3 months 1 week ago
01 JUL, 2025 | 12:58 PM யாழ்ப்பாணத்தில் வீதி மின்விளக்கினை பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் சந்தையை அண்மித்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) காலை, வீதி மின்விளக்குகளை பழுது பார்த்துக்கொண்டிருந்த வேளை மின்சாரம் தாக்கியுள்ளது. மின்சார தாக்குதலுக்கு உள்ளான ஊழியரை சக ஊழியர்கள் மீட்டு, யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218926
3 months 1 week ago
'காவலர்கள் தாக்கிய வீடியோ': நீதிபதியிடம் போட்டுக் காட்டிய வழக்கறிஞர்கள் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,SCREENGRAB படக்குறிப்பு, உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் காட்டப்பட்ட வீடியோவில் ஒரு காட்சி(இடது) உயிரிழந்த காவலாளி அஜித் குமார் (வலது) கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 1 ஜூலை 2025, 05:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு அடுத்தடுத்து பூதாகரமாகி வருகிறது. கொலை வழக்காக மாற்றப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், அஜித்குமாரை காவல்துறையினர் தாக்கிய போது எடுக்கப்பட்டது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி முன்னிலையில் வழக்கறிஞர்கள் வீடியோ ஒன்றை காட்டியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக காவல்துறையினருக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்தார் என்பது குற்றச்சாட்டு. இதனிடையே, சிவகங்கை மாவட்ட எஸ்பியை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் என்ன நடக்கிறது? நீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டி மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளைக் கொண்டு காவல்துறையினர் தாக்கியுள்ளனர் என குறிப்பிட்டு, அதன் புகைப்படங்களை வழக்கறிஞர் ஹென்றி திபேன் தாக்கல் செய்தார். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டுத்தொழுவத்தில் வைத்து அஜித் குமாரை காவல்துறையினர் அடித்த போது எடுக்கப்பட்டதாகக் கூறி நீதிபதிகளிடம் வீடியோ ஒன்று காண்பிக்கப்பட்டது. அந்த வீடியோவில் காவலர்களாக வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டிய நபர்கள் காவலர் உடையில் அல்லாமல் சாதாரண உடையில் இருந்தனர். இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை. மறைவிடத்தில் இருந்தபடி ஒருவர் பதிவு செய்த வீடியோ இது என்று வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். "தென்னந்தோப்பில் வைத்து அஜித்குமாரை காவலர்கள் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தும் போது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்துள்ளார். திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அஜித்குமார் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் அங்கிருந்தே விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரது உடல் எதற்காக மதுரை கொண்டு செல்லப்பட்டது என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. அவரது தாயாரும், சகோதரரும் 28ஆம் இரவு 12 மணி வரை, தனது மகன் குறித்து விசாரித்துள்ளனர். திருப்புவனம் காவல் நிலையத்தில் இருந்த எஸ்.பி., உங்கள் மகன் இறந்து விட்டார் என அஜித்தின் அம்மாவிடம் கூறி உள்ளார்" என ஹென்றி திபேன் வாதிட்டார். "அஜித்குமார் விசாரணையின் போது தப்பித்து ஓட முயற்சித்துள்ளார் என காவல்துறை எப்போதும் போல் கதை கூறுகின்றனர்" எனவும் ஹென்றி திபேன் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,HENRI TIPHAGNE படக்குறிப்பு, ஹென்றி திபேன் "திமுகவின் சேங்கைமாறன் (அவரது மனைவி பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்), மகேந்திரன் திருப்புவனம் திமுக செயலர், காளீஸ்வரன், மானாமதுரை டி.எஸ்.பி ஆகியோர் அஜித் இறந்த பின்பு 50 லட்சம் தருவதாக சமரசம் பேசியுள்ளனர்." என்றும் நீதிமன்றத்தில் அவர் குற்றம் சாட்டினார். "திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரிக்கும் போது அவரைச் சுற்றி காவல் துறையினர் சூழ்ந்திருந்தனர். உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் உடலை முழுமையாக பார்க்க தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்கவில்லை. உடற்கூராய்வு அறிக்கை தற்போது வரை அஜித்தின் தாயிடம் வழங்கப்படவில்லை" என்றும் அவர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பான மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மாரீஸ்குமார், "காவல்துறையினர் 6 பேர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், 5 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜித் குமார் கூறுவது பொய் என கூறியதால், திருப்புவனம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளரும் 'நன்றாக கவனியுங்கள்' என கூறியதாக, சிறப்பு விசாரணை குழுவின் தலைமை காவலர் கூறியுள்ளார். ஆகவே அவர்கள் இருவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். நகை காணாமல் போன சம்பவத்தில் புகார்தாரர் நிகிதா, ஒரு ஐ ஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர். அதனால் தான் வழக்குப் பதிவு செய்யாமல் தாக்கி உள்ளனர்." என்று கூறினார். நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் அப்போது நீதிபதிகள் இவ்வழக்கு தொடர்பாக காவல்துறைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நகை காணாமல் போன வழக்கில் ஏன் எஃப்.ஐ.ஆர். பதியவில்லை? காவல்துறையினர் மாமூல் வாங்குவது தொடர்பாக வீடியோக்கள் வருகின்றன. இதுதொடர்பாக சிறப்புப் படை விசாரித்து 2 மணிநேரத்தில் நிறுத்த முடியுமென்றால் நிறுத்துங்கள். விசாரிப்பார்களா? சிறப்புப்படை எந்த அடிப்படையில், யார் சொல்லி இந்த வழக்கை கையிலெடுத்தனர்? யார் இந்த வழக்கை தனிப் படையிடம் ஒப்படைத்தது? அவர்களாகவே இந்த வழக்கை கையிலெடுத்து விசாரிக்க முடியுமா? உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டுமென முழுமையான விவரங்களை மறைக்கக் கூடாது. மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும். புலனாய்வு செய்வதற்கே காவல்துறை.(பொதுமக்களை) அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? நீங்கள் முழு உண்மையையும் சொல்ல மறுக்கிறீர்கள். காவல் நிலையங்களில் சிசிடிவிகள் முறையாக வேலை செய்கின்றனவா? சிசிடிவி பதிவிலிருந்து மறைக்க விரும்புகிறீர்களா? பின் ஏன் வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விசாரிக்கிறீர்கள்? அஜித்குமாரை 2 நாட்கள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? மாஜிஸ்திரேட்டுக்கு உடனடியாக பிரேத பரிசோதனை அறிக்கை அனுப்பப்படாதது ஏன்? காவல்துறை, நீதித்துறை குடும்பங்களில் இப்படி நடந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? மாஜிஸ்திரேட் அப்பகுதி மக்களை ஏன் விசாரிக்க அனுமதிக்கவில்லை? எஸ்.பி., யை உடனடியாக இடமாற்றம் செய்தது ஏன்? எதிர்கொள்ள வேண்டியதுதானே? நீதித்துறை நடுவர் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என உத்தரவிட நேரிடும். மேலும், "நடவடிக்கை முக்கியம். ஆனால் எந்த வழக்கை எப்படி விசாரிக்க வேண்டுமென்பது முக்கியம். ஒட்டுமொத்த அமைப்பையும் குறை சொல்லவில்லை. மக்களைக் காக்கவே காவல்துறை. அவர்களே மக்களைத் தாக்கினால், அதன் நோக்கமே இல்லாது போய்விடும். சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களைக் காக்கவே, அவர்களது நலனுக்கே என்பதை காவல்துறையினர் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகம் அதிக கல்வியறிவு கொண்ட மக்களைக் கொண்ட மாநிலம். இருப்பினும் இது போல் நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல" என நீதிபதிகள் தெரிவித்தனர். அரசுத்தரப்பில், "அஜித் இரவு 8 மணி முதல் 10.30 மணிக்குள் (இறந்திருப்பார். தொடக்க நிலை விசாரணை நடந்த பிறகு தான், (நகை காணாமல் போன) வழக்கு பதிவு செய்ய முடியும். மேலும், "தவறு செய்தவர்கள் மீது நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்தவர்களுக்கு ஒருபோதும் நாங்கள் ஆதரவாக இருக்க மாட்டோம்" என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, "திருப்புவனம் நீதித்துறை மாஜிஸ்திரேட் அவரது விசாரணை அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் உதவி ஆணையர், அஜித் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் 3 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். உடற்கூராய்வு அறிக்கையை 3 மணிக்கு நீதிமன்றத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு சமர்ப்பிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர். உடற்கூராய்வு அறிக்கை கூறுவது என்ன? மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அஜித்குமாரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அங்கே வழக்கமாக ஒரு பிரேத பரிசோதனை 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், அஜித்குமாருக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை 5 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூடற்கூராய்வு அவரது உடலில் அசாதாரண அளவிலான தாக்கங்கள் மற்றும் காயங்கள் இருந்ததை உறுதி செய்கிறது. அதன்படி, குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மண்டையோடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன. உள்ளுறுப்புகளிலும் பலவிதமான காயங்கள், ரத்தக்கசிவு போன்ற மரணத்துக்குக் காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக்கசிவு போன்றவை கூட மரணத்துக்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் அஜித் குமார் விசாரணையின் போது போலீசாரால் தாக்கப்பட்டார் என்று குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. 5 காவலர்கள் கைது - விடியவிடிய நடந்தது என்ன? அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கையின் பேரில், விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் 5 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் உடனே அடுத்தடுத்த நடவடிக்கைகளில் காவல்துறை இறங்கியது. சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து இரவு 9 மணியளவில் 5 காவலர்களையும் அழைத்துக் கொண்டு வேன் புறப்பட்டது. இரவு 11 மணியளவில் திருப்புவனம் காவல் நிலையத்தை அந்த வேன் சென்றடைந்தது. திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களது கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. மற்ற நடைமுறைகள் முடிந்த பின்னர் நள்ளிரவு 1.15 மணியளவில் 5 காவலர்களும் வேனில் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நள்ளிரவு 1.45 மணியளவில் திருப்புவனம் குற்றவியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பாக 5 காவலர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 காவலர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து திருப்புவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர், அதிகாலை 4.30 மணியளவில் 5 காவலர்களும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேன் ஓட்டுநர் ராமச்சந்திரன் தவிர 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படக்குறிப்பு,ஐந்து காவலர்களும் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர் 5 காவலர்கள் கைது: திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கு கொலை வழக்காக மாற்றம் - போலீஸ் காவலில் என்ன நடந்தது? மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவமா? சிவகங்கை இளைஞர் மரணத்தில் நடந்தது என்ன? லண்டனில் போன் திருடிய நபர் ஒற்றை ஷூவால் சிக்கியது எப்படி? 'வாட்ஸ்அப் மூலம் போதைப் பொருள் விற்பனை' - குற்றச்சாட்டு நிரூபணமானால் என்ன தண்டனை? சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். அரசியல் தலைவர்களும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு,அஜித்குமார் வழக்கின் பின்னணி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித் குமார் (வயது 27) பணியாற்றி வந்தார். அந்த கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு, நகை திருடு போனதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார் என்பது குற்றச்சாட்டு. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0566166nl9o
3 months 1 week ago
01 JUL, 2025 | 04:31 PM அவுஸ்திரேலியாவில் சிறுவர் பராமரிப்பு நிலைய பணியாளர் ஒருவர் பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து சுமார் 1200 சிறுவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் பெற்றோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் சிறுவர்களை தொற்றுநோய் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜோசுவா டேல் பிரவுன் என்ற 26 வயது நபர் 2022 முதல் 23 வரை மெல்பேர்னில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஐந்து முதல் 12 வயதுடைய 8 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். ஒரு சிறுவர் பராமரிப்பு நிலையத்தை சேர்ந்த சிறுவர்களே பாதிக்கப்பட்டுள்ள போதிலும்,குறிப்பிட்ட நபர் 2017 முதல் வேறு 17 சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றியுள்ளதால் அங்கும் துஸ்பிரயோகம் இடம்பெறலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அந்த நபரின் பராமரிப்பி;ன் கீழ் இருந்தனரா என்பதை உறுதி செய்ய உதவுவதற்காகவே சந்தேகநபரின் பெயரை வெளியிட்டதாக விக்டோரியா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு தங்கள் பிள்ளையை அனுப்பிய ஒவ்வொரு பெற்றோருக்கும் குறிப்பிட்ட நபர் அங்கு பணியாற்றினாரா என்பது தெரியவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/218948
3 months 1 week ago
பட மூலாதாரம், BOOPATHY கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 30 ஜூன் 2025 [எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன.] ''போலீசோ, வேற யாராச்சும் வந்து கேட்டா, எனக்காக நீங்க தலை குனிய வேண்டாம். இதை போட்டுக் காமிச்சிருங்க. என்னோட இந்த முடிவுக்கு என்னோட திருமண வாழ்க்கைதான் காரணம். உடல்ரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்; மனரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்...என் கல்யாண வாழ்க்கையே மோசமா போயிருச்சு...என்னை மன்னிச்சிருங்கப்பா...என்னை மன்னிச்சிருங்கம்மா...!'' திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற 27 வயது பெண், தனது தந்தைக்குப் பதிவு செய்து வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பிய ஆடியோவில் கூறப்பட்டிருந்த வார்த்தைகள் இவை. அவருடைய இந்த ஆடியோ வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் கணவர் மற்றும் மாமனார் , மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவரும், மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் கைகாட்டிபுதுாரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ரிதன்யா(வயது 27). ரிதன்யா, எம்.எஸ்.சி.–சிஎஸ் படித்தவர். இவருக்கும் அவினாசி பழங்கரையைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11 அன்று திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 77 நாட்களே ஆனநிலையில், கடந்த ஜூன் 28 அன்று, ரிதன்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கின்றனர் அவரது குடும்பத்தினர். பட மூலாதாரம்,BOOPATHY 'திருமணமாகி 2 வாரங்களில் திரும்பிய ரிதன்யா' அவினாசி–சேயூர் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சில தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருமணமாகி 2 வாரங்கள் மட்டுமே, ரிதன்யாவும், கவின்குமாரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அதற்குப்பின், பிரச்னையாகி ரிதன்யா தன் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு 20 நாட்கள் இருந்துள்ளார். அப்போது கவின் அவ்வப்போது வந்து பார்த்துச்சென்றுள்ளார். பெற்றோர் மீண்டும் ரிதன்யாவிடம் பேசி, அவரை கவின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து திருப்பதி கோவிலுக்கும், வேறு சில இடங்களுக்கும் சுற்றுலா சென்றுள்ளனர். இரு வாரங்கள் சந்தோஷமாக இருந்த நிலையில், மீண்டும் கடந்த ஜூன் 22 அன்று ரிதன்யாவை கவின் அழைத்து வந்து, அவரின் தந்தையின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அப்போது ரிதன்யா மிகவும் சோகமாக இருந்துள்ளார். தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாமென்று ரிதன்யா கூறிய நிலையில், தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை, ஒரு வாரம் அப்பாவின் வீட்டில் இருக்க ஆசைப்பட்டதால் கொண்டு வந்து விட்டதாக அண்ணாதுரையிடம் கவின் கூறியுள்ளார். ரிதன்யாவை விட்டுச்சென்ற பின், ஜூன் 23 மற்றும் ஜூன் 27 ஆகிய இரு நாட்களும் கவின் வந்து பார்த்துச் சென்றுள்ளார். மறுநாள் ஜூன் 28 அன்று, சேயூர் மொண்டிபாளையம் பெருமாள் கோவிலுக்குச் செல்வதாகக் கூறி காரை தனியாக எடுத்துச் சென்றுள்ளார் ரிதன்யா. வாரம் ஒரு முறை அவர் அந்தக் கோவிலுக்குச் செல்வது வழக்கம் என்பதால் அவரை தனியாக அனுப்பியுள்ளனர். அன்று மதியம் ஒரு மணிக்கு ரிதன்யாவின் தாயார் ஜெயசுதாவுக்கு ரிதன்யாவின் மொபைலில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர், இந்த எண் யாருடையது என்று கேட்டு, செட்டிபுதுார் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒரு பெண் மயங்கிக் கிடக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார். உடனே ரிதன்யாவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அங்கு செல்வதற்குள் அவரை அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். முதலில் ரிதன்யாவின் தற்கொலை குறித்து, அவருடைய குடும்பத்தினர் எந்தப் புகாரும் போலீசில் தெரிவிக்கவில்லை. அதனால் சேயூர் போலீசார் தற்கொலை வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர். ஆனால் தற்கொலை செய்வதற்கு முன்பாக, ஜூன் 28 மதியம் 12 மணியளவிலேயே அவர் ஆடியோ பதிவு செய்து, தன் தந்தைக்கு அனுப்பியுள்ளார். அப்போது மொபைலில் 'நெட்'டை அணைத்து வைத்திருந்ததால் வாட்ஸ்ஆப் தகவலை பெற முடியவில்லை. அன்றிரவு, உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக, இரவு 11 மணியளவில் அண்ணாதுரையின் மொபைலில் 'நெட்'டை அவருடைய உறவினர் ஒருவர் 'ஆன்' செய்தபோது, ரிதன்யாவின் மொபைல் எண்ணிலிருந்து 10 ஆடியோ பதிவுகள் வந்துள்ளன. அதில் தன்னுடைய தற்கொலை முடிவு பற்றி, அழுதவாறே பேசியுள்ள ரிதன்யா, அந்த ஆடியோக்களை வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பியிருந்தது தெரியவந்தது. அந்த ஆடியோக்களில் தன்னுடைய தற்கொலை முடிவுக்கு கவினும், அவருடைய தாயும், தந்தையுமே காரணமென்று தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,BOOPATHY படக்குறிப்பு,கணவர் குடும்பத்துடன் ரிதன்யா '300 சவரன் நகை, புது வால்வோ கார், திருமண செலவு ரூ.3 கோடி' இந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ரிதன்யாவின் தந்தை, சேயூர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார். அந்த ஆதாரத்தின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியது (IPC 306) உள்ளிட்ட பிரிவுகளில் ரிதன்யாவின் கணவர் கவின் குமார், அவருடைய தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாயார் சித்ரா தேவி ஆகியோர் மீது சேயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கவின்குமாரும், ஈஸ்வரமூர்த்தியும் கைது செய்யப்பட்டனர். உடல்ரீதியான பாதிப்பு காரணமாக, சித்ரா தேவியை உடனடியாகக் கைது செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை பிபிசி தமிழிடம் பேசுகையில், ''300 சவரன் போட்டு 70 லட்ச ரூபாய்க்கு வால்வோ காரும் வாங்கிக்கொடுத்தோம். அதில் 150 சவரன் அங்கே இருந்தது. மீதம் என் வீட்டில் இருந்தது. ஆனால் அதற்கு மேலும் கேட்டு, டார்ச்சர் செய்து, இரண்டே வாரத்தில் மகளை என் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். நானும் எல்லாம் சரியாகிவிடுமென்று சமாதானப்படுத்தி பேசி மீண்டும் அனுப்பி வைத்தேன். ஆனால் வெளியில் சொல்லவே முடியாத அளவுக்கு உடல்ரீதியான கொடுமைகளை அவள் அனுபவித்துள்ளார்.'' என்றார். ''என்னிடமும் என் மனைவியிடமும் கூட முழுமையாக எதையும் சொல்லாமல், அவள் மாமியாரை வரச்சொல்லி, என் வீட்டில் வைத்தே ஒன்றரை மணி நேரம் தனியாகப் பேசினாள். அதன்பின், மாமியார் எங்களிடம் வந்து, 'எங்க பையன் இப்படி இருப்பான்னு எங்களுக்கே தெரியலை. இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.' என்று கூறி அழைத்துச் சென்றார். மறுபடியும் 20 நாளில் திரும்பிவிட்டாள். பையனுக்கு தொழில் இல்லை. உறவினர்களில் பலர் 100 கோடி ரூபாய் செலவழித்து அவரவர் மாப்பிள்ளைக்குத் தொழில் செய்து கொடுத்துள்ளனர். உங்க அப்பா 500 சவரன் போடுவதாகக் கூறி பாதியளவும் போடவில்லை என்று எல்லோரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.'' என்றும் அண்ணாதுரை தெரிவித்தார். மாப்பிள்ளைக்கு தனியாக தொழில் இல்லாவிடினும், 10 முதல் 15 லட்ச ரூபாய் வரை வாடகை வந்ததால் வருமானம் இருக்கிறதென்று திருமணத்துக்கு 3 கோடி ரூபாய் செலவழித்ததாக பிபிசி தமிழிடம் கூறிய ரிதன்யாவின் சித்தப்பா பூபதி, தற்கொலைக்கு முன்பாக ரிதன்யா, தன் தந்தைக்குப் பேசி அனுப்பிய ஆடியோக்களை பிபிசிடம் பகிர்ந்தார். அதில் பேசியுள்ள ரிதன்யா, தான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் கொடுமைகளை அனுபவித்துள்ளதாக மீண்டும் மீண்டும் பல முறை தெரிவித்துள்ளார். தன்னுடைய தற்கொலை முடிவுக்கு, கவினும், அவருடைய தந்தை ஈஸ்வரமூர்த்தியும், அவருடைய தாயார் சித்ராதேவியும்தான் காரணமென்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,BOOPATHY படக்குறிப்பு, பெற்றோருடன் ரிதன்யா மகளுக்கு நீதி வேண்டுமென்று கேட்கும் தந்தை! தன்னுடைய மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும், இனிமேல் எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது என்று கண்ணீரோடு பேசினார் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை. கவின் குடும்பத்தினருக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்த வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாக ரிதன்யாவின் சித்தப்பா பூபதி, பிபிசி தமிழிடம் பேசுகையில் குற்றம் சாட்டினார். ரிதன்யாவின் ஆடியோவில், தன்னுடைய தற்கொலைக்கு கவின் மற்றும் அவருடைய தாய், தந்தை இருவரும் காரணமென்று தெளிவாகக் கூறியிருந்தும் கவினையும், அவருடைய தந்தையை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுபற்றி சேயூர் காவல் ஆய்வாளர் ராஜபிரபுவிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''அவருடைய தாயார் வயது முதிர்ந்தவர். சமீபத்தில்தான் அவருக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை நடந்துள்ளது. விசாரணையின் போதே, அவர் அடிக்கடி மயக்கமாகிவிட்டார். அதனால் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டே உடனடியாக அவரைக் கைது செய்யவில்லை. ஆனால் வழக்கில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.'' என்றார். ரிதன்யாவின் கணவர் கவின்குமார் தரப்பில் அவர்களுடைய உறவினர் யாரிடமும் கருத்துப் பெற முடியவில்லை. அவர்கள் சார்பில் பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சண்முகானந்தன், ''கவின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி யாரும் பேசமுடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் ஒப்புதலின்றி அவர்களின் சார்பில் நானும் எந்தக் கருத்தும் கூற முடியாது. '' என்றார். திருமணம் முடிந்த 77 நாட்களில் இந்த மரணம் நடந்துள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் தனது விசாரணையை இன்று காலையில் துவக்கியுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவினாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், ''தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் ஆடியோ கிடைத்துள்ளது. அதில் அவர் கூறியுள்ள தகவலின் அடிப்படையில், அவரின் கணவர், மாமனார், மாமியார் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரிதன்யாவின் ஆடியோவில் எந்த மாதிரியான கொடுமை நிகழ்ந்தது பற்றி எதுவும் கூறவில்லை. அதனால் இன்னும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது. இரு தரப்பிலும் விசாரித்தபின்பே தெளிவான காரணங்கள் தெரியவரும்.'' என்றார். பட மூலாதாரம்,BOOPATHY நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019 - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy4nnp0wq7yo
3 months 1 week ago
டொலருக்கு ஆசைப்பட்டு வருகிறவர்களையும் கலைக்கும்படி செய்யப்போறாங்க!
3 months 1 week ago
வேகக்கட்டுப்பாடு அதாவது அக்சிலேற்றரை ஏறி நின்று உழக்கினாலும் 70 km/h மேல ஓடாதவாறு செய்யுங்கோ புண்ணியமாப்போகும்.
3 months 1 week ago
திருவிழா கூட்டத்தில் இரண்டு நபர்கள் அவரவர் மனைவிகளை தொலைந்துவிட்டார்கள். அந்த இருவரும் அவர்களது மனைவிகளை தேடி அங்கும் இங்குமா தேடித் திரிந்தார்கள்.பிறகு.... அவர் : ஏங்க,உங்க மனைவியும் காணவில்லையா? இவர் : ஆமாங்க.அரை மணி நேரமா தேடிட்டு இருக்கேன். என் மணைவி இன்னும் கிடைக்கல.உங்க மனைவி கிடச்சுட்டாங்களா? அவர் : அட இன்னும் கிடைக்கலங்க. நானும் தேடிட்டு தான் இருக்கேன். ஆமா உங்க மனைவி எப்படி இருப்பாங்க? இவர் : என் மனைவி பாக்குறதுக்கு நயன்தாரா சாயல்ல இருப்பாங்க.அவ சிரிச்சா கண்ணத்துல அழகா குழி விழும்.அதுக்கு பக்கத்துலயே சின்ன மச்சம் ஒன்னு இருக்கும்.ரோஸ் கலர் சாரி கட்டியிருப்பா.பாக்குறதுக்கு சின்ன பொண்ணு மாதிரியே இருப்பாங்க. சரிங்க உங்க மணைவி எப்படி இருப்பாங்கனு சொல்லுங்க? அவர் : அத விடுங்க. அவ கிடக்குறா கழுதை. வாங்க முதல்ல உங்க மனைவியே தேடுவோம்.
3 months 1 week ago
3 months 1 week ago
தமிழகம் தலை குனிந்த தருணம். மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது - நீதிபதிகள். கட்டெறும்பு
3 months 1 week ago
இது புதுசா இருக்கே.கொலைகாரனுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் உள்ளே பிடிச்சு போடுங்கள் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றம் நீங்கள் நினைத்தால் என்ன வழக்கு வேணாலும் போடலாம் போட்டு அவர்களை உள்ள தூக்கி போடுங்க. Narendira Kumar Subramaniam
3 months 1 week ago
3 months 1 week ago
3 months 1 week ago
3 months 1 week ago
தெலுங்கானா வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு! தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மருந்து ஆலையில் நேற்று (ஜூன் 30) ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். பாஷாமிலாராமில் அமைந்துள்ள மருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிதோஷ் பங்கஜ் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார். தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் சிலருடன் வெடிப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டார். நேற்று காலை 8:15 மணி முதல் 9:35 மணி வரை அணு உலைக்குள் ஏற்பட்ட இரசாயன எதிர்வினையால் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வெடிப்பு தொழிற்சாலை கொட்டகையை தரைமட்டமாக்கியது, தொழிலாளர்கள் பல அடி உயரத்திற்கு தூக்கி வீசியது, மேலும் பெரிய அளவிலான அவசர நடவடிக்கையை தூண்டியது. வெடிப்புக்கான காரணத்தை ஆராய்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஐந்து பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. சம்பவம் குறத்து பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையையும் அறிவித்தார். https://athavannews.com/2025/1437728
3 months 1 week ago
3 months 1 week ago
அடுத்த விளையாட்டு பிரிங்கம் மைத்தானத்தில் நடப்பதால் , இந்த மைதானம் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானம்......................................... அடுத்த விளையாட்டு பிரிங்கம் மைத்தானத்தில் நடப்பதால் , இந்த மைதானம் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானம்............................................
3 months 1 week ago
அவுஸ்ரேலியா அணி பெரிய மலை , வெஸ்சின்டீஸ் அணி காற்றும் போன பலூன் ஹா ஹா........................அடுத்த மைச்சையும் அவுஸ்ரேலியா தான் வெல்லும் , மழை வராட்டி அவுஸ்ரேலியா அணி சிம்பிலா வெஸ்சின்டீஸ் அணிய வெல்லுவினம்...............................
3 months 1 week ago
ஒரு நாள் தொடரையும் இலங்கை வென்று விடும் , வங்கிளாதேஸ் தொடர்ந்து அன்மைக் காலமாக மற்ற அணிகளிடம் படு தோல்வி அடையினம்.................. இலங்கை சொந்த மண்ணில் பலமான அணி...............................
3 months 1 week ago
3 months 1 week ago
குஜராத் அணியில் இருந்து நீக்கப் பட்டு , வெங்களூர் அணிக்காக இந்த வருட ஜபிஎல்ல நல்லா பந்து போட்டு சிறந்த வீரராக தெரிந்தார் , இடையில் இப்படி பிரச்சனை.............................கோலிய பார்த்தாவது குடும்ப வாழ்க்கை எப்படி வாழனும் என இவர் போன்றவர்கள் தெரிந்து வைத்து இருக்குனம்........................வெங்கங்களூர் அணி இந்த முறை கோப்பை தூக்கி விட்டது தானே விளையாடின வீரர்களுக்கு ஏலத்தில் எடுத்த காசை விட கூட கொடுத்து இருக்க கூடும்.......................... இப்ப தான் கிரிக்கேட்டில் மெதுவாய் வளருகிறார் அதுக்கிடையில் இந்த பிரச்சனை.......................................
Checked
Mon, 10/13/2025 - 06:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed