3 months 1 week ago
தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 8 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் 30 JUN, 2025 | 10:41 AM தலைமன்னார் கடற்பரப்பில் கைதான ராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஞாயிற்றுக்கிழமை (29) உத்தரவிட்டார். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து வந்து எல்லை தாண்டி மீன்பிடித்த 8 மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த மீனவர்களை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/218810
3 months 1 week ago
3 months 1 week ago
30 JUN, 2025 | 09:52 AM குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார். அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த குடும்பஸ்தர் மயக்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/218807
3 months 1 week ago
உலக சமூக ஊடக தினம் இன்று Published By: DIGITAL DESK 4 30 JUN, 2025 | 10:40 AM மக்களின் வாழ்க்கையில் பின்னிபிணைந்துள்ள சமூக ஊடகங்களை பெருமைப்படுத்தும் விதமாக உலக சமூக ஊடக தினம் இன்று ஜூன் 30 ஆம் திகதி அனுஷ்க்கப்பட்டு வருகிறது. தகவல் பரிமாற்றம் காலத்துக்கு காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. அந்த வகையில் இன்றைய சூழ்நிலையில் தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடத்தை சமூக ஊடகம் வகிக்கின்றது. அந்தவகையில், மக்கள் ஒருவருடன் ஒருவர் இணைவதற்கு, செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு மற்றும் தகவல்களை அறிந்தவர்களாக இருப்பதற்கு மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாக சமூக ஊடகம் மாறியுள்ளது. சமூக ஊடகங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களை ஒருவருடன் ஒருவர் ஒன்றிணைத்து, உண்மையிலேயே உலகளாவிய சமூகத்தை உருவாக்கியுள்ளன. புதிய ஊடகப் போக்குகள் மூலம் சமூகக் குழுக்களின் இன்றியமையாத பகுதியாக, சமூக ஊடகங்கள் மாறியுள்ளன. தகவல் மற்றும் பொழுதுபோக்கை வழங்குவதோடு, பொதுக் கருத்தை வெளிப்படுத்துவதில் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களின் பயணம் 2002 இல் ஃப்ரெண்ட்ஸ்டர் மற்றும் 2003 இல் மைஸ்பேஸ் போன்ற தளங்களுடன் ஆரம்பமானது. அதன்பின்னர், 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக், விரைவில் தொழில்துறையில் ஒரு ஆதிக்க சக்தியாக மாறியது. டுவிட்டர் (தற்போது X என்று அழைக்கப்படுகிறது) பயனர்கள் தங்கள் சிந்தனைகளை 140 எழுத்துகள் அல்லது அதற்கும் குறைவாகப் பகிர்ந்து கொள்ள ஊக்குவித்தது. இன்ஸ்டாகிராம் மற்றும் பிளிக்கர் நம்மை காட்சி ரீதியாக வெளிப்படுத்துவதை எளிதாக்கின, அதே நேரத்தில் யூடியூப் மற்றும் டிக்டொக் வீடியோ பகிர்வில் புரட்சியை ஏற்படுத்தி கலாசார முக்கிய தளங்களாக மாறிவிட்டன. சமூக ஊடகங்கள் தற்போது உலகளாவிய அரசியலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் அது அன்றாட தொடர்புக்கு அவசியமாகிவிட்டது. மக்களை ஒன்றிணைக்கும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருந்தாலும், பிளவுகளையும் உருவாக்கக்கூடும், இதனால் மக்கள் அதைப் பொறுப்புடன் கையாள்வது மிகவும் முக்கியம். சமூக ஊடக தினம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தில் வெகுஜன ஊ டகத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க கருத்து தெரிவிக்கையில், "எந்தவொரு நாட்டிலும், சமூக ஊடகங்களைப் பற்றி பலருக்கு எதிர்மறையான கருத்துக்கள் உள்ளன. ஆனால் அந்த எதிர்மறையான கருத்துக்களுக்குக் ஊடகங்களை கையாள்வது தொடர்பான தவறான புரிதல்களே காரணம் என நான் நினைக்கிறேன். முதலாவதாக, இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இதை ஒரு புதிய ஊடகமாகப் பயன்படுத்துவது, சுமார் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வளர்ந்த ஒரு ஊடகம். ஆனால் இது ஊடகங்களில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஒரு துறை. சமூக ஊடகங்கள் இல்லாமல், இன்றைய சமூகம் இருக்க முடியாது." நாட்டின் சனத்தொகையில் 53 சதவீதம் பேர் தற்போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். இது சுமார் 1 கோடியே 20 இலட்சம் பேரை குறிக்கின்றது. அண்மையில், 2025 ஆம் ஆண்டுக்குள் டிக்டொக் பயன்பாடு சுமார் 30 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய தளங்களுடன் ஒப்பிடுகையில், பயனர் தளத்தின் அடிப்படையில் இது ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், டிக்டோக் வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடக தளமாகும். விஜயானந்த ரூபசிங்க கூறினார், மேலும் இலங்கை இப்போது டிஜிட்டல் ஊடக எழுத்தறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/218805
3 months 1 week ago
30 JUN, 2025 | 11:22 AM தேசியமக்கள்சக்தி அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதை மறைப்பதற்காக அந்த விடயத்திலிருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டுகளை உருவாக்கிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் தனது குடும்பத்தவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி பௌத்தபீடாதிபதிகளின் உதவியை நாடியுள்ளார் என வெளியான தகவல்களை நிராகரித்துள்ளார். இந்த தகவலை முற்றிலும் பொய்யானது என மறுத்துள்ள நாமல் ராஜபக்ச கௌரவத்திற்குரிய மதத்தலைவர்களை அரசியலிற்குள் இழுக்கும் அவமானகரமான முயற்சி இது என தெரிவித்துள்ளார். தனது பதவிக்காலத்தின் முதலாவது ஆண்டில் , தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள அரசாங்கம் தற்போது தனது தோல்விகளை மறைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதனை மறைப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக பௌத்தமத தலைவர்களின் உதவியை நாடியுள்ளார் என்ற கதையை பரப்பியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது முன்னாள் ஜனாதிபதி மீதான தாக்குதல் மட்டுமல்ல, நமது மிகவும் மதிக்கப்படும் மத தலைவர்களை அரசியல் சேற்றில் சிக்கவைக்கும் முயற்சி என குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் பொய்யானவை அரசாங்கம் பொலிஸ்திணைக்களத்தை அரசியல் மயப்படுத்த முயல்கின்றது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்காக நீதித்துறையையும் அரசியல் மயப்படுத்துகின்றது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நானும் எனது குடும்பத்தவர்களும் அச்சமின்றி தொடர்ச்சியாக அரசியல் நோக்கத்துடனான விசாரணைகளை எதிர்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/218811
3 months 1 week ago
படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமார் கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 30 ஜூன் 2025, 04:32 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு அஜித்குமார் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதே அஜித்குமார் உயிரிழக்கக் காரணம் என்று குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மடப்புரம் கிராம மக்கள் காவல் நிலைய முற்றுகையிலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக 6 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? உயிரிழந்த அஜித் குமாருடன் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த அவரது சகோதரர் நவீன் குமார் பிபிசி தமிழிடம் கூறியது என்ன? 10 பவுன் நகை திருடு போனதாக புகார் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித் குமார் (வயது 27) பணியாற்றி வந்தார். அந்த கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம் 'வெள்ளிக்கிழமை மாலை தாயிடம் பேசிய அஜித் குமார்' தகவலறிந்ததும் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்து பேசிய போது நகையை தான் திருடவில்லை என்று அஜித் தன்னிடம் கூறியதாக பிபிசி தமிழிடம் அவரது தாயார் மாதவி தெரிவித்தார். திருப்புவனம் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு அஜித் குமாரை மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை (ஜூன் 28) மாலை சுமார் 6 மணி அளவில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறை நடத்திய விசாரணையின் போது அஜித்குமார் கடுமையாக தாக்கப்பட்டதை பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மாட்டுத் தொழுவத்தில் இருந்து அஜித்தை காவல்துறையினர் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அஜித் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்திய பிறகு அஜித்தின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காவல் நிலையம் முற்றுகை, கடையடைப்பு திருப்புவனம் காவல் நிலையத்தை அஜித்குமாரின் உறவினர்களும் மடப்புரம் கிராம மக்களும் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கே வந்த சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷீஷ் ராவத் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஜித்குமாரின் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்து விட்டதை அவரது குடும்பத்தினரிடம் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் உறுதிப்படுத்தினார். இதனால் பதற்றம் அதிகரித்ததால் திருப்புவனம் காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். அஜித்குமாரின் சொந்த ஊரான மடப்புரத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையத்தின் முகப்பு அஜித் குமாரின் சகோதரர் கூறியது என்ன? "எனது அண்ணன் அஜித்தை போலீசார் கோவிலுக்கு பின்புறம் அழைத்துச் சென்ற போது அவன் நடந்து தான் சென்றான். ஆனால் திரும்பும் போது அவனை தூக்கிக் கொண்டு வந்தனர்," என்கிறார் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நவீன் குமார். பிபிசியிடம் பேசிய அவர், "வெள்ளிக்கிழமை மதியம் எனது அண்ணன் அஜித்குமார் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் காரில் இருந்த தங்க நகையை திருடியதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அஜித்துக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் சாவியை அஜித்தின் நண்பர்கள் அருண்குமார், வினோத் குமார் ஆகியோரிடம் கொடுத்து காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வருமாறு கூறியுள்ளார். ஆனால் காரை எடுத்து சென்ற இருவரும் வெகு நேரமாக காரை பார்க்கிங்கில் நிறுத்தாமல் நீண்ட தூரம் ஓட்டிச் சென்றுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு தான் காரை அவர்கள் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். கேட்டதற்கு பார்க்கிங்கில் இடமில்லாததால் வெகு தூரம் சென்று காரை நிறுத்தி இருந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அஜித் போலீசாரிடம் கூறியதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு மானாமதுரை குற்றப்பிரிவு காவல் துறையினர், நான் மற்றும் பிரவீன்குமார், அருண்குமார், வினோத் குமார், அஜித் குமார் 5 பேரையும் மடப்புரம் அருகே உள்ள கண்மாய் கரை உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்," என்றார். காவல்துறையினர் தங்களை கடுமையாக தாக்கியதாகக் குற்றம்சாட்டிய அவர், "அஜித்தை இரண்டு நாட்களாக தொடர்ந்து அடித்தால் அவனுக்கு காயம் அதிகமாக இருந்தது," என்று கூறினார். மேலும் பேசிய நவீன்குமார், "காரை ஓட்டி சென்ற அருண்குமார், வினோத் குமாரை காவல்துறையினர் தனித்தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். ஆனால் அவர்கள் காருக்குள் இருந்த நகையை பார்க்கவில்லை என கூறியதால் ஒரு கட்டத்தில் போலீசார் யாருக்கோ போன் செய்து காரில் நகை இருந்தது உண்மைதானா என கேட்டனர். அதற்கு அவர்கள் 10 பவுன் தங்க நகை இருந்தது என கூறியதை அடுத்து மீண்டும் அஜித்தை போலீசார் சனிக்கிழமை காலையில் இருந்து கடுமையாக அடித்தனர். அடி தாங்காமல் இறுதியில் அஜித் தான் அந்த நகையை திருடியதாகவும், அந்த நகையை கோவில் பின்புறம் உள்ள கோவில் அலுவலகத்தின் பின்னால் உள்ள மாட்டு தொழுவத்தில் மறைத்து வைத்திருப்பதாக சொன்னான். மடப்புரம் கோவில் பின்புறம் எங்கள் அனைவரையும் அழைத்து சென்றனர். எங்கள் நால்வரையும் வேனில் இருக்க வைத்து விட்டு 3 காவலர்கள் அஜித்தை மட்டும் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து ஏற்கனவே போலீசார் கடுமையாக தாக்கியிருந்ததால் அஜித் மிகவும் கஷ்டப்பட்டு நடந்து சென்றான். சிறிது நேரத்திற்குப் பின் போலீசார் அஜித்தை தூக்கி கொண்டு மற்றொரு வாகனத்தில் சென்றதை பார்த்தேன்." என்று கூறினார். இதைத் தொடர்ந்து, தாம் உள்பட மற்ற நால்வரையும் வேனில் இருந்து இறங்கிச் செல்லுமாறு காவல்துறை கூறியதாக நவீன்குமார் தெரிவித்தார். "நான் வீட்டிற்குச் சென்று நடந்ததை கூறிய பின் குடும்பத்துடன் காவல் நிலையம் சென்று கேட்டதற்கு அஜித் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்," என்றார் நவீன் குமார். மகனை இழந்த வேதனையில் இருக்கும் மாதவி பிபிசி தமிழிடம் பேசிய போது, "இன்னொரு மகனுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் நிரந்தர அரசு பணி வழங்குவதாகவும், நிதி உதவி வழங்குவதாகவும் கூறுகின்றனர். இதை கொடுத்தால் என் மகன் உயிருக்கு ஈடாகுமா? அவன் திரும்பி வருவானா?" என்று கேள்வி எழுப்பினார். படக்குறிப்பு, கோவிலின் பின்புறம் இருந்த மாட்டுத் தொழுவத்தில் அஜித் குமார் தாக்கப்பட்டார் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர் நீதிபதி நேரில் ஆய்வு அஜித் உயிரிழந்தது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி வேங்கட பிரசாத் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தாசில்தார், ஆர்டிஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நீதிபதி முன் ஆஜராயினர். பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் அஜித்தின் உடலை உடற்கூறாய்வு செய்து, குடும்பத்திடம் ஒப்படைக்க இருப்பதாகக் கூறி அவரின் குடும்பத்தினரை அழைத்துச் சென்றனர். அஜித் குடும்பத்தினரை காவல்துறையினர் அழைத்து செல்லும் போது அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் கிராம இளைஞர் சபையினர் உள்ளிட்டடோர் அஜித்தை தாக்கிய காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர். படக்குறிப்பு, அஜித்தை தாக்கிய காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என உறுதி அளிக்கும்மாறு அரசியல் கட்சியினர் கோரிக்கை காவல்துறை கூறுவது என்ன? முதல் கட்ட நடவடிக்கையாக, மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படைக் காவலர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்தன், மணிகண்டன் 6 பேரை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் அறிக்கைக்கு பின் அவர்களை கைது செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அஜித் குமார் உடல் தகனம் இதற்கிடையே, உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் உடல் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே அவரது குடும்பத்தினர் உடலைப் பெற்று தகனம் செய்தனர். காவல்துறை தடயங்களை அழிக்க முயற்சி என்று குற்றச்சாட்டு திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை தடயங்களை அழிக்க பார்க்கிறது என்று மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் குற்றம்சாட்டியுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திருப்புவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை போலீசார் சட்டவிரோதமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரிய வருகிறது. அஜித் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அஜித்குமாரின் இறப்பை போலீசார் மறைக்க பார்க்கின்றனர். அதன் ஒரு பகுதியாக தான் திருப்புவனம் நீதிமன்ற நீதிபதி விசாரணை செய்வதற்கு முன் 6 காவலர்களையும் அவசர அவசரமாக சஸ்பெண்ட் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது" என்றார். "ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நடந்துள்ளது. உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயங்கள் அழிக்கப்பட்டாலும் உடற்கூறு ஆய்வில் முடிவில் உண்மை நிச்சயம் வெளியே வரும். தென்மண்டல ஐஜி நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ஹென்றி திபேன் கூறியுள்ளார். படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சிகள் கண்டனம் 'ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது' என சினிமா Review எழுதிய முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? மு.க. ஸ்டாலின், விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையில் பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?," என தனது எக்ஸ் பக்கத்தில் அஜித் மரணம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். "காவல்துறை விசாரணையின் பேரில் ஒருவரை அடித்து தாக்கி படுகொலை செய்து விட்டு, அதற்கான நடவடிக்கையாக வெறும் பணியிடை நீக்கம் மட்டும் போதும் என்று கருதுவது வெகுஜனங்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். அஜித்தின் மரணம் போலீசார் தாக்குதலால் நேர்ந்தது வெளிச்சமான நிலையிலும், ஏன் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை? ஏன் கைது செய்து விசாரணை நடத்தப்படவில்லை?," என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே ஏழை, எளியோரின் உயிருக்கு பாதுகாப்பில்லை என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். "காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம் அடைந்துள்ள நிலையில், தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்," என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74zqk4ndxvo
3 months 1 week ago
விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே! June 29, 2025 — கருணாகரன் — யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழி, தமிழ்ச் சமூகத்தை மட்டுமல்ல, மனித விழுமியங்களைக் குறித்துச் சிந்திக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கே முடிவற்ற நிலையில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனை எலும்புக் கூடுகள் மீட்கப்படும் என்று தெரியவில்லை. உண்மையில் அவை எலும்புக் கூடுகள் அல்ல. உயிருடன் கொல்லப்பட்ட மனிதர்களேயாகும்! இதுவரை மீட்கப்பட்டவற்றில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளும் உள்ளன. இது மேலும் அதிர்ச்சியையும் சமூகக் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவை அரசியல் ரீதியான படுகொலைகளுக்குள்ளானவை என்றே கருதப்படுகிறது. அரசியல் ரீதியான படுகொலை என்றால், யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பு மோதல்களினால் ஏற்பட்ட கொலையினாலோ அது போன்ற நிகழ்வுகளினாலோ அல்ல. அப்படியிருந்தாலும் அது தவறு. ஏனென்றால், யுத்தத்தின்போது அதில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளுடைய உடல்களை படையினரும் படையினரின் உடல்களை விடுதலைப்புலிகளும் சர்வதேச அமைப்புகளுடாகப் பரிமாறிக் கொண்டனர். அப்படியென்றால், இது விதிமுறைகளுக்கு அப்பால், படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களே. இந்தப் படுகொலைகள் ஏதோ ஒரு வகையில் பழிவாங்கும் அரசியலின் விளைவாக நடந்தவையே!அப்படியென்றாலும் கூட சிறுவர்கள் கொல்லப்படுவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. இதுதான் கூடிய கவனத்தை இங்கே குவிக்கிறது. இதனால் இப்பொழுது கண்டெடுக்கப்பட்டு வரும் இந்த எலும்புக் கூடுகளும் இந்த மனிதப் புதைகுழியும் இதுவரையிலும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளையும் புதைகுழிகளையும் விட, அரசியல் ரீதியாக முக்கியத்துவமுடையனவாக மாறக் கூடிய சாத்தியங்கள் உண்டு. ஏற்கனவே இதைப்போல வடக்குக் கிழக்கிலும் தெற்கில் சூரியகந்த போன்ற இடங்களிலும் பல எலும்புக் கூடுகளும் புதைகுழிகளும் கண்டறியப்பட்டன. அவை அந்தந்தக் காலகட்டத்தில் அதிர்வையும் அரசியல் ரீதியாகச் சில கவனத் தூண்டல்களையும் ஏற்படுத்தியதுண்டு. ஆனால், பிறகு அவையெல்லாம் மெல்ல நீர்த்து, மறைந்து போனதே வரலாறு. சரியாகச் சொன்னால், அவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் போராட்டங்களை நடத்தியவர்களே நன்மைகளைப் பெற்றனர். உதாரணமாக சூரியகந்த புதைகுழியைத் தூக்கி, அரசியல் செய்த மகிந்த ராஜபக்ஸ, அடுத்த 20 ஆண்டுகள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். அந்த அதிகாரத்தின் மூலம் ராஜபக்ஸ குடும்பத்தையே கட்டியெழுப்பினார். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியோ நிவாரணமோ கிடைக்கவில்லை. அவர்கள் மறக்கடிக்கப்பட்டனர். மகிந்த ராஜபக்ஸ அதிகாரத்துக்கு வந்தபோது, இந்தப் புதைகுழிகளில் எலும்புக்கூடுகளாக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை ராஜபக்ஸவினர் செய்யவில்லை. அதைப்போல கிளிநொச்சி தொடக்கம் கொக்குத்தொடுவாய் வரையான புதைகுழிகள் – எலும்புக் கூடுகளை வைத்துத் தமிழ்த் தரப்புகள் தாராளமாக அரசியல் ஆதாயங்களைப் பெற்றுக் கொண்டன. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாணசபையின் பிரதிநிதிகளாகவும் கட்சிகளின் முக்கியஸ்தர்களாகவும் தம்மை உயர்த்திக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கோ எந்த நீதியும் கிடைக்கவில்லை. ஆக தமிழ் – சிங்களம் ஆகிய இரண்டு சூழலிலும் ஒரே நிலைமைதான் நீடிக்கிறது. ஆனால், இப்பொழுது கண்டறியப்பட்டு வரும் சிந்துபாத்தி மயான எலும்புக் கூடுகளும் புதைகுழியும் இதையெல்லாம் கடந்த முக்கியத்துவத்தைப் பெறக் கூடிய வாய்ப்புகள் அதிகமுண்டு. அதற்கொரு முக்கிய காரணம், இப்போதுள்ள ஆட்சியாளர்களாகும். 1. இப்பொழுதுள்ள NPP ஆட்சியாளர்களும் முன்பு இதேபோன்ற எலும்புக் கூடுகள் – மனிதப் புதைகுழிகளின் துயர வரலாற்றினால் பாதிக்கப்பட்டவர்களே. ஆகவே, அவர்களுக்கு இதனுடைய தாற்பரியம் என்னவென்று – எப்படியானது என்று புரியும். அதனால்தான் இந்தப் புதைகுழி அகழ்வுக்கு அவர்கள் தாராளமாக ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். மட்டுமல்ல, இதையொட்டி நடைபெறுகின்ற போராட்டத்தைக் குழப்பாமல், இடைஞ்சல்களைச் செய்யாமல், தாங்களும் நேரில் பங்கேற்க விளைகிறார்கள். ஆனால், இவ்வாறான சூழலில் முந்திய ஆட்சியாளர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. பல்வேறு இடைஞ்சல்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தினார்கள். இவ்வாறான விவகாரத்தை முன்னிலைப்படுத்திப் போராடியவர்களையும் நீதி கோரியவர்களையும் அச்சுறுத்தினார்கள். ஆனால் NPP அரசாங்கம் இதனை வேறு விதமாக அணுக முற்படுகிறது. அது தன்னை ஒரு நீதிக்குரிய அமைப்பாக உலக அரங்கிலும் வரலாற்றிலும் ஸ்தாபிக்க விரும்புகிறது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். அதாவது, அரசாங்கமே இந்தப் பிரச்சினையைக் குறித்து கவனம் எடுத்து, குற்றவாளிகளைத் தேடக்கூடிய – தண்டிக்கக் கூடிய ஒரு சூழல் உருவாகியுள்ளது. அவ்வாறு இல்லாது விட்டாலும் இந்தப் புதைகுழி – எலும்புக் கூட்டு விவகாரம் அரசியல் முக்கியத்துவமுடையதாக மாறுவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்கிறது. இது சர்வதேச ரீதியாகவும் கவனத்தை உருவாக்கும். ஆகவே எந்த வகையிலும் இதொரு நல்வாய்ப்பான விளைவையே தரக்கூடியதாக உள்ளது. 2. முந்திய ஆட்சியாளர்களின் காலத்தில் இவ்வாறான புதைகுழி விடயத்தை அவர்கள் கையில் எடுக்கத் துணியவில்லை. அது அவர்களுடைய கையையே சுடக்கூடியது. மட்டுமல்ல, அவர்களே அவற்றோடு சம்மந்தப்பட்டவர்களாகவும் ஏதோ ஒரு வகையில் இருந்தனர். அல்லது அதைக் கண்டிக்க முடியாத நிலையில் இருந்தனர். அவ்வாறானோர் (அத்தகைய தரப்பினர்) ஊழல், அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றுக்காகத் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். அவற்றோடு இந்த விடயங்களும் சேரும்போது, அவர்களின் மீது நடவடிக்கையை எடுப்பதற்கு NPP அரசாங்கத்துக்கு உதவியாக இருக்கும். 3. இப்பொழுதுள்ள தேசிய மக்கள் சக்தியினருக்கு இந்தப் புதைகுழிகள் பிரச்சினையில்லை. அவர்கள் இந்த விடயங்களுடன் சம்மந்தமில்லாதவர்கள். மட்டுமல்ல, இதுவரையிலும் அதிகாரத்தில் இருக்காதவர்கள். ஆகவே துணிகரமாக இதனை அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாதகமாகவே கையாள முற்படுவர். என்பதால் எந்த விதமான அச்சமும் தயக்கமும் இல்லாமல் NPP அரசாங்கம் நேர்மையாக இந்தப் பிரச்சினையைக் கையில் எடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு. வேண்டுமானால் இதனோடு தொடர்புபட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டால், அது படைத்தரப்பினராக இருந்தால் மட்டுமே அரசாங்கத்துக்குச் சற்று நெருக்கடி ஏற்படும். அதுவும் ‘படைத்தரப்பில் கை வைக்கக் கூடாது‘ என்று குற்றவாளிகளைப் பாதுகாக்க விரும்பும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு இதை ஒரு ஆயுதமாகப் பாவிக்க முற்படலாம். அப்படி எதிர்க்கட்சிகள் பிரச்சினையை திசை திருப்ப முற்பட்டால், அதுவும் NPP அரசாங்கத்துக்கு வாய்ப்பாகவே அமையும். சர்வதேச அரங்கில் அத்தகைய தரப்புகளை அம்பலப்படுத்துவதற்கு. இதேவேளை குற்றங்களோடு தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு, நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருந்தால் அந்தப் பிரச்சினையைக் கூட வெற்றிகரமாகவே கையாளக் கூடியதாக இருக்கும். அதற்கு இப்பொழுது இந்த மனிதப் புதைகுழி முழுமையாக அகழப்பட்டு, முழுமையான விவரம் கண்டறியப்பட வேண்டும். அடுத்த கட்டமாக மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டால்தான் இந்தப் படுகொலை எந்தக் காலகட்டத்தில் நடந்தது? அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதையெல்லாம் கண்டறியக் கூடியதாக இருக்கும். எந்தக் காலகட்டத்தில் நடந்தது என்று கண்டறியப்பட்டால் ஏறக்குறையக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து விடலாம். அதைக் கண்டறிவதற்கு கண்டெடுக்கப்படும் எலும்புக் கூடுகள் தொடர்பான பகுப்பாய்வுகள் மிக அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அந்த ஆய்வுகளின் முடிவுகள் வரும்போது நிச்சயமாக இப்போதையும் விட மேலும் கொந்தளிப்பான அரசியல் சூழல் உருவாகும். ஏனென்றால், அந்த முடிவுகள் ஓரளவுக்குக் கொலையாளிகளை இனங்காண உதவும் – இனங்காட்டும் என்பதால். இப்பொழுதே எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை, அவற்றின் தோற்ற அமைவு போன்றவற்றைச் சரியாகக் கவனித்து, கடந்த கால வரலாற்றைத் தோண்டிப் பார்த்தால் யாருடைய எலும்புக் கூடுகளாக இருக்கும் என்ற ஒரு கணிப்புக்கு வர முடியும். ஆனாலும் பகுப்பாய்வுதான் வலுவானது. சட்டரீதியானது. இதேவேளை இந்த எலும்புக் கூடுகளையும் மனிதப் புதைகுழிகளையும் நேரில் பார்ப்பதற்கும் இதையிட்டு இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அணையா விளக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்திப்பதற்குமாக ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் (OHCHR) பிரதிநிதிகள் குழுநேரில் விஜயம் செய்தது. அதொரு முக்கியமான நிகழ்ச்சியே. ஆனால், இதையெல்லாம் பாதிக்கப்பட்டோருக்குச் சாதகமாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, இதன்போது அங்கே நடத்தப்பட்ட முட்டாள்தனமான எதிர்ப்பு நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பாழடித்துள்ளன. நடைபெற்ற போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதற்காகச் சென்ற அரசியல் தலைவர்களையும் மக்கள் பிரதிநிதிகள் சிலரையும் அங்கே கூடிய சில விசமிகள் எதிர்த்துத் தடுக்கவும் தாக்கவும் முற்பட்டுள்ளனர். தமது அரசியல் உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் இப்படித் தவறான முறையில் – குறுக்கு வழியில் செயற்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சில மணிநேரம் குழப்பங்கள் உருவாகின. மட்டுமல்ல, இது இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த நல்ல சக்திகளின் நல் நோக்கத்தையும் பரந்த தன்மையையும் சிதறடித்துள்ளது. நிச்சயமாக இந்தச் செயல் தவறானது. இதற்கு அவர்கள் பயன்படுத்த விளைந்தது, தியாகி – துரோகி என்ற பழைய – உளுத்துப்போன அரசியல் முறைமையை. துரோகி – தியாகி என்ற பிரிப்பினால் – அந்த விபரீத விளையாட்டினால் – ஈழத் தமிழ்ச் சமூகம் பேரழிவைச் சந்தித்துப் பின்னடைந்துள்ளது. இந்த அனுபவ உண்மையை இன்னும் புரிந்து கொள்ளாமல், தங்களைப் புனிதர்களாகக் கட்டமைத்துக் கொள்வதற்காக எதிர்த்தரப்பைத் துரோகியாக்கும் முட்டாள் வேலையை இன்னும் செய்ய முயற்சிக்கின்றனர் சிலர். இவர்கள் வரலாற்றைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் மூடர்களாகும். பாதிக்கப்பட்ட மக்களுடைய போராட்டத்தில் பங்கேற்பதற்கும் அதற்கு ஆதரவளிப்பதற்கும் அனைத்துத் தரப்புக்கும் உரிமை உண்டு. அதைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஒரு நியாயமான போராட்டத்தில் அனைத்துத் தரப்பும் இணைவது வெற்றியையே அளிக்கும். ஆனால், தமிழ்த்தேசியவாத அரசியலில் சில சக்திகள் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொள்வதற்காக தாமே சுத்தமான தரப்பு என்ற போர்வையில் இத்தகைய ஜனநாயக மறுப்பைச் செய்ய முயற்சிக்கின்றன. ஏனைய சக்திகளின் பங்கேற்பையும் ஆதரவையும் விலக்க முற்படுகின்றன. அதனுடைய உச்ச வெளிப்பாடு செம்மணியில் அரங்கேறியிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது –கண்டனத்துக்குரியது என்னவென்றால், இந்தப்போராட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர்சி.வீ.கே. சிவஞானமும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் சென்றபோது அதே கட்சியைச் சேர்ந்தவர்களிற் சிலர் எதிர்ப்புக் காட்டியுள்ளனர். இந்த எதிர்ப்பை அவர்கள் கட்சிமட்டத்தில் காட்டியிருக்க வேண்டுமே தவிர, இப்படிப் பொது வெளியில் காட்டியிருக்கக் கூடாது. மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களுடைய போராட்டத்தைப் பலவந்தமாகப் பறித்துத் தங்களுடைய கையில் எடுத்துத் தங்களுடைய அரசியல் லாபநட்டக் கணக்கைப் பார்த்திருக்கக் கூடாது என்ற பொது அபிப்பிராயம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தமிழரசுக் கட்சி, குறித்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேவேளை இவர்களைப் பொதுச் சமூகம் கண்டிக்க வேண்டும். அதைப்போல இந்தப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கே. சந்திரசேகர் சென்றிருக்கிறார். கூடவே யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களைப் பிரதிநிதித்துப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன், இளங்குமரன் ஆகியோரும் சென்றனர். அவர்களையும் இந்தக் குழப்பிகள் இடைஞ்சற்படுத்தியுள்ளனர். இதுவரையில் இவ்வாறு நடைபெறுகின்ற மக்கள் போராட்டங்கள் எதிலும் அரசாங்கத்தரப்பினர் எவரும் கலந்து கொள்வதில்லை. அவர்களுடைய கைகள் சுத்தமில்லை என்பதால் அவர்கள் அதைத் தவிர்த்து வந்தனர். அல்லது அது தமக்கு நெருக்கடியைத் தரும் என்பதால் விலகி நின்றனர். வரலாற்றில் முதற்தடவையாக தேசிய மக்கள் சக்தியே ஆட்சியாளர்களாகவும் இருந்து கொண்டு, மக்களுடைய நியாயமான போராட்டத்திலும் கலந்து கொண்டது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைக் கொடுப்பதோடு, அவர்களுடைய உணர்வுகளின் அடிப்படையில் நாம் இந்தப் பிரச்சினையை நியாயமான முறையில் கையாள்வோம் என்ற சேதியையும் சொல்வதாக இருந்தது. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதொரு நல்லவாய்ப்பாகவே அமைந்தது. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாத, புரிந்து கொள்ளமுடியாத, புரிந்து கொள்ளமறுக்கின்ற தமிழ்த்தேசியவாத முத்திரை குத்திய சிலர் இதையும் எதிர்த்தனர். அப்படியென்றால் இந்தப்பிரச்சினைக்கு எங்கிருந்து, எவ்வாறான நீதியை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டேர்க்கோ இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அவரைக் கடந்து எந்தத் தரப்பு இவ்வாறான பிரச்சினைகளுக்கு பொருத்தமான – தகுதியான நீதியை வழங்கும்? வழமையைப்போல அரசாங்கத்தை எதிர்த்து நின்றால், சர்வதேச சமூகம்தான் நீதியை வழங்க வேண்டும் என்றால், வழமையைப்போல இந்தப் பிரச்சினையும் (இந்த எலும்புக்கூடுகள் மற்றும் மனிதப்புதைகுழிகள் விவகாரமும்) நீர்த்து மறைந்து போகும். இதை வைத்து நாடகமாடும் அரசியல்வாதிகள் சிலர் மட்டும் ஆதாயத்தைப் பெறுவர். ஆகவே மக்கள் இதைக்குறித்துத் தெளிவாக இருப்பது அவசியமாகும். போலிகள், நடிகர்கள், நாடகமாடிகளைக் குறித்து எச்சரிக்கை கொள்ள வேண்டும். அவர்களையே விரட்டி அடிக்க வேண்டும். ஏனெனில் விடுதலை என்பது அநீதிக்கு எதிரானது. தவறானவர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு அதைப் பெறவே முடியாது. https://arangamnews.com/?p=12127
3 months 1 week ago
வெலிஓயா, பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது – ரவிகரன் நா.உ. வலியுறுத்தல் June 30, 2025 வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியு ள்ள பெரும்பான்மை இனத்தவர் களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப் பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடி யாதென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள் ளார். அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபகரித்த தமிழ் மக்களின் காணி களை, மீளவும் தமிழ் மக்களி டம் ஒப்படைத்துவிட்டு பெரும்பா ன்மை இனத் தவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டுமெனவும் எச் சரித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 25.06.2025 அன்று இடம் பெற்ற முல்லைத்தீவு மாவட்ட கடற் றொழில் அபிரிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரி வித்துள்ளார்.குறித்த கூட்டத்தில் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தாம் கடற்றொழில்மேற்கொள்வதற்கு நாயாறுப் பகு தியில் இறங்குதுறை வழங்குமாறு அனுமதி கோரியிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கிளாய்தொடக்கம், பேப்பாரப்பிட்டி வரைக்குமான பகுதியே முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதியாகும். இந்த கரையோரப் பகுதிகளிலேயே கடற்றொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். வெலிஓயா பிரதேசம் என்பது கடற்பகுதி யற்ற ஒரு பிரதேசம். இந்நிலையில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டு அங்கு அத்துமீறிக் குடியிருக்கின்ற பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்களும் கடற்றொழில் செய் வதற்கு இறங்குதுறை கேட்டால், கடலைப் பிரதானமான வாழ்வாதாரமாக நம்பி வாழும் கடற்றொழிலாளர்கள் எங்குசெல்வது. கடல்பகுதியே இல்லாத வெலிஓயா பகுதியில் அத்துமீறிக்குடியிருக்கின்றவர்களை கடற்றொழிலாளர் சங்கமாகப் பதிவுசெய்ததுயார். அவர்கள் நன்னீர் மீன்பிடிச்சங்கமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பின் கடலில் இறங்குதுறை கேட்கமுடியாது. கடந்த 1984ஆம் ஆண்டிற்கு பிற்பாடு தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து, தமிழர்க ளது பூர்வீக மணலாற்றை வெலிஓயாவாக மாற்றி அங்கு அத்துமீறித் தங்கியிருக்கும் பெரும்பான்மையினத்தவர்கள், தமிழ் மக்களிடம் காணிகளை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறவேண்டும்.வெலிஓயா பகுதியில் அத்துமீறிக் குடியிருக்கும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர்களுக்கு நாயாற்றில் இறங்குதுறை வழங்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடி யாது – என்றார். https://www.ilakku.org/வெலிஓயா-பெரும்பான்மை-இன/
3 months 1 week ago
ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணம் மாற்றமடையும் ; பௌத்த மதம் பாதுகாக்கப்படமாட்டாது - மெதகொட அபேதிஸ்ஸ தேரர் Published By: VISHNU 30 JUN, 2025 | 01:49 AM (இராஜதுரை ஹஷான்) இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும் என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கையில் 21 ராமர் கோயில்களை நிர்மாணிப்பதாக இந்தியா குறிப்பிடுகிறது. இந்து பிராமண சூழலில் பௌத்த மதம் பாதுகாக்கப்படாது. இதனால் தான். இந்தியாவில் பௌத்த மதம் இல்லாதொழிந்தது. இவ்வாறான நிலை இலங்கையில் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையின் நட்பு நாடு என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா ஆரம்ப காலத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஊடாக தமது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்திக் கொள்ளவே இந்தியா முயற்சிக்கும். திருகோணமலை துறைமுகம் பற்றி தற்போது எவரும் கவனம் செலுத்துவதில்லை. திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இந்தியா பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.இந்த செயற்திட்ட வலயத்துக்குள் புராதன கோயில்கள் மற்றும் பௌத்த விகாரைகள் உள்ளன. இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்திய ஆட்சியாளர்களால் பலவந்தமான முறையில் இலங்கைக்கு திணிக்கப்பட்டது.இந்த ஒப்பந்தத்தால் பல விளைவுகள் ஏற்பட்டன.நீதிமன்ற உத்தரவினால் தான் இந்த ஒப்பந்தம் இன்றும் இழுபறிநிலையில் உள்ளது.இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை செயற்படுத்துமாறு இந்தியா இன்றும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கிறது. இந்தியாவுடன் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் எதிர்காலத்துக்கும் தாக்கம் செலுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.இந்தியாவுடன் அண்மையில் பாதுகாப்பு, வலுசக்தி மற்றும் டிஜிட்டல் துறை தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்களின் உள்ளடக்கத்தை அரசாங்கம் இதுவரையில் பகிரங்கப்படுத்வில்லை. இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தத்தில் இலங்கை இராணுவத்தை இரண்டாம் நிலையாக்கும் வகையில் பல ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட விடுதலை புலிகள் அமைப்பை இலங்கை இராணுவத்தினர் இல்லாதொழித்தார்கள். மகாநாயக்க தேரர்கள் மற்றும் இராணுவத்தினர் இலங்கையின் காவல் தெய்வங்கள் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வலுசக்தி தொடர்பில் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இலங்கையில் சுயாதீனம் மற்றும் இறையான்மையை பாதிக்கும் வகையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பங்களாதேஷ் நாட்டின் வலுசக்தியை இயக்கும் அதிகாரம் இந்தியாவிடம் உள்ளது. ஆகவே வலுசக்தி துறையின் இறையாண்மையை இந்தியாவிடம் விட்டுக்கொடுத்து நாட்டைக் காட்டிக்கொடுக்க முடியாது.இந்தியாவுடன் இந்த அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு நாட்டு மக்கள் அனுமதியளிக்கவில்லை.மக்கள் விடுதலை முன்னணி தான் அனுமதியளித்துள்ளது. சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கையில் 21 இராமர் கோயில்களை நிர்மாணிப்பதாக இந்தியாகுறிப்பிடுகிறது. இந்து பிராமண சூழலில் பௌத்த மதம் பாதுகாக்கப்படாது. இதனால் தான் இந்தியாவில் பௌத்த மதம் இல்லாதொழிந்தது.இந்நிலைமை இலங்கையில் ஏற்பட இடமளிக்க முடியாது. இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும். ஆகவே ஆட்சியாளர்கள் தாம் தற்காலிக உரிமையாளர்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயற்பட வேண்டும். https://www.virakesari.lk/article/218798
3 months 1 week ago
அடாத்தாக காணிகளை பறித்தே கீரிமலை ஜனாதிபதி மாளிகை! ஒப்புக்கொள்கின்றார் அமைச்சர் கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் இடங்களைக் கைப்பற்றிச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- அந்த இடத்துக்கு 8 பேர் உரிமை கோரியுள்ளனர். அதனால் அந்த மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்த்த பின்னரே மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்கமுடியும். காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதா? அல்லது வேறு வழிகளில் தீர்ப்பதா? என்பது தொடர்பாக ஆலோசித்து வருகின்றோம். பிரச்சினையை விரைவாகத் தீர்த்து மாளிகையை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க இந்த மாளிகையை ஒருபோதும் உபயோகிக்கமாட்டார். இந்த மாளிகை மட்டுமல்ல நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளையும் அவர் உபயோகிக்கமாட்டார் - என்றார். https://newuthayan.com/article/அடாத்தாக_காணிகளை_பறித்தே_கீரிமலை_ஜனாதிபதி_மாளிகை!_ஒப்புக்கொள்கின்றார்_அமைச்சர்#google_vignette
3 months 1 week ago
செம்மணியில் இதுவரையில் 33 என்புத் தொகுதிகள்! புத்தகப்பை, ஆடை, வளையலுடன் சிறுகுழந்தையின் என்பு நேற்று அடையாளம் செம்மணி - சித்துப்பாத்தி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், நேற்றும் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள், ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்ட துணியிலான புத்தகப்பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகளில் தற்போது வரை 33 மனித என்புத் தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இனங்காணபட்ட மனிதப் புதைகுழியில் நேற்று இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் நான்காம் நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆடை, புத்தகப்பை மீட்பு நேற்றுமுன்தினம் வரை நடத்தப்பட்ட அகழ்வுப் பணிகளில் மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்துபோதும், ஆடைகளோ, வேறு பொருள்களோ இனங்காணப்படவில்லை. நேற்று நடத்தப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளில் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த அதேவேளை, என்புத் தொகுதி ஒன்றுக்கு அருகில் ஆடை, சிறிய வளையல்கள் நீலநிற துணி புத்தகப்பை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கங்களில் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்களால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப்பையை ஒத்ததாக காணப்பட்டாலும், அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. மண் மாதிரி சேகரிப்பு புதைகுழி அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தின் மண் மாதிரியைப் பரிசோதிப்பதற்கு சட்ட மருத்துவ அதிகாரிகள் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. கொழும்பில் இருந்து நேற்று வந்த குழு ஆய்வுக்கான மண் மாதிரிகளைச் சேகரித்தது. இந்த அகழ்வு நடவடிக்கைகள் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும், பேராசிரியருமான சோமதேவவின் தலைமையில் நடைபெற்று வருகின்றன. அகழ்வு நடவடிக்கைகளின் போது சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஆகியோரும் பிரசன்னமாகி வருகின்றனர். https://newuthayan.com/article/செம்மணியில்_இதுவரையில்_33_என்புத்_தொகுதிகள்!_புத்தகப்பை,_ஆடை,_வளையலுடன்_சிறுகுழந்தையின்_என்பு_நேற்று_அடையாளம்
3 months 1 week ago
3 months 1 week ago
அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன். செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்ட அணையா விளக்கு போராட்டமானது ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றியைப் பெற்றிருக்கிறது.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் சித்துப்பாத்தி மயானத்துக்குத்தான் வருகைதர இருந்தார். அவரை அணையா விளக்கை நோக்கி வர வைத்தது கட்சி சாராத மக்கள் திரட்சிதான். சிவில் சமூகங்கள் தான். ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அணையா விளக்கை வணங்கியதும், அங்கே மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்ததும் அடிப்படை வெற்றிகள்தான். அதேசமயம் கட்சி கடந்த அந்தப் போராட்டத்தில் எல்லாக் கட்சிகளையும் ஒரு மையத்தில் குவித்ததும் வெற்றிதான்.அதைவிட முக்கியமாக,அந்தப் போராட்டத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்ததும் வெற்றிதான். ஆனால் அங்கே வந்த சிவஞானம்,சாணக்கியன்,சந்திரசேகரன் போன்றவர்களை ஒரு தரப்பினர் அவமதித்தமை தவிர்த்திருக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று.அங்கிருந்து வெளியேறிய பின் சந்திரசேகரன் ஊடகச் சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்க வேண்டும். அந்த போராட்டத்தின் நியாயத்தை சந்திரசேகரன் உட்பட அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தமை என்பது அடிப்படை வெற்றி.அவர்களுடைய வாயாலயே அந்த போராட்டத்தின் நியாயத்தையும் அந்தப் போராட்டக் கோரிக்கைகளின் நியாயத்தையும் ஒப்புக்கொள்ள வைத்திருந்தால் அது மேலும் வெற்றியாக அமைந்திருக்கும். அரசியல்வாதிகளை அந்த இடத்திலிருந்து அவமதித்து வெளியேற்றியமை தங்களுடைய கைகளை மீறி நிகழ்ந்த ஒன்று என்ற பொருள்பட ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.மக்கள் செயல் என்று பெயரிடப்பட்ட அந்த ஏற்பாட்டுக் குழு சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மக்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு ஆகும்.அந்த அமைப்பு செம்மணியில் அரசியல் அடர்த்தி மிக்க ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. அது ஒரு இறுக்கமான அரசியல் இயக்கம் அல்ல. தளர்வானது. அந்த தளர்வான கட்டமைப்பைப் பயன்படுத்தித்தான் அங்கே அரசியல்வாதிகளை அவமதிக்கும் செயல்கள் இடம்பெற்றிருக்கின்றன.அதுபோலவே அந்தத் தளர்வான கட்டமைப்பைப் பயன்படுத்தித்தான் யுரியூப்பர்களும் இலத்திரனியல் ஊடகங்களும் அந்தப் போராட்டத்தின் நோக்கத்துக்கு வெளியே போய் காணொளி உள்ளடக்கங்களை உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள். செம்மணிப் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் அது. காணொளி ஊடகங்களும் குறிப்பாக யுரியூப்பர்களும் ஒரு போராட்டத்தைத் தமது காணொளி உள்ளடக்கத் தேவைகளுக்காகத் திசை திருப்ப அனுமதிக்கக்கூடாது என்பது.இந்த விடயம் கடந்த 15 ஆண்டுகளிலும் யாழ்ப்பாணத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாக்கள்,மக்கள் சந்திப்புகள்,கருத்தரங்குகள் போன்றவற்றிலும் தொகுத்துக் கவனிக்கப்பட்ட ஒரு விடயமாகும். சில யுரியூப்பர்களும் காணொளி ஊடகக்காரர்களும் சர்ச்சைகளைத் தேடுகிறார்கள். சர்ச்சைகள் இல்லாத இடத்தில் சர்ச்சைகளை வலிந்து உருவாக்குகின்றார்கள். அல்லது ஏற்கனவே உள்ள சர்ச்சை ஒன்றை எப்படிச் சூடான காணொளி உள்ளடக்கமாக மாற்றலாம் என்று சிந்திக்கிறார்கள்.அவர்களுடைய இலக்கு டொலர்கள்தான்.எந்த உள்ளடக்கத்தை விவகாரம் ஆக்கிப்போட்டால் அது அதிகம் பார்வையாளர்களைக் கவருமோ அந்த உள்ளடக்கத்தை அவர்கள் தேடித் திரிகிறார்கள். அல்லது அதனை உருவாக்குகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடந்த சில புத்தக வெளியீட்டு விழாக்கள்,சில மக்கள் சந்திப்புகள்,கருத்தரங்குகள் போன்றவற்றிலும் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தன்னியல்பாக அங்கே தோன்றும் முரண்பாடுகளை நோக்கிக் கமராக்கள் குவியத் தொடங்கும். எனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் ஏற்பாட்டாளர்களின் அனுமதியின்றி சம்பவங்களை படம்பிடிக்க வேண்டாம் என்று ஊடகவியலாளர்களும் யுரியூப்பர்களும் தடுக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. ஒரு அமைப்பு காசைச் செலவழித்து ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வில் உள்ளே வரும் ஊடகவியலாளர்கள் அந்த அமைப்பின் அனுமதியின்றி மோதல்களைப் படம் பிடிக்கிறார்கள். அந்த மோதல்கள் லைஃபில் விடப்படுகின்றன. அல்லது அவை காணொளி உள்ளடக்கங்களாக,விவகாரமாக மாற்றப்பட்டுப் பிரசுரிக்கப்படுகின்றன. எனவே அவை போன்ற நிகழ்வுகளில் காணொளி ஊடகங்களை அனுமதியின்றி படம்பிடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதும் தவிர்க்கமுடியாத ஒன்று.அவ்வாறு கேட்பதற்கு ஏற்பாட்டாளர்களுக்கு உரிமை உண்டு. அல்லது ஏற்பாட்டாளர்கள் உத்தியோகபூர்வமாக ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை வைத்து அதில் அவர்கள் தெரிவிப்பதுதான் அந்தப் போராட்டத்தின் அல்லது அந்த நிகழ்வின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்பதால்,அந்த ஊடகச் சந்திப்புக்கு மட்டும் ஊடகவியலாளர்களை அனுமதிப்பது என்று முடிவெடுக்கலாம். அது ஜனநாயக மீறல் அல்ல. அது ஏற்பாட்டாளருக்கு உள்ள உரிமை. எனவே இது போன்ற சம்பவங்களில் ஊடகவியலாளர்களை அந்த இடத்துக்குள் அனுமதிக்கும் பொழுது அது தொடர்பாக முறையான அறிவுறுத்தல்கள் தேவை என்பதைத்தான் செம்மணியில் நடந்தவை நமக்கு உணர்த்துகின்றன. மேலும் ஊடகவியலாளர்களை மட்டுமல்ல கட்சிக்காரர்களையும் உணர்ச்சிக் கொதிப்படையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் உள்ளே விடும் பொழுதும்கூட அது தொடர்பாக விழிப்பு இருக்க வேண்டும். ஒரு கட்சி நிகழ்வில் கட்சிக்காரர்கள் எதையும் செய்யட்டும்.அதற்கு கட்சி பொறுப்பு. ஆனால் கட்சிசாரா நிகழ்வுகளில் இவ்வாறு கட்சிக்காரர்களும் அந்த நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவோடு சம்பந்தப்படாதவர்களும் அந்த நிகழ்வின் நோக்கத்தை திசை திருப்புவதற்கு அனுமதிக்க முடியாது. செம்மணியில் இரண்டு குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரு குழப்பம் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் உட்கட்சி மோதல்களைப் பிரதிபலித்தது. அதன் பின்னணியில் சிறீதரன் இருப்பதாக சுமந்திரன் அணி குற்றம் சாட்டுகிறது. அண்மையில் புதிய பிரதேச சபை தெரிவு செய்யப்பட்ட பின் கிளிநொச்சிக்குரிய பிரதேச சபைத் தவிசாளர் வட மாகாண ஆளுநரைச் சந்தித்த பொழுது செம்மணியில் குழப்பம் விளைவித்த நபரும் அவருடன் காணப்பட்டார். அதனால் அந்தக் குழப்பம் இயல்பானது அல்ல, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற சந்தேகம் ஏற்பாட்டாளர்கள் மத்தியிலும் இருப்பதாகத் தெரிகிறது. அப்படித்தான் சந்திரசேகரனை அவமதித்த விடயத்திலும் அந்தக் காணொளியில் சில கட்சிக்காரர்கள் காணப்படுகிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய பேரவையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த இடத்தில் மூன்று நாட்களாகக் காணப்பட்டவர்கள். குறிப்பாக சிவஞானம் அவமதிக்கப்பட்டதை சுமந்திரனின் எதிரணி நியாயப்படுத்துகின்றது. அதற்கு அவர்கள் பின்வரும் விளக்கத்தைக் கூறுகிறார்கள்.அணையா விளக்கு போராட்டத்தில் மூன்று நாட்களும் தொடர்ச்சியாக காணப்பட்ட, காவி உடுப்போடு காணப்பட்ட ஒரு சாமியார் தமிழரசுக் கட்சியை மறைமுகமாகச் சுட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார்.அந்த நேர்காணலில் பெருமளவுக்கு மறைமுகமாகக் குற்றஞ் சாட்டப்படுவது தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிதான். அந்தக் காணொளிக்கு சிவஞானம் பின்னர் பதில் கூறியிருந்தார்.இந்தப் பதில்தான் சிவஞானம் அங்கே அவமதிக்கப்படுவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இத்தனைக்கும் அந்தச சாமியார் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரியக்கத்தின் அமைப்பாளர் ஆகும். 2015க்குப் பின் தமிழ்த் தேசிய அரசியலில் காவியோடு துருத்திக் கொண்டு தெரியும் ஒரு சாமியார் அவர். மூன்று நாட்களாக ,தொடர்ச்சியாக அவர் செம்மணியில் இருந்தார். அங்கே தொடர்ச்சியாக மூன்று நாட்களும் காணப்பட்ட நபர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவர் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவர் அல்ல. சுமந்திரன் அணிக்கு எதிரான அவருடைய கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் சூழ்ச்சிகளின் மூலம் சுமந்திரன் கட்சிக்குள் தன் முதன்மையை தொடர்ந்தும் பேண முயற்சித்து வருகிறார். இதனால் தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் அவர் மீதான அதிருப்தி மேலும் அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அந்த அதிருப்தியைச் சரி செய்வதற்கு அவர் பல வழிகளிலும் முயற்சிக்கின்றார். அண்மையில்கூட சர்ச்சைக்குரிய காணி வர்த்தமானிக்கு எதிராக அவர் வழக்கு போட்டு அதில் அவர் பெற்ற முதற் கட்ட வெற்றியை அவருடைய விசுவாசிகள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டு உளவியலின் ஒரு பகுதி சுமந்திரனுக்கு எதிராகவே காணப்படுகிறது.அந்த உளவியலின் பிரதிபலிப்பாகத்தான் செம்மணி போன்ற உணர்ச்சிகரமான போராட்டக் களங்களில் அது வெடித்துக் கிளம்புகிறது. ஆனால் சுமந்திரனுக்கு எதிரானவர்கள் தாங்கள் ஒழுங்குபடுத்தாத ஒரு போராட்டக் களத்தை துஸ்பிரயோகம் செய்ய முடியாது. அவர்கள் ஒரு விளக்கம் கூறுவார்கள், “சுமந்திரன் தமிழ் தேசியத்துக்கு எதிராகச் செல்கிறார், எனவே தமிழ்த் தேசியத்திற்கு நீதியைக் கேட்கும் போராட்டக் களங்களில் அவருடைய அணிக்கு இடமில்லை, அவர்களை அந்தக் களத்திற்குள் விட முடியாது” என்று. ஆனால் அணையா விளக்கை அவர்கள் ஒழுங்குபடுத்தவில்லை. அதை ஒழுங்குபடுத்திய அமைப்பின் அனுமதியின்றி அவர்கள் அதற்குள் புதிய நிகழ்ச்சி நிரலை நுழைக்க முடியாது. அணையா விளக்கு பொது எதிரிக்கு எதிரானது. அது அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்கும் ஒரு போராட்டம். அங்கே உள்ளூர் மோதல்களை வைத்துக் கொள்ளத் தேவையில்லை. எனவே இனிவரும் காலங்களில் கட்சிசாரா மக்கள் அமைப்புக்கள் போராட்டக் களங்களைத் திறக்கும்பொழுது செம்மணியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் காணொளிக்காரர்களையும் கட்சிக்காரர்களையும் கட்டுப்படுவதற்கான புதிய பொறிமுறைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். இது ஒரு ஆபத்தான வளர்ச்சி. தமிழ் மக்களை வாக்காளர்களாக, விசுவாசிகளாகப் பிரித்து வைத்திருப்பது கட்சிகள்தான்.மாறாக தமிழ் மக்களை கட்சி சாராது இனமாக,தேசமாக திரட்ட முற்படுவது மக்கள் அமைப்புகள் அல்லது செயற்பாட்டு அமைப்புகள் ஆகும். அவ்வாறான அமைப்புக்கள் கட்சிசாரா போராட்டங்களை ஒழுங்குபடுத்தும் பொழுது கட்சிகள் அல்லது கட்சிகளின் ஆதரவாளர்கள் அந்தப் போராட்டக் களங்களை “ஹைஜாக்” செய்வதற்கு முயற்சிக்கிறார்கள்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியிலும் இந்த சர்ச்சை எழுந்தது.தமிழ்ப் பொது வேட்பாளரின் விடையத்திலும் இப்படிச் சர்ச்சைகள் எழுந்தன. தமிழ்த் தேசியக் கட்சிகள் தாங்களும் ஒன்றுபட மாட்டார்கள். அதேசமயம் தன்னார்வமாக மக்களை ஒன்று திரட்டும் மக்கள் அமைப்புகளின் போராட்டக் களங்களையும் விட்டு வைக்கிறார்கள் இல்லை. ஒரு கட்சி சாரா மக்கள் இயக்கம் பலமடையும் பொழுதுதான் இந்தக் குழப்பத்தைத் தடுக்கலாம்? https://athavannews.com/2025/1437504
3 months 1 week ago
பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்! பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு வாழைச்சேனையில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவிந்திரநாத்தின் கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரின் விசாரணையை துரிதப்படுத்துமாறும் அவரை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியும் பேத்தாழை பிரதான வீதியில நேற்று (28) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1437529
3 months 1 week ago
காஸா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 81பேர் உயிரிழப்பு! காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று (28) மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. காஸா நகரை குறிவைத்து ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்களை செலுத்தியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 81பேர் உயிரிழந்துள்ளதுடன் 422 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை பல பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும், அவசரகால குழுக்களால் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1437497
3 months 1 week ago
வணக்கம், உங்கள் மீள் வரவிற்கு நன்றி. தொடர்ந்து இணைந்து இருங்கள்.
3 months 1 week ago
அவல் - சுலபமான மாலை நேரத்து நொறுக்கு தீனி
3 months 1 week ago
அமெரிக்காவில் தீயணைப்பு வீரர்கள் மீது துப்பாக்கி சூடு. இடாஹோவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் (19:30 GMT) கோயூர் டி’அலீன் நகருக்கு வடக்கே உள்ள கேன்ஃபீல்ட் மலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு குழுவினர் பதிலளிக்கும் போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் பொதுமக்கள் அந்தப் பகுதியை விட்டு விலகி இருக்குமாறும் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1437553
3 months 1 week ago
ஆண் பாவங்கள் - பரிதாபங்கள்..
3 months 1 week ago
கீழடி - நமது முப்பாட்டன் இப்படித்தான் இருந்தான் லண்டன் - லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட வடிவமைப்பு
Checked
Mon, 10/13/2025 - 03:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed