ஊர்ப்புதினம்

அரசாங்கத்தின் பயணத்தை பார்க்கும்போது மீண்டும் ரணில் பிரதமராகும் சாத்தியம் - ராஜித சேனாரத்ன

2 weeks 6 days ago
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் கடன்களை மீள செலுத்துவது பெரிய விடயமல்ல என தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க தற்போது 98ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றுள்ளார். அரசாங்கம் இவ்வாறு பயணிக்குமாக இருந்தால்  ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டிவரும் என புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கலாம். அதிகாரத்துக்கு வந்தால் செய்வதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கலாம். ஆனால் தேர்தல் மேடைகளில் வாய்சவடால்  அரசாங்கம் செய்ய முடியாது. அது மிகவும் கஷ்டமானதாகும். மக்கள் விடுதலை முன்னணி இவ்வளவு காலமும் அரசாங்கத்தை விமர்சித்து வந்து. தற்போது மக்கள் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கம் செய்வதை மக்களுக்கு தற்போது கண்டுகொள்ளலாம்.

அரசாங்கத்தின் வெளிநாட்டு கடனான 42 பில்லியன் டொலரை செலுத்துவது பாரிய விடயமா என அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடையில் தெரிவித்திருந்தார். ஆனால்  அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாமல் தற்போது 98ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளார். அது மாத்திரமல்லாது பணம் அச்சிட்டுள்ளார்கள். ரணில் விக்ரமசிங்க பணம் அச்சிடாமலே மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதேபோன்று ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு இந்தளவு வாகனம் எதற்கு என அவர் கேட்டிருந்தார். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார வரும்போது அவருக்கு பாதுகாப்புக்காக 6 வாகனங்கள் வருகின்றன. தேர்தல் பிரசார கூட்டத்துக்குள் வரும்போது 5 வாகனங்களை வெளியில் நிறுத்திவிட்டு ஒரு வானத்திலே வருகிறார். மக்களை ஏமாற்றுவதற்கே இவ்வாறு செயற்படுகிறார்கள்.

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அதிகாரத்துக்கு வந்த இந்த அரசாங்கம், அதிகாரத்துக்கு வந்து ஒரு தாதம் கடந்தும் எந்த மாற்றத்தையும் செய்ய வில்லை. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை குறைப்பதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஆனால் நாட்டை முன்னேற்ற எந்த வேலைத்திட்டமும் இவர்களிடம் இல்லை.  அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தற்போது கடவுச்சீட்டு இல்லாமையால் திரும்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் இயலாமையை மக்கள் தற்போது கண்கிறார்கள். அதனால் அரசாங்கம் இவ்வாறு பயணிக்குமாக இருந்தால், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டி வரும் என்றார்.

https://www.virakesari.lk/article/197682

ஜனாதிபதியின் திட்டத்தை முறியடிக்க 10 பிரதிநிதிகளை பெற மக்கள் ஆணை வழங்க வேண்டும் - பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

2 weeks 6 days ago
image

ஜனாதிபதி நல்லாட்சி காலத்தில் புதிய அரசியல் அமைப்பு தயாரிக்க முன்னெடுத்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றப் போவதான அறிவிப்பு சரித்திரத்தில் முதல் தடவையாக விரும்பி ஏற்றுக்கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கும் எங்களுடைய தலைவிதியை அடிப்படையிலே மாற்றி அமைக்கக்கூடிய தேர்தலாக இருக்கின்றது என மக்களை எச்சரிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

எனவே, இந்த வரலாற்று மாற்றத்தை தடுக்க இந்த முறை எமது கட்சி 10 பேரை நாடாளுமன்றம் அனுப்ப மக்கள் ஆணை வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு அரசடி தெய்வநாயகம் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (31) மாலை நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், 

இந்த தேர்தல்  விசேடமாக தமிழ் மக்களுடைய தலைவிதியை மாற்றி அமைக்கக்கூடிய ஒரு தேர்தலாக சமகால அரசியல் ஆக்கிவிட்டது என்ற கருத்து மேலோங்கியுள்ளது.  ஆனால், ஒரு தேர்தல் எம்முடைய தலைவிதியை முற்றுமுழுதாக மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கு முக்கியத்துவம் பெறுவது என்பது மிகவும் குறைவு. அப்படிப்பட்ட தேர்தலாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.

இன்று ஜனாதிபதியாக இருக்கும் ஜே.வி.பி கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி அமைப்பின் தலைவரான அனுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு புதிய அரசியல்  அமைப்பு ஒன்றை நிறுவுவதன் ஊடாகவும் 2015 மைத்திரி - ரணில் நல்லாட்சி காலத்திலே புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முன்னெடுக்கப்பட்டு 2017 செட்டெம்பர் 19 ஒரு இடைக்கால அறிகையை வெளியிட்டது.

அந்த அறிக்கையை தேர்தலுக்கு பின்னர் அதனை நிறைவேற்றி தீர்வு வழங்கப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே, அந்த இடைக்கால அறிக்கையில் இருப்பது என்ன? அந்த அறிக்கையின் விடயங்களை சரியாக பார்க்க வேண்டும். அந்த அறிகை தயாரித்தபோது வட கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்று அந்த அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஏக மனதாக ஆதரவு வழங்கினர்.  

அந்த நம்பிக்கையில் தான் அனுரகுமார திஸாநாயக்க சர்வதேச மட்டத்துக்கு ஒரு செய்தியை அனுப்பக்கூடிய வகையிலே அந்த இடைக்கால அறிக்கையை தான் நிறைவேற்றப் போவதாக துணிந்து அறிவித்துள்ளார்.

அந்த இடைக்கால அறிக்கையில் இன்றைக்கு இருக்கும் ஒற்றையாட்சியை விட ஒரு இறுக்கமான ஒற்றையாட்சி முறைமையை கொண்ட பண்பாக அமைந்துள்ளதுடன் அதன் முன்னுரையில் மைத்திரியின் பேச்சின் சாரம்சமே முன்னுரையாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒற்றையாட்சி முறைமையை உலகத்துக்கு முதலில் அறிமுகப்படுத்தியது பிரித்தானியா. அங்கும் இன்று வரையும் ஒற்றையாட்சி நடைமுறையில் இருக்கிறது. அங்கு இருக்கின்ற ஒற்றையாட்சி அங்கு இருக்கக்கூடிய நான்கு இனங்களுக்கு தேச அங்கீகாரத்தை வழங்குகிறது. அது மட்டுமல்ல, அதையும் தாண்டி ஸ்கொட்லாந்து பிரிந்து போவதற்கு கூட அனுமதி வழங்கியுள்ளனர்.  

ஆகவே, மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்குரிய ஒற்றையாட்சி அப்படிப்பட்ட பண்புகளை கொண்டதாக இருக்க முடியாது;  எனவே இலங்கைக்கு  என ஒரு ஒற்றையாட்சி முறைமையை தேடிப்பிடிக்க வேண்டும் என்றார்.

ஒரு முற்போக்குவாத சிந்தனையில் உலகத்திலே ஏனைய நாடுகளில் இருக்கக்கூடிய ஒற்றையாட்சி முறைமைகளை மாற்றி அமைத்து பல இனங்கள், தேசங்கள் கொண்ட நாடுகளில் அங்கு இருக்கக்கூடிய தேசங்களுக்கு ஒரு அங்கத்துவத்தை சமத்துவத்தை வழங்கி ஒற்றையாட்சியை அமர்த்தி வாசித்து அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய வேறுபாடுகளை கொண்டாடி அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும் போக்கு இலங்கைக்கு பொருந்தாது என இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டது.

ஒற்றையாட்சியா? சமஸ்டி  ஆட்சியா என தீர்மானிப்பது ஒரு நாட்டின் இறைமையே. அந்த இறைமை எந்த வகையில் அமைந்துள்ளது என்பதை வைத்துதான் ஒற்றையாட்சியா, சமஸ்டி ஆட்சியா என நீதிமன்றங்கள் தீர்மானிக்கும்.

இலங்கைக்கு 13ஆவது திருத்தமாக கொண்டுவரப்பட்ட மாகாண சபையை நிறைவேற்ற ஆராய்ந்தபோது இலங்கையில் இருப்பது ஒற்றையாட்சி. எனவே இந்த மாகாண சபை முறைமை கூட இந்த ஒற்றையாட்சிக்குள் இருப்பதாகவும் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுகின்ற முதலமைச்சர் கையில் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. மாறாக ஜனாதிபதி நியமிக்கும் ஆளுநரின் கையில்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கும். அதனால் இலங்கையின் மாகாண சபை முறைமை ஒரு ஒற்றையாட்சி முறைமையை மீறவில்லை என பிரகடனப்படுத்தியுள்ளனர்.

அந்த தீர்ப்பு 1987 வழங்கியதன் பின்னர் அதை ஆமோதிப்பதற்கு 32 வருடத்துக்கு மேலாக உச்ச நீதிமன்றம் வழங்கி இன்று இருக்கின்ற ஓற்றையாட்சியை மிக வலிமையாக உறுதிப்படுத்த கூட அது போதாது என்று இந்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றுவதற்கு அன்றை அரசாங்கம் முயற்சித்தது.

எனவே எங்களுக்கு இருக்கும் சவால்... இந்த ஆட்சியில் இருக்கும் அனுர தலைமையிலான ஜே.வி.பி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். தாங்கள் ஆட்சியை  பிடிப்பதாக அவர்கள் 30 வருடங்களாக அரசியல் செய்துகொண்டு ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டனர். அதில் 3 தொடக்கம் 5 வீதமான வாக்கை பெற்ற இவர்கள் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் வேலை செய்து கட்டமைப்பு ரீதியாக தெற்கிலே ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு, 4 பேருக்கு மேல் பிரதிநிதியை எடுக்கமுடியாத சூழலை வைத்துக்கொண்டு அதிசயமாக ஜனாதிபதி தேர்தலில் 43 வீத வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்த 43 வீதம் அவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டே இவர்களுடைய செயற்பாட்டையும் திட்டங்களையும் முற்று முழுதாக உள்வாங்கிக்கொண்டு  வாக்களிக்கவில்லை என அவர்களுக்கு நன்றாக தெரியும். மற்றவர்கள் இந்த நாட்டை கொள்ளையடித்து மாறி மாறி இந்த நாட்டை வங்குரோத்து நிலமைக்கு கொண்டு போயுள்ள கோபத்திலே மற்ற தரப்புக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என மக்கள் முடிவெடுத்திருந்த சூழ்நிலையில் தான் அவர்களுக்கு வாக்களிக்காமல் இன்னொரு தரப்பான  தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கலாம் என்ற அடிப்படையில்தான் ஜனாதிபதி தேர்தலில் இந்த 43 வீத வாக்கு பெற்றனர்.

ஒரு அதிசயமாக கிடைத்த அந்த 43 வீத வாக்கை, தங்களது இருப்பை  உறுதிப்படுத்த வேண்டும். 

அந்த வாக்குகள் எதிர்காலத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டுமாயின் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? 

மற்றவர்களை போல தெற்கில் இருக்கும் மக்களை ஏமாற்றக்கூடாது என்பதுடன் தேர்தலுக்கு முன்பாக வைக்கும் கருத்தை தேர்தலுக்கு பின்னால் அதனை உறுதிப்படுத்துவதன் மூலமும், தான், வாக்களித்த மக்களை கவர்ந்து, நம்பிக்கையை தங்கள் மீது ஏற்படுத்தி, அவர்களை நிரந்தரமாக தங்களுடைய ஒரு வாக்கு வங்கியாக மாற்றி அமைக்கலாம்.

அந்த சூழலிலேதான்  ஜனாதிபதி அனுர மிகவும் மோசமான பிற்போக்குவாதமாக உருவாக்கப்பட்ட இந்த இடைக்கால அறிக்கையை நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு நன்றாக தெரியும் வட கிழக்கில் தமக்கு செல்வாக்கு கிடையாது என. ஆனால் அந்த இடைக்கால அறிக்கை கொண்டுவரும் பொழுது தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் அதை ஆதரிப்பார்கள் என. அது தான் அவர்களுக்கு முக்கியமான தேவை.

2015 வடகிழக்கில் தெரிவு செய்த 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ஆதரித்தனர் என்றால் எதிர்வரும் தேர்தலிலே வரும் பிரதிநிதிகள் குறைந்தது 10 பேராவது ஆதரிப்பார்கள். அவர்களது எதிர்பார்ப்பு நம்பிக்கையின் அடிப்படையில் துணிந்து தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த இடைக்கால அறிக்கையின் நிறைவின் ஊடாக அமையும் என தெரிவித்தார். 

எனவே அனுரவுக்கு நம்பிக்கையான தரப்பு யார்? அன்று அந்த 18 பேரும் யார்? அதில் 16 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பு.  அவர்கள் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும்போது சமஸ்டிக்கான தீர்வினை பெற ஆனையை வழங்குமாறு கேட்டனர். அதனை மக்கள் நம்பி அமோக வெற்றியை கொடுத்தார்கள். அதில் மட்டக்களப்பு மண் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.  அவர்கள் வென்று நாடாளுமன்றம் சென்ற அடுத்த நிமிடம் இந்த ஒற்றையாட்சிக்கு இணங்கினார்கள்.

இவர்கள் தற்போது பிரிந்து கேட்டாலும் நாடாளுமன்றத்துக்கு 10 பேர் சென்று அறுதி பெரும்பான்மை காண்பிப்பார்கள் என்பதே அனுரவின் நம்பிக்கை. 

எனவே சரித்திரத்தில் முதல் தடவையாக தமிழரே ஒற்றையாட்சியை விரும்பி ஏற்றுக் கொள்கின்ற மாபெரும் வரலாற்று துரோகத்தை செய்வதற்கான ஒரு முயற்சியாக 14ஆம் திகதி தேர்தல் அமையக்கூடும்.

 அந்த வரலாற்று மாற்றத்தை தடுக்கக்கூடிய ஒரே ஒரு தரப்பு எம்முடைய மக்கள். அதனால்தான் நாங்கள் இந்த தேர்தல் எங்களுடைய தலைவிதியை அடிப்படையிலே மாற்றி அமைக்கக்கூடிய தேர்தலாக இருக்கின்றது என  எச்சரிக்கை விட்டுக்கொண்டு வருகின்றோம்.

தமிழினம் ஓர் இனவாத இனமல்ல. சிங்களவருக்கு பௌத்தத்துக்கோ நாங்கள் எதிரிகள் அல்ல. எங்களுக்கு இருப்பு பாரம்பரியம் இருப்பதை மற்றவர்கள் மதிக்கவேண்டும்.  அதேவேளை எங்களுடைய அடையாளங்களை  அங்கீகரித்து கொண்டாடவேண்டும். நீங்கள் வேறுபாடுகள் அற்ற கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அதை செய்யாமல் பெரும்பான்மையாக இருக்கின்ற நீங்கள் எங்களின் இருப்பை அழிக்கின்ற வகையில், செய்வதை ஜனநாயகம் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தான் ஒற்றையாட்சி முறைமை ஒரு நாளும் ஒரு பாதுகாப்பை கொடுக்காது என இலங்கையில் ஏற்படுத்திய 3 அரசியல் அமைப்புக்களை தொடர்ச்சியாக நிராகரித்து வந்துள்ளோம்.

அதனால்தான் சர்வதேசம் கூறுகிறது... போர் முடிந்து 15 வருடங்களின் பின்னரும் மாறி மாறி வந்த ஒவ்வொரு அரசாங்கமும் இங்கு ஒரு பயங்கரவாத பிரச்சினை மட்டும்தான் இருப்பதாக சொல்லியும் சர்வதேசம், இல்லை, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் அமைப்பை ஆதரவோடு எப்போது நிறைவேற்றுகின்றீர்களோ. அன்றுதான் இந்த இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாக கருதுவோம் என்றனர்.

எனவே, இந்த அனுரவின் சதித் திட்டத்தை முறியடிக்கும் ஒரே ஒரு தரப்பு நாங்கள்தான். எனவே, 10 பேரை பிரதிநிதிகளாக அனுப்ப மக்கள் ஆணை வழங்கவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/197681

படையினரின் சம்பளங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை

2 weeks 6 days ago

முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் கோரியுள்ளார்.

முப்படையினருக்கு வழங்கப்பட்ட உணவு கொடுப்பனவை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு தமது அரசாங்க ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உணவு கொடுப்பனவை சம்பளத்துடன் சேர்க்குமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் படையினர் கோரி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

படையினரின் சம்பளங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை | Tri Forces Salary Must Increase

படையினரின் சம்பளங்கள் அதிகரிப்பு

எனவே தற்போதைய அரசாங்கம் முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் ஆகியோரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

படையினரின் சம்பளங்களை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/tri-forces-salary-must-increase-1730430548

யாழில் தனியார் காணி ஒன்றை கைப்பற்றும் கடற்படையினரின் நடவடிக்கையை தடுத்த பொதுமக்கள்

2 weeks 6 days ago

யாழ்ப்பாணம் (Jaffna) - மண்டைதீவு பெரியகுளம், கலங்கரை விளக்க கடற்படை முகாமை விஸ்தரிப்பதற்காக தனியார் காணி ஒன்றை அளவீடு செய்யும் நடவடிக்கையை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

அண்மையில், கடற்கரையை அண்மித்த தனியார் காணியை அளவீடு செய்வதற்காக நில அளவை திணைக்கள அதிகாரிகள்
குறித்த இடத்திற்கு வருகை தந்தபோது, காணி உரிமையாளருடன் இடத்திற்கு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளிட்டோர் அந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

காணி உரிமையாளருக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்ததோடு, காணியை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளிடம், தொடர்ந்து பலனளிக்காத இந்த முயற்சியை கைவிடுமாறு குறிப்பிட்டுள்ளனர். 

உரிமையாளரின் அனுமதி 

நில அளவைத் திணைக்களமும், பிரதேச செயலகமும், பொதுமக்களும், உரிமையாளரும் விரும்பாத காணி அளவீட்டுக்காக எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அது கைகூடாத நிலையில், காணி அளவீட்டை மேற்கொள்ளும் செற்பாட்டை கைவிடுவது பொருத்தமான செயல் என அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

யாழில் தனியார் காணி ஒன்றை கைப்பற்றும் கடற்படையினரின் நடவடிக்கையை தடுத்த பொதுமக்கள் | Land Issue Jaffna People Stoped Navy S Activities

பொதுநலனுக்காக என்றாலும், உரிமையாளரின் அனுமதி இன்றி மேற்கொள்ளப்படும் காணி அளவீடு சட்டவிரோதமான செயல் என சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

உரிமையாளர் விரும்பாத இடத்தில் பொது நலனுக்காக காணியை அளவீடு செய்வது சட்டத்திற்கு முரணான செயல். இது, பொது நலனுக்காக எடுக்கப்படலாம், ஆனால் உரிமையாளரும், பொது மக்களும் எதிர்ப்பது பொது நலனாக இருக்க முடியாது.”

தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளை கடற்படையினருக்காக கையகப்படுத்துவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதியின் கீழும் எவ்வித மாற்றமும் இன்றி இந்த முயற்சி தொடர்வதாக வடமாகாண ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

 https://tamilwin.com/article/land-issue-jaffna-people-stoped-navy-s-activities-1730466968

எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகர நிலைமைக்கான ஒரு முன் அறிவிப்பு - ஹிருணிக்கா

2 weeks 6 days ago

image

- எம்.மனோசித்ரா

எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகரமான நிலைமைக்கான ஒரு முன் அறிவிப்பாகும். தற்போதைய அரசாங்கத்துக்கு இது ஒரு சிறந்த முன்னறிவிப்பு இல்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது. 

எதிர்க்கட்சியின் உறுப்பினராக இருந்த போது கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது எந்தளவு கடினமானது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது புரிந்து கொண்டிருப்பார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (01)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் அபாயகரமான நிலைமைக்கான ஒரு முன் அறிவிப்பாகும். பிரதேசசபைக்கான தலைவரை தெரிவு செய்தல், வரவு - செலவு திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் ஆளுங்கட்சி சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும். 

ஓரிரு வாக்குகளால் இவை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக அமையும். எனவே தற்போதைய அரசாங்கத்துக்கு இது ஒரு சிறந்த முன்னறிவிப்பு இல்லை என்பது மாத்திரம் தெளிவாகிறது.

எதிர்க்கட்சியின் உறுப்பினராக இருந்த போது கூறிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது எந்தளவு கடினமானது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது புரிந்து கொண்டிருப்பார். பேசுவதைப் போன்று நடைமுறையில் செயற்படுத்துவது இலகுவானதல்ல.

எரிபொருள் விலைகள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உள்ளிட்டவை தொடர்பிலும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவை எவற்றையும் தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.

தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். 

அதேபோன்று நாணய நிதியத்துடன் இந்த அரசாங்கம் எவ்வாறு பயணிக்கின்றது என்பதும் இரகசியமானதாகவே உள்ளது. அதனையும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

மறுபுறம் பெண்களின் உரிமைகள் தொடர்பில் குரல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் லால் காந்த, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்லவின் மகள் மீது மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

தற்போதைய பிரதமரும் ஒரு பெண் என்ற ரீதியில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/197656

பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் - சாணக்கியன்! வேலன் சுவாமி

2 weeks 6 days ago

பதவி மோகத்தால் தமிழ்தேசியத்தை பலிகடாக்கும் சுமந்திரன் - சாணக்கியன்! வேலன் சுவாமி
Vhg நவம்பர் 01, 2024
1000368096.jpg

தமிழ்தேசிய முகமூடியை அணிந்துக் கொண்டு சுமந்திரன் - சாணக்கியன் போன்றோர், தமிழ்தேசியத்திற்கு எதிராக இதுவரை காலமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என பி2பி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “தமிழரசுக்கட்சியை ஒதுக்குவதற்கான நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம்.

கட்சியை கடந்து தமிழ் தேசியம் என்கின்ற ஒரே இலட்சியத்தை ஒருங்கிணைத்து இந்த நாடாளுமன்ற தேர்தல் இருக்க வேண்டும்.

தமிழரசுக்கட்சியில் சுமந்திரன்  சாணக்கியன் போன்றோர் தாங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் பதவி வேண்டும் என்பதற்காக தமக்கு சார்பானவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தி கீழ்தரமான அரசியலில் ஈடுப்பட்டுள்ளார்கள்.” என்றார்.
 

https://www.battinatham.com/2024/11/blog-post.html

அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து வெளிவந்த உண்மை

2 weeks 6 days ago

அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இது தீவிரவாத குழுவினால் திட்டமிடப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

எயார் வைஸ் மார்ஷல்(ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொண்டா, மற்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (30ம் திகதி) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைவர்களை சந்தித்து இதுபற்றி தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட குழுவை வழிநடத்திய ஈரான் பிரஜை உள்ளிட்ட தலைவர்கள் இந்த வலையமைப்பு தீவிரவாத வலையமைப்புடன் இணைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவாக செயற்பட்ட ஒரு கும்பலின் முயற்சியே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. R

Tamilmirror Online || அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து வெளிவந்த உண்மை

தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிந்தித்தோம் - போல்கார்ட் சின்னத்திலேயே போட்டியிடவேண்டிய நிலை காணப்பட்டது - மஹேல

2 weeks 6 days ago

எதிர்காலத்தில் நானும் எனது நண்பர்களும் போல்கார்ட் (ballguard) சின்னத்தின் கீழேயே தேர்தலில் போட்டியிடவேண்டியிருக்கும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

நீங்கள் அனைவரும் எந்த கட்சி என யோசிக்கின்றீர்கள்,நானும் எனது நண்பர்கள் சிலரும் நாங்கள் இதனை முயற்சி செய்து பார்க்கவேண்டும் என விரும்பினோம்,நாங்கள் கட்சியொன்றை உருவாக்கி ஆர்வத்தை ஏற்படுத்துவோம் என நினைத்தோம்.

ஆனால் கட்சிக்கான பெயர்களை தேடியபோது எல்லா பெயர்களிலும் ஏனையவர்கள் பதிவு செய்திருந்தனர்.

அதன் பின்னர் கட்சியின் சின்னத்துடன் ஆரம்பிப்போம் என தீர்மானித்து கிரிக்கெட் மட்டையை தெரிவு செய்யமுயன்றவேளை அதனை பலவருடங்களிற்கு முன்னரே சி;ன்னமாக சிலர் எடுத்துவிட்டனர்,கிரிக்கெட் பந்தையும் எடுத்துவிட்டனர். நாங்கள் தேடிப்பார்த்தவேளை அவர்களிற்கும் அந்த கட்சிகளிற்கும் கிரிக்கெட்டிற்கும் எந்த தொடர்புமில்லை என்பது புலனாகியது.

எனது நண்பர் ஒருவர் தெரிவித்தது போல இருந்த ஒரேயொரு சின்னம் போல்கார்ட்தான்.

இதன் காரணமாக எங்கள் அரசியல் கனவுகள் கலைந்தன.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிந்தித்தோம் - போல்கார்ட் சின்னத்திலேயே போட்டியிடவேண்டிய நிலை காணப்பட்டது - மஹேல | Virakesari.lk

வல்லை - அராலி வீதியை முழுமையாக திறக்குமாறு மக்கள் கோரிக்கை !

2 weeks 6 days ago

யாழ்ப்பாணம், வல்லை - அராலி வீதியின் மீதமுள்ள வீதியையும் மக்கள் பாவனைக்காக திறந்து விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வல்லை - அராலி வீதியில் தெல்லிப்பளை கட்டுவான் சந்தி பகுதியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி வரையிலான வீதி கடந்த 34 வருடங்களுக்கு மேலாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகிறது. 

குறித்த வீதியில் வெள்ளிக்கிழமை (01) பலாலி வீதியில் உள்ள வசாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலி தோலாகட்டி சந்தி வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரமான வீதியே திறந்து விடப்பட்டுள்ளது. 

மிகுதி வீதி இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளேயே காணப்படுகிறது. அத்தனையும் விரைவில் மக்கள் பாவனைக்கு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தற்போதும் அச்சுவேலி மற்றும் வடமராட்சி பகுதிகளில் வாழும் மக்கள் வலி வடக்கு மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு வருவதற்கு, வல்லை - அராலி வீதியூடாக பயணித்து , வசாவிளான் சந்தியை அடைந்து , குரும்பசிட்டி ஊடாக சுற்றி , மீண்டும் வல்லை - அராலி வீதியை அடைந்தே தமது பயணத்தை தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். 

அதனால் கட்டுவான் சந்திக்கும் வசாவிளான் சந்திக்கும் இடையிலான வல்லை - அராலி வீதியை இராணுவத்தினர் மக்கள் பாவனைக்கு விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

அதேபோன்று வசாவிளான் சந்தியில் இருந்து பொன்னாலை - பருத்தித்துறை வீதியும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள்ளையே காணப்படுகிறது. அந்த வீதியையும் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி வடக்கு பிரதேசத்திற்கு மக்கள் நேரடியாக பயணிக்க முடியாது. காங்கேசன்துறை வீதியூடாகவே பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். 

அதனால் வசாவிளான் சந்தியில் இருந்து பலாலி வடக்கு பகுதிக்கு செல்லும் பலாலி வீதியினையும் முற்றாக மக்கள் பாவனைக்கு இராணுவத்தினர் திறந்து விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அதேவேளை இன்றைய தினம் திறக்கப்பட்ட வீதியின் இரு மருங்கிலும் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் வீதியோரமாக உள்ள ஆலயங்களில் வழிபாடு செய்யவும் அனுமதிகள் மறுக்கப்பட்டிருந்தன . 

எனவே வீதியினை திறந்து விட்டது போன்று , அப்பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்க வேண்டும் எனவும் , அப்பகுதியில் உள்ள ஆலயங்களை புனரமைத்து வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

வல்லை - அராலி வீதியை முழுமையாக திறக்குமாறு மக்கள் கோரிக்கை ! | Virakesari.lk

10 மாதங்களில் 16 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

2 weeks 6 days ago

ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,601,949 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 117,141 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

10 மாதங்களில் 16 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை | Virakesari.lk

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு

2 weeks 6 days ago

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம்,

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைவாக விசேட பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சிபாரிசுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 60 அதிகாரிகள், 2 ஜீப் வாகனங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர மேலதிகமாக அதிகாரிகள் இருந்தால் நாளை (2) அந்த பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி.யிடம் முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும், வழங்கப்பட்ட வாகனங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இருந்தால் அவற்றை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் ஒப்படைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/311434

மாவீரர் தின நினைவேந்தலுக்கு அநுர அரசாங்கம் அனுமதி வழங்குமா?

2 weeks 6 days ago

மாவீரர் தினத்தை நினைவு கூரும் போதும் அநுர அரசாங்கத்தின் உண்மை முகத்தை அறியமுடியும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு - கிழக்கு பகுதியிலும் எமது இளைஞர்கள் அநுரகுமாரவுக்கு பின்னால் அணிதிரள்வது  போன்ற ஒரு நிலமை இருக்கிறது.

அது உண்மையில் ஒரு மாயை. அரசியல் நோக்கத்திற்காக இந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற வேண்டும் என்பதற்காக சினிமா பாணியில் கருத்துக்களை கூறுகிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் அவர்களுடைய உண்மை முகம் தெரியும்.

தமிழ் மக்களுக்காக அநுர என்ன தீர்வினை தரப் போகின்றார் என்பதும், தமிழ் மக்களுக்காக என்ன புதிய விதிமுறைகளை உருவாக்கப் போகிறார்கள் என்பதும் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் தெரியவரும்.

அத்துடன் எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் தினத்தை நினைவு கூருகின்ற போது அவர்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்து தான் அவர்களுடைய நிலைப்பாட்டை அறிய முடியும் எனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/311431

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகள் ஆரம்பம்

2 weeks 6 days ago
image

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (01) துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இம்மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இன்றிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த துப்புரவுப் பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் இணைந்துள்ளனர்.        

01__5_.jpg

01__8_.jpg

01__3_.jpg

01__2_.jpg

download__1_.jfif

download.jfif

download__2_.jfif

https://www.virakesari.lk/article/197624

யாழ். பலாலியில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்வது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2 weeks 6 days ago
image

யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைக்காக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்வது தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் கடந்த செவ்வாய்க்கிழமை (29) வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

download__3_.jfif

வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் வட மாகாண பிரதம செயலாளர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளுராட்சி ஆணையாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவி செயலாளர், வலி. வடக்கு பிரதேச சபையின் செயலாளர், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் இராணுவ உயர் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு செல்லும் பாதைகள் பற்றைக் காடாக காணப்படுகின்றமையால் காணிகளுக்கான பாதைகள் பிரதேச சபையால் துப்புரவு செய்து வழங்கப்படும் எனவும் அதன் பின்னர், பொதுமக்களின் காணிகள் மாவட்ட செயலத்தால் துப்பரவு செயது வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மீள் அளிக்கப்படுகின்ற விவசாய காணிகளுக்குள் மக்கள் சென்று விவசாயத்தில் ஈடுபடக்கூடிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. 

அதன்படி, மின்சார வசதிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/197631

200 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் தம்பதியினர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

2 weeks 6 days ago
WhatsApp-Image-2024-11-01-at-09.18.15.jp 200 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் தம்பதியினர் விசேட அதிரடிப்படையினரால் கைது!

200 கோடி பெறுமதியான 54 கிலோ ஹெரோயினுடன் தம்பதியொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மூன்று விசேட அதிரடிப் பிரிவுகளின் அதிகாரிகள் குழுவொன்று செவநகர நுகேகலய, கிரிவெவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

வீட்டின் முன்றலில் புதைக்கப்பட்டிருந்த மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் மறைத்து வைத்திருந்த 53 கிலோ 65 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அந்த வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த வருடம் 30 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஓமல்பகே தம்மிக்க சமன்குமாரவின் சகோதரி என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1406681

மீன்பிடித்துறை குறித்த இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஆறாவது அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் !

2 weeks 6 days ago
image

மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருதரப்பினரதும் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விடயங்களாக காணப்படுவதால் அவற்றை மனிதாபிமான முறையில் கையாண்டு நிவர்த்தி செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென இந்திய - இலங்கை தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

அத்துடன் இரக்கம், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அணுகுமுறை மட்டுமே இருதரப்பு மீனவர்களாலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்கு நீடித்த அடித்தளமொன்றினை உருவாக்குமெனவும் அவர்கள் இணங்கியிருந்தனர்.

மீன்பிடி விவகாரங்கள் குறித்த இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் ஆறாவது அமர்வு ஒக்டோபர் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

இந்த அமர்வில் கலந்துகொண்டிருந்த இந்திய தூதுக்குழுவுக்கு இந்திய அரசாங்கத்தின் மீன்பிடித்துறை செயலர் டாக்டர் அபிலக்ஷ் லிக்கி தலைமை தாங்கியிருந்த அதேவேளை, மீன்பிடித் துறை, விலங்கு பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சு, வெளியுறவுத் துறை அமைச்சு, தமிழக அரசாங்கம், கடற்படை, கரையோரக் காவல் படை, மத்திய சமுத்திர மீன்வள ஆராய்ச்சி நிலையம் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரலாயம் ஆகியவற்றின் சிரேஸ்ட அதிகாரிகளும் இணைந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை இலங்கை தூதுக்குழுவுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தலைமைதாங்கியிருந்த அதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சு, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், கடற்படை, கரையோரக் காவல் படை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் சிரேஸ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

இந்த அமர்வின்போது மீனவர்கள் தொடர்பாகவும் மீன்பிடித்துறை குறித்தும் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக பரந்தளவான மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இருதரப்பினரதும் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விடயங்களாக காணப்படுவதால் அவற்றை மனிதாபிமான முறையில் கையாண்டு நிவர்த்தி செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர்.

அத்துடன் இரக்கம், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அணுகுமுறை மட்டுமே இருதரப்பு மீனவர்களாலும் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகளுக்கு நீடித்த அடித்தளமொன்றினை உருவாக்குமெனவும் அவர்கள் இணங்கியிருந்தனர்.

இதேவேளை, இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் முற்கூட்டியே விடுதலை செய்யுமாறு இந்திய தரப்பினர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், இலங்கையில் இந்திய மீனவர்களும் அவர்களது படகுகளும் நீண்டகாலத்துக்கு தடுத்து வைக்கப்பட்டு அதிகளவான தண்டப்பணம் விதிக்கப்படுகின்றமை அதிகரித்துள்ளமை தொடர்பாகச் சுட்டிக் காட்டியுள்ள இந்திய தரப்பு, மீனவர்கள் விவாகரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஏற்கனவெ காணப்படுகின்ற புரிந்துணர்வுகள் மற்றும் முறைமைகளைப் பின்பற்றவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியிருந்தது.

இந்தியக் கடற்படை மற்றும் கரையோரக் காவல் படை அதிகாரிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் தற்போது காணப்படுகின்ற ஒத்துழைப்பினை சுட்டிக்காட்டி, கண்காணிப்பு மற்றும் ரோந்து, இருதரப்பு கடற்படையினர் இடையிலான நேரடி இணைப்புகள் மூலமாக கிரமமான தொடர்புகளை மேற்கொள்ளல், மற்றும் ஏனைய சகல செயற்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் மேம்பட்ட ஒத்துழைப்பினை தொடர இரு தரப்பினரும் இணங்கியுள்ளனர். அத்துடன் துரதிஷ்டவசமாக ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த சம்பவங்கள் அண்மையில் கடலில் இடம்பெற்றிருந்தமை தொடர்பாக கவனத்துக்கு கொண்டுவந்திருந்த இந்திய தரப்பு, பலத்தினை பயன்படுத்துவது அனைத்து சந்தர்ப்பங்களிலும் தவிர்க்கப்படவேண்டியதாகுமெனவும் கடுமையாக வலியுறுத்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், மீனவர்களின் விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக இரு நாடுகளினதும் மீனவ அமைப்புகளின் கூட்டத்தினை விரைவில் நடத்தவேண்டுமெனவும் இந்திய தரப்பினரால் வலியுறுத்தப்பட்டிருந்தது. மீனவர்கள் பிரச்சினைக்கு, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளத்தக்கதும் நீண்டகாலம் நீடித்திருக்கக் கூடியதுமான தீர்வு ஒன்றினை எட்டுவது குறித்த விடயங்கள் தொடர்பாக பரந்த பேச்சுகளை முன்னெடுப்பதற்காக கிரமமாகவும் தொடர்ச்சியாகவும் சந்திப்புகளை மேற்கொள்ளவும் இருதரப்பும் இணங்கியுள்ளன.

https://www.virakesari.lk/article/197621

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான அத்தியாயம் விரைவில் முழுமை பெறும் - திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன நம்பிக்கை

2 weeks 6 days ago

image

கடன் மறுசீரமைப்புக்கான அத்தியாயம் விரைவில் முழுமைபெறும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. சீனாவுடன் உயர்தர, முன்னுரிமை திட்டங்களுக்கு புதிய நிதியுதவி உட்பட வலுவான நிதி உறவை மீண்டும் தொடங்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது என்று திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (30) இரவு நடைபெற்ற சீன உதவிப்பயிற்சி மற்றும் பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கைக்கான சீனாவின் ஆதரவு, நாட்டின் அபிவிருத்திக்கு குறிப்பாக உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார உதவித் துறையில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது.

பல ஆண்டுகளாக, துறைமுகங்கள் உட்பட பல்வேறு திட்டங்களில் சீனா பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடுகள் இலங்கையின் தளவாடத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய வர்த்தக மையமாக அதன் நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பாக நெருக்கடியான காலங்களில் இலங்கையின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள சீனா நிதி உதவி மற்றும் கடன்களை வழங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக, சீனாவின் தற்போதைய ஆதரவு பொருளாதார வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கான இலங்கையின் அபிலாஷைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வுடன் இணக்கத்தன்மையை உறுதிசெய்தல், பிறகடன் வழங்குநர்களுடன் ஒப்பிடும் தன்மையை உறுதிசெய்தல் ஆகிய விடயங்களும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையும் எவ்வளவு சிக்கலானது

மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சவாலானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். சீன கடன் வழங்குநர்களுடனான பரஸ்பர நம்பிக்கை மற்றும் இரு தரப்பினரும் வெளிப்படுத்திய நல்ல நம்பிக்கையின் அடிப்படையில் குறித்த சிக்கல்களைக் கடப்பதற்கு சாத்தியமான நிலைமை ஏற்பட்டது.

கடன் மறுசீரமைப்புக்கான அத்தியாயம் விரைவில் முழுமைபெறும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் சீனாவுடன் உயர்தர முன்னுரிமை திட்டங்களுக்குபுதிய நிதியுதவி உட்பட வலுவான நிதி உறவை மீண்டும் தொடங்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அத்துடன், கடனை நிலைத்தன்மை, பொருளாதாரச் செழுமையை நோக்கிய இலங்கையின் பயணத்தில் முக்கியமான படியாக இருக்கும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான உதவிகளை வழங்கிய ஏனைய உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுக்கும் நான் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

கற்கைகளையும், பயிற்சிகளையும் நிறைவு செய்து நாடு திரும்பிய ஏராளமான அதிகாரிகள், இங்கு கூடியிருக்கிறார்கள். நீங்கள் பெற்ற அறிவு மற்றும் திறன்கள் மூலம் உங்கள் பங்களிப்புகள் இறுதியில் நம் நாட்டை மேம்படுத்த உதவும் என்பதால், அவ்வாறு செய்யுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/197594

சமஷ்டியே தீர்வெனக்கூறும் தமிழரசுக் கட்சி இருக்கும் போது “நிழல்” கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை - சுமந்திரன்

2 weeks 6 days ago

image

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஸ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே சமஷ்டியே தீர்வு என கூறி வந்த தமிழரசு கட்சியான அசல் நாங்கள் இருக்கும் போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (31) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

 மாற்றத்திற்கான தேர்தல் என சொல்லப்படுகிறது மாற்றத்தின் ஆரம்பம் என ஜனாதிபதி தேர்தலை சொல்கின்றனர்.  ஒரு வகையில் அது சரி தான். காலம் காலமாக இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில் இருந்து, தற்போது பாரிய மாற்றமாக மூன்றாவது தரப்பு ஆட்சியை பிடித்துள்ளது. 

அவர்கள் ஆட்சியை பிடிக்க ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். ஊழல் கேடான அரசியலில் இருந்து மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். அதனால் தான் 69 இலட்ச மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக இருந்தவரை நாட்டை விட்டு துரத்தினர் 

அப்படி செய்தும் மக்கள் எதிபார்த்த மாற்றம் வராததால் இரண்டரை வருடங்கள் காத்திருந்து, தேர்தல்ஊடாக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். 

மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினார்கள் அவர்கள் முன் தேசிய மக்கள் சக்தியின் மட்டுமே இருந்தனர். அதனால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தனர்.

ஆனால், தமிழ் மக்கள் வாழ்க்கையில் அரசியலில் 75 வருடங்களுக்கு மேலாக நாங்கள் மாற்றத்தை தேடுகிறோம். அதற்காக பல வழிகளில் போராடி , பல உயிர்களை  இழந்துள்ளோம்.

எங்களுடைய மக்கள் 75 வருட காலமாக நியாயமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ் மக்கள் விரும்பிய இந்த அரசியல் மாற்றத்திற்கு தெற்கு மக்கள் பங்கு தாரர்களாக வரவில்லை.

தற்போது மாற்றம் என கூறி ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியினரின்,தேர்தல் கால வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்க தொடங்கி விட்டது.

 பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவது என்ற கோரிக்கையை ஜே.வி.பி யினரும் இணைந்து முன் வைத்தனர். பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்றாக நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க தேவையில்லை. அதனை  துஷ்பிரயோகம் செய்யாது இருந்தால் போதும் என சொல்கின்றனர். இதொரு குத்துக்கரணம். 

பயங்கரவாத தடுப்பு சட்டத்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல தான் ஜேவிபி யினரும்  பாதிக்கப்பட்டனர். 

அதனால் அதனை நீக்க வேண்டும் என முதலில் கூறியவர்கள் தற்போது அதனை துஸ்பிரயோகம் செய்யாது இருந்தால் போதும் என்கின்றனர். 

இவ்வாறாக மக்களுக்கு தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக காற்றில் பறக்க விடப்படுகிறது. 

ஜனாதிபதி தேர்தல் முடிவின் வரைபடத்தில் கோட்டா பாய ராஜபக்சேவிற்கும்  அநுர குமார திசாநாயக்கவிற்கும் கிடைத்த வாக்குகளில் பெரிய வித்தியாசம் இல்லை. 

என்பது தெளிவாக தெரியும். அதாவது  சிங்கவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியை தவிர ஏனைய பகுதியில் அநுராவிற்கு வாக்குகள் கிடைக்கவில்லை.

வடக்கு கிழக்கு மக்கள் 75 வருட காலமாக ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர். அதிகாரங்கள் சரியாக பகிர்ந்து அளிக்க வேண்டும் என நிலைப்பாட்டில் உள்ளனர். 

சமஸ்டி கட்டமைப்பாக அது மாற வேண்டும். அந்த நிலைப்பாட்டை நாங்கள் முன் கொண்டு செல்ல நாடாளுமன்றுக்கு மிக பெரும் பலத்துடன் செல்ல வேண்டும். 

சமஸ்டி என்ற எண்ணத்தையே இழிவாக பேசி அதனை பழித்து உரைத்துக்கொண்டிருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட சமஸ்டி தான் தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர் 

எனவே நாம் முன் வைத்த சமஷ்டி தீர்வையே அனைத்து தமிழ் கட்சிகளும் இன்றைக்கு ஏற்றுக்கொண்டுள்ளனர். 

எனவே அசல் நாங்கள் இருக்கும் போது நிழலுக்கு வாக்கில்ல வேண்டிய தேவையில்லை என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/197603

புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி தேவைகளுக்கு ஒத்துழைப்பளிக்க சீனா தயாராகவே உள்ளது - இலங்கைக்கான சீனத்தூதுவர்

2 weeks 6 days ago

image

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் தேவைகளை சீன அரசாங்கம் முழுமையாகப் பரிசீலித்து,  பொருத்தமான பயிற்சித் திட்டங்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்கு தயாராக உள்ளதாக சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  புதன்கிழமை (30) இரவு நடைபெற்ற சீன உதவிப்பயிற்சி மற்றும் பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,  சீன - இலங்கை மனித வள ஒத்துழைப்பின் நன்மைகளைக் கொண்டாடவும், சீன - இலங்கை நட்புறவு என்றும் நிலைத்திருப்பதை வாழ்த்துவதற்காகவும், சீன உதவிப் பயிற்சி பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வு முதற்தடவையாக நடைபெறுகின்றது. 

சீன பழமொழி “ஒரு மனிதனுக்கு ஒரு மீனைக் கொடுங்கள் ,நீங்கள் அவருக்கு ஒரு நாள் உணவளிக்கிறீர்கள்; ஒரு மனிதனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுங்கள், நீங்கள் அவருக்கு வாழ்நாள் முழுவதும் உணவளிக்கிறீர்கள்” என்று கூறுகின்றது.

சீனாவின் வெளிநாட்டு உதவி பயிற்சி என்பது ஜனாதிபதி ஷி ஜின்பிங்கால் வரையப்பட்ட உலகளாவிய வளர்ச்சியை செயற்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கையாகும். 

அத்துடன் மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்துடன் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.

சீனாவின் வெளிநாட்டு உதவிப் பயிற்சியானது, பகிர்தல், ஆலோசனை, இணைக் கட்டுமானம் ஆகிய விடயங்களை கடைப்பிடிக்கிறது, நாடுகளுக்கு நிர்வாக அனுபவத்தைப் பரிமாறிக் கொள்வதற்கான தளத்தை உருவாக்குகிறது. 

சீன நவீனமயமாக்கலின் வெற்றிகரமான அனுபவத்தை முழுமையாகப் பகிர்ந்து கொள்கிறது. 1950 இல் சீனா வெளிநாட்டு உதவிப் பயிற்சித் திட்டங்களைத் ஆரம்பித்ததில் இருந்து, வளரும் நாடுகளுக்கு 510,000க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரையில் பயிற்சி அளித்துள்ளது.

சீன அரசாங்கம் இலங்கையின் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சீனாவில் சுமார் 13,000 இலங்கையர்கள் இதுவரையில் பயிற்சிகளிலும், கற்கைகளிலும் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள் 1,000 இற்கும் மேற்பட்ட இலங்கைப் பங்கேற்பாளர்கள் பயிற்சிக்காக சீனாவுக்குச்சென்றுள்ளனர், பொது முகாமைத்துவம், விஞ்ஞான ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம், வர்த்தகம், கல்வி, சுகாதாரம், விவசாயம், வனவியல், உட்பட 17 முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாக பயிற்சிகள் மற்றும் கற்கைகள் காணப்படுகின்றது.

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முதன்மையான உற்பத்தி சக்தியாகவும், திறமையே முதன்மை வளமாகவும், புதுமை முதன்மையான உந்து சக்தியாகவும் இருப்பதை நாம் வலியுறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது இந்த நோக்கமானது கல்வி மற்றும் திறமை வளர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

சீன அரசாங்கம் வளரும் நாடுகளுடன் மனித வள ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதோடு ‘குளோபல் சவுத்’ வளர்ச்சியடைவதையும் புத்துயிர் பெறுவதை ஊக்குவிப்பதில் உறுதியுடன் இருப்பதோடு உலகளாவிய முன்னேற்றத்திற்கு வலுவான உத்வேகத்தை அளிக்கின்றது.

புதிய ஆண்டில், இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் தேவைகளை சீன அரசாங்கம் முழுமையாகப் பரிசீலித்து, பொருத்தமான பயிற்சித் திட்டங்களின் செயற்திறனை மேம்படுத்துவதுடன், மேலும் பங்கேற்பாளர்களை சீனாவுக்குச் சென்று கல்வி கற்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், சுமூகமான வேலைச்சூழல்,மகிழ்ச்சியான குடும்பம் நீடிப்பதற்கு வாழ்த்துவதோடு சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நிரந்தர நட்புறவை நான் விரும்புகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/197596

புதிய அரசும் சிங்கள தேசியவாதத்தையே பேசுகிறது - செல்வம் அடைக்கலநாதன்

3 weeks ago

புதிய அரசும் சிங்கள தேசியவாதத்தையே பேசுகிறது selvam-1.jpg

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்கமுடியும் என்பதுடன் அனுர அரசாங்கமும் சிங்களதேசிய வாதத்தையே பின்தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னிமாவட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை (31) வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ,

தமிழ்கட்சிகள் ஒற்றுமை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள ஆதங்கம் உண்மையானது. அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

இந்த தேர்தலில் தமிழ்கட்சிகளாகிய நாம் அனைவரும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழே போட்டியிடுவோம் என்று முயற்சிகளை எடுத்திருந்தோம். அது சாத்தியப்படவில்லை.

எனவே அது மனவேதனையை அழிக்கிறது.இருப்பினும் நாம் ஐந்து கட்சிகள் தற்போது ஒன்றாக இருக்கிறோம். ஏனையவர்களையும் உள்ளேகொண்டுவருவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் செய்வோம்.

தேர்தலின் பின்னராவது தமிழ்கட்சிகள் இணைந்துசெல்வதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவேண்டும்.

அத்துடன் தேர்தலின் பின்னர் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருக்கும்.

அவ்வாறு மக்கள் பாடம் புகட்டும் போது ஒற்றுமையினை ஏற்ப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்ப்படலாம்.எனவே மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்ப்படுபவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அரசாங்கமும் புதிய ஜனாதிபதியும் அது தொடர்பான கருத்துக்களை கூறமறுக்கின்றனர்.

எனவே அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளதாக சொல்லப்பட்ட ஊதியம் கூட்டப்படவேண்டும். எமது கட்சி இதற்காக தொடர்ந்தும் குரல்கொடுக்கும்.

பாராளுமன்றத்தேர்தலில் ஆசனங்களை கூடுதலாக எடுக்கவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே ஊழல் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அரசால் காட்டப்பட்டுகிறது.

அத்துடன் மாகாணசபை முறைமையை ஒழிக்கவேண்டும் என்பது இந்த அரசாங்கத்தின் குரலாக உள்ளது.குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கவேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் இவர்களே. ஆனால் அதனை நீக்குவதற்கான சூழலில் அவர்கள் இருப்பதுபோல தெரியவில்லை.

இடதுசாரித்துவத்தினை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று சிங்களதேசிய வாதத்தோடு இணைந்து செயற்படுகின்றது.

அந்தவகையில் திடமான ஒரு அரசாங்கம் அமைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கும்.

எனவேநாம் 11 ஆசனங்களை பெறும் போது அதிகாரம் மிக்கவர்களாக இருப்போம்.இம்முறை தமிழ்த்தரப்பை புறந்தள்ளி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது. அதனை நிர்ணயிக்கின்ற சக்தியாக தமிழ்த்தரப்பு இருக்கும் என்றார்.
 

 

https://akkinikkunchu.com/?p=297479

Checked
Fri, 11/22/2024 - 02:55
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr