3 weeks ago
நீங்கள் நாதகவினர் மட்டுமே மேடைகளில் பேசும் கொள்கைகளையும், விடயங்களையும் பட்டியல் இட்டுள்ளீர்கள், புலவர். நீங்கள் சொல்லுவது சரியே. ஆனால் நான் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும், பாஜக தவிர, பேசும் விடயங்களை மட்டுமே பட்டியலாக்கினேன். நான் குறிப்பிட்டவை எல்லா தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானவை. ஒவ்வொரு கட்சிக்கும் மட்டுமே உரித்தான தனித்தனியான விடங்கள் அல்லது கொள்கைகள், திட்டங்கள் என்று பார்த்தால், அது இன்னொரு நீண்ட பட்டியலாகப் போகும். உதாரணமாக, பாமகவின் வன்னிய மக்களுக்கான 20 வீத உள் ஒதுக்கீடு. தமிழ் நாட்டை இரண்டாகப் பிரிப்பது கூட பாமகவின் இனனொரு கொள்கை மற்றும் திட்டம். விசிகவுக்கும் அவர்களுக்கே மட்டும் உரியதாக சில தனிக் கொள்கைகள் இருக்கும். நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் கட்சியின் கொள்கைக் கையேட்டை வாசித்தால், அங்கும் அவர்களுக்கென்று சில பிரத்தியேக கொள்கைகளும், திட்டங்களும் இருக்கும். தலைநகரை சென்னையிலிருந்து மதுரைக்கு மாற்றுவது கூட ஏதோ ஒரு கட்சியின் கொள்கையாக, திட்டமாக இருக்கக்கூடும். ஆதரவு - எதிர் என்னும் நிலையைக் கடந்து, சாத்தியங்களையும் குறுகிய மற்றும் நீண்டகால விளைவுகளையும் நான் பார்க்க முற்படுகின்றேன். ஆதரவாக இருப்போர் அவர்களுடைய தரப்பின் எல்லா நடவடிக்கைகளையும் ஆதரிப்பார்கள்; எதிராக இருப்போர் அந்த தரப்பின் எல்லா நடவடிக்கைகளையும் எதிர்ப்பார்கள். இந்த ஒற்றைப்படையான நிலைப்பட்டால் நாங்கள் எங்களின் சுயத்தை கூட இழந்து போகும் அபாயம் உள்ளது. நாதகவின் நீர் மேலாண்மை பற்றிய அறிக்கையை நான் இன்னமும் வாசிக்கவில்லை. அப்படி ஒரு அறிக்கை வந்ததா என்றும் தெரியவில்லை. ஆடு மாடுகள் வளர்க்கும் திட்ட அறிக்கை போல நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்றாக இருக்கும் என்பதே இவர்களுடனான என் அனுபவம். தமிழ்நாடு ஒரு நியூசிலாந்தோ அல்லது டென்மார்க்கோ அல்ல. வருடத்தின் பெரும் பகுதியில் அனல் புழுதி பறக்கும் மாவட்டங்களே தமிழ்நாட்டில் அதிகம். இயற்கை விவாசாயம் என்று உலகம் போயிருந்தால், 70ம் ஆண்டுகளின் பின் உலகமே ஒரு கொடிய பஞ்சத்தில் அழிந்திருக்கும். இன்றும் கூட 800 கோடிக்கு மேற்பட்ட உலக மக்களுக்கு தேவையான உணவை நாங்கள் உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதன் பின்னால் இருப்பது மரபணுக்கள் மாற்றப்பட்ட அல்லது அவற்றின் திறனை அதிகரித்த விஞ்ஞான நடவடிக்கைகளே. கோதபாயாவின் ஒரு வருடம் மட்டுமே நீடித்த இயற்கை விவசாயத் திட்டம் முழு இலங்கயையுமே பட்டினிக்குள் தள்ளியதை சமீபத்தில் பார்த்தோமே. தமிழ்த்தேசியத்தை யார் பேசுவது என்றில்லையா............. தன் பிள்ளைகளை ஆங்கிலப் பாடசாலையில் படிப்பித்துக் கொண்டு, தமிழ்த்தேசியம் பேசுவது அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம் இல்லையா........... இப்படியே ஒவ்வொரு கட்சியினரின் ஒவ்வொரு கொள்கைகளையும், திட்டங்களையும் ஆராய்ந்து பார்க்கமுடியும். அந்த அந்த கட்சிகளின் ஆதரவாளர்கள் அசௌகரியப்பட்டு எதிர்வினை ஆற்றுவார்கள்; எதிர்த்தரப்பினர் கைதட்டுவார்கள். இவை இரண்டையும் தாண்டி, தமிழ்நாடும் அந்த மக்களும் முன்னேற வேண்டும் என்பதே என் விருப்பம்.
3 weeks ago
ஒரு கதையில் பல அன்றாட சம்பவங்களையும் கலந்து சுவையாக ஆர்பாட்டமின்றி எழுதுகிறீர்கள். பல தகவல்களை அறியக்கூடியதாக உள்ளது. உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்!
3 weeks ago
உண்மை தான்,......ஒரு தமிழக உறவுடன். கருத்து எழுத வேண்டி வந்தது ...அவர் ஒரு கருத்து எழுதினார் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டில் இருந்து தமிழக அரசியல் தலைவர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று இதனால் இலங்கை தமிழருக்கு இருந்த ஆதரவு குறைத்து விட்டது ஒருவருக்கு பணம் கொடுத்து மற்றையோரின். ஆதரவை இழந்து விட்டோம் இது கவலையளிக்கிறது 🙏
3 weeks ago
உண்மைதான். சீமான் வழக்கு திரிகளில் பலமுறை எழுதியதுதான். மேற்கு நாட்டு சட்டம் போல அல்ல இந்திய சட்டம். அங்கே திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு வைத்தால் அது ரேப் ஆக முடியகூடும். மேற்கில் அப்படி அல்ல. இன்னொருவரின் கணவன்/மனைவியோடு தொடர்பில் இருந்தால் மேற்கில் அபராதம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவில் இப்படி.
3 weeks ago
உண்மை தான் மூவரும் கன்னிப் பெண்கள் சட்டமும். இப்ப தான் வந்தது என்று செய்தியை இணைத்தவர். சொல்லுகிறார். ...எனவே… கருணாநிதி சட்டத்தை மீறவில்லை 😂😂 எனது கருத்து இந்த சட்டம் செய்யாதே என்று சொல்லவில்லை .....செய்தால் 4 கோடி பணத்தை செலுத்துங்கள் என்கிறது,....ஆகவே பணக்காரர் செய்யலாம்,...ஏழைகள். செய்ய முடியாது
3 weeks ago
அப்படி வாக்கு வங்கியாக இல்லை. ஒரு 5% வாக்காளருக்கு எமது பிரச்சனை பத்து முக்கிய பிரசனையில், 10 வது பிரச்சனை. அந்த வாக்காளரை கவரவும், நிஜமாகவே சில தலைவர்கள் எம் மீது கொண்ட கரிசனையுமே இப்படி பேச காரணம்.
3 weeks ago
மூவரும், கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி, அவர் இறந்த பின் இரெண்டாம் தாரம் தயாளு, மூன்றாவது துணைவி இராஜாத்தி. இந்த 3 வரில் ஒருவரும் இன்னொரு மனிதனின் மனைவி அல்ல. ஆகவே நஸ்ட ஈடு என்ர கதைக்கு இடமில்லை.
3 weeks ago
இதுகளையெல்லாம் சட்டம் போட்டு திருத்த முடியாது, அதுகளாய் திருந்தினாலொழிய. சட்ட ஓட்டைகளுக்குள் புகுந்து விளையாடுங்கள்.
3 weeks ago
வெளிநாட்டில் ஒளிந்திருக்கும் சண்டியர்களை இழுத்து வருகிறார்கள், இவர் இவ்வளவு காலமும் ஒளித்திருந்துவிட்டு இந்நேரம் பார்த்து கிளம்புகிறார். தலைவனே கிளம்பும்போது, இவர்கள் கூலிகள் என்ன செய்வது?
3 weeks ago
3 weeks ago
கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை என்பதும், சீமானுக்கு கவர் எடுக்க இனிமேலும் முடியவில்லை, ஆகவே இப்படி ஒரு கருத்து என்பது புரிகிறது. ஆனால் உங்களை போல் கண்மூடித்தனமாக நான் யாரையும் ஆதரிப்பதில்லை. ஒரளவு நியாயமான திராவிட, தமிழ் தேசிய சக்தி, அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வரவேண்டும் என்பது 2009 ற்கு முன்பே என் அவா. கனவு. அதை விஜை நிறைவேற்ற கூடும். ஆகவே வரவேற்கிறேன். அவரும் சீமான் போல் பெட்டி… அல்லது கமல் போல் ராஜ்யசபா சீட்டுக்கு விலை போனால்…அவரையும் விமர்சிப்பேன். பிகு திமுக, அதிமுக, காங்கிரஸ் ஓடு விஜை கூட்டு வைக்கலாம். அது அரசியல் ….இவர்கள் அரசியல் எதிரிகள். ஆனால் கொள்கை எதிரி என அறிவித்த பாஜகவோடு சேர்ந்தால், அல்லது ஆர் எச் எஸ் சுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க பெரியாரை விமர்சனம் செய்வது என இறங்கினால்…வெளுவை நிச்சயம்.
3 weeks 1 day ago
இந்த்த தேர்தலில் விஜை வெற்றி பெறுவார். தோற்றாலும் ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும்.கவலை வேண்டாம்.அடுத்த கமல்.
3 weeks 1 day ago
மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் தமிழ்த்தேசியம்.மரங்கள்>மலைகள்>இயற்கைவிவசாயம்>ஆடுமாடுவளர்ப்பு நீர்லோண்மை>ஆண்பெண்சமத்துவம்>கோவில்களில் தமிழில் குடமுழுக்கு>அனத்து இடங்களிலும் தமிழுக்கு முன்னுரிமை>ஆரியம்திராவிடத்தித்தின் முகமூடியைக் கிழித்தல்.வாக்குக்கு பணம்கொடுக்காமை கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டிஎன்று விஜை உட்பட எந்த அரசியல்வாதிகளும்பேசாத விடயங்களை நாதகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானும் செய்கின்றனர்.அதை விட்டவிட்டு விட்டீர்கள்.கச்ச தீவை இலங்கைக்கு கொடுத்த கட்சியும் அதற்கு மெளனமாக சம்மதம் கொடுத்த கட்சியும் ஒரே கூட்டணியில் இருக்கின்றனர். நீட்டுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டு விட்டோட் ஆட்சிக்கு வந்ததும் முதல்கையெழுத்து நீட்டை விலத்துவதற்கு என்று சொல்லிவிட்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பது. அரசியல் மேடைகளில் கவர்ச்சிப் பெண்களின் குத்தாட்டம்> காசு கொடுத்து கூட்டத்துக்கு ஆள் பிடிப்பது.குடும்ப அரசியல்>இப்படித்தில்லுமுல்லுகள்>எதிர்க்கட்சிகள் மீது ஊடகங்களை வைத்து பொய்ப்பிரச்சாரம் செய்தல். எதிர்க்கட்சிகளுக்கு ஊடக இருட்டடிப்பு.
3 weeks 1 day ago
6. பண்ணையாரும் பலரும் ----------------------------------------- 'அமெரிக்கா உங்களுக்குப் பிடித்திருக்கின்றதா.............' என்று கேட்டார் அவர். மிகவும் தயக்கத்துடனேயே கேட்டார். நான் யார் என்று அவருக்கு கைகொடுத்து அறிமுகப்படுத்திய பின்பே கேட்டார். அவர் யார் என்ற விபரங்கள் முன்னமே எனக்கு ஓரளவு சொல்லப்பட்டிருந்தது. இதே கேள்வியை சில சில மாற்றங்களுடன் என்னிடம், தயக்கத்துடன், ஆரம்பிக்கும் நாலாவது மனிதர் இவர். சிட்னியில் ஒரு பல்கலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றார். 'பிடித்தது, பிடிக்கவில்லை என்றில்லை.............. பழகிவிட்டது. பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, வளர்ந்து விட்டார்கள்............' என்றேன். அவர் சில பெயர்களைச் சொல்லி, அவர்களின் காணொளிகளை டிக்டாக்கில் பார்த்தது உண்டா என்று கேட்டார். டிக்டாக்கில் இதுவரை நானறிந்து ஒரு காணொளி தன்னும் நான் பார்த்ததில்லை. அதை அப்படியே சொல்லுவது மரியாதை இல்லை என்று நினைத்து, நான் அவை எதுவும் பார்த்ததில்லை என்றேன். அவர்கள் எல்லோரும் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகாவும் இருப்பவர்கள் என்றார். அவர் சொல்லிய பல்கலைக் கழகங்களின் பெயர்களை அறிந்திருக்கின்றேன், ஆனால் இந்த டிக்டாக்கில் வரும் பேராசிரியர்களில் எவரையும் நான் கேள்விப்பட்டது இல்லை. அமெரிக்கா செய்து கொண்டிருப்பது சுத்தமான அயோக்கியத்தனம் என்பதே அவருடைய உரையாடலின் சாரம். இதற்கு முன்னர் அமெரிக்கா பிடித்திருக்கின்றதா என்று கேட்ட மற்ற மூவரும் கூட அதே சாரத்தையே சொல்லியிருந்தார்கள். மற்ற மூவரும் அமெரிக்கா அழிந்து விடும் என்றும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அமெரிக்கா அழிந்தால் அது உலகத்திற்கு பெரும் பாதிப்பாக முடியும் என்று இவர் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய தமிழ் வழக்கு மலையக மக்களின் தமிழ் போன்று இருந்தது. இடையிடையே வந்து போகும் சுத்தமான முழு ஆங்கில வசனங்கள் அவர் நிச்சயம் ஆங்கில வழியில் கல்வி கற்ற ஒருவர் என்பதைக் காட்டியது. ரஷ்யாவின் நியாயங்களைச் சொன்னார். சீனாவின் முன்னேற்றங்களை வரிசைப்படுத்தினார். இந்தியா வல்லரசாகும் என்றார். நான் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக 25 வருடங்களின் முன்னேயே விண்ணப்பித்து இருந்தேன் என்று இடையில் சொன்னேன். அந்தச் சூழ்நிலையை இலகுவாக்க இப்படிச் சொல்வது எனக்கு ஒரு தேவையாக இருந்தது. நாங்கள் உண்மையிலேயே ஒரு காலத்தில் விண்ணப்பித்தும் இருந்தோம். அதன் பின்னர் அவர் கொஞ்சம் தணிந்தார் என்று தான் சொல்லவேண்டும். அவர் மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் படிக்க வந்து, மீண்டும் மலேசியா போய், பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து, நிரந்தரமாகக் குடியேறியதாகச் சொன்னார். பூர்வீகம் யாழ்ப்பாணம். 'புயலிலே ஒரு தோணி' வாசித்திருக்கின்றீர்களா என்று கேட்டேன். அது என்ன என்பது போல பார்த்தார். நல்ல ஒரு தமிழ் நாவல், கதையின் பெரும் பகுதி மலேசியாவிலேயே இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நடக்கின்றது என்றேன். இப்பொழுது அவர் பார்வையில் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. இந்த ஊர் நூலகத்திலேயே அந்த நாவல் உள்ளது என்றேன். அமெரிக்கா மீதும், அதிபர் ட்ரம்பின் அதிரடியான நடவடிக்கைகளின் மீதும் கடுமையான ஒரு பார்வை உலகெங்கும் எம் மக்கள் எல்லோரிடமும் இருக்கின்றது போல. கனடாவிலும் நான் இதே போன்ற கடுமையான எதிர்வினைகளைக் கேட்டிருக்கின்றேன். இதில் உள்ள ஒரு முரண்பாடு என்னவென்றால், எனக்கு தெரிந்து இன்று எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் பலரும் அமெரிக்க தேர்தலின் முன்னர் அதிபர் ட்ரம்பிற்கு ஆதரவாகவும், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகவும் கருத்துகள் சொல்லிக் கொண்டிருந்தவர்களே. இவர்கள் என்ன மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிந்தார்களோ தெரியவில்லை, ஆனால் இன்றைய அமெரிக்க அதிபரால் மிகவும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெரிந்தது. நான் தனிப்பட்ட ரீதியில் ஏமாற்றப்படவில்லை. அவர் பதவியேற்ற அன்றே நான்கு வருடங்களிற்கும் தயாராகவே இருந்தேன். பொதுவாக பலவீனமானவர்களே மிகவும் பலசாலி போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியானவர்களை மக்கள் ஏன் தலைவர்களாக தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதன் அடிப்படையே அது தான் போல. கூட்டமாக அன்றாடம் தலைப்பு செய்திகளை உண்டாக்குகின்றார்கள். வெற்றி, வெற்றி என்று முழங்குகின்றார்கள். பின்னர் அந்தச் செய்தி அப்படியே கைவிடப்படுகின்றது. அடுத்த நாள் வரப் போகின்ற புதியதொரு தலைப்பு செய்திக்கு தயாராகின்றார்கள். சிட்னியின் அந்த புறநகர்ப் பகுதியில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் புதிதாக, கடந்த ஐந்து வருடங்களுக்குள், கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றில் குடியிருப்பவர்களில் நூறு வீதமானவர்களும் இந்திய மக்கள் போன்றே தெரிகின்றது. இவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்குள் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வந்தவர்கள் போல. அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டிக் கொள்வதற்கு அரசாங்கம் கொடுக்கும் அனுமதி தனித்தனி வீடுகளை ஒரு தெருவிலும், தெருவின் அடுத்த பக்கத்தில் அல்லது அடுத்த தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டவும் அனுமதிக்கின்றது. இது அங்கே வீடுகளில் குடியிருப்பவர்களுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பவர்களுக்குமிடையே உரசல்களை உண்டாக்குகின்றது. புதிய குடியிருப்புகளுக்கு ஏற்ப மற்ற புதிய உட்கட்டமைப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை. பிரதான வீதிகள், பாடசாலைகள், வணிக வளாகங்கள், நூலகங்கள், பூங்காக்கள் என்று எந்த வசதிகளும் இந்த பெருக்கத்துக்கு ஈடாக புதிதாக உருவாக்கப்படவில்லை. இதுவும் ஏற்கனவே அங்கே இருப்பவர்களுக்கும், புதிதாக குடிவருபவர்களுக்குமிடையே பிணக்குகளை உண்டாக்குகின்றது. சட்டம், ஒழுங்கு, நாகரிகம் கெட்டுப் போகின்றது என்று புதியவர்களை குற்றம் சாட்டுகின்றார்கள். பல வருடங்களின் முன், லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்கள் சில இலங்கை தமிழர்களுடன் சேர்ந்து எம்மவர்களின் வீடுகளில் திருடுகின்றார்கள் என்ற அபிப்பிராயம் எம்மவர்களிடையே இருந்தது. எந்த வீடுகளில் என்ன விழா எப்போது நடக்கின்றது என்ற தகவலையே எம்மவர்களில் சிலரே அவர்களுக்கு கொடுக்கின்றார்கள் என்றனர். விழாக்களில் அணிவதற்காக வங்கிகளிலிருந்து வெளியே வரும் நகைகளை திருடுவதே அவர்களின் இலக்கு என்றனர். பின்னர் இலங்கையிலிருந்து வேறு வழிகளில் சிட்னி வந்த இளைஞர்கள் மீது வேறு விதமான குற்றங்களைச் சொன்னார்கள். சில இடங்களுக்கு பாதுகாப்பாக போய் வரவே முடியாதிருந்ததாகச் சொன்னார்கள். இன்று புதிதாக குடிவரும் இந்தியர்கள் மீது எல்லோரினதும் கவனங்கள் திரும்பியிருக்கின்றன. இந்தப் புதிய அபரிதமான குடிவரவால் வீடுகளின் விலைகள் ஏறிக் கொண்டு போவதைப் பற்றி பேச்சும் இருக்கின்றது. பல தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இந்திய மாணவர்களின் ஆதிக்கம் பற்றிய ஆதங்கமும் இருக்கின்றது. எதிர்காலத்தில் எங்களின் பிள்ளைகளுக்கு சரியான வேலைகள் கூட கிடைக்காமல் போய் விடக் கூடும் என்று ஒருவர் சொன்னார். இப்படி பல காரணங்களாலும் புதிதாகக் குடியேறுபவர்களுக்கு எதிராக போராட்டங்கள் மெதுமெதுவாக ஆரம்பித்துள்ளன. எம்மக்களின் பலரும் இதற்கு ஆதரவாக உள்ளனர். ஆஸ்திரேலியாவையும், சிட்னியையும், எம்மக்களையும் ஒரு கணம் மறந்து விட்டு, அமெரிக்காவையும், அதிபர் ட்ரம்பையும், அவரின் ஆதரவாளர்களையும் நினையுங்கள். இந்த விடயத்தில் ஏதாவது வேறுபாடுகள் இருக்கின்றதா?
3 weeks 1 day ago
கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே
3 weeks 1 day ago
3 weeks 1 day ago
அப்படியான ஒரு வாக்கு வங்கி பிரபாகரனுக்கு இருப்பதால் தான் போலும், உண்ணாவிரத நாடகமாடிய கருணாநிதியின் திமுகவும், புலிகளை வெளிப்படையாகவே பயங்கரவாதிகள் என்று கூறிய ஜெ யின் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெறுகின்றன என நினைக்கிறேன்😂!
3 weeks 1 day ago
நிச்சயமாய் ஒருத்தரின் உதவி இன்றி இவ்வளவு தூரம் பயணிப்பது என்பது அதிசயம் .
3 weeks 1 day ago
டிசம்பர் 31க்குள் பொதுப் போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற வேண்டும் - பிமல் ரத்நாயக்க 23 Sep, 2025 | 03:52 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பொது பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து சாரதிகளும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட பொது போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரத்தை சரியான முறையில் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) காதர் மஸ்தான் எம்.பி. 27 2இன் கீழ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பொது பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து சாரதிகளும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட பொது போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரத்தை சரியான முறையில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்கு தேவையான வசதிகள்செய்துகொடுக்கப்படும். அதேபோன்று பாடசாலை வாகனங்கள், காரியாலய வாகனங்கள், பஸ் வண்டிகளை பரிசோதனை செய்யுமாறு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பரிசோதகருக்கு ஆலாேசனை வழங்க இருக்கிறோம். எல்லையில் இடம்பெற்ற மோசமான பஸ் விபத்தின் விசாரணை அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறோம். அதனை யாருக்கு வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள முடியும். இந்த விசாரணை அறிக்கையில் பல விடயங்கள் வெளிப்பட்டுள்ளன. அதனால் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த நாங்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக மலையக பகுதிகளில் வளைவு பாதைகளில் அங்கு பாதுகாப்பு வெலி அமைப்பதற்கு ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கி இருக்கிறோம். அதேபோன்று அனைத்து புகையிரத நிலையங்களிலும் விசேட தேவையுடையவர்கள் பயணிப்பதற்கு வசதி செய்து கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதுதொடர்பில் நாங்கள் எமது கொள்கையை நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கிறோம். அதன் பிரகாரம் புகையிரத நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு விசேட தேவையுடைவர்கள் பயணிக்க முடியுமான வசதிகளை மேற்கொள்வோம். அதேவேளை, 2020 ஆம் ஆண்டும் 5.2 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பபடடுள்ளன. அதன் மூலம் மொத்த வருமானம் 3.0 பில்லியன் ரூபாவாகும். 2021இல் 5.5 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதன் மொத்த வருமானம் 3.2 பில்லியன் ரூபாவாகும். அதேபோன்று 2022இல் 5.5 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.அதன் மொத்த வருமானம் 3.3 பில்லியன் ரூபாவாகும். 2023இல் 5.7 மில்லியன் வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் கிடைக்கப்பெற்ற மாெத்த வருமானம் 4.3 பில்லியன் ரூபா. 2024இல் 5.799 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன் 4.8 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது. அத்துடன் வாகன புகை வெளியேற்ற பரிசோதனைகளின்போது அரச வாகனம் தனியார் வாகனம் என பிரித்து கணக்கிடப்படுவதில்லை, பொதுவாக வாகனங்களின் எண்ணிக்கையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2024இல் 4565 இராணுவ வாகனங்கள் புகை வெளியேற்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றார். https://www.virakesari.lk/article/225860
3 weeks 1 day ago
இது தான் செய்தி கண்ணில் பட்டதும் நினைவுக்கு வந்தது. (மறுவளமாக, அமெரிக்காவின் கபட தாக்கும் / குண்டுவீச்சு விமானங்கள் குறிப்பிட்ட உயரத்துக்கு கீழ் இறங்குவதை தவிர்ப்பது, ஏனெனில் அந்த உயரத்துக்கு மேல் உள்ள மிக குறைந்த வெப்பநிலை (குளிர்), ராடார் ஐ உறுஞ்சும் மற்றும் தெறிக்க வைக்கும் பூச்சை பாதுகாப்பதால். ரேடார் அலைகளின் சக்தியை உறுஞ்சுவது பூச்சில் உள்ள மூலக கூறுகள் ரேடார் அலையை வாங்கி அதிர்ந்து, ரேடார் அலை சகத்தியை வெப்பசக்தியாக மாற்றுவதால், அனல் சுற்றுப்புறசூழலின் விவெப்பநிலை மிக குறைவாக இருக்கும் போது , ரடர் அலையினால் விமானத்தில் அதன் சுற்றுப்புறத்தில் உருவாகும் வெப்பமமும் தணிக்கப்படும், அதனால் பூச்சை ரேடார் அலை பாதிப்பது மிக குறைந்த சாத்தியக்கூறுகள். அது குறிப்பாக, வெப்பரேகை ( heat signature) உருவாகுவதை தவிர்க்கும், இது முக்கியம் ஏனெனில் , வெப்பரேகை உருவாக்கினால் , அப்படியான heat signature தேடி வரும் ஏவுகணையால் விமானம் குறிவைக்கப்படலாம்) இதை சொல்வதன் காரணம், அவ்வளவு வெப்பநிலை மிக குறைவு (அதாவது குளிர்). எவ்வாறு சிறுவன் குளிரில் உறையாமல் இருந்தது என்பது ஆச்சரியம். மற்றது உயரத்தில் ஒட்ஸிசன் பற்றாக்குறை.
Checked
Wed, 10/15/2025 - 18:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed