3 months 1 week ago
04 Jul, 2025 | 04:06 PM வவுனியாவில் மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையால் இன்று வெள்ளிக்கிழமை (04) திருகோணமலை மாவட்டத்திற்கு கல்விச்சுற்றலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாணவர்களிடம் இருந்து முன்னமே பணம் அறவிடப்பட்டுள்ளது. குறித்த மாணவனும் சுற்றுலாவிற்கான பணத்தினை வழங்கியுள்ளார். இருப்பினும் இன்றையதினம் காலை சுற்றுலாவிற்கு செல்வதற்கு மாணவன் தயாரான நிலையில் மாணவனை அழைத்துச்செல்ல முடியாது என அதற்கு பொறுப்பான ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த மாணவன் தனது பெற்றோருடன் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான். இதனையடுத்து, வலயக் கல்வி அதிகாரிகள் பாடசாலை நிர்வாகத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மாணவனை சுற்றுலா அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியிருந்தனர். இதனையடுத்து மாணவன் தனது போராட்டத்தை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லாமையால் மாணவன் கவனயீர்ப்பு போராட்டம்! | Virakesari.lk
3 months 1 week ago
மருத்துவரும், நடிகைகையுமான சர்மிளா சொன்னது சரி வரும் போல இருக்கே… அண்ணாமலையுடன் நிற்கும் நிகிதாவின் புகைப்படம்.. நயினார் நாகேந்திரன் கொடுத்த ரியாக்சன்! Yogeshwaran MoorthiPublished: Friday, July 4, 2025, 18:06 [IST] காவல்துறையின் கடுமையாக தாக்குதல் காரணமாக திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அனைவரின் கவனமும் நகை திருடுபோனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிகிதா மீது திரும்பியுள்ளது. ஏற்கனவே நிகிதா மீது பல்வேறு பணமோசடி புகார் எழுந்துள்ளன. இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். நிகிதா வீடியோ அதேபோல் நிகிதா தொடர்ச்சியாக திருமண மோசடியில் ஈடுபடுபவர் என்று முன்னாள் கணவரும், ஃபார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவருமான திருமாறன் குற்றம்சாட்டி இருக்கிறார். இதன் காரணமாக நிகிதா கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே கோவையில் உள்ள உணவகம் ஒன்றில் நிகிதா இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. பாஜக ஆதரவாளர் நிகிதா இதனிடையே நிகிதாவின் சோசியல் மீடியா பக்கம் மூலமாக அவர் பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அண்மையில் நடந்த முருகன் மாநாட்டில் கூட நிகிதா கலந்து கொண்டிருக்கிறார். அதேபோல் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நிகிதா புகைப்படம் எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் பேட்டி இதனால் நிதிகிதாவிற்கு உதவி செய்வது பாஜகவா என்ற விவாதம் தொடங்கியது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது, அண்ணாமலையுடன் நிகிதா இருக்கும் புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நயினார் நாகேந்திரன், அந்த புகைப்படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. நிகிதாவிற்கு சம்பந்தமா? ஆனால் பொதுவாக நாங்கள் ஒரு இடத்திற்கு செல்லும் போது, நிறைய பேர் புகைப்படம் எடுத்து கொள்வார்கள். புகைப்படம் எடுப்பவர்களின் பின்னணி என்ன என்பது எங்களுக்கு தெரியாது அல்லவா.. முருகன் மாநாட்டை முழுக்க முழுக்க நடத்தியது நாங்கள் தான். நிகிதா என்ற பெண்ணை நீங்கள் சொல்லிதான் எங்களுக்கு தெரியும். அதில் யாருடைய பங்களிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். கோவையில் நிகிதா? நிகிதாவை போலீசார் தேடி வரும் நிலையில், அவர் குறித்த புகார்கள் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் உள்ளன. கோவையில் முகாமிட்டுள்ள நிகிதாவை விரைவில் போலீசார் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நிகிதாவிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில், அஜித் குமார் மரண விவகாரத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. https://tamil.oneindia.com/news/madurai/bjp-s-nainar-nagendran-clarifies-on-viral-photo-of-nikita-with-ex-tn-chief-annamalai-717869.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
3 months 1 week ago
'சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்கா'வின் பிரமாண்ட திறப்பு விழாவுக்கு டிக்கெட்டுகள் இல்லை ; தனிப்பட்ட அழைப்புகள் மாத்திரமே. 04 Jul, 2025 | 04:11 PM கொழும்பில் 'சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்கா'வின் பிரமாண்ட திறப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஷாருக் கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில், இந்த திறப்பு விழாவுக்கு போலி டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்காவின் நிர்வாகம் உத்தியோகபூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்த திறப்பு விழா நிகழ்வில் தனிப்பட்ட அழைப்பிதழ் வழங்கப்பட்டவர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும். திறப்பு விழா தொடர்பாக டிக்கெட்டுகளை வழங்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை என ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். “உத்தியோகபூர்வமற்ற போலி டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், இந்த டிக்கெட்டுகளை வாங்குவதை தவிர்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏதேனும் துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள தங்கள் உத்தியோகபூர்வ தொடர்பு வழிகள் ஊடாக அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 'சிட்டி ஒப் ட்ரீம் ஸ்ரீலங்கா'வின் பிரமாண்ட திறப்பு விழாவுக்கு டிக்கெட்டுகள் இல்லை ; தனிப்பட்ட அழைப்புகள் மாத்திரமே | Virakesari.lk
3 months 1 week ago
கள்ளச் சாராயம் குடித்து செத்தவனுக்கு பத்து லட்சம் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டவனுக்கு ஐந்து லட்சம்.
3 months 1 week ago
மகிழ்ச்சி! வாழ்த்துகள் தலைவா! ✌️ அங்கிடுதத்தி இந்தியனுகளுக்கும் கார்பன் டக்ஸ் கார்ணிக்கும்தான் ஆப்பு! 😂
3 months 1 week ago
.
3 months 1 week ago
முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா! ஒருவர் உயிரிழப்பு ,ஒருவர் படுகாயம்! முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது. தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Athavan Newsமுள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா!...முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (...
3 months 1 week ago
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா தொடக்க நிகழ்வு; மக்கள் அவதானம்! தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா”வின் (City of Dreams Sri Lanka) 2025 ஆகஸ்ட் 2 அன்று அதிகாரப்பூர்வமான ஆரம்ப விழா தனிப்பட்ட அழைப்பின் பேரில் மாத்திரம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா, பிரமாண்டமான திறப்பு விழாவிற்கான அங்கீகரிக்கப்படாத டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அழைப்பின் பேரில் மட்டுமே என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். மேலும் எந்த மூன்றாம் தரப்பினரும் டிக்கெட்டுகளை வழங்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்கவோ அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும் – என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த மேம்பாட்டில் உலகத் தரம் வாய்ந்த, அதி-ஆடம்பரமான நுவா ஹோட்டல் மற்றும் ஒரு உயர்நிலை ஷாப்பிங் மால் ஆகியவை இதில் அடங்கும். இது இன்றுவரை இலங்கையின் ஆடம்பர வாழ்க்கை முறை துறையில் மிகப்பெரிய தனியார் துறை முதலீடாக அமைகிறது. கொழும்பை உலகளாவிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமாக நிலை நிறுத்துவதில் இந்த தொடக்க விழா ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே போலிவூட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இலங்கைக்கு வருகை தந்து, இந்த பிரமாண்ட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். https://athavannews.com/2025/1438045
3 months 1 week ago
சாத்ஸ்சும் அனுரா கீதம் இசைத்தவர். இதுதான் காரணம் போலும். கு. சா, விசுகு அண்ணைமார் - பார்த்து பழகவும் 🤣
3 months 1 week ago
மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை! செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான தகவலை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அத்துடன் மொரட்டுவ பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள், தனியார் துறையுடன் இணைந்து இந்த மென்பொருளை உருவாக்க ஒத்துழைத்து வருவதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த மென்பொருள் பொதுமக்கள் பாவனைக்கு விடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய மென்பொருள் பேசும் சிங்கள உள்ளடக்கத்தை சில நொடிகளில் தமிழில் மொழிபெயர்க்கும் திறனைக் கொண்டிருக்கும் என்றும், நேர்மாறாகவும் இது இருக்கும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1438062
3 months 1 week ago
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நீதிபதியும் எழுத்தாளரும் கைது! இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பொலன்னறுவை – கதுருவெல காதி நீதிமன்றத்தின் நீதிபதியும் எழுத்தாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளால் இன்று (04) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் தங்களது அலுவலகத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். விவாகரத்து வழக்கு ஒன்று தொடர்பில் விரைவாக தீர்ப்பை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கதுருவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1438081
3 months 1 week ago
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு! இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (04) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நண்பர்களுக்கு ரூ.25 மில்லியன் மதிப்புள்ள மக்காச்சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438087
3 months 1 week ago
2026 தேர்தல்; முதலமைச்சர் வேட்பாளராக விஜயின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு! 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யை தமிழக வெற்றிக் கழகம் (TVK) இன்று (04) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலமாக அதிமுக – பாஜகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. TVK இன் செயற்குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமைக் கழ கத்தில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கொள்கை உறுதிமொழி ஏற்கப்பட்டு கொள்கை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். அடுத்ததாக 2026 தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் மக்கள் சந்திப்பு குறித்து கூட்டத்தில் விஜய் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சி முடிவடைந்ததும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது குறித்தும், கட்சி சார்பில் பிரமாண்டமான அளவில் மாநில மாநாடு நடத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். https://athavannews.com/2025/1438055
3 months 1 week ago
ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்த முதல் நாடாக மாறிய ரஷ்யா! ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை (03) மாறியுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் குல் ஹசன் ஹாசனிடமிருந்து முறையான நற்சான்றிதழ்களைப் பெற்றதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் உற்பத்தித் திறன் கொண்ட இருதரப்பு ஒத்துழைப்பை வளர்க்கும் என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு, இதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று கூறியது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றினர். அப்போதிருந்து, அவர்கள் சர்வதேச அங்கீகாரத்தை நாடுகிறார்கள். அதேநேரத்தில் இஸ்லாமிய சட்டத்தின் கடுமையான நிபந்தனைகளையும் அவர்கள் அமுல்படுத்துகிறார்கள். இதுவரை எந்த நாடும் தாலிபான் நிர்வாகத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை என்றாலும், அந்தக் குழு பல நாடுகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் சில இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பெரும்பாலும் பெண்கள் மீதான அதன் கட்டுப்பாடுகள் காரணமாக தாலிபான் அரசாங்கம் உலக அரங்கில் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 1996 முதல் 2001 வரை ஆட்சியில் இருந்ததை விட, தாலிபான்கள் ஆரம்பத்தில் மிகவும் மிதமான ஆட்சியை முன்னெடுப்பதாக உறுதியளித்த போதிலும், 2021 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய உடனேயே பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கட்டுப்பாடுகளை அமுல்படுத்தத் தொடங்கினர். பெண்கள் பெரும்பாலான வேலைகள் மற்றும் பொது இடங்களில், பூங்காக்கள், குளியலறைகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெண்கள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை நிலைநிறுத்த தலிபான்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ரஷ்ய அதிகாரிகள் அண்மையில் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஏப்ரல் மாதம் தலிபான்கள் மீதான தடையை நீக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438028
3 months 1 week ago
Free America Weekend: ட்ரம்பிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்! அமெரிக்காவின் 250வது சுதந்திர தினக் கொண்டாட்டம் ஜுலை 4 ஆம் திகதியான இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் “Free America Weekend” என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகளைக் கண்டித்து பேரணிகள், பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசின் கொள்கைகள் மக்கள் சுதந்திரத்தையும் அடிப்படை உரிமைகளையும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளதாகத் தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நியூயோர்க், சான் பிரான்சிஸ்கோ, டெக்சாஸ், புளோரிடா போன்ற நகரங்களில் மக்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். குறித்த போராட்டமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438018
3 months 1 week ago
சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற மாதிரி, ஊருக்குப் போக முதல்... அங்கு உள்ள ஆளும் கட்சிக் காரருக்கு ஐஸ் வைத்து விட்டுப் போனால் தான்... தற்செயலாக ஏதும் நடந்தாலும் பிணை எடுக்க வருவாங்கள். இல்லாவிடில் நாலாம் மாடியில் கொண்டு போய் வைத்து.. மொங்கிப் போட்டு, வெட்டித் தாட்டுப் போடுவாங்கள் பாவிகள். ஏற்கெனவே ஊரில் வாள் வெட்டு கோஸ்ட்டி முதுகிலை வாளை செருகிக் கொண்டு பறந்து திரிகிறாங்கள். அதுக்காகத்தான் வில்லங்கம் இல்லாமல் போய்... கொத்து ரொட்டி, அப்பம், தோசை, கூழ், இளநி என்று ஆசைப் பட்டதுகளை சாப்பிட்டு விட்டு கம்மென்று வந்து விட வேணும். 😂 இனி அனுரா, ஜேர்மனிக்கு வந்தால்... கறுப்புக் கொடியும், அழுகின தக்காளிப் பழமும்தான் வரவேற்கும். 🤣
3 months 1 week ago
உங்களை நீங்களே பெரியவர் என்கிறீர்களா 😂. நான் ஏற்றுகொள்கிறேன். ஒரு கொலை அநியாயமாக, சட்ட விரோதமாக நடந்துள்ளது. அதில் எவர் சம்பந்த பட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே. வழக்கை மத்திய அரசின் கீழ் உள்ள புலனாய்வு அமைப்பான சி பி ஐக்கு 3 நாளுக்கு முன்பே மாற்றியாகி விட்டது. அவர்கள் எந்த மாநில அரசின் அளுத்தமும் இன்றி எவரையும் உலுக்கலாம். அப்படி உலுக்கி முடிவு வரட்டுமே? அதுவரை பொறுக்காமல் அமைச்சராம், அவராம், இவராம் என ஊகம் பரப்புவது கொலையை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே. இதைத்தான் டாக்டர் சர்மிளா செய்வதாக (பிஜேபிக்கு எதிராக) மேலே புலவரும் கூறி உள்ளார்.
3 months 1 week ago
உங்கடை பாஸ்போட்டிலை... கியூபா விசா, கைலாசா விசா எல்லாம் குத்தி இருக்கு. என்ன அலுவலாக அந்த நாடுகளுக்கு எல்லாம் போனீங்கள். 😜
3 months 1 week ago
நிகிதாவை உலுக்க தேவையில்லை. நிகிதா தானாகவே உலுக்க வெளிக்கிட்டால் அமைச்சர்கள்,உதவி அமைச்சர்கள்,உயரதிகாரிகள் தாங்க மாட்டார்களாம். அவர்கள் வீட்டில் ஒரு சொம்பு தண்ணீர் கூட கிடைக்காதாம். 😂 அப்படி பொது வெளியில் பெரியவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
3 months 1 week ago
யான் என்ன செய்வேன் ஐயனே? 😎 அன்னதான மடம் , அடியார் மடம் என புசித்துண்டு உடல் வளர்த்து அறுபத்தி மூன்று நாயன்மார்களின் குருபூசை என அலைந்து அன்னத்தை உண்டு வாழ்ந்த பழக்க தோசம். 😂 யான் என்ன செய்வேன் ஐயனே? 😎
Checked
Mon, 10/13/2025 - 12:08
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed