புதிய பதிவுகள்2

அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்!

2 months 3 weeks ago
அர்ப்பணிப்பு மிக்க முன்னுதாரணங்கள் தேவை! நிலாந்தன்! தமிழகத்தின் சர்ச்சைக்குரிய ஆன்மீகவாதியான அன்னபூரணி அம்மா யாழ்ப்பாணம் வர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதற்கு முகநூல் வாசிகள் பெரும்பாலும் எதிராகப் பதில் வினையாற்றி இருந்தார்கள். அதில் சிலர் கொலை வெறியோடும் பதில் எழுதியிருந்தார்கள். தமிழ்ச் சமூகவலைத்தளச் சூழல் என்பது தமிழ்ப் பண்பாட்டின் சீரழிவின் குறிகாட்டியாக மாறி வருகிறது. தனக்குப் பிடிக்காத ஒன்றை எதிர்க்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகள் தமிழ் முகநூல் வாசிகளின் பண்பாட்டுச் சீரழிவைக் காட்டுகின்றன. இவ்வாறு எழுதப்படும் கேவலமான, கீழ்த்தரமான, வன்மம் மிகுந்த, மற்றவர்களின் கவனத்தை வலிந்து ஈர்க்க முயற்சிக்கின்ற பதிவுகளைத் தொகுத்துப் பார்த்தல், அந்த நபர்களுக்கு ஏடு தொடக்கியவருக்கும் ஞானஸ்தானம் செய்த பாதிரியாருக்கும் அதைவிட அவமரியாதை கிடையாது. இதில் மிகச்சிறிய தொகையினர்தான் நாகரிகமாக பதிவுகளை போடுகிறார்கள். அன்னபூரணி அம்மாவுக்கு எதிரான விமர்சனங்களில் ஒரு விடயத்தைத் தொகுத்து விளங்கக்கூடியதாக உள்ளது என்னவென்றால், ஒர் ஆன்மீக வழிகாட்டிக்கு இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள் இவை என்ற அளவுகோல்களின் அடிப்படையில்தான் அவர் நிராகரிக்கப்படுகிறார். ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் அதே மகிமையான அளவுகோல்களுக்குள் பொருந்திவரும் ஞானிகள்,தவசிகள்,முனிவர்கள்,ஆன்மீக வழிகாட்டிகள், ஆதீனத் தலைவர்கள்… எத்தனை பேர் தமிழ்ச் சமூகத்தில் உண்டு என்பதுதான். அன்னபூரணியின் விளம்பரம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு மற்றொரு விளம்பரம் வந்தது. அது முதலில் பத்திரிகையில் வெளிவந்தது. பின்னர் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்தது. அது “நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனதில் துறவு வாழ்க்கைக்கு முன்வர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்…”என்று தொடங்குகிறது. அதினத்தின் புதிய குரு முதல்வரை தெரிந்தெடுப்பதற்கு சன்னியாசிகளாக வர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் அங்கே கூறப்பட்டுள்ளது. அதாவது சன்னியாசிகளுக்கு, துறவிகளுக்கு இன்டர்வியூ வைக்கும் ஒரு நிலை. சன்னியாசம் என்பதே உலக பந்தங்களைத் துறப்பது. பற்றுக்களை அறுப்பது. ஆசைகளைத் துறந்த ஒரு சந்நியாசி இன்டர்வியூக்கு வருவாரா? இன்டர்வியூ எதற்காக? ஒரு மடத்தின் குரு முதல்வர் பதவிக்காக. அப்படியென்றால் சன்னியாசிக்கு குரு முதல்வராக வரவேண்டும் என்ற ஆசை இருக்குமா? ஒரு மக்கள் கூட்டத்தின் பண்பாட்டுத் தலைநகரத்தின் குறியீடாகக் காணப்படும் ஓர் ஆதீனம் அதன் வாரிசுகளை உருவாக்கும் விடயத்தில் நிறுவனமயப்பட்ட ஆன்மீகத் தொடர்ச்சியை;துறவுத் தொடர்ச்சியை; தவத் தொடர்ச்சியைப் பேண முடியாமலிருப்பது என்? யாழ்ப்பாணம் ஒரு காலம் மகிமைக்குரிய சித்தர் பாரம்பரியத்தை கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்துச் சித்தர் பாரம்பரியம் எனப்படுவது நகர மையச் சித்தர் பாரம்பரியம். அது யாழ்ப்பாணத்தின் “பெரிய கடைத் தெருக் களின்” தாழ்வாரங்களில் செழித்தோங்கி வளர்ந்த ஒரு ஆன்மீகப் பாரம்பரியம்.அந்த சித்தர் பரம்பரையில் தோன்றிய சித்தர்கள் யாருமே காவி உடுத்ததில்லை என்று யாழ்.பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பா.அகிலன் கூறுவார். அதாவது யாழ்ப்பாணத்துச் சித்தர்களின் தனி அடையாளங்களில் அதுவும் ஒன்று. காவியையும் துறந்த சித்தர்கள். காவிக்கு பதிலாக சாதாரண வேட்டியோடு காணப்பட்டார்கள். இவ்வாறு தோன்றிய சித்தர் பாரம்பரியத்தின் கடைசி வாரிசாக மட்டக்களப்பை சேர்ந்த சன்னியாசி ஒருவர் இப்பொழுது சிவத் தொண்டன் நிலையத்தில் இருக்கிறார். அவரைப் போன்று வேறு சன்னியாசிகள் சமூகத்தில் இருக்கக்கூடும். உண்மையான சன்னியாசிகள் பிரபல்யமாக விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு அந்த ஆசை இருக்காது. ஆனால் அவர்களுடைய தவ வலிமை காரணமாக அவர்களை நோக்கி ஈர்க்கப்படும் மக்கள் அவர்களைப் பிரபல்யப்படுத்தி விடுவார்கள். தமிழ் மக்களுக்கு அது போன்ற தவ வலிமை மிக்க சன்னியாசிகள் தேவை. 2009க்குப் பின்னரான தமிழ் கூட்டு உளவியலை கையாள்வதற்கு அரசியல்வாதிகளால் மட்டும் முடியாது. மனநல மருத்துவர்களால் மட்டும் முடியாது. புத்தி ஜீவிகளாலும் படைப்பாளிகளாலும் மட்டும் முடியாது. அங்கே ஆன்மீக வழிகாட்டலும் தேவை. அது ஒரு கூட்டுக் குணப்படுத்தல் செய்முறை. 2009க்குப் பின்னரான ஈழத் தமிழர்களின் கொந்தளிப்பான கூட்டு உளவியலை கையாள்வதற்கு ஆன்மீகத் தலைவர்கள் அதிகம் தேவை.ஆனால் அவ்வாறான தலைவர்கள் பற்றாக்குறைவாக இருப்பதைத்தான் அவ்வாறான தலைவர்களுக்கு நேர்காணல் வைக்க வேண்டிய ஒரு நிலை வந்திருப்பதை மேற்படி பத்திரிகை விளம்பரம் நமக்கு உணர்த்துகின்றது. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால், இது யாழ்ப்பாணத்தில் நிலவும் துறைசார் வெற்றிடங்களைக் காட்டுகிறது என்றும் கூறலாம். அரசியலில் தொடங்கிய ஆன்மீகம்வரை எல்லாவற்றிலுமே வெற்றிடம் நிலவுகிறது. இவ்வாறான துறைசார் ஞானிகளுக்கு பற்றாக்குறை நிலவும் ஒரு சமூக,ஆன்மீகப் பின்னணியில்தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் தேங்கி நிற்கின்றது. தமிழ்ச் சமூகம் கொந்தளிப்பான கூட்டு உளவியலில் இருந்து விடுபட முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது. கூட்டுக் காயங்களிலும் கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் யாருடைய காலடியில் தமது பாரத்தை இறக்க முடியும் என்று கூறத்தக்க ஆன்மீக வழிகாட்டிகள் எத்தனை பேர் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் உண்டு? அல்லது இந்த மதபீடம் சொன்னால்,இந்த சமயத் தலைவர் சொன்னால் அரசியல்வாதிகள் அதைக் கேட்பார்கள் என்று கூறத்தக்க அளவுக்கு ஆன்மீக சக்தியும் நிறுவனப் பலமும் மிக்க எத்தனை மத நிறுவனங்களும் மத தலைவர்களும் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? ஈழத் தமிழர்களுக்கு இப்பொழுது தேவையாக இருப்பது அரசியலை ஒரு கூட்டுச் சிகிச்சையாக அணுகுகின்ற அரசியலை ஒரு கூட்டுக் குணமாக்கல் செய்முறையாக முன்னெடுக்கின்ற அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வழிகாட்டும் ஆன்மீகத் தலைவர்களும்தான். அவ்வாறான தலைவர்களும் துறவிகளும் மிகக்குறைவாக உள்ள ஒரு வெற்றிடத்தில் தமிழ் அரசியல்வாதிகள் யாருக்கும் பயப்படாத,யாருக்கும் பொறுப்பு கூறத் தயாரில்லாத ஒரு விபரீதமான நிலைமை வளர்ந்து வருகிறது. இன்னொரு புறம் சமூகச் சீர்கேடுகளும் பண்பாட்டுச் சீரழிவுகளும் பெருகி வருகின்றன. இப்படிப்பட்டதோர் ஆன்மீக,அரசியல்,சமூகப் பொருளாதாரப் பின்னணிக்குள் அண்மையில் வெளிவந்த க.போ.த. சாதாரண தர பரிட்சைப் பெறுபேறுகளில் வடக்கு பின்தங்கி விட்டது என்ற விமர்சனங்கள் பூதாகரமாக மேல் எழுகின்றன. அதனால் வடக்கின் மகிமை குன்றிவிட்டது என்று ஒரு பகுதியினர் புலம்பத் தொடங்கி விட்டார்கள்.ஆனால் இத்தனைக்கும் பிரதமர் ஹரிணி, பிள்ளைகளின் அடைவை தனிய பரீட்சைப் பெறு பேறுகளின் மூலம் மட்டும் அளவிட முடியாது என்பதனை மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் தன்னைக் கல்வி கேள்விகளில் சிறந்த ஒரு சமூகமாகக் கருதும் ஒரு மக்கள் கூட்டம் பரீட்சைப் பெறு பேறுகளை வைத்து தன்னை மதிப்பீடு செய்கிறது. ஆனால் அதைவிட வேறு பல விடயங்களில் சமூகம் தாழ்ந்து விட்டது என்பதைத்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட விளம்பரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இந்த வீழ்ச்சி அல்லது தாழ்ச்சி ஒன்று மற்றதுடன் தொடர்புடையது. அவற்றை தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அதனை சமூகத்தின் ஒட்டுமொத்த சித்திரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். அதற்கு தீர்வும் “கலெக்டிவ்” ஆனதாகவே இருக்க வேண்டும். அரசியலில் தொடங்கி எல்லாத் துறைகளிலும் வெற்றிடம் விழத் தொடங்கிவிட்டது.இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகளில் துறை சார் ஞானம் மிக்கவர்கள் அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் துறை போனவர்கள் பெரும்பாலும் சன்னியாசிகளைப் போலவே வாழ்வார்கள். தம்மை வெறுத்துப் படிப்பார்கள்;தம்மை ஒறுத்து உழைப்பார்கள். அவர்கள்தான் சமூகத்துக்கு முன்னுதாரணங்கள்.உலகில் தோன்றிய எல்லா மேதைகளின் கதைகளும் அர்ப்பணிப்புகளால் கட்டி எழுப்பப்பட்டவைதான். தத்தமது துறைகளில் அர்ப்பணிப்போடு சன்னியாசிகளைப்போல உழைக்கத் தயாரானவர்களால் மட்டும்தான் ஈழத் தமிழர்களை மீட்க முடியும். https://athavannews.com/2025/1439844

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

2 months 3 weeks ago
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்! யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை (21) ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்னதாக, விடயம் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ஆகியோரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ் நீதவான் நீதிமன்றம், அகழ்விற்கான இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இந் நிலையில், நாளை(21) முதல் 15 நாட்களுக்கு செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின், முதலாவது அமர்வு அகழ்வுப் பணிகளின் போது 65 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் என்பு கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டன. இதற்கிடையில், இந்த அகழ்வுப் பணி தொடர்பில் இறுதியாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, செம்மணி- சித்துப்பாத்தியில் குற்றச்செயல் இடம் பெற்றுள்ளதாக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439847

அரசியலில் நுழைவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை - எலான் மஸ்க் தெரிவிப்பு!

2 months 3 weeks ago
அரசியலில் நுழைவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை - எலான் மஸ்க் தெரிவிப்பு! அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் வேறு வழியே இல்லாமல், இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க், எனக்கு அரசியலில் நுழைவது என்பதில் சற்றும் விருப்பமில்லை. நான் ரொக்கெட் தயாரிக்கிறேன், கார்களை, கருவிகளை உருவாக்குகிறேன். என் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எதிலும் ஆர்வமில்லை. ஆனால், எப்போது, இந்த நாட்டின் அமைப்பு மிக மோசமாக உடைந்து போயிருக்கிறதோ, அப்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் நாட்டின் எதிர்காலத்துக்கு மோசமான ஆபத்துகள் காத்திருக்கும் என்பதால் வேறு வழியின்றி, அரசியல் கட்சியை தொடங்குவது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேன் எனவும் கூறியிருந்தார். https://athavannews.com/2025/1439823

வியட்நாமில் சுற்றுலாப் பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு!

2 months 3 weeks ago
வியட்நாமில் சுற்றுலாப் பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு! வியட்நாமில் சுற்றுலாப்பயணிகள் படகு ஒன்று புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 53பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வொன்டர் சீ என்ற படகே இவ்வாறு அனர்தத்திற்குள்ளாகியுள்ளது. ஹா லாங் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண தினமும் ஆயிரக்கண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்ற நிலையில் தலைநகர் ஹனோயில் இருந்து 53 சுற்றுலா பயணிகள் நேற்று பிற்பகல் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதன்போது, தென் சீன கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட புயல்காற்றினால் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்துள்ளனர். இதன்போது விரைந்து செயற்பட்ட அந்நாட்டு மீட்பு குழுவினர் கடலில் விழுந்தவர்களில் 11 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் ஐந்து பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இவ்விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் அனேகமானவர்கள் வியட்நாமியர்கள் என தெரியவந்துள்ளது. இதேவேளை, தலைகீழாக கவிழ்ந்த படகிற்குள் சிக்குண்டிருந்த 10 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1439820

குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் - காரைதீவு பிரதேச தவிசாளர்

2 months 3 weeks ago
20 JUL, 2025 | 11:24 AM குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுபவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடுவதற்கும், அதே போன்று குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். எனவே பிரதேச மக்கள் எங்களுடன் ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் பணியை மிகச் சிறப்பாக செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் அடிப்படையில் சனிக்கிழமை (19) காரைதீவு - 03 லெனின் வீதி பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் ஈடுபட்டனர். இதன்போது இங்கு கருத்து தெரிவித்த பிரதேச சபையின் தவிசாளர் பாஸ்கரன், எமது பிரதேசத்தில் உள்ள மக்கள் சட்ட விரோதமாக திண்மக்கழிவுகளை வீதிகளில் கொட்டுகின்ற இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இது எதிர்காலத்தில் எமது பிரதேசத்தில் சுகாதார சீர்கேடுகளை, சூழல் பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். எனவே, சுத்தமான, சுகாதாரமான சூழலையும் அழகான காரைதீவு பிரதேசத்தையும் உருவாக்குவதற்காக எங்களால் ஆன முயற்சிகளை செய்து வருகிறோம். எங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது போன்று எதிர்காலத்திலே வருகின்ற ஒவ்வொரு சனிக்கிழமையும் எமது பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் விடயத்தை மிகச் சிறப்பாக செய்வதற்கு நாங்கள் முயற்சிகள் செய்து வருகின்றோம். அதற்கான ஒத்துழைப்பை பொதுமக்கள் எங்களுக்கு தர வேண்டும். மாறாக, இந்த கேட்டுக்கொள்வதோடு, எமது பிரதேச சபையின் ஊழியர்கள் என்னோடு இணைந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/220440

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

2 months 3 weeks ago
20 JUL, 2025 | 10:41 AM (இராஜதுரை ஹஷான்) குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும், தாயின் குடும்ப வழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன என்று மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, குருணாகல் மாவத்தகம பகுதியில் கடந்த 17 ஆம் திகதியன்று பிறந்து இரண்டு நாட்களான சிசு ஒன்று வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூகத்துக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்க வேண்டிய பொறுப்பு மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு உண்டு. பெண்கள் தந்தையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் அல்லது பொறுப்பேற்க முடியாத நிலையில் குழந்தையை பிரசவிக்க நேரிட்டால் பாரதூரமான சுகாதார பாதிப்புக்கும், சமூக நெருக்கடிகளுக்கும் உள்ளாக நேரிடும். ஆகவே இவ்வாறான சம்பவங்கள் குறித்து அமைச்சுக்கு பாரியதொரு பொறுப்பு காணப்படுகிறது. பொறுப்பேற்க முடியாத நிலை மற்றும் உறுதிப்படுத்த முடியாத சூழல் ஆகிய காரணிகள் பெண்கள் அச்சமடைந்து இவ்வாறு தாம் பெற்ற குழந்தையை கைவிட்டுச் செல்கிறார்கள். மனிதர்களின் உளவியல் தொடர்புகளை தடுக்க முடியாது, சட்டமியற்ற முடியாது. இருப்பினும் அந்த உளவியல் ரீதியிலான தொடர்பில் பிரதிபலனாக பிள்ளைகளை பாதுகாப்பற்ற வகையில் விட்டுச் செல்லும் நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும்,தாயின் குடும்பவழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன. பெண்கள் பிள்ளை பெற்றவுடன் அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பெற்ற குழந்தையை வளர்க்க முடியாவிடின் பிறிதொரு தரப்பினருக்கு அந்த குழந்தையை கையளிக்கும் சட்டத்திலான நிறுவன கட்டமைப்பு நாட்டில் உள்ளது. நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்கான வசதிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வழங்கப்படும். குருநாகல் மாவத்தகம பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட சிசு தற்போது வைத்தியசாலை கண்காணிப்பில் ஆரோக்கியமாக உள்ளது. இந்த சிசுவின் தாயை தேடி விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தாயை கண்டுப்பிடித்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த தாய் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிடும் சமூக நிலையே காணப்படுகிறது. இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/220434

ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்

2 months 3 weeks ago
இந்த காணொளி இணையத்தில் காணப்பட்டது, தற்போதுதான் பார்த்தேஎன் (முதல் 5 நிமிடம்), உக்கிரேன் போரின் பரிணாமம் (அடிப்படை) பற்றியது என கருதுகிறேன், முழுவதுமாக பின்னர் பார்க்கவுள்ளேன். இவரரது மனைவி கிழக்கு உக்கிரேனியர் என கூறுகிறார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஜுலை 29 ஆரம்பம்

2 months 3 weeks ago
20 JUL, 2025 | 09:12 AM நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஜுலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையி, மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று சனிக்கிழமை (19) யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. யாழ். மாநகர முதல்வர், யாழ் மாநகர சபை ஆணையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது. குறித்த தீர்மானங்களின் படி, ஜுலை 27 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும். வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும். ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஆலய வீதித் தடைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமைபோல மாநகர சபையினால் வாகன அனுமதி அட்டை வழங்கப்படும். நிரந்தர தற்காலிக வியாபாரிகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உற்சவ காலங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. ஆலய வெளிவீதி சூழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. உற்சவ காலங்களில் ஆலய சூழலில் பக்தி கீதங்களை மாத்திரமே ஒலிபரப்பு செய்யமுடியும். உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கடவுளின் உருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. உற்சவ காலத்தில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்தல், வானூர்தியை பயன்படுத்தி பூ சொரிதல் மற்றும் வானவேடிக்கை நிகழ்வுகளை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. உற்சவ காலங்களில் ஆலய வெளிச் சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220419

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி!

2 months 3 weeks ago
இலங்கை ஒரு சர்வாதிகார நாடு என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு, மக்களின் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் அரச படைகளிற்கு எதிராக இலங்கை நீதித்துறையால் எதுவும் செய்ய முடியாதுள்ளது. முப்படைகளின் தலமை பொறுப்பு ஜனாதிபதியிடமே உள்ளது அதனால் இந்த அடிப்படை மனித உரிமை மீறலுக்கு ஜனாதிபதியே பொறுப்பாவார்.

தெற்கு சூடானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தவிர்க்குமாறு முன்னாள் தூதுவர் கனநாதன் பரிந்துரை

2 months 3 weeks ago
Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 11:01 AM தெற்கு சூடானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இலங்கையின் முயற்சி, அரசியல் தடைகள், விநியோகத் தடங்கல்கள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என தெற்கு சூடானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கனநாதன் தெரிவித்துள்ளார். எனவே, இந்த முயற்சியை இலங்கை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தடைகள், நம்பகத்தன்மையற்ற விநியோகச் சங்கிலிகள் மற்றும் சுத்திகரிப்பு இணக்கமின்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி, அத்தகைய நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை எரிசக்தி அதிகாரிகளை தூதர் கனநாதன் வலியுறுத்தினார். "எரிசக்தி பாதுகாப்பிற்கு பல்வகைப்படுத்தல் அவசியம் என்றாலும், இந்த கட்டத்தில் தெற்கு சூடான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது இலங்கைக்கு நடைமுறைக்கு ஏற்றதாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ சாத்தியமில்லை" என்று அவர் கூறினார். அமெரிக்கத் தடைகள் மற்றும் ஒழுங்குமுறை தடைகள் 2018 முதல், அமெரிக்கா அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான நைல்பெட் உட்பட குறைந்தது 15 தெற்கு சூடான் எண்ணெய் தொடர்பான நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அந்த நாட்டின் உள்நாட்டுப் போருக்குப் பொருளாதார ஆதாரமளிக்க வேண்டாம் என்பதற்காக விதிக்கப்பட்டன. தெற்கு சூடான் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்ய விரும்பும் எந்தவொரு நாடும் அல்லது நிறுவனமும் அமெரிக்க ஏற்றுமதி உரிமத்தைப் பெறுவது கட்டாயமாகும், இது அமெரிக்க டாலர்களில் பரிவர்த்தனைகளை சிக்கலாக்குகிறது மற்றும் கடுமையான இணக்கத் தேவைகளுக்கு உட்பட்டது. இத்தகைய சட்டப்பூர்வ அபாயங்கள் முக்கிய உலகளாவிய எண்ணெய் வர்த்தகர்கள் பொறுப்பை ஈடுசெய்ய குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் வழங்கப்படாவிட்டால் தெற்கு சூடானுடன் ஈடுபடுவதைத் தடுத்துள்ளன, என்று தூதர் கனநாதன் வலியுறுத்தினார். விநியோகச் சங்கிலி உறுதியற்ற தன்மை தெற்கு சூடான் ஒரு நிலத்தால் சூழப்பட்ட நாடு, மேலும் அனைத்து கச்சா எண்ணெய் ஏற்றுமதிகளும் சூடான் வழியாக போர்ட் சூடானுக்குச் செல்லும் ஒற்றைக் குழாய்வழியை நம்பியுள்ளன. இருப்பினும், தொடர்ச்சியான குழாய்வழித் தடங்கல்கள், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை உள்ளடக்கிய செங்கடல் மோதல் ஆகியவை விநியோக வழிகளை மிகவும் நிலையற்றதாக மாற்றியுள்ளன. சமீபத்திய மாதங்களில் பல முறை அசாதாரணச் சூழ்நிலை (force majeure) அறிவிப்புகள் சந்தை நம்பிக்கையை மேலும் அசைத்துள்ளன. ""நமது தேசிய இருப்புக்கள் குறைவாக இருப்பதாலும், நமது சுத்திகரிப்பு செயல்பாடுகளுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான கச்சா எண்ணெய் வரத்து தேவைப்படுவதாலும் இந்த கணிக்க முடியாத நிலை இலங்கைக்கு குறிப்பாக கவலை அளிக்கிறது," என்று கனநாதன் குறிப்பிட்டார். விநியோகம் பாதுகாக்கப்பட்டாலும், போர்ட் சூடான் வழியாக அனுப்புவதற்கு இராணுவமயமாக்கப்பட்ட மண்டலங்கள் மற்றும் வளர்ச்சியடையாத உள்கட்டமைப்பு வழிசெலுத்தல் தேவைப்படும் - இவை கப்பல் செலவுகளை உயர்த்தும் மற்றும் விநியோகங்களை தாமதப்படுத்தும் காரணிகள். சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்துடன் தர பொருத்தமின்மை தெற்கு சூடான் முதன்மையாக இரண்டு கச்சா எண்ணெய் கலவைகளை ஏற்றுமதி செய்கிறது: நைல் கலவை (அரை-இனிப்பு) மற்றும் டார் கலவை (கனமான, அமிலத்தன்மை). இரண்டில், டார் பிளென்ட் குறிப்பாக சிக்கலானது, அதிக மொத்த அமில எண் (2.1–2.4 TAN) கொண்டது, இது அத்தகைய தரங்களைக் கையாள வடிவமைக்கப்படாத சுத்திகரிப்பு உட்கட்டமைப்பிற்கு கடுமையான அரிப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது. இலங்கையின் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம், ஒரு நாளைக்கு 50,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்டது, லேசானது முதல் நடுத்தரமானது வரையிலான இனிப்பு கச்சா எண்ணெய் பதப்படுத்த அளவீடு செய்யப்படுகிறது. தெற்கு சூடானின் கனமான கலவைகளுக்கு இடமளிக்க, கணிசமான முதலீடுகள் தேவைப்படும்: துருப்பிடிக்காத உலோகங்களுடன் உபகரணங்கள் கலவை மற்றும் விலப்பொருள் நீக்கும் (desulfurization) உபகரணங்கள் மேம்பட்ட வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் செயலாக்க அமைப்புகள் “இந்த தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் தள்ளுபடி செய்யப்பட்ட கச்சா எண்ணெயிலிருந்து பெறப்பட்ட எந்தவொரு விலை நன்மையையும் நீக்கும்,” என்று கனநாதன் மேலும் கூறினார். பொருளாதார பரிசீலனைகள் மற்றும் மூலோபாய திசை இலங்கையின் அந்நிய செலாவணி இருப்புக்கள் அழுத்தத்தின் கீழ் இருப்பதாலும், உலகளாவிய எண்ணெய் விலைகள் நிலையற்றதாக இருப்பதாலும், தள்ளுபடி செய்யப்பட்ட ஆனால் சுத்திகரிக்க கடினமான கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தபட்ச பொருளாதார வருவாயை வழங்குகிறது. அதற்கு பதிலாக, தொழில்நுட்ப ரீதியாக இணக்கமான மற்றும் வணிக ரீதியாக பாதுகாப்பான நைஜீரியாவின் போனி லைட் அல்லது அரபு லைட் கலவைகள் போன்ற நிலையான, அனுமதிக்கப்படாத சப்ளையர்களிடமிருந்து இறக்குமதிகளைத் தொடர தூதர் கனநாதன் அறிவுறுத்தினார். தெற்கு சூடானின் கச்சா எண்ணெய் இலங்கைக்கு சாத்தியமானதாக இல்லாததற்கான முக்கிய காரணங்கள்: அமெரிக்காவின் செயலில் உள்ள தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நிலையற்ற விநியோகச் சங்கிலிகள் மற்றும் அடிக்கடி குழாய் தடங்கல்கள் தற்போதைய சுத்திகரிப்பு உட்கட்டமைப்புடன் இணக்கமின்மை இணக்கம் மற்றும் சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டிற்கான அதிக முதலீட்டு செலவுகள். இலங்கை நம்பகமான, அரசியல் ரீதியாக நிலையான சந்தைகளில் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் உள்நாட்டு சுத்திகரிப்பு திறனை நவீனமயமாக்குவதில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் - குறிப்பாக முன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டா சுத்திகரிப்பு நிலையம் போன்ற திட்டங்கள் மூலம். நமது எரிசக்தி எதிர்காலம் நிச்சயமற்ற தன்மையின் அடிப்படையில் அல்ல, பாதுகாப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும். https://www.virakesari.lk/article/220437

கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது; பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கிறது

2 months 3 weeks ago
வாழ்வாதார பிரச்சினையினை எதிர்கொள்ளும் மக்கள் பட்டினியாக இருக்க உல்லாச பிரயாணம் செல்பவர்களின் பிரச்சினை ஒரு பிரச்சினையே இல்லை, ஒரு கட்டத்தின் பின் இந்த பெரிய மீன்பிடி படகுகளுக்கு எதிராக சிறிய மீன்பிடி படகின் மூலம் மீன் பிடியில் ஈடுபடும் தனியார் இலங்கை மீனவர்கள் வறுமையின் அடிமட்டத்திற்கு செல்ல உள்ளார்கள், இதனை காலம் தாழ்த்துவதே தவறு, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடவில்லை இயற்கை வளங்களை அழிக்கும் இந்த உபகரனங்களை பிடித்து அழித்து விடுவதுடன், மிக அதிக தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதன் மூலம் இயற்கையினை பாதுகாப்பதுடன் எல்லை தாண்டிய பிரச்சினையினை தீர்க்கலாம். தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயுறும் வேறல்லவா? இன்று உலகம் முழுக்க இதே போலத்தான் அந்தந்த மக்களின் வளங்கள் சுறையாடப்பட்டு அவர்கள் வறுமைக்கோட்டிற்கு கிழே செல்கிறார்கள்.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி!

2 months 3 weeks ago
இராணுவ கண்காணிப்பின் கீழ் உள்ள பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்குமாறு மக்கள் கோரிக்கை! பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும் , நேர மட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால் , ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபட முடியவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கி இன்னும் உத்தியோகபூர்வ கடிதம் வழங்கப்படாமையால் , எந்நேரமும் ஆலயத்திற்கு செல்வதனை இராணுவத்தினர் தடை விதிக்கலாம் என்ற அச்சம் தமக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட கடந்த 27ஆம் திகதி அனுமதித்த இராணுவத்தினர் மீண்டும் 28ஆம் திகதி பாதுகாப்பு காரணங்கள் என கூறி ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்திருந்ததுடன் பின்னர் வியாழக்கிழமை முதல் ஆலயத்திற்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளனர். இதன்படி, ஆலயத்திற்கு மக்கள் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினரால் உத்தியோகபூர்வ கடிதம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்காதமையால் எந்நேரமும் பாதுகாப்பு காரணம் என கூறி ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் தடை விதிக்கலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் காணப்படுவதக்கவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை, தற்போது திருவிழா காலம் என்பதால், ஆலயத்திற்கு நேர கட்டுப்பாட்டுடன் அனுமதிப்பதனால் , திருவிழாவை சிறப்பாக செய்ய முடியாத நிலை காணப்படுகிறது எனவும் எனவே நேர கட்டுப்பாட்டை முற்றாக தளர்த்தி சுதந்திரமாக இராஜ இராஜேஸ்வரி அம்மனை வழிபட இராணுவத்தினர் அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். https://athavannews.com/2025/1439812

ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்

2 months 3 weeks ago
இஸ்ரேல் மட்டுமல்ல இந்த பிராந்தியத்தில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள், தமது நாட்டில் உள்ள இஸ்லாம் மதமற்ற மக்கள் மேல் ஒரு இன அழிப்பை காலம் காலமாக நடத்துகின்றன கூறப்படுகிறது, தற்போது சிரியாவில் அரச ஆதரவுப்படைகள் ட்ருஸ் இன மக்கள் மேல் ஒரு இன சுத்திகரிப்பினை மேற்கொள்கிறார்கள், இந்த ட்ருஸ் மக்களுக்கு இஸ்ரேல் ஆதரவாக உள்ளதாக கூறப்பட்ட போதும் எதுவும் செய்யாத நிலையில் மக்கள் மிக மோசமாக கொல்லப்படுகிறார்கள். லெபனானில் கிறிஸ்தவ பெரும்பான்மை நிலவிய காலத்தில் இதே போல் ஒரு இனசுத்திகரிப்பு மூலம் இஸ்லாமிய பெரும்பான்மையினை கொண்ட நாடாக லெபனான் மாறியுள்ளதாக கூறுகிறார்கள். உக்கிரேன் கூட கிழக்கு உக்கிரேனியர்களின் மீது மிக மோசமான அடக்குமுறையில் ஈடுபட்டவர்கள்தான். இந்த விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் சழைத்தவர்கள் இல்லை, இந்த மூளை இல்லாத மிருகங்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள்.

வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!

2 months 3 weeks ago
Kings Rent a Car எனும் பெயரில் ஒரு நிறுவனம் உள்ளது. உங்கள் சர்வதேச சாரதி அனுமதி பத்திரத்தை அனுப்பினால் போதும். விமானநிலையத்தில் இலங்கை சாரதி அனுமதி பத்திரத்துடன் வாகனமும் நிற்கும். இது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என நினைக்கின்றேன். இவர்கள் கட்டணம் நியாயமானது. வாகனத்தின் தரமும் பரவாயில்லை. https://www.kingsrentacar.com/ நான் பல தடவைகள் இவர்களிடம் வாகனத்தை வாடகைக்கு எடுத்துள்ளேன். நல்ல சேவை.

முன்னாள் எம்.பி.க்கள், ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் : அமைச்சர் சந்திரசேகர்

2 months 3 weeks ago
நல்லவேளை சம்பந்தர் தப்பிவிட்டார். ம், இத்தனை சௌகரியங்களையும் அனுபவித்துக்கொண்டே நாட்டை கொள்ளையிட்டவர்கள் சும்மா விடுவார்களா? இல்லை ஓய்வூதியத்துக்கு முன்னாலேயே இரண்டு மடங்காக சூறையாடிவிடுவார்கள். அரசியல்வாதிகளின் ஓய்வுபெறும் வயதையும் நிர்ணயிக்க வேண்டும்.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

2 months 3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 11 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 11 விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / பண்டுவாச[ன்] அல்லது 'பண்டுவாசுதேவ[ன்]' முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த விஜயன், தனக்குப் பின் ஆட்சி செய்ய ஒரு பிள்ளையும் இல்லாமல் இறந்தார். ஆனால், அவர் இறப்பதற்கு முன் தனது சகோதரரான சுமித்தாவிடம் தனது அரசை தொடர்ந்து ஆள இலங்கைக்கு வருமாறு செய்தி அனுப்பினார். என்றாலும் விஜயனின் புரோகிதரும், பிரதான அரசாங்க அமைச்சருமான உபதீச[ன்], விஜயனின் இறப்பின் பின்பாக, தன் பெயரில் உபதிஸ்ஸ நுவர எனும் ஒரு நகரத்தைக் கட்டி, இளவரன் பண்டுவாச[ன்] வரும் வரை சிறிது காலம் ஆட்சியில் இருந்தான். உபத்திஸ்ஸன் ஒரு சாலிக்கிராம பிராமணன் (Saaligrama Brahamin) என ஹம்பிர்ய் வில்லியம் கோட்ரிங்கன் (Humphry William Codrington / 11 November 1876 – 7 November 1942)) எழுதியுள்ள "இலங்கையின் சுருக்கமான வரலாறு [A Short History of Ceylon - 1926]" எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது புத்தமதம் அப்பொழுது இலங்கையில் இல்லை என்பதும் வெளிப்படையாகத் இதன் மூலம் தெரிகிறது. அப்படி என்றால் புத்தரின் இலங்கை வருகை, அதன் நோக்கம் மற்றும் புத்த சமயம் பரப்பவென புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட விஜயன் எல்லாம் என்னவாயிற்று? மகாவம்சத்தின்படி சுமித்தாவின் இளைய மகன் பண்டுவாசுதேவா இலங்கைக்கு, அந்த பொறுப்பை ஏற்க வந்தான். எனவே, இவன் இலங்கையின் முதலாவது அரச மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் விஜயனின் தாமிரபரணி இராச்சியத்திலிருந்து வடக்கே ஏழு அல்லது எட்டு மைல் தொலைவில், தற்கால மன்னார் மாவட்டத்தில், உபதீசனால் அமைக்கப்பட்டு இருந்த, உபதீச நுவாரா (Upatissa Nuwara) என்ற இடத்தில் இராச்சியம் அமைத்து, (இதனை விஜிதபுரம் என்றும் அழைப்பர்) அதன் மன்னரானார். ஆனால் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை 'பண்டுவாச' என்று பெயரிடுகிறது. மேலும் விஜயனுடன் இவன், எவ்வாறு தொடர்பு கொண்டவன் என்று எந்த குறிப்பும் பதியாததால், இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தனர் என்றும் வரலாற்றறிஞர்கள் இன்று வாதிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக விஜயன் பாண்டியனின் மகளை மணந்ததைக் குறிப்பிட்டு மீண்டும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால், பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர். உதாரணமாக, பாளி அல்லது பிராகிருதம் மொழியில் பண்டு என்பது பாண்டியனை குறிக்கிறது, வாச என்பது 'வாசி' யின் திரிப்பாகும், எனவே 'பாண்டியவாசி' என்றாகிறது, அதாவது பாண்டியன் ஆகிறது [Deepavamsa calls King Pandu Vasudeva (504-474 BC) as Pandu Vasa (a Pali or Prakrit equivalent of Pandya Vasa meaning one from the Pandyan country i.e., a Pandya by his nationality]. கி.மு 505 இல் விஜயன் வாரிசு இல்லாமல் இறந்தான். இவன் 'பாண்டியவாசி' என்பது மேலும் ஒரு வலுவான காரணத்தால் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. உதாரணமாக, விஜயன் தனது பட்டத்து ராணியை, தான் பிறந்த கலிங்கத்தில் இருந்து, எதோ பல காரணங்களால் தேடவில்லை, அவன் தென் இந்தியாவில் அமைந்த பாண்டிய நாட்டிலேயே தேடினான். ஆகவே இப்ப அரச வாரிசை எப்படி கலிங்கத்தில், தன் அரச குடும்பத்தில் தேடுவான்? கொஞ்சம் நடு நிலையாகச் சிந்தியுங்கள். எந்த காரணத்திற்க்காக தனது பட்டத்து மனைவியை கலிங்கத்தில் எடுக்க வில்லையோ, அதே காரணம் இப்பவும் அவனுக்கு இருக்கும். எனவே கட்டாயம் தன் மனைவியின் பாண்டிய அரச குடும்பத்தில் இருந்தே எடுத்திருப்பான். இராணி பாண்டிய நாட்டைச் சேர்ந்தவள் என்பதால், அவளின் பரிந்துரையும் அங்கு இருந்து இருக்கும். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதனால் தான் பண்டுவாசனின் வாரிசுகள் கூட அபயன் [Abhaya /பயமில்லாதவன்], பண்டு அபயன் [காபயன்] [Pandukabhaya], மூத்த சிவன், மகா சிவன் இப்படியான பெயர்களை காண்கின்றோம். மேலும் இலங்கைக்கு முன்னைய காலத்தில் பாண்டிய அரச நாடு இலகுவான தொடர்புடைய நாடாக இருந்தது. உதாரணமாக, வைகை நதியினூடாக வந்தால், அது மன்னாரை அடைகிறது. மன்னாரில் இருந்து அருவி ஆறு (Malwattu Oya) மூலம் பயணித்தால் அனுராதபுரம் அடையலாம். இதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். இவனுக்குப் பத்து ஆண் மக்களும், உம்மத சித்தா என்னும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். மூத்த மகன் அபய என்பவனாவான். இவனது இறப்பின் பின்னர் இவனது மூத்த மகன் அபய அரசனானான். Part: 11 / The important narrative about the consequent kings and the related affairs / 'Panduvasudeva' Vijaya ruled for thirty- eight years and died without any son to rule after him. He sent a message to his brother Sumitta prior to his death to come to take over his kingdom. Panduvasa came as per the Dipavamsa (Panduvasudeva as per the Mahavamsa). How Panduvasa is related to Vijaya is not given in the Dipavamsa. Panduvasudeva is the youngest son of Sumitta, the brother of Vijaya as per the Mahavamsa. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 12 தொடரும் / Will Follow

கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு

2 months 3 weeks ago
இப்படி எத்தனை அக்கினிச்சூளையை தாண்டி வந்தது நம் இனம்! கம்பன் வீட்டுக்கைத்தறியும் கவி பாடுமாம். ஆனால் இங்கு ஒரு இனவழிப்பை சந்தித்த இனத்தின் பிரதிநிதி, ஜானாதிபதி சட்டத்தரணி, அதை நிறுவுவதற்கு ஆதாரம் போதாதாம். அந்த இனத்தின் புதைகுழி என்று அடையாளம் கண்ட பின்னும் முன் கொண்டு சென்று நிஞாயம் தேட திறமையற்ற, நடக்கின்ற அனிஞாயங்களை தட்டிக்கேட்க, சுட்டிக்காட்ட திராணியற்ற, தனது சக உறுப்பினர்களை அதட்டவும் பயமுறுத்தவும் மட்டுமே பயன்படும் வக்கீல். எது நடக்கிறதோ இல்லையோ, அவர் எங்கு போனாலும் அணியும் கோட் சூட் ஆதாரம் அவர் ஒரு திறமையான சட்டத்தரணி என்று காட்டுவதற்கு. அரசியல்வாதியின் எடுபிடி, அரசியல்வாதி போல பேசுவதில்லையா? ஜனாதிபதியின் ஏவல், தன்னால் எதுவும் செய்ய முடியும் என பந்தா காட்ட முடியுமென்றால், ஓடி ஓடி வக்கீலை காக்க வக்காலத்து வாங்கும் கோசானுக்கு சட்டம் தெரிவதில் என்ன சிக்கல்?
Checked
Wed, 10/15/2025 - 18:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed