புதிய பதிவுகள்2

ஈரான் மீதான தாக்குதல்கள் அணுசக்தி தளங்களை அழிக்கவில்லை -பென்டகன் தகவல்

3 months 2 weeks ago
முக்கிய அணுசக்தி நிலையங்கள் சேதம் - ஒப்புக்கொண்ட ஈரான் General26 June 2025 அமெரிக்கா, சமீபத்தில் நடத்திய தாக்குதல்களால், தமது முக்கிய அணுசக்தி நிலையங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்ததாக ஈரான் முதல் தடவையாக ஒப்புக் கொண்டுள்ளது. ஈரானில் உள்ள ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Nadans) மற்றும் இஸ்பஹான் (Isfahan) ஆகிய இடங்களில் அமைந்துள்ள 3 முக்கிய அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து,அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல்களை நடத்தியது. 'ஒபரேஷன் மிட்நைட் ஹேமர்' (Operation Midnight Hammer) என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதல்களில், அமெரிக்கா B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்கள், சக்திவாய்ந்த பதுங்கு குழி பஸ்டர் குண்டுகள் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தின. இந்தத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். எனினும் ஈரான் அதனை மறுத்திருந்தது. இந்நிலையில், முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் கடுமையான சேதத்தைச் சந்தித்ததாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. https://hirunews.lk/tm/408380/iran-admits-damage-to-key-nuclear-facilities#google_vignette

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் யாழ்ப்பாணத்திற்கு வருகை

3 months 2 weeks ago
வோல்கர் டர்க் - தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, முன்னாள் பாராநாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/வோல்கர்-டர்க்-தமிழ்-எம்-பிக்கள்-சந்திப்பு/175-359947

359 கடலட்டைப் பண்ணைக்கு யாழ். மாவட்டத்தில் அனுமதி!

3 months 2 weeks ago
359 கடலட்டைப் பண்ணைக்கு யாழ். மாவட்டத்தில் அனுமதி! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 359 கடலட்டைப் பண்ணைக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நெக்டா நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டக் கடற்றொழில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்கனவே 499 கடலட்டைப் பண்ணைகள் உள்ளன. இதேவேளை 359 கடலட்டைப் பண்ணைகள் புதுப்பண்ணைகளாக விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளன. மேலும் புதிதாக 5 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://newuthayan.com/article/359_கடலட்டைப்_பண்ணைக்கு_யாழ்._மாவட்டத்தில்_அனுமதி!

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 2 weeks ago
சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும்! adminJune 26, 2025 சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் கிடம் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் செம்மணி புதைகுழி காணப்படும் இடத்திற்கு நேரில் சென்று புதைகுழிகளை பார்வையிட்டார். அதன் பின்னர் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளிடம் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார். அதன் போதே சட்டத்தரணிகள் அவ்வாறு கோரியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் தாம் முன் வைத்த கோரிக்கைகள் தொடர்பில் சட்டத்தரணிகள் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கான நிதியினை அரசாங்கம் தங்கு தடையின்றி விடுவிக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தினை கொடுக்க வேண்டும். மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்களை சரியான முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தற்போது மீட்கப்பட்டவற்றை கொழும்புக்கு எடுத்து செல்ல வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில் யாழ்ப்பாணத்தில் அதற்கான வசதிகள் இல்லை. எனவே எச்சங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் , அதன் மீதான சோதனைகளை முன்னெடுக்க ஏதுவாக ஆய்வு கூட்டமொன்றினை யாழ்ப்பாணத்தில் நிறுவ வேண்டும் . அது பல விடயங்களில் பயனுள்ளதாக இருக்கும் அகழ்வாராய்ச்சிக்கான தொழிநுட்ப வசதிகள் தேவையாக உள்ளது. அதே நேரம் நிபுணத்துவ மிக்க நிபுணர்கள் வேண்டும். நிபுணர்களின் பங்கேற்புடன் சர்வதேச கண்காணிப்புடன் இதன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எடுத்து கூறியுள்ளோம் என தெரிவித்தனர். https://globaltamilnews.net/2025/217340/

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

3 months 2 weeks ago
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையருக்கு எடுத்து கூறிய வடக்கு ஆளுநர்! adminJune 26, 2025 காணி விடுவிப்புத் தொடர்பிலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது தொடர்பிலும் வடமாகாண ஆளூனரிடம் கேட்டறிந்து கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் கரிசனையை வெளிப்படுத்தியதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, மீள்குடியமர்வு – காணி விடுவிப்புத் தொடர்பில் தற்போதைய நிலைமைகளை ஆணையாளர் கேட்டார். மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்கு அமைவாக படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படுகின்றன. இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளன என்று சுட்டிக்காட்டினோம். மேலும், வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் என்பன இங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரியாமல் காணிகளை சுவீகரித்துள்ளன. இதனால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் விவசாயக் காணிகள் என்பன இழக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் மாவட்ட ரீதியிலான குழுக்களை அமைத்து இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை ஆணையாளருக்கு தெரியப்படுத்தினேன். காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பிலும் ஆணையாளரும், ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும் விடயங்களைக் கேட்டறிந்து கொண்டனர். அந்தப் பொறிமுறை சரியானது என்றும், ஆனால் மக்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் மாவட்டச் செயலர்கள் இதன்போது ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினர். மேலும், ஆணையாளர் இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார். முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அந்த நடவடிக்கைகள் குறைந்துள்ளன என்றும் இன்னமும் சில பிரச்சினைகள் அதில் உள்ளன எனவும் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினேன். காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் ஆணையாளர் கரிசனையை வெளிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்பதைக் குறிப்பிட்டேன். அத்துடன் கடந்த காலங்களிலிருந்த அரசாங்கங்கள் வெளிப்படுத்திய வேறுபாடுகள் இந்த அரசாங்கத்திடம் இல்லை என்பதையும், அது முற்போக்கானது என்பதையும் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தினேன். போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதற்குரிய புனர்வாழ்வு நிலையம் என்பன தொடர்பிலும் ஆணையாளர் கேள்வி எழுப்பினார். போதைப்பொருள் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் இன்னமும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவில்லை என்பதையும், விரைவில் அதை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்கின்ற விடயத்தையும் ஆணையாளருக்கு தெரியப்படுத்தினேன். அந்தப் புனர்வாழ்வு நிலையங்கள் யாரால் இயக்கப்படும் என்கின்ற விடயங்கள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்து கொண்டார். இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகள் தொடர்பாகவும் ஆணையாளர் தனது கவனத்தைச் செலுத்தியிருந்தார். இந்தியாவிலிருந்து திரும்பி வரும் மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும், அவ்வாறு செய்தால் மாத்திரமே அவர்களைத் தொடர்ச்சியாக இங்கே அழைக்க முடியும் என்ற விடயத்தையும் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினேன். மேலும், வடக்கில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும் என்னாலும், மாவட்டச் செயலர்களாலும் ஆணையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது, என ஆளுநர் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோரும், ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினரும் பங்குபற்றினர். அத்துடன் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/217347/

ஐ.நா ஈழத்தமிழரை கைவிட்டது, மலையக தமிழரையும் கை விடாதீர்கள்

3 months 2 weeks ago
ஈழத் தமிழரை கைவிட்டது போன்று மலையகத் தமிழரையும் கை விட்டுவிடாதீர்கள்! -மனோ கணேசன். ”ஈழத்தமிழரைக் கைவிட்டது போன்று மலையகத் தமிழரையும் கைவிட்டு விடாதீர்கள்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐநா மனித உரிமை ஆணையர் வொல்கர் டர்க்கிற்கும், எதிர் கட்சி தலைவர்களுக்கும் இடையில் நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐநா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே சாட்சியம் இல்லாத யுத்தம் (War without Witness) நடக்க காரணமாக அமைந்து விட்டது. இன்று யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும், கொலையானோர், காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்பு கூறல் நடை பெறவில்லை. அரசியல் கைதிகள் பிரச்சினை முழுமையாக முடிவுக்கு வரவில்லை. யுத்தம் நடைபெற மூல காரணமாக அமைந்துள்ள இனப்பிரச்சினை தீர்வுக்கு வரவில்லை. ஆகவேதான், ஈழத்தமிழ் உடன் பிறப்புகள் ஐநா சபை தங்களை கைவிட்டு விட்டதாக நினைக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களை கைவிட்டதை போன்று, இந்நாட்டில் வாழும் மலையக தமிழ் மக்களையும் நீங்கள் கைவிட்டு விடாதீர்கள். இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் மிகவும் பின் தங்கிய பிரிவினராக வாழ்கிறார்கள். காணி உரிமை, வீட்டு உரிமை, வறுமை, சிசு மரணம், சுகாதாரம். தொழில் நிலைமைகள் என்ற எதுவாக இருந்தாலும், அவை அனைத்திலும் மிகவும் குறை வளர்ச்சி கொண்ட மக்களாக இலங்கையில் வாழும் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் இலங்கை வந்த ஐநா விசேட அறிக்கையாளர் டொமொயா ஒபொகடா, தனது அறிக்கையில் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் காத்திரமாக குறிப்பிட்டு உள்ளார். அந்த அறிக்கையை அவர் உங்கள் ஐநா மனித உரிமை ஆணையகத்தின் 51வது அவைக்கு சமர்பித்தார். அதை கவனத்தில் கொள்ளுமாறு கோருகின்றேன். இலங்கையை பற்றி அறிக்கை சமர்பிக்கும் போது, தவறாமல் இலங்கையின் வடகிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்கள் குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் தொட ர்பிலும் கவனம் செலுத்தும் படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் உங்களை மேலும் கோருகிறேன். இலங்கையில் வாழும் மலையக மக்கள் இன்னமும் முழுமையான குடி மக்களாக இந்நாட்டில் வாழ வில்லை. இரண்டாம் தர பிரஜைகளாகவே வாழ்கிறார்கள். காணி உரிமை உட்பட உரிமைகள் உரித்தாகும் போதுதான், அவர்களது குடி உரிமை முழுமை அடையும். அதை ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1437173

மெக்சிகோ துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு!

3 months 2 weeks ago
மெக்சிகோ துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு! மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் புதன்கிழமை (25) இரவு நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, புனித யோவான் ஸ்நானகரை கொண்டாடும் விதமாக மக்கள் தெருவில் நடனமாடி மது அருந்திக் கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க, அவர்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகளை ஆன்லைனில் பரவிய காணொளிகள் காட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக இராபுவாடோ அதிகாரி ரோடால்போ கோம்ஸ் செர்வாண்டஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் சுமார் 20 பேர் காயமடைந்தனர். தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையல், ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார். மெக்ஸிகோ நகரத்தின் வடமேற்கே உள்ள குவானாஜுவாடோ, பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் கட்டுப்பாட்டிற்காகப் போராடுவதால், நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாநிலத்தில் 1,435 கொலைகள் நடந்துள்ளன. இது வேறு எந்த மாநிலத்தையும் விட இரண்டு மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1437154

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

3 months 2 weeks ago
காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளைத்தேடி, அவர்களுக்கு என்ன நடந்தது என அறிய பல வருடங்களாக அவரை இழந்தவர்கள் தெருக்களிலே போராடி வருகிறார்கள். அவர்களை ஏன் என்று கேட்க யாரும் முன்வரவில்லை, அவர்கள் தேடும் உறவுகளில் சிலரோ பலரோ இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கலாம். இந்தப்புதைகுழி விவகாரம் பலவருடங்களாக நிலுவையில், கிடப்பில் போடப்பட்டிருந்தது. இன்று ஓடி வரும் எந்த அரசியல்வாதியும் இந்த விவகாரம் வெளியில் வரும்வரை அதைப்பற்றி சிந்திக்கவோ, அழுத்தம் கொடுக்கவோ முன்வரவில்லை. மாறாக இனவழிப்பு நடந்ததென நிரூபிப்பதற்கு ஆதாரம் இல்லையென விவாதித்தனர். இப்போ எதற்கு அடித்து பிடித்து வருகிறார்கள், எதை சாதிக்கப்போகிறார்கள்? அதாவது ஐ .நா. மனித உரிமை ஆணையாளர் வரவிருக்கும் சந்தர்ப்பத்தில், தாம் தான் மக்களின் தலைவர்கள் என்று தம்மை முன்நிலைப்படுத்த முண்டியடிக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய துடிக்கிறார்கள். சுமந்திரன் தன வாலை அனுப்பி நோட்டம் விட்டிருக்கிறார், சேனையோடு வந்திறங்க. மக்கள் நிதானமாகவே இருக்கிறார்கள். இவர்கள் யாரையும் நம்ப இனிதயாராக இல்லை. ஆயுதப்போராட்டத்தை நான் வரவேற்கவில்லை என்று சொன்னவர்கள், தமிழரை அழித்தவர்களோடு, பொது மக்களை வகைதொகையின்றி கொலை செய்தவர்களோடு கிறிக்கற் விளையாடலாம், பொப்பிப்பூ குத்தி இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தலாம். இது முரண்பாடாக தெரியவில்லை சம்பந்தப்பட்டவர்களுக்கு. மக்களையும் அவர்களது இழப்புகளையும் துயரங்களையும் விற்று பிழைக்கும் பிழைப்புவாதிகள்.

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

3 months 2 weeks ago
ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்தியா வெல்லும் என தெண்டூல்கர் கணித்துள்ளதாக ஒரு தகவல் வாசித்தேன். முதலாவது இந்தியா தோல்வி. இவர் எதிர்வுகூறல் எப்படி என்று பார்ப்போம்.

செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி

3 months 2 weeks ago
புலி போட்ட சூட்டில் முன்னாள் தலையாட்டி களுக்கு இப்பவும் வலிக்குது போல் உள்ளது .

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months 2 weeks ago
என்ர‌ வ‌ண்டி இன்னும் 5வ‌ருட‌ம் ஓடுமோ தெரியாது , நீங்க‌ள் 25வ‌ருட‌த்துக்கு போய் விட்டிங்க‌ள் அப்ப‌ உங்க‌ளுக்கு 81வ‌ய‌து ஆகி விடும் , புகை பிடிக்காம‌ ம‌து அருந்தாம‌ கிமிக்க‌ள் சாப்பாடுக‌ளை த‌விர்த்தால் உங்க‌ட‌ விருப்பம் நிறைவேறும்............................இன்னும் 25வ‌ருட‌ம் க‌ழித்து யாழ்க‌ள‌த்தில் யாரும் எழுதுவின‌மான்னா ச‌ந்தேக‌ம் தான் குரு , தின்ட‌ சோறு செமிக்க‌ இதுக்கை இருந்து குப்பைய‌ கொட்டுகிறோம் லொள்😁😛......................... புரியுது👍................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months 2 weeks ago
பையன் சார், தமிழ்நாட்டை பற்றிய உங்களின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் நான் இங்கே சொல்ல விரும்பிய விடயம் இதுவல்ல. இன்று இணையத்தில் உலாவும் காணொளிகள் எவ்வளவு போலியானவை, திட்டமிட்டு சோடிக்கப்பட்டு தயாரிக்கப்படுபவை என்றே சொல்ல நினைத்தேன். அதனால் இவற்றை மட்டும் ஆதாரங்களாகக் கொண்டு எதையும் நிறுவ முயலாமல் அல்லது புரிந்து கொள்ள முயலாமல், பல்வேறு தரப்புகளையும் நிகழ்வுகளையும் ஒன்றாகத் தொகுத்து ஒரு முடிவுக்கு வருவதே ஓரளவாவது சரியாக இருக்கும் என்று சொல்லவே வந்தேன். தமிழ்நாட்டு டாஸ்மாஸ்க் விடயம் ஒரு உதாரணம் மட்டுமே...................🤝.

கட்சிப் பதவிகளைத் துறந்தார் ரவிகரன் எம்.பி.

3 months 2 weeks ago
கட்சிப் பதவிகளைத் துறந்தார் ரவிகரன் எம்.பி. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டக் கிளைச் செயலாளர் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசக் கிளைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தே பாராளுமன்ற உறுப்பினர் து. ரவிகரன் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக அறியமுடிகின்றது. அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தாம் கட்சிப்பதவிகளிலிருந்து விலகும் இந்த முடிவை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோருக்கு நேற்று (24) கடிதத்தின் மூலம் அறிவித்திருப்பதாகவும் மேலும் அறியக்கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.thamilan.lk/articles/u74RKtGpHlBqFIXlbMAK

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months 2 weeks ago
பெரும்த‌லைவ‌ர் த‌மிழ் நாட்டு முத‌ல‌மைச்ச‌ரா இருந்த‌ போது அங்கு எல்லாம் ந‌ல்ல‌ நிலையில் தான் இருந்த‌து அந்த‌ ம‌னுச‌ன் ஊழ‌ல் செய்ய‌ வில்லை , ப‌ல‌ ஆயிர‌ம் ப‌ள்ளிக‌ளை க‌ட்டி பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைச்சார் , திராவிட‌ம் பிள்ளைக‌ளை குடிக்க‌ வைச்ச‌து இது ம‌றுப்ப‌துக்கு இல்லை அண்ணா................... நான் த‌மிழ்சினிமா 18வ‌ய‌தோட‌ பார்க்காம‌ விட்டு விட்டேன் , X இன்று த‌ள‌த்தில் ஒரு காணொளி பார்த்தேன் யாரோ ந‌டிக‌ர் போதை பொருள் பாவித்த‌தாக‌ , ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளே டாஸ்மார்க்கில் வேண்டி குடிக்கின‌ம்😮👎....................

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months 2 weeks ago
முதலீடுகள் இரண்டு வழிகளில் மட்டுமே வரும். ஒன்று சேமிப்பு. இரண்டாவது, போதிய சேமிப்பு இல்லாவிட்டால், கடன். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மிகக் குறைவாக சேமிப்பவர்கள் அமெரிக்கர்கள். சேமிப்பே கிடையாது. பிறகு முதலீடுகளுக்கு எங்கே போவது............. ஆனால் உலகமே அமெரிக்காவில் முதலிடுகின்றது. அமெரிக்காவிற்கு ஒவ்வொரு நாட்டுடனும் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இலங்கையுடன் கூட. அது இலங்கை அமெரிக்காவில் இடும் முதலீடு. சீனா முதலிடுகின்றது, மெக்சிக்கோ முதலிடுகின்றது............. எல்லாமே கடன்களாக இந்த நாட்டுக்குள் வருகின்றன. அதுவே கட்டிடங்களாக, தொழில்நுட்பங்களாக, ஐபிஓக்களாக, எலான் மஸ்க்குகளாக மாறுகின்றன. இதை ஏன் வேறு ஒரு நாட்டில் உலகம் முதலிட முடியாதுள்ளது............ ரஷ்யாவில் முதலிட முடியாதா, சைனாவில் முதலிட முடியாதா.............. முடியாது என்பதே இன்றைய நிலவரம். இத்தனைக்கும் சைனாவிலோ அல்லது ரஷ்யாவிலோ அதன் தலைவர்கள் இறக்கும் வரை மாறுவதில்லை, அவர்களின் கொள்கைகளில் மாற்றம் இல்லை, அரச நிர்வாகத்தில் தனித்தனியான சுதந்திரம் உள்ள அமைப்புகளினால் ஏற்படும் கட்டுப்பாடுகள் அங்கு இல்லை. ஆனாலும் முதலிடுபவர்கள் எதிர்பார்க்கும் ஒரு நம்பகத்தன்மையும், வெளிப்படையும், சுதந்திரமான நிர்வாக அமைப்புகளும் அங்கு இல்லை. இந்த காரணங்களுக்காகவே டாலர் பெறுமதியாக இருக்கின்றது, அமெரிக்காவிற்கு கடன்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா எறியும் காசு அவர்களுடையது அல்ல. ஆனாலும் மற்றவர்களுக்கு அதை கொடுப்பதற்கு வேறு இடமும் இல்லை. அமெரிக்காவின் பிரச்சனை திருப்பிச் செலுத்தும் வட்டியின் அளவு. இது இப்படியே போய்க் கொண்டிருக்க முடியாது என்று சிந்திக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். அதனால் அரசாங்கம் இனி சேமிக்கப் போகின்றார்களாம்.
Checked
Sun, 10/12/2025 - 12:00
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed