2 months 4 weeks ago
👍............... இதன் பின்னணி என்னவென்ற ஆர்வம் பல வருடங்களாகவே என் மனதில் இருக்கின்றது. அந்த நாட்களிலேயே, 80ம் ஆண்டுகளில், இப்படித்தான் நடந்தது. ஊரில் என்னுடைய வகுப்பில் சாதாரண தரத்தில் மிகத் திறமையாக சித்தி பெற்றவர்களில் பல பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். எங்களின் உயர்தரப் பரீட்சை முடிவுகளில் ஒருவர் கூட விதிவிலக்கில்லாமல் சக மாணவிகள் எல்லோரும் காணாமல் போனார்கள். மருத்துவர் ஆகப் போகின்றார், பொறியியலாளர் ஆகப் போகின்றார் என்று கூறப்பட்ட ஒரு சக மாணவி கூட அப்படி ஆகவில்லை. சாதாரண தரத்தில் நண்பனின் மகள் ஒருவர் 9 A பெற்றிருந்தார். அவர் ஊரில் உள்ள ஒரு பாடசாலையிலேயே படித்தார். அயலூரில் இருக்கும் மெதடிஸ் பெண்கள் கல்லூரி அல்லது வேறு எந்த பெரிய பாடசாலைக்கும் அவர் போகவில்லை. இந்த வருடம் அவருடைய உயர்தரப் பரீட்சை முடிவுகள் வந்தன. மிகவும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் ஊர் இணையதளங்களில் ஒரு செய்தியுமே வரவில்லை. சிறந்த பரீட்சை முடிவுகளை ஊர் இணையதளங்கள் உடனேயே போடும் காலம் இது. பின்னர் அவருடைய பரீட்சை முடிவுகள் மிகவும் குறைவு என்பது தெரியவந்தது. இன்னொரு தடவை முயற்சி செய்யுங்கள், கண்டிப்பாக நல்ல பெறுபேறுகள் கிடைக்கும் என்று பலரும் சொல்லியிருக்கின்றார்கள்.................
2 months 4 weeks ago
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு முஸ்லிம்களால் செய்யப்பட்ட படுகொலைகள் தொடர்பில் என்னுடைய பாரிய ஆவணக்கட்டை நீங்கள் மேலே வாசிக்கலாம் கீழே முஸ்லிம்களால் செய்யப்பட்ட வீரமுனை படுகொலை தொடர்பில் மக்களின் வாக்குமூலங்கள்: அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியம். தமிழர் தகவல் நடுவத்தின்
2 months 4 weeks ago
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
2 months 4 weeks ago
கரி ஆனந்தசங்கரி அவர்கட்கு திரிசங்கு நிலைதான் போல. இவை எல்லாம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விடயங்களே. ஆனால், கள நிலவரங்களை பார்த்தால் அவரை அசைக்கமுடியாது போல் உள்ளது. ஆட்டிப்பார்க்க மட்டுமே முடியும்.
2 months 4 weeks ago
தேசிய பாடசாலை ஒன்றில் பணிபுரிகின்றீர்கள் போல் உள்ளது.
2 months 4 weeks ago
உண்மை மதங்கள் அவசியமில்லை. சரி பிழை கண்டு பிடித்து அதற்கேற்ப செயல்பட வைக்கும் அறத்திசை காட்டி (moral compass) பலமாக இருந்தால் போதும் என்பது என் அபிப்பிராயம். இப்படியான அறத்திசைகாட்டியை, மத அமைப்புகளுக்குள்ளும் ஊக்குவிக்கும் முயற்சிகள் நடக்கின்றன என்பதன் ஒரு உதாரணமாகத் தான் யேசு சபைக் குருக்களைப் பற்றி எழுதினேன். சில சமயங்களில் மத அமைப்புகளின் உள்ளே இருந்து தான் விடயங்களை மாற்ற வேண்டும். உங்கள் அர்த்தநாரீஸ்வரர் பற்றிய கருத்தைக் கேட்டதும், சில ஆண்டுகள் முன்பு சத்குருவிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்வியும் அவரது பதிலும் நினைவுக்கு வருகின்றன. "ஏன் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது?" என்ற கேள்விக்கு அவரது பதில் "உலகில் இந்தியாவில் மட்டும் தான் ஒரு சதுர மைல் பரப்பளவில் மிக அதிகமான பெண் தெய்வங்கள் வழிபடப் படுகின்றன" என்பதாக இருந்தது. அர்த்தநாரீஸ்வரரைக் கடவுள் வடிவமாகப் பார்க்கும் இந்தியாவில் இடைப்பாலினருக்கு இருக்கும் இடர்கள் இது போன்ற ஒரு நிலை தான்.
2 months 4 weeks ago
2 months 4 weeks ago
கோவிந்தா! கோவிந்தா!😀
2 months 4 weeks ago
யாழ்ப்பாணத்து பனை வேலி அடைப்பு.
2 months 4 weeks ago
செம்மணி புதைக்குழி, அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை!-மனோ கணேசன். “செம்மணி புதைக்குழி விவகாரம் அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை ஆகும்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவினை தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது” ” இன்று, இலங்கையர் அரசு என கூறி, ஆட்சிக்கு வந்திருக்கும் அநுர அரசுக்கு அக்னி பரீட்சை. இதை கடந்து தம்மை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு இந்த நாட்டின் தலைவருக்கு இருக்கிறது. இது மட்டுமல்ல, தெற்கிலும் பல புதை குழிகள் இருப்பதாக ஆதாரங்கள் ஆங்காங்கே வெளிபட்டுள்ளன. அவற்றையும் ஆய்வு செய்து நீதியை நிலை நாட்டுங்கள். எங்களது நல்லாட்சியில் பல்வேறு காரியங்களை நாமும், வடகிழக்கு தமிழ் கட்சிகளும் நிர்ப்பந்தம் செய்து ஆரம்பித்தோம். ஐநா சபைக்கு கொண்டு போனோம். தீர்மானங்கள் நிறைவேற்றினோம். அரசியல் கைதிகளை கணிசமாக விடுவித்தோம். காணிகள் கணிசமாக விடுவித்தோம். காணாமல் போனோர் அலுவலகம், நஷ்ட ஈட்டு அலுவலகம், ஆகியவற்றை அமைத்தோம். யுத்த அவலத்துக்கு மூல காரணமான தேசிய இனப் பிரச்சினைக்கு “அதிகாரபகிர்வு” தீர்வை தேடி, புதிய அரசியலமைப்பு பணியை செய்தோம். அனைத்தையும் நான்கு ஆண்டுகளில் செய்து முடிக்க முடியவில்லை. முடியாது. ஆனால் நாம் நல்ல ஆரம்பத்தை தந்தோம். நாம் ஆரம்பித்த இந்த பணிகளை அப்படியே முன்னே கொண்டு செல்ல வேண்டியதே இந்த அரசின் கடமை. முதலிப் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளை அங்கே அனுப்புங்கள். அதை செய்யுங்கள் என நான் அநுர குமார திசாநாயக்கவை நான் கோருகிறேன்” இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439581
2 months 4 weeks ago
யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று! யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைலையில், இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனின் பங்கேற்புடன் இன்றைய தினம் (17) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாகவே குறித்த கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீபவானந்தராசா , ஜெய்சந்திரமூர்த்தி ரஜீவன், க. இளங்குமரன் , சிவஞானம் சிறிதரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அருச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் வீதி அவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம், வீடமைப்பு, சட்டம் ஒழுங்கு, கடற்றொழில், விவசாயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. https://athavannews.com/2025/1439557
2 months 4 weeks ago
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்! செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர். https://athavannews.com/2025/1439568
2 months 4 weeks ago
இந்தியாவில்... தடை செய்யப் பட்ட வலைகளை பயன் படுத்தி... கடல் வளத்தை அழித்த பின், அயல் நாட்டுக்கு வந்து மீன் பிடிப்பது எந்த விதத்தில் நியாயம். இப்பிடியான வலைகளை பயன்படுத்தாமல் இருக்க... இந்திய அரசு கவனம் செலுத்தாமல் இருந்து விட்டு, அல்லது லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டும் காணாமல் இருந்து விட்டு இப்போ... அயல் நாட்டிற்கு வந்து கடலை நாசம் அறுப்பது மாபெரும் குற்றம். இலங்கை கடற்படை... இப்படி வருபவர்கள் மீது, தயவு தாட்சண்ணியம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை தந்த நமது கடலை... நாசம் பண்ணுவதை அனுமதிக்க முடியாது.
2 months 4 weeks ago
தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை! தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ்வுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னட நடிகையான ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தைத் தனது உடலில் மறைத்துக் கடத்தி வந்த குற்றச்சாட்டிலே குறித்த நடிகை கைது செய்யப்பட்டார். இதை அடுத்து அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கணக்கில் வராத 2.67 கோடி ரூபாய் பணமும் , 2.06 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. இதேவேளை, தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அந்நாட்டு அமுலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும் குறித்த தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த ஓராண்டு சிறைத் தண்டனை காலத்தில் ரன்யா ராவுக்கு பிணை வழங்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439533
2 months 4 weeks ago
பிரேசில், சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்கப்படலாம்! -மார்க் ருட்டே எச்சரிக்கை. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படலாம் என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரேன் போரை நிறுத்தும் முயற்சியில், அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அடுத்த 50 நாட்களுக்குள் ரஷ்யா போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதில்லை என்றால், ரஷ்யாவுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நாடுகளுடன் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகளுக்கும் அமெரிக்காவின் secondary sanctions அமுல்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக மார்க் ருட்டே, அமெரிக்க செனட் உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் கூறியதாவது: ‘பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. போர்நிறுத்தம் ஏற்படாவிட்டால், இந்த நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும். எனவே, ரஷ்ய ஜனாதிபதி புதினை அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் ரஷ்யா சந்திக்கும் பாதிப்பை இந்நாடுகளும் சந்திக்க நேரிடும்‘ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439560
2 months 4 weeks ago
கோசான்... நான், பகிடிக்கு சொல்ல வில்லை. நீங்கள் வக்கீல் சம்பந்தமாக படித்திருக்கின்றீர்கள் எனது நீண்ட நாள் சந்தேகம். நீங்கள் சொல்லாட்டிலும்... குடுமி காட்டிக் கொடுத்து விடும். 😂
2 months 4 weeks ago
சும்மா கிடக்குது என்றால்... காவி உடுப்பை கடாசி எறிந்து விட்டு, கலியாணம் கட்ட வேண்டியதுதானே. காவியும் வேணும், காமமும் வேணும் என்று... இரு தோணியில் கால் வைக்கப் படாது கண்டியளோ.... 😂
2 months 4 weeks ago
2 months 4 weeks ago
இலங்கையரின் குடியேற்ற சர்ச்சை; பொது பாதுகாப்பு அமைச்சர் மீது நம்பிக்கையுள்ளதாக கனேடிய பிரதமர் தெரிவிப்பு! கனடாவில் தற்சமயம் சர்ச்சைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree)க்கான ஆதரவினை அந் நாட்டுப் பிரதமர் மார்க் கார்னி வெளிப்படையாக கூறியுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, அமைச்சராக வருவதற்கு முன்பு, கனடாவிற்குள் நுழைவதற்கு கூட்டாட்சி அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை அவர் ஆதரித்தார் என்ற அறிக்கை வெளியானதும் சர்ச்சைகள் எழுந்தது. இந் நிலையிலேயே பிரதமர் மார்க் கார்னி, கேரி ஆனந்தசங்கரி மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நீதி அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளராக ஆனந்தசங்கரி இருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த செந்தூரன் செல்வகுமாரனை நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவை இரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை ஆதரித்து கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். கனேடிய குடிவரவு அதிகாரிகள் செல்வகுமாரன், தமிழ்ப் புலிகள் என்று அழைக்கப்படும் தீவிரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்று தீர்மானித்த பின்னர் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செவ்வாயன்று (15) குளோபல் நியூஸ் செய்தி வெளியிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கையில் நீண்ட காலமாக சுதந்திரப் போரை நடத்தினர். மேலும் 2006 முதல் கனடாவின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளனர். கனடா எல்லை சேவைகள் நிறுவனம் செல்வகுமாரனை அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்ததன் அடிப்படையில் குடியேறியவராக நிராகரித்திருந்தாலும், ஆனந்தசங்கரி அவர்களின் முடிவை மாற்றுமாறு கேட்டுக் கொண்டார். 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், டொராண்டோவிற்கு குடிபெயர்வதற்கான அந்த நபரின் முயற்சியை ஆதரித்து ஆனந்தசங்கரி கனடா எல்லை சேவைகள் நிறுவனத்துக்கு கடிதங்களை எழுதினார். அதில் மிகவும் அண்மைய கடிதம் நீதித்துறை நாடாளுமன்ற செயலாளராக கேரி ஆனந்தசங்கரி இருந்தபோது எழுதப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில், இது குறித்து புதன்கிழமை (16) எஃகுத் தொழிலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தனது திட்டங்களை வெளியிட்டதன் பின்னர் உரையாற்றிய கனடப் பிரதமர் கார்னி, “பொது பாதுகாப்பு அமைச்சர் அந்த சூழ்நிலையின் விவரங்கள் குறித்து வெளிப்படையாக இருந்தார், மேலும் அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்று கூறினார். கடந்த மே 13 அன்று கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக ஆனந்தசங்கரியை கார்னி நியமித்திருந்தார். வெள்ளை மாளிகை வர்த்தகப் போரைத் தவிர்க்க, போதைப்பொருள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலுக்கு எதிராக கனடா தனது எல்லையை பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நம்ப வைக்கும் பொறுப்பு ஆனந்தசங்கரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மாதம் உலகத் தமிழ் இயக்கம் தொடர்பான முடிவுகளில் இருந்து ஆனந்தசங்கரி தன்னை விலக்கிக் கொண்டபோது அவர் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439541
2 months 4 weeks ago
Checked
Wed, 10/15/2025 - 06:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed