ஊர்ப்புதினம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடரும் அநுர அரசாங்கம்: அம்பிகா சற்குணநாதன் கேள்வி

3 weeks 1 day ago

பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடரும் அநுர அரசாங்கம்: அம்பிகா சற்குணநாதன் கேள்வி
October 30, 2024

spacer.png

 

பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள்,இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமாரதிசநாயக்க மறக்க முடியாது என  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்

மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்கவிரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் பிரச்சினையில்லை,மாறாக அது தவறாக பயன்படுத்தப்படுவதே  பிரச்சினை என தேசிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது – பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கான காரணமாக தேசிய மக்கள் சக்தி இதனை தெரிவிக்கின்றது.

பயங்கரவாததடைச்சட்டம் பத்திரிகையாளர்கள் சிவில் சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதே பிரச்சினைக்குரிய விடயம் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் அது இடம்பெற அனுமதிக்கமாட்டோம் என  குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமாரதிசநாயக்க நீங்கள் மறக்க முடியாது.

இலங்கை இந்த சர்வதேசசட்டங்கள் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது.இதன் காரணமாக அதனை கடைப்பிடிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் சிறைச்சாலை ஆய்வு உட்பட பல ஆய்வுகளில் கிடைத்த ஆதாரங்கள் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இவர்கள் பத்திரிகையாளர்களே அல்லது சிவில் சமூகத்தினரோஇல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஆகவே இது பழிவாங்குவது குறித்தது இல்லை மாறாக ஆனால்  ஆழமாக வேரூன்றிய இனமதரீதியான பாகுபாடுகளை அடிப்படையாக கொண்டது.

பயங்கரவாததடைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்போம் என அரசாங்கம் தெரிவிக்கின்ற அதேவேளை பொலிஸார் உரிய நடைமுறைகளை புறக்கணித்தே அதிகளவில் செயற்படுகின்றனர் என்பது வெளிப்படையாக தெரியும் விடயம்.

பயங்கரவாத தடைச்சட்டம் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்கள்  துஸ்பிரயோகங்களையும் தண்;டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலையும் அதிகரிக்கின்றன தீவிரப்படுத்துகின்றன.

மனித உரிமை மீறல்களை அதிகரிக்க கூடிய ஏனையபல ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்றன.

அடிப்படை உரிய செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால்  சட்டமே ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது,

மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்கவிரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா?

 

https://www.ilakku.org/prohibition-of-terrorism-act-question-by-ambika-charkunanathan/

 

E-8 விசா முறையின் கீழ் பணம் செலுத்த வேண்டாம்; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு

3 weeks 1 day ago

E-8 விசா முறையின் கீழ் பணம் செலுத்த வேண்டாம்; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு

E-8 விசா ஒப்பந்தம் முன்னாள் அமைச்சரினால் சட்டவிரோதமான முறையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த விசா முறையின் கீழ் இலங்கையில் உள்ள எந்தவொரு தனியார் நிறுவனமும் கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பவோ அல்லது பணம் வசூலிக்கவோ அனுமதிக்கப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது தனிப்பட்ட விருப்பத்திற்கிணங்க அந்த நாட்டிற்குச்சென்று  மாகாண ஆளுநர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், அதற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஒரு தனிப்பட்ட  ஒப்பந்தத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, விவசாயம் மற்றும் மீன்பிடி வேலைகளுக்கு E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை. இந்த வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.

எனவு வேலை தேடுபவர்கள் E-8 விசா முறையின் கீழ் பணம் செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

https://thinakkural.lk/article/311333

இலங்கை – இந்தியா மீனவர் பிரச்சினைக்கு எட்டப்பட்ட முடிவுகள்!

3 weeks 1 day ago

இலங்கை – இந்தியா மீனவர் பிரச்சினைக்கு எட்டப்பட்ட முடிவுகள்!
591225976.jpg

இந்திய  - இலங்கை  கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கடற்றொழில் தொடர்பான இந்தியா - இலங்கை கூட்டு செயற்குழுவின் 6ஆவது கூட்டம் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்திய அரசின் இந்திய மீன்வளத் துறையின் செயலர் அபிலக்சி லிகி தலைமையிலான இந்தியக் குழுவும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வெளியுறவு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கடற்படை, கடலோர பொலிஸார், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் .

இலங்கையின் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கடற்படை, கரையோரக் காவல்படை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகளும்  இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, கடற்றொழிலாளர் மற்றும் கடற்றொழில் துறை தொடர்பான அனைத்து  பிரச்சினைகள் குறித்தும், விரிவான மீளாய்வை மேற்கொண்டதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கைக் காவலில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு இலங்கை அரசை இந்தியத் தரப்பு இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளது.[ஒ] 

 

https://newuthayan.com/article/இலங்கை_–_இந்தியா_மீனவர்_பிரச்சினைக்கு_எட்டப்பட்ட_முடிவுகள்!

பொருத்தமான அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக இளைஞர்கள் மாற வேண்டும் - சந்திரகுமார்

3 weeks 1 day ago

பொருத்தமான அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக இளைஞர்கள் மாற வேண்டும் - சந்திரகுமார்
1119672172.JPG

நாட்டுக்கும், மக்களுக்குமான பொருத்தமான அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியான இளைஞர்கள் மாற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி திருவையாற்றில் இடம்பெற்ற  இளைஞர்களுடான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;
இந்த நாடாளுமன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது. புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி அவர்கள் சிந்திக்கவும்,  செயற்படவும் தொடங்கியிருகின்றார்கள். கடந்த 15 அவர்கள் பயணித்த அரசியல் பாதையில் இருந்து விலகி பொருத்தமான அரசியல் வழியை பின்பற்ற தொடங்கியுள்ளனர். கடந்த காலங்களில் இந்த இளைஞர்கள் தாங்கள் நம்பி பயணித்த அரசியல் தலைமைகள் அவர்களை நட்டாற்றில் விட்டது போல விட்டுச் சென்றுள்னர். இளைஞர்கள் எதிர்பார்த்த எதுவும் நிறைவேற்றப்படவில்லை.அவர்களை உசுப்பேற்றி, வாக்குகளை அபகரித்து பதவிகளுக்கு வந்தவர்களால் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ஏற்பட்ட கோபமும் விரக்தியும் தான் மாவட்டத்தின் இளைஞர்கள் எங்களின் அரசியல் வழியை ஏற்றுக்கொண்டு பயணிக்க முன்வந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் ஐந்து வருடங்கள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின்
நிமிர்த்தமே இளைஞர்கள் மாற்றத்தை நோக்கி செயற்பட காரணமாக அமைந்துள்ளதனை அவர்களின் கருத்துக்களில் இருந்து அறிந்துகொண்டேன். ஆகவேதான் நான் இம்முறை  அதிகாரத்திற்கு வந்தவுடன்  இளம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை நிச்சயம் நிறைவேற்றுவேன். இது வெறும் வார்த்தைகளாலும், அறிக்கைகளாலும், உணர்ச்சி பேச்சுக்களாலும் அரசியல் செய்பவன் நானல்ல என்பதனை  இளைஞர்கள் விளங்கிக்கொண்டுள்ளனர்.

எனவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களுக்கான அபிவிருத்திகளையும் மேற்கொள்ள உழைப்பேன் என்பதனையும் நான் உத்தரவாதமாக கூறுகின்றேன் - என்றார். (ச)

 

https://newuthayan.com/article/பொருத்தமான_அரசியலை_தீர்மானிக்கின்ற_சக்தியாக_இளைஞர்கள்_மாற_வேண்டும்_-_சந்திரகுமார்

 

காணி சுவீகரிப்பு முயற்சி மண்டைதீவில் முறியடிப்பு; அனுர அரசாங்கத்திலும் தொடர்கதை

3 weeks 1 day ago

காணி சுவீகரிப்பு முயற்சி மண்டைதீவில் முறியடிப்பு; அனுர அரசாங்கத்திலும் தொடர்கதை
1467693045.jpeg

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் தனியார் காணியொன்றை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரான கனகரத்தினம் சுகாஷ், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் ஆகியோரும், பொதுமக்கள் பலரும் இணைந்து வெளிப்படுத்திய எதிர்ப்பைத் தொடர்ந்தே இந்தக் காணி சுவீகரிப்பு முறியடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. (ச) 

 

https://newuthayan.com/article/காணி_சுவீகரிப்பு_முயற்சி_மண்டைதீவில்_முறியடிப்பு;_அனுர_அரசாங்கத்திலும்_தொடர்கதை

யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு!

3 weeks 1 day ago
யாழில் கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு!

spacer.png

யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வீட்டிற்கு இன்று (30) புதன்கிழமை காலை சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

50 மற்றும் 51 வயதான 2 பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு பின்னரே சடலங்களை மீட்டு மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.samakalam.com/யாழில்-கணவன்-மனைவியின்-ச/

பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

3 weeks 1 day ago
image

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (29) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.  

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோப்பாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் விமான நிலையத்திற்கு உரிய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

விமான நிலையத்தின் விமான ஓடுபாதை விஸ்தரிப்பது தொடர்பாகவும் அனைத்து விதமான சர்வதேச விமானங்களும் வந்து செல்லக் கூடியவகையில் விமான ஓடுபாதை விஸ்தரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டது.   

விமான நிலைய அபிவிருத்தி, விமான நிலைய உட்கட்டுமான அபிவிருத்தி, விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் நலன் சார்ந்த உட்கட்டமைப்பு வசதி வாய்ப்புகள் அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.  

விமான நிலையத்துக்கு வந்தடைந்த பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொள்ளாதவாறு விமான நிலையம் மட்டுமன்றி சுற்றியுள்ள பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி செய்தல், வீதி மின் விளக்குகள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய பிரதேச சபைக்கு  ஆளுநர் அவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.  

1986 ஆம் ஆண்டு விமான நிலையத்திற்காக ஒப்படைக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளுக்கான இன்றைய பெறுமதியை காணி உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டமிடல் தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

01__3___1_.jpg

01__1_.jpg

https://www.virakesari.lk/article/197474

கடவுச்சீட்டில் சிங்களம், தமிழ் மொழிகள் பின்னிலைக்கு சென்றமைக்கு நாம் பொறுப்பல்ல

3 weeks 1 day ago

புதிய கடவுச்சீட்டில் அரச கரும மொழிகளான சிங்களம், தமிழ் மொழிகள் முன்னிலையில் இருந்து பின்னிலைக்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பிலான முடிவு சமகால அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அது கடந்த அரசாங்கத்தின் முடிவு என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில், கடவுச்சீட்டு நெருக்கடி நிலைமை தொடர்பிலும், புதிதாக விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டில் பழைய கடவுச்சீட்டில் முதல் இரண்டு இடங்களில் இருந்த சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் இரண்டாம், மூன்றாம் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கடவுச்சீட்டு பிரச்சினை நாம் வந்து ஏற்படுத்தியது அல்ல. கடந்த அரசாங்கம் முறையாக கடவுச்சீட்டுகளை கொண்டுவர நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது. இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த புதிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அவற்றை உரிய காலத்தில் அனுப்ப தவறியுள்ளனர். இந்த நேரத்தில் பழைய கடவுச்சீட்டும் போதுமான அளவு கையிருப்பில் இருக்கவில்லை. நாம் வரும் போது இதுவே நிலைமையாக இருந்தது.

இன்னுமொரு நிறுவனம் குறித்த டென்டருக்கு எதிராக நீதிமன்றத்திற்கும் போயிருந்தது. இந்நிலையில் முன்னாள் அரசாங்கம் சென்ற பாதையில் சென்றிருந்தால் ஒரு கடவுச்சீட்டும் இருந்திருக்காது. நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கமைய முன்னர் கடவுச்சீட்டை பெற்ற நிறுவனத்திடம் இருந்து அவற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களா கடவுச்சீட்டு இல்லாமல் இருந்தமையினால் இப்போது கேள்விகள் அதிகரித்துள்ளதால் அதிகமானவர்கள் கடவுச்சீட்டு பெற செல்கின்றனர். இதனால் மக்களிடம் அத்தியாவசிய தேவையாக இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டு அலுவலகம் செல்லுமாறு கோருகின்றோம்.

இதேவேளை, புதிய கடவுச்சீட்டுகளை வடிவமைத்தது நாம் அல்ல. அதனை நாங்கள் மாற்றம் செய்ய போகவில்லை. அதற்குள் புகைப்படங்கள் பல உள்ளன. அவை ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தமையாகும். அனைத்தையும் மாற்றினால் நெருக்கடிகளே ஏற்படும். இப்போதுள்ள தொகை 6 மாதங்களுக்கு போதுமானது. அடுத்தக் கட்டமாக புதிய கடவுச்சீட்டுகளை கொண்டுவர புதிய நிறுவனத்திற்கு விலைமனு கோரல் வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

https://thinakkural.lk/article/311318

ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நடத்தை தொடர்பில் விசாரணை

3 weeks 1 day ago
rohitha-bogollagama-l.jpg?resize=650,375 ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் நடத்தை தொடர்பில் விசாரணை.

ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் கேள்விக்குரிய நடத்தை மற்றும் வெளிநாட்டு தூதரகங்களில் அரசியல் நியமனங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

போகொல்லாகம தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும், குறுகிய காலத்தில் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபரையும் அரசாங்கம் பாதுகாக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1406407

2024 நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

3 weeks 1 day ago
New-Project-7-20.jpg?resize=750,375&ssl= 2024 நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் மா அதிபர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தபால் மூல வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் தவிர, எதிர்வரும் நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளிலும் தபால் மூல வாக்களிப்புக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் 1, மற்றும் 4 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்கண்ட தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1406438

புதிதாக அச்சிடப்பட்ட பணம்: இலங்கை மத்திய வங்கி விளக்கம்

3 weeks 2 days ago

இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

புதிதாக அச்சிடப்பட்ட பணம்: இலங்கை மத்திய வங்கி விளக்கம் | Newly Printed Money Central Bank Explanation

மத்திய வங்கியின் திறந்த சந்தை 

மத்திய வங்கியின் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் பணப்புழக்கத்தை வழங்குவது ஒரு சாதாரண மத்திய வங்கி நடவடிக்கையாகும். வட்டி வீதங்களை நிர்வகிப்பதன் மூலம் விலை ஸ்திரத்தன்மையை பராமரிக்க திறந்த சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிதாக அச்சிடப்பட்ட பணம்: இலங்கை மத்திய வங்கி விளக்கம் | Newly Printed Money Central Bank Explanation 

 

இதனை பணம் அச்சிடல் என்று பதிவு செய்திட முடியாது. இதனூடாக, அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக பணம் அச்சிடல் அல்லது முறையற்ற பண விநியோகம் முற்றிலும் இடம்பெறவில்லை.

இங்கு நடந்திருப்பது மத்திய வங்கியின் விலை ஸ்திரத்தன்மையின் நோக்கங்களை அடைவதற்கான ஒரு சாதாரண செயற்பாடாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

https://tamilwin.com/article/newly-printed-money-central-bank-explanation-1730210195

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக வங்கிக் கட்டமைப்பு மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்ட இரு தரப்பையும் பாதுகாப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படும் - ஜனாதிபதி

3 weeks 2 days ago

image

நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்ப்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எவ்வித தயக்கமும் இன்றி எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். 

Bank_Association__Meeting__3_.jpeg

இலங்கை வங்கிச் சங்கத்தின் பிரதிநிதிகளை செவ்வாய்க்கிழமை (29) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.  

Bank_Association__Meeting__5_.jpeg

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் வங்கிகளின் வகிபாகம்  மற்றும் அவர்களின் பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. 

Bank_Association__Meeting__2_.jpeg

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன்,  ஒன்றரை வருடங்களில் அந்த பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

Bank_Association__Meeting__1_.jpeg

ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் வங்கிக் கட்டமைப்பு நிலைமையை தாங்கிக்கொண்டு தொழில் முனைவோரையும் பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, தொழில் முனைவோர் அந்த தாங்கிக்கொள்ளலை தவறாகப் பயன்படுத்துவது சிக்கலான விடயம் என்றும் சுட்டிக்காட்டினார். அதேபோல் வங்கிகளும் தொழில் முனைவோரை பாதுகாக்கும் வகையில் முழுமையான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 

அதேபோல் தற்போது முறையற்று கிடக்கும் இலங்கை பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தும் போது, முறையற்ற பொருளாதாரத்திற்குள் தங்கியிருக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். 

இலங்கையில் தற்போது காணப்படும் நெருக்கடி, வேலைத்திட்டங்களுக்கான செலவிடப்படும் காலப்பகுதி, மோசடி உள்ளிட்ட காரணங்களால் முதலீடுகளை நடத்திச் செல்வதில் காணப்படும் தடைகள் குறித்தும் தீர்க்கமாக ஆராயப்பட்டது. 

இந்த வேலைத்திட்டத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் இலகுவான மற்றும் மோசடியற்ற, செயற்திறன் மிகுந்த பொறிமுறைக்குள் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். 

இலங்கை வங்கிச் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமால் தேவரதந்திரி, கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் /தலைமை நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க, நேஷ்ன் டிரஸ்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்த குணதிலக்க, சம்பத் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அயோத்யா இத்தவல, ஹட்டன் நெஷனல் வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி தமித் பல்லேவத்த, செலான் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர, NDB வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெழும் எதிரிசிங்க, Deutsche வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரஞ்சன் பிகுராடோ, இந்திரஜித் போயகொட (SLBA ) உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/197453

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கும் தாக்குதல் நடத்த போவதாக எச்சரிக்கை; நீதிமன்ற வளாகம் தீவிர பாதுகாப்பு கண்காணிப்பில்

3 weeks 2 days ago

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17301914580.png

17301914581.png

17301914582.png

17301914583.png

17301914584.png

https://thinakkural.lk/article/311299

அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது பொய் - கலாநிதி ஹர்ஷ டி சில்வா

3 weeks 2 days ago

image

(எம்.மனோசித்ரா)

நிதி அமைச்சின் அறிக்கைக்கு அமையவே கடந்த அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்தது. எனவே திறைசேரியில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிதி ஒதுக்கப்படவில்லை என எதற்காக அரசாங்கம் பொய் கூறுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் செவ்வாய்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தலுக்கு முன் 6 மாதங்களுக்கொருமுறை சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர்கள் கூறினர். 13 சதவீதம் தேசிய உற்பத்திக்கு சமாந்தர செலவு வரையறையின் கீழ் 3 நபர்கள் கையெழுத்திட்ட நிதி அமைச்சின் அறிக்கையையே கடந்த அமைச்சரவை சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்துக்காக பயன்படுத்திக் கொண்டது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்துக்கூடாக கட்டம் கட்டமாக சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். எனவே திறைசேரியில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை என அரசாங்கம் கூறுகிறது? எனவே அரசாங்கம் மக்களிடம் கூறும் அனைத்தும் உண்மையா என்ற பிரச்சினையும் ஏற்படுகிறது.

இன்று சதொசவில் விற்பனை செய்வதற்கு அரிசி இல்லை. இதற்கு முன்னர் அரிசியை இறக்குமதி செய்யப் போவதில்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டிருந்தாலும், எதிர்வரும் நாட்களில் இந்தியாவிலிருந்து 50 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதாக அறிவித்தாலும் ஆர்ச்சரியப்படுவதற்கில்லை. அரிசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகின்ற போதிலும், அதனைத் தீர்ப்பதற்கான இயலுமை அரசாங்கத்துக்கு இல்லை.

எனவே மீண்டும் அரிசியை இறக்குமதி செய்யும் நிலைமைக்கு அரசாங்கத் தள்ளப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் அரிசி பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர் நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டில் திருத்தங்களை மேற்கொள்வதாகக் கூறினர். செய்ய முடியாதவற்றைக் கூற வேண்டாமென அன்றே நாம் எச்சரித்தோம். ஆனால் இன்று கூறிய எதையுமே செயற்படுத்த முடியாமல் அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்றார்.

https://www.virakesari.lk/article/197446

கம்மன்பிலவின் இரண்டாவது ஈஸ்டர் வௌிப்படுத்தலில் ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்கிறார் விஜித

3 weeks 2 days ago

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் இரண்டாவது ஈஸ்டர் வௌிப்படுத்தலின் ஊடாக ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்திருந்து கூட ஒரு அரசியல் காரணத்திற்காக.

குறிப்பிட்ட சிலரைக் காப்பாற்றவே விசாரணை நடத்தாமல் இவ்வாறான ஒரு விடயத்தை கூறியதாகவும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான செயலை ஒருபோதும் செய்யாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/311308

சமகால அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் மக்கள் - ஓய்ந்து போகும் அநுர அலை

3 weeks 2 days ago

இலங்கையில் அநுர அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாதத்தையும் கடந்து விட்ட நிலையில், மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது.

நாட்டில் சடுதியாக அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. பணவீக்கம் குறைவடைந்துள்ளது என பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும் மக்கள் வாழ்க்கை செலவு மட்டும் எந்தவித மாற்றமும் இன்றி அதிகரிப்பிலேயே உள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பாதகமான விளைவு

கடந்த ரணில் அரசாங்கத்தின் இறுதிக்காலப்பகுதி சுமுகமான நிலையில் இருந்த போதும், தற்போது அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக பலர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

 

சமகால அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் மக்கள் - ஓய்ந்து போகும் அநுர அலை | People Angry On Anura Government Economic Crisis

இந்த மாதத்தில் பொருட்களின் விலைகளில் கணிசமான அதிகரிப்பை உணர்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதத்தில் பொருட்களுக்காக 10 ஆயிரம் ரூபா செலவிட்ட நிலையில், அதே பொருட்களுக்கு தற்போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகை செலவிடுவதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆட்சியை பொறுப்பேற்றதுடன் பல்வேறு மாற்றங்களை செய்யப் போவதாக தேர்தல் மேடைகளில் சூளுரைத்த சமகால ஜனாதிபதி, தனது ஆட்சியை பலப்படுத்தும் நோக்கிலேயே செயற்படுவதாகவும், மக்கள் நலன்சார்ந்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையும் பலர் குறைப்பட்டுள்ளனர்.

டொலரின் பெறுமதி

கடந்த ரணில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சாதகமான நிலைப்பாட்டினை சமகால அரசாங்கம் அனுபவித்து வருவதாகவும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

சமகால அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் மக்கள் - ஓய்ந்து போகும் அநுர அலை | People Angry On Anura Government Economic Crisis

தற்போதைய அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வேலைத்திட்டங்களை சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்திருந்தனர்.

அதன் காரணமாக பெருந்தொகை சுற்றுலா பயணிகளால் அமெரிக்க டொலர் உள்வருகை அதிகரித்துள்ளது.

மத்திய வங்கியில் டொலரின் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில், அதன் கட்டுப்பாட்டு விலையை சடுதியாக குறைக்கவும் சமகால அநுர அரசினால் முடிந்துள்ளதாகவே பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடவுச்சீட்டு நெருக்கடி

அதேவேளை, கடந்த பல மாதங்களாக நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட வரிசைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

சமகால அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் மக்கள் - ஓய்ந்து போகும் அநுர அலை | People Angry On Anura Government Economic Crisis

எனினும் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருக்கின்றனர்.

கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாலை நான்கு மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டிருந்த அநுர அலை தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளதுடன், அரசின் மீது மக்கள் தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, புதிய அரசாங்கம் பொறுப்பேற்று குறுகிய காலத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், அதற்காக சில காலங்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என சில தரப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். 

https://tamilwin.com/article/people-angry-on-anura-government-economic-crisis-1730124992

தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை

3 weeks 2 days ago

 

தமிழரசில் இருந்து என்னை யாரும் வெளியேற்ற முடியாது!; சிறீதரன் சூளுரை srithan-780x470.jpg

“அரசியல் ரீதியான அழுத்தங்களும், நெருக்கடிகளும் நிறைந்திருக்கும் சமகாலத்தில், அவை அனைத்தையும் எதிர்கொண்டவாறு எனது அரசியல் பயணத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்தவாறு தொடர்வதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் எனது பயணம் அமையும். கட்சியை விட்டு நான் ஒருபோதும் வெளியேறமாட்டேன். என் மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் சிவஞானம் சிறீதரனுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ். வட்டுக்கோட்டைத் தொகுதியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிறீதரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, கட்சி ரீதியாகவும், தனிநபராகவும் என்னை ஆத்மார்த்தமாக நேசிக்கும் மக்களின் நியாயபூர்வமான கேள்விகள், உட்கட்சி முரண்நிலைகள் குறித்தே அமைந்திருக்கின்றன.

கட்சிக்கு எதிராகவும் தெரிவு செய்யப்பட்ட தலைவராக நான் செயற்பட முடியாதவாறும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் பலர், கட்சியைவிட்டு நான் வெளியேறியிருக்கலாம் என்ற கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். அதேவேளை, என்னைக்  கட்சியைவிட்டு வெளியேற்றும் கைங்கரியங்கள் முன்னெடுக்கப்படலாம் என்றும் எதிர்வுகூறுகின்றார்கள்.

என்னையும், எனது தலைமைத்துவத்தையும் நேசிக்கின்ற – விசுவாசிக்கின்ற எனது மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். எந்தச் சூழ்நிலையிலும் நான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது.

தடைகள் அனைத்தையும் தாண்டி, எமது மக்கள் விரும்புகின்ற, அவர்களது மனதறிந்த மக்கள் பிரதிநிதியாக எனது அரசியல் பயணம் தமிழரசுக் கட்சியிலேயே தொடரும் என்பதை, தமிழீழப் பிரகடனம் நிறைவேற்றப்பட்ட வரலாற்று மண்ணான வட்டுக்கோட்டையில் வைத்து உறுதியோடு உரைக்கின்றேன்.” – என்றார்.

17301683640.png

17301683641.png

17301683642.png



 

https://akkinikkunchu.com/?p=297185

எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை – கருத்தை புறக்கணித்தார் விஜித ஹேரத்

3 weeks 2 days ago
எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை –  கருத்தை புறக்கணித்தார் விஜித ஹேரத் எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை –  கருத்தை புறக்கணித்தார் விஜித ஹேரத்.

சமூக ஊடகங்களில்  ஏனைய நாடுகளிடம் பணம் பெற்றதாகவும் , புதிய நாணயத்தாள்களை அச்சிட்டதாகவும் வெளியிட்ட கருத்தை அமைச்சரவை முழுமையாக புறக்கணித்துள்ளது.

இன்று நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரைவ பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை அமைக்கப்பெற்றதில் இருந்து  எந்த நாட்டில் இருந்தும்  கடனை பெற்றுக்கொள்ளவில்லை  எனவும் ,  நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் நாணயத்தாள்கள் அச்சிடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1406281

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கமாட்டோம் - ஜனாதிபதி செயலக அதிகாரி

3 weeks 2 days ago

image

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் (சட்டப்பிரிவு )சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார இதனை தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து எந்த விவகாரமும் இல்லை, ஆனால் அது சிவில் செயற்பாட்டாளர்களை பத்திரிகையாளர்களை  ஏனையவர்களை தடுத்துவைப்பதற்கு பயன்படுத்தப்படுவதே பிரச்சினைக்குரிய விடயம் என அவர் மோர்னிங் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

சிவில் செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றமையே பிரச்சினைக்குரிய விடயம் அது இடம்பெற அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நம்பகதன்மை மிக்க தகவல்களை அடிப்படையாக வைத்தே பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவோம், அரசியல் பழிவாங்கலிற்காக அதனை பயன்படுத்தமாட்டோம் என ஜனாதிபதி செயலகத்தின் இயக்குநர் (சட்டப்பிரிவு )சட்டத்தரணி ஜேஎம் விஜயபண்டார  தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்தாவிட்டால் பிரச்சினைகள் ஏற்படாது எனஅவர் தெரிவித்துள்ளார்.

சட்டப்புத்தகங்களில் வேறு பல சட்டங்கள் உள்ளன, ஆனால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் படிஅவற்றை நடைமுறைப்படுத்தவில்லை. எங்கள் நாட்டின் சட்டத்தில் மரணதண்டனையும் உள்ளது ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் நடைமுறைப்படுத்தாமல் விடுவதற்கும் ஜனாதிபதிக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது ஜனாதிபதி பொதுமன்னிப்பிற்கும் எங்கள் சட்டத்தில் இடமுள்ளது, ஆனால் பாரதூரமான தனிப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டமும் ஒரு சட்டமே அது தொடர்ந்து நீடிப்பதில் பிரச்சினை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/197366

தமிழரசுக் கட்சியினர் எவரும் பார் லைசன்ஸ் பெறவில்லையா?; சுமந்திரனிடம் சவால் விடுத்திருக்கும் கீதநாத் காசிலிங்கம்

3 weeks 2 days ago

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் எவரும் பார் லைசன்சை பெறவில்லை என்பதை சத்தியக் கடதாசியின் ஊடாக வெளிப்படுத்த முடியுமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் எம்.ஏ.சுமந்திரனிடம் சவால் விடுத்துள்ளார்.

கட்சியில் சிலர் பார் லைசனை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடியாக பதில்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“பார் லைசன்ஸ்சோ – சாராயக் கடைகளோ யாருக்கும் இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை எனச் சத்தியக் கடதாசி ஒன்றை அண்மையில் கொடுத்திருந்தேன். அதேபோல் என்னுடைய சக வேட்பாளர்கள் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய சத்தியக் கடதாசியை கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

ஏனென்றால் தற்போது பரவலாகப் பேசப்படுகின்ற பார் லைசன்ஸ் விவகாரத்தில் யார், யார் இந்த பார் லைசன்ஸ்சை பெற்றுள்ளார்கள் என்று மக்களுக்குத் தெரிய வேண்டும்.

மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இவர்களை நாடாளுமன்றம் அனுப்பியது சாராயக் கடைகளை வாங்குவதற்காக அல்ல.

ஆகவே, யார் யார் வாங்கினார்கள் என்பது வாக்களித்த மக்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டும். ஆனால், இந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டிய புதிய ஆட்சியாளர்கள் கூட அதனை வெளிப்படுத்தத் தயங்குகின்ற நிலைமைதான் உள்ளது.

இவர்கள் ஏன் தயங்குகின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் முக்கியமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களும் பார் லைசன்ஸ் வாங்கவில்லை என சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும்.

ஆனால், இதுவரைக்கும் எவரும் அப்படியான சத்தியக் கடதாசியை கொடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் சாராயக் கடை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடகங்களில் கதைத்துக் கொண்டிருக்கின்றார்.

எங்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரைப் பார்த்துத்தான் நாங்களும் சில விடயங்களை அதிலும் அவருடைய உரைகளில்தான் படித்துக் கொள்கின்றோம்.

எனவே, நாம் கேட்டது போல அவர் முன்மாதிரியாக ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுக்க வேண்டும். சாராயக் கடை சம்பந்தமாக உண்மை தெரிய வேண்டும் என்று ஜனாதிபதியிடமும் சென்று கதைத்திருந்தவர் அவர்.

அவ்வாறு முதலில் அவரே ஒரு சத்தியக் கடதாசியைக் கொடுத்து அவரது கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் சத்தியக் கடதாசியைக் கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை முன்மாதிரியாகச் செய்யுங்கள் என சுமந்திரனை மரியாதையுடன் கேட்கின்றோம்.

https://thinakkural.lk/article/311262

Checked
Fri, 11/22/2024 - 02:55
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr