3 months 2 weeks ago
ஈரான் பற்றி கதைப்வவர்களுக்கு ஈரானை பற்றி என்ன தெரியும். எந்த வித சரி பார்த்தல், தேடுதல், சிந்தனை இல்லாமல் சும்மா மேற்கின் பிரச்சாரத்தை தூக்கி வந்து, துதி பாடுவது, ஒப்புவிப்பது (சிலரின் கைவந்த கலை இங்கு, இல்லாவிட்டால் பரிகாசம், இதை தவிர வேறு இல்லை ). ஈரானில், Zoroastrian, யூத மதம், கிறிஸ்தவம் யாப்பால் பாதுகாப்பு அளிக்கப்பட்ட மதங்களும், மத சிறுபன்மையும். பாராளுமன்றத்தில் இவர்களின் பிரதிநிதிதுவத்துக்கு பிரத்தியேக இடம் ஒதுக்கியுள்ளது இரான் அரசு. இரான் யாப்பு படி எல்லா மக்களும் சமம், சம உரிமை... சட்டத்தில் சமம் என்றாலும் சமுகத்தில் வேறுபாடு இருக்கிறது (எங்களுக்கு சாதி போல, அதுவும் ஒரே இனத்தில்). இது தான் யதார்த்தம். 1979 இல் Fatwa கூட கொமேனி உருவாக்கியது, இரானில் யூதர் பாதுகாக்கப்படுவார்கள் என்று. எந்த யூதரையும் இரான் ஒரு போதும் கலைக்கவில்லை, இஸ்ரேல் nakba இல் பலஸ்தீனியரை கலைத்து நிலத்தை திருடியது போல (இப்படி zionist அல்லாதவர்களை அழிக்கப்பட வேண்டும், அவர்களின் சொத்துக்கள் அபரிக்கப்பட வேண்டும் .. என்று தத்துவமாக வகுத்து வைத்து இருக்கிறது TALMUD என்ற அதன் போதனையில். இதை சொன்னால்,, மேற்கில் அது anti-semitism) ஆனல் இஸ்ரேல் இன் தூண்டுதலால், யூதர் இஸ்ரேலுக்கு கணிசமான அளவு குடிபெயர்ந்து விட்டனர். இவர்களை கொண்டே இஸ்ரேல் ஈரானில் ஊடுருவுகிறது. மேற்கு ஈரானில் சுதந்திரம் இல்லை என்று சொல்வதன நோக்கம் ஆட்சிமாற்றத்துக்கே தவிர, இரான் மக்களின் அக்கரையில் இல்லை. இங்கே சிலர் அது காவுவது , சிலருக்கு சொந்த சிந்தனை இல்லை. இந்த முல்லாக்கள் என்று சொல்வதே மேற்கு ஊடகங்கள் தான். அனால் சிலர் வேண்டும் என்றே agenda ஐ உருவாக்க. ஏன் மேற்கு ஊடகங்களில் மட்டும் இப்படி வருகிறது? வேறு ஊடகங்களில் இது இல்லை என்றே சொல்லலாம். மற்றது, மேற்கத்தைய கலாசாரம் இரானில் வருவதே சுதந்திரம் என்று மேற்கு ஊடகங்கள் பிம்பத்தை காட்டி எழுப்புகின்றன. எல்லாவற்றுக்கும் அடிப்படை, இங்கே agenda ஐ உருவாக்க எத்தனிப்பவர்கள் உட்பட, ஈரானில் மேற்கு , us இஸ்ரேல் சொல்கேட்கும் அரசாங்கம் வரவேண்டும். (இவர்களின்) முல்லாக்கள் ஒருபோதும் அதற்கு உடன்பட மாட்டார்கள் ஆம், இப்பொது மேற்கு தொடங்க எத்தனிகிறது. இதை நான் அறிவேன் ஆஸ்திரேலியாவில் தொடங்க எத்தனிக்கப்படுகிறது என்று, அனால் எந்த பிரதேசம் என்று குறிப்பாக தெரியாது. சீன போல செய்ய முடியாது, சீன இதில் சிறப்பு தேர்ச்சி பெற்றுவிட்டது, புதிய தொழிநுட்பத்தையும் வளர்த்து உள்ளது. கிட்டத்தட்ட 15 வருட காலம் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் உள்ளது அத்துடன் சீன் கிட்டத்தட்ட எல்லா அருமை உலோகங்களையும் மிகப்பெரிய (scale) இல் செய்வது, அதுக்கு சந்தையை வளைப்பதற்கு ஒப்பீட்டளவில் இலகு. அதாவது, பொருளாதார தக்க வைக்கும் (economic viability) வாய்ப்பு மேற்கில் குறைவு. அல்லது மேற்கு / ஆஸ்திரேலிய அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும்.
3 months 2 weeks ago
இல்லை இது உண்மை, அரசாங்கம் AUD 1.2 Bn கடன் கொடுத்து தொடங்க சொல்லிவிட்டார்கள், earthworks போய்கிட்டிருக்கு, https://www.abc.net.au/news/2024-12-06/rare-earths-refinery-government-funding/104695754 இதயம் பலவீனமல்ல மூளைதான்😉
3 months 2 weeks ago
அடுத்த மைச் பிரின்ஹம் மைதானத்தில் நடப்பதால் சம நிலையில் முடியக் கூடும் , இந்த மைதானம் மட்டை வீரர்களுக்கு சாதகமான மைதானம்..........பாப்போம் போட்டி முடிவில்...................................
3 months 2 weeks ago
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை! அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று ட்ரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்தார். இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ட்ரம்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு வந்த ட்ரம்பின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். இதேவேளை 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437036
3 months 2 weeks ago
ஈரான் மீது போர் தொடுப்பதை விட அங்கு மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்.மக்கள் அவதிப்படுகின்றார்கள் தனிமனித சுதந்திரம் இல்லை எனவும் ஊடகங்கள் இரண்டாம் செய்தியாக பிரசுரிக்கின்றன. அதற்காகத்தான் நான் எழுதினேன் அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு சுதந்திரம் உள்ளது என... 👉 விட்டுட்டு ஓடி வந்தவர்களினால் தான் இன்றும் இன விடுதலை எனும் மரம் விருட்சமாக மாறி நிற்கின்றது. 👈
3 months 2 weeks ago
இது ஒன்றும் அதிசயமல்ல. பிணம் புணரும் வெறி கொண்ட படைவீரர்களும் எங்கள் நாட்டு அரசிடம் உண்டு என்பதை நீங்கள் அறியவில்லையா.?🤔
3 months 2 weeks ago
இப்ப இருக்கிற இளம் வையாபுரிகள் எதுக்கெடுத்தாலும் ,எந்த விசயம் அறியோணும் எண்டாலும் உடனை கூகிள் சாமிட்டத்தான் கேப்பினம்.சாடையாய் தலையிடிச்சாலும் உடனை கூகுள்.வயித்தாலை போகாட்டிலும் கூகிள். சோறு சமைக்கவும் கூகிள்.றோட்டாலை நடந்து போகவும் கூகிள்.போற போக்கிலை வாத்திமாருக்கே வேலையில்லாமல் போகும் போலை கிடக்கு.🤣 கேட்டால் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சி என்கிறார்கள்.அந்த தொழில்நுட்ப அறிவை வைச்சு உலகம் முழுக்க போரும் இரத்த சகதியும் தானே இப்ப நடக்குது? மனிதன் பேசாமல் ஆட்டுமந்தைகளாகவே இருந்து விட்டு போயிருக்கலாம் என்றே தோன்றுகிறது.☹️ விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர வளர போரும்,பஞ்சமும்,சீரற்ற காலநிலைகளுமே எஞ்சி நிற்கின்றன.😎
3 months 2 weeks ago
குட முழுக்கு என்பதே ஒரு அபத்தமான நிகழ்வு என்ற ஒரு பதிவைப் படித்துள்ளேன். அதாவது கோவில்களின் கட்டுமானப் பணிகள், பிராமண உயர்சாதி இனம் என்று வரையறுக்கப்பட்ட மனிதர்களால் மட்டும் மேற்கொள்ளப்படுவதில்லை, அனைத்துச் சாதி மனிதரகளாலும் மேற்கொள்ளப்படுவதால் அதில் தீட்டு உள்ளதாம், ஆகவேதான் தீட்டு நீங்கக் குடமுழுக்கு நிகழ்வு நடத்தப்படுகிறதாம். உண்மை என்ன.????
3 months 2 weeks ago
தாக்குதலை நடத்தியவர் தந்தை செல்வாவை அறிந்திருக்கவே மாட்டார். இருந்தும் அவர் மீது ஏன் இந்த கொலைவெறி?
3 months 2 weeks ago
இந்த வீடியோ நான் முன்பே பார்த்து விடடேன் உண்மையிலேயே ஏதும் இருக்கிறதா அல்லது பங்கு சந்தையில் பணம் பறிக்க பீலா விடுகிறார்களா? நான் கொஞ்ச பங்குகள் ( Northern Minerals) நொர்தேன் மினெரல்ஸ் இல் $.2௦ சத்தத்திற்கு வாங்கி இருக்கிறேன் இப்படி பல மைனிங் கொம்பனிகளில் வாங்கி கோவில் உண்டியலில் போடட கதைதான் நடந்திருக்கிறது ஏதாவது உள் செய்திகள் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்
3 months 2 weeks ago
சரியாப்போச்சு. இனி நீங்கள் அமெரிக்காவின் 52 ஆவது மாநிலமாக வரப்போறியள் போல!!
3 months 2 weeks ago
நானா இதுக்குள்ள ஏன் தமிழ் இயக்கங்களை இழுக்கிறீர்கள்! பின்னங்கால் சும்மா இருக்க விடுதில்லைபோல!!
3 months 2 weeks ago
உளி தாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்
3 months 2 weeks ago
ஈரானில் தலை மூடாத பெண்களையும் வீட்டுக்குள் ரகசியமாக புத்தகம் வாசித்த ஆயிர கணக்கான பெண்களையும் முல்லாக்கள் கைது செய்து சித்திரவதை செய்து கொடூரமாக கொல்லும் வீடியோ காடசிகள் பலவீனமான இதயம் கொண்ட யாழ் கள கருத்தாளர்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள்
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
இன்னும் பத்து வருடங்களுக்குள் நானிருக்குமிடத்தில் இதை உற்பத்தி செய்ய தொடங்கிவிடுவார்கள், இந்த Project இல் நானுமிருக்கின்றேன்
3 months 2 weeks ago
உலக அரசியல் பூவியல் உளவியல் விஞ்ஞான அறிஞர்கள் யாழில் பந்தி பந்தியாக எழுதும் கருத்துக்களை கடந்த 20 வருசமாக வாசித்து வந்தும் உங்களால் எப்படித்தான் இப்படி எழுத முடிகிறதோ தெரியவில்லை. செப்டம்பர் 11/2001 தாக்குதலுக்கு முன்பு ராம்போக்களாக கோலிவூட் சினிமா தொடங்கி அமெரிக்க அரசியல் தலைவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரேவேற்ற உலக முஸ்லிம்கள். எப்படி அதி தீவிர பயங்கரவாதிகள் ஆனார்கள்? 2014 இல் சிரியாவின் 6௦ வீத எண்ணையையும் ஈராக்கின் 4௦ வீத எண்ணையையும் விற்று ஒரு நாளுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக பணம் ஈட்டி உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பாக இருந்த ஐஸ்ஐஸ் இன்று எங்கே? அவர்கள் பணம் தலைவர்கள் எல்லோரும் எங்கே? அவர்கள் கொன்று குவித்தது மூன்று லடசத்திற்குக்கும் மேலான இசுலாமியர்களை. இன்று சிரியாவை கைப்பற்றிய தீவிரவாதிகள் திடீரெனெ இவ்வளவு ஆயுத பலத்துடன் எங்கிருந்து வந்தார்கள்? அமரிக்காவின் தேடல் பட்டியலில் முதலாம் இரண்டாம் இடத்தில இருந்தவர்களுக்கு இன்று அமரிக்க ஜனாதிபதி வாழ்த்து தெரிவிக்கிறார். மேற்குலகின் பிரச்சார மூளைசலவைக்கு உள்ளாகி உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கிணற்று தவளைகள் போல் இருந்து கொண்டு பந்தி பந்தியாக யாழில் எழுதிக்கொண்டிருக்கும் உலக அரசியலை வாசித்தும் உங்களால் எப்படி இப்படி எழுத கேள்வி கேட்க முடிகிறது? வெறும் பத்து நாட்கள் முன்பு தலையில் முடடாக்கு அணியாது ஈரானின் தலைநகரில் திரிந்த்த ஆயிரக்கணக்கான பெண்களை பிடித்து எவ்வளவு சித்தரவதை செய்து கொல்கிறார்கள் என்பதை தயவு செய்து கீழ் இருக்கும் வீடியோவில் ஒருமுறை பார்த்தாவது உங்கள் நிலைபாடடை கொஞ்சம் மாற்றுங்கள். ஈரானில் யாழ்கள அறிஞர்கள் போல படித்து அறிவு பெறுவதற்கு பெண்களுக்கு 1979 இல் இருந்து தடை விதித்து வந்துள்ளார்கள் பெண்கள் புத்தகத்தை தொடடால் கையை வெட்டி எறிவார்கள் யூனிவர்சிட்டி என்பதே ஈரானில் இல்லை....... தலையை மூடாமல் பெண்கள் வெளியே வந்தால் வீதியிலே தலைவெட்டு அண்ணளவாக ஈழத்தில் தமிழகத்தில் இன்று இருக்கும் நிலைதான் சேலை இன்றி பெண்கள் வெளியில் வந்தால் வெட்ட படுவார்கள் பொட்டு வைக்காது வெளியில் வந்தால் கொல்லபடுவார்கள் எனும் அச்சத்தில்தான் இன்று ஈழத்திலும் இந்தியாவிலும் பெண்கள் சேலை கட்டி வருகிறார்கள் பொட்டு வைத்துக்கொண்டு வெளியில் வருகிறார்கள்
3 months 2 weeks ago
நம்ம தமிழ் ஆயுத இயக்கங்களிடம் அணுவாயுதம் இருந்திருந்தால் தமிழர் பிரச்சனை ஒட்டுமொத்தமாக இருந்த இடம் தெரியாத அளவுக்கு தீர்ந்திருக்கும். 😂
3 months 2 weeks ago
யாரந்த தவறான செய்தி தந்த உறவினர்? 😃அமெரிக்காவில் 90 வீதமான வீடுகள் குளிரூட்டப்பட்டவை... இன்னும் சில வீதமான வீடுகள் தேவைக்கேற்ப குளிரூட்டக்கூடிய வசதியுடையன.
Checked
Sun, 10/12/2025 - 08:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed