ஊர்ப்புதினம்

அரசாங்கம் ஆட்சியை கைவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டால் மீண்டும் நாட்டை பாெறுப்பேற்க முடியுமான அணி பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் ; ருவன் விஜேவர்த்தன

3 weeks 2 days ago
image

(எம்.ஆர்.எம்.வசீம்)  

அரசாங்கம் ஆட்சியை கைவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டால், நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியுமான அணியொன்று பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.   

அவ்வாறான அனுபவமுள்ளவர்கள் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களாக களமிறக்கி இருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணியின் கம்பஹா மாவட்ட வேட்பாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவருமான ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.  

கம்பஹா பிரதேசத்தில் நேற்று  திங்கட்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,  

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது. எமது நாட்டின் பொருளாதாரத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கே கட்டியெழுப்ப முடியும்.   

நாடு வங்குராேத்தடைந்த போது, நாட்டை பொறுப்பேற்க அவர் மாத்திரமே முன்வந்தார். நாங்கள் அனைவரும் தற்போது நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக்கொடுத்தது ரணில் விக்ரமசிங்கவாகும்.  

என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக நாட்டு மக்கள் வேறு ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள். தற்போது மக்கள் நியமித்திருக்கும் ஜனாதிபதியின் காலை வாரிவிட நாங்கள் நினைப்பதில்லை.

இருந்தபோதும் ஜனாதிபதியின் சில தீர்மானங்கள் குறித்து எங்களுக்கு திருப்தியடைய முடியாது. அவருக்கு இருக்கும்  அனுபவ குறைவே இதற்கு காரணமாகும். நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பது என்பது இலகுவான பொறுப்பல்ல.  

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பொருளாதாரம் தொடர்பில் இருக்கும் திறமை காரணமாக  நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவு ஸ்திர நிலைக்கு கொண்டுவர அவருக்கு முடியுமாகியது.   

ஆனால் அநுரகுமார திஸாநாயக்க அன்று சொன்ன விடயங்களுக்கும் தற்போது தெரிவிக்கும் விடயங்களை பார்க்கும்போது ஒன்றுக்கொன்று முரண்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அதனால் இந்த தேர்தலிலாவது நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நாங்கள் சிந்திக்க வேண்டும்.  

அனுபவமில்லாத பிரிவினர் அரசாங்கத்துக்கு நியமிக்கப்பட்டால் அதனால் நாட்டுக்கு நல்லது நடக்கும் என நாங்கள் நினைப்பதில்லை. இன்று திசைகாட்டியில் இருப்பவர்கள் யார் என்றுகூட மக்களுக்கு தெரியாது.   

என்றாலும் எமது அணியில் திறமையான அனுபவமுள்ளவர்கள் இருக்கிறார்கள். தற்பாேதைய ஆட்சியாளர்களுக்கும் தங்களின் பொறுப்பை கைவிட்டு செல்ல  நேரிட்டால், மீண்டும் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு அனுபமுள்ள அணியொன்று பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/197363

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை

3 weeks 2 days ago

எதிர்கால பாராளுமன்றத்திற்கு மக்கள் தம்மை தெரிவு செய்தால் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணையை தயாரித்தல் மற்றும் முன்வைத்தல் ஆகிய இரண்டு பணிகளையும் தாம் மேற்கொள்வேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குழு அறிக்கைகள் தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக கொழும்பில் திங்கட்கிழமை 28) காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசத்திடம் மன்னிப்பு கோருவதற்கும், ரவி செனவிரத்னவை பதவியில் இருந்து நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு இன்னும் சந்தர்ப்பம் இருப்பதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க, ரிஷாத் பதுர்தீன் மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உருவாக்கி அந்தத் திறமையை தான் வெளிப்படுத்தியுள்ளதாக  உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு மிகப்பெரும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்த  கம்மன்பில, அனுர ஜனாதிபதி என்பதாலேயே அவர்  கோமாவில் இருந்து விழித்துக்கொண்டார் என்றார்.

https://thinakkural.lk/article/311258

பிராந்திய நாடுகளுடன் இருந்துவந்த தொடர்புகள் இல்லாமல்போயுள்ளதாலே புலனாய்வு தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது - பிரமித்த பண்டார தென்னகோன்

3 weeks 2 days ago

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அரசாங்கம் பாரதூரமாக எடுக்கவில்லை. பிராந்திய நாடுகள் மற்றும்  வெளிநாடுகளுடன் இருந்துவந்த தொடர்பு இல்லாமல் போயுள்ளதாலே இந்த புலனாய்வு தகவல்  வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அறுகம்பை பிரதேசத்துக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறும் அங்கு தாக்குதல் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும்  பல வெளிநாட்டு தூதரகங்கள் தங்களின் பிரஜைகளுக்கு கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தன. எமது தேசிய பாதுகாப்பு தொடர்பில் சரியாக கவனம் செலுத்த தவறியிருக்கிறோம் என்ற செய்தியையே இது உலகுக்கு வெளிப்படுத்துகிறது. அந்த நிலைக்கு நாங்கள் செல்லக்கூடாது. எமது காலத்திலும் இவ்வாறான பல அச்சுறுத்தல்கள் வந்தன.

அப்போது நாங்கள் எமது புலனாய்வுத்துறையுடன் இணைந்து செயற்பட்டு, புலனாய்வு தகவல்களுக்கு பதிப்பளித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு. நாட்டின் பாதுகாப்பு, எமது மக்களின் பாதுகாப்பு மற்றும் எமது நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தோம்.

உதாரணமாக ஹமாஸ் குழு இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆரம்ப கட்டத்தில், இலங்கையில் இருக்கும் இஸ்ரேல் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என நினைத்து, நாங்கள் இஸ்ரேல் அரசாங்கத்துடன் கலந்துரையாடி, இஸ்ரேல் மக்களை விசேட விமானம் மூலம் அவர்களின் நாட்டுக்கு அனுப்பிவைத்தோம்.

இந்த விடயத்தை நாங்கள் ஊடகங்களுக்கு தெரிவித்து, பதற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. இது தொடர்பாக ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவது இதுவே முதல்தடவையாகும். இதன் மூலம் எமது சுற்றுலா துறை மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கவில்லை.

என்றாலும் அறுகம்பை பிரதேசத்தில் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அரசாங்கம் பாரதூரமாக எடுக்கவில்லை என்றே எமக்கு தோன்றுகிறது. ஏனெனில் இவ்வாறான புலனாய்வு தகவல்கள் கிடைத்ததும் நாங்கள் அது தொடர்பில் நாங்கள்  எமது பிராந்திய நாடுகள், வெளிநாடுகளுடன் சிறந்த தொடர்பை ஏற்படுத்தி அவர்களுடன் இணைந்து செயற்பட்டுவந்தோம்.

ஆனால் தற்போது அந்த தொடர்பு இல்லாமல் போயுள்ளதாலே இந்த புலனாய்வு தகவல் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று வெளிநாட்டு தூதரகங்கள் இந்த தகவலை வெளிப்படுத்தும்வரை அரசாங்கமோ எமது பாதுகாப்பு பிரிவோ இது தொடர்பில் முன்கூட்டி அறிந்து செயற்படுவதை எங்களால் காண முடியவில்லை. இந்த அச்சுறுத்தல் அறிவிப்பு வெளிப்பட்ட பின்னரே பாதுகாப்பு தரப்பினர் அது தொடர்பில் செயற்பட ஆரம்பித்ததாகவே எமக்கு தகவல் கிடைத்தது.

எனவே யார் அரசாங்கம் செய்தாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு தகவல் கிடைத்தால் அதற்கு முன்னுரிமை கொடுத்து, அது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாறாக அதனை அரசியலாக்கிக்கொண்டு ஊடக களியாட்டம் மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/197339

கொடுக்குளாய் - இயக்கச்சி அபாயவெளிப் பாதை மூடப்படுகின்றது; மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவிப்பு

3 weeks 2 days ago

வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள், அயல் கிராம மக்களின் உதவியுடன் 78 இலட்சம் ரூபா செலவில் போடப்பட்ட  கொடுக்குளாய்-இயக்கச்சி அபாயவெளி பாதை தற்பொழுது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.

கையிருப்பில் உள்ள சிறு நிதியை கொண்டு பள்ளங்களை கிரவல் மூலம் மூடுவதற்கு தீர்மானித்து இரண்டு நாட்களுக்கு குறித்த அபாயவெளி பாதை முற்றுமுழுதாக மூடப்படுகின்றது.

இது குறித்து ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டு கழக தலைவருமாகிய கணேஸ்வரன் மேலும் கூறுகையில்,

இந்த அபாயவெளி பாதை சில நாட்களுக்கு முன்பு திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது பெய்த கடும் மழையால் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். இந்த வேலையை மேற்கொண்டு தொடர்வதற்காக நாளையும்(29) நாளை மறுதினமும்(30) இரு தினங்கள் அபாயவெளி பாதையை மூடி திருத்தம் செய்யும் பணியில் ஈடுபடவுள்ளோம்.

இந்த அபாயவெளி பாதையால் நாளாந்தம் இரண்டாயிரம் மக்களுக்கு மேல் பயணித்துவருவதால் இதை முற்றுமுழுதாக மூடுவதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவார்கள். இதை மூடி திருத்தம் மேற்கொள்ளாவிடில் அபாய நேரத்தில் வெளியேற முடியாமல்  பலர் உயிரிழக்க நேரிடும் என்பதால் இரண்டு நாட்களுக்கு பாதையை மூடவுள்ளோம்.

இந்த அபாய அபாய வெளி பாதை இருந்திருந்தால் வடமராட்சி கிழக்கில் சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த பலரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். இதனை கருத்தில் கொண்டு மேலும் இப்படியொரு சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காக 78 இலட்சம் ரூபா செலவில் மக்கள் நாம் உருவாக்கினோம்.

வர்த்தக போக்குவரத்து, அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், மருத்துவ நோயாளிகள் என பலர் இந்த பாதையால் பயணிப்பதை அரசாங்கமும்,அரசியல்வாதிகளும் அறிந்தும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

ஒரு சில அரசியல்வாதிகள் ஆரம்பத்தில் சிறு உதவிகள் செய்த போதும் மேற்கொண்டு இந்த பாதையை புனர்நிர்மானம் செய்ய வேண்டிய தேவை இருப்பதால் ஒரு முறையாவது எமது பிரதேசத்திற்கு வந்து இந்த அவல நிலையை பார்வையிடவேண்டும்.

மழைக்காலம் என்பதால் அவசரமாக இந்த வீதியை கிரவல் கொண்டு செப்பனிட இருப்பதால் முடிந்தவர்கள் உதவி புரிந்து வடமராட்சி கிழக்கு மக்களின் உயிர் கேடயமாக காணப்படும் கொடுக்குளாய்-இயக்கச்சி பாதையை புனரமைப்பு செய்து தருமாறும் கேட்டுக் கொண்டார்.

https://thinakkural.lk/article/311269

பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே ஜே.வி.பி முன்னெடுப்பதாக பொ. ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

3 weeks 3 days ago

பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே ஜே.வி.பி முன்னெடுப்பதாக பொ. ஐங்கரநேசன் குற்றச்சாட்டு
October 28, 2024

 

ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன்   கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்சியை நடாத்தியிருந்தனர்.

இதனை ஏற்பாடு செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன நல்லிணக்கத்தைச் சகிக்கமுடியாத ஜே.வி.பியினர் புத்தபிக்குகள் சகிதம் ஊர்வலமாக வந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். தமிழர்கள்மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழ் மக்களே ஆதரிப்பது அரசியல் மடைமைத்தனமாகும்

மார்க்சியம் இன மத மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் ஒரு தத்துவம் ஆகும். ஆனால் ரோகண விஜயவீராவின்  மறைவுக்குப் பின்னர் ஜே.வி.பி ஏனைய சிங்களக்  கட்சிகளைப் போன்றே முற்றுமுழுதாக பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியாக மாறிவிட்டது.

இந்திய – இலங்கை ஒப்பந்த காலப் பகுதியில் அதனை ஆதரித்தமைக்காக சந்திரிகா அம்மையாரின் கணவர் விஜய குமாரதுங்காவின் ஆதரவாளர்கள் பலரையும் விக்கிரமபாகு கருணரட்னவின் ஆதரவாளர்கள் பலரையும் தம் இனம் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள் தான்.

தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் துண்டாடியவர்கள் இவர்கள்தான். விடுதலைப் புலிகளை அழித்ததில் அமெரிக்காவின் பங்களிப்புக்காக அமெரிக்கத் தூதரகம் சென்று கைகுலுக்கியவர்களும்  இவர்கள்தான்.

ஜே.வி.பி இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகமூடியுடன் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுவருகிறது. ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சாக்களின் மீதும் ரணில் தரப்பின் மீதும்  சிங்கள மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு தென்னிலங்கையில் அரசியல் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த மாற்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரப்போவதில்லை. படித்தவர்கள் சிலர்கூட இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்க் கட்சிகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்புக் காரணமாக ஜே.வி.பியை ஆதரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

அமைச்சர் பதவிக்காகத் தமிழ் மக்களை ஜே.வி.பியிடம் அடகு வைப்பதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு ஜே.வி.பியை வடக்கு கிழக்கில் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

https://www.ilakku.org/பௌத்த-சிங்கள-பேரினவாத-நி/

மன்னார் மாவட்டத்தில் முதலாவது நீர் விநியோகம் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்

3 weeks 3 days ago

image

மன்னார் மாவட்டத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் வினியோகமானது இன்று திங்கட்கிழமை (28)காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பெரும் போகத்திற்கு 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் முதலாவது நீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட மாகாணத்தில் 2 வது பெரிய குளமான முருகன் கட்டுக்கரை குளம் பெரிய உடைப்பு துருசு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில்  நீர்ப்பாசன பணிப்பாளர், முருங்கன் கட்டுக்கரை குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் , அரசாங்க திணைக்கள அதிகாரிகள் வாய்க்கால் அமைப்பு பிரதிநிதிகள் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போது கட்டுக்கரை குளத்தில் 8.3 அடி நீர் காணப்படுகிறது.மேலும் கட்டுக்கரை குளத்திற்கு நீர்வரத்து காணப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய முதலாவது நீர் வினியோகமானது இன்றையதினம்  இடம் பெற்றுள்ளது.

WhatsApp_Image_2024-10-28_at_2.50.01_PM.

WhatsApp_Image_2024-10-28_at_2.50.03_PM.

WhatsApp_Image_2024-10-28_at_2.50.02_PM_

WhatsApp_Image_2024-10-28_at_2.50.08_PM.

https://www.virakesari.lk/article/197330

தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி

3 weeks 3 days ago

ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்சியை நடாத்தியிருந்தனர்.

இதனை ஏற்பாடு செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன நல்லிணக்கத்தைச் சகிக்கமுடியாத ஜே.வி.பியினர் புத்தபிக்குகள் சகிதம் ஊர்வலமாக வந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். தமிழர்கள்மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழ் மக்களே ஆதரிப்பது அரசியல் மடைமைத்தனமாகும்

மார்க்சியம் இன மத மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் ஒரு தத்துவம் ஆகும். ஆனால் ரோகண விஜயவீராவின் மறைவுக்குப் பின்னர் ஜே.வி.பி ஏனைய சிங்களக்  கட்சிகளைப் போன்றே முற்றுமுழுதாக பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியாக மாறிவிட்டது.

இந்திய – இலங்கை ஒப்பந்த காலப் பகுதியில் அதனை ஆதரித்தமைக்காக சந்திரிகா அம்மையாரின் கணவர் விஜய குமாரதுங்காவின் ஆதரவாளர்கள் பலரையும் விக்கிரமபாகு கருணரட்னவின் ஆதரவாளர்கள் பலரையும் தம் இனம் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள் தான்.

தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் துண்டாடியவர்கள் இவர்கள்தான். விடுதலைப் புலிகளை அழித்ததில் அமெரிக்காவின் பங்களிப்புக்காக அமெரிக்கத் தூதரகம் சென்று கைகுலுக்கியவர்களும்  இவர்கள்தான்.

ஜே.வி.பி இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகமூடியுடன் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுவருகிறது. ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சாக்களின் மீதும் ரணில் தரப்பின் மீதும்  சிங்கள மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு தென்னிலங்கையில் அரசியல் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த மாற்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரப்போவதில்லை. படித்தவர்கள் சிலர்கூட இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்க் கட்சிகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்புக் காரணமாக ஜே.வி.பியை ஆதரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

அமைச்சர் பதவிக்காகத் தமிழ் மக்களை ஜே.வி.பியிடம் அடகு வைப்பதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு ஜே.வி.பியை வடக்கு கிழக்கில் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/311246

இலங்கை சுவிட்சர்லாந்து அல்ல என்பதை பிரதமர் புரிந்துகொண்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்; பிரமித்த பண்டார தென்னக்கோன்

3 weeks 3 days ago
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வீதி தடைகளையும் பாதுகாப்பு அரண்களையும் நீக்கி, பாதுகாப்பு  காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த வீதிகளை திறந்து விட்டுள்ளதன் மூலம் நாடு பாதுகாப்பான நிலையில் இருப்பதாக அரசாங்கம் நினைக்கக்கூடாது. பாதுகாப்பு அரண்களை அகற்றுவதாக இருந்தால் நாட்டின் புலனாய்வு துறையை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும்.

அத்துடன் இந்த நாடு சுவிசர்லாந்து அல்ல என்பதை பிரதமர் புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (27)  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரத்துக்கு வந்ததுடன் நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, பல வருட காலமாக மூடப்பட்டிருந்த வீதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்கள் அகற்றப்பட்டன.

இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதியாகி இருப்பதாக அரசாங்கம் சிறுபிள்ளைத்தனமாக நினைத்துவிடக்கூடாது. தேசிய பாதுகாப்பு என்பது மிகவும் விஸ்தீரமானதாகும்.

அதனால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்த வீதிகளை மீண்டும் திறப்பதாக இருந்தால் எமது புலனாய்வு துறையை பலப்படுத்த வேண்டும். அவர்களின் மன நிலையை உயர்ந்த மட்டத்தில் வைக்க வேண்டும்.

ஆனால் எமக்கு கிடைத்த தகவலுக்கமைய எமது  புலனாய்வு துறையினரின் மன நிலை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

புலனாய்வு பிரிவின் பிரதானி ஜெனரல் சுரேஸ் சலேயை அந்த பதவியில் இருந்து உடனடியாக நீக்கி இருப்பது குறித்து நாங்கள் ஆச்சரியமடைகிறோம்.

முக்கியமான பதவியில் இருக்கும் ஒருவரை அவ்வாறு திடீரென நீக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. அவருடன் தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும், அவருக்கு அடுத்தபடியாக அந்த பதவிக்கு வர இருப்பவருக்கு.

அவரின் அனுபவங்களை பெற்றுக்கொள்ள சிறிதுகாலம் அந்த பதவியில் அவரை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டிருந்தால், அறுகம்பே சம்பந்தமான நிலை ஏற்பட்டிருக்காது.

தனிப்பட்ட விடயங்களுக்காக நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்காெள்கிறோம். அத்துடன் எமது நாடு சுவிட்சர்லாந்து அல்ல.

அதனால் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என பாதுகாப்பு பிரிவினர் பிரதமருக்கு தெரிவித்ததாக பிரதமர் தெரிவித்திருந்தார். இந்த நாடு சுவிட்சர்லாந்து அல்ல என்பதை பிரதமர் புரிந்துகொண்டதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஏனெனில் அவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் பிரபுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு  தொடர்பாகவும் அந்த பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், பாதுகாப்புக்காக செல்லும் வாகனம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்கள். 

ஆனால்  அந்த பதவிக்கு வந்த பின்னர் அந்த பாதுகாப்பு வழங்கப்படுவது நபருக்கு அல்ல, அந்த பதவிக்கு என்பதை தற்போது பிரதமர் புரிந்துகொண்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எங்களுக்கு எப்படிவேண்டுமானாலும் கதைக்கலாம். ஆனால் ஆட்சி செய்யும்போது, பல்வேறு வரையறைகளுக்கு உட்பட்டே நாங்கள் செயற்பட வேண்டும் என்பதை மக்கள் விடுதலை முன்னணி தற்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/197348

இலங்கையில் ஹேக் செய்யப்படும் வட்ஸ்அப் கணக்குகள் ; மக்களே எச்சரிக்கை

3 weeks 3 days ago

image

இலங்கையில் அதிகளவில் வட்ஸ் அப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. ஹேக்கர்கள் சரிபார்ப்பு குறியீட்டு இலக்கத்தின் (verification code) மூலம்  வட்ஸ் அப் கணக்கை ஹேக் செய்து உள்நுழைந்து தொலைபேசி தொடர்பு விபரங்களை பெற்றுக் கொள்கின்றனர்.

அண்மையில் இவ்வாறான சம்பவங்களுக்கு பலர் முகம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எதிர்பாராமல் வட்ஸ் அப் ஊடாக ஒரு தெரிந்த நபர்களிடம் இருந்து சரிபார்ப்பு குறியீட்டு இலக்கம் (verification code) அனுப்பப்படுகிறது.

ஹேக்கர்கள் வட்ஸ் அப் ஊடாக தொடர்பு கொண்டு நண்பர்களாகவோ அல்லது அறிமுகமானவர்களாகவோ தம்மை காட்டுடிக்கொண்டு சரிபார்ப்பு குறியீட்டு இலக்கத்தை கோருகின்றார்கள். அந்த இலக்கத்தை கோரும் நபருக்கு ஒரு முறை அனுப்பியதும் வட்ஸ் அப் கணக்கு ஹேக் செய்யப்படுகிறது.

வட்ஸ் அப் கணக்கு ஹேக் செய்யப்பட்ட  கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர்  தெரிவிக்கையில், 

எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் மனைவியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டார். மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்ட பிறகு, அவள் தவறுதலாக ஒரு குறியீட்டை தனக்கு அனுப்பியதாகவும், அது மீண்டும் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார். இது உண்மையானது என கருதி, குறியீட்டைப் பகிர்ந்து கொண்டேன்.  பின்னர் எனது வட்ஸ்அப் கணக்கு உடனடியாக ஹேக் செய்யப்பட்டது.

எனது வட்ஸ் அப் கணக்கிலுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர். அதாவது,  தான்  நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறி சிறிய தொகை பணத்தை கோரியுள்ளனர். இவ்வாறு அனுப்பப்பட்ட  குறுஞ்செய்தியை பார்த்த நண்பர் ஒருவர்  நான் நிதி நெருக்கடியில் உள்ளேனா என்பதை அறிய எனது மனைவியை தொடர்பு கோட்டு விசாரித்துள்ளார்.

இந்நிலையில், பலமுறை ஹேக் செய்யப்பட்ட வட்ஸ்அப்பை மீண்டும் நிறுவிய போதிலும், 72 மணிநேரமாகியும்  என்னால் அணுகலை மீண்டும் பெற முடியவில்லை. பின்னர்  பொலிஸ் நிலையத்திரல் முறைப்பாடு செய்து வட்ஸ் அப் உதவியை (WhatsApp support) நாடியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில், தடயவியல் சைபர் மோசடி நிபுணர்கள் ஹேக்கர்கள் பயன்படுத்தும் இரண்டு-படி முறையை விளக்கினர்.

அதாவது,  முதலில், அவர்கள் சரிபார்ப்புக் குறியீடு மூலம் பயனரின் வட்ஸ்அப் கணக்கை அணுகுவார்கள். பின்னர் நிதி உதவிக்கான கோரிக்கைகளுடன் பயனரின் தொலைபேசி இலக்கங்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் 50,000 முதல் 100,000 ரூபாய் வரை அனுப்பியதாகத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறே அரசியல்வாதிகளான முஜிபுர் ரஹ்மான் மற்றும் பசீர் சேகுதாவுத் ஆகியோரின் வட்ஸ் அப் கணக்கு இலக்கங்கள் ஹேக்கர்களால் ஹக் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/197324

இலங்கையின் நிலபரப்பில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

3 weeks 3 days ago

இலங்கையின் நிலப்பரப்பு விரிவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக நில அளவையாளர் நாயகம் W.சுதத் எல்.சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

கடலாக இருந்த துறைமுக நகரம் தற்போது நிலமாக மாறி, நாட்டின் எல்லைக்குள் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலின் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சொந்தமான அனைத்து நிலப்பரப்புக்களையும் உள்ளடக்கிய வகையில் புதிய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வரைபடம்

சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கை வரைபடம் ஒன்று முதல் 50 ஆயிரம் வரையிலான அளவையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நிலபரப்பில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம் | Sri Lanka New Land Space Map 2024

நில அளவைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் ஆய்வுகளின் மூலம் இலங்கையின் வரைபடங்கள் இற்றைப்படுத்தப்படுகின்றன.

கடந்த காலங்களில் மஹியங்கனை வீதியின் இருபுறமும் வனப்பகுதியாக காணப்பட்டது.

செயற்கைக்கோள் தொழில்நுட்பம்

எனினும் தற்போது சில பிரதேசங்கள் குடியேற்றப்பட்டு, கிராமங்களும், நகரங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நிலபரப்பில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம் | Sri Lanka New Land Space Map 2024

இலங்கையின் புதிய வரைப்படம் தயாரிப்புக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக, நில அளவையாளர் நாயகம் சுதத் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/sri-lanka-new-land-space-map-2024-1730081112#google_vignette

லண்டனிலிருந்து உறவினரை பார்க்க வந்தவர் திடீரென உயிரிழப்பு

3 weeks 3 days ago

image

லண்டனிலிருந்து உறவினரைப் பார்க்க வந்தவர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு திடீரென உயிரிழந்துள்ளார்.

கணேசராசா தியாகராசா (வயது-56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டிலுள்ள உறவினரைப் பார்ப்பதற்காக லண்டனிலிருந்து வந்த இவர், கடந்த 17ஆம் திகதி பேருந்தில் சென்றுள்ளார்.

பேருந்தில் மயங்கிய நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, நேற்றுக் காலை (27) உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/197314

அரசப் புலனாய்வுத் துறையின் மீது அஸாத் மௌலானா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது

3 weeks 3 days ago
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையானின் சகாவான அஸாத் மௌலானா தொடர்பில் வெளியான தகவல்

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் (28.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரச புலனாய்வுத் துறையினர் திட்டமிட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்தியதாக 'செனல் 4' சுட்டிக்காட்டியிருந்தது.

அரசியல்வாதிகளின் கடமை

'செனல் 4' என்பது தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்த ஜக்கிய இராச்சியத்தின் ஒளிப்பரப்புக் கூட்டுத்தாபனம் என்பதோடு அது இதுவரை காலமும் இலங்கைக்கு எதிரான அணுகுமுறைகளையும் கடைப்பிடித்து வந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இராணுவம் தவிர கோட்டாபய இராஜபக்ச மீதும் செனல் 4 பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அவை இப்போது நமக்கு தேவையில்லை.

கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நாம் முன்வைத்தமைக்காக அவர் என்னையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவையும் அமைச்சரவையிலிருந்து துரத்தியதோடு அவர் எழுதிய புத்தகத்திலும் எங்களை சாடியிருந்தார். ஆகவே, அவரை காப்பாற்ற நாம் முன்வர மாட்டோம்.

எனினும், நாட்டினுடைய உளவுத்துறையினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அவர்களை காப்பாற்றுவது அந்நாட்டினுடைய அரசியல்வாதிகளின் கடமையாகும்.

பொய்யான குற்றச்சாட்டு

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே மற்றும் சஹ்ரான் ஆகியோர் புத்தளத்தில் உள்ள சஹ்ரானின் வீட்டில் வைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டதாக அஸாத் மௌலானா எனப்படுபவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் குறித்த வீட்டை சோதனையிட்ட போது, வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையானின் சகாவான அஸாத் மௌலானா தொடர்பில் வெளியான தகவல் | Udaya Gammanpila On Channel 4 Easter Attack Video

இதன்போது, கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 2018ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலேயே இந்த வீடு கட்டப்பட்டதாக தெரியவந்தது.

எனவே, அரசப் புலனாய்வுத் துறையின் மீது அஸாத் மௌலானா முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என இதிலிருந்து தெரிய வருகின்றது” எனக் கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/udaya-gammanpila-on-channel-4-easter-attack-video-1730095618#google_vignette

ஜனநாயக பெண் போராளி வேட்பாளர் தவமணி காட்டம்!

3 weeks 3 days ago
ஜனநாயக பெண் போராளி வேட்பாளர் தவமணி காட்டம்!
October 28, 2024
 

மக்களுக்காக அன்று யுத்தத்தில் களம் ஆடினோம். இன்று 15 வருடங்களுக்கு பிறகு அதே மக்களுக்காக ஜனநாயக வழியில் அரசியலில் களமாட பிரவேசித்திருக்கின்றோம். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

இவ்வாறு
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அம்பாறை மாவட்டம் சார்பாக சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர் சுப்பிரமணியம் தவமணி தெரிவித்தார் .

காரைதீவைச் சேர்ந்த அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில் …

அன்று அகிம்சை வழியில் போராடினோம் .பின்பு ஆயுத வழியில் போராடினோம்.இன்று அரசியல் போராட்டம் இடம்பெறுகின்றது.

தென் இலங்கையில் அன்று ஆயுதம் தாங்கிய போராட்டம் இன்று அரசியல் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றது அவரே நாட்டின் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார்..
அதேபோல் நாமும் ஆயுத போராட்டத்தில் களமாடிய நாம் இன்று அதே மக்களுக்காக அரசியல் களம் ஆட வந்திருக்கின்றோம். எனவே வெற்றி நிச்சயம்.

தாயகம் தேசியம் சுயநிர்ணயஉரிமை போன்ற தாரக மந்திரங்களை எதிர்கொண்டு இந்த தேர்தலில் நாங்கள் இறங்கி இருக்கின்றோம் .
பெண்கள் சிறுவர் வயோதிபர் உரிமைக்காக நாம் போராடி இருக்கின்றோம்.

வருடாவருடம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையில் மகளிருக்கு இதுவரை விடுதலை கிடைக்கவில்லை. வீட்டிலும் வன்முறை நாட்டிலும் வன்முறைகள்.
உரிமைகள் இல்லை. பெண்களுக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கின்றதோ அன்றுதான் உண்மையான மகளிர் தினம்.

நான் ஒரு போராளி. மேலும் ஒருமாற்றத் திறனாளி.
மாற்றுத்திறனாளிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று பல அரிசியல்கட்சியிடமும் கேட்டோம்.
ஆனால் யாரும் கணக்கெடுக்கவில்லை
.
விசேட தேவை உள்ளவர்கள் நிச்சயமாக அரசியல் ஈடுபட வேண்டும். நான் அதற்கு ஒரு முழு உதாரணமாக இருக்கின்றேன் .
எனவே அம்பாறை மாவட்டத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் என்னை ஆதரித்து பாராளுமன்ற உறுப்பினர் ஆக்க வேண்டும் .

பெண்கள் அரசியலில் முன்வர வேண்டும். 52% வாக்களிக்க தகுதி உள்ள பெண்களுக்கு அரசியலில் சம உரிமை வழங்கப்படவில்லை. எனவே எனக்கு பின்னால் அடுத்தடுத்த தேர்தலில் வர இருக்கின்றன .அதற்கு கட்டாயம் நீங்கள் கைகோர்க்க வேண்டும்.

அன்று எதையும் எதிர்பாராமல் மக்களுக்காக நாங்கள் களத்தில் போராடினோம்.
அதேபோல் இன்று அரசியலில் அதே மக்களுக்காக ஒரு அங்கீகாரத்தை கேட்டு நிற்கின்றோம் .
நாங்கள் மக்களுடைய சேவை செய்வோம். அரசியல் பெண்கள் ஈடுபட வேண்டும். மக்கள் மீதும் தேசியத்தின் மீதும் நம்பிக்கை வைத்து பெண்கள் முன்வராதது கவலை அளிக்கின்றது. சமூகத்துடன் சேவை செய்யும் நான் அரசியலுக்கு வந்திருக்கின்றேன். எனது இலக்கம் எட்டு. என்னை ஆதரித்து பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள்.
உங்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்று தருவேன்.

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ் வாக்குகளை பிரிக்காமல் ஐந்து கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றோம்.

ஜனநாய போராளிகள் கட்சி சார்பாக நான் எட்டாம் இலக்கத்தில் போட்டியிடுகின்றேன்.நம் மக்களின் நலனுக்காக களமாடிய பெண்களில் நானும் ஒருவள். அங்கவீனமான நிலையிலும் எமது தமிழ் மக்களின் நலனுக்காக இன்று தேர்தல் களத்தில் ஒரு பெண்ணாக போட்டியிடுகின்றேன். பெண்களுக்கான அங்கிகாரம் கிடைக்க பெண்கள் பக்கபலமாக செயற்பட வேண்டும்.
சமூகத்தின் முதுகெலும்பான பெண்கள் சமூக முன்னேற்ற செயற்பாடுகளில் முன்னுக்கு வர வேண்டும். ஆகவே அம்பாறை மாவட்ட தமிழ் பெண்கள் ஒற்றுமையாக சங்கு சின்னத்திற்கும் எனது இலக்கமான 08 க்கும் வாக்களிக்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.

அம்பாறை மாவட்ட தமிழர்களின் நலனில் அக்கறை இல்லாமல் தனித்தனியாக போட்டியிடும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

 

https://www.supeedsam.com/208095/

நாடாளுமன்றத்  தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது: சிங்கள மக்களின் கருத்து…

3 weeks 3 days ago

நாடாளுமன்றத்  தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது: சிங்கள மக்களின் கருத்து…
October 28, 2024

 

வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தல் தொடர்பில் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து,  இலக்கு ஊடகத்திற்காக சில சிங்கள சகோதர்கள் வழங்கிய சிறப்பு செவ்வி…. (சிங்கள மக்களின் கருத்துக்களை அறியும் நோக்கில் இச் செவ்வி எடுக் கப்பட்டது)

‘வங்குரோத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி…’

எம்.ஜி..சமரவிக்கிரம,

சமூக செயற்பாட்டாளர், கண்டி.

இலங்கைக்கு இது தேர்தல் வருடமாகும்.இவ்வருடத்தில் முக்கியமான இரண்டு தேர்தல்கள் இடம்பெறுகின்றன.ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்த மாதம் 14 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத்தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.இத்தேர்தல் குறித்த பிரசார நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் பாராளுமன்றத்தில் அதிகரித்த பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளும் முனைப்புடன் காய் நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றன.

ஏற்கனவே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.இது ஒரு வரலாற்று சாதனை என்றால் மிகையாகாது.’நாடு இக்கட்டான தருணத்தில் இருக்கும் போது எனது சகோதரர் ஒருவர் ஆட்சிக்கு வரு வார்” என்று நீண்ட  காலத்துக்கு முன்னதாகவே மக்கள் விடுதலை முன்னணி யின் முன்னாள் தலைவர் றோஹண விஜேவீர கூறிய கருத்து இன்று மெய்ப் பிக்கப்பட்டிருக்கின்றது.இது ஒரு நல்ல சகுனமாகும்.ஜனாதிபதி அநுரவின் ஆட்சியில் ஊழல்கள், துஷ்பிரயோகங்கள் என்பன ஒழிக்கப்பட்டு நாடு அபிவிருத்திப் பாதையில் பயணிக்கும் என்று நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.இந்த நம்பிக்கை பலன் தரும் என்று கருதுகிறேன்.

இதனடிப்படையில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க சார்ந்துள்ள தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றிபெறும் என்ற நம்பிக்கை பரவலாக எதிரொலிக்கின்றது.இதற்கேற்ப சுமார் 130 ஆசனங்களை அக்கட்சி பெற்று அளப்பரிய சாதனை படைப்பது திண்ணமாகும்.இந் நிலையானது நாட்டில் பல சாதக விளைவுகள் ஏற்படுவதற்கு அடித்தளமாகும்.பாராளுமன்றம் சிறந்த பல சட்டமூலங்களை உருவாக்கி நாட்டில் நிலவும் தீய கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் களுக்கான வரப்பிரசாதங்கள் குறைக்கப்படும் நிலையில் மக்கள் இதனால் நன்மையடைவார்கள்.நாட்டில் கடந்த காலத்தில் நிலவிய வங்குரோத்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதோடு கடன் சுமையும் குறைவடையும் என்று திடமாக நம்பலாம்.

‘சிறுபான்மை கட்சிகள் தேர்தலில்  மண் கவ்வும்’

எஸ்.எஸ்.குடாபண்டார, 

ஓய்வு பெற்ற தலைமைக் கணக்காளர், நுவரெலியா.

நான் ஒரு பெரும்பான்மை இனத்தவனாக இருக்கின்றேன். இலங்கை நாட்டில் ஒரு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவன் என்று கூறிக்கொள்வதில் நான் பெருமையடைகின்றேன். இந்நிலையில் பெரும் பான்மை மக்கள் அனுபவிக்கின்ற உரிமைகள் மற்றும் சலுகைகளுக்கு நிகராக சிறுபான்மை மக்களும் உரிமைகள் சலுகைகள் எனப் பலவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.எந்தவொரு இனத்துக்கும் பாரபட்சம் காட்டப்படலாகாது.எல்லோரும் ‘இலங்கையர்’ என்ற பொது வரையறைக்குள் நோக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

எனினும் இம்முறை தேர்தல் சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.இத்தேர்தல் சிறுபான்மை கட்சிகளை மண் கவ்வச் செய்யும் நிலையே மேலோங்கி காணப்படுகின்றது.தேசிய மக்கள் சக்தியின் அலை இப்போது நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றது.

இந்நிலையில் இந்த அலைக்கு ஏற்ப வாக்கு வங்கியிலும் கணிசமான அதிகரிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரவின் தேசிய மக்கள் சக்தி 57,40,179 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட நிலையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா சாவை சார்ந்த ஐக்கிய மக்கள் சக்திக்கு 45,30,902 வாக்குகள் கிடைத்தன.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் 22,99,767 வாக்குகளைப் பெற்றுக் கொண்டமை தெரிந்ததாகும்.

இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் வாக்குகள் பல மடங்கு சரிவடையக் கூடும் என்று நம்பப்படுகின்றது.அத்தோடு தேசிய மக்கள் சக்தியின் வாக்குகள் அதிகரிக்கும்.இது பாராளுமன்ற பிரதிநிதித்துவ அதிகரிப்பிற்கும் வழிசமைக்கும்.

எவ்வாறெனினும் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும் பான்மையை பெற்றுக் கொள்ளக் கூடாது.அப்படி பெற்றுக் கொள்ளுமிடத்து இது பாதக விளைவுகள் பலவற்றுக்கும் அடித்தளமாக அமைந்துவிடும்.சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டு நிற்கின்றனர்.தங்களுக்குள் யார் பெரியவர் என்று போட்டி போட்டுக் கொண்டு பிழையான செயற்பாடுகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த முரண்பாட்டு நிலையானது பெரும்பான்மை கட்சிகளுக்கு வாய்ப்பாக போய் விடுகின்றது.

இந்த நாட்டில் பல்லின மக்கள் வாழுகின்றனர்.பன்மைக் கலாசாரம் இங்கு காணப்படுகின்றது.ஒரு கொத்தில் தனி ஒரு மலர் இருப்பதைக் காட்டிலும் பல மலர்கள் சேர்ந்திருப்பதே அழகாகும்.இந்த வகையில் இலங்கை மாதாவிடத்தில் எல்லா இனங்களும் பல்வகைமை கலாசாரத்தோடு இணைந்து வாழ்வதே அழகாகும்.இதற்கு அடித்தளமிடும் வகையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும்.இனவாதம் மற்றும் மதவாதத்தால் ஏற்கனவே இலங்கை தேசத்தின் தேகத்தில் தழும்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.இதனை எவரும் மறந்து செயற்படுதல் கூடாது.

‘கடனால் சூழப்பட்ட தீவு’

கே.கே.என்.நந்தகுமார, 

செயற்றிட்ட  ஒருங்கிணைப்பாளர், பொலன்னறுவை.

கடந்தகால ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற அரசியல் நடவடிக்கைகள் காரணமாக நாடு இப்போது கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றது.இதற்கும் மத்தியில் இரண்டு தேர்தல்கள் இந்த ஆண்டில் நடக்கின்றன.இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 2025 ம் ஆண்டின் முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.அத்தோடு இந்தியா அதிகாரப்பகிர்விற்கு வலுவூட்டும் வகையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.எனினும் இது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

‘ கடலால் சூழப்பட்ட இலங்கை இப்போது கடனால் சூழப்பட்ட’ ஒரு நாடாக மாற்றம் பெற்றுள்ளதாக விமர்சனங்கள் மேலெழுந்து வரு கின்றன.இதற்கும் மத்தியில் அடிக்கடி தேர்தல்கள் இடம்பெறுவது நாட்டிற்கு உகந்ததல்ல.நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து மேலும் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்வதாகவே இது அமையும்.எனவே தேர்தல்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததன் பின்னர் மக்களின் தேவைகளை புறந்தள்ளி அவர்களை கைகழுவி விடும் நடவடிக்கைகளே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இதனாலேயே பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கனுப்ப வேண்டும் என்று பொதுமக்களின் குரல் கடந்த காலத்தில் ஓங்கி ஒலித்தது.

இம்முறை தேர்தலில் இது முழுமையாக சாத்தியமாகாவிட்டாலும் நூற்றுக்கு 75 வீதமானவர்கள் இம்முறை பாராளுமன்றத்தில் புதிய முகங்களாகவே இருக்கப்போகின்றனர்  என்பது மட்டும் உண்மையாகும்.அத்தோடு முன்னைய பாராளுமன்ற உறுப்பினர் பலர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியுள்ளனர்.88 வருட தேர்தல் வரலாற்றினைக் கொண்ட ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் எவரும் இத்தேர்தலில் போட்டியிடாததும் ஒரு சிறப்பம்சமாகும்.

அத்தோடு சமகாலத்தில் நடைமுறையில் உள்ள விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை 1978 ம்  ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியல் அமைப்பின் ஊடாக முன்வைக்கப்பட்டது.விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை சிறு பான்மையினரின் பிரதிநிதித்துவ இருப்பினை பாதுகாத்துள்ளது.இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறுமிடத்து புதிய அரசியல் யாப்பினை முன்வைக்கப் போவதாக கூறிவருகின்றது.

இதன் மூலம் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையிலும் மாற்றங்கள் ஏற்படும்.புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுமிடத்து அது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ வீழ்ச்சிக்கும் ஏதுவாகலாம்.இதனை புரிந்து கொண்டு சகல சிறுபான்மை கட்சிகளும் புரிந்துணர்

வின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.முரண்பாடுகளையும் சுயநலவாதங் களையும் மூட்டை கட்டி வைத்து விட்டு சமூகநலன் கருதி ஐக்கியத்துடன் எதிர்வரும் பாராளு மன்றத் தேர்தலை சந்திக்க சகலரும் முன் வருதல் வேண்டும்.

‘அரசியலில் திருப்பு முனை’

ஏ.ஜே.ஆர்.அழகக்கோன், 

அரகலய போராட்டக்காரர், கொழும்பு.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரகலய போராட்டத்தினை நாம் மறந்தோ அல்லது மறுத்தோ செயற்பட முடியாது.இப்போராட்டம் பல்வேறு விடயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததுடன் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினையும் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தது.இதேவேளை அரகலய போராட்டத்தின் காரணமாக பல கூட்டுக் கட்சிகளின் இணைப்பான தேசிய மக்கள் சக்தி தன்னை பலப்படுத்திக் கொண்டது.இதன் எதி ரொலியே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பக்கபலமானது.

அரகலய என்னும் இளைஞர் எழுச்சியில் கவரப்பட்ட இளைஞர்கள் கொள்கைக்காக போராடினர்.இந்தப் போராட்டம் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரும் களமிறங்கியுள்ளனர்.இவர்கள் இத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு அது ஒரு வாய்ப்பாகவும் திருப்பு முனையாகவும் அமையும்.

இளைஞர்களிடத்தில் ஒரு தூரநோக்கு காணப்பட்டது.ஒளிமயமான நாட்டை கட்டி யெழுப்பும் நோக்கில் இன, மத, மொழி வேறுபாடுகளை மறந்து அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கை கோர்த்திருந்தனர்.இது சகலரிடத்திலும் அவர்கள் குறித்து ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்தி இருந்தது.இந்த ஈர்ப்பின் வெளிப்பாட்டினை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் காண முடியும்.நாட்டின் இளைஞர்கள் பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபட்டு புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.மலையக இளைஞர்களும் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை.இந்நிலையானது கணிசமான மாற்றத்தை சகல துறைகளிலும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

அத்துடன் தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை நடை முறையில் உள்ளது.இது சாதக மற்றும் பாதக விளைவுகளை நாட்டில் ஏற்படுத்தி வருகின்றது.இதனிடையே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைத்து பாராளுமன்றத்தை பலப்படுத்துகின்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற கோஷங்கள் அதிகரித்து வருகின்றன.எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து இதற்கான அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இதன் சாத்தியப்பாடுகள் தொடர்பில் பொறுத் திருக்க வேண்டியுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக பலமான எதிர்க்கட்சி ஒன்று உருவாக வேண்டும்.இது ஜனநாயகத்தின் உறுதிப்பாட்டுக்கு உந்துசக்தியாக அமையும்.இதை விடுத்து தனியொரு கட்சி பெரும்பான்மையை பெற் றுக் கொள்ளுமிடத்து அது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்குவதோடு சர்வாதிகாரம் மேலோங்குவதற்கும் வழிகுப்பதாகவே அமையும்.கூட் டுக் கட்சிகளின் பங்களிப்புடன் ஆட்சியமைக்கப் படுவதே சிறந்ததென கருதுகின்றேன்.

 

 

https://www.ilakku.org/நாடாளுமன்றத்-தேர்தல்-ச/

பிரதமர் ஹரிணி அமரசூரிய வடக்குக்கு வருகை!

3 weeks 3 days ago

பிரதமர் ஹரிணி அமரசூரிய வடக்குக்கு வருகை!
October 28, 2024
harini_26_09_2024-1000x600-1-696x418.jpg

பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி பிரதமர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார்.

நாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கவே அவர் வடக்குக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://eelanadu.lk/பிரதமர்-ஹரிணி-அமரசூரிய-வ/

வடக்கு கிழக்கில் அநுர அலையும் சுமந்திரனும்!

3 weeks 3 days ago

வடக்கு கிழக்கில் அநுர அலையும் சுமந்திரனும்!
October 28, 2024
 

இன்று நடைமுறையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ‘தலைவராக’ செயல்பட்டுக் கொண்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் நேற்றைய தினம் கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அநுர அலை ஒன்று வீசுவதாகவும் அது ஆபத்தானது என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்’, என்று கூறியிருக்கிறார். ‘தங்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் அதிகாரத்தை தமிழ் மக்கள் எங்களுக்கே தரவேண்டும். அநுர அலையை அடியோடு அகற்றிவிட வேண்டும்.

தமிழ் அரசு கட்சியை ஓர் அணியாக – பேரம்பேசும் சக்தியாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவதன் மூலமாகவே தமிழ் மக்கள் தங்களது இலக்குகளை அடையமுடியும். அதற்கான ஆணையை எமது மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது’, என்றும் அந்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு முதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரவேசம் செய்த சுமந்திரன் பிறகு இரு பாராளுமன்ற தேர்தல்களில் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு இதுவரையில் பதினான்கு வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார்.

இந்தத் தடவை பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக இல்லாமல் தமிழ் அரசு கட்சியின் வேட்பாளராகவே அவர் களமிறங்கியிருக்கிறார். இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ்க் கட்சிகள் பலவாறாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிடுகின்ற போதிலும், அவற்றிடையே சுமந்திரனைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஓர் ஒற்றுமை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை, சுமந்திரன் தோல்வியடைய வேண்டும் என்ற ஓர்மத்துடனும் பலர் இருக்கிறார்கள். உண்மையில், இந்தத் தேர்தலில் அவர் முன்னென்றும் இல்லாத வகையிலான சவாலை எதிர்நோக்குகிறார் என்பதில் சந்தேகமில்லை.

வெவ்வேறாகப் பிரிந்து தேர்தல் களத்தில் நின்றாலும் மனதளவில் தனக்கு எதிராக ஒற்றுமைப்பட்டு நிற்கும் மற்றைய தமிழ்க் கட்சிகளிடமிருந்து வரக்கூடிய சவாலைப் பற்றி பேசாமல் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியே தங்களுக்கு பெரிய சவாலாக இருப்பது போன்று சுமந்திரன் நேர்காணலில் கருத்து தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ந்து வருகிறது என்பது உண்மையே.

அதை சுமந்திரன் கூறியிருப்பதைப் போன்று ஓர் ‘அநுர அலை’ என்று வர்ணிப்பது எந்தளவுக்கு பொருத்தமானது என்பது ஒரு முக்கியமான கேள்வி. தங்களிடம் வாக்குக் கேட்டு வரும் தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களிடம் தமிழ் மக்கள் ‘நாங்கள் இந்த முறை திசைகாட்டிக்குத்தான் வாக்களிக்கப் போகிறோம்’ என்று கூறுவதாக அறியமுடிகிறது. ஜனாதிபதி அநுரவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருக்கிறது என்று பரவலாகப் பேசப்படுகிறது.

தெற்கில் மக்கள் காண விரும்பும் மாற்றத்துக்கு ஆதரவாக வடக்கு மக்கள் வாக்களிப்பதே விரும்பத்தக்கது என்ற தொனியில் ஜனாதிபதி தேர்தலின்போது அநுர பேசியதை தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் இனவாதத்தை அவர் தூண்டுவதாக ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியபோது அதை மறுதலித்து, ‘அநுர இனவாத நோக்கத்துடன் அவ்வாறு கூறவில்லை’, என்று அவருக்காக ஓடிச்சென்று முதலில் குரல் கொடுத்தவர் சுமந்திரன். இப்போது அவர் அதே அநுர அலையைத் தடுத்தேயாக வேண்டும் என்று சூளுரைக்கிறார்.

தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தமிழ் அரசியல் கட்சி களிடம் – அதுவும் குறிப்பாக தனது தமிழ் அரசு கட்சியிடம் இருக்கவேண்டும் என்ற அவரின் அக்கறையே அதற்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தமிழ்க் கட்சிகள் பல்வேறு கூறுகளாகப் பிரிந்து தங்க ளுக்குள் முட்டிமோதி தமிழ்த் தேசியவாத அரசியலை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருப்பதனால் தங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் படுமோசமாக சிதறுப்படப் போகிறது என்று அஞ்சும் தமிழ் மக்கள், தமிழ் கட்சிகள்மீது கடுமையாக வெறுப்படைந்திருக்கிறார்கள். தங்கள் மத்தியில் மாற்று அரசியல் சக்தி ஒன்று இல்லை என்பதாலேயே அநுர பக்கம் தமிழ் மக்கள் திரும்பிப் பார்க்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்பதை சுமந்திரன் மாத்திரமல்ல, மற்றைய தமிழ் கட்சிகளின் தலைவர்களும் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
 

https://eelanadu.lk/வடக்கு-கிழக்கில்-அநுர-அல/

 

தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்குகின்ற சகல கட்சிகளையும் ஒருங்கிணைப்பேன்; சிறீதரன்

3 weeks 3 days ago

“ஈழத் தமிழர்களின் இறைமை மீட்புக்கான அரசியல் போரில், ஏகோபித்த தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்வேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி – செல்வாநகர் வட்டாரத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உள்ளும் புறமுமாய் ஏற்பட்டுள்ள பிளவுகள், எமது மக்களிடையே பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் எமது மக்கள் அரசியல் வெறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலை மாற வேண்டுமானால், தமிழ்த் தேசியத் தளத்தில் இயங்கும் கட்சிகளும், அதன் தலைமைகளும் ஓரணியில் இணைய வேண்டிய காலத் தேவை எழுந்துள்ளது.

உட்கட்சி முரண்நிலைகளைத் தாண்டி இது சாத்தியமா? என்ற கேள்வி இருந்தாலும், இனத்தின் இருப்புக்காக அதனைச் சாத்தியமாக்க வேண்டிய காலக் கடமை எமக்கு தரப்பட்டுள்ளதை உணர்ந்து, கொள்கை ரீதியான உடன்பாடுகளின் அடிப்படையில் முறைமைப்படுத்தப்பட்ட இணக்க நிலையை உருவாக்கவும், அதன்வழி ஈழத் தமிழர்களின் அரசியல் வெளியில் காத்திரமான தலைமைத்துவத்தை உருவாக்கவும் தொடர்ந்தும் உழைப்பேன்.” – என்றார்.

https://thinakkural.lk/article/311240

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையவில்லை தோற்கடிக்கப்பட்டோம்; சஜித் வெற்றி பெறுவதை ரணில் விரும்பவில்லை - எஸ்.எம்.மரிக்கார்.

3 weeks 3 days ago

image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டோம். சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகுவதை ரணில் விக்கிரமசிங்க விரும்பாததால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தினார். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்த 20 இலட்ச ஐக்கிய தேசியக் கட்சியினர் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

தெஹிவளை பகுதியில் சனிக்கிழமை (26) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் தோல்வியடையவில்லை.  திட்டமிட்ட வகையில் தோற்கடிக்கப்பட்டோம். நடுத்தர மக்களின் நலன் பற்றி பேசும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக கூடாது என்ற நோக்கத்தில் தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுடன் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் ஜனாதிபதி மறந்து விட்டார். ராஜபக்ஷர்கள் உகண்டாவில் மறைத்து வைத்துள்ள நிதியை இலங்கைக்கு கொண்டு வருவதாக  குறிப்பிட்டனர். உகண்டா விவகாரம் தேர்தல் மேடை பிரச்சாரம் மாத்திரமே என்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

 சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதாகவும், உணவு மற்றும் சுகாதார சேவைகளுக்கு விதித்துள்ள வெற் வரியை இரத்து செய்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார். ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதிய செயற்திட்டத்தை எவ்வித மாற்றமுமில்லாமல் முன்னெடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆகவே ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் மறக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் 20 இலட்சம் ஆதரவாளர்கள் வாக்களித்தார்கள். அவர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க வேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ இரண்டு ஆண்டுகளில் பதவி துறந்தார்.அரசியல் அனுபவமில்லாத கோட்டபய ராஜபக்ஷ எடுத்த தவறான தீர்மானங்களினால் நாடு பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது. இந்நிலைமை மீண்டும் தோற்றம் பெற கூடாது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊழல்வாதிகளை தண்டிப்பதாக குறிப்பிடுகிறார். இந்த கொள்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/197283

34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்துதவுமாறு சுமந்திரன் வேண்டுகோள்

3 weeks 3 days ago

sumanthiran.jpg

கொழும்பில் பல வீதிகளை திறந்து தெற்கு மக்களின் ஆதரவைப்பெற எண்ணும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 34 ஆண்டுகளாக அடைபட்டுள்ள அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறந்து யாழ்ப்பாணம் மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் முன்வர வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வலி. வடக்கு மற்றும் பருத்தித்துறை, உடுப்பிட்டி மக்களின் அழைப்பின் பெயரில் அச்சுவேலி – வசாவிளான் வீதியைத் திறக்க ஆவண செய்யுமாறு விடுத்த கோரிக்கையின் பெயரில் அவர்களிடம் விபரத்தைக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமராட்சி, அச்சுவேலி, பலாலி பகுதி மக்கள் இரண்டு கிலோமீற்றர் பயணத்தில் சென்றடைய வேண்டிய விமான நிலையம் மற்றும் சில நிமிடத்தில் அடைய வேண்டிய யாழ். நகரத்தை 34 ஆண்டுகளாகப் பல கிலோமீற்றர் பயணித்தே தமது தேவைகளை நிவர்த்தி செய்கின்றனர்.

இதனைத் தடுக்க அச்சுவேலி – வசாவிளான் வீதியில் வெறும் 400 மீற்றர் பிரதேசத்தைத் திறப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்ட முடியும்.

கொழும்பில் ஜனாதிபதி மாளிகையை ஒட்டிய வீதி பாதுகாப்புக் காரணத்துக்காக 15 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த நிலையில் அதனைத் திறக்க உத்தரவிட்ட ஜனாதிபதி, எமது மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு 34 ஆண்டுகளாகப் பூட்டி வைத்திருக்கும் இந்த வீதியையும் திறக்க உடன் உத்தரவிட வேண்டும்.” – என்றும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/311243

வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது ; பிமல் ரத்நாயக்க !

3 weeks 3 days ago
image

வெளிநாட்டுத் தலையீடின் கீழ் எமது நாட்டுப் பிரச்சினையைத்  தீர்க்க முடியாது.  வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து விட்டு இன்று உலக நாடுகள் செயற்படுகின்றன. இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.  

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

"தேசிய மக்கள் சக்திக்கு சிங்களக் கட்சி என்ற ஒரு குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றது. நாங்கள் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் எமது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். 

இதேபோல் எங்கள் மேல் மற்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியானது சர்வதேச விசாரணைக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. 

எங்கள் மேல் விமர்சனங்களை முன்வைப்பவர்களிடம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். அமைச்சரவைத் தீர்மானங்களை முழுமையாக வாசித்துவிட்டு எங்கள் மீது விமர்சனங்களை முன்வையுங்கள். 

எங்களுக்கு எதிராக தமிழ் மக்களிடம் கூறுவதற்கு எந்த விடயமும் கிடையாது. இதனால் சர்வதேச விசாரணை என்ற விடயத்தை இவர்கள் கையில் எடுத்திருக்கின்றார்கள்.  

தமிழ் மக்களை இனவாத ரீதியாகச்  சூடாக்கி அதில் குளிர்காய்கின்ற வேலையைத் தமிழ்க் கட்சிகள் செய்துவருகின்றன. எங்கள் மீது இனவாத சாயத்தைப் பூசுகின்ற நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கியுள்ளார்கள். 

வெளிநாட்டுத் தலையீட்டின் கீழ் எங்களுடைய நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. வெளிநாட்டு நீதிமன்றங்களால் எங்களுக்கு ஒருபோதும் நீதியை வழங்க முடியாது என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்கின்றோம்.  

சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்துவிட்டு இன்று உலக நாடுகள் செயற்படுகின்றன. உதாரணமாக பலஸ்தீன பிரச்சினையைக் குறிப்பிடலாம். அங்கு இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.  

இதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளபோதும் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. 

இப்படியான நிலைமை காணப்படுகையில் சர்வதேச நீதிமன்றத்திடம் சென்று நீதியைப் பெறுவது என்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதற்கு ஒப்பானது. 

மேலும், புலம்பெயர் தமிழர்களிடமும் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம். ஒரு சில அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தாங்கள் புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் எனக் கூறி அரசியல் சித்து விளையாட்டுக்களை மேற்கொள்கின்றார்கள். 

குறித்த கட்சிகளுக்கு எவ்வாறு நிதி சேகரிப்பு நடைபெறுகின்றது என்பது சந்தேகத்துக்கிடமானதாகும். வெளிநாடுகளில் இருந்து பணத்தைக் கொண்டு வந்து 70 வருடங்களுக்கு மேலான போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்ற கீழ்த்தரமான அரசியலை சில கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் செய்கின்றன.  

இவை அருவருக்கத்தக்க செயற்பாடுகளாகும். எனவே, புலம்பெயர் தமிழர்களிடம் ஒன்றைக் கேட்டுக்கொள்கின்றோம் எங்களுடைய பெயரைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்றார்.

https://www.virakesari.lk/article/197292

Checked
Fri, 11/22/2024 - 02:55
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr