புதிய பதிவுகள்2

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week ago
முன்னாள் திமுக MLA சங்கரவள்ளியின் மகன் தான் நீதிபதியாம்.. அதனால் நியாயமா இருப்பார் என்று நம்புகிறேன். Sooriya Prakash ################# ################## நீதியரசர் இல்ல விழாவில் கலந்து கொண்ட நம்ம முதல்வர். நீதிதான் மறைந்தது. விஜய் மறையவில்லை அவரின் புகழ் பலமடங்கு ஏறிக்கொண்டுள்ளது. Er. K. Arumugam ################# ############### ############# மகா பிரபுவே வணக்கங்கள் பல.🙏🙂‍↕️ திருநெல்வேலிகாரன் ########################## எலி, ஏன்... ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது என்று பார்த்தேன். இப்படிப் பட்டவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். ஒரு கட்சிக்கு சார்பானவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.

சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு!

1 week ago
சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு! சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ள நிலையில் கடை உரிமையாளர் மிக்சருக்கு உரிய பணத்தை தருமாறு கேட்டபோது மிக்சரை வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது கடை உரிமையாளர் மீது மிக்சர் வாங்க வந்தவர்கள் கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சிங்காராவேல் தானவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1449571

6 குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்த இருமல் மருந்து!

1 week ago
இந்தியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு- தடைசெய்யப்பட்ட மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது! இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருமல் மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் பிரவீன் சோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்திலும், ராஜஸ்தானின் சிகாரி எனும் பகுதியிலும் கடந்த 15 நாட்களாக, 1 – 6 வயதுக்குட்பட்ட 11 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளன. குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர்கள் ‘கோல்ட்ரிப்’ மற்றும் ‘நெக்ஸ்ட்ரோ’ ஆகிய இருமல் மருந்துகளை உட்கொண்டமை தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பராசியாவில் உள்ள குழந்தை நல வைத்தியரான பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் குறித்த வைத்தியர் தடைசெய்யப்பட்ட குறித்த இருமல் மருந்தினை பரிந்துரைத்துள்ளார். இதேவேளை, மேற்குறித்த இரு மாநிலங்களிலும், இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகளை விற்பனை செய்ய முன்னதாகவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோல்ட்ரிப் மருத்தை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு வழக்குப் பதிவு செய்த நிலையில் தற்போது குறித்த மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1449568

காசாவில் குண்டுவெடிப்பை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டார்

1 week ago
ட்ரம்பின் அழைப்புக்கு மத்தியில் காசா மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குண்டு வீச்சுத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டு ஹமாஸ் அமைதிக்குத் தயாராக இருப்பதாக கூறி, அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் சனிக்கிழமை (04) காசாவில் இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களின் விளைவாக ஆறு பேர் உயிரிழந்தனர். உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, காசா நகரில் ஒரு வீட்டைத் தாக்கிய இஸ்ரேலிய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் நடந்த மற்றொரு தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ஹமாஸின் பதிலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை உள்ளடக்கிய ட்ரம்பின் காசா திட்டத்தின் முதல் கட்டத்தை “உடனடியாக செயல்படுத்த” இஸ்ரேல் தயாராகி வருவதாகக் கூறிய சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்தன. https://athavannews.com/2025/1449546

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'

1 week ago
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 01 பகுதி: 01 - ஒட்டாவாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை முதன் முதலில் “கடற்கரை அலைந்து திரிந்தோர்” (Beachcombers) ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதர்களே ஆகும். கடற்கரைகளைக் கடந்து, கடலின் வளங்களை உணவாகக் கொண்டு அவர்கள் மெதுவாக ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பின்னர் உலகின் பல பகுதிகளுக்குப் பரவினர் என்பது வரலாறு ஆகும். இதனால், மனித வரலாற்றின் முதல் “நெடுஞ்சாலை”யாக கடற்கரை அமைந்து இருந்தது. அதனாலோ என்னவோ, தாத்தாவும் தன் வெளிநாட்டில் பிறந்து வளரும் பேரப்பிள்ளைகளுக்கு அந்த பெருமை பெற்ற “நெடுஞ்சாலை” வழியாக இலங்கை சுற்றிலாவை ஆகஸ்ட் 2025 இல் ஆரம்பிக்க முடிவு செய்தார். ஆகஸ்ட் 11, 2025 அன்று, மூன்று சிறிய ஆய்வாளர்கள், தாத்தா கந்தையா தில்லையின் பேரப்பிள்ளைகள் - ஜெயா, கலை, மற்றும் இசை - கனடாவின் ஒட்டாவாவில் இருந்து விமானத்தில் தங்கள் தாத்தாவுடன், ஜெர்மனியின் ஊடாக, பறந்து சென்று, இலங்கையில் தரையிறங்கினர். “ஆஹா, இங்கே மிகவும் சூடாக இருக்கிறது, தாத்தா!” அவர்கள் பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ஜெயா முகத்தை விசிறிக் கொண்டாள். “ஏனென்றால் இது வெப்ப மண்டலப் பகுதி, என் அன்பே. கனடாவை விட இங்கு சூரிய ஒளி சற்று குறும்புத்தனமானது,” தாத்தா சிரித்தார். உலகில் கண்களைக் கவரும் இடங்களில் கடற்கரையும் ஒன்று எனலாம். கடற்கரையைப் பற்றி அறியாதவர் யாவரும் இருக்க மாட்டார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடற்கரைக்கு செல்வ தென்றால் மிகவும் பிடிக்கும். எனவே, ஒரு வாடகை வேனில் [Van] ஒரு நட்பு ஓட்டுநருடன், முதலில் கடற்கரை நகரமும் மற்றும் தலைநகரமான கொழும்புக்கு சென்று இருநாள் ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். எனவே பிரித்தானிய ஆளுநர் சேர் என்றி சியார்ச் வார்டு [ Governor of British Ceylon, Sir Henry George Ward (1797–1860)] என்பவரின் முயற்சியின் பலனாக 1859 ஆம் ஆண்டு உருவான காலிமுகத் திடலுக்கு (Galle Face Green) முன்னால் அமைந்த ஹோட்டல் ஒன்றில் தங்க முடிவு செய்தனர். சில்லென்ற கடல் நீர், இதமான தென்றல் காற்று, கடல் அலையின் ஓசை, கொஞ்சி விளையாடும் பறவைகள் என யாவும் தமக்கு மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும், பயணக் களைப்பையும் போக்கும் என்பதாலும் மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக களிக்கலாம் என்பதாலும், தாத்தா அந்த ஹோட்டலை தெரிந்து எடுத்தார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி, அதே வாடகை வேனில் தம்புள்ளை [Dambulla] வழியாகச் யாழ் நகரை நோக்கிச் செல்லும் போது, தங்கச் சிலைகளால் மின்னும் குகைக் கோயில்களைப் பார்த்து வியந்தது, "இது ஒரு கதைப்புத்தகக் குகை போல நான் உணர்கிறேன்!" என்று கலை மூச்சுத் திணறினான். தம்புள்ளையை தாண்டும் பொழுது தாத்தாவின் முகம் கொஞ்சம் வாடியிருந்தது. அதைக் கவனித்த ஜெயா, தாத்தாவைத் தட்டி என்ன நடந்தது என்றாள்? யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அன்று பல ஆண்டுகளாக அமைந்து இருந்த ஒரேயொரு தமிழ் இந்து ஆலயமான தம்புள்ளை பத்திரகாளி அம்மன் கோயில், புத்த பிக்குவின் தலைமையில் பல முறைதாக்குதல் நடத்தப்பட்டு, இறுதியாக அக்டோபர் 28, 2013-ம் நாள் ஆலயம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது எதையம்மா காட்டுகிறது ?. ஆனால், இந்த முன்னைய தம்புள்ளை பொற்கோவிலில் தெய்வங்களுக்குரிய 4 சிலைகள் காணப்படுகின்றன. இதில் இரண்டு இந்துக் கடவுள்களான விஷ்ணு மற்றும் விநாயகர் சிலைகளாகும் என்பது வரலாற்று உண்மையாகும் என்று தாத்தா ஜெயாவுக்கு ஒரு சரித்திரமே கூறினார். அவள் அதைக் கவனமாகக் கேட்டாள். இது ஆரம்பகாலத்தில் தம்பலை என அழைக்கப்பட்டது. இராச இராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோர் 10ஆம் 11 ஆம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்டார்கள் என தன் உரையாடலை முடித்தார். அன்று இரவு, அவர்கள் இறுதியாக தாத்தாவின் குழந்தை மற்றும் வாலிப பருவத்தின் வாழ்விடமான கரையோர நகரமான யாழ்ப்பாணத்தை அடைந்தனர். அங்கே, தாத்தாவின் பிறப்பு இடமான அத்தியடிக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில், ஒரு சிலநாட்கள் தங்க முடிவெடுத்தனர். அந்த ஹோட்டலை பார்த்து கொண்டு யாழ் ரயில் நிலையம் அமைந்திருந்தது. அந்த யாழ் ரயில் நிலையத்தின் பின்பக்கம் தான் தாத்தா, தாத்தாவின் அம்மா, சகோதரங்கள் எல்லோரும் பிறந்து வளர்ந்த பெருமைமிக்க அத்தியடி அமைந்துள்ளது. "நாம் "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும் யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே, யாழ் தேவி ரெயில் ஏறுவோம், எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்" என்று "கவிஞர் சதீஸ்" எழுதிய பாடல் வரிகளை நினைவூட்டியது. ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் நெஞ்சில் பின்னிப் பிணைந்த யாழ்தேவியின் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்காத நாட்களே அன்று இல்லை. "ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும் தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே" என "நாவலர் சற்குருமணிமாலை" போற்றும், தமிழும் சைவமும் தந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் வீடு, இன்றைய நாவலர் மண்டபம், ஹோட்டலில் இருந்து, அரை மையிலுக்கும் குறைவான தூரத்தில், தாத்தா குடும்பத்தாரின் முன்னைய வீட்டின் பின்பக்கத்தில் தான் அமைந்திருந்தது. அங்கு தான் தாத்தா இளம் வயதில் பந்தடித்து விளையாடினார். பொதுவாக யாழ்ப்பாண நகர், யாழ் கோட்டை , சந்தை பகுதியையும் வைத்திய சாலை, பேருந்து, புகையிரத, நிலையத்தையும் முதன்மை வீதிகளையும் உள்ளடக்கியுள்ளது. வட அமெரிக்கரின் பேச்சுப்பாங்கில் இதை "downtown."எனவும் கூறலாம். யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்கள், உயர்ந்த கட்டிடங்கள் மத்தியிலும் ஆங்ககாங்கே இருந்தது. ஜெயாவும் கலையும், முதல் முதல், அந்த முன் இரவிலும் யாழ் நகரைப் பார்த்து ரசித்து ஆச்சரியப்பட்டனர். இசை தாத்தாவின் மடியில் தூங்கிவிட்டான். ஜெயாவையும் கலையையும் தன் அருகில் அழைத்த தாத்தா, 'பனை மரம் புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும், நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது. அது வளைவதை விட, வளையாமல் உடைவதையே விரும்புவது. இன்னல், துன்பம் வரும் போது, யாழ்ப்பான மக்கள், பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து, தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம் மற்றும் துணிச்சலுடன் தளர்வுறாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக் குணத்தை கொண்டிருந்தனர்' என ஒரு பெரும் விளக்கம் கூறினார். மஞ்சள் வெயில் பூத்த வானமும் பனை மரங்களின் இனிய தாலாட்டும் பச்சை கிளிகளின் கொஞ்சும் சங்கீதமும் யாழ் தொட்டால் காதுகளுக்கு எட்டிவிடும் எல்லோர் மன தோடும் ஒட்டிவிடும் அன்பும் பண்பும் துளிர் விடும்! வீட்டை விட்டு எட்டி நடந்தால் வானம் பாடிகளின் ஆட்டமும் வீதியோர பசுக்களின் கூட்டமும் காதுகளில் ஒலிக்கும் செந்தமிழும் வானுயர நிமிர்ந்த பனைமரமும் மனதைத் தொடும் நினைவுகளே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் சிறு கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/31646004468381455/?

பிரான்சில் கடும் பொருளாதார நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தம் - ஈபிள் கோபுரம் மூடல்!

1 week ago
மற்றவர்களுக்குப் பலன் சொல்லும் பல்லி கூழ்ப்பானைக்குள் வீழ்வதுபோல் என்று சொல்வார்கள். இன்றைய அறிவியல் உலகு என்று சொல்லப்படும் உலகில் அது மனிதர்ளுக்கும் பொருந்தும் போல் தெரிகிறது.

மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும் — கருணாகரன் —

1 week ago
மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும் October 4, 2025 — கருணாகரன் — ‘மக்களின் எதிர்பார்ப்பும் அரசின்பொறுப்பும்‘ ஒன்றுடன் ஒன்றாகக்கலந்தவை. எதிர்ப்பார்ப்புகளின் அடிப்படையில்தான் ஒவ்வொரு தரப்பையும் மக்கள் ஆட்சியில் அமர்த்துகிறார்கள். அந்த எதிர்பார்ப்புகள் மக்களிடம் சில அடிப்படைகளில் உருவாகின்றன. 1. அவர்களுடைய தேவைகள் நீண்ட காலமாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்ததன் காரணமாக. 2. அவர்களுடைய நீண்டகால – குறுகிய காலப் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்காமல் இருப்பதனால். 3. ஜனநாயக விழுமியங்கள், மக்களின் அடிப்படை உரிமைகள், சுயாதீனத்துக்கான வெளி போன்றவற்றை அனுபவிப்பதற்காக. 4. அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் நாடும் மக்களும் வளர்ச்சியைப் பெறுவதற்காக. குறிப்பாகச் சர்வதேசத் தன்மையைக் கொண்டதாக தாமும் நாடும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக. இதையெல்லாம் கடந்த கால ஆட்சியாளர்கள் நிறைவேற்றாத காரணத்தினால், புதிய தரப்பொன்றின் மூலமாக அல்லது மாற்றுத் தரப்பின் மூலமாக இவற்றைப் பெற முடியும் என்று கருதுகிறார்கள். ஆனால், இவை அனைத்தும் மக்களுக்குரியவை. மக்களுக்குக் கிடைக்க வேண்டியவை. மக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டியவை. இவற்றைச் செய்வது – நிறைவேற்றுவது ஆட்சியாளர்களின் கடமை. அரசின் பொறுப்பு. சரியாகச் சொன்னால், இவற்றை நிறைவேற்றுவதற்குத்தானே அரசும் ஆட்சியும். ஆனால், ஏற்கனவே ஆட்சியிலிருந்த தரப்புகள் (ஆளும் வர்க்கம்) தமக்கிருந்த அதிகாரத்தின் மூலம் நாட்டின் வளங்களையும் வாய்ப்புகளையும் தாமே அளவுக்கு அதிகமாக அனுபவித்தன; கொள்ளையிட்டன. மக்களின் பேரால் அதிகாரத்திலிருந்து கொண்டே மக்களுடையவற்றை எல்லாம் தாம் எடுத்துக் கொண்டு – அபகரித்துக் கொண்டு – மக்களுக்கு விரோதமாகச் செயற்பட்டன. இதனால் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் மாபெரும் இடைவெளியும் ஏற்ற இறக்கமும் ஏற்பட்டது. இதுதான் அவர்களைத் தூக்கித் தூர வீச வேண்டியதாகியது. இந்த நிலையில்தான் மக்களுடைய எதிர்பார்ப்புகளை (அவர்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும்) நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தே புதிய தரப்பானது ஆட்சிப் பொறுப்பை (அதிகாரத்தை) எடுக்கிறது அல்லது ஏற்கிறது. அப்படித்தான் தங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஒரு ‘மாற்றுச்சக்தி‘ என்ற அடிப்படையில் NPP யை மக்கள் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். ‘மாற்றங்களை – திருத்தங்களை- ச் செய்வோம்‘, ‘பிரச்சினைகளைத் தீர்ப்போம்‘, ‘நாட்டை முன்னேற்றுவோம்‘ என்று சொல்லியே, உத்தரவாதம் அளித்தே ஆட்சிப் பொறுப்பை ஏற்றது NPP யும். NPP ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு கடந்து விட்டது. மிஞ்சியிருப்பது நான்கு ஆண்டுகளே. இந்த நான்கு ஆண்டுகளுக்குள் NPP மக்களுக்கு உத்தரவாதப்படுத்தியவற்றை நிறைவேற்ற வேண்டும். அதைப்போல மக்கள் எதிர்பார்த்தவைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். கவனிக்கவும்: ஒன்று, அரசாங்கம் தானாகவே பொறுப்பெடுத்தவையும் ஏற்றுக் கொண்டவையும் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியவையும் நிறைவேற்ற வேண்டும் என்பது. இரண்டாவது, மக்கள் எதிர்பார்க்கின்றவைகளும் அவர்கள் நம்பியிருப்பவையும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது. இரண்டும் பொறுப்பு ஏற்றல், பொறுப்புக் கூறல் ஆகியவற்றின் அடிப்படையிலானவை. ஆனால், இவற்றை எழுந்தமானமாகச் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. ஏனென்றால், மக்களுடைய எதிர்பார்ப்புகள் என்பது பல வகையானவை. அவற்றை பொதுமைப்படுத்த முடியாது. அப்படிச் செய்தால், அது எதிர்விளைவுகளையும் உண்டாக்கும். இதுவே கடந்த காலத்திலும் நடந்தது. குறிப்பாகத் தமிழ் மொழிபேசும் மக்களுடைய பிரச்சினைகளும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளும்வேறு. தமிழ் பேசும் மக்களிலும்கூட முஸ்லிம்களுடைய பிரச்சினைகளும் தேவைகளும் ஒரு விதமானவை. மலையக மக்களுடைய பிரச்சினைகளும் தேவைகளும் இன்னொரு வகைப்பட்டன. தமிழர்களுடைய பிரச்சினைகளும் தேவைகளும் வேறானவை. இதேவேளை இன்னொரு நிலையில் தமிழ்மொழிச் சமூகங்கள் என்ற வகையில் அவர்கள் எதிர்கொள்கின்ற பொதுப் பிரச்சினைகளும் உண்டு. அது அந்தச் சமூகங்களின் மொழி, பாதுகாப்பு, அபிவிருத்தி, அரசியல் உரிமை (அதிகாரப் பகிர்வு) போன்றன. அப்படித்தான் அனைவரும் இலங்கையின் குடிமக்கள் என்ற அடிப்படையில் பொதுப் பிரச்சினைகளும் உள்ளன. உதாரணமாகப் பொருளாதாரப் பிரச்சினை அவற்றில் ஒன்று. ஆகவே ஒவ்வொன்றையும் அதனதன் தன்மை, அவற்றின் முக்கியத்துவம் என உணரப்பட்டு, அவற்றுக்கான தீர்வுப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். பொருத்தமான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். அதாவது ‘பொதுப்பிரச்சினைகள், பிரத்தியேகப் பிரச்சினைகள்‘ என வகைப்படுத்தி, அவற்றைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். ஆனால், NPP யும் இந்த அடிப்படைகளைப் புரிந்து கொண்டு அல்லது ஏற்றுக் கொண்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிப்பதாகத் தெரியவில்லை. பதிலாக கடந்த ஆட்சியாளர்களைப் போலவே சிந்திக்கிறது; செயற்பட விளைகிறது. ‘அப்படி அல்ல‘ என்று யாரும் இதை மறுத்துரைத்தால், அவர்கள் அதை ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும். வெளிப்பார்வையில் NPP பல அதிரடி மாற்றங்களை உருவாக்குகிறது. புதியனவற்றைச் செய்கிறது. பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது போலவே தோன்றும். ஆனால், நிஜமாக அப்படியல்ல. ஆழ்ந்து நோக்கினால் இந்த உண்மை தெரியவரும். சில நடவடிக்கைகளை NPP எடுத்துள்ளது என்பது உண்மை. அவை மேலோட்டமானவை. உதாரணமாக, ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுச் சிறை வைக்கப்பட்டார். ரணிலின் மீதான குற்றச்சாட்டு, அரச பணத்தைத் தனிப்பட்ட தேவைகளுக்காக விரயமாக்கினார் என்பதாகும். அந்தப் பணத்தின் அளவு (தொகை) மிகச் சொற்பம். ராஜித சேனாரத்ன தொடக்கம் மகிந்தானந்த அழுத்கம வரை நான்காம் ஐந்தாம் நிலையாளர்களும் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆட்சித் தவறுகளுக்கு அனுசரணையாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் கடற்படை, பொலிஸ், பாதுகாப்புப் பிரிவு போன்றவற்றின் உயர் அதிகாரிகளில் சிலரும் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவை முக்கியமானவைதான். ஆனால், நாட்டைக் கொள்ளையிட்ட பலர், பல கோடிகளைச் சாப்பிட்டு விட்டு இன்னும் பாதுகாப்பாகவே உள்ளனர். குறிப்பாக ராஜபக்ஸக்கள். அவர்களில் கை வைப்பதற்கு அரசாங்கம் தயங்குகிறது. இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களும் விசாரணை செய்யப்பட்டவர்களும் பலிக்கடா நிலையில் உள்ளோர். உண்மையான பெருச்சாளிகள் வெளியேதான் உள்ளனர். பாதாள உலகக் குழுக்களை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான – இல்லாதொழிப்பதற்கான – நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தப் பாதாள உலகக் குழுக்களே கடந்த ஆட்சியாளர்களின் கவசமாகவும் போதைப்பொருள் மாஃபியாக்களாகவும் இருந்தன. ஆகவே அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே கடந்த கால ஆட்சியாளர்களின் (குற்றவாளிகளின்) வேர்களை அறுப்பதற்கான முதல் நடவடிக்கையாகும். இதைப் பாராட்ட வேண்டும். ஆனால், அரசியற் கொலைகளோடும் போர்க்குற்றங்களோடும் தொடர்புபட்டவர்களின் மீது எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதைப் பற்றிய பேச்சே இல்லை. மீளிணக்க நடவடிக்கைகள் உறங்கு நிலையிலேயே உள்ளன. அரசியற் கைதிகளின் விடுதலை பற்றிய பேச்சே இல்லை. மிக இலகுவாகச் செய்யக் கூடிய – அவசரமாகச் செய்ய வேண்டிய மாகாண சபைகளுக்கான தேர்தலைக் கூட நடத்துவதற்கு அரசாங்கம் சாட்டுப் போக்குகளைச் சொல்கிறது. அவசரகாலச் சட்டத்தை நீக்குவதைப்பற்றி அரசாங்கம் சிந்திக்கவே இல்லை. இன்னொரு புதிய சட்டம் வந்ததற்குப் பிறகுதான் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் என்று அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார். இதைச் சொல்வதற்கு சந்திரசேகரனும் NPP யும் வெட்கப்பட வேண்டும். இதுதான் மாற்றம் பற்றிய NPP யின் சித்தாந்தமும் நடைமுறையுமா? பொருளாதாரக் கொள்கையளிலும் NPP ஒன்றும் புதிய சிந்தனையைக் கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. அதே பழைய பாதையில் வண்டியை ஓட்டுவதே NPP யின் இலக்கு. ஏன் அதனால் புதிதாகச்சிந்திக்க முடியாமல் உள்ளது? அறிவுக் குழப்பமா? உள அச்சமா? இயலாமையா? அப்படியென்றால் முறைமை மாற்றம் (System Change) என்று ஏன் மக்களுக்குச் சொல்லப்பட்டது; படம் காட்டப்பட்டது? இதே அளவுக்கு தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகங்களின் (தேசிய இனங்களின்) அரசியல் உரிமை – அதிகாரப் பகிர்வு தொடக்கம் அவர்களுடைய பிரதேசங்களின் அபிவிருத்தி வரையில் தனிக் கவனத்துக்குரிய கொதிநிலைப் பிரச்சினைகள் பல உண்டு. இது தனியே வடக்குக் கிழக்குக்குரிய பிரச்சினை மட்டுமல்ல, மலையகத்துக்குமான பிரச்சினையுமாகும். இவற்றைப் பற்றி அரசாங்கம் (NPP) இதுவரையில் சிந்தித்ததாக எந்தச் சிறு அடையாளமும் இல்லை. பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து விட்டால் ஏனைய அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்ற முந்திய ஆட்சியாளர்களின் பழைய, மூட நம்பிக்கையோடுதான் NPP யும் உள்ளது. அதாவது அனைத்துக்குமான நோய் நிவாரணி பொருளாதாரப் பிரச்சினையே. அதைத் தீர்த்து விட்டால், அனைத்தும் குணமடைந்துவிடும்; தீர்ந்து விடும் என்று. இந்த முட்டாள்தனத்தின் விளைவாகத்தான் பொருளாதார நெருக்கடியே உருவானது. அது ஏதோ ஊழல் செய்ததால் மட்டும் ஏற்பட்ட நெருக்கடி அல்ல. ஆனால், அப்படித்தான் NPP யும் சிங்கள மக்களில் ஒரு தொகுதியினரும் நம்புவதாகத் தெரிகிறது. இதுதான் சரியென அவர்கள் மேலும் முட்டாள்தனமாக நம்பினால், நாடு இன்னும் நெருக்கடியைத்தான் சந்திக்கும். படிப்பினைகளைச் சரியாக எடுத்துக் கொள்ளாத தனி மனிதர்களும் சரி, குடும்பமும் சரி, நாடும் சரி, முன்னேற்றத்தை எட்டவும் முடியாது. தவறுளைத் திருத்திக் கொள்ளவும் முடியாது. பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான அரசாங்கத்தின் முயற்சி கூட பலவீனமாகவும் தவறாகவுமே உள்ளது. எளிய உதாரணம், வடக்குக் கிழக்குக்கான விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் காட்டும் பாரபட்சமும் தவிர்ப்பு முறைகளும் இதற்கு வலுவான சான்று. காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தியைப் புறம் தள்ளி விட்டு யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் மைதானத்தை அரசாங்கம் அமர்க்களமாக உருவாக்க முயற்சிக்கிறது. அப்படித்தான் வடக்கிற்கான விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இழுத்தடிப்பதுமாகும். இவை இரண்டுக்குமான நிதி அனுசரணை இந்திய அரசு வழங்குகிறது. இருந்தும் இழுத்தடிப்பதற்கான காரணம் என்ன? இப்படிப் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்தளவுக்குத்தான் NPP யின் ஆட்சித் தவறுகள் பெருகிக் கொண்டுள்ளன. மக்கள் NPP க்கு அதிகாரத்தை – ஆணையை வழங்கியது மாற்றங்களைச் செய்வதற்கே. அதாவது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் தமது நியாயமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும். ஆனால், அதைச் செய்யாமல், கடந்த கால ஆட்சித் தவறுகளைத் தொடருவதும் கடந்த கால ஆட்சியாளர்கள் காட்டிய தயக்கத்தையும் – விட்ட தவறுகளையும் (ஊழலைத் தவிர) தொடருவதும் நல்லதல்ல. அது ஆட்சித் திறனுமல்ல. NPP யைக் கைவிட்டால், அதல்லது அதனை அதிகாரத்திலிருந்து அகற்றினால் அந்த இடத்தில் ராஜபக்ஸக்களோ ஐ.தே.க, ஐக்கிய மக்கள் சக்தி அல்லது, சு. க போன்ற பழைய – மோசமான தரப்புகள்தானே அதிகாரத்தைக் கைப்பற்றும். அது சரியானதா? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஏனைய தரப்புகளை விட NPP பரவாயில்லைத்தான். ஆனால், இப்படி ஒரு நியாயத்தை முன்வைத்து NPP யின் தவறுகளையும் ஆட்சித் திறனின்மையையும் அதனுடைய இரகசிய இனவாத – இன ஒதுக்கல் நிகழ்ச்சி நிரலையும் ஏற்றுக் கொள்ளவும் கூடாது. அனுமதிக்கவும் முடியாது. அது நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் அநீதி, துரோகமாகும். இன்னொரு வகையில் சொன்னால், இன்னொரு தவறான தரப்பை நியாயப்படுத்தி நம்மை நாமே தண்டனைக்குள்ளாகுவதாகும். https://arangamnews.com/?p=12362

தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகிறார்! ஐ.நா வழங்கிய பயண அனுமதி

1 week ago
தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகிறார்! ஐ.நா வழங்கிய பயண அனுமதி October 5, 2025 10:14 am தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தஹிதா காத்ரி அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயண தடை விதிக்கப்பட்ட முத்தஹிதா பயணம் செய்ய ஐ.நா. பாதுகாப்பு போரவை அனுமதி அளித்துள்ளதாக வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். முத்தஹிதா காத்ரி இந்த மாதம் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்துவார். எவ்வாறாயினும், ஆப்கான் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காமல் தலிபான் வெளியுறவு அமைச்சரை இந்தியா வரவேற்கிறது. இதனிடையே, தலிபான் வெளியுறவு அமைச்சர் மீதான பயணத் தடையை நீக்குமாறு இந்தியா ஐ.நா.விடம் கோரியதா என்ற கேள்விக்கு ஜெய்ஸ்வால் பதிலளிக்கவில்லை. தலிபான் தலைமைத்துவத்திற்கான இந்தியாவின் அணுகுமுறை மாறிவிட்டதா என்று கேள்வியெழுப்பிய போது, ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்துடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுக்கு போருக்காக இந்தியா ட்ரோன்களை அனுப்புவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, இஸ்ரேல் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார். காசா நோக்கிச் செல்லும் கடற்படையில் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது குறித்து கேட்டபோது வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இந்த பதிலை மீண்டும் கூறினார். https://oruvan.com/taliban-foreign-minister-arrives-in-india-un-issued-travel-permit/

பணயக்கைதிகள் விரைவில் விடுதலை – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை

1 week ago
பணயக்கைதிகள் விரைவில் விடுதலை – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை October 5, 2025 10:36 am காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளும் வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். “ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவார்கள், காசா பகுதி இராணுவமயமாக்கப்படும். இது எளிதான வழி அல்லது கடினமான வழி, ஆனால் அது அடையப்படும்,” என்று நெதன்யாகு அரசு தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் சில அம்சங்களுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில் நெதன்யாகுவின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாளை (06) எகிப்தில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளன, மேலும் காசா அமைதித் திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விவாதிக்க இஸ்ரேலிய குழு எகிப்துக்குச் சென்றுள்ளது. இதற்கிடையில், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இருப்பினும், பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட போதிலும், ஹமாஸ் நிராயுதபாணியாக்கம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. 20 அம்ச ஒப்பந்தம், மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 20 உயிருள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்ததாக நம்பப்படும்வர்களின் உடல்களையும், நூற்றுக்கணக்கான காசாவாசிகளையும் பிணைக் கைதிகளாக விடுவிப்பதற்கும் முன்மொழிகிறமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/israeli-prime-minister-confident-that-hostages-will-be-released-soon/

இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் : வாக்கெடுப்பைத் தவிர்க்க அமெரிக்கா, நோர்வேயிடம் ஆதரவு கோரிய அரசு

1 week ago
இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் : வாக்கெடுப்பைத் தவிர்க்க அமெரிக்கா, நோர்வேயிடம் ஆதரவு கோரிய அரசு 05 Oct, 2025 | 09:35 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் மீது, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பரபரப்பான பின்னணியில், அரசாங்கம் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் ஆகியோர் தலைமையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழு, அமெரிக்கா, நோர்வே உள்ளிட்ட முக்கிய மேற்குலக நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒத்துழைப்புக் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கையின் நிலை குறித்து ஆராயும் விதமாக, அக்கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்ற பின்னணியில் அமெரிக்கா, நோர்வே உள்ளிட்ட முக்கிய மேற்குலக நாடுகளிடம் அரசாங்கம் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் ஆகியோர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு, ஜெனிவா விவகாரத்தில் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 20 நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த இராஜதந்திர நகர்வை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது. குறிப்பாக இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நாடான நோர்வே நாட்டுப் பிரதிநிதிகளுடன் சுமார் ஒரு மணித்தியாலம் வரை கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் உள்ளிட்ட இலங்கையின் இராஜதந்திரிகள் பங்கேற்றிருந்தனர். புதிய தீர்மானத்தின் மூலமாக முன்வைக்கப்பட்ட பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு போன்ற விடயங்களில் அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாக இருந்தது. சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை எதிர்கொண்டு, தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அநுரவின் தூதுக்குழு நோர்வேயிடம் முக்கிய வாக்குறுதிகளையும் உத்தரவாதங்களையும் அளித்துள்ளது. அதாவது, தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத ஒழிப்பு சட்டம், பாதாள உலகக் குழுக்களைக் கைது செய்யவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், இந்தச் சட்டத்தை கூடிய விரைவில் இரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அரசாங்கம் உறுதியளித்தது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. காணாமலாக்கப்பட்டோர் குழுவின் 29 ஆவது அமர்வில் தெளிவுபடுத்தியிருந்தார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டுச் சட்டம், உள்நாட்டில் அமுல்படுத்தப்பட்டு, இந்தச் செயலை முற்றிலுமாக தடைசெய்துள்ளதாக குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அங்கீகாரமும் மரியாதையும் தேவை என வலியுறுத்தியதுடன், நீண்ட கால ஆதரவு, நியாயமான நிதி இழப்பீடு, தொழில் கல்வி மற்றும் சமூகப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்கும் புதிய இழப்பீட்டு அமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் பணியாற்றி வருவதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார உறுதியளித்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்தக் கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு வரும் 8 ஆம் திகதி புதன்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான முடிவுகள் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226916

ஹிட்லரின் பாதையில் தேசிய மக்கள் சக்தி அரசு ; நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயல்வதாக ரணில் சாடல்

1 week ago
ஹிட்லரின் பாதையில் தேசிய மக்கள் சக்தி அரசு ; நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயல்வதாக ரணில் சாடல் 05 Oct, 2025 | 11:28 AM (லியோ நிரோஷ தர்ஷன்) எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பு மற்றும் அவற்றின் ஒன்றிணைவு குறித்து அச்சம் கொண்டுள்ள அரசாங்கம், ஒரு ஹிட்லர் போக்கிலான செயற்பாட்டை வெளிப்படுத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க கடுமையாகச் சாடியுள்ளார். எதிரணியினருடன் அரசியல் ரீதியான எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும், உள்ளூர் அரசியல் மேடைகளில் கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கை குறித்தும் இங்குள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் விமர்சனங்களை முன்வைப்பது முறையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததோடு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகளுக்கு வரலாற்று உதாரணங்களைக் கொண்டு பலத்த கண்டனம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 1933 ஆம் ஆண்டு ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தபோது, அவருக்கு 50 வீதத்திற்கும் அதிகமான ஆதரவு ,ருக்கவில்லை. ஹிட்லரின் கட்சி வெறும் 44 வீதமான வாக்குகளையே பெற்றது. எனவே, தனது அதிகாரத்தைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே ஹிட்லர் அன்று எதிர்க்கட்சிகளை அழித்தார். கட்சிகளை மாத்திரமல்லாமல் எதிர்க்கட்சி அலுவலகங்களையும் இல்லாதொழித்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், செக்கோஸ்லோவியா மற்றும் ஹங்கேரியைக் கைப்பற்ற வேண்டிய தேவை கம்யூனிஸ்ட்களுக்கு இருந்தது. அங்கு சோவியத் படை மிக வலுவாக வேரூன்றி இருந்தது. இருப்பினும் செக்கோஸ்லோவியா நிறுவனரின் புதல்வர் வெளியுறவு அமைச்சகக் கட்டிடத்தில் நான்காவது மாடி ஜன்னலிலிருந்து தூக்கி எறியப்பட்டார். இந்த விடயம் அன்றைய எதிர்க்கட்சி பாராளுமன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது. ஜனாதிபதியும் அவரது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ,லங்கையில் தற்போது செய்வது என்ன? ஜனாதிபதி அநுரவுக்கு வெறும் 44 வீதமான வாக்குகளே உள்ளன. மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகிறது. ,தனைத் தடுக்கவே அவர் கைது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். ஜனாதிபதி அநுரவின் மற்றொரு முயற்சி நீதித்துறையை அடிபணியச் செய்வதாகும். குறைந்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஹிட்லர் தனது அதிகாரத்தைத் தக்கவைக்க எதிர்க்கட்சிகளை ஒழித்தது போலவே, தேசிய மக்கள் சக்தியும் அதே வழியில் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதாகவும், நீதித்துறையைக் கட்டுப்படுத்த முயல்வதாகவும் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார். https://www.virakesari.lk/article/226927

காற்றாலைகளை எதிர்க்கும் ஒரு தீவு - நிலாந்தன்

1 week ago
காற்றாலைகளை எதிர்க்கும் ஒரு தீவு - நிலாந்தன் Pix by Nimalsiri Edirisinghe மன்னாரில் குறிப்பாக மன்னார்த் தீவுப் பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதற்கு எதிராக அங்குள்ள திருச்சபையினரும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். கடந்த திங்கட்கிழமை அங்கே கடை முடக்கமும் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றன. சில வாரங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் மறை மாவட்ட ஆயர் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். சந்திப்பின்போது அவர் மன்னாரில் நிகழும் கனிமவள அகழ்வு மற்றும் காற்றாலைத் திட்டங்கள் போன்றவற்றைக் குறித்துப் பேசியதாக அறிய முடிகிறது. அதன்பின் ஆயர் ஐரோப்பாவில் சுற்றிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்,ஜனாதிபதி அனுரகுமாரவும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்த அதே காலகட்டத்தில், மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலைகளை நிறுவுவது என்ற தனது முடிவை அரசாங்கம் அறிவித்திருந்தது. அவ்வாறு காற்றாலைகளை நிறுவுவதற்குத் தேவையான உபகரணங்கள் தீவப்பகுதிக்குள் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு கடந்த 26ஆம் திகதி இரவு அப்பகுதி மக்களும் கத்தோலிக்க மதகுருமாரூம் தீவின் வாயிலில் நின்று போராட்டம் நடத்திய பொழுது, அவர்கள் மீது போலீசார் பலப்பிரயோகத்தை மேற்கொண்டார்கள். இதில் பெண்களும் மத குருமார்களும் தாக்கப்பட்டார்கள், அவமதிக்கப்பட்டார்கள். இதன் விளைவாக அங்குள்ள மக்கள் கடந்த திங்கட்கிழமை பொது முடக்கத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள். மன்னாரில்,குறிப்பாக கனிமவள அகழ்வுக்கு எதிரான போராட்டத்தில் யாருமே கேள்விகளை எழுப்புவதில்லை. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அபிப்பிராயம் எல்லாத் தரப்புக்களிடமும் உண்டு. ஆனால் காற்றாலை விடயத்தில் அங்கு போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் முன்வைக்கும் கருத்துக்கள் விஞ்ஞானபூர்வமானவை அல்ல என்ற ஒரு விமர்சனம் ஒரு பகுதி தமிழ் மக்கள் மத்தியிலேயே உண்டு. மன்னார் தீவில் காற்றாலைகள் நிறுவப்பட்டதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மழைக் காலங்களில் தங்களுடைய வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கி நிற்பதாக,கடற்தொழில் பாதிக்கப்படுவதாகவும், காற்றாடிகள் சுற்றும் சத்தம் அதிகமாக இருப்பதாகவும் முறைப்பாடு செய்கின்றார்கள். இது போன்ற முறைப்பாடுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதனால்தான் கடந்த வாரம் அப்பகுதியில் காற்றாலைகளை நிறுவுவது என்ற தனது முடிவை அரசாங்கம் மீள உறுதிப்படுத்தியது. நாட்டின் அனல் மின் நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை என்பதனால் மீளப்புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை அரசாங்கம் நிறுவி வருகின்றது. இந்த அடிப்படையில் ஏற்கனவே வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வீடுகளின் கூரைகளில் சூரிய மின்கலங்கள் கடன் அடிப்படையில் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த மின்கலங்களைப் பொருத்துவதன் மூலம் குறிப்பிட்ட பயனாளி லாபமடைகிறார். அதனால் வரும் வருமானம் அவருடைய வீட்டுத் தேவைகளுக்கான மின் பாவனைக் கட்டணத்தை முழுமையாக இல்லாமல் செய்கின்றது. தவிர,மாதாமாதம் மேலதிகமாக லாபமும் கிடைக்கும். அந்த லாப நோக்கமானது அவர்களை அறியாமலேயே பசுமை மின்சக்தித் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்கின்றது. உலகம் முழுவதும் பசுமை மின்சக்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. மனித நாகரீகம் என்பதே இயற்கையை சுரண்டுவதில் இருந்துதான் தொடங்குகின்றது. எனவே இயற்கை சுரண்டாமல் அபிவிருத்தி இல்லை. இந்த விடயத்தில் இயற்கையின் சமநிலை கெடாமல் எப்படி அபிவிருத்தி செய்வது என்று சிந்தித்து கண்டுபிடிக்கப்பட்டவைதான் சூழல் நேயத் திட்டங்கள். வளர்ச்சி அடைந்த நாடுகளில் காற்றாலைகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டு வருகின்றன. அண்மையில் ஸ்பெயின் நாடானது நாட்டின் ஒருநாள் மொத்த மின் பாவனையை முழுக்கமுழுக்க பசுமை மின்சக்தியின் மூலம் பூர்த்தி செய்து சாதனை செய்ததாகச் செய்திகள் வெளிவந்தன. மேலும்,ஐரோப்பாவில் காற்றாலைகள் தொடர்பாக வந்த விமர்சனங்களை உள்வாங்கி புதிதுபுதிதாக மாற்று ஏற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. குறிப்பாக காற்றாலை விசிறிகளில் பட்டு வலசைப் பறவைகள் இறப்பது தொடர்பான விமர்சனத்தை உள்வாங்கி செட்டைகள் இல்லாத காற்றாடிகள் எப்பொழுதோ உருவாக்கப்பட்டு விட்டன. ஜெர்மனி இந்த விடயத்தில் முன்னோடியாகக் காணப்படுகிறது. அதுபோலவே அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின்படி காற்றாலைகளின் செட்டைகளில் ஒன்றைக் கறுப்பாக்கினால் அங்கே கொல்லப்படும் பறவைகளின் எண்ணிக்கை 70%தால் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காற்றாலை மின் சக்தியின் சூழல்நேயப் பண்பை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தோடு ஐரோப்பா முன்னேற்றகரமான புதிய காற்றாடிகளைக் கண்டுபிடித்து வருகிறது. இப்படிப்பட்டதோர் உலக மற்றும் உள்நாட்டுச் சூழலில்,மன்னார் மக்கள் ஏன் காற்றாலைகளை எதிர்க்கிறார்கள் என்று ஒரு பகுதியினர் கேள்வி கேட்கின்றார்கள். இங்கே முக்கியமாக இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும். மன்னார் மக்கள் மன்னாரின் தீவுப்பகுதியில் காற்றாலைகள் நிறுவப்படுவதைத்தான் எதிர்க்கிறார்கள். யாரும் சூரிய மின்கலங்களை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில் காற்றாலை தொடர்பான மன்னார்த் தீவு மக்களின் கவலைகளை சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்கள்,அதிகாரிகள், மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்றவர்கள் கேட்கவேண்டும். இதில் மாற்று ஏற்பாடு ஏதும் உண்டா என்று சிந்திக்க வேண்டும். இது தொடர்பாக அரசாங்கம் 19.08.2025 அன்று நியமித்த சிறப்புக் குழு கடந்த மாதம் முதலாந் திகதியன்று (01.09.2025) அங்குள்ள சிவில் சமூகத்தோடு(MCC) உரையாடியதாக அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் மக்களுடைய பயங்களைப் போக்க முடியவில்லை. காற்றாலைகள் ஏன் வேண்டாம் என்பதற்கு மன்னார் தீவுப்பகுதி மக்கள் கூறும் காரணங்கள் எவையாகவும் இருக்கலாம். ஆனால் காற்றாலைகள் ஏன் வேண்டும் என்பதற்குக் கூறப்படும் பிரதான காரணத்திலிருந்து சிந்தித்தால் அந்த மக்களின் பயத்தைப் போக்க வேண்டியது அவசியம். சூழல்நேய அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் அந்தச் சூழலில் வாழும் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அந்தச் சூழலுக்கு அந்த அபிவிருத்தித் திட்டம் முழுமையாக நேசமானதாக அமையும். அந்த மக்களின் விருப்பமின்றி அதை அங்கே பலவந்தமாக நிறுவ முடியாது. அப்படி நிறுவினால் சூழல்நேய அபிவிருத்தி என்ற அடிப்படைச் சிந்தனை கேள்விக்குள்ளாகிவிடும். எனவே ஒரு பகுதி மக்கள் அதை எதிர்க்கிறார்கள் என்று சொன்னால் அவர்களுடைய பயங்களை,கவலைகளைப் போக்க வேண்டிய, மாற்று ஏற்பாடுகளைக் குறித்துச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் உண்டு.அதுதொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டிய பொறுப்பு அரசியல் தலைமைக்கு உண்டு. மன்னாரில் காற்றாலைகளை முதலில் நிறுவ முற்பட்டது அதானி குழுமம் ஆகும். ஆனால் அது தொடர்பான லாப நட்டப் பேரங்களில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதானி குழுமம் அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறி விட்டது. இப்பொழுது உள்நாட்டு நிறுவனம் ஒன்று காற்றாலைகளை நிறுவி வருகிறது. இங்கு அரசியல் முரண் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதானி குழுமம் மன்னாரில் காற்றாலைகளை நிறுவ முற்பட்டபொழுது அதனை ஜேவிபியும் உட்பட அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் எதிர்த்தார்கள். காலி முகத்திடலில் “கோட்டா கோகம” கிராமத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராக ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது. அது அதானி குழுமத்தின் முதலீடுகளை எதிர்த்தது. இதுதொடர்பாக ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் அந்தப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற ஒரு கத்தோலிக்கம் மதகுருவோடு உரையாடினார். ”நீங்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராக போராடுகிறீர்கள் என்று சொன்னால்,ஜேவிபியின் முன்னைய நிலைப்பாடுகளில் ஒன்றைத் தொடர்ந்து பின்பற்றுகிறீர்கள் என்று பொருள். ஜேவிபியின் முன்னைய நிலைப்பாட்டின்படி மலையகத் தமிழர்களை அவர்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாகக் கண்டார்கள். அப்படியென்றால் அரகலயப் போராட்டமும் மலைகத் தமிழர்களை எதிரிகளாகப் பார்க்கின்றதா?” என்று அவர் கேட்டார். அந்தக் கத்தோலிக்க மதகுரு அதை மறுத்தார்.”இல்லை நாங்கள் எல்லாவிதமான விஸ்தரிப்பு வாதங்களுக்கும் எதிரானவர்கள்”என்று சொன்னார். அப்படியென்றால் சீனா ஏற்கனவே அம்பாந்தோட்டையிலும் கொழும்புத் துறைமுகத்துக்கு அருகிலும் வந்துவிட்டது.அந்தச் சீன விஸ்தரிப்பு வாதம் தொடர்பாகவும் நீங்கள் பேசுவீர்களா?என்று அந்தத் தமிழ்ச் செயற்பாட்டாளர் கேட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு அதானியின் முதலீட்டை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் ஒரு பகுதி என்று எதிர்த்த அரகலய போராட்டங்களின் குழந்தைதான் இப்போதுள்ள என்பிபி அரசாங்கம்.ஆனால் அது காற்றாலை வேண்டாம் என்று கேட்டுப் போராடிய மன்னார் மக்களின்மீது பலத்தைப் பிரயோகித்துள்ளது. அதற்கு எதிராக கடந்த திங்கட்கிழமை நடந்த போராட்டத்தில் அரகலய போராட்டத் தலைவர்களும் இணைந்திருக்கிறார்கள். இதன்மூலம் என்பிபி வேறு தாங்கள் வேறு என்று அவர்கள் காட்டக்கூடும். காற்றாலைகளின் விடயத்தில் தமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் உட்பட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதிய அளவுக்கு எதிர்ப்புக் காட்ட வில்லை என்ற ஒரு குறை மன்னார் மாவட்டச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் முன்பு இருந்தது.அப்பகுதி அரசியல் தலைமைத்துவம் இது தொடர்பில் மக்களுக்கு வழிகாட்டத் தவறிவிட்டது.அதனால் அங்கு ஏற்கனவே பலமாக உள்ள மதத் தலைமைத்துவதின் வழிகாட்டலே தீர்மானகரமானதாகக் காணப்படுகின்றது. எனினும் கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது,பொது வேட்பாளரை முன்னிறுத்திய அணி மன்னாரில் நகரப் பகுதியில் நடத்திய பெரிய ஒருவர் அங்கே மன்னார் மக்களின் கவலைகளைப் பிரதிபலித்தார். காற்றாலை,கடலட்டை இரண்டும் ராஜதந்திரப் பொருட்களாகி விட்டன என்று கூறிய அவர், காற்றாலை,கடலட்டை,கனிமவள அகழ்வு போன்றவை தமிழ் மக்களின் நில உரிமை,கடல் உரிமை போன்ற கூட்டு உரிமைகளோடு சம்பந்தப்பட்டவை என்றும்,எனவே அதில் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக முடிவுகள் எடுக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார். இப்பொழுது அரசாங்க மக்கள் மீதும் மதகுருக்கள் மீதும் பலப் பிரயோகத்தைச் செய்த பின் விவகாரம் உணர்ச்சிகரமானதாகி விட்டது. தமிழ்த்தேசியக் கட்சிகளும் உட்பட பெரும்பாலான கட்சிகள் மன்னார் மக்களின் பக்கம் நிற்கின்றன. இப்பொழுது போராட்டம் பரந்தளவில் மக்கள் மயப்பட்டுவிட்டது. அரசாங்கத்தின் பலப்பிரயோகம் அதைப் பலப்படுத்தி விட்டது. தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக வந்த ஓர் அரசாங்கம் இந்த விடயத்தில் என்ன முடிவை எடுக்கும்? தனது வெளிநாட்டுப் பயணத்தில் ஜனாதிபதி கதைத்த கவர்ச்சியான,அலங்காரமான சொற்களைக் கொண்ட உரைகள் யாவும், மன்னார் மக்கள் மீது போலீசார் பலத்தைப் பிரயோகித்தபோது பொருள் இழந்து போய்விட்டன. https://www.nillanthan.com/7814/

ஸ்டாலின், விஜய்க்கு எதிராக போராட்டம் - வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் எச்சரிக்கை

1 week ago
05 Oct, 2025 | 07:07 AM தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் எமது நாட்டின் இறைமையில் உள்ள கச்சதீவை அரசியலுக்காக பயன்படுத்தினால் அவர்கள் இருவருக்கும் எதிராக கடற்றொழில் சமூகம் மிக விரைவில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்குமென வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடாக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சதீவை மீட்பேன் என வடக்கு கடற்றொழில் சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்தை தொடர்ச்சியாக அரசியல் மேடைகளில் பேசி வருகின்றார். முதலமைச்சரே, நல்லெண்ண அடிப்படையில் வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த 2023ஆம் ஆண்டு மூன்று மகஜர்களை உங்களுக்கு அனுப்பியது. அதற்கு நீங்கள் எதுவித பதிலும் வழங்கவில்லை. ஆனால் அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை தூக்கி வைத்து வடக்கு கடற்றொழிலாளர்களை பகைக்கின்ற ஒரு விடயத்தை நீங்கள் செய்கின்றீர்கள். கச்சதீவினால் தான் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படுவதாக உங்களது அரசியல் இருப்புக்காக பொய்யான ஒரு குற்றச்சாட்டை தமிழ்நாட்டிலே நீங்கள் பேசாதீர்கள். வடக்கு கடற்றொழில் சமூகம் கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டு அரசுக்கோ எதிரான எந்த ஒரு போராட்டத்தையும் பாரிய அளவில் முன்னெடுக்கவில்லை. தொடர்ச்சியாக இவ்வாறு பேசி தமிழ்நாட்டு மீனவர்களை வடக்கு மீனவர்களுக்கு எதிராக தூண்டுவீர்களாக இருந்தால் வடக்கு கடற்றொழில் சமூகமாகிய நாங்கள் பாரிய ஒரு போராட்டத்தை முன்னெடுப்போம். அதுபோல தமிழக வெற்றி கழகத்தின் விஜயும் அரசியல் இருப்புக்காக கச்சதீவு விவகாரத்தை பேசுகின்றார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முதலே, இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சனையை சமூகமாக தீர்ப்பதற்கு முன் வாருங்கள் என்று விஜய்க்கும், சீமானுக்கும் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் நீங்கள் எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. கச்சதீவு விவகாரத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டதாக ஒருபோதும் வரலாறு இல்லை. உலகத்திலேயே தடை செய்யப்பட்ட, கடல்வளத்தை கருவறுக்கின்ற இரட்டை இழுவைமடி தொழிலைத்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் செய்கின்றனர். நீங்கள் இந்த இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு மாற்றுமுறை தொழிலை செய்யுங்கள். இதன்போது உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உங்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுக்கின்றோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பொய்யானது. இலங்கையின் சட்டத்தின்படி, எல்லை மீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பது வடக்கு கடற்றில் சமூகத்தின் தெளிவான நிலைப்பாடாகும். இழுவைமடி தொழிலை நிறுத்திவிட்டு சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் தொழில் செய்வது குறித்து சிந்திப்பதற்கு கடற்றொழில் சமூகம் தயாராக இருக்கின்றது. இந்திய அரசாங்கம் இந்த விடயத்தை இராஜதந்திர ரீதியில் அணுக வேண்டும் என்பது எமது விருப்பம். அதைவிடுத்து வடக்கு மாகாண மக்களுக்கு சொந்தமான கச்சதீவு குறித்து அரசியல் மேடைகளில் பேசி மீனவர்களை தூண்டி விடுவது கண்டிக்கத்தக்கது. அதன் விளைவுகள் எதிர்காலத்தில் பாரதூரமாக இருக்கும் என்றார். https://www.virakesari.lk/article/226902

'தேசிய மக்கள் சக்தி செயலால் நிரூபிக்கிறது; வட மாகாணத்தை அவர்களால் அபிவிருத்தி செய்ய முடியும்' - ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை

1 week ago
'தேசிய மக்கள் சக்தி செயலால் நிரூபிக்கிறது; வட மாகாணத்தை அவர்களால் அபிவிருத்தி செய்ய முடியும்' - ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை Published By: Digital Desk 1 04 Oct, 2025 | 01:23 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டத்தின் கீழ் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின் ஆரம்ப நிகழ்வு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் முதல் தடவையாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு என்பன குறிகாட்டுவானில் இன்று சனிக்கிழமை(04) காலை நடைபெற்றது. இதன்போது ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் ஓர் விடயத்தைக் கூறுவார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்தத்துறையின் அமைச்சராக இருக்கும்போது வடக்குக்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ளலாம். அமைச்சர் பிமல் ரத்நாயக்க எந்தத் திட்டம் வரும்போதும் அதில் வடக்கு மாகாணத்தையே முதன்மைப்படுத்துவார் என்று அவர் கூறுவார். அது உண்மை. நான் யாழ்ப்பாண மாவட்டச் செயலராக இருந்தபோது குறிகாட்டுவான் வீதிப் புனரமைப்பு மற்றும் இறங்குதுறை புனரமைப்புக்கு கடுமையாக முயற்சித்தேன். ஆனால் அது கைகூடவில்லை. இப்போதுதான் சாத்தியமாகியிருக்கின்றது. இது மிகச் சிறப்பான தருணம். இந்த அரசாங்கம் சொல்லில் அல்ல செயலில் நிரூபித்து வருகின்றது. வடக்கு மாகாணத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. பல அமைச்சர்கள் வடக்கு மாகாணம் தொடர்பான விடயங்களை சாதகமாகவே அணுகுகின்றார்கள். அது வடக்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இவற்றுக்கு மேலாக, நெடுந்தீவு பிரதேசத்துக்கே உதவி அரசாங்க அதிபராக முதலில் நியமிக்கப்பட்டேன். அந்தப் பிரதேச மக்களின் வலிகள் தெரியும். அந்தப் பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது சிறப்பானது. இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இ.சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், யாழ் மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடக்கு மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர்கள், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வீதி அபிவிருத்திப் பணி 299 மில்லியன் ரூபா செலவில் முதல் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதேநேரம், 800 மில்லியன் ரூபா செலவில் குறிகாட்டுவான் இறங்குதுறையும் மறுசீரமைக்கப்படவுள்ளது. அத்துடன், குறிகாட்டுவான் வரையிலான பிரதான வீதியில் 3.2 கிலோ மீற்றர் அடுத்த வருடம் புனரமைக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226871

ரோஹித் கேப்டன் பதவி பறிப்பு: பிசிசிஐ முடிவால் எழும் கேள்விகள் - முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

1 week ago
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இடம்பெற்றுள்ளார்கள். இருவரும் சுப்மன் கில் தலைமையின் கீழ் விளையாட உள்ளனர். ரோஹித் சர்மா நீக்கம் பற்றி பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது 2027 ஒருநாள் உலக கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார் இந்த முடிவு பற்றி ரோஹித் சர்மா தற்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில் சமூக ஊடகங்களில் யூகங்கள், விமர்சனங்கள், ஆதரவுகள் என விவாதிக்கப்பட்டு வருகின்றன. கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுப்மன் கில், "ஒருநாள் உலக கோப்பைக்கு முன்பாக 20 போட்டிகள் உள்ளன. 2027-ல் தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரை வெல்வது தான் எங்களின் மிகப்பெரிய இலக்கு." எனத் தெரிவித்தார். ரோஹித் சர்மா, அஜித் அகர்கர் இடையே என்ன நடந்தது? பட மூலாதாரம், Gareth Copley/Getty Images படக்குறிப்பு, அஜித் அகார்கர் ரோஹித் சர்மாவிடம் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டதா என்கிற கேள்விக்குப் பதிலளித்த அகர்கர், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது என்றார். கேப்டன்சி முடிவுக்கு ரோஹித்தின் எதிர்வினை பற்றிய கேள்விக்கு, "அது எனக்கும் ரோஹித்துக்கும் இடையிலான உரையாடல். அதனைப் பொதுவெளியில் தெரிவிக்க விருப்பமில்லை." எனத் தெரிவித்தார். எதிர்கால திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய கேப்டனுக்கு தன்னை அந்தப் பொறுப்பில் நிரூபித்துக் கொள்ள போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டியது முக்கியமானது என்றும் கூறினார். "அடுத்த உலக கோப்பைக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதற்குள் புதிய கேப்டன் அணியுடன் கூடுதல் நேரம் செலவழித்து திட்டங்களை மேற்கொள்ள போதுமான வாய்ப்பு கிடைக்கும். அதனால் தான் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது." என்கிறார் அகார்கர். ஒவ்வொரு வடிவத்திற்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது எளிதல்ல எனக் கூறும் அவர், "அது திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளைக் கடுமையாக்குகிறது. ரோஹித் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆகவே, ஒருநாள் கேப்டன்சியையும் இளம் வீரர்களிடம் கொடுக்கலாம் என தேர்வாளர்கள் எண்ணினர்." எனத் தெரிவித்தார். ரோஹித் சர்மா 2023 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்றார். இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவர் வென்று கொடுத்தார். அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவு எளிதானது அல்ல என்பதை அகர்கர் ஒப்புக்கொள்கிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம், Gareth Copley/Getty Images படக்குறிப்பு, ஹர்பஜன் சிங் ரோஹித் சர்மா நீக்கப்பட்டது தனக்கு ஆச்சரியமளித்ததாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபி வென்ற அவருக்கு ஆஸ்திரேலியாவில் அணியை வழிநடத்த தகுதியுள்ளது என்றும் கூறினார். இந்த முடிவு பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் ஹர்பஜன் பேசியதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது. "சுப்மன் கில்லுக்கு வாழ்த்துக்கள். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். தற்போது மேலும் ஒரு பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித்தின் இடத்தில் சுப்மன் கில் வைக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த சாதனைகளை கொண்ட வீரர் ரோஹித்." "ரோஹித்தை கேப்டனாக பார்க்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ரோஹித்தை அணியில் தேர்வு செய்கிறீர்கள் என்றால் அவரை கேப்டன் ஆக்குங்கள், ஏனென்றால் சமீபத்தில் தான் அவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் அவர் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். அணி தேர்வாளர்கள் 2027 ஒருநாள் உலக கோப்பையைப் பற்றி யோசிக்கிறார்கள் என்றால் அதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது." என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆகாஷ் சோப்ரா முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பெரிய தொடர்களுக்கு முன்பாக ரோஹித் சர்மாவுக்கு போதிய நேரம் வழங்கப்பட்டதைப் போல சுப்மன் கில்லுக்கும் வழங்கப்படுவது சரியே என்கிறார். "ரோஹித் 2022 டி20 உலககோப்பையில் கேப்டனாக இருந்தார், அதே போல் 2024 உலக கோப்பையிலும் கேப்டனாக இருந்தார். உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப அணியைக் கட்டமைக்குமாறு அவரிடம் கூறப்பட்டது. நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் எடுக்கப்பட்டார்கள், முடிவாக கோப்பை கிடைத்தது. அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. ரோஹித் சர்மாவுக்கு போதிய நேரம் வழங்கினீர்கள். ரோஹித் சர்மாவுக்கு நேரம் வழங்கப்பட்டால் சுப்மன் கில்லுக்கும் நேரம் வழங்கப்பட வேண்டும்." எனத் தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளரான அபிஷேக் நாயர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசுகையில், இந்த முடிவு பற்றி ரோஹித்தும் தேர்வாளர்களும் பேசிக் கொள்வது முக்கியமானது எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "என்னைப் பொருத்தவரை, தேர்வாளர்கள் ரோஹித் சர்மாவிடம் பேசினார்களா என்பது மட்டுமே முக்கியமானது. ரோஹித் சர்மாவும் தேர்வாளர்களும் கில்லுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என ஒப்புக்கொண்டால், இது சரியே. இதற்கான பதிலை ரோஹித் சர்மா மட்டுமே கொடுக்க முடியும். ஒரு கேப்டனாக அவர் 2027 உலக கோப்பைக்கு தயாராகி வந்தார். எனவே இதைப்பற்றி உரையாடல் நடைபெற்றிருக்கும் என்றும், இந்த முடிவில் ரோஹித்தும் தேர்வாளர்களும் ஒப்புக் கொண்டிருப்பார்கள் என்றும் நம்புகிறேன்." எனத் தெரிவித்தார். பிசிசிஐ மீது எழுப்பப்படும் கேள்விகள் பட மூலாதாரம், Getty Images முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுநர்களைக் கடந்து இந்த முடிவு சமூக ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. விஷால் என்பவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில், "5 ஐபில் கோப்பைகள் மற்றும் பல வருட கடின உழைப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் கொடுத்தது என்ன? அவமரியாதையும் துரோகமும் தான். 2 தொடர் ஐசிசி கோப்பைகளும் பல வருட வெற்றிகளுக்கும் பிசிசிஐ கொடுத்தது என்ன? அவமரியாதையும் துரோகமும் தான்." எனப் பதிவிட்டுள்ளார். தனய் என்பவர், "ரோஹித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து நீக்கியதற்கு பிசிசிஐ ஒரு காரணம் கொடுங்கள்." என தனது பதிவில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சிலர் பிசிசிஐயின் முடிவை நியாயப்படுத்தியும் பேசுகின்றனர். 'கில் தி வில்' ('Gill The Will') என்கிற கணக்கில், "ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு சுப்மன் கில்லை தற்போது கேப்டன் ஆக்கியதற்கு நீங்கள் (ரோஹித் சர்மா ரசிகர்கள்) அனைவரும் சோகமாக இருப்பீர்கள் என எனக்குத் தெரியும். நீங்கள் கில்லை விமர்சிப்பதற்கு முன்பாக ஒன்றை யோசியுங்கள். விராட் கோலிக்குப் பிறகு ரோஹித் சர்மா கேப்டன் ஆன போது நீங்கள் முழுமையாக அவரை ஆதரித்தீர்கள் தானே? தற்போது அதே மரியாதை சுப்மன் கில்லுக்கும் வழங்கப்பட வேண்டும். கேப்டனான சிறந்த நினைவுகளைத் தந்ததற்கு நன்றி ரோஹித் சர்மா!" எனப் பதிவிடப்பட்டுள்ளது. பாவ்னா என்பவர், "சுப்மன் கில்லுக்கு வாழ்த்துகள். ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இடத்தை நிரப்புவது எளிதான காரியம் அல்ல. அவர் மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார், அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது கில்லுக்கு மிகப்பெரிய பொறுப்பாக இருக்கும்." என எழுதியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 19, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரை நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgl1jgwe0x3o
Checked
Mon, 10/13/2025 - 00:04
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed