ்தீனம் அழியும் மட்டும்... பார்த்துக் கொண்டு இருந்து விட்டு, தற்போது கற்குவியலாக இருக்கும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்த பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ். ################# ######################### ஏற்கனவே இருந்த ஒரு நாட்டை புது கதை சொல்லி ஏதோ தானமாக வழங்குவது போல படம் காட்டுகிறார்கள். இந்தத் திருத்தம்.. இஸ்ரேலுக்கு ஒரு தனி பிரதேசத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. Mohamed Niyasdeen

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

3 weeks 1 day ago
அண்மையில் கைதுசெய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி சம்பத் மனம்பேரி என்பவர் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் படுகொலையுடன்( 2006 ம் ஆண்டு ) தொடர்புடையவர் என்று தென்னிலங்கை இணையத்தளமாகிய Debasa.lk தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி செயற்பட்டபோது மாமனிதர் ரவிராஜ் MP கொழும்பில் அவரது வாகனத்தில் வைத்து நடுவீதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரை கொலையாளிகளுக்கான தண்டனை கிடைக்கப்பெறவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. ராஜபக்ச குடும்பத்தின் கட்சியான பொதுஜன பெரமுன கட்சியின் பிரமுகர் சம்பத் மனம்பேரி தடுப்பு விசாரணையில் வழங்கிய தகவலுக்கமைய ராஜபக்சவின் சொந்த ஊரான அம்பாந்தோட்டை தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருள் 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 3 லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதில் 284.94 கிலோ ஹெரோயின், 420.976 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த 3 லொறிகளினதும் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. Kunalan Karunagaran

ஹொங்கொங், தெற்கு சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல்!

3 weeks 1 day ago
ஹொங்கொங், தெற்கு சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல்! வடக்கு பிலிப்பைன்ஸ் கிராமங்களில் மூவரின் இறப்புக்கு காரணமாகவும், ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிய ஒரு சூப்பர் சூறாவளி இப்போது ஹொங்கொங், சீனாவின் தெற்குப் பகுதிகள் மற்றும் தாய்வானை நோக்கி நகர்கிறது. அங்கு மக்கள் மிகவும் கடுமையான வானிலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். ரகசா புயல் ஹொங்கொங்கிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2017 இல் ஹடோ மற்றும் 2018 இல் மங்குட் ஆகிய புயல்களின் அளவை எட்டக்கூடும் என்றும் கூறப்படுகிறது. ‍ஹொங்கொங்கின் அதிகாரிகள் மூன்றாவது மிக உயர்ந்த புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். மேலும், குறைந்தது 700 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை மிகவும் சக்திவாய்ந்த புயலாக உருவெடுத்துள்ள இது, அதிகபட்சமாக மணிக்கு 230 கிமீ வேகத்திலும் கடக்கக்கூடும் என்று வானிலையாளர்கள் கூறுகின்றனர். அடுத்த 24 மணி நேரத்திற்குள் புயல் அதன் தற்போதைய வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும், பின்னர் சீனக் கடற்கரையை நெருங்கும்போது சற்று பலவீனமடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்கத்தினால் பிலிப்பைன்ஸில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர். மேலும் சூப்பர் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவலான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். ஹொங்கொங் மற்றும் மக்காவ்வில் பாடசாலைகள் மூடப்பட்டன, குடியிருப்பாளர்கள் மளிகைப் பொருட்களை சேமித்து வைத்தனர். அருகிலுள்ள சீன தொழில்நுட்ப மையமான ஷென்சென் 400,000 மக்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2025/1448232

கப்பற்படை உறவுகளை வலுப்படுத்த இலங்கை வந்துள்ளார் இந்திய கடற்படைத் தளபதி

3 weeks 1 day ago
இந்திய - இலங்கை கடற்படைத் தளபதிகள் சந்திப்பு Published By: Digital Desk 1 23 Sep, 2025 | 08:11 AM ( இணையத்தள செய்திப் பிரிவு ) நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 21 ) வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் டினேஸ் கே திரிபாதி, திங்கட்கிழமை ( செப்டம்பர் 22) காலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை சந்தித்துள்ளார். இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி மற்றும் அவரது மனைவியை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன வரவேற்றுள்ளார். நேற்று (2025 செப்டம்பர் 22) காலை கடற்படைத் தலைமையகத்திற்கு சென்ற இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதிக்கு கடற்படையின் சம்பிரதாயபூர்வ மரியாதை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, இந்திய கடற்படைத் தளபதியை கடற்படைத் தலைமையகத்திற்கு வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பான மூலோபாய மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன. மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய கடற்படைத் தளபதி இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்த உள்ளார். மேலும் இலங்கை கடற்படையால் 12 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு - 2025 இல் பங்கேற்றதன் பின்னர், 2025 செப்டம்பர் 25ஆம் திகதியன்று நாட்டிலிருந்து புறப்பட உள்ளார். https://www.virakesari.lk/article/225811

சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புகளை தாக்கல் செய்யாத பொது அதிகாரிகளின் பட்டியல் வெளியீடு

3 weeks 1 day ago
சொத்து, பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க தவறிய முன்னாள், தற்போதைய அரசியல் பிரமுகர்கள் - ஊழல் விசாரணை ஆணைக்குழு Published By: Vishnu 23 Sep, 2025 | 02:52 AM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட இராஜாங்க அமைச்சர் ஐவரும், முன்னாள் ஆளுநர்களான செந்தில் தொண்டமான், நவீன் திஸாநாயக்க, ரொஷான் குணதிலக, மற்றும் விலியம் கமகே ஆகியோர் குறித்த காலப்பகுதியில் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதியன்று 2024 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காதவர்களின் பெயர் விபரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பெயர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் ஆறு பேர், முன்னாள் மாகாண ஆளுநர்கள் நால்வர், முன்னாள் தூவர்கள் 29 பேர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 2 நீதியரசர்கள் உள்ளடங்குகின்றனர். கடந்த கடந்த அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்த டக்ளஸ் தேவானந்தா சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை குறித்த காலப்பகுதிக்குள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் முன்னாள் இராஜாங்க அமைச்சரான (காலஞ்சென்ற)லொஹான் ரத்வத்தே, மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, சாந்த பண்டார,காதர் மஸ்தான், பிள்ளையான் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் முன்னாள் மாகாண ஆளுநர்களான ரொஷான் குணதிலக, செந்தில் தொண்டமான், நவீன் திஸாநாயக்க மற்றும் விலியம் கமகே ஆகியோரும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/225804

ஒரு கட்சி ஆட்சி முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சி; அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

3 weeks 1 day ago
பல கட்சி முறைமையை நீக்கி தனிக்கட்சி முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சி - பொதுஜன பெரமுன 22 Sep, 2025 | 05:00 PM (இராஜதுரை ஹஷான்) எதிர்க்கால கூட்டணி கனவுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் நாங்கள் கலந்துக்கொள்ளவில்லை. ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவே ஒன்றிணைந்துள்ளோம். பல கட்சி முறைமையை இல்லாதொழித்து,தனிக்கட்சி முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்காகவே எதிர்க்கட்சியினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. போலியான வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இந்த ஒருவருட காலத்தில் புதிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் ஏதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஜனாதிபதியின் ஒருவருட கால ஆட்சியில் போதைப்பொருள் உற்பத்தி நிலையங்கள் மாத்திரமே உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் போதைப்பொருட்கள் கிலோகிராம் கணக்கில் கைப்பற்றப்பட்ட ஆனால் தற்போது கொள்கலன் கணக்கில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் சொத்து மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த கோடிக்கணக்கான சொத்துக்கள் தமக்கு பரம்பரை வழியில் கிடைக்கப்பெற்றதாக குறிப்பிடப்பிடுகிறார்கள். ஆனால் தேர்தல் காலத்தில் அவ்வாறு குறிப்பிடவில்லை.தாம் ஏழ்மை நிலையில் வாழ்வதாகவும், மக்களுடன் மக்களாக வாழ்வதாகவுமே குறிப்பிட்டார்கள். எதிர்க்கால கூட்டணி கனவுகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் நாங்கள் கலந்துக்கொள்ளவில்லை. அந்த மாநாட்டில் பங்குப்பற்றிய சகல அரசியல் கட்சிகளுக்கும் தனித்துவமான கொள்கை உள்ளது. ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவே ஒன்றிணைந்துள்ளோம்.பல கட்சி முறைமையை இல்லாதொழித்து, தனிக்கட்சி முறைமையை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்காகவே எதிர்க்கட்சியினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள்.ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கும் நிபந்தனையற்ற வகையில் ஒன்றிணைவோம் என்றார். https://www.virakesari.lk/article/225780

4.3 அளவில் பூமி அதிர்வு.

3 weeks 1 day ago
எல்லா அழிவுகளும் ஆபத்துகளும் அமெரிக்காவிலேயே ஏன் வருகிறது என்ற யோசனையோடு நித்திரை கொண்டேன். கனவில் ஒரு சாத்திரி வந்தார், தற்போது அமெரிக்கர் என்று வாழும் மக்களால் கொல்லப்பட்ட பூர்வ அமெரிக்க குடிகளின் ஆவிகள் இன்னமும் அமெரிக்காவை சுற்றி வருவதாகச் சொன்னார். இப்போது இலங்கையிலும் அடிக்கடி பூமி நடுக்கம் வருகிறதாம். ஏன்??????

குளிக்க சிறந்த நேரம் காலையா அல்லது இரவா? எது அதிக நன்மை தருகிறது?

3 weeks 1 day ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது கட்டுரை தகவல் ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி 23 செப்டெம்பர் 2025, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் சிலர் காலையில் குளிக்க விரும்புகிறார்கள், சிலர் மாலையில் அல்லது இரவில் குளிக்க விரும்புகிறார்கள். யார் சரியாக செய்கிறார்கள்? இந்த உலகில், ஒரு சிறிய கேள்வி கூட பெரிய விவாதத்தை உருவாக்குகிறது, நீங்கள் காலையில் எழுந்தவுடன் குளிப்பவரா? அல்லது இரவில் படுக்க செல்வதற்கு முன் குளிப்பவரா? அல்லது தினமும் குளிக்காத 34% அமெரிக்கர்களில் ஒருவரா? நீங்கள் எந்தப் பக்கம் இருந்தாலும், உங்கள் தேர்வு உங்கள் உடல்நலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் யோசிக்கலாம். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும், முதலில் பலரும் செய்யும் வேலை குளிப்பது தான். காலை வேளையில் குளிப்பவர்கள், சூடான நீரில் சில நிமிடம் நிற்பதால் புத்துணர்ச்சி கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று சொல்கிறார்கள். மாறாக, இரவில் குளிப்பவர்கள், நாள் முழுவதும் சேர்ந்த தூசி, வியர்வை எல்லாவற்றையும் கழுவி விட்டு தூங்குவதால் சுத்தமாகவும், அமைதியாகவும் தூங்க முடியும் என்று நம்புகிறார்கள். அறிவியல் என்ன சொல்கிறது? எது நமக்கு உண்மையில் அதிக நன்மை தருகிறது? என்பது குறித்துத் தெரிந்து கொள்வோம். குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது. நாள் முழுவதும் தூசி, மாசு, மகரந்தம் போன்றவை உடலில் தேங்குகின்றன. இரவில் குளிக்காமல் படுக்கச் சென்றால், இந்த அழுக்குகள் உங்கள் படுக்கை விரிப்பிலும் தலையணை உறையிலும் படிந்துவிடும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரவில் சூடான நீரில் குளித்த பிறகு உடல் வெப்பநிலை உயர்ந்து பின்னர் குறைவது சிலருக்கு எளிதாக தூங்க உதவும் இது மட்டும் இல்லை. நம் தோலில் ஏராளமான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. தோலின் ஒரு சதுர சென்டிமீட்டரை நெருக்கமாகப் பார்த்தால், அங்கே 10,000 முதல் ஒரு மில்லியன் வரை பாக்டீரியாக்கள் இருப்பதை காணலாம். அவை நம் வியர்வைச் சுரப்பிகளில் இருந்து வரும் எண்ணெயை உணவாக எடுத்துக்கொள்கின்றன. வியர்வைக்கு தனிப்பட்ட மணம் இல்லையென்றாலும், பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் கந்தக சேர்மங்கள்தான் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதனால், படுக்கைக்கு முன் குளிப்பது தான் ஆரோக்கியமான தேர்வாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் போல, உண்மை கொஞ்சம் சிக்கலானது. "இரவில் குளித்தால் நீங்கள் சுத்தமாக படுக்கைக்குச் செல்வீர்கள், ஆனால் இரவில் உங்களுக்கு வியர்க்காமல் இருக்காது" என்கிறார் லீசெஸ்டர் பல்கலைக்கழக நுண்ணுயிரியலாளர் பிரிம்ரோஸ் ஃப்ரீஸ்டோன். குளிர்காலத்தில் ஒரு நபர் படுக்கையில் கால் லிட்டர் அளவு வியர்வை வெளியிடுவார் மற்றும் 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தோல் செல்களை வெளியேற்றுவார். இது தூசிப் பூச்சிகளுக்கு (dust mites) ஒரு முழு விருந்து போன்றது என்கிறார் ஃப்ரீஸ்டோன். தொடர்ந்து பேசிய அவர், "நீங்கள் படுக்கையில் வியர்வையால் ஒரு சிறிய சூழலை உருவாக்குவீர்கள். அதில் தோலில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை பெற்றுக்கொண்டு, சிறிது உடல் நாற்றத்தை (BO) உருவாக்கும். எனவே, இரவில் குளித்தாலும், காலையில் எழும்போது சற்று நாற்றம் இருக்கும்," என்கிறார். இரவில் குளிப்பதின் நன்மைகள் கிடைக்க, உங்கள் படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை ஆகியவற்றை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பாக்டீரியாக்கள் இவற்றில் வாரக்கணக்கில் உயிர் வாழக்கூடும். ஈரமான பகுதிகளில், குறிப்பாக தலையணைகளில், தூசிப் பூச்சிகளும் பூஞ்சைகளும் அதிகமாக சேரக்கூடும். முழுமையாகச் செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் இதை சமாளித்துவிடுவார்கள். ஆனால் கடுமையான ஆஸ்துமா கொண்டவர்களில் 76% பேருக்கு குறைந்தது ஒரு வகை பூஞ்சைக்கு ஒவ்வாமை இருக்கும். A. fumigatus என்ற பூஞ்சைக்கு உட்பட்டால், காசநோய் அல்லது புகைபிடிப்பால் பாதிக்கப்பட்ட நுரையீரல் நோயாளிகளுக்கு நுரையீரல் நோய் உருவாகும் அபாயம் உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காலையில் குளிப்பது இரவில் சேகரிக்கப்படும் வியர்வை மற்றும் நுண்ணுயிரிகளை பெரும்பாலானவற்றை நீக்கும் "மாலையில் குளிப்பதை விட, படுக்கை விரிப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வதே முக்கியம்," என்கிறார் பிரிட்டனின் ஹல் பல்கலைக் கழகத்தில் காயம் குணப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிரியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஹாலி வில்கின்சன். "ஏனென்றால், நீங்கள் குளித்து சுத்தமாக படுக்கைக்கு சென்றாலும், அந்த விரிப்புகளை ஒரு மாதம் துவைக்காமல் விட்டால், அதில் பாக்டீரியா, அழுக்கு, தூசிப் பூச்சிகள் எல்லாம் குவிந்து விடும்." இது ஒரு சிக்கல், ஏனெனில் தூசிப் பூச்சி கழிவுகளுக்கு நீண்ட காலம் உட்பட்டால், ஒவ்வாமை ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும். நீங்கள் ஏற்கனவே மகரந்தம் போன்றவற்றுக்கு ஒவ்வாமை கொண்டவராக இருந்தால், படுக்கை விரிப்பை துவைக்காமல் இருப்பது உங்கள் அறிகுறிகளை இன்னும் மோசமாக்கும். அழுக்கான விரிப்புகளில் தொடர்ந்து படுத்தால், தோல் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆனால் இதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் இன்னும் தெளிவாக இல்லை. தூக்கத்தின் நன்மைகள் இரவு நேரத்தில் குளிப்பது தூக்கத்திற்கு உதவுகிறது என்று சிலர் வலியுறுத்துகிறார்கள், இதற்கு விஞ்ஞான ஆதாரங்களும் உள்ளன. உதாரணமாக, 13 ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்த ஒரு மெட்டா-ஆய்வு, படுக்கைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு 10 நிமிடங்கள் சூடான நீரில் குளிப்பது, தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று கண்டறிந்தது. இதற்கான காரணம், முதலில் உடல் வெப்பநிலையை உயர்த்தி பின்னர் அதை மீண்டும் குறைப்பது, நம் உடலுக்குத் "இப்போது தூக்கத்திற்கு தயாராகுங்கள்" என்ற சர்க்கேடியன் (உடலின் உயிரியல் கடிகாரம்) சிக்னல் அனுப்புகிறது என்பதாக இருக்கலாம். ஆனால் இதை முழுமையாக உறுதிப்படுத்த இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவை. அப்படியென்றால், காலை குளிப்பது நல்லதா? மாலை குளிப்பது நல்லதா? எது சிறந்தது என்ற கேள்விக்கு விடை என்ன? ஃப்ரீஸ்டோன், காலையில் குளிப்பதையே விரும்புகிறார். இரவில் படுக்கையில் இருந்த போது தேங்கிய வியர்வையும் நுண்ணுயிரிகளையும் துடைத்துவிட்டு, புத்துணர்ச்சியுடனும் சுத்தமாகவும் நாளைத் தொடங்க முடியும் என்பது தான் அதற்கான காரணம். ஆனால் உண்மையில், நீங்கள் காலையில் குளித்தாலும், மாலையில் குளித்தாலும், உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. இது முழுக்க முழுக்க, நீங்கள் பகலில் சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்புகிறீர்களா அல்லது இரவில் தூங்கச் செல்லும் முன் சுத்தமாக இருக்க விரும்புகிறீர்களா என்பதில்தான் இருக்கிறது. "நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் குளிக்கிறீர்கள் என்றால், அதை எந்த நேரத்தில் செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல," என்கிறார் வில்கின்சன். உண்மையில், முக்கியப் பகுதிகளை தினமும் கழுவினால், வாரத்திற்கு இரண்டு முறை குளிப்பதே ஆரோக்கியத்துக்கும் சுகாதாரத்துக்கும் போதுமானது. "நீங்கள் செய்யும் வேலையையும் பொறுத்தே இது இருக்கும். உதாரணமாக, நீங்கள் விவசாயி என்றால், நாள் முழுவதும் வேலை முடித்து வீடு திரும்பியபோது குளிக்க விரும்புவீர்கள். ஆனால், மொத்தமாகப் பார்த்தால், சுத்தமான படுக்கையை பராமரிப்பதுதான் மிக முக்கியமானது," என்கிறார் வில்கின்சன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c05918r470do

புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்

3 weeks 1 day ago
10) அமரர் கிருஸ்ணர் நவரத்தினம்(சுழிபுரம் கிழக்கு, ஏழாலை வடக்கு) ஞாபகார்த்தமாக மகள் திருமதி லக்ஸமா றுக்மன் குடும்பம் 40000 ரூபா வீட்டுத்திட்டப் பணிகளை பூரணப்படுத்த திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். 23/09/2025 இன்று வரை மொத்தமாக 360070 ரூபா திரு சி.லக்சனுடைய வங்கிக் கணக்கில் கருணைகொண்ட நல்லுள்ளங்களால் வைப்பிடப்பட்டுள்ளது.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

3 weeks 1 day ago
அடுத்தவன் குடும்பத்தில் தலையிட்டால்… கோடிக் கணக்கில் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்ற செய்தியை… எல்லோரும் அறிய வேண்டும் என இணைத்தேன் சாத்தான். 😁 அரசியல்வாதிகளும், சினிமா நடிகர்களும் இனி எச்சரிக்கையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 weeks 1 day ago
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி கண்ணால என்ன நீ பார்த்தா உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா யூத்தாக மாறுவான் காத்தா பெண் : ஹோ கரும்பு உடம்பும் ருசிக்கும் எறும்பு பெண் : அய்யய்யோ பரபரப்பா குழு : ……………………. பெண் : மனசு தவிக்குதப்பா ஆண் : உனக்கு மட்டும் உயிர் இரண்டா உடம்ப கவ்வுறியே கரண்டா இது சரியா தப்பா மதுபோல மப்பா ஆண் : உன் நடக்காட்டி என்ன தலையாட்டி பொம்மைப்போல மாத்திப்புட்ட பெண் : நீ பலவாட்டி ஒரு படம் காட்டி என் உசுற வாங்கிப்புட்ட ஆண் : குறுக்கு சிறுத்த கொலைகாரி ரசிக்க வாயேன்டி பெண் : நொறுக்குத்தீனி உன் மீச கடிக்கத்தாயேன்னா ஆண் : ஏ கஞ்சாச்செடி உடம்பழகி கஞ்சமான இடையழகி பெண் : உன் முகம் பார்த்து அட குளிர்க்காத்து தினம் சூடா மாறுதடா ஆண் : உன் நகம் பார்த்து நான் தல வாற அடி ஊரே கூடுதடி பெண் : தெருவில் நடந்து நீ போனா ஜன்னல் வெட்கப்படும் ஆண் : கோலம் போட நீ போனா புள்ளி ஜொல்லுவிடும் பெண் : பஞ்சாமிர்த சிரிப்பழகா பஞ்சமில்லா கொழுப்பழகா .......! --- கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி ---
Checked
Wed, 10/15/2025 - 21:20
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed