புதிய பதிவுகள்2

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

1 month 3 weeks ago
காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1099335105203292 👈 ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழியையும் பார்வையிட்டு சென்றிருக்கலாம்.😔 யாழிலிருந்து செம்மணி வீதியூடாக ஜனாதிபதி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்றபோது காணொளி - யாழ்.தீபன்

16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டக் குழாத்தில் மன்னார் வீரர்கள்

1 month 3 weeks ago
02 Sep, 2025 | 12:51 PM சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட அணியும் பங்குபற்றவுள்ளது. இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட திறன்காண் தேர்வின்போது 16 வயதுக்குட்பட்ட பூர்வாங்க இலங்கை பாடசாலைகள் குழாத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். கெஸ்ரோன், கே. ஜெனிஸ்ரன் ஆகிய இருவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். திறன்காண் தேர்வின்போது அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இம் மாதம் 20ம் திகதியிலிருந்து 28ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இப் போட்டிக்கான மேலதிக பயிற்சிகள் கொழும்பில் இம் மாதம் 4ம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது. இம் மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வி கற்றுவருகின்ற நிலையில் இந்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224010

சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி

1 month 3 weeks ago
சூடானில் ஒரு கிராமத்தையே சூறையாடிய பாரிய நிலச்சரிவு; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 02 Sep, 2025 | 08:05 AM சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரே ஒருவர் மாத்திரமே உயிர்தப்பி இருக்கிறார். சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை இராணுவ படைக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இரு தரப்பினர் இடையே கடும் யுத்தம் இடம்பெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் அப்பாவி மக்கள் உள்பட இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். மோதலை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. உள்நாட்டு போரால் கோடிக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர். இந் நிலையில், சூடான் விடுதலை இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மர்ரா மலையில் உள்ள டார்பர் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதியில் திடீரென பாரிய நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி, 1000 பேர் பலியாகி இருக்கின்றனர். ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். இந்த தகவலை சூடான் விடுதலை இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடும் சேதத்தை சந்தித்துள்ள இப்பகுதியில் சடலங்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ஐ.நா. சபை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கிராமமே முற்றிலும் தரைமட்டமாகி விட்டதாக சூடான் விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்தி வரும் அப்டேல்வாஹித் முகமது நூர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலச்சரிவில் கிராமமும், அங்குள்ள வீடுகளும் மண்ணில் புதைந்துள்ளன. ஏராளமான பெண்கள், குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கிராமமே முற்றிலும் அழிந்துவிட்டது. இவ்வாறு அப்டேல்வாஹித் முகமது நூர் கூறி உள்ளார். https://www.virakesari.lk/article/223982

யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!

1 month 3 weeks ago
கிளிநொச்சியில் விதை தென்னந்தோட்டம் ஜனாதிபதி அநுரவினால் ஆரம்பிப்பு 02 Sep, 2025 | 10:14 AM கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னந் தோட்டத்தை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை (02) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார். வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன. சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் துறைசார் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கடற்றொலில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/223989

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திறப்புவிழா கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை - வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

1 month 3 weeks ago
Published By: Vishnu 02 Sep, 2025 | 03:20 AM ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு மறுசீரமைக்கப்படுவது மக்களின் தகவல் அறிந்து கொள்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் என்பதுடன் அரச நிதி செலவிடப்படுவதன் வெளிப்படைத் தன்மையினையும் அதிகாரிக்கும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 1ஆம் திகதி திங்கட்கிழமை யாழிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் விளையாட்டுத்திடல்இ துறைமுகம் என்பவற்றின் ஆரம்பப் பணிகளை மேற்கொண்டார். அவரினால் கடந்த ஆட்சியாளர்களைப் போல் ஆரம்ப நிகழ்வுகளுக்கு பெரும் பணம் செலவிடப்படாமைஇ எளிமையான முறையில் மேற்படி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் நல்லாட்சித்தத்துவம் மீறப்பட்டுள்ளது. இவ்விடத்தில் திறப்பு விழாக் கற்களில் மக்களின் பணம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச நிதி என்பது மக்களின் பணம் ஆகும். அதனை தொகைகளைக் குறிப்பிடாது குறிப்பிட்டதனை நாம் அறிவார்ந்த பார்வையில் விசேடமான மாற்றம் என்று கூற முடியாது. அரச நிதியில் எவ்வளவு தொகை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படாமல் விடப்பட்டமை அரசின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது. நிதி செலவிடலில் தொகைகள் வெளியிடப்படும் போதே மக்களின் நிதி காத்திரமாகப் பயன்படுத்தப்ப்ட்டதா என பொதுமக்களால் விளங்கிக் கொள்ள முடியும். ஆகவே மக்கள் தகவல்களை பெறுவதற்கான வழிமுறையை இலகுபடுத்தவதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது கவலையளிக்கின்றது. பொது நிதி தொடர்பில் பொறுப்புச் சொல்வதற்கான அரசியல் பொருளாதார ரீதியானதும் நல்லாட்சியின் அளவு கோலுக்கான கல்விசார் அடிப்படையுமாகும். இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் திட்டங்களை ஆரம்பிப்பதும் பின்னர் கைவிடுவதும் சகஜமாகும். அவ்வாறான நிலைக்கு போதுமான நிதித்திட்டமிடல் இன்றி அபிவிருத்திகளை அரசியல் ரீதியில் ஆரம்பிப்பதும் ஒருகாரணமாகும். அடுத்து மேலதிக நிதியின்றியும் திட்டங்கள் தடைப்படுகின்றன. சில திட்டங்கள் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமையினால் தோல்வி அடைகின்றன. அவ்வாறான நிலையில் அப்படியாக தோல்வியடையும் கட்டுமாணங்கள் பற்றி கணக்காய்வு மேற்கொள்ளப்படும் அதேவேளை மக்களின் தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் முகங்கொடுக்க வேண்டும் என்பது சனநாயக சம்புரதாயம். ஆகவே ஜனாதிபதின் பெயர் குறிப்பிடப்பிட்டால் திட்டத்தின் வெற்றி தோல்விகள் பற்றி மக்கள் மதிப்பிடுவது இலகுபடுத்தப்படும். திட்டங்களின் வெற்றி தொல்விகளின் பொறுப்புக்கூறலை வரலாற்று ரீதியில் தலைவர்கள் பெறுவர்கள் என்ற நியதியை உணர்த்தும். ஆகவே தலைவர்கள் சரியான நிபுணத்துவத்துடன் செயற்படுவதற்கு அது வழிநடத்தும். ஆகவே இவைகள் ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்ட கற்களில் மீறப்பட்டுள்ளன. எனவே இதுபற்றி அரசாங்கம் கவனத்தில் எடுத்து அவ் திறப்புவிழக்கற்களின் அருகில் நிதி செலவு அல்லது ஒதுக்கம் பற்றி வெளிப்படுத்தி உதவவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/223980

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

1 month 3 weeks ago
கச்சதீவை தங்களுக்கு தரும்படி... ஈழத்தின் மருமகன் விஜய் கேட்கின்றார். இப்ப என்ன செய்யிறது. 😂 கச்சதீவினை மீட்டு தருமாறு பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் கோரிக்கை!

அழகான புத்தகக்கடை

1 month 3 weeks ago
மிகவும் அருமையான பகிர்வு ......... ! எனது குடும்பம் இங்கு வந்த புதிதில் பிள்ளைகள் சிறுவர்கள் . ......மகள் (8) மகன் (4) அவர்களை பாடசாலையில் சேர்த்திருந்தோம் .....ஒருநாள் அவர்களின் ஆசிரியை சொன்னார் இவர்களுக்கு சிறுவர்களுக்கான கார்டடூன் கதைகள் உள்ள புத்தகங்கள் வாங்கிக் கொடுங்கள் என்று சொல்லி தன்னிடமிருந்த ஓரிரு புத்தகங்களையும் தந்திருந்தார் . ...... நானும் ஜம்பமாய் நகரில் இருந்த ஒரு பெரிய புத்தகக் கடையில் அவர்களையும் அழைத்துக் கொண்டு போய் சில புத்தகங்களை வாங்கினேன், அவர்களும் எமது பெயர் விலாசங்களையும் எழுதிக்கொண்டு அனுப்பி வைத்தனர் . ..... பிறகு பார்த்தால் அக்கடையில் இருந்து மாதாமாதம் புத்தகங்கள் வீட்டுக்கு வரத்தொடங்கின . ..... 25 பிராங் , 50 பிராங் என்று குடுக்க வேண்டி இருந்தது . .....அதை நிறுத்துவதற்கு நான் பட்ட பாடு இருக்கே .....பின்பு எமது சோசியல் பெண்மணியுடன் சென்று சொல்லி அதை நிறுத்தி வைத்தேன் . .....! 😀

நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவு!

1 month 3 weeks ago
நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவு! நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் முடிக்க வேண்டும் என நீதிச் சேவைகள் ஆணைக்குழு (JSC) உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மேல்நீதிமன்ற நீதிபதிகள், அந்தந்த நீதிமன்றங்களுக்கு நிர்வாக ரீதியாக பொறுப்பாக இருப்பவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை அகற்றுவதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. உள்ளூர் ரீதியான விடயங்களை ஆணைக்குழு கண்காணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ் விடயத்தில் மாதாந்த முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரிப்பதும் தீர்ப்பதும் அனைத்து நீதிமன்ற ஊழியர்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு பொறுப்பாகும். மேலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறும் எந்தவொரு ஊழியருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. அண்மைக் காலங்களில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அவற்றின் தீர்வுகளை தாமதமின்றி வழங்குமாறு ஆணைக்குழு குறித்த அனைத்து நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1445684

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.

1 month 3 weeks ago
விநாயகனே வினை தீர்ப்பவனே வீட்டுத் தோட்டத்தில் நாயுடன் குஷாலாக வீற்றிருப்பவனே உன்னைப் பார்க்கையில் புத்தருக்கும் புன்முறுவல் ......... .! 🙏

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை!

1 month 3 weeks ago
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நவீன வசதியுடன் புதுப்பிக்க நடவடிக்கை! ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) உதவியுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ், மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய நவீன வசதியாக இந்த நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சு கூறியுள்ளது. இந்த திட்டத்திற்காக 1,395 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 15 மாத காலக்கெடுவிற்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே கேள்வி விலை மனு கோரல் அழைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேம்பாட்டுப் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியது. https://athavannews.com/2025/1445669

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 month 3 weeks ago
தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உத்தியோகபூர்வ பயணமாக ஜெர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி” எனக் குறிப்பிட்டார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனிக்கு சென்றுள்ள அவர், TNRising ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது, தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும், அதிகளவிலான தொழிற்சாலைகள், திறமையான மனிதவளங்கள் மற்றும் உயர் நகர்மயமடைந்த மாநிலமாகவும் இருப்பதை விளக்கினார். இந்த மாநாட்டில், 3,819 கோடிஇந்திய ரூபாய் மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஜெர்மனி பயணத்தில் மொத்தம் 7,020 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான 26 ஒப்பந்தங்கள், 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் தனது உரையில், ஜெர்மனியின் தொழில் நுணுக்கம், புதுப்பிப்பு திறன், கலையுணர்வு ஆகியவை தமிழ்நாட்டை ஈர்த்துள்ளது எனவும், “Made in Germany” தரச்சின்னமாக இருப்பது போலவே, “Made in Tamil Nadu” என்பதும் உலகளவில் தரத்திற்கான அடையாளமாக உருவாகிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் BMW, Daimler, Mercedes-Benz, Siemens, Bosch உள்ளிட்ட பல்வேறு ஜெர்மன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணு உற்பத்தி, தோல் மற்றும் ஆடைத் தொழில், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1445675

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ‘திராவிடர் இயக்க’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஸ்டாலின்!

1 month 3 weeks ago
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கக்கூஸில் கூட, பெரியாரின் படம் வைக்க வாய்ப்பு இல்லை. 😂

ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?

1 month 3 weeks ago
அமெரிக்க அழுத்தங்களுக்கு மத்தியில் ஜி ஜின்பிங் – புட்டின் பெய்ஜிங்கில் சந்திப்பு! அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அதிகரித்து வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். சீன நகரமான தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் இருவரும் கலந்து கொண்ட மறுநாளும், இரண்டாம் உலகப் போரின் 80 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பெய்ஜிங்கில் ஒரு பிரமாண்டமான சீன இராணுவ அணிவகுப்புக்கு முந்தைய நாளிலும் இந்த பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் “முன்னோடியில்லாத அளவில்” இருப்பதாக புட்டின் இந்த சந்திப்பின் போது பாராட்டினார். மேலும், அவர்களின் “நெருக்கமான தொடர்பு ரஷ்ய-சீன உறவுகளின் மூலோபாய தன்மையை பிரதிபலிக்கிறது” என்றும் கூறினார். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய தலைவருடனான ஒப்பந்தம் ட்ரம்பிற்கு எட்டாத நிலையில், ஜி இப்போது பெய்ஜிங்கில் புட்டினை வரவேற்றுள்ளார். திங்களன்று நடந்த உச்சிமாநாட்டின் போது ஜி மற்றும் புட்டின் மேற்கத்திய அரசாங்கங்களை விமர்சித்தனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் சீனாவில் ஜப்பானியர்கள் சரணடைந்த 80 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சீனாவின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை ஜி ஜின்பிங் புதன்கிழமை (03) நடத்த உள்ளார். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மட்டுமல்லாமல், ஒரு இராஜதந்திர ரீதியாக பெய்ஜிங்கின் சக்தியை சர்வதேச அரங்கில் முன்வைக்க ஜி ஜின்பிங் முயற்சிக்கும் நேரத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. https://athavannews.com/2025/1445680
Checked
Wed, 10/29/2025 - 02:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed