2 weeks 2 days ago
ஒரு அரசியல்தலைவன் என்றால் அவர் பேசும் பேச்சை தொண்டர்கள் செவி முடுக்க வேண்டும்.கூட்டத்ததைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்க வேண்டும். வியை கூட்டத்தில் பேசும் பேச்சை யார் கேட்கிறார்கள்?கத்திக் கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் விஜையைப்பார்க்க வந்தவர்களாகத்தான் இருக்கிறார்களே ஒழிய அவர் பேசும் கருத்தைக் கேட்பதற்காக வந்தவர்கள் இல்லை.விஜையும் இந்தக் கூட்டத்தைவிரும்பி காக்க வைத்து சொன்ன நேரத்துக்கு கூட்டத்துக்கு வராமல் காக்க வைத்து மாஸ் காட்டியதன் விளைவு நீண்ட நேரமாக தண்ணீர்இன்றி சாப்பாடு இன்றி இருந்தால் மயக்கம்வரத்தான் செய்யும் அதுவும் சனநெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்படத்தான் செய்யும்.மாஸ்காட்ட வெளிக்கிட்டு back fire ஆகமுடிந்திருக்கிறது. கரூரில் விஜை ஆவேசப் பேச்சு >நாமக்கல்லை நடுங்கவைத்தை விஸஜ என்று தமது TRP ஏற்றிய அதே ஊடகங்கள் இன்று பத்திரிகையாளரை சந்திக்க மறுத்த விஜை.விஜை கைதாவாரா?கருரில் விஜை கூட்டத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் மரணம் என்றுTRP ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்.விஜைவெளியே வந்து பத்திரிகையாளர்களுக்கு முகம் கொடுக்க வேண்டும்.இல்லயேல் அரசியலுக்கு லாயக்கு அற்றவர்.
2 weeks 2 days ago
வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூவும் தனியரசு. நடிகர் விஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.. தனியரசு கோரிக்கை Velmurugan PPublished: Sunday, September 28, 2025, 1:23 [IST] தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அரசின் காவல்துறையின் விதிகளை மீறி பேரணி மற்றும் கூட்டம் நடத்தியதில் கூட்டத்தில் சிக்கி அப்பாவி குழந்தைகள் ,பெண்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான த.வெ.க தலைவர் நடிகர் விஜய் மீது தமிழக காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் உயிருக்கு போராடும் நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், கரூரில் கேட்கும் மரண ஓலம் நெஞ்சை உலுக்குகிறது. நாட்டில் உள்ள மக்கள் எல்லோருடைய மனசும் கருரை நோக்கியே இருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என எல்லோரும் கரூர் விரைகின்றனர்... மதியம் 12 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லி மக்களைக் காக்க வைத்து, தன் சினிமா பிம்பத்துக்கு கூட்டத்தைக் கூட்டி ஷோ காட்ட, ஒரு சொட்டுத் தண்ணீரும் சிறு உணவும் ஏற்பாடு செய்யாமல், அரசு, நீதிமன்றம் சொன்னதைக் கேட்காமல், காவல்துறையின் பேச்சையும் மதிக்காமல், தன்னுடைய அதிகாரக் கோரப்பசிக்கு அப்பாவி மக்களின் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய நடிகர் விஜய் சென்னையை நோக்கி ஓடி ஒழிகிறான்...!! என் மக்களை இப்படி துயரத்தில் துடிக்க வைத்த விஜய்யை காலம் மன்னிக்காது." இவ்வாறு கூறியுள்ளார். விஜைக்கு கூடும் கூட்டத்தை எல்லாம் சுத்தம் பேணும் என எதிர்பார்க்க முடியாது. சீமான் தவறானவர் என்றாலும் அவர் சொல்லும் கொள்கை சரியானது. அதை கேட்க கூடும் கூட்டமும் அப்படியே. ஆனால் விஜையை பார்க்க வருவோர் அனைத்து தரப்பினரும். ஒரு திருவிழா போல நடந்தது. ஆகவே அதே நடத்தையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் கொஞ்சம் வெளியான இடங்களை விஜை அடம் பிடித்து கேட்டிருக்கலாம். சில நாட்கள் முன்பு சவுக்கோ அல்லது இன்னொரு யூடியுபரோ - இது ஆபத்தில் முடியலாம் அதை திமுக விரும்பும் என சொன்னார்கள். அப்படியே நடந்துள்ளது. இதை விஜை உணர்ந்து தவிர்திருக்க வேண்டும்.
2 weeks 2 days ago
உண்மை தான் சீமானுக்கு இவ்வளவு கூட்டம் கூடாது. ஆனால் விஜேக்கு இப்படி சனம் கூடும் என எதிர்பார்த்து அதற்கேற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முதல் நடந்த கூட்ட முடிவிலும் குண்டு விழுந்த இடமாக காட்சியளித்தது.கதிரைகள் சின்னாபின்னமாக கிடந்தது. குப்பைகளை அள்ள ஆட்களைக் காணோம். போகப்போக முன்னேற்றம் காணுவார் என எண்ணினேன். இப்போ சோகத்தில் முடிந்துள்ளது.
2 weeks 2 days ago
சீமானின் முதலாவது அறிக்கை - அரசியல் தவிர்த்து வெளிவந்துள்ளது. உண்மையில் சீமானின் ஆதாரவாளர்களை விட சீமான் நாகரீகமாக அறிக்கை விட்டுள்ளார். கரூரில் மக்களின் மரண ஓலம் நெச்சை பிளக்கிறது! நாதகவினர் ரத்த தானம் செய்யுங்கள்!” - சீமான் அறிக்கை Halley KarthikPublished: Sunday, September 28, 2025, 1:40 [IST] இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் தருகிறது. கரூர் முழுவதும் தங்கள் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கின்றேன். படுகாயமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய உயர் சிகிச்சை அளித்து உயிர்காத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன். வருங்காலத்தில் இதுபோன்று, அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாக பறிபோகும் பெருந்துயரங்கள் நிகழ்ந்தேறா வண்ணம் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக! கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த பலர் உயிருக்கு போராடி வரும் நிலையில், கரூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள நம்முடைய நாம் தமிழர் கட்சி உறவுகள் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து, குருதி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்து மக்களின் உயிர் காக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன். உடனடியாக நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு உறவுகளும் மக்களின் உயிர் காக்கும் இப்பெரும்பணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும். எனதன்பு தம்பி, தங்கைகள் கூடுதல் தகவல்களுக்கு நம்முடைய நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்! தொடர்பு எண்: +917667412345" என்று தெரிவித்திருக்கிறார்.
2 weeks 2 days ago
ஒரு நடிகனை கடவுளாக பார்க்கும் சினிமா பைத்தியங்களை என்னவென்பது? மற்றும்படி விஜய் அரசியலுக்காக வந்த கூட்டம் அல்ல இது. சீமானின் அரசியல் கூட்டங்களில் நடக்கும் ஒழுங்குகளை பார்த்தாவது விஜய் கட்சியின் தொண்டர்கள் எனப்படும் ரசிகர்கள் பாடம் படிக்க வேண்டும்.
2 weeks 2 days ago
எது ஒழுக்கம்? தலைவரின் ஆளுரய படத்தின் முன் வைத்து, ஒரு சிறுமியை நாதக நிர்வாகி வன்கொடுமை செய்த வீடியோ உலவுகிறதே அதன் பி. அவருடன் சீமான் போட்டோவும் எடுத்தாரே அந்த ஒழுக்கமா? அல்லது அடிக்கடி செய்யிகளில் அடிபடும் நா தக வினரின் “ஒழுக்கமா”? இங்கே ஒழுக்க கேட்டால் யாரும் சாகவில்லை. கூட்ட நெரிசல். ஆகவே சீமானை இது உயர்தியது என்பது - இதிலாவது நாதகவுக்கு ஒரு ஆதாயம் கிடைக்காதா என்ற அங்கலாய்பே.
2 weeks 2 days ago
ஆனால் சந்தில் கூடினாலும் அதன் ஒழுக்கம் வேறு. எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நிஜம் இது. இன்று விஜய் சீமானை தூக்கி விட்டு உள்ளார்.
2 weeks 2 days ago
அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், "விசாலமான கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அனுமதி கேட்டபோது, அது அனுமதிக்கப்பட்ட பகுதியல்ல என மறுத்த போலீஸ், நெரிசலான, அணுகுசாலை வசதியற்ற, வேலுசாமிபுரத்தை அதிமுகவுக்கும், விஜய்க்கும் ஒதுக்கியது! ஆனால், அதே ரவுண்டானாவை ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டும் ஒதுக்கியது எப்படி?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 👆 அதிமுக ராஜசபா எம்பி இன்பதுரை. பாஜக கூட்டணியில் இருந்து ஆதரவு சமிக்ஞை? இதை வைத்து விஜைய வழிக்கு கொண்டுவர பாஜக/அமித் ஷா முயல கூடும். இப்படி ஒரு நெருக்கடியை கொடுத்துத்தான், முத்துகுமாரை கொலை செய்துவிட்டு, றோ சீமானை கட்டுப்பாட்டில் எடுத்தது.
2 weeks 2 days ago
அது மக்கள் அல்ல, திருச்சி விமான நிலையதில் இருந்த பத்திரிகையாளர்கள். ஆரம்பம் முதலே பற்றிகையாளர் கேள்விக்கு விஜை பதில் சொல்வதில்லை. இன்று நிலமை வேறு என உணர்ந்து பதில் சொல்லி இருக்க வேண்டும். குறிப்பாக ஒரு நடிகன் - இவ்வளவுதான் என்ற பேச்சு எழும் என தெரிந்திருக்க வேண்டும். பொதுவாகவே மக்கள் கொலையை செய்து விட்டு அழுபவனை நம்புவார்கள். கொலையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனவனை இரக்கம் அற்றவன் என திட்டுவார்கள். ஆனால் இதை கூட விளங்கி கொள்ளவில்லை எனில் - விஜை அரசியலுக்கு லாயக்கற்றவர் என்பதே உண்மை. இப்படி ஒரு கூட்டம் சீமானுக்கு கனவிலும் கூடாது. ஆயிரம் பேரை ஒரு சந்தில வைத்து பேசுவதற்கும் ஒரு இலட்சம் பேரை அதே சந்தில் வைத்து பேசுவதற்கும் வித்தியாசம் உண்டு.
2 weeks 2 days ago
கட்சிகள் அரசியல்களைக் கடந்து ஒரு கூட்டம் வைப்பதும் முடிவில் எதுவுமே நடக்காத மாதிரி அந்த இடத்தை துப்பரவு செய்வது போக்குவரத்துக்களை கட்டுப்பாட்டில் வைத்து மக்களுக்கு இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிப்பதிலும் நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து சகல கட்சியினரும் பாடம் படிக்க வேண்டும். இறந்த காயம்பட்ட பொதுமக்களுக்கு அனுதாபங்கள்.
2 weeks 2 days ago
அப்பாவிகளான பொதுமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களும், கண்ணீர் அஞ்சலிகளும்..........😭😭.
2 weeks 2 days ago
https://www.youtube.com/watch?v=iorqqctywxM
2 weeks 2 days ago
ஒரு வீடியோ பார்த்தேன். 30 பேர் பலியாகியுள்ளனர் என்று மக்கள் கத்தி விஜய்யிடம் சொல்கிறார்கள் அவர் ஒன்றுமே கேட்காதர்கள் போல் சென்று கொண்டு இருக்கிறார். இவ்வளவு தான் நடிகனால் புரிந்து கொள்ள முடிகிறது. முடியும்.
2 weeks 2 days ago
மேலே சொல்லி உள்ளேன் மாசி மக நீராடலுக்கு ஜெ போனபோது நடந்தது. ஜெ அளவுக்கு விஜைக்கு துணிவு அல்லது மன தைரியம் இல்லை என்றே படுகிறது. மனதைரியம் இல்லை எண்டால் அரசியல் சரிவராது.
2 weeks 2 days ago
அநுரவின் ஐ.நா உரையும் சர்வதேச அரசியல் பின்னணியும் – இலங்கை இராணுவத்துக்கு ஐநா பயிற்சி! September 28, 2025 12:09 am *சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்று கூறப்படும் நிலையில், அநுரவுடன் கைகோர்க்கும் ஐநா… *தமிழ்த் தரப்பில் ஒருமித்த குரல் செயற்பாடுகள் அற்ற தன்மையை சாதகமாக பயன்படுத்தும் சர்வதேசம்… *கனடா அரசின் இராணுவ நிபுணர் கொழும்பில் பயிற்சி வழங்கியுள்ளார். அ.நிக்ஸன்- — — — ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை என்று தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வரும் பின்னணில், ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பை காப்பாற்றும் முயற்சியிலேயே மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக ஈடுபடுகின்றன. அத்துடன், 1920 இல் ஆரம்பித்த சிங்கள – தமிழ் முரண்பாடுகள், முப்பது வருட அஹிம்சைப் போராட்டத்தின் மூலமும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் ஊடாகவும் தீர்க்க முடியாமல் போன சந்தர்ப்பங்களில், 2009 இற்குப் பின்னரான கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் என தமிழர்கள் கோருகின்றனர். இப் பின்புலத்தில், மேற்கு – ஐரோப்பிய நாடுகள் இலங்கையின் பக்கம் நிற்பதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ரசிய – உக்ரெய்ன் போர், இஸ்ரேல் – காசா போர் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார வரிகள் உள்ளிட்ட பல விவகாரங்களுக்கு மத்தியில் உலக அரசியல் சமநிலை தற்போது குழப்பமடைந்துள்ளது. இதன் காரண – காரயமாக சிறிய நாடு ஒன்றைக் கூட தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தியை மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் வகுத்துள்ளன. டொனால்ட் ட்ரம்ப்பும் அந்த நிலைப்பாட்டில் தான் இயங்குகிறார். இங்கே, வல்லரசுகளின் இப் போட்டித் தன்மைகளை சிங்கள அரசியல் தலைவர்கள் நன்கு புரிந்து கையாளுகின்றனர். பாலஸ்தீனம் தனிநாடு அதாவது இரு அரசுத் தீர்வு முறைக்கு எப்போதோ அங்கீகாரம் பெற்றுவிட்டது. ஆனாலும், அமெரிக்க அழுத்தங்கள் மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையில் பாலஸ்தீன விவகாரம் முடிவின்றி நீடிக்கிறது என்பதே உண்மை. அதேநேரம் பாலஸ்தீன விவகாரத்துக்கு இரு அரசுத் தீர்வு என ஏற்கனவே கூறிய சர்வதேச நாடுகள் கூட மனதளவில் அதனை முழுமையாக விரும்பவில்லை என்பது மற்றொரு உண்மை. இந்த ஊடாட்டங்களுக்கு மத்தியில் சர்வதேச அரசியல் நலன்கள் என்ற தன்மையை ஆழமாக அறிந்து குறிப்பாக சமகால புவிசார் அரசியல் – பொருளாதார போட்டிச் சூழலுக்கு ஏற்ப, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஐநாவில் கூறியிருக்கிறார். மகிந்த ராஜபக்சவும் அவ்வாறு கூறியிருக்கின்றார். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என கூறப்பட்ட மைத்திரி – ரணில் ஆட்சியிலும் பாலஸ்தீனம் பற்றி அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அது இலங்கை அரசின் பாலஸ்தீனம் பற்றிய உண்மையான அரசியல் பார்வையல்ல. இருந்தாலும், பாலஸ்தீனம் தனி நாடு ஆக வேண்டும் என கூறுவது ‘இலங்கை அரசு’ என்ற கட்டமைப்பின் ஒரு உத்தி. அதாவது, ஈழத் தமிழர் விவகாரத்தில் அமெரிக்க – இந்திய அரசுகளை தொடர்ந்து தம் பக்கம் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் கையாளப்படும் அரசியல் அணுகுமுறை அது. குறிப்பாக, அமரிக்கா போன்ற மேற்கு நாடுகளும் அயல் நாடான இந்தியாவும் இஸ்ரேல் ஆதரவு நிலையில் செயற்படும் பின்னணியில், சிறிய நாடான இலங்கைத்தீவின் ஜனாதிபதி ஒருவர் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என பேசியிருப்பது அரசியல் ரீதியான தேவைகளின் அடிப்படை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உலக அரசியல் ஒழுங்குகள் குழப்பமடைந்து வரும் ஒவ்வொரு சூழலிலும் இலங்கை ஜனாதிபதிகள் அவ்வாறான இராஜதந்திர பேச்சை முன்னெடுப்பது வழமை. இதற்கு அநுரகுமார திஸாநாயக்கவும் விதிவிலக்கல்ல. அதற்கான பிரதான காரண – காரியம் என்பது, ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து ஈழத்தமிழர் விவகாரத்தை முற்றாக நீக்கம் செய்து உள்ளக விசாரணை பொறிமுறையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கமாகும். அதற்கு மேற்கு – ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம். அதுவும் இந்தியா மிகவும் தேவையான ஒரு நாடு. ஆகவே, சர்வதேச அளவில் அந்த நாடுகள் தற்போது கொண்டுள்ள பாலஸ்தீனம் தொடர்பான தற்போதைய அரசியல் கொள்கைக்கு மாறான கருத்து ஒன்றை உலக அரங்கில் பகிரங்கப்படுத்தினால், உடனடியாக அந்த நாடுகள் இலங்கையை நோக்கி அவதானம் செலுத்தும் என்ற நம்பிக்கை சிங்கள அரசியல் தலைவர்களிடம் உண்டு. இந்த அவதானம் என்பது, இலங்கை ஒற்றை ஆட்சி அரச கட்டமைப்பை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என விரும்பும் சிங்கள அரசியல் தலைவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற மேற்கு – ஐரோப்பிய நாடுகள் இந்தியா ஊடாக காய் நகர்த்த முற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்கும். கடந்த காலங்களிலும் சிங்கள அரசியல் தலைவர்கள் இவ்வாறான அரசியல் காய் நகர்த்தல்களை கன கச்சிதமாகச் செய்திருக்கின்றனர். இதனை மேலும் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதானால், 1994 ஆம் ஆண்டு சந்திரிகா பெரும் வெற்றிக் கோசத்துடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட காலம் முதல், இன்றைய அநுரகுமார திஸாநாயக்க வரையும் நீட்சியடையும் பிரதான அரசியல் உத்தி இது. ஏனெனில், தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை என்பதில் இந்திய மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை. சீனாவை மையப்படுத்திய இந்தோ – பசுபிக் விவகாரத்தில், அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவுடன் பனிப் போர் நிலவினாலும், ஈழத்தமிழர் விவகாரத்தில் அந்த நாடுகள் இந்தியாவை கடந்து எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடாது என்பதற்கு கடந்த கால செயற்பாடுகள் உதாரணமாகும். இவற்றையெல்லாம் அறிந்தே சிங்கள அரசியல் தலைவர்கள் செயற்படுகின்றனர். கட்சி அரிசியல் வேறுபாடுகள் இருந்தாலும் மகிந்த சமரசிங்க, அமரர் மங்கள சமரவீர, ரணில் விக்கிரமசிங்க, பேராசிரியர் பீரிஸ், மிலிந்த மொறகொட போன்றவர்கள் சிங்கள அரசியல்வாதிகள் என்பதற்கும் அப்பால், ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் மிக நுட்பமாக கையாளும் சிறந்த இராஜதந்திரிகளாவர். இந்தியாவைக் கையாள மிலிந்த மொறகொட வகுத்துள்ள அரசியல் உத்திகளையே அநுரகுமார திஸாநாயக்க தற்போது நன்கு பயன்படுத்துகிறார் என்பது வெளிப்படை. இதனை மையமாகக் கொண்டே அநுரகுமார திஸாநாயக்கா பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை துணிந்து ஐநாவில் கூறியிருக்கிறார். இது மேற்கு – ஐரோப்பிய நாடுகளுக்குப் புரியாத புதிர் அல்ல. ஆனாலும், இந்தோ – பசுபிக் விவகாரத்தில் இலங்கைத்தீவு முக்கிய ஒரு தளமாக இருப்பதை கருத்தில் கொண்டு சிங்கள அரசியல் தலைவர்கள் விரும்புகின்ற இலங்கை ஒற்றையாட்சி கட்டமைப்பை நியாயப்படுத்தும் அரசியல் செயன்முறைகளுக்கு ஆதரவு வழங்கக் கூடிய ஏற்பாடுகளை செய்வார்கள் என்பதே உண்மை. உதாரணமாக, வடக்கு கிழக்கில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரி ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளருக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறிக்கு இலங்கை இராணுவம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. கொழும்பில் உள்ள அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் இந்த மாதம் 8 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட பாடநெறியின் நிறைவு விழா இந்த மாதம் 19 இடம்பெற்றிருக்கிறது. இன அழிப்பு அல்லது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடுகளின் இராணுவத்தினர் ஐநாவின் இப்படியான பாடநெறிகளுக்குத் தெரிவு செய்யப்படுவதில்லை. ஆனால், இலங்கை இராணுவம் 2009 இற்குப் பின்னரான சூழலில் பல சந்தர்ப்பங்களில் இப் பாட நெறிகள் மற்றும் சர்வதேச கூட்டு பயிற்சிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும், சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச நிறுவனங்கள் இலங்கை இராணுவம் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றன. ஜெனீவா தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பயணத் தடைக் கூட விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட பயணத் தடை விதித்திருக்கின்றன. ஆகவே, மிலிந்த மொறகொட, பேராசிரியர் ரொஹான் குணவர்த்த போன்றவர்கள் சர்வதேச அளவில் இலங்கை இராணுவம் தொடர்பாக மேற்கொள்ளும் தொடர் பிரச்சாரங்களில் ஐநா நம்பிக்கை கொண்டுள்ளது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாகின்றனர் என பிரகடனப்படுத்தியுள்ள கனடா அரசின் டிரேசி மார்டினோ என்ற இராணுவ நிபுணர் பயிற்சிக் குழுவுக்கு தலைமை தாங்கியமை அதனை கோடிட்டுக் காண்பிக்கிறது. இப் பாடநெறியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 20 அதிகாரிகள், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 02 அதிகாரிகள், பங்களாதேஷ், ஃபிஜீ, இந்தோனேசியா, மொங்கோலியா, நேபாளம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 09 வெளிநாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அர்ஜென்டீனாவைச் சேர்ந்த திரு. விக்டர் மானுவல் நுனேஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜெனரல் நரேஷ் சுப்பா ஆகியோர் பிற பாட நிபுணர்களாகப் பணியாற்றினர். ஆகவே, அநுர அரசாங்கத்தை முன்னேற்றி, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் தமது புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றுவதே மேற்கு – ஐரொப்பிய நாடுகளின் நோக்கமாக உள்ளன. ஐநா இலங்கையின் நலன்களுக்கு ஏற்ப ஒத்துழைப்பு வழங்கும் என, ஐநாவின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ், அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவான சில நாட்களில் சந்தித்தபோது கூறியதை தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன், அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையை ஐநா எப்போதும் கையாளும். ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட இனமாக ஒருமித்த குரலில் தமது அரசியல் உரிமை பற்றிய செயற்பாடுகளை உரிய முறையில் செயற்படுத்த தவறினால், ஐநா போன்ற சர்வதேச அமைப்புகள் அந்த இனத்தை ஒடுக்கும் அரசுகளுடன் கைகோரக்கும் ஆபத்து உருவாகும். ஆகவே 2009 இற்குப் பின்னரான தமிழர்களின் செயற்பாடுகளில் ஒருமித்த செயற்பாடுகள் அற்ற தன்மை மேலோங்கி வருவதால், ஐநா போன்ற அமைப்புகளும் சர்வதேச நாடுகளும், இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த மக்கள் என்ற அடிப்படையில் “இலங்கை அரசு” என்ற கட்டமைப்புடன் மாத்திரம் உறவை பேணி அபிவிருத்தி அரசியலை புகுத்துகின்றன. இதனை அநுரகுமார அல்ல, வேறு எந்த ஒரு சிங்கள தலைவரும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவார் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். https://oruvan.com/anuras-un-speech-and-international-background/
2 weeks 2 days ago
இப்படி ஒரு சம்பவம் ஜெயலலிதா காலத்திலும் நடந்தது. ஜெயலலிதா தைரியமாக எதிர்கொண்டார்.
2 weeks 2 days ago
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் வழக்கு விவகாரத்தை தாம் கையாள்வதாக சட்டத்தரணி சுமந்திரன் கேட்டபோது அந்த விடயத்தை வைத்தியர் மனோகரன் நிராகரித்துள்ளதாக கனடாவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் றோய் சமாதானம் தெரிவித்துள்ளார். லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, குறித்த வழக்கு விவகாரத்தை படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரின் தந்தையான மனோகரனே ஐக்கிய நாடுகள் சபை வரைக்கும் கொண்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வைத்தியர் மனோகரனால் சுமந்திரன் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், https://tamilwin.com/
2 weeks 2 days ago
விஜை பனையூரில் போய் முடங்கி கிடப்பது மிக பிழை. ஆனால் மேலே புலவர் எழுதி இருப்பது வரிக்கு, வரி திமுக ஐடி விங் தயாரித்து கொடுத்து பல கணக்குகளில் இருந்து பகிரப்படும் “கருத்து” க்களை ஒத்து இருக்கிறது.
2 weeks 2 days ago
2 weeks 2 days ago
மாசி மகத்தில் ஜெ போனபோது அவரின் பாதுகாப்பால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறந்தனர். அந்த ஜெவை கூட மக்கள் மன்னித்தனர். இது விஜை வேண்டும் என்று செய்த ஒன்றல்ல - இதில் இருந்தும் மீளலாம். ஆனால் விரைவு நடவடிக்கை முக்கியம். இப்போதே கூட்டத்தில் இருந்த ஆட்கள் என திமுக சொம்பு ஊடகங்கள் narrative set பண்ணுகிறார்கள். நாளைக்கு அண்ணன் சீமான் இறங்கி அடிப்பார். விஜை பனையூரில் பதுங்கினால் - வழித்து எடுத்து விடுவார்கள். இதில் விஜை தெளிவாக செயல்படின் அவர் அரசியலுக்கு பொருத்தமானவர் என கருதலாம்.
Checked
Tue, 10/14/2025 - 09:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed