புதிய பதிவுகள்2

தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

3 months 2 weeks ago
தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்! பல கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (15) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தபால் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கையால் மேலதிக நேர வேலையிலிருந்து விலக நேரிடும் என்று ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். 2016 முதல் தபால் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். குறிப்பாக மேலதிக நேரப் பணிகள் தேவைப்படும் தபால் சேவைகள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் என்று தொழிற்சங்கம் எச்சரித்ததுடன், நீண்டகாலமாக நிலவும் ஆட்சேர்ப்பு பிரச்சினைகளை மேலும் தாமதமின்றி தீர்க்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியது. https://athavannews.com/2025/1439213

நியூயோர்க் நகரம் நியூயேர்சஜயை மேவி பாயும் வெள்ளம்.

3 months 2 weeks ago
நாலைந்து புத்தகங்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு சாரக்கட்டுடன் ஒருவர் வெள்ளத்தில் நடந்து செல்லும் காணொளி ஒன்று பார்த்தேன்.

2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!

3 months 2 weeks ago
பொம்பிளைப்பிள்ளைகளை பெடியள் இனி படிப்பிலை அடிக்க ஏலாது போல சிறியர். வீடுகளில் கிச்சின் டிப்பார்ட்மெண்ட் இன்னும் ஒரு 20 வருசத்தில் ஆண்களிடம் முழுதாய் வந்துவிடுமோ?

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months 2 weeks ago
இப்படிப் படமெடுத்த மிரட்டலை சிங்கள ..முசுலிமிடம் எப்பவோ பார்த்துவிட்டோம்...இது என்ன நமக்குப் புதிசா

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months 2 weeks ago
தவெக மூன்றாவது பெரிய கட்சி என்று நான் சொல்லவில்லை. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் மாநிலக் கட்சிகளில் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மக்களுக்குமான ஒரு கட்சி தவெக என்றே சொல்லுகின்றேன். திமுக, அதிமுக, தவெக தவிர்ந்த ஏனைய கட்சிகள் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்லுகின்றேன். இந்த தேர்தலில் தவெகவும் விஜய்யும் தனியே நின்று பத்து வீத வாக்குகளை பெற்றால், அவர்கள் ஒரு சக்தியே. அப்படி பெறாவிட்டால், விஜய் கட்சியைக் கலைத்து விட்டு சினிமாவிற்கே மீண்டும் போய்விடலாம். தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவின் வாங்கு வங்கி ஏறக்குறைய 35 வீதங்கள் அளவில் இருக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறைவின் பின் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய மாற்றம் ஏறபட்டுக் கொண்டிருக்கின்றது. விகிதாசாரப் பிரதிநிதிதுவமோ அல்லது 50 வீத பெரும்பான்மையோ தேவையில்லாத, சாதாரண பெரும்பான்மையிலேயே இந்தியாவில் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். ஆகவே ஒவ்வொரு வாக்கும் எல்லா கட்சிகளினதும் நோக்காக இருக்கின்றது. ஆதலாலேயே கூட்டணியை அமைக்கின்றார்கள். மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டில் கட்சிகள் திராவிடம் பேசினால் என்ன, தமிழ்த்தேசியம் பேசினால் என்ன, கட்சி சார்பாக நிற்கப் போகும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது, இந்தக் கொள்கைகள் எல்லாமே காற்றில் போய்விடும். சாதியம் மட்டுமே முன்னிற்கும். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் பெரும்பான்மையோ அந்த சாதியில் இருந்தே வேட்பாளர்கள் கட்சிகளால் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். நாதக கூட இதற்கு விதிவிலக்கல்ல. சென்னை போன்ற பெருநகரமும், சில பிரபலங்களும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இதன் காரணமாகவே சாதியக் கட்சிகள் மற்றும் சிறு கட்சிகளின் கூட்டணியை பெரும் கட்சிகள் விரும்புகின்றன. இப்படியான ஒரு தேர்தல் களத்தில் கூட, ஜெயலலிதா அம்மையார் ஒரு தடவை கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் தனியே நின்று பெரும் வெற்றியும் பெற்றிருக்கின்றார்.

“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்

3 months 2 weeks ago
ஈரோடு கிழக்கில் இரு கட்சிகள் போட்டியிட்ட தேர்தலில் கூட டெபாசிட்டை தக்க வைக்க முடியாமல் நாதக அவமானத்தோல்வி அடைந்தபோது… அதை வெற்றி என்றும், வாக்குவீத உயர்வு, 2ம் பெரிய கட்சி எனவும் நீங்களும் இன்னும் பலரும் கஞ்சா கப்ஸா கதைகளை அவிட்டு விட்டீர்கள் அல்லவா? அந்த திரியில், 2026 இல் சீமான் தனித்து நின்று 15% பெறமாட்டார் என பந்தையம் கட்ட அழைத்தேன். அத்தனை சீமானியர்களும் கூண்டோடு எஸ் (நீங்களும்)…. சீமானின் மீது விமர்சன பார்வை உள்ளவரான வாத்தியார் அண்ணா மட்டும் பந்தயம் கட்டினார்.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

3 months 2 weeks ago
ஏன் சுமந்திரன், சாணக்கியனுக்குப் போவான்? இதை ஜஸ்ரினோ, ஐலண்டோ, கோசானோ சொல்லி விட்டு திட்டு வாங்காமல் போய் விட முடியுமா😂? அது தான் நிலைமை! இத்தனைக்கும் திட்டுவோர் பெரும்பான்மை கூடக் கிடையாது! A disproportionately loud minority!

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

3 months 2 weeks ago
ஆனால், மூன்றாவது பெரிய கட்சிக்கு வைப்புத் தொகையே கிடைக்காத ஒற்றையெண் வீதம் அல்லவா வாக்கு வீதம்? அதனால் கருத்துக் கணிப்பில் கூட பெரும்பாலும் உள்ளடக்குவதில்லை என நினைக்கிறேன். அதிருக்கட்டும். அந்த புள்ளி விபரம், பால் உற்பத்தி பற்றி என்ன நிலைவரம்? எஸ்கேப் தானா?

தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை

3 months 2 weeks ago
இதில் பொலிசார் திறமையாக செயற்பட்டு மூன்று கொலையாளிகளும் தப்பி செல்ல விடாது அவர்களை சுட்டு கொலை செய்யப்பட்டது நல்ல விடயம். வீட்டுக்கு விருந்தினர்களாக வந்து அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகிய இருவரின் மனைவிமார் கையால் பிஸ்கட் தேனீரும் வாங்கி குடித்துவிட்டு அவர்களின் கணவரை படுகொலை செய்த நம்பிக்கை துரோகிகளான அயோக்கியர்களை சுட்ட நிசாங்க பாராட்டுக்குரியவர்

“சீமான் பச்சோந்தி.. உதயநிதி எல்லாம் ஆளே இல்லை” களத்தில் ஒன் இந்தியாவுக்கு பேட்டியளித்த தவெகவினர்

3 months 2 weeks ago
அரை மணித்தியாலம் எதிர்ப்புப் போராட்டம் இரண்டரை நிமிடம் பேச்சு.கருநாய்நிதி கூட 3 மணித்தியாலம் உண்ணாவிரதம் செய்தார்.2019 இல் திமுக எதிர்ப்பு என்ற போர்வையில் கமல் இறக்கபட்டார் 2024 இல் திமுகவிற்குள் ஐக்கியமாகிவிடடார்.விஜை எவ்வளவு காலம்?திமுக எதிர்ப்ப்பு வாக்குகள் ஓரணிக்குள் போகாமல் சிதறடிக்கபட்டு திமுகவுக்கு சாதகமான சந்தர்பதை திட்டமிட்டு அரங்கேற்றுகிறார்கள்.மக்கள் நலக்கூட்டணி 2.0.ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியைத் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்கிறார்கள். அது என்ன சவால்?அறியத்தாருங்கள்.
Checked
Mon, 11/03/2025 - 20:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed