புதிய பதிவுகள்2

விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் நீதியான விசாரணை தேவை - அருண் சித்தார்த்

3 months 1 week ago
இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்தின் காலத்திலேயே அடையாளம் காணப்பட்டு, வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு சாட்சிகளால், குற்றவாளிகளால் ஒப்புக்கொண்டு, அடையாளகாட்டி, அகழப்பட்டு,உறுதிப்படுத்தப்பட்டு பெயர் விவரங்கள் கொடுக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு மேலும் கிளறினால் தங்கள் கொலைகள் வெளியே வருமெனப்பயந்து அகழ்தல், பொறுப்புக்கூறல் கைவிடப்பட்டு இப்போ, மீண்டும் தொடர்கிறது. இவை யாவும் சம்பந்தப்பட்ட காலத்தில் தொடங்கி தொடர்கின்றன, மறுப்பதற்கோ மறைப்பதற்கோ இல்லை. அவைக்கு சாட்சியாக விசாரணைக்கோப்புகள் இன்னும் உள்ளன. ஆனால் அருண் என்பவரோ, அவரின் மனைவி என காண்பிக்கப்படுபவரோ கூறப்படும் காலத்தில், அங்கே பிரசன்னமாகி இருந்தது, இந்திய இலங்கை இராணுவமும் இவர் போன்ற ஒட்டு ஆயுதக்குழுக்களும். நாலாயிரம் பேர் என்கிறார், அவர்களின் பெயர் விபரங்கிகள் வெளிவரவில்லை, ஆதாரங்கள் இல்லை, சாட்சிகளில்லை, முறைபாடுகளில்லை, விசாரணையேதும் நடைபெறவில்லை, காணாமற் போனவர்களை தேடி எடுக்கப்படும் போராட்டங்களில் கூட இவர்கள் யாரும் பங்குபற்றியதாக தகவலேதுமில்லை. சம்பவம் நடந்ததாகஇவர்கள் கூறும் காலப்பகுதியில் புலிகள் அதிகாரத்திலில்லை, அவர்களே மறைந்து வாழ்ந்த, வேட்டைடையாடப்படும் காலத்தில் அவர்கள் பிரபல்யமான இடத்தில், பகிரங்கமாக அலுவலகம் நடத்தினார்கள் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? அந்தக்காலத்தில் யார் பிரசன்னமாகியிருந்தனர் என்று தெரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இவர்களின் வயதும் இருக்கவில்லை. யாரோ சொன்னார்கள் என்பது இவரது தர்க்கம். அந்த யாரோ என்பது யார்? அவர் ஏதும் ஒட்டுக்குழுவை சார்ந்து இந்தக்கொலைகளை நடத்தி தப்பிக்கும் நோக்கில் இவர்களை வழிநடாத்துகிறாரா? எந்த ஆதாரமுமில்லாமல் நடைமுறைகளுமில்லாமல் இப்போ திடுதிப்பென்று வந்து ஒரு குற்றச்சாட்டை வைப்பது அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒரு காரணமே. இவரை கஷ்ரப்பட்டு படிக்க வைத்த தந்தையாரை தலைகுனியச்செய்யும் செயல். காரணம் சொல்லும் பொய்யை கூட பொருந்தச்சொல்லவே தெரியவில்லை இவரால். தன்னை சமுதாயம் தள்ளி வைத்தது என்பது இவரது கற்பனை. இவரது வக்கிரப்பேச்சு, செயலே அதற்கான காரணம். சம்பாதிக்க அப்பப்போ ஏதோ ஒன்றை தானே தேடிக்கொண்டிருக்கிறார். வயிற்றுக்கு வேணுமே! பாவம் ஏதோ கற்பனையில் வாழ்ந்து ஏமாற்றம் தாங்காமல் இப்படி ஒரு சம்பவத்திற்கு காத்திருந்து,பின்னால் ஓடிச்சென்று பிழைப்பு நடத்துகிறார். அதை உணரும் தன்மை கூட இல்லாத ஜென்மம் இது!

உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது

3 months 1 week ago
நீங்கள் சொல்லாமலே எனக்குத்தெரியும் சிறியர், நீங்கள் ஒரு வெள்ளைபேப்பர். கஸ்ரம்சிலை உங்களை சோதிக்க வேண்டிய தேவை வைக்க மாட்டீர்களென்பது. அதிருக்க; பக்கத்து வீட்டுக்காரிக்கு பிடித்தமானது எதையாவது வீடுக்குத்தெரியாமல் எடுத்து வரவில்லையே? அங்கு பிடிபடாமல் முக்கியமான சோதனைச்சாவடியில் சிக்கி முழிக்கப்போகிறீர்களோ என்கிற பயத்தால் கேட்டேன்! பயணக்களையில் மறந்து கோட்டை விட்டிட்டு மாட்டுப்படாதீர்கள். உங்கள்மேலுள்ள அக்கறையினால் சொல்கிறேன்.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

3 months 1 week ago
நீங்களும் கஞ்சா கப்ஸா கதைகள் சொல்ல ஆரம்பித்து விட்டீர்களா?🤣. George Floyd கொலையில் எந்த அமெரிக்க ஜனாதிபதி பதவி விலகினார்?

நான் மறுபிறவியெடுப்பேன் - தலாய்லாமா

3 months 1 week ago
தலாய்லாமாவின் வாரிசு தமது அங்கீகாரத்துக்குள் வரவேண்டும் என சீனா கூறுகின்றது. சீனாவிற்கு வெளியில் உருவாகக்கூடிய வாரிசை தாம் அங்கீகரிக்கோம் என்கிறது சீனா. சீன இறையாண்மை, கலாச்சாரம், பண்பாடு இவற்றுடன் ஒத்திசையக்கூடிய தலாய்லாமாவை கொண்டுவருவார்களா என்பது சந்தேகம்.

ட்ரம்பிற்கு மிகப்பெரிய வெற்றி; 4.5 டிரில்லியன் டொலர் மதிப்புள்ள சட்டமூலம் நிறைவேற்றம்!

3 months 1 week ago
உலக அளவில் ஊடகங்கள் டிரம்ப் ஐயாவினை அவமானப்படுத்தியதை நினைத்து பார்க்கின்றேன். கம்பி எண்ணப்போகின்றார். உள்ளே வைத்து போடப்போகின்றார்கள். மீள முடியாத சட்டப்பிடியில் அவரது சரிதம் முடிகின்றது என அவரவர் கற்பனை வளர்த்தார்கள். சிங்கம் சிலிர்த்து எழுந்தது. இப்போது உலகின் அதிகார பீடம் டிரம்ப் ஐயாவிடம். மாற்றம் ஒன்றே மாறாதது. 😁

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
இவை மனித எலும்புக்கூடுகள் என்பதை அடையாளம் கண்டுள்ளார்களா அல்லது இவை எவருடைய எலும்புக்கூடுகள் என அவற்றுக்குரிய தனிநபர்களை அடையாளம் கண்டுள்ளார்களா?

இலங்கை போரின்போது சரணடைந்த 29 சிறார்கள் புதைக்கப்பட்டார்களா?

3 months 1 week ago
பட மூலாதாரம், BBC SINHALA கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 ஜூலை 2025, 10:55 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துப்பாத்தி பகுதிகளில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியில் சிறுவர்களின் எலும்புகள், பொம்மைகள், புத்தகப் பைகள் கிடைத்துள்ள நிலையில், இவை இறுதி யுத்தக் காலத்தில் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகளுடையதா என்ற சந்தேகத்தை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எழுப்பியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இலங்கையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 40 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 34 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சட்ட மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார். அத்துடன், மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாட்சிப் பொருட்கள் வழக்கு எண்களின் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அதேவேளை, குழந்தையொன்றின் மனித எலும்புக்கூடொன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள குழந்தைகளின் எலும்புக்கூடுகளை தோண்டி எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் சரணடைந்த 29 குழந்தைகள் கொல்லப்பட்டனரா? சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களின் எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக தோண்டி எடுக்கப்பட்டு வருகின்ற பின்னணியில், இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் தமது பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா தெரிவிக்கின்றார். இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களின் பெயர் விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றை லீலாதேவி ஆனந்த நடராஜா தயாரித்துள்ளார். இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்களில் பெரும்பாலானோர் இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமலாக்கப்பட்ட சிறார்களுக்கு இன்று வரை என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா இந்த நிலையில், சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து சிறார்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்படுவதுடன், அந்த இடத்திலிருந்து சிறுவர்கள் பயன்படுத்தும் புத்தகப் பை, பொம்மை, பாதணி, ஆடை என்ற வகையிலான சில சாட்சிப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சிறார்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வெளியிடுகின்றனர். அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை ராணுவம் முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். பெற்றோருடன் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழுந்தைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,SRI LANKA ARMY படக்குறிப்பு, இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே எலும்புகளுக்கு இறுதிச் சடங்கா? டி.என்.ஏ பரிசோதனை செய்வது பற்றி கேள்வி எழுப்பிய போது, ''டி.என்.ஏ பரிசோதனை செய்து அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. தாய், தந்தையருடன் சரணடைந்த 29 குழந்தை பிள்ளைகள் எங்கேயோ ஒரு இடத்தில் உயிர் வாழ்ந்தால், அவர்களை இனங்காண்பதற்கு டி.என்.ஏ பரிசோதனை தேவை. இது எனது தனிப்பட்ட கருத்து. எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்து, நாங்கள் அவர்களுக்குரிய இறுதி சடங்குகளை செய்வதற்கான தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. அந்த எலும்புக்கூடாக்கியவர்கள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?. அதில் தான் எங்களுக்கு அக்கறை இருக்கின்றதே தவிர, டி.என்.ஏ பரிசோதனை செய்து அவர்களுக்கு கிரியைகள் செய்ய வேண்டிய தேவை இல்லை. இதை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் மீள் நிகழாமைக்கான ஒரேயொரு வழி. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும்.'' என லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார். டி.ஏன்.ஏ பரிசோதனையை செய்ய வேண்டாம் என தான் கூறவில்லை என தெரிவித்த அவர், நீதிக்கான பயணத்தில் எந்தவித வேக குறைப்பும் இடம்பெறக்கூடாது என்றார். சித்துபாத்தி புதைக்குழிக்கு கடும் பாதுகாப்பு இலங்கையில் சுமார் நான்கு தசாப்த காலப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகளை விடவும், சித்துபாத்தி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளுக்கு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேரடி பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட தரப்பினரை தவிர, ஏனையோருக்கு செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், ஏ-9 வீதியில் சித்துபாத்தி மனிதப் புதைக்குழிக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தவும் பொலிஸார் தடை விதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதேவேளை, இலங்கை மின்சார சபையின் உதவியுடன் மின்சார இணைப்பு எடுக்கப்பட்டு, இரவு வேளையிலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது. இந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் முழு நேரமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளும் மேற்பார்வை செய்து வருவதை காண முடிகின்றது. யாழ்ப்பாணத்தின் சர்ச்சைக்குரிய மனிதப் புதைக்குழியான செம்மணி மனிதப் புதைக்குழிக்கு அருகிலேயே இந்த சித்துபாத்தி மனிதப் புதைக்குழியும் கண்டுபிடிக்கப்பட்டு, அகழப்பட்டு வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்கள், ராணுவத்தினால் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக அப்போதைய ராணுவ வீரர் ஒருவரின் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த பகுதி தோண்டப்பட்டது. இந்த நிலையில், அங்கிருந்து பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கை ஒரு கட்டத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில், தற்போது செம்மணியை அண்மித்த சித்துபாத்தி இந்து மயானத்தில் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டு தோண்டப்பட்டு வருகின்றது. இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. செம்மணி பகுதியிலுள்ள பழைய மனிதப் புதைக்குழி மீண்டும் தோண்டப்படுமா என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜனிடம் பிபிசி தமிழ் வினவியது. அவ்வாறான எண்ணம் இதுவரை கிடையாது என அவர் பதிலளித்தார். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற சித்துபாத்தி அகழ்வு பணிகள் முடிவடைந்ததை அடுத்தே அது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். செம்மணி பழைய மனிதப் புதைக்குழியை மீண்டும் தோண்டுமாறு இதுவரை எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறினார். புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் இலங்கையில் தோண்டத்தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - என்ன நடக்கிறது? இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்? இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி சித்துபாத்தி பகுதியில் செய்மதி ஊடாக அடையாளம் காணப்பட்ட பகுதியொன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டப்பட்டு வருகின்றது. இந்த இடத்திலிருந்து ஆடையொன்றை ஒத்ததான துணியொன்றை அகழ்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். அத்துடன், அந்த இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு தற்போது தோண்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்த இடத்திலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த பகுதி தோண்டப்பட்டு வருகின்றது. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு எலும்புகளுக்கு இறுதிச் சடங்கா? டி.என்.ஏ பரிசோதனை செய்வது பற்றி கேள்வி எழுப்பிய போது, ''டி.என்.ஏ பரிசோதனை செய்து அவற்றை சேமித்து வைக்க வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. தாய், தந்தையருடன் சரணடைந்த 29 குழந்தை பிள்ளைகள் எங்கேயோ ஒரு இடத்தில் உயிர் வாழ்ந்தால், அவர்களை இனங்காண்பதற்கு டி.என்.ஏ பரிசோதனை தேவை. இது எனது தனிப்பட்ட கருத்து. எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை செய்து, நாங்கள் அவர்களுக்குரிய இறுதி சடங்குகளை செய்வதற்கான தேவை எங்களுக்கு ஏற்படவில்லை. அந்த எலும்புக்கூடாக்கியவர்கள் யார்? அவர்களுக்கு என்ன தண்டனை?. அதில் தான் எங்களுக்கு அக்கறை இருக்கின்றதே தவிர, டி.என்.ஏ பரிசோதனை செய்து அவர்களுக்கு கிரியைகள் செய்ய வேண்டிய தேவை இல்லை. இதை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அதுதான் மீள் நிகழாமைக்கான ஒரேயொரு வழி. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டும்.'' என லீலாதேவி ஆனந்த நடராஜா கூறினார். டி.ஏன்.ஏ பரிசோதனையை செய்ய வேண்டாம் என தான் கூறவில்லை என தெரிவித்த அவர், நீதிக்கான பயணத்தில் எந்தவித வேக குறைப்பும் இடம்பெறக்கூடாது என்றார். சித்துபாத்தி புதைக்குழிக்கு கடும் பாதுகாப்பு இலங்கையில் சுமார் நான்கு தசாப்த காலப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 20திற்கும் அதிகமான மனிதப் புதைக்குழிகளை விடவும், சித்துபாத்தி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளுக்கு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேரடி பாதுகாப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட தரப்பினரை தவிர, ஏனையோருக்கு செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் முழுமையாக தடை விதித்துள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், ஏ-9 வீதியில் சித்துபாத்தி மனிதப் புதைக்குழிக்கு முன்பாக வாகனங்களை நிறுத்தவும் பொலிஸார் தடை விதித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அதேவேளை, இலங்கை மின்சார சபையின் உதவியுடன் மின்சார இணைப்பு எடுக்கப்பட்டு, இரவு வேளையிலும் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிந்தது. இந்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் முழு நேரமாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகளும் மேற்பார்வை செய்து வருவதை காண முடிகின்றது. யாழ்ப்பாணத்தின் சர்ச்சைக்குரிய மனிதப் புதைக்குழியான செம்மணி மனிதப் புதைக்குழிக்கு அருகிலேயே இந்த சித்துபாத்தி மனிதப் புதைக்குழியும் கண்டுபிடிக்கப்பட்டு, அகழப்பட்டு வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மக்கள், ராணுவத்தினால் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக அப்போதைய ராணுவ வீரர் ஒருவரின் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அந்த பகுதி தோண்டப்பட்டது. இந்த நிலையில், அங்கிருந்து பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கை ஒரு கட்டத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறான பின்னணியில், தற்போது செம்மணியை அண்மித்த சித்துபாத்தி இந்து மயானத்தில் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டு தோண்டப்பட்டு வருகின்றது. இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. செம்மணி பகுதியிலுள்ள பழைய மனிதப் புதைக்குழி மீண்டும் தோண்டப்படுமா என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜனிடம் பிபிசி தமிழ் வினவியது. அவ்வாறான எண்ணம் இதுவரை கிடையாது என அவர் பதிலளித்தார். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற சித்துபாத்தி அகழ்வு பணிகள் முடிவடைந்ததை அடுத்தே அது தொடர்பில் சிந்திக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். செம்மணி பழைய மனிதப் புதைக்குழியை மீண்டும் தோண்டுமாறு இதுவரை எவரும் கோரிக்கை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறினார். புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் இலங்கையில் தோண்டத்தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - என்ன நடக்கிறது? இலங்கை ஜனாதிபதியின் பேச்சு சர்ச்சை ஆவது ஏன்? - இறுதிப்போர் குறித்து என்ன பேசினார்? இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி சித்துபாத்தி பகுதியில் செய்மதி ஊடாக அடையாளம் காணப்பட்ட பகுதியொன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டப்பட்டு வருகின்றது. இந்த இடத்திலிருந்து ஆடையொன்றை ஒத்ததான துணியொன்றை அகழ்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். அத்துடன், அந்த இடத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு தற்போது தோண்டப்பட்டு வருகின்றன. மேலும், இந்த இடத்திலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த பகுதி தோண்டப்பட்டு வருகின்றது. செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைக்குழி விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgl3ynwg1eo

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
செம்மணி மனித புதைகுழி : இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் : மற்றுமொரு புதிய குழியில் மண்டையோடு அடையாளம் 05 JUL, 2025 | 08:02 PM யாழ். செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் புதிதாக அகழப்படும் புதைகுழியிலும் மண்டையோ ஒன்று அவதானிக்கப்பட்டதுடன் இன்று 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பத்தாம் நாள் இன்று சனிக்கிழமை (5) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது. இதுவரை மொத்தமாக 45 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 42 மனித எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இதேவேளை புதிதாக இன்றையதினம் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறன. செய்மதிப்படம் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு அகழப்படும் சந்தேகத்துக்கிடமான புதிய பகுதியில் மண்டையோடு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/219259

சம்பவத்திலும் ஒரு சம்பாத்தியம்.

3 months 1 week ago
சம்பவத்திலும் ஒரு சம்பாத்தியம். கிளிபோல வளர்த்த ஒரு பெண் கால நேரம் வந்ததும் கோலாகலமாக கல்யாணம் செய்து வைத்தனர் வாழ்வில் முதலடி எடுத்து வைக்கிறாள் கண்ணியமாய் காக்க வேண்டிய கண்வன் காமக் கொடூரன் ஆகிறான். துணைக்கு மாமனார் மாமியார் அவள் பணம் காய்க்கும் மரம் என மீண்டும் மீண்டும் நச்ச்ரிக்கின்றனர் .வீட்டுச்சிறை புறக்கணிப்பது அடக்குமுறை சைக்கோவுடன் வாழ்கை எரிதழலில்வீழ்ந்தபுழுவானாள். "என்னால் முடியலை அப்பா" கார் எடுத்து கோவில் சென்ற பிள்ளை வசதி வாய்ப்பு பணத்துக்குபஞ்சமில்லை ஒரு கண்காணாத இடத்தில யார் கண்ணிலும் படாமல் ஒரு இல்லிடத்தில் வாழ்ந்திருக்கலாம் .சடடத்தை நாடியிருக்கலாம். மேலே படித்து தான் காலில் நிற்க முயன்று இருக்கலாம். பாவம் எல்லோருக்கும் வாழ்க்கை நாம் நினைக்குமாறு நடப்ப தில்லை தாய்வீடு சென்றாலும் அங்கு " அழைக்கும் பேர்வழி" என அவளை விட்டு வைக்க வில்லை .போய் நச்சரித்தார்கள் .பாவம் நொந்து போன maனம் என்ன செய்யும். . மிகவும் மன வேதனைப்படடாள் ஆறுதல்கூற எவரும் இல்லை ..ஊர் என்ன சொல்லும் உறவென்ன சொல்லும் என ஊருக்கா வாழ்ந்தீர்கள்?. வாழவும் முடியாது வெட்டி விடவும் முடியவில்லை. தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள். எங்கே அந்த ஊரவர்கள் எங்கே அந்த உறவுகள் மாண்ட உயிரை மீண்டும் தர முடியுமா ? தாய் தந்தை சகோதரனுக்கு மாறாத துயரம்.சமூக வலைத்தளங்கள் கூவி கூவி செய்தி போடடன தங்களுக்கு "வியூஸ்" வர வேண்டும் என முக புத்தகம் யூயூ டுயூப் இன்ஸ்டா என்று அத்தனை வகைக்கும் மெல்ல அவல் கிடைத்தது போல, எல்லோர் வாயிலும் நுழைந்தது காற்றை பறக்கிறது. போதும் நிறுத்துங்கள் சட்ட்ம் தான் கடமையை செய்யுங்கள் அவர்கள் கர்மாவாழ்வு முழுதும் துரத்தட்டும் .ஆயிரம் காலத்துப்பயிர் என்பர் எவ்வ்ளவு தூரம் விசாரித்தார்கள்? .அவன் சைக்கோவாம் வேலையற்றவனாம் பூட்டிய அறைக்குள் இருபவனாம் ஆனால் தாய் தந்தைக்கு தெரியாதாம். என்ன பிள்ளை பெத்தது வளர்த்து வைத்திருக்கிறார்கள். அப்பாவியின் உயிரை எடுக்கவா அதுவும் இக்காலத்தில் இப்படி படட பிற போக்குத் தனமா ? தயவு செய்து மீண்டும் பெற்றவர்களைக் பேசி பேசியே காயப் படுத்தாதீர்கள்.மீடியாவுக்கு முகம் காட்டுவதை பேட்டி எடுப்பதை குறையுங்கள்.காலத்துக்கு காலம் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. சடடமும் ஒழுங்கும் முறையாக பின்பற்றபடடால் நாடு சிறக்கும். தேவை குற்றங்களுக்கு கடுமையான தண்டனை. பிரச்சினைகளுக்கு மரணம் தீர்வல்ல

அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி

3 months 1 week ago
டெக்சாஸில் உயிர்களை பறித்த பேரழிவு வெள்ளம் - பாதிப்பை காட்டும் 12 படங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு கிறிஸ்தவ கோடைக்கால முகாமில் இருந்த சிறுமிகளில் 23 முதல் 25 பேர் வரை காணவில்லை. இந்தச் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் பயங்கரமானது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இந்த திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர். பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, மக்கள் வெள்ளத்தில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக உயர்வான இடத்திற்குச் சென்றுள்ளனர் டெக்ஸாஸ் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் திடீரென ஒரு மணிநேரத்திற்குள் 26 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். சான் அன்டோனியோவின் வடமேற்கே உள்ள கெர்வில்லேவில் கேம்ப் மிஸ்டிக் எனப்படும் கிறிஸ்தவ கோடைக்கால முகாமுக்குச் சென்ற சிறுமிகளில் 23 முதல் 25 சிறுமிகளைக் காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் வெள்ளத்தை "அசாதாரணமான பேரழிவு" என்று கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "இதுவரை மொத்தம் 237 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 167 பேர் ஹெலிகாப்டர் மூலமாக மீட்கப்பட்டனர்" என்று பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. காணாமல் போன சிறுமிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றுப்படி, ஹெலிகாப்டர், டிரோன்கள், படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்ட பல கவுன்டிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பல கவுன்டிகளில் வீடுகள், கார்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதைக் காணொளிகளில் காண முடிகிறது. பல கவுன்டிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுமார் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்ட கிறிஸ்தவ கோடைக்கால முகாமில் 20க்கும் மேற்பட்ட சிறுமிகளைக் காணவில்லை வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்து கிடப்பதைக் காணொளிகளில் பார்க்க முடிகிறது. காணாமல் போனவர்கள் அனைவரையும் கண்டுபிடிக்கும் வரை இரவு, பகல் பார்க்காமல் மீட்புப் பணி தொடரும் என டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபட் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் சுதந்திர தினத்தைக் கொண்டாட மக்கள் தயாராகியிருந்த நிலையில், இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. டெக்சாஸின் துணைநிலை ஆளுநர் டான் பேட்ரிக் பேசும்போது, "இது ஓர் அழிவுகரமான வெள்ளம், சொத்துகளையும் துரதிர்ஷ்டவசமாக உயிர்களையும் பறித்துவிட்டது" எனக் குறிப்பிட்டார். மேலும், "குழந்தைகள் காணாமல் போனதாலேயே அவர்கள் இறந்திருக்கலாம் என்று அர்த்தமில்லை. அவர்கள் தொடர்புகொள்ள முடியாத நிலையில்கூட இருக்க வாய்ப்புள்ளது" என்றும் கூறினார். பட மூலாதாரம்,CITY OF KERRVILLE POLICE DEPARTMENT படக்குறிப்பு, கெர்வில் நகர காவல்துறை, அதன் மீட்புக் குழுக்கள் இரவு முழுவதும் உழைத்ததாகக் கூறுகிறது. கேம்ப் மிஸ்டிக் முகாம், தங்களிடம் மின்சாரம், தண்ணீர் இல்லை என்றும் சாலை அடித்துச் செல்லப்பட்டதால் கூடுதல் உதவிகளைப் பெற முடியாமல் சிரமப்படுவதாகவும் கூறியுள்ளது. பட மூலாதாரம்,CITY OF KERRVILLE POLICE DEPARTMENT படக்குறிப்பு, "எங்கள் மக்கள் அனைவரையும் கண்டுபிடிக்கும் வரை" மீட்புப் பணிகள் தொடரும் என்று கெர்வில் நகர காவல்துறை உறுதி அளித்துள்ளது இந்த வெள்ளம் குறித்துப் பேசிய கெர் கவுன்டியின் மூத்த அதிகாரி ராப் கெல்லி, தங்களிடம் எச்சரிக்கை அமைப்பு இல்லை என்று கூறினார். மேலும், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட இந்த வெள்ளம் 1987ஆம் ஆண்டு கெர் கவுன்டியின் தெற்கே உள்ள கம்ஃபோர்ட் நகரில் கிறிஸ்தவ முகாம் பேருந்தில் 10 இளம் வயதினர் உயிரைப் பறித்த வெள்ளத்தைவிட தீவிரமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர். ஆனால், மழைக்கு முந்தைய வானிலை முன்னறிவிப்புகள் "இவ்வளவு மழை பெய்யும் என்று கணிக்கப்படவில்லை" என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் செய்திகளின்படி, டெக்சாஸ் அவசர நிலை மேலாண்மைப் பிரிவு வியாழக்கிழமை பல கூட்டங்களை நடத்தியது. ஆனால் தேசிய வானிலை சேவை இவ்வளவு பெரிய மழையைக் கணிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 20 செமீ வரை மழை பெய்யும் என்றே கணிக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c784zdv79eko

வவுனியா வடக்கில் மகாவலி திட்டத்தின் கீழ் புதிதாக 350 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம்

3 months 1 week ago
Published By: DIGITAL DESK 2 05 JUL, 2025 | 08:08 PM வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு பகுதியில் மகாவலி திட்டத்தின கீழ் 350 ஏக்கர் நிலம் தமிழ் மக்களிடம் இருந்து பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மகாவலி திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப் பரப்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் கொக்கச்சான்குளம் அபகரிக்கப்பட்டு கலாபோகஸ்வேவ என்னும் பெயரில் புதிய குடியேற்றம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மற்றொரு கிராமமான திரிவைச்சகுளம் பகுதியில் 350 ஏக்கர் நிலம் மகாவலி வலயம் என்ற போர்வையில் உள்வாங்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிலத்தை தென்பகுதி நிறுவனம் ஒன்றுக்கும், பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தமிழ் மக்களின் நிலங்கள் மகாவலி திட்டம் என்ற போர்வையில் கபளீகரம் செய்யப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெறுவதை தடுக்க முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். https://www.virakesari.lk/article/219241

புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்

3 months 1 week ago
1) இன்றைய தினம் 05/07/2025 வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவும் முகமாக செபஸ்தியாம்பிள்ளை லோகேஸ்வரன் (கனடா (யாழ்ப்பாணம்) அவர்கள் 50000 ரூபாவை திரு சி.லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளார். திரு செபஸ்தியாம்பிள்ளை லோகேஸ்வரன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது

3 months 1 week ago
பாரைக் கருவாடு "வாசம்" வீசாதா? முழு சாப் பாட்டுச் சாமான்களையும் கட்டிக் கொண்டு வந்து விட் டீர்கள்.( எக்ஸ்ட்ரா லக்கேஜை )😃

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

3 months 1 week ago
https://www.vikatan.com/government-and-politics/governance/special-story-about-tiruppuvanam-ajithkumar-lockup-death31 கொடூரங்கள்! - முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை! எஸ்.மகேஷ்ந.பொன்குமரகுருபரன் 7 Min Read “கடந்த நான்கு ஆண்டுகளில், 31 காவல் மரணங்கள் நடந்திருக்கின்றன. 2021-ம் ஆண்டில் 4 பேரும், 2022-ம் ஆண்டில் 11 பேரும், 2023-ல் ஒருவரும், 2024-ல் 10 பேரும், 2025-ம் ஆண்டில் இதுவரை 5 பேர் என மொத்தம் 31 பேர் காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் உயிரிழந்திருக்கிறார்கள். Published:Today at 1 AMUpdated:Today at 1 AM ஸ்டாலின் Join Our Channel 67Comments Share 31 கொடூரங்கள்! - முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை! Listen to Vikatan stories on our AI-assisted audio player “உடலில் ஒரு இடம்கூட விடாமல் அடித்திருக்கின்றனர். வாயில் மிளகாய்ப்பொடி தூவியிருக்கின்றனர். வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர். ஒருவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இந்த அளவுக்குக் கொடூரமாகத் தாக்கியிருக்க மாட்டார்கள். காயங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. மாநில அரசே, தன் குடிமகனைக் கொலைசெய்திருக்கிறது...” - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சமீபத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கில், ஆதங்கத்தோடு சொன்ன வார்த்தைகள்தான் இவை! போலீஸ் அத்துமீறல்களால், வன்முறைகளால் மரணங்கள் ஏற்படுவது இது முதன்முறையல்ல. அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடிவரும் எதிர்க்கட்சிகள், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன. ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களிலோ, 31 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. ‘யாருக்கும் கட்டுப்படாத காவலர்கள், ஒழுங்கீனம் பெருகிப்போன காவல்துறைக் கட்டமைப்பு, அடியாட்களாக மாறிப்போன தனிப்படை, அவர்களைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத உயரதிகாரிகள்’ எனக் காவல்துறை மீது தொடர்ந்து பொதுமக்களால், மனித உரிமை அமைப்புகளால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வளவு நடந்தும், காவல்துறையில் எந்த மாற்றமும் நிகழாதிருப்பதால், ‘தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா..?’ என்கிற சந்தேகக் கேள்வியை எழுப்புகிறார்கள் எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும், மனித உரிமை ஆர்வலர்களும். அஜித்குமாரின் மரணத்தில் என்ன நடந்தது... காவல் மரணங்கள் ஏன் தொடர்ந்து நிகழ்கின்றன... காவல்துறையைக் கட்டுப்படுத்த ஏன் தவறுகிறார் முதல்வர்..? இந்தக் கேள்விகளுக்கு விடைதேடிக் களமிறங்கினோம். அஜித்குமார் “நான் திருடவே இல்லை சார்..!” சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலில், தற்காலிகக் காவல் ஊழியராகப் பணிபுரிந்துவந்தவர் அஜித்குமார். கடந்த ஜூன் 27-ம் தேதி, கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண், காரில் வைத்திருந்த தன் அம்மா சிவகாமியின் ஒன்பதரை பவுன் நகைகளையும் 2,600 ரூபாய் பணத்தையும் காணவில்லை’ என்றும், காரின் சாவியை அஜித்குமாரிடம்தான் கொடுத்ததாகவும்’ திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தச் சமயத்தில் நகையைப் பறிகொடுத்ததற்கு வெறும் சி.எஸ்.ஆர் மட்டுமே போடப்பட்டிருந்தது. எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை. அடுத்த ஒரு சில மணி நேரத்தில் நடந்ததுதான், ஒரு பெரும் கொடூரத்துக்கே தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கிறது. மடப்புரம் சுற்றுவட்டாரப் பொதுமக்களும், மனசாட்சியுள்ள காவலர்கள் சிலரும் அன்றைய தினம் நடந்த நிகழ்வுகளைக் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார்கள். “தான் எதிர்பார்த்ததுபோல தன் புகார்மீது திருப்புவனம் காவல்துறையினர் ‘அதிரடியாக’ எதுவும் செய்யவில்லை என்றதும், யாரோ ஒரு சீனியர் அதிகாரிக்கு போனில் தகவல் தெரிவித்திருக்கிறார் நிகிதா. அந்த சீனியர் அதிகாரி கொடுத்த உத்தரவில் வியர்த்துப்போன மானாமதுரை டி.எஸ்.பி-யாக இருந்த சண்முகசுந்தரம், உடனடியாகத் தன்னுடைய தனிப்படை போலீஸாரை விசாரணைக்கு அனுப்பியிருக்கிறார். தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் விடுப்பு என்பதால், ஏட்டு கண்ணன் தலைமையில் காவலர்கள் பிரபு, ராஜா, சங்கர மணிகண்டன், ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய ஆறு பேரும் ஜூன் 27-ம் தேதி, இரவு 8:30 மணிக்கே அஜித்குமாரிடம் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். விசாரணை என்றால், வாயால் அல்ல. ஒரு தோப்புக்கு அஜித்குமாரை அழைத்துச் சென்ற தனிப்படை, அவரை அடித்து உதைத்திருக்கிறது. திருடிய நகையை ஒப்படைக்கச் சொல்லி கொடுமைப்படுத்தியிருக்கிறது. ‘நான் திருடவே இல்லை சார்...’ என அஜித்குமார் எவ்வளவோ கதறியும் விடாத காவலர்கள், அன்றைய தினம் அவரோடு தொடர்பிலிருந்த தினகரன், அருண், லோகேஸ்வரன் எனப் பலரையும் தூக்கிக்கொண்டு வந்து கண்டபடி அடித்திருக்கிறார்கள். அஜித்குமாரின் வீட்டை எந்தவித வாரன்ட்டும் இல்லாமல் சோதனை செய்தவர்கள், அவருடைய தம்பி நவீன்குமாரையும் அழைத்துவந்து அடித்திருக்கிறார்கள். ஒரு விடுதிக்குப் பின்புறம், பேருந்து டெப்போவுக்கு அருகில், ஆற்றோரமிருக்கும் ஒத்தையடிப் பாதையில் எனப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்திருக்கிறது தனிப்படை. அதற்குள் விடிந்துவிட்டது. அஜித்குமார் மீது தாக்குதல் அடித்தே கொல்லப்பட்ட அஜித்குமார்... தாண்டவமாடிய ‘சைக்கோ’ தனிப்படை! பல மணி நேரம் அடித்தும், யாருக்குமே நகை பற்றிய தகவல் தெரியவில்லை என்றதும், காவலர்கள் ‘சைக்கோ’போல மாறத் தொடங்கியிருக்கிறார்கள். மற்றவர்களை அனுப்பிவிட்டு, அஜித்குமாரிடம் மட்டும் தொடர்ந்து விசாரித்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் காவலர்களின் அடியைத் தாங்கிக்கொள்ள முடியாத அஜித்குமார், ‘மடப்புரம் காளி கோயிலுக்குப் பின்புறம் இருக்குற மாட்டுக் கொட்டகையில நகை இருக்கு சார்...’ என்றிருக்கிறார். கோயிலுக்கு அருகில் சென்றுவிட்டால், ஊர் மக்கள் எப்படியும் தன்னைக் காப்பாற்றிவிடுவார்கள் என நம்பி அப்படிச் சொல்லியிருக்கிறார். ஆனால், அங்கு வந்து தேடியவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றதும் ஆத்திரமாகி, பி.வி.சி பைப்பை எடுத்து அஜித்குமாரைச் சகட்டுமேனிக்குத் தாக்கியிருக்கிறார்கள். அஜித்குமார் அழுது புரண்டும் ‘சைக்கோ’ காவலர்கள் அவரை விடவில்லை. அஜித்குமாரின் அலறல் சத்தம், சுற்றியிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் பலரையும் குலைநடுங்கச் செய்திருக்கிறது. எட்டிப்பார்க்கப் போனவர்களையும் மிரட்டி விரட்டியிருக்கிறது தனிப்படை. தண்ணீர் கேட்ட அஜித்குமாருக்கு, மிளகாய்ப்பொடியை வாயில் போட்டு தண்ணீரை ஊற்றியிருக்கிறார்கள். தொடர்ந்து தனிப்படை காட்டிய மிருகத்தனத்தால், மாலை 6 மணிக்கு மேல் நிலைகுலைந்துபோன அஜித்குமார், மாட்டுக் கொட்டகையிலேயே சரிந்து விழுந்திருக்கிறார். சிறுநீருடன் ரத்தமும் மலமும் வெளியேறி யிருக்கின்றன. அப்போதுதான் அடிப்பதை நிறுத்தியிருக்கிறார்கள். திடீரென நிசப்தமானவுடன், ஓடிப்போன பொதுமக்கள் அஜித்குமாரை ஆட்டோவில் தூக்கிப்போட்டு கிளினிக்குக்குக் கொண்டு செல்ல, உடன் தனிப்படையும் சென்றிருக்கிறது. ஆனால், ஆட்டோவிலேயே அஜித்குமாரின் உயிர் பிரிந்துவிட்டது. சிறிது நேரத்தில், போலீஸ் தாக்குதலில் அஜித்குமார் இறந்துவிட்ட தகவல் கசிய, மடப்புரம் வியாபாரிகளும் பொதுமக்களும் கொதித்துப் போய்விட்டார்கள். உடனே, கோயிலைச் சுற்றி யிருந்த அத்தனை கடைகளும் அடைக்கப்பட்டன. திருப்புவனம் காவல் நிலையம் முன்பாக பொது மக்கள் கூடிவிட்டனர். அப்போது, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அஜித்குமாரின் உடலை வைத்திருந்தால் பிரச்னை பெரிதாகும் எனக் கருதி, மதுரை இராசாசி அரசு மருத்து வமனைக்கு உடலைக் கொண்டுபோய்விட்டது தனிப்படை. ஸ்டாலின் சென்னையிலிருந்து வந்த உத்தரவு ஆளாய் பறந்த அரசு இயந்திரம்! போலீஸ் அராஜகத்தில் ஓர் உயிர் பலியானது எவ்வளவு கொடூரமானதோ, அதைவிடக் கொடூரமானது இந்த விவகாரத்தை மூடி மறைக்க ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தி.மு.க-வும் செய்த அடாவடிகள். 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றே அஜித்குமாரின் உடலைப் பிரேத பரிசோதனை செய்து எரித்துவிட, படாத பாடுபட்டது காவல்துறை. ‘விடிந்தால் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் முறையிடப்படும். பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டி வரும். அதற்குள்ளாக உடலை எரித்துவிடுங்கள்...’ என்று சென்னையிலிருந்து பறந்துவந்த உத்தரவை நிறைவேற்ற, ஆளாய் பறந்தது அரசு இயந்திரம். அஜித்குமாரின் குடும்பத்தினரிடம், தி.மு.க-வின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறனும், அவரின் அடிப்பொடிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களோடு சேர்ந்து டி.எஸ்.பி சண்முகசுந்தரமும் கடுமையாக அழுத்தம் கொடுத்திருக்கிறார். அந்தக் குடும்பம் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறது. அதற்குள்ளாக, எதிர்க்கட்சிகள் அனைத்தும் அஜித்குமாரின் காவல் கொலையைக் கண்டித்துவிட்டன. விவகாரமும் பெரிதாகிக்கொண்டே போனது. அஜித்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், ரொம்பவும் ஜாக்கிரதையாக உடலிலிருந்த 44 காயங்களையும் ஆவணப்படுத்தி விட்டனர். இரவு 10 மணிக்கெல்லாம் உடலை திருப்புவனத்துக்குக் கொண்டுவந்து, கையோடு இருந்து உடல் எரிந்த பிறகுதான் கிளம்பியது போலீஸ்” என்று நடந்த சம்பவங்களை விரிவாகச் சொன்னார்கள். பிரஷர் கொடுத்த சீனியர் அதிகாரி யார்? இந்தக் காவல் கொலை குறித்த செய்திகள் அனைத்தும் இப்போது வெட்டவெளிக்கு வந்துவிட்டன. இதில், காவல்துறையின் அலட்சியம், அதிகாரம், அத்துமீறல், திமிர், வன்முறை குறித்து ஏகப்பட்ட கேள்விகள் எழுகின்றன. ‘போலீஸ் தாக்குதலில் மகன் கொல்லப்பட்டதாக’ அஜித்குமாரின் தாயார் மாலதி அளித்த புகாரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாத காவல்துறை, கொலை செய்த தனிப்படைக்குத் தலைமை தாங்கிய காவலர் கண்ணன் அளித்த புகாரை மட்டும் பதிவுசெய்தது ஏன்... விசாரணையின்போது தப்பியோடப் பார்த்தார். தவறி விழுந்தவருக்கு வலிப்பு வந்துவிட்டது; அதில் இறந்துவிட்டார்’ எனக் கூசாமல் எப்படிப் பொய் சொன்னது போலீஸ்... நிகிதாவின் புகார் உண்மையானதா என்பதை விசாரிக்காமல், அவர் புகாரில் எஃப்.ஐ.ஆரும் போடாமல், அவசர அவசரமாகத் தனிப்படை விசாரிக்கச் சென்றது ஏன்... அவர்களுக்கு பிரஷர் கொடுத்த சீனியர் அதிகாரி யார்... அஜித்குமார் மீது குற்றப் பின்னணியோ, ஆதாரமோ இல்லாத நிலையில், இவ்வளவு கொடூரமாக அவரைத் தாக்கும் துணிச்சல் போலீஸுக்கு எப்படி வந்தது... இன்னும் கேள்விகள் வரிசைகட்டுகின்றன. ஆனால், யாரிடமும் பதில்தான் இல்லை. “அரசு, தன் குடிமகனைக் கொலை செய்திருக்கிறது!” அஜித்குமாரின் மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, கடந்த ஜூலை 1-ம் தேதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளீட் ஆகியோரின் அமர்வில், அஜித்குமாருக்கு நடந்த போலீஸ் சித்ரவதைகள் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்படவும், கொதித்தெழுந்துவிட்டனர் நீதிபதிகள். குறிப்பாக, தமிழக அரசையும் காவல்துறையையும் விளாசியெடுத்துவிட்டார் நீதிபதி சுப்பிரமணியம். “தனிப்படை போலீஸாருக்கு ஆர்டர் போட்டது யார்..?” என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்ட நீதிபதி சுப்பிரமணியம், அரசு, தன் குடிமகனையே கொலை செய்திருக்கிறது” எனக் கொதித்தார். பதற்றமான அரசுத் தரப்பு, காவலர்கள் சஸ்பெண்ட் விவரங்களைக் குறிப்பிட்டதோடு, “சி.பி.ஐ விசாரணைக்கும் நாங்கள் தயார்” என்றது. ஆனாலும் சாந்தமடையாத நீதிபதி, “இதைச் சாதாரண கொலை வழக்குப்போல விசாரிக்க முடியாது. மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் வழக்கின் விசாரணையை ஒப்படைக்கிறோம். அஜித்குமார் காவல் மரணம் குறித்து அவர் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும். ஜூலை 8-ல் அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, தன்னுடைய விசாரணையைத் தொடங்கியிருக்கிறார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ். இதற்கிடையே, அஜித்குமார் காவல் மரண வழக்கை, சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு. 31 கொடூரங்கள்... எண்ணிக்கையற்ற வன்முறைகள்! அஜித்குமாரின் காவல் மரணம் குறித்து, ‘மக்கள் கண்காணிப்பக’த்தின் இயக்குநர் ஹென்றி திபேனிடம் பேசினோம். “கடந்த நான்கு ஆண்டுகளில், 31 காவல் மரணங்கள் நடந்திருக்கின்றன. 2021-ம் ஆண்டில் 4 பேரும், 2022-ம் ஆண்டில் 11 பேரும், 2023-ல் ஒருவரும், 2024-ல் 10 பேரும், 2025-ம் ஆண்டில் இதுவரை 5 பேர் என மொத்தம் 31 பேர் காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், இந்த உயிரிழப்புகளை தமிழக காவல்துறையும் சிறைத்துறையும் ஒப்புக்கொள்வதில்லை. நாங்கள் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விசாரித்துத்தான் இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறோம். ‘31 மரணங்கள்’ என்று சொல்வதைவிட, அவற்றை ‘31 கொடூரங்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும். காவல் மரணங்களின் எண்ணிக்கை இவ்வளவு என்றால், காவல்துறையால் கை கால்கள் உடைக்கப்பட்டவர்கள்...கண்கள், பற்களை இழந்தவர்கள்... உடல்நலம், மனநலம் குன்றியவர்களின் பட்டியலை எடுக்க முற்பட்டால், அதைக் கணக்கிட பல ஆண்டுகள் ஆகும். இந்திய சட்டப்படி, ‘டார்ச்சர்’ என்கிற செயலுக்குத் தண்டனை வழங்க, சட்டப் பிரிவுகள் இல்லை. அதனால்தான், காவல்துறையினரின் டார்ச்சரால் உயிரிழப்புகள் நடந்தால், அவை `கொலை’ என்கிற சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகின்றன. ‘லாக்கப் டெத்’ தொடர்பாகப் பதிவுசெய்யப்படும் வழக்குகளின் விசாரணை இழுத்தடிக்கப் படுகின்றன. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை விசாரித்த நீதிபதிகளில் மூன்று பேர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதுவரை 252 நாள்கள் மட்டுமே விசாரணை நடந்திருக்கிறது. இவ்வாறு விசாரணை இழுத்தடிக்கப்படுவதால்தான், நீதி கிடைக்க, காலதாமதம் ஆகிறது. அஜித்குமாரின் மரணத்தில் அதிக அளவு அக்கறை காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் நிலைய சித்ரவதைகளைத் தடுப்பது தொடர்பாகப் புதிய சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும், மாநில உரிமை ஆணையத்துக்கும் வரும் வழக்குகளின் விசாரணையையும் அரசு துரிதப்படுத்த வேண்டும்” என்றார். ஸ்டாலின் கிடப்பில் 14,000 வழக்குகள்... சிக்காத உயரதிகாரிகள்! ‘காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்க’த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதத்திடம் பேசினோம். “ஏப்ரல் 18, 2022-ல், சென்னை தலைமைச் செயலகக் காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவர் ‘லாக்கப் டெத்’தில் உயிரிழந்தார். அந்தக் காவல் மரணத்தைத் தவறான தகவலுடன் சட்டமன்றத்தில் பதிவுசெய்தார் முதல்வர் ஸ்டாலின். அடுத்த நாளே, மாற்றிப் பேசினார். அப்போதே, தனக்குத் தவறான தகவலை அளித்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படியான கொடூரங்கள் தொடர்ந்திருக்காது. ஏப்ரல் 2024-ல் மட்டுமே நான்கு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வுப் பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. `கஸ்டடி டெத்’களுக்குக் காரணமாக இருக்கும் உயரதிகாரிகள் எந்தச் சம்பவத்திலும் சிக்குவதில்லை. அப்படியே சிக்கினாலும் அவர்கள் காப்பாற்றப்பட்டுவிடுகின்றனர். உதாரணமாக, விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கிய குற்றச்சாட்டில் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர்சீங் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆனாலும், அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க நிர்வாகி வளையாபதி தொடர்புடைய வழக்கில், மாநில மனித உரிமை ஆணையமே ஏ.எஸ்.பி உதயகுமாருக்கு எதிராக உத்தரவிட்டது. அதன் பின்னரும், கொங்கு மண்டலத்தில் அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், மாநில மனித உரிமை ஆணையத்தில் 14,000 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன. ‘கஸ்டடி மரணங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை இருக்கும்’ என்ற பயம் இருந்தால் மட்டுமே, காவலர்களுக்கு அச்சம் வரும். இது போன்ற குற்றங்களும் நடக்காது” என்றார். தி.மு.க ஆட்சியில் நடந்த காவல் சித்ரவதைகள்..! கடந்த நான்கு ஆண்டுக்கால தி.மு.க ஆட்சியில், 24 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகச் சொல்கின்றன எதிர்க்கட்சிகள். ‘31 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன’ என அடித்துச் சொல்கிறார் வழக்கறிஞர் ஹென்றி திபேன். ஆனால், காவல்துறை தரப்பிலிருந்து முதல்வருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில், ‘2021-ல் இரண்டு மரணங்களும், 2022-ல் ஒரு மரணமும், 2023, 2024 ஆண்டுகளில் எந்த மரணமும் நிகழவில்லை. 2025-ல் இப்போதுதான் அஜித்குமார் மரணம் நிகழ்ந்திருக்கிறது’ எனக் கூறியிருக்கிறார்கள். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்த்தால் பரவாயில்லை, பூசணிக்காய்த் தோட்டத்தையே சோற்றில் மறைக்கப் பார்க்கிறது காவல்துறை. திருட்டு வழக்கின் விசாரணைக்காக அழைத்துச் சென்று, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் இடது காலை இரும்பு ராடால் அடித்து உடைத்தது ஊட்டி ஊரகக் காவல்துறை. மணல் கடத்தலைத் தடுக்க முற்பட்ட இளைஞர் விஜய்யை, கண்மூடித்தனமாகத் தாக்கிய புகாரில் சிக்கினார் வேலூர் மாவட்டம், விருத்தம்பட்டு காவல் நிலைய எஸ்.ஐ ஆதர்ஷ். புதுக்கோட்டை பெரியார் நகரில், போதை ஊசி பயன்படுத்தியதாக விக்னேஷ்வரன் என்ற இளைஞரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், பிணமாகத்தான் அவரை திருப்பிக் கொடுத்தனர்.கோவை சரவணம்பட்டியில், ஜெயக்குமார் என்பவரை நான்கு நாள்கள் சட்டவிரோத கஸ்டடியில் வைத்து போலீஸார் தாக்கியதில், ஜெயக்குமாரின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. புகாரளித்தும், தாக்கிய போலீஸார்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. திருப்பூர் மாவட்டம், சேமலைக்கவுண்டம் பாளையத்தில், ஒரு கொலை வழக்கில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற அவிநாசி காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை, ஹரிதாஸை மூன்று நாள்கள் காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கினார். அதில் அவருக்கு உடல்நலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இவையெல்லாம், கடந்த நான்கு ஆண்டு தி.மு.க ஆட்சியில் நடந்த கொடூரங்களின் மீச்சிறு துளிதான். பெரிய லிஸ்ட் நம்மிடமிருக்கிறது. ஹென்றி திபேன், ஆசீர்வாதம் முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை? இந்தப் பிரச்னைகள் குறித்து நம்மிடம் பேசிய சீனியர் அதிகாரிகள் சிலர், “முதல்வருக்குச் சரியான தகவல்களை உயரதிகாரிகள் தெரியப்படுத்துவதில்லை. ‘சரியான தகவல்களைத் தராத அதிகாரிகளை முதல்வர் ஏன் முக்கியப் பொறுப்பில் வைத்திருக்கிறார்... முதல்வர் கையில்தான் காவல்துறை இருக்கிறதா..?’ என்கிற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. ஏனென்றால், துறையில் சில குறிப்பிட்ட அதிகாரிகள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. சிலருக்கு அளவற்ற அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட சமூகம், மாவட்ட அரசியல், கட்சிப் புள்ளிகளின் தொடர்புகள்; உறவுகள் எனக் காவல்துறைக்குள் முதல்வருக்குத் தெரியாத தனி ராஜாங்கமே நடக்கிறது. இதையெல்லாம் முதல்வர் கவனிப்பதே இல்லை. அஜித்குமாரின் மரணம் தந்த அதிர்வே அடங்காத நிலையில், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் நடத்திய போராட்டத்தில், ‘மரியாதையா போயிடுங்க, இல்லைன்னா வேற மாதிரி ஆகிடும்’ என ஓப்பன் மைக்கில் மிரட்டுகிறார் விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன். ராஜேஸ் தாஸ் விவகாரத்தில், ஒரு பெண் எஸ்.பி-யை மிரட்டி சஸ்பெண்டான கண்ணன், தற்போது பொதுமக்களை மிரட்டுகிறார். இந்த அளவுக்கு, அவருக்கு அதிகாரமும் தைரியமும் அளித்தது யார்..? தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய சைலேஷ் குமாருக்கு, பதவி உயர்வு வழங்க தன்னிடம் கோப்பு வந்தபோதே, அதை வீசி எறிந்திருக்க வேண்டும் முதல்வர். அந்தக் கோப்பை தயாரித்தவர்கள் அனைவரையும் பந்தாடியிருக்க வேண்டும். அதைச் செய்யாததன் விளைவு, காவல்துறையின் ராஜ்ஜியமாக தி.மு.க அரசாங்கம் மாறிப்போய்விட்டது. இனியும் முதல்வர் சுதாரிக்கவில்லை என்றால், ஆட்சிக்கு அவப்பெயர் கூடிக்கொண்டே தான் போகும்” என்றனர். காவல்துறை அதிகாரிகள், தன் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டிருப்பதை இப்போதாவது முதல்வர் உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. அஜித்குமாரின் தம்பிக்குக் கொடுக்கப்பட்ட ஆவின் வேலையும், அவர் அம்மாவுக்கு அளித்த இலவச வீட்டுமனைப் பட்டாவும் ஆட்சியின் பெயரைக் காப்பாற்றிவிடும் என நம்பிக்கொண்டிருக்கிறார் முதல்வர். ஆனால் மக்கள், காவல்துறையின் அராஜகத்தால் வெகுண்டு போயிருக்கிறார்கள். ‘முதல்வர் கையில்தான் இருக்கிறதா காவல்துறை?’ எனக் கேட்கிறார்கள். அவர்களின் கோபமும், விமர்சனமும், வெறுப்பும் சரியான சமயத்தில்... இந்த ஆட்சிமீதும், முதல்வர் மீதும்தான் வெளிப்படும் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது!
Checked
Mon, 10/13/2025 - 15:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed