புதிய பதிவுகள்2

புதிய அரசியலமைப்பு விரைவில் கொண்டுவரப்படும் - கடற்றொழில் அமைச்சர்

1 week ago
04 Oct, 2025 | 01:12 PM புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் நிகழ்வு ஒன்றின் பின்னர் வெள்ளிக்கிழமை (03) ஊடகவியலாளர் ஒருவர் "புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக உங்களது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினார். புதிய அரசியலமைப்பு சட்டம் எமது கொள்கை பிரகடனத்தில் இருக்கின்ற ஒரு விடயம். நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒருவருடம்தான் நிறைவடைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இது மக்களுக்கு தெரியும். ஆனால் அரசியல்வாதிகள் தெரிந்தும் தெரியாதது போல நடிப்பார்கள். அந்தவகையில் புதிய அரசியலமைப்பு சட்டம் இந்த நாட்டு மக்களுடைய சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வகையில், நீண்டு நிலைக்கக்கூடிய ஒரு சட்டமாக விரைவில் கொண்டுவரப்படும் என்றார். https://www.virakesari.lk/article/226869

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!

1 week ago
வடமராட்சி கிழக்கு கெளரவ மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவர்களின் பிறந்த பூமி. அவருக்கு தகவல் தெரிவிக்காமல் தள்ளித் திரிகின்றனர். முதலமைச்சர் கனவில் இருப்பவருக்கு தெரிவித்தால் உடனடியாக செயற்பட்டு புதிய பஸ்களைப் பெற்றுத் தருவார்😁

திருக்குறள் (திரைப்படம்)

1 week ago
வணக்கம், இப்படத்தை முழுமையாக பாருங்கள். இப்படத்தின் தயாரிப்புச் செலவை மீட்டெடுக்க நன்கொடை தாருங்கள். அந்த உதவி நாங்கள் மேலும் இத்தகையப் பணிகளைச் செய்ய உதவும். நன்றி Ramana Communications presents Thirukkural FULL MOVIE | IlaiyaRaja Musical | A.J. Balakrishnan | திருக்குறள் விமர்சனங்கள் தினமலர் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "படத்தின் முடிவில் வரும் போர்க்களக் காட்சிகள் மற்றும் மதுரை இலக்கியச் சங்கத்தில் திருவள்ளுவருக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஆகியவற்றை இயக்குநர் பாலகிருஷ்ணன் காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாக இருந்தது" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[5] இந்து தமிழ் திசை வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "திருக்குறளின் மேன்மையை சிறந்த பொழுதுபோக்குப் படமாகக் கொடுத்திருப்பதற்காகவே இப்படத்தைக் குடும்பத்துடன் காணலாம்" என்று எழுதினர்.[6] தினத்தந்தி வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "திருவள்ளுவர் காலத்தை கண்முன் நிறுத்தி, அதில் காதல், மோதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். திருக்குறள் - பெருமை." என்று எழுதினர்.[7]

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week ago
வினா 6) மழை காரணமாக அவுஸ்திரேலியா இலங்கைக்கு இடையிலான போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் போட்டியாளர்கள் அனைவருக்கும் தலா 2 புள்ளிகள் கிடைக்கிறது 1)ஏராளன் - 13 புள்ளிகள் 2)கிருபன் - 13 புள்ளிகள் 3)அகஸ்தியன் - 13 புள்ளிகள் 4)ஆல்வாயன் - 11 புள்ளிகள் 5)வாதவூரான் - 11 புள்ளிகள் 6) ரசோதரன் - 11 புள்ளிகள் 7) வீரப்பையன் - 11 புள்ளிகள் 8)சுவி - 10 புள்ளிகள் 9)புலவர் - 9 புள்ளிகள் 10)செம்பாட்டன் - 9 புள்ளிகள் 11) நியூபலன்ஸ் - 9 புள்ளிகள் 12)வாத்தியார் - 7 புள்ளிகள் 13) வசி - 7 புள்ளிகள் 14)கறுப்பி - 7 புள்ளிகள் 15)ஈழப்பிரியன் - 7 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 6, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week ago
கந்தையரே! இப்போதெல்லாம் ஆண்பெண் என்ற சமாச்சாரமே இல்லாத உலகம் இது.உனக்கும் மூளை இருக்கு எனக்கும் மூளை இருக்கு எனும் கலாச்சாரமே ஓடுகின்றது.😉 இவர் வாக்குறுதி தந்தார் அவர் வாக்குறுதி தந்தார். அதனால் கட்டிலை பகிர்ந்து கொண்டேன் என்ற கதைகளெல்லாம் எடுபடாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.😎 அன்றைய சமூகம் போல் இன்று வாழமுடியாது.கண்ணகி மாதவி கதைகள் சிந்தனைகள் கருத்துக்கள் எல்லாம் இக்காலத்திற்கு ஒவ்வாதவை... கருத்து வெற்றிக்காக.... விருப்பமில்லாதவர்களிடம் மட்டும் புனிதத்தை தேடாதீர்கள்..இக் கருத்து தேவையானவர்கள் தொப்பியை அணிந்து கொள்ள மட்டும்.👁‍🗨

திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!

1 week 1 day ago
ஓவ்வொரு. ஆண்மகனும். அகப்படும். பெண்களுக்கு எல்லாம். இப்படி. செய்யலாம். என்று. வழி. மொழிகிறீர்களா. ? சீமானின். மகளுக்கு. ஒருவன். இப்படி. செய்வான். என்றால்். வரவேற்ப்பீர்களா. !…?

ஐரோப்பிய ஒன்றியம் போருக்குள் "சென்று" வரும்போது, ​​"இளைஞர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்" என்று ஓர்பன் கூறுகிறார்.

1 week 1 day ago
ஓர்பன் நல்லதொரு அரசியல்வாதி. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தலையிடியானவர். இவர் கம்யூனிசவாதியல்ல.மக்கள் நலன் கொண்டவர். யாருடனும் பேசி,கலந்துரையாடி மட்டுமே பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என முனைபவர். ஜேர்மனிய மக்களிடம் இவருக்கு நல்ல ஆதரவு உண்டு. உத்தியோகபூர்வமாக அல்ல. உண்மைகள் சாவதில்லை என சொல்வார்கள். அது பொய். உண்மைகள் சாகும். பொய்கள் நிலைத்து நிற்கும். இதுதான் இன்றைய உலக நிலை.

யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!

1 week 1 day ago
யாழ்ப்பாண பெருமை திமிர் சாதி பார்க்கும் ஊத்தைப் பழக்கங்கள் ஒழிய வேண்டும். அரசும் மற்றய இடங்களில் நல்ல கல்வி கற்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!

1 week 1 day ago
மாணவி தவறான முடிவு எடுத்துள்ளார். அவருக்கு தகுந்த அறிவுரை, அத்துடன், தேவையான ஆதரவு, உதவி கொடுக்க வேண்டும். சாதி, சமூக பிரச்சனைகளை இதற்குள் இழுக்கத்தேவை இல்லையே? பழிவாங்கும் மனநிலையும் மாடியில் இருந்து குதிக்க காரணமாக அமையலாம் அல்லவா?

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!

1 week 1 day ago
அய்யோ பிரியன் சார்...இந்த மிகச்சிறிய பொறுப்பை எம் தலைமீது சுமத்தி ...எங்களை தரம் குறைத்து விட்டீர்கள் அய்யனே... பள்ளிக்கூடங்களுக்கு கொடுத்த வண்டிகளே கராச்சில் கல்லில் ஏறி நிக்குது...இந்த அழகிலை ...

பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!

1 week 1 day ago
@ரசோதரன் அண்ணை உங்கை முந்தி பயிற்சி செய்தவர் தானே, அவர் சொன்னாக் கேட்பினம் சில நேரம். வடமராட்சி கிழக்கு எனக்குத் தெரிஞ்ச காலம் முதல் எல்லா அரச திணைக்களங்களாலையும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடேயே அணுகப்பட்டு வந்திருக்குது. இ.போ.ச மட்டும் என்ன விதி விலக்கா?

பிரான்சில் கடும் பொருளாதார நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தம் - ஈபிள் கோபுரம் மூடல்!

1 week 1 day ago
மனிதன் நீண்ட கால கூர்ப்பினை கடந்து வந்திருந்தாலும் கற்கால மனிதனின் இயற்கையான பாதுகாப்பு பொறிமுறையான கூட்ட மனப்பாண்மையினை கடந்து வரமுடியவில்லை, கல்வி விஞ்ஞானம் என எவ்வளவு முன்னேறினாலும் மக்களை இவ்வாறு ஒரு முனைப்பார்வையாளர்களாக்க இந்த ஊடகங்களால் முடிகின்ற நிலை காணப்படுகிறது, தற்போதய முக்கிய பிரச்சினையாக இருப்பது ஒரு பக்க சார்பற்ற ஊடக நிலைப்பாடு உலகில் உருவாக வேண்டும் அது தேவையற்ற அழிவைத்தரும் போலிகளை இனங்காண உதவுவதாக இருக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் போருக்குள் "சென்று" வரும்போது, ​​"இளைஞர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்" என்று ஓர்பன் கூறுகிறார்.

1 week 1 day ago
ஐரோப்பிய ஒன்றியம் போருக்குள் "சென்று" வரும்போது, "இளைஞர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்" என்று ஓர்பன் கூறுகிறார். Oleh Pavliuk, STANISLAV POHORILOV — 3 அக்டோபர், 17:55 விக்டர் ஓர்பன். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 4861 - ஐரோப்பிய ஒன்றியம் "போரில் மூழ்கி வருகிறது" என்ற தனது கருத்தை அதிகரித்து வரும் நாடுகள் பகிர்ந்து கொள்வதாக ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் கூறியுள்ளார். ஆபத்து அதிகரித்து வருவதாகவும், ஹங்கேரியர்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறுகிறார். மூலம்: ஹங்கேரிய வானொலி நிலையமான கொசுத் வானொலியில் ஓர்பன், ஐரோப்பிய பிராவ்தாவால் அறிவிக்கப்பட்டது. விவரங்கள்: போரிடும் கட்சிகளுக்கு இடையே போர் நிறுத்தம், அமைதி மற்றும் தொடர்ச்சியான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நாடுவதே ஹங்கேரியின் நிலைப்பாடு என்று ஓர்பன் கூறினார். ஐரோப்பா போருக்குள் தள்ளப்படும் என்றும், "விரைவில் அல்லது பின்னர் இறந்த, வீழ்ந்த இளைஞர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்" என்றும் ஹங்கேரியைப் போலவே மேலும் மேலும் நாடுகள் உணருவதாக அவர் கூறினார். ஒவ்வொரு தேசமும் மற்றொரு தேசத்துடன் கூட்டணியில் இருக்க விரும்புகிறதா என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் உரிமையைப் பற்றியும் ஓர்பன் பேசினார். ஹங்கேரியர்கள், மற்ற 26 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி கவலைப்படக்கூடாது என்று அவர் கூறினார்: "நாம் நமது சொந்தக் கருத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும், ஹங்கேரியர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்." ஹங்கேரியர்கள் தங்கள் தலைவிதியைப் பகிர்ந்து கொள்ள விரும்பாததால், உக்ரேனியர்களைப் போலவே அதே ஒன்றியத்தில் இருக்க விரும்பவில்லை என்று ஓர்பன் மீண்டும் வலியுறுத்தினார் - மேலும் அவரைப் பொறுத்தவரை, உக்ரேனியர்கள் ரஷ்யாவுடன் வாழ விதிக்கப்பட்டவர்கள். https://www.pravda.com.ua/eng/news/2025/10/03/8001111/

பிரான்சில் கடும் பொருளாதார நெருக்கடி: நாடு தழுவிய வேலைநிறுத்தம் - ஈபிள் கோபுரம் மூடல்!

1 week 1 day ago
இன்று ஐரோப்பா ஒரு இரஸ்சியாவுடனான ஒரு போருக்கு தயாராகி வருகிறது, அதற்காக மக்களை தயாராக்க முனைகிறது, அதற்காக ஊடகங்களை பயன்படுத்துகிறது. இரஸ்சியா 3 நாளில் உக்கிரேனை ஆக்கிரமித்து விடும் என இரஸ்சியா கூறியதாக (இங்கு யாழிலும் அதனையே இப்போதும் கூறிவருகிறார்கள்) ஒரு கருத்தினை உருவாக்கி ஊடகங்களில் வெளியிட்டார்கள், அதற்கான ஆதாரம் என எதுவும் இணையத்தில் இருந்திருக்கவில்லை. ஒரு புறம் இரஸ்சியாவினால் உக்கிரேனை கூட எதிர்க்க முடியாத காகித புலி என கூறிக்கொண்டு மறுபுறம் இரஸ்சியாவினால் ஒட்டு மொத்த ஐரோப்பாவிற்கும் ஆபத்து எனும் கருத்தையும் விதைக்கிறார்கள் (மக்கள் எந்த கூற்றை நம்புவது?). ஐரோப்பாவில் என்றுமில்லாதவாறு அதிகரிக்கும் இரஸ்சிய ட்ரோனினது ஊடுறுவல் என கூறுவதற்கு அப்பாவி மக்களின் சிந்தனை திறனையினை கேள்விக்குள்ளாக்கும் எவ்வாறு ஒரு இந்த விலை குறைந்த ட்ரோனினால் ஐரோப்பாவிற்கு பயணிக்க முடிகிறது எனும் ஆச்சரியத்திற்கு புதிது புதிதாக கதை விடுகிறார்கள். இவ்வளவும் எதற்காக? மக்கள் ஆதரவற்ற, சில தலைவர்கள் தங்கள் சுய நலத்திற்க்காக பல உயிர்களை பணயம் வைக்கிறார்கள், இந்த நிலையினை மக்கள் புரிந்து கொள்ள முடியாதவாறு ஊடகங்களை தம்வசமாக வைத்துள்ளார்கள் ஆனால் இதே ஊடகங்கள் முன்னுக்கு முரணாக கருத்துகளை தெரிவிக்கும் போதாவது மக்கள் புரிந்து கொள்ளமுடியாதவாறு ஒற்றை பார்வை கொண்ட ஒரு சமூகமாக மாறினால் அதற்காக உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தினை பணயம் வைக்கும் சமூகமாக உருவாகும் நிலைக்கு எம்மை நாமே வலிந்து தள்ளுகின்றோம். போரினால் நேரடியாக பாதிப்படைவது சாதாரண மக்களே, அரசியல் வாதிகள் அல்ல.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

1 week 1 day ago
https://www.facebook.com/share/19qr18tmmk/?mibextid=wwXIfrZoho ஆப்பிற்கு தமிழ் பெயரா? நல்லாவே இல்லை மாத்துங்க.. ஸ்ரீதர் வேம்புவிற்கு வடஇந்தியர்கள் நெருக்கடி! #Arattai #Zoho #SridharVembu #Whatsapp #NewsUpdate #Oneindia #OITamil

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

1 week 1 day ago
குமாரசாமி, இதுக்கெல்லாம் கேலிச்சித்திரம் வரைவதோ AIஇல் கேட்டு வாங்கிப் போடுவதோ நன்றாக இருக்காது. நாகரீகமாகவும் இருக்காது. உதாரணத்துக்கு சென்ற வருடம் கள்ளக்குறிச்சியில் (விசச்)சாரயம் குடித்து 67 பேர் இறந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்ராலின் இறந்த குடும்பங்களும் தலா பத்து இலட்சம் கொடுத்ததுக்குமே நான் ஒன்றுமே வரையவில்லையே.

இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!

1 week 1 day ago
காசேதான் கடவுளடா படத்தில் இந்தப் பாடலை சுசிலா பாடியிருந்தார், மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி. இசையில், பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். அப்போது இலங்கை தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையியில் இந்தப் பாடலை கேட்கும் போது, சில வரிகளுக்குள் மாற்றங்கள் இருந்தது. இந்த மாற்றங்களுக்கான காரணம் தணிக்கையாகும். படம் தணிக்கைக்கு செல்லும் முன்னரே இசைத்தட்டு வெளியிடப்படுவது பொதுவாக இருந்தது. வானொலியில் இந்தப் பாடல் ஒலிக்கும்போது, “எங்கெங்கு தொட்டால் என்னென்ன இன்பம் அங்கங்கே தொட வேண்டும் கை பதமாக..." எனப் பாடல் வரிகள் இருக்கும். ஆனால், திரைப்படத்தில் "எங்கெங்கு வந்தால் என்னென்ன இன்பம் அங்கங்கு வர வேண்டும் என் நிழலாக..." என்று இருக்கும்
Checked
Mon, 10/13/2025 - 00:04
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed