ஊர்ப்புதினம்

கொழும்பு - புத்தளம் வீதியில் போக்குவரத்து தடை

3 months ago
19 AUG, 2024 | 12:45 PM
image
 

கொழும்பு - புத்தளம் வீதியில் மஹவெவ நகருக்கு அருகில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று திங்கட்கிழமை (19) தெரிவித்துள்ளது.

மஹாவெவ தனிவெல்ல தேவாலயத்திலிருந்து மஹாவெவ நகரம் வரையிலான பகுதிகளில் நீர் நிரம்பிக் காணப்படுகின்றது.

சில பகுதிகளில் மூன்று அடிக்கு மேல் நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளியாபிட்டிய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மஹாவெவ லுனு ஓயா மற்றும் ஹெமில்டன் கால்வாயில் நீர் நிரம்பி வழிவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பயணங்களை மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது என மாதம்பே மற்றும் மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொது மக்கள் அனைவரும் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தடுக்குமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/191422

வெடிகுண்டு தாக்கப்பட்ட காருடன் வந்த பொன்சேகா

3 months ago

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா லந்தர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றதுடன் அவரின் முதலாவது தேர்தல் பேரணி கம்பஹா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.

இதன்போது வெடிகுண்டு தாக்கப்பட்ட காரையும் அவர் தனது பேரணிக்கு கொண்டு வந்திருந்தமை  குறிப்பிடத்தக்கது .

image_660503eb13.jpgimage_3f57894da1.jpg

அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர

3 months ago
Anura-Kumara-Dissanayake.webp?resize=750 அர்ஜுனன் மகேந்திரனை சட்டத்தின் முன் நிறுத்துவேன்! -அநுர

நான் தேர்தலில் வெற்றிபெற்றால்,  மத்திய வங்கியில் நிதி மோசடி செய்துவிட்டு சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் ”என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வாக்குறுதியளித்துள்ளார்.

கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  அனுராதபுரத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது ரணில் விக்கிரமசிங்க என்னை அவமதித்து பேசினார். அநுர இதற்கு பதிலளியுங்கள் என ரணில் கூறும் பொழுது அவரது வார்த்தை தவறியதை அனைவரும் அவதானித்திருந்தனர்.

மேலும் நாங்கள் அவரை அவமதிக்க விரும்பவில்லை. தேசிய மக்கள் சக்தியில் இருந்து இந்த நாட்டை ஆள்வதற்கு யார் இருக்கின்றனர் என ரணில் உட்பட அனைவரும் கேட்கின்றனர்.
ஏனைய கட்சிகளிலும் யார் இருக்கின்றனர்? நான் ஒரு பதில் தருகிறேன்.

மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள,
சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற அர்ஜுன மகேந்திரா இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்.
மத்திய வங்கிக்கு பொறுப்பான அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தான்
இந்த கொடுக்கல் வாங்கலுக்கு ஆலோசனை வழங்கியதாக
கோப் குழுவிடம் அர்ஜூன மகேந்திர பதில் அளித்தார்.

அர்ஜுனன் மகேந்திரனை அழைத்து வருவதே எனது முக்கிய வேலை. இதை வாய்வார்த்தையில் கூறாது செயலில் காண்பிக்க விரும்புகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1396387

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : அக்கறையற்ற ஆசிரியர்கள்

3 months ago
வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள்

வடக்கில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே மேற்கொண்ட ஆய்வொன்று திடுக்கிடும்படியான முடிவுகளை தந்துள்ளன.

வடக்கில் உள்ள பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடையே கற்றலில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு அமைந்துள்ளது.

மாணவர்கள் கணித பாடத்தில் எதிர்கொள்ளும் சவால்களை ஆய்வின் ஒரு பகுதியாக கொண்டு பெறப்பட்ட முடிவுகள் இதுவரை சுட்டிக்காட்டப்படாதவையாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த அடைவு மட்டத்தினை மாணவர்கள் பெற்றுக்கொள்வதில் கற்பித்தலில் மட்டும் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் அது சாத்தியமில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் வெளிப்படையாவதும் நோக்கத்தக்கது.

மீத்திறனுடைய மாணவர் 

மாணவர்கள் புரிந்து கொள்ளல் மற்றும் வெளிப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு அவர்களை வகைப்படுத்தலாம்.

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் | Challenge Students North Teachers Not Action

அந்த வகைப்பாட்டின் அடிப்படையில்

01) மீத்திறன் மாணவர்கள்

02) திறன் மாணவர்கள்

03) சாதாரண திறன் மாணவர்கள்

04) மெல்லக் கற்போர்

என்ற நான்கு வகைப்பாட்டினை இந்த ஆய்வில் ஏற்படுத்திக்கொண்டு மாணவர்களிடையே கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு அவை பகுப்பாய்வு செய்யப்பட்டன.

விரைவாக புரிந்து கொண்டு தங்கள் புரிதலை விரைவாக வெளிப்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் மீத்திறன் மாணவர்களாக கொள்ளப்படும்.

இவர்களிடையே அதீத நினைவாற்றல் இருப்பதும் அறிந்த தகவல்களை முன்னர் அறிந்து கொண்ட தகவல்களோடு ஒப்பிட்டு பகுப்பாய்ந்து சூழலுக்கு பொருத்தமான முடிவுகளை வெளிப்படுத்துவதில் திறமையானவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

சுயமாக பாடப்பரப்புக்களை கற்றுக்கொள்வதிலும் கூட இவர்கள் ஆர்வத்தைக் கொண்டுள்ளனர். பாடசாலைக் கற்றல் பாடப்பரப்புக்களுக்கு மேலதிகமாக சமூகம் சார்ந்தும் அவர்களது சுயவிருப்பத்திற்கு ஏற்ற முறையில் புதிய துறைகள் சார்ந்து முயன்று கற்றுக்கொள்வதில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளனர்.

ஆசிரியர்கள் காட்டும் அக்கறை

இசைத்துறையில் இசைக்கருவிகளை பயிலல், நடனம், வரலாற்றுத் தேடல், மேம்பட்ட பொருளாதாரம், இலக்கிய ஈடுபாடு, படைப்பாற்றலை வெளிப்படுத்தல், கற்றபடி சுயமாக வருமானமீட்டல், விளையாட்டு, தற்காப்புக்கலை என அவர்களது ஈடுபாடுகள் உள்ள சில துறைகளை அவதானத்தின் அடிப்படையில் எடுத்துக்காட்ட முடியும்.

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் | Challenge Students North Teachers Not Action

மீத்திறனுடைய மாணவர்கள் நேர முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு நேர்த்தியுடையவர்களாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த வகைப்படுத்தலுக்கு ஏற்ப வடக்கின் பின்தங்கிய பாடசாலைகளில் அதிகளவான மீத்திறன் வெளிப்பாடுடைய மாணவர்களை இனம் காண முடிகின்றது.ஆயினும் அவர்களது ஆற்றல்களை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் காட்டும் அக்கறை போதியளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திறனுடைய மாணவர்கள் 

திறனுடைய மாணவர்கள் மீத்திறனுடைய மாணவர்களைப் போன்று புரிதலையும் பொருத்தப்பாடான வெளிப்படுத்தலையும் செய்வதில் சற்றுக் குறைவான திறனை வெளிப்படுத்துபவர்களாக உள்ளனர்.

இவர்களிடையே நினைவாற்றல் குறைந்தளவில் இருப்பதை இனம்காண முடிந்தது.இதனால் முன்னர் அறிந்து கொண்ட தகவல்களோடு இப்போது அறிந்து கொள்ளும் தகவல்களை ஒப்பிட்டுப் பகுப்பாய்வினைச் செய்து கொள்வதில் அதிக சிரமங்களை எதிர்கொள்ளுகின்றனர்.

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் | Challenge Students North Teachers Not Action

சில திறனுடைய மாணவர்களுக்கு உடன் முன் நினைவூட்டல் இருக்கும் போது அவர்கள் தங்கள் ஒப்பீட்டாற்றலை சிறப்பாக வெளிப்படுத்துவதனையும் அத்தகைய முன் நினைவூட்டல் கிடைக்காத போது சிறப்பான ஒப்பீட்டைச் செய்து கொள்வதில் சிரமப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலைமை அவர்களிடையே நிலவும் போசாக்கு குறைபாட்டினால் ஏற்படுவதாகவும் அது சீர் செய்யப்பட்டால் இத்தகைய மாணவர்கள் மீத்திறன் வெளிப்பாட்டுக்கு தயாராக வாய்ப்பேற்படும் எனவும் துறைசார் வைத்திய ஆலோசனை மூலம் அறிய முடிந்ததும் இங்கே நோக்கத்தக்கது.

திறனுடைய மாணவர்கள் மீத்திறனுடைய மாணவர்களாக அல்லது அரைமீத்திறன் உடைய மாணவர்களாக மாற்றம் பெற்றுக்கொள்ளச் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கில் பின்தங்கிய பாடசாலைகளிடையே உள்ள மாணவர்களில் அதிகளவான மாணவர்கள் திறனுடைய மாணவர்களாகவே ஆசிரியர்களாலும் கல்விச் சமூகத்தினாலும் இனம் காணப்பட்டு வரும் நிலையும் இருந்து வருகின்றது.இது கவலைக்குரிய விடயமாகும்.

மீத்திறனுடைய மாணவர்கள் உரிய காலத்தில் கிடைக்க வேண்டிய போதியளவு ஊட்டச்சத்து கிடைக்காமையினால் திறனுடைய மாணவர்களாக அல்லது அதற்கு கீழ் மட்ட திறன் நிலலைகளை வெளிப்படுத்தும் துர்ப்பாக்கிய நிலையில் இருப்பது கண்டு கொள்ளப்படவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்படும் திட்டமான முடிவுகளில் ஒன்றாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே திறன் வெளிப்பாடுடைய மாணவர்களில் பாதிக்கும் அதிகமானோரை மீத்திறன் மாணவர்களாக வளர்த்தெடுக்க முடியும் என்ற எண்ணக்கருவும் இந்த ஆய்வின் போதன அவதானிப்புக்கள் மற்றும் அவைசார்பாக எழுப்பப்படும் வினாக்களுக்காக துறைசார் நிபுணர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆலோசனைகள் மூலமும் எழுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீழ்மட்ட நிலைகள் 

சாதாரண திறனுடைய மாணவர்கள் மற்றும் மெல்லக் கற்போர் என்ற கீழ்மட்ட நிலைகளில் வகைப்படுத்தப்படும் மாணவர்கள் கற்றலில் புரிதலையும் அதன்பால் பொருத்தப்பாடான வெளிப்படுத்தல்களையும் மிகக் குறைந்தளவிலேயே வெளிப்படுத்துகின்றவர்களாக உள்ளனர்.

இவர்கள் மீது தாக்கம் செலுத்தும் காரணிகள் சிக்கல் தன்மையானவையாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.பொருத்தமான முதல் நிலைக் காரணியை தெளிவாக அறிந்துகொள்ள மேலும் முனைப்பான ஆய்வுகள் தேவை.

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் | Challenge Students North Teachers Not Action

கிடைத்த தகவல்களின் மூலம் போசாக்கின்மையும் ஒரு காரணி என அறிந்துகொள்ள முடிகின்றது.ஆயினும் இது மட்டுமே எல்லைப்படுத்தும் காரணியாக இருந்து விடும் என சொல்லிக்கொள்ள முடியாது.

சில கிராமங்களில் மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் திறன் மாணவர்களாக இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் படிக்காதவர்களாகவும் வசதியற்றவர்களாகவும் இருக்கும் போது அவர்களது பிள்ளைகள் முனைப்பான திறன் வெளிப்பாடுகளை கொண்டுள்ளமையானது கீழ் மட்ட நிலைகளில் தரப்படுத்தும் மாணவர்கள் தொடர்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் சிக்கல் தன்மையானவை என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துரைக்க முடியும்.

இவர்களிடையே மனநிலை மற்றும் வாழிடச் சூழலும் செல்வாக்குச் செலுத்தி நின்றன என்பதையும் அவதானிக்க முடிகின்றது.

வடக்கில் பின்தங்கிய பாடசாலைகளில் கல்வியைத் தொடரும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அவர்களது பாடசாலைச் சூழலும் பாரியளவிலான பங்களிப்பைச் செய்ய வேண்டியதாக இருப்பதும் அறியப்படுகிறது.

நகர்ப்புற பாடசாலைகளில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களின் பொறுப்புக்கு மேலாக பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இருக்கும் பொறுப்புக்கள் அதிகமாக இருப்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

எடுக்கப்பட்ட முயற்சிகள் 

பாடசாலைகளில் நடைபெறும் தேசிய பரீட்சைகளில் 100 வீத சித்தியை ஒவ்வொரு பாடங்களிலும் பெற்றுக்கொள்வதற்காக பின்தங்கிய பாடசாலைகளிலும் அதிகமாகவே முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அவை இலக்கை அடைந்தவையாக இல்லை என்பதும் இந்த ஆய்வின் போது அறிந்து கொள்ள முடிந்ததும் குறிப்பிடத்தக்கது.

பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் போது சித்தியடைய முடியாத மாணவர்கள் என்று ஆசிரியர்களால் கருதப்படும் மாணவர்கள் தவிர்க்கப்பட்டு வருகின்றனர்.

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் | Challenge Students North Teachers Not Action

அத்தகைய மாணவர்கள் அடுத்த வருடம் பரீட்சை எழுதப் பணிக்கப்படுகின்றனர். அல்லது தனிப்பட்ட பரீட்சார்த்தியாக எழுதும்படி வழிகாட்டப்படுகின்றனர் என்று ஆய்வுக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய சூழலுக்கு முகம் கொடுத்த மாணவர்களது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலை தொடர்பில் கருத்திட்ட சமூக ஆர்வலர்கள் மாணவர்களின் உரிமைகள் மீறப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

பல கிராமப்புற பாடசாலைகளில் பரீட்சைக்கு விண்ணப்பிப்பது தொடர்பில் இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு பரீட்சை முடிவுகளில் 100 வீத சித்தியை காண்பிப்பதன் மூலம் சிறந்த கற்பித்தல் நடைபெற்றுவருவதாக காட்டபாபட்டு பாராட்டுக்களை பெற்றுக்கொளாவது கவலைக்குரிய விடயமாகும்.

இதனால் பல மாணவர்களது பாடசாலை இடைவிலகலுக்கு பாடசாலைகளின் மேற்படிச் செயற்பாடுகள் காரணமாவதும் நோக்கத் தக்கது.

மெல்லக் கற்போருக்கான மேலதிக வகுப்புக்களை முறைசார முறையில் முன்னெடுக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களும் உள்ளன.எனினும் இவை உரிய தொடர்ச்சியைப் பேணி இலக்கை அடைந்ததாக அவதானிக்க முடியவில்லை.

மீத்திறன் மாணவர்களின் சவால் 

சில பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள மீத்திறன் மற்றும் அரை மீத்திறன் மாணவர்கள் பாடசாலைகளிலும் மாலை நேர கல்வி நிலையங்களிலும் பாரிய சவாலை எதிர்கொண்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது.

எனினும் இது தொடர்பில் கவனமெடுக்க வேண்டிய ஆசிரியர்கள் கவனமெடுக்காது நடந்து கொள்கின்றனர். A தரச் சித்தியைப் பெற வேண்டிய மாணவர்களை S தரச் சித்தியைப் பெற வைப்பதற்காக முயற்சிக்கப்படுவதாக தன் கருத்துக்களை எழுத்தாளரும் ஊடகவியலாளருமாக பணியாற்றிவரும் நதுநசி தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

வடக்கில் மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய சவால் : நடவடிக்கை எடுக்காத ஆசிரியர்கள் | Challenge Students North Teachers Not Action

மீத்திறன் மற்றும் அரை மீத்திறன் உடைய மாணவர்களோடு மெல்லக் கற்போர் மற்றும் சாதாரண திறனுடைய மாணவர்களை ஒரே வகுப்பறையில் வைத்து கற்பிக்கும் போது மெல்லக்கற்போரும் புரிந்து கொண்ட பின்னரே அடுத்த பாடப்பரப்புக்குச் செல்லும் சூழல் இருப்பதால் மீத்திறன் மாணவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும் இவ்வாறான வகுப்பறைகள் தொடர்பில் இவற்றொடு தொடர்புடைய ஆசிரியர்கள் மற்றும் இப்பாடசாலை அதிபர்களுடன் உரையாடிய போது அவர்கள் மீத்திறன் அரை மீத்திறன் மாணவர்களின் அசௌகரியங்களை இனங்கண்டு கொண்டவர்களாக இருக்கவில்லை என்பதை அறிய முடிந்தது.

மீத்திறன் அரை மீத்திறன் மாணவர்களின் நிலைகளை சுட்டிக்காட்டிய போதும் அது தொடர்பில் பொறுப்பான பதிலளிப்புக்களை அவர்களிடம் இருந்து பெற முடியவில்லை.

மாணவர்களின் உணர்வுகளை அவர்களது சூழல் சார்ந்து அவதானித்து அதன்பால் சரியான முறையில் அவர்கள் வழிகாட்டப்படாது போனால் வடக்கில் உள்ள பின்தங்கிய மாணவர்களின் நிலை எதிர்காலத்தில் மோசமாகும் வாய்ப்புக்களை அதிகம் எதிர்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.            

https://tamilwin.com/article/challenge-students-north-teachers-not-action-1724050732

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை அம்பலப்படுத்துவேன்; சஜித்

3 months ago

மக்களின், குறிப்பாக கத்தோலிக்க சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை அம்பலப்படுத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்திற்கு விஜயம் செய்த பிரேமதாச, கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் கொழும்பு பேராயர் உதவி ஆயர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டபோது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் உண்மையை வெளிக்கொணர ஒரு தெளிவான திட்டம் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்ட சஜித்,

ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டதா என்றும், உண்மை முழுமையாக வெளிப்படுத்தப்பட்டதா என்றும் கத்தோலிக்க சமூகம் தலைமையிலான முழு தேசமும் கேள்வி எழுப்புவதாக அவர் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/308049

யாழ். கடலில் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு

3 months ago

Published By: DIGITAL DESK 3   19 AUG, 2024 | 10:28 AM

image
 

யாழ்ப்பாண கடலில் சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 

புத்தளம் பகுதியைச் சேர்ந்த சேவுதாதின் முகமதுதாவீன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். 

வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடற்பகுதியில் சிலிண்டரை பயன்படுத்தி சுமார் 100 அடி ஆழத்தில் கடலட்டை பிடித்துக்கொண்டிருந்த வேளை, நெஞ்சு வலிப்பதாக கூறி, கடலின் மேல் பகுதிக்கு வந்துள்ளார். 

அதனை அடுத்து சக தொழிலாளிகள் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார். 

https://www.virakesari.lk/article/191410

அரியநேத்திரனுக்கு இரண்டு வார அவகாசம்; கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கவும் தடை

3 months ago

அரியநேத்திரனுக்கு இரண்டு வார அவகாசம்; கட்சிக் கூட்டங்களில் பங்கேற்கவும் தடை

பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேத்திரனுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்றையதினம் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதான வேட்பாளர்களுடன் போச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எமது அடிப்படை நிலைப்பாடு வடக்கு – கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு ஆகும்.

மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாகவும், பேசிய விடயங்களையும் கூட்டத்தில் தெரியப்படுத்தினோம். சில முன்னேற்றகரமான கருத்துக்களை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அவர்களது தேர்தல் அறிக்கை வெளிவந்த பின்னரே எமது இறுதி முடிவு எடுக்கப்படும்.

நாமல் ராஜபக்ஸ அவர்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து சந்தித்து இருந்தார். அவர்களிடம் உள்ள விடயங்களை தெரியப்படுத்தினார்.

அது அதி தீவிர சிங்கள வாக்குளை பெற்றுக் கொள்வதை நோக்கமாக கொண்டிருந்தது. அதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடியிருந்தோம். தற்போது தெற்கில் சிங்கள பௌத்த பேரினவாதம் தலைத் தூக்காமல் உள்ளது. அது தொடர்பில் கலந்துரையாடினோம்.

எமது மக்களை வழிகாட்டுவதற்காக நாங்கள் ஆவணம் ஒன்றை தயாரிக்கவுள்ளோம். அதற்கான சிறு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் பொது வேட்பாளராக வர்ணிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது என குறிப்பிட்டார்.
 

https://thinakkural.lk/article/308047

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்!

3 months ago
sajith-2-1.jpg?resize=750,375 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்போம்!

தான் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை  முற்றாக ஒழிக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்காவது வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த நாட்டை அடி பாதாளத்துக்குள் தள்ளிய ராஜபக்ஷாகளுக்கு பிரதான பாதுகாவலராக இந்த நாட்டின் ஜனாதிபதி இருந்து வருகிறார்.

நான் இந்த ஜனாதிபதி கதிரைக்கு மக்களின் வாக்குகளாலே தெரிவு செய்யப்பட வேண்டும். இந்த நாட்டின் உரிமையாளராக அன்றி தற்காலிக பொறுப்பாளராக பொது மக்களின் சேவகனாக இருந்து திருடர்களால் திருடப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீண்டும் நாட்டுக்கு பெற்றுக் கொடுப்பேன்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1396322

விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர்

3 months ago

விமல் தரப்பினர் நல்லூர் கந்தனை வழிபட்டனர்

Freelancer   / 2024 ஓகஸ்ட் 18 , பி.ப. 08:59 - 0    

 

ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தற்போது திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், அவர்கள் நேற்று அங்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, சர்வஜன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று  இடம்பெற்றது. (a)

image_2fa8dbb464.jpg

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/விமல்-தரப்பினர்-நல்லூர்-கந்தனை-வழிபட்டனர்/175-342396

மட்டு நகரில் பிரபல உணவகத்தை 22ஆம் திகதி வரை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

3 months ago

Published By: VISHNU   18 AUG, 2024 | 06:11 PM

image
 

மட்டக்களப்பு நகரில் இயங்கிவரும் பிரபல உணவகம் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உணவகத்தை எதிர்வரும் 22ம் திகதிவரை தற்காலிகமாக மூடுமாறு ஞாயிற்றுக்கிழமை (18) உத்தரவு பிறப்பித்ததையடுத்து உடன் பொது சுகாதார பரிசோதகர்கள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.

IMG_2905.JPG

குறித்த பிரபல உணவகத்தின் கழிவு நீர் வெளியேறி வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கி நிற்பதுடன் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு தெரிவித்து வந்தனர்.

WhatsApp_Image_2024-08-18_at_04.55.33.jp

இந்த நிலையில் குறித்த உணவகத்தை புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ.யசோதரன் தலைமையிலான பரிசோதகர்கள் முற்றுகையிட்டு பரிசோதனையிடனர் இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோழி இறைச்சியை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமையை கண்டுபிடித்து கைப்பற்றியதுடன் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி கழிவு நீரை வெளியில் திறந்துவிட்ட வந்துள்ளதை கண்டுபிடித்தனர்.

WhatsApp_Image_2024-08-18_at_04.55.34.jp

இந்த சுகாதார சீர்கேடு தொடர்பாக 1980ம் ஆண்டு 26 ம் இலக்க உணவு சட்டத்தின் 13 (1) ஆம் பிரிவின் கீழ் குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது பொது சுகாதார பரிசோதகர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஞாயிற்றுக்கிழமை (18) வழக்கு தாக்குல் செய்ததுடன் குறித்த உணவகத்தின் மீது கடந்த மாச் மாதம் 14 ம் திகதி மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவு வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளி என இனங்காணப்பட்டு தண்டப்பணம் செலுத்தினர் என நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து  நீதவான் உடனடியாக குறித்த உணவகத்தை எதிர்வரும் 22ம் திகதிவரை தற்காலிகமாக மூடீ சீல்வைக்குமாறு உத்தரவிட்டார்.

IMG_2872.JPG

இதனையடுத்து மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் யோகேஸ்வரன் மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் வேணிதரன், கோட்டமுனை பிரிவு பொது சுகாதர பரிசோதகர் ரி.மிதுன்ராஜ், புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ.யசோதரன் ஆகியோர் குறித்த உணவகத்தை முற்றுகையிட்டு மூடி சீல் வைத்தனர்.

https://www.virakesari.lk/article/191377

ஆகஸ்ட் 30 - சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தன்று விசேட கவனயீர்ப்புப் பேரணிக்கு அழைப்பு

3 months ago

Published By: DIGITAL DESK 7   18 AUG, 2024 | 11:04 AM

image

(நா.தனுஜா)

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதியன்று வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திலிருந்து டிப்போ சந்தி வரை விசேட கவனயீர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், கடந்த கால மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை. அதேவேளை நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், தமக்குரிய நீதியை நிலைநாட்டுமாறும் கோரி வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2000 மேலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஆகஸட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அன்றைய தினம் கடந்த வருடங்களைப் போன்று விசேட கவனயீர்ப்புப் பேரணியை முன்னெடுப்பதற்கு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக திரளவுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் காலை 10.00 மணிக்கு டிப்போ சந்தியை நோக்கிப் பேரணியாகச் சென்று, அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபை கிளை அலுவலகத்தின் அதிகாரிகளிடம் தமக்கான நீதியைக் கோரி மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளனர்.

'வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் உறவுகளினதும், ஏனைய சகல தரப்பினரதும் ஆதரவுடன் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட எமது கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் 2749ஆவது தினத்தைப் பூர்த்திசெய்யவுள்ள நிலையில், அன்றைய தினம் எமது போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்' என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது. 

https://www.virakesari.lk/article/191350

யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம் : சித்தப்பா உட்பட மூவர் கைது

3 months ago
18 AUG, 2024 | 03:03 PM
image

யாழ்ப்பாணத்தில் மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு  பருத்தித்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சுகவீனம் காரணமாக இந்த யுவதியை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தவேளையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் யுவதி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தபோது தாயின் சகோதரியினது கணவர் (சித்தப்பா) மற்றும் இரு இளைஞர்கள் என மூன்று பேர் இணைந்து யுவதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  முதல் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளனர். சில தடவைகள் கூட்டு வன்புணர்வுக்கும் யுவதியை உட்படுத்தியுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் யுவதியின் சிறிய தந்தை உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.

விசாரணைகளின் பின்னர், பருத்தித்துறை பதில் நீதவான் முன்னிலையில் மூவரையும் முற்படுத்தியதையடுத்து, பதில் நீதவான் சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

https://www.virakesari.lk/article/191364

வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை? – பிரதான வேட்பாளா்கள் கோாிக்கை!

3 months ago
39 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல்-தேர்தல் ஆணையம்! வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை? – பிரதான வேட்பாளா்கள் கோாிக்கை!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1000 ரூபா வரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான முன்மொழிவுகள் குறித்த இறுதித் தீர்மானம் எதிர்காலத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும்; அவர் கூறியுள்ளார்.

தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வேட்புமனுக்கள் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் ஒரு வாக்காளருக்குச் செலவிடப்படும் அங்கீகரிக்கப்பட்ட தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் எனவும், அது குறித்து முடிவெடுப்பதற்காக வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட்ட தொகை தொடர்பான அறிக்கையை ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த 20 நாட்களுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வழங்குப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக ஒரு வேட்பாளருக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நிறுவனத்திற்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

தேர்தல் காலத்தில் பல்வேறு நன்கொடைகள் செய்து வாக்களிக்க முயற்சிப்பதன் மூலம் வாக்காளர் அவமானப்படுத்தப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2024/1396259

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் - முன்னேற்றத்தை உன்னிப்பாக அவதானிக்கின்றது அமெரிக்கா

3 months ago
18 AUG, 2024 | 10:37 AM
image
 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலாளர் ரிச்சர்ட் ஆர் வெர்மா இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அவர் மீள வலியுறுத்தியுள்ளார்.

வலுவான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்றது முதல் இலங்கை அதிகாரிகளிற்கு ஆதரவாக சட்ட விசாரணை ஆதரவினை இலங்கை வழங்கிவருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்கும் பொறுப்புக்கூறும் இலக்கை அமெரிக்கா பகிர்ந்துகொள்கின்றது ,விசாரணைகள் தொடரும் இவ்வேளையில் எங்கள் இணைந்த செயற்பாடுகளில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,என வெர்மா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/191351

அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய கடற்றொழில் படகுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

3 months ago

அண்மையில் திருத்தப்பட்ட கடற்றொழில் விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாலும்,  இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாலும், அண்மைய மாதங்களில்  இலங்கை கடலுக்குள் இந்திய மீன்பிடிக்கும் இழுவை படகுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதை வடக்கின் கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.

அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டமை, இரண்டாவது தடவையாக குற்றமிழைத்தவர்களுக்கு பாரிய தண்டனைகள் மற்றும் சிறைத்தண்டனைகளை வழங்கியமை என்பன இதற்கான காரணமாக இருக்கலாம் என்று ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா கருத்து தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டனை

இந்தநிலையில்  இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக அண்மைக்காலமாக இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய கடற்றொழில் படகுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி | Fewer Indian Trawlers Stricter Laws Sl Navy Action

இறையாண்மையுள்ள தேசம் என்ற வகையில் எமது வளங்களைப் பாதுகாப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம், நெடுந்தீவுக்கு அருகில் கைப்பற்றப்பட்ட இழுவைப்படகு உரிமையாளர்களுக்கு 4 மில்லியன் மற்றும் 8 மில்லியன் ரூபாய் அபராதங்களை விதித்தது.

7 கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விழிப்புணர்வு பிரசாரங்கள்

இதேவேளை, அண்மை மாதங்களில் மன்னாருக்கு வடக்கே பிரவேசிக்கும் இந்திய படகுகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், தெற்கே பல இழுவை படகுகளை காணமுடிவதாக ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் இந்திய கடற்றொழில் படகுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி | Fewer Indian Trawlers Stricter Laws Sl Navy Action

இதற்கிடையில் இராமேஸ்வரத்தில் உள்ள தமிழக கடற்றொழிலாளர் சமூகங்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி  இலங்கை கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என்று இந்திய அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரங்களை தொடங்கியுள்ளனர்.

அத்துடன், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய கடற்படை, சுங்கம், கடற்றொழில் துறை மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள், அண்மையில் கடற்றொழிலாளர் சமூகத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

https://tamilwin.com/article/fewer-indian-trawlers-stricter-laws-sl-navy-action-1723952128

 

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் கடத்தல் - சிறுவனை மீட்டு கடத்தியவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

3 months ago
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் கடத்தல் - சிறுவனை மீட்டு கடத்தியவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் 
17 AUG, 2024 | 05:59 PM
image

வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை கடத்தல்காரர் ஒருவர் கடத்தி, காட்டுக்குள் கொண்டு சென்றதையடுத்து, சிறுவனை மீட்டு, கடத்திய நபரை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று  சனிக்கிழமை (17) அதிகாலை மட்டக்களப்பு  வாகரை பிரதேசத்தில் இடம்பெற்றது. 

இதனால் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதாகவும் கைதான நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் தாய், தந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிறுவன் பால் கேட்க, சிறுவனின் தாயார் தந்தைக்கு பக்கத்தில் சிறுவனை விட்டுவிட்டு சமையலறைக்குச் சென்றுள்ளார். 

பின்னர், பால் போத்துலுடன் திரும்பி வந்து பார்த்தபோது சிறுவனை காணாத நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு சிறுவனை தேடியுள்ளனர்.

இதன்போது சிறுவனை கடத்திக்கொண்டு நபரொருவர் காட்டுப் பகுதிக்கு செல்வதை கண்ட மக்கள் காட்டை சுற்றி தேடியுள்ளனர். 

இந்நிலையில், சிறுவனை காட்டில் விட்டுவிட்டு சந்தேக நபர் அந்த பகுதியில் ஒளிந்திருந்தபோது, அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் சிறுவனை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர் வாழைச்சேனை செம்மண் ஓடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்; போதைப்பொருளுக்கு அடிமையானவர்; ஏற்கெனவே பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையவர்; பதிவு செய்யப்பட்ட குற்றவாளிப் பட்டியலில் (ஜ.ஆர்.சி) சேர்க்கப்பட்டவர் எனவும் போதைப்பொருள் வாங்க பணத்துக்காக சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயற்சித்துள்ளதாகவும் சந்தேக நபர் தொடர்பான பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 கைது செய்யப்பட்டவர் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/191329

இலங்கை இராஜதந்திரிக்கு எதிரான அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத் தீர்ப்பு - வெளிவிவகார அமைச்சு

3 months ago
இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலகவுக்கு எதிரான அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத் தீர்ப்பு - வெளிவிவகார அமைச்சு
18 AUG, 2024 | 06:58 AM
image

(நா.தனுஜா)

இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக அவுஸ்திரேலியாவுக்கான பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அந்நாட்டு நியாய ஊழியச் சட்டத்தை மீறி செயற்பட்டிருக்கிறார் எனவும், அதற்காக அக்காலப்பகுதியில் அவரது வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பிரியங்கா தனரத்னவுக்கு அவர் 543,000 டொலர்களைச் செலுத்தவேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

இருப்பினும் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, அப்பணிப்பெண்ணுக்கு அமைச்சின் ஊடாக அனுமதியளிக்கப்பட்டு, இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொடுப்பனவு முழுமையாக செலுத்தப்பட்டிருப்பதாகவும், அவர் (பிரியங்கா) ஹிமாலி அருணதிலக நாடு திரும்புவதற்கு முன்பதாக உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இரகசியமாக வெளியேறியதாகவும் தெரிவித்திருக்கிறது.

தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகப் பதவி வகிக்கும் ஹிமாலி அருணதிலக, கடந்த 2015 - 2018 வரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றினார். அப்போது ஹிமாலி அருணதிலகவின் கன்பரா இல்லத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக இலங்கையைச்சேர்ந்த பிரியங்கா தனரத்ன இணைந்துகொண்டார்.

அங்கு மூன்று வருடங்களாக வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றிய பிரியங்காவுக்கு, அம்மூன்று ஆண்டுகளில் இரு நாட்கள் மாத்திரமே ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. அதுவும் உணவு சமைக்கும் போது அவரது கையில் தீக்காயம் ஏற்பட்டதன் காரணமாகவே அந்த ஓய்வு வழங்கப்பட்டதாக சிட்னியை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சட்டத்தரணி டேவிட் ஹிலார்ட் தெரிவித்திருக்கிறார்.

மேற்குறிப்பிட்டவாறு முழுமையாக மூன்று ஆண்டுகள் வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பிரியங்காவுக்கு அதற்காக மொத்தமாக 11,212 டொலர்கள் மாத்திரமே ஊதியமாக வழங்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் பிரியங்கா அவுஸ்திரேலியாவில் பணியாற்றத் தொடங்கிய 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாரமொன்றில் 36 மணிநேரப் பணிக்கான தேசிய மட்டத்திலான குறைந்தபட்ச ஊதியம் 656.90 டொலர்கள் எனவும் டேவிட் ஹிலார்ட் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதுமாத்திரமன்றி அனுமதிக்கப்பட்டதை விட அதிக நேரம் பணிக்கு அமர்த்தியிருத்தல் மற்றும் நிர்ணயிக்கப்பட்டதை விடவும் குறைந்தளவு ஊதியமே வழங்கப்பட்டிருத்தல் ஆகியவற்றின் விளைவாக ஹிமாலி அருணதிலகவினால் அவுஸ்திரேலியாவின் ஊழியச்சட்டம் மீறப்பட்டிருப்பதாகவும், இது 'நவீன அடிமைத்துவத்துக்கு' சிறந்த உதாரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தில் நியாயமான ஊழியச்சட்டத்தின் கீழ் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக பிரியங்கா தனரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் சார்பாக சட்டத்தரணி டேவிட் ஹிலார்ட் ஆஜராகியிருந்தார்.

இவ்வழக்கின் மீதான விசாரணைகளை அடுத்து, ஹிமாலி அருணதிலகவினால் நியாய ஊழியச்சட்டம் பல்வேறு வழிகளில் மீறப்பட்டிருப்பதாகவும், எனவே அவர் செலுத்தவேண்டியிருக்கும் 374,000 டொலர் நிலுவைச் சம்பளத்துடன், வட்டியாக 169,000 டொலரைச் சேர்த்து மொத்தமாக 543,000 டொலர்களை பிரியங்கா தனரத்னவுக்குச் செலுத்துமாறு அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இருப்பினும் இவ்விவகாரம் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டு வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், வெளிநாடுகளில் இராஜதந்திரப்பதவிகளுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகள் அவர்களது உதவிக்கென பணியாளர் ஒருவரை அழைத்துச்செல்வதற்கு அவசியமான வசதிகளை வெளிவிவகார அமைச்சு செய்துகொடுப்பது வழமையான விடயம் எனத் தெரிவித்துள்ளது.

அதேவேளை 'இவ்விவகாரத்துடன் தொடர்புடைய வீட்டுப்பணிப்பெண் அவரது 3 வருட பணிக்காலத்தை முழுமையான நிறைவுசெய்திருந்த நிலையில், தொழில் வழங்குனர் (ஹிமாலி அருணதிலக) அவுஸ்திரேலியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்கு வருவதற்குத் திட்டமிட்டிருந்த தினத்துக்கு முதல் நாள் தொழில் வழங்குனரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இரகசியமாக வெளியேறிவிட்டார். இருப்பினும் வீட்டுப்பணிப்பெண்ணின் ஊதியமாக வெளிவிவகார அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்டிருந்த கொடுப்பனவு அவருக்கு முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டது' எனவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/191335

கடலுடன் கலக்கின்ற நீரை குளத்திற்கு வழங்குமாறு தென்னமரவடி மக்கள் கோரிக்கை!

3 months ago
17 AUG, 2024 | 04:32 PM
image
 

கடலுடன் கலக்கின்ற நீரை குளத்திற்கு வழங்கி மக்களுடைய விவசாயத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பங்காற்ற உதவுமாறு தென்னமரவடி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமாக இருக்கின்ற தென்னமரவடி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் பல பூர்த்தி செய்யப்படாத நிலையில் அக்கிராமத்தில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி மற்றும் விசாயத்தை பல சவால்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றார்கள். 

தென்னமரவடி கிராமத்தில் விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுவரும் மக்கள் விவசாயத்திற்கான நீர் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.  

இந்நிலையில் ஸ்ரீபுர பகுதியில் இருந்து வருகின்ற மேலதிகமான வால்கடவ நீரானது 1 கிலோ மீற்றருக்கு மேலான தூரத்திற்கு பயணம் செய்து தென்னமரவடி பகுதியில் உள்ள கடலுடன் கலக்கின்றது.

குறித்த நீரை மறித்து, 150 மீற்றர்  தூரத்தில் உள்ள தென்னமரவடி பறையன்வெளி குளத்திற்கு விடுவதன் மூலம் அதனை அண்டி இருக்கின்ற 50 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்வெளிகளில் விவசாயம் மேற்கொள்வதோடு, அங்கிருந்து ஏனைய சிறிய குளங்களான அகம்படியான் குளம், போட்டாக்குளம் போன்ற குளங்களை நிரப்பி அங்கிருக்கின்ற 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் இருபோக நெற்பயயிர்ச் செய்கையிலும், உப உணவுப் பயிர்ச்செய்கையிலும், கால்நடை வளர்ப்பிலும் மக்கள் ஈடுபட முடியும். இதைவிட நிலத்தடி நீரையும் அதிகரிப்பதற்கு இது வாய்ப்பாக அமையும். 

அத்துடன் பறையன்வெளி குளத்தில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் உள்ள மா ஓயாவானது சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து கொக்கிளாய் களப்புடன் கலக்கின்றது. எனவே குறித்த 50 மீற்றர் தொலைவில் உள்ள மா ஓயாவில் இருந்து பறையன்வெளி குளத்திற்கு நீரை வரவழைக்க முடிந்தால் தென்னமரவடி மக்களின் நீர்ப் பிரச்சினைக்கு முற்று முழுதான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

WhatsApp_Image_2024-08-17_at_15.05.46__1

https://www.virakesari.lk/article/191314

நாட்டில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

3 months ago
17 AUG, 2024 | 06:13 PM
image
 

நாட்டில் எச்.ஐ.வி தொற்று நூற்றுக்கு முன்னூறு வீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

அதன்படி, நாடளாவிய ரீதியில் இதுவரை 3,500 எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 52க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காணப்படுகின்றனர்.

அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி தொற்று நோயாளர்களில் நூற்றுக்கு 81 வீதமானோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

அதிகளவான நோயாளர்கள் பாடசாலை மாணவர்களாகவும் பல்கலைக்கழக மாணவர்களாகவுமே உள்ளனர்.

பெரும்பாலும், ஒருபாலின உறவுகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியிலான தொழில்களில் ஈடுபடுபவர்களிடம் எச்.ஐ.வி தொற்று காணப்படும் என்கிறார். 

https://www.virakesari.lk/article/191322

ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!

3 months ago

ஜனாதிபதித் தேர்தல் 2024 : ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ மாபெரும் பொதுக்கூட்டம்!
August 17, 2024

 

இலங்கையில் 9-ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்  நிறைவடைந்ததையடுத்து, இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ் மக்களுக்கான பொது வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்ப் பொதுவேட்பாளர் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும் நாளை காலை 9 மணிக்கு தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு வணக்கம் செலுத்துவார். அதன் பின் ஊடகச் சந்திப்பு இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PHOTO 2024 08 17 18 31 35 ஜனாதிபதித் தேர்தல் 2024 : 'தமிழ்ப் பொதுவேட்பாளர்' மாபெரும் பொதுக்கூட்டம்!

 

https://www.ilakku.org/ஜனாதிபதித்-தேர்தல்-2024-தமிழ/

Checked
Fri, 11/22/2024 - 08:58
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr